Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-31

Advertisement

praveenraj

Well-known member
Member
"எப்படி பாஸ்? எப்படி இதெல்லாம் கரெக்ட்டா கண்டுப்பிடிசீங்க? நீங்க என் கூட தானே சும்மா சுத்திட்டு இருந்தீங்க... ப்ளீஸ் சொல்லுங்க..." என்றான் குகன்.

"நாளைக்கு காலை வரை வெய்ட் பண்ணு, இந்த கேஸ் சக்சஸ் ஆகட்டும் எல்லாம் உனக்குத் தெளிவா சொல்றேன்..."

"பாஸ் பாஸ் ப்ளீஸ் பாஸ் எப்படி பாஸ் டாக்டர் பாரதி கொலையை இந்திரன் கொலை முயற்சி கூட லிங்க் பண்ணீங்க? ப்ளீஸ் பாஸ் சொல்லுங்க..."

"டேய் இது ரொம்ப பெரிய கதை டா. இப்போதைக்குச் சொல்ல முடியாது. நாளைக்கு கண்டிப்பா சொல்றேன். ஓகே?"

"பிராமிசா?"

"பிராமிசா"

"சினாமிகா மர்டர் கேஸ்ளையும் இதைத்தான் சொன்னீங்க, ஆனா நீங்க கடைசியில சொல்லவேயில்லை?"

"இங்க கிட்ட வா உன் தலைமேல் சத்தியமா நாளைக்குச் சொல்றேன். போ..."

"பாஸ் இந்த முறை ஏமாத்துனீங்க நான் செத்துப் போயிடுவேன் பார்த்துக்கோங்க..." என்றான் குகன்.

"டேய் குகா இதுக்காக தற்கொலை பண்ணிப்பியா?"

"ஐயோ லூசா பாஸ் நீங்க? நான் ஏன் தற்கொலை பண்ணிக்கணும்? என் தலை மேல சத்தியம் பண்ணீங்க தானே? அப்போ நீங்க சொல்லலைனா நான் செத்துடுவேன் தானே? இதைத் தான் சொன்னேன்."

"சீ போ..."

"பாஸ் பாஸ்..."

"என்னடா?"

"கதிரவன் இந்திரன் அவங்க லிங்கை எப்படி பாஸ் கண்டுப் பிடிச்சீங்க?"

"இன்னும் அதுவே உனக்குப் புரியலையா?"

"புரியுது பாஸ் எப்படிக் கண்டுப்பிடிசீங்க?"

"கதிரவனைப் பற்றி தாமோ அவ்வளவு ரிப்போர்ட் கண்டுப் பிடிச்சியிருக்காரு, ஆனா அதை இந்திரனும் சரி இமையவர்மனும் சரி அதைக் கண்டுக்கவே இல்ல. செகண்ட் சிந்து கதிரவனை விரும்பறதை முதன்முதலில் இந்திரன் கிட்டத் தான் சொல்லியிருக்கா. இந்திரனும் சேர்த்து வைக்கிறேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கான். கதிரவன் கிட்ட இதைப் பற்றிப் பேசும் போது அவன் ஸ்டேட்டஸ் அது இதுனு சொல்லி மறுக்க உடனே அவன் அப்பா கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லிட்டான். அவருக்கும் ஓகே. இப்பேற்பட்ட இவங்க எப்படி டா சண்டை போட முடியும்?"

"பாஸ் பாஸ்,அப்போ இமைய வர்மனோட ரகசியம் எல்லாம் எப்படிக் கண்டுப்பிடிசீங்க?"

"அது நாளைக்குச் சொல்றேன்..."

"பாஸ் பாஸ்..."

"அந்த ஷீரடி மஹாலிங்கம் கேஸ் என்ன ஆச்சு?"

"பாஸ் எனக்கு இந்த கேஸ்சே புரியல நீங்க என்னடானா அடுத்த கேஸுக்கு போறீங்க?"

"அப்றோம் எப்படி டா அன்னைக்கு அப்படிச் சொன்ன? எப்படியெப்படி என்னைய மிஞ்ஜி குருவை மிஞ்சிய சிஷ்யனு பேரு வாங்குவியா?"

"உங்களுக்குப் பொறாமை. எங்க எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தா நான் உங்களை விட வேர்ல்டு பேமஸ் ஆகிடுவேன்னு பயம். அந்த பயம் இருக்கட்டும் பாஸ் உங்களுக்கு... குகன் பேரைக் கேட்டாலே சும்மா அதிருத்துள்ள? அந்தே திகிலு சூஸ்தாணு..."

"எல்லாம் என் நேரம்! நாளைக்குச் சொல்றேன்னு சொல்லிட்டேன். போய் வேலையைப் பாரு..."
******************
தருணும் குகனும் இமையன், சந்திரன், இந்திரன், கதிரவன், தாமோ ஆகியோரிடம் எல்லாமும் பேசிட்டு பிறகு இரவே சென்னை செல்ல வேண்டும் என்றும் நாளை காலை முதல் ஹியரிங்கே அவர்களுடையது என்றும் தெரிவிக்கப்பட இமையன் தான் அவர்களை தங்களின் கெஸ்ட் ஹவுசில்லே தங்கச் சொல்லிவிட்டு காலை அனைவருமாக தங்கள் பிரைவேட் ஜெட்டில் சென்னை செல்லலாம் என்று சொல்ல ஏனோ நேற்று இன்று என்று தொடர் அலைச்சலில் இருந்த தருண் அதற்கு ஆமோதித்தான். பிறகு காலையே அவர்கள் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்து உறங்கச் சென்றனர்.

சந்திரன் இமையனைப் பார்த்து,"அண்ணா என்னை மன்னிச்சிடுங்க. உண்மையிலே நான் தான் இந்த மொத்த பிரச்சனைக்கும் காரணம்னு தெரியாம போயிடுச்சி. நான் எதையும் தெரிஞ்சு செய்யல, அன்னைக்கு அப்பா என்னைக் கூப்பிட்டு மிரட்டினார். 'ஒழுங்கா நான் சொல்ற பெண்ணைக் கல்யாணம் பண்ணா நீ சகல வசதிகளுடன் நல்லா இருக்கலாம்னு...' அதுதான்..." என்று அவர் இழுக்க.

"உன்னைச் சொல்லி மட்டும் குற்றம் இல்ல. எல்லாம் நம்ம அப்பாவையும் சொல்லணும். ஒரு அப்பாவா அவர் தன்னுடைய கடமையைச் சரியா செய்யல. விடு இனி நடந்ததை நெனச்சி என்ன செய்யறது? பார்ப்போம். ஒரு வேளை அவங்க சொல்ற மாதிரி என் பொண்ணுங்க உயிரோட இருந்தா அதை விட எனக்கு சந்தோசமே இல்லை. பார்ப்போம்... நீயும் காலையில ரெடியா இரு..." என்று சொல்ல சந்திரன் அங்கிருந்து கிளம்பினார்.

இந்திரன் மற்றும் கதிரவன் இருவரும் தாமோவிடம் மன்னிப்பு கேட்க,"பரவாயில்ல தம்பி..." என்று ஆறுதல் படுத்திவிட்டு,"நான் இது எதுவும் தெரியாம அந்த தயாளனையே எல்லா விஷயத்தையும் கண்டுப்பிடிக்கச் சொல்லிட்டேனே?" என்று வருந்தினார்.

இந்திரனும் கதிரவனும் மேலே தங்களின் அறைக்குச் சென்றனர். இருவரும் இரு வேறு யோசனையில் இருந்தனர்.

அன்று டைனிங்கில் யாரும் பார்க்காத வண்ணம் சிந்து கதிரவனைப் பார்த்து கண்ணடித்து உதடு குவிக்க வெடவெடத்து போனான் கதிரவன். அந்த தினத்திற்குப் பிறகு முடிந்த அளவுக்கு சிந்துவிடமிருந்து தள்ளியே இருந்தான் கதிரவன். அவனுக்குள் பல எண்ணங்கள். முதலில் தன்னை நம்பி வீட்டில் சேர்த்திருக்கும் நண்பன், அம்மா அங்கிள் ஆகியோருக்கு துரோகம் செய்யக் கூடாது என்று தோன்ற, இரண்டாவது தன்னுடைய பைனான்சியல் ஸ்டேட்டஸை எண்ணி வருந்தினான். தானொன்றும் அவ்வளவு பெரிய பணக்காரன் இல்லையே ? இந்திரனின் நட்பு மூலமாக இரு குடும்பமும் நெருக்கம் ஆனது. இந்திரன் தன்னோடே அவனையும் சேர்த்து ஸ்டார்ட் அப் ஆரமித்து அதில் தன்னை பணமே போடாமல் பார்ட்னர் ஆக்கி இன்று இவ்வளவு வசதிக்கும் காரணமாக இருக்கிறான். சின்ன வயதிலிருந்தே நிறைய சிந்துவிடம் பேசியிருக்கிறேன் தான் ஆனால் ஒரு நண்பனின் தங்கை என்ற உணர்வில் தான் அவை அமைந்திருந்தது. ஆனால் ஸ்ரீயை தன் உடன்பிறந்த தங்கை போலவே தான் பார்த்தான். சிந்துவையும் அப்படித் தான் பார்க்க ஆசைப்பட்டான் ஆனால் முடியவில்லை. அதும் அவர்கள் காலேஜ் சேர்ந்தது முதல் அவள் தன்னைச் சீண்டி விளையாடுவதும் பெயர் சொல்லி அதும் செல்லமாக கதி என்றும் அழைப்பவளை என்ன செய்வான் அவன்?

ஆனாலும் இதையெல்லாம் கடந்தும் சிந்துவின் மீது அவனுக்கும் ஒரு ஆசை இருந்தது தான். அவள் செய்யும் குறும்புகளை எல்லாம் எட்ட நின்று ரசிப்பான். சிந்து அந்தக் குடும்பத்தின் ராஜகுமாரி என்றால் அது மிகையில்லை. அவ்வளவு செல்லம். அவ்வளவு பாசம். கடைக்குட்டி, ஒரே பெண் என்பதால் இமைய வர்மனின் பிரியத்திற்கு உரியவள். இப்படி பல சலுகைகள் அவளுக்கு இருப்பதே அவனை அதிகம் குழப்பியது. அன்று சிந்துவே நேராக வந்து கதிரவனிடம் பேசினாள். அதில் தான் ட்விஸ்ட் இருந்தது. கதிரவனும் இந்திரனும் அவன் அறையில் அமர்ந்து கதைப்பேசிக்கொண்டு இருக்க திடுமென உள்ளே நுழைந்தவள் கதிரவனிடம்,"கதி என்ன முடிவு எடுத்திருக்க? எப்போ வீட்டுல பேசலாம்?" என்று சிந்து அதிரடியாகக் கேட்க அலறினான் கதிரவன். ஏனோ அப்போதும் கமுக்கமாக அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்க்கும் இந்திரனைக் கண்டு,'அப்போ இவன் சொல்லித் தான் இவ இப்படிப் பேசுறாளா?' என்று முழிக்க,

'டேய் கதிரா, நீ ரொம்ப நல்லவன். என்னை மாதிரி கோவக்காரனும் இல்ல. எதையும் பொறுமையா நிதானமா ஹேண்டில் பண்றவன். சின்ன வயசுல இருந்து என் கூடவே இருக்கறவன். இப்படி நிறைய குவாலிட்டிஸ் இருக்கு... நிஜமா சொல்றேன், குட்டிமா உன்னை கல்யாணம் பண்ணா அவ நாங்க எப்படி இருக்கணும்னு ஆசைப்படுறோமோ அப்படியே இருப்பா. என்ன சொல்ற?" என்றதும்,

"இல்லைடா அது நான்... உங்க ஸ்டேட்டஸ்..." என்று இழுத்தான் கதிரவன்.

"டேய் நான் ஸ்டார்ட் அப் ஆரமிச்சதுல ரெண்டு காரணம், ஒன்னு நான் கத்துக்கணும் இன்னொன்னு அதை உன் பேர்ல தான் இருக்கனும். அது உன் உழைப்பும் கூட. அது முழுக்க முழுக்க நமது. என் அப்பாவோட காசு துளியும் இல்லாதது. என்ன சொல்ற? நல்லா யோசி..." என்றதும்

அவன் இப்போது நிமிர்ந்து சிந்துவைப் பார்க்க, அவளோ மீண்டும் கண்ணடித்து உதடு குவிக்க அலறினான் கதிரவன்.
"சரி இனி நீயாச்சு அவளாச்சு நான் போறேன்..." என்றான் இந்திரன்.

"டேய் டேய் டேய்..." என்று தப்பிக்க முயன்றவனை வழி மறித்து,"எனக்கொரு பதில் சொல்லிட்டுப் போ... அது... அது உங்க அப்பா இதுக்கு?"

"அப்போ அப்பா ஓகே சொன்னா உனக்கு ஓகே அப்படித் தானே?" என்றாள்

"ஹ்ம்ம்" என்றான் அவன்.

அவளோ உடனே அவனை இழுத்துகொண்டு இமைய வர்மனிடம் செல்ல அங்கே தனக்கு முன் தன் தமயன் தங்கள் தந்தையிடம் பேசுவதைக் கண்டு நிற்க, இமையனும் மகளின் எண்ணத்தை அறிந்து அதே நேரம் கதிரவனைப் பற்றியும் எல்லாம் அறிந்ததால் சிரித்தார். "பட்,முதல உனக்கும் ஸ்ரீக்கும் தான் கல்யாணம். ஓகேவா?" என்றார் அவர்.

இது முடிந்து அடுத்த ஆறு மாதத்தில் தான் அந்த ஆக்சிடென்ட் நடந்தது.


சிந்துவின் நினைவிலும் அவளின் செல்லக் குறும்பிலும் திளைத்திருந்தவன்,'சிந்து நீ உயிரோட தான் இருக்கியா? இருக்கனும்... நாளைக்கு மட்டும் அந்த டெஸ்ட் கன்பார்ம் ஆச்சு நீ எங்க இருந்தாலும் உன்னைத் தேடி வருவேன். ஐ மிஸ் யூ டி...' என்று தன் செல்போனில் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்து வருந்தினான் கதிரவன்.

அப்போது ஐ பி எல் மேட்ச் நடந்தது. ஸ்ரீ தீவிர சென்னை சூப்பர் கிங்ஸ் பேன். அவளை சீண்டவே இந்திரன் தன்னை மும்பை இந்தியன்ஸ் பேன் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வான்.சென்னையில் நடந்த அவர்களுக்கான முதல் லீக் மேட்சில் மும்பை ஜெய்த்துவிட ஏனோ ஸ்ரீயை வைத்து செய்துவிட்டான் இந்திரன். இப்போது அவர்களுக்கான இரண்டாவது லீக் மேட்ச் மும்பையில் நடந்தது. ஏனோ ஸ்ரீ இதுவரை மும்பையில் மேட்ச் பார்த்ததில்லை என்றதால் அவளை சர்ப்ரைஸ் பண்ண அவளை அன்று மும்பை அழைத்துச் செல்வதாகச் சொன்னான். வீட்டில் அதற்கான பெர்மிஷனும் வாங்கியிருந்தான். அன்று இந்திரனும் ஸ்ரீயும் மட்டும் இரவு எட்டு மணிக்கு நடக்கவிருக்கும் மேட்சுக்கு தங்கள் பிரைவேட் ஜெட்டில் கிளம்பினர்.போகும் போதே அவளை வம்பு செய்தபடியே சென்றான் இந்திரன்.

"போன மேட்சே நாங்க தான் ஜெயிச்சோம். அதும் சென்னையை அதன் ஹோம் க்ரவுண்ட்ல வீழ்த்திட்டோம். இந்த முறை மும்பைல விளையாடுறோம், சொல்லவே வேண்டாம் மும்பை தான்..." என்றான்.

"நோ சென்னை தான் ஜெயிக்கும் பாரு..." என்றாள் ஸ்ரீ.

"பெட்?"

"பெட்"

காதை கிழிக்கும் அளவுக்கு சப்தம் இருக்க மும்பை ஜெர்சி அணிந்து அவனும் சென்னை ஜெர்சி அணிந்து அவளும் ஸ்டேடியத்தில் ஒன்றாகவே கைகோர்த்து நுழைய ஏனோ அங்கே திரண்டிருந்த பார்வையாளர்கள் இவர்களை விந்தையாகப் பார்த்தனர்.

ஆட்டம் ஆரமித்தது, மிகுந்த பரபரப்பாகவே சென்ற ஆட்டத்தில் நூலிழையில் சென்னை தோற்க ஏனோ உண்மையான மும்பை இந்தியன்ஸ் விசிறி போலவே ஆர்பரித்தான் இந்திரன் (பின்னே அவனும் சென்னை விசிறி தானே? அவளை வம்பிழுக்க மட்டுமே மும்பை மும்பை என்று சீன் போடுவான்) மணி பனிரெண்டைக் கடக்க இனிமேல் உடனே சென்னை திரும்ப வேண்டுமா என்று யோசித்தவன் அவளைத் தங்களின் மும்பை இல்லத்திற்கு அழைத்துச் சென்றான். ஏனோ ஸ்ரீ தான் பெட்டில் தோற்று விட்டோமே என்றும் இவன் என்ன செய்யப் போகிறான் என்றும் பயத்தில் இருந்தாள்.

வேண்டுமென்றே அவள் காதில்,"பெட் ஞாபகமிருக்கட்டும்..." என்று எச்சரித்து விட்டு வந்தவன் தங்கள் வீட்டிற்கு வந்து அவளைத் தங்கச் சொன்னான். ஸ்டேடியம் சென்றதால் குளித்து ப்ரெஷ் ஆகி வர அவனும் ப்ரெஷ் ஆகி வந்தான். அவளுக்கு தேவையானதை எடுத்துவைத்தவன்,"நீ இங்க படுத்துக்கோ ஸ்ரீ. நான் பக்கத்துக்கு ரூம்ல..." என்று முடிக்கும் முன்னே அவள் மறுத்தாள். பின்னே புது இடம்,அதும் தனியாக அவள் இருக்கப் பிடிக்காமல் போக,

"உன்கூட துணையாகப் படுக்க எனக்கும் தான் ஆசை பேபி, ஆனா வேணாம். உலகத்துலயே கொடுமையானது என்ன தெரியுமா? சக்கரை வியாதி காரனுக்கு முன்னாடி தட்டு நிறைய ஸ்வீட்ஸ் வெச்சிட்டு அவனைப் பார்த்துட்டு மட்டும் இருக்கச் சொல்றது தான். சோ நோ! எனக்கு அவ்வளவு கண்ட்ரோல் எல்லாம் இல்லை. நான் அவ்வளவு வீக்..." என்று சொல்லி இந்திரன் நகர, அவன் கரம் கோர்த்தாள் ஸ்ரீ.

"நோ" என்றான் அவன். இருந்தும் அவளுக்கு முத்தம் தர நெருங்கியவன் முத்தத்தோடு மட்டும் நிற்காமல் அடுத்த கட்டத்தை நெருக்க,பெண்ணவளும் இசைந்தாள்.

இருவரும் அவ்வளவு காதல் செய்தனர். ஆமாம், காமத்தின் தொடக்கப் புள்ளி தான் காதல் என்றும் காதலின் முழுமை தான் காமம் என்றும் யாரோ சொன்னதாய் நினைவு (சத்தியமா யாரோ தான் சொன்னாங்க. நான் இல்லை!)

மறுநாள் இருவரும் சென்னை சென்றிருக்க, அடுத்த இரண்டு நாளில் தான் இந்திரன் ஸ்ரீ, சிந்து மூவருமாக ஷாப்பிங் செல்ல அந்த கார் ஆக்சிடென்ட் நடந்தது. ஏனோ அந்த நாளுக்குப் பிறகு உடனே தங்களின் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தான் இந்திரன். ஒருவேளை அந்த ஆக்சிடென்ட் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கலாம்.


பழைய நினைவுகள் தென்றலாய்த் தீண்டி நெருப்பாய் அவனைச் சுட ஏனோ இந்திரன் கண்கள் கலங்கியது. "லேக்கு பேபி, நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா? அப்றோம் ஏன் என்கிட்ட நீ ஏதும் சொல்லல? ஐ மிஸ் யூ டி..." என்றான்.

ஆடவர்கள் இருவரும் இறந்து விட்டதாக நம்பப்படும் தங்கள் காதலியர்களை நினைத்து கண்ணீர் வடிக்க அங்கோ பெண்கள் இருவரும் அதே பழைய நினைவில் தான் இந்த ஐந்து மாத காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அன்று மும்பை சென்று வந்ததில் இருந்து ஸ்ரீயிடம் இருந்த மாற்றங்களை சிந்துவும் அறிவாள். அதற்குள் அந்த ஆக்சிடென்ட் பிறகு இந்த இடம் இந்த வேதனை என்று இருக்க எப்போது ஸ்ரீயின் ப்ரெக்னென்சியை அறிந்தாளோ அப்போதிருந்து அதிகம் வருந்துகிறாள் அவள். தாங்கள் இருந்தாலும் பரவாயில்லை இந்தக் குழந்தை பிழைக்க வேண்டும் என்று மருகுகிறாள். இதற்கு நடுவில் அவன் அன்று கதிரவனைப் பற்றிச் சொன்னதை நம்பவும் முடியாமல் அதே நேரம் நம்பாமலும் இருக்க முடியாமல் தவிக்கிறாள்.

*******************

அன்றைய பொழுது ரொம்ப சீக்கிரமே புலர்ந்தது. காலையிலே இமையவர்மன் தன் குடும்பத்தோடு கூடவே தாமோ, தருண், குகன், சந்திர வர்மன் ஆகியோரும் சென்னைக்குச் சென்றனர்.

காலை பத்து மணிக்கே ஹியரிங்க் என்றும் பதினோரு மணிக்குத் தான் டாக்டர்ஸ் எல்லோரும் அங்கே அஸ்ஸெம்பேல் ஆவார்கள் என்றும் இருக்க முதல் கேஸாக சுபத்திராவுடன் கூடவே தாமோவும் சேர்ந்து ஆஜராக அவர்களின் திறமையான வாதத்தாலும் தருண் அந்த மருத்துவமனையைப் பற்றிச் சேகரித்திருந்த தகவலாலும் (இந்திரன் ஸ்ரீ சிந்து அனுமதிக்கப் பட்டிருந்த கூடவே அந்த இரண்டு பிணங்களின் டீடெய்ல்ஸ் உட்பட எல்லாம்) சமர்ப்பிக்கப்பட ஜட்ஜ்கள் உடனே புதைக்கப்பட்ட இரண்டு பிணங்களையும் மீண்டும் எடுத்து மறு உடல் கூராய்வும் (போஸ்ட் மார்ட்டம்) கூடவே மரபணு சோதனையும் (dna test) அரசு அங்கீகரிக்கப் பட்ட மருத்துவர்களால் நடைபெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. ஏனோ சம்மந்தமே இல்லாமல் திடீரென்று இன்று விசாரணைக்கு வந்த கேஸ் அனைத்து ஆதரங்களும் சமர்ப்பிக்கப் பட உடனே உத்தரவும் பிறப்பிக்கப் பட்டது. (உத்தரவும் தீர்ப்பும் வேறு வேறு. உத்தரவு ஸ்டே (தடை) வாங்குவது பெயில் வாங்குவது போன்றது. தீர்ப்பு வழங்க தான் காலதாமதம் ஆகும்)
*******************

ஹாஸ்பிடலுக்கு அனைத்து நபர்களும் வந்துவிட பதினோரு மணிக்குத் தான் மீட்டிங் என்றதும் எல்லோரும் கொஞ்சம் கதை பேசினார்கள். அதில் கமல் மற்றும் ஸ்டெப்பி மட்டும் யாருடனும் பேசிக்கொள்ள வில்லை. அப்போது கமலுக்கு உடனே தான் பணிபுரியும் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் எதையோ சொல்ல உடனே அங்கே இருந்த டிவியை உயிர்ப்பிக்கவும் சிந்து ஸ்ரீயின் வழக்கில் முக்கிய உத்தரவு என்று ஹெட் லைன்ஸ் ஓடியதைக் கண்டு கமல் அதிர்ந்தான் என்றால் அவனைக் காட்டிலும் இன்னொருவன் அதிகம் அதிர்ந்தான். பின்னே கமல் பணிபுரியும் ஹாஸ்பிடலில் தான் அன்று இந்திரன் அனுமதிக்கப் பட்டிருந்தான். தருணும் குகனும் அங்கே சென்று தான் விசாரித்தனர். தங்களின் மருத்துவமனைக்கு ஏற்பட்ட அவப்பெயர் என்று கருதி உடனே கமல் அழைக்கப் பட மீதி எல்லோரும் அசெம்பிள் ஆக அதில் கமல் இல்லாமல் இன்னொருவனும் மிஸ் ஆனான்.

திருக்கு அப்போதே அனைத்தும் புரிந்தது. இவன் தான் இவையனைத்திற்கும் காரணம் என்று எண்ணி உடனே சுபத்திராவை அழைத்து விஷயத்தைத் தெரியப்படுத்தினான். சுபத்திரா தருணிற்குத் தெரியப்படுத்த, தருண் ஏற்கனவே கண்மணி மருத்துவமனை வளாகத்தில் தான் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடி கமல் வெளியே வர அவனைக் காட்டிலும் பரபரப்பாக வெளியே வந்தான் அவன்! அவன் சமுத்திரன். இது தான் திருவிற்கும் அதிக கோவம் மற்றும் அதிர்ச்சி ஆகியவற்றைத் தந்தது. பின்னே இவனை நல்லவன் என்று அல்லவா நம்பினான்? மஹேந்திரனைக் கூடச் சந்தேகப் பட்டவன் ஏன் உபேந்திரனைக் கூட அல்லவா சந்தேக பட்டு விட்டான்? மேலும் அவ்வளவு யோக்கியன் போல் அல்லவா அன்று பேசினான் என்று நினைக்கையில் அவனுக்கு கண்ணீரே வந்தது. இவன் தான் பாரதி சாரின் மரணத்திற்கும் காரணமா? என்று சொல்லமுடியாத வேதனையில் உழன்றான்.

இருந்தும் எதையும் ஊர்ஜிதப் படுத்தாமல் சொல்லக்கூடாது என்று அமைதி காத்தவன் பெயரளவில் கொஞ்சம் எல்லோரிடமும் பேசினான்.

அவசரமாக அங்கிருந்து கிளம்பியவனை தருண் அங்கிருந்தும் இந்திரன், கதிரவன் ஆகியோரும் தத்தம் இடத்திலிருந்தும் பின் தொடர்ந்தனர். அவன் வண்டி சென்று நின்ற இடம் பாரதி சாருடைய ட்ரஸ்டின் ஒரு பழம் பெரும் பங்களா. சில வருடங்களாகவே உபயோகப் படுத்தப் படாமல் இருக்கும் இடமது. நிறுத்தியவன் அதிலிருந்து வெறிப்பிடித்தவன் போல கீழே இறங்கி வேகமாக விரைந்தான்.
(வானிலை மாறும்...)
 
மிகவும் அருமையான பதிவு,
பிரவீன்ராஜ் தம்பி

அப்போ அந்த பாழடைந்த பங்களாவில்தான் இரண்டு பெண்களும் இருக்கிறாங்களா?
சமுத்திரன் பீடைக்கு ஏன் இந்த வேலை?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
பிரவீன்ராஜ் தம்பி

அப்போ அந்த பாழடைந்த பங்களாவில்தான் இரண்டு பெண்களும் இருக்கிறாங்களா?
சமுத்திரன் பீடைக்கு ஏன் இந்த வேலை?
yes... flashback sollitene.. thank you sis?
 
Top