Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 25 (நிறைவு பகுதி)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

தேங்க் யூ தேங்க் யூ தேங்க் யூ சோ மச் அன்பூக்களே :) :) :)

கதையை முடிச்சாச்சு. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க :)

அடுத்த கதையோட அறிவிப்போட நாளைக்கு வரேன் நான் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Dear saranya sis....
எப்பவுமே உங்க கதையை ,சிறு மென்சிரிப்போடு தான் படிக்க முடியும்....

இந்த கதையில் ,விஜய்யோடு நாங்களும் உறைந்து, பின் உருகி முடிவில் நிறைவோடு பயணத்தை முடிக்கிறோம்....

ஹீரோக்கு இணையாக ஜெகனும் கலக்கி இருக்கிறார்....

கடைசி வரை ,அருமையை மன்னிக்காதது நல்ல முடிவு.....



Sis.. "உங்க" கதை என்ற ஒன்றே போதும்..
???????????

தயவுசெய்து ,இந்த 6 pm time மட்டும் விட்டு விடாதீர்கள்....
ஒருநாள் miss பண்ணாலும் ஏதோ அந்த நாள் dull ah இருக்கு....
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.ஜோதியின் திருமண அழைப்பு வைக்க கூட எருமை
வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டானா விஜய்????.தன் பிடிவாதத்தினால் பவியின் கர்பகால கவனிப்புகளை இழக்க வேண்டுமா என்ற எண்ணமும்,,மகளை அருகில் வைத்து பார்க்க வேண்டும் என்ற பார்வதி,வசந்தியின் ஆசைக்காக ஜோதியின் திருமணத்துக்கு பத்து நாள் முன்பே பவியை அனுப்பிட்டான்????.

பார்த்தாலும் பார்த்தேன் அப்பு பருசன் பண்ற அழிச்சாட்டியம் போல யாரும் செஞ்சு பார்க்கலை,, எருமையும்,இதுவும் செஞ்ச அழிச்சாட்டியத்தை மறந்துருச்சா???.பவித்ராவ அவபுருசன் கைய பிடிச்சுட்டு இருக்கறத எல்லாரும் பார்த்தா பார்க்கட்டுமே??.விஜய் மேல பயம் இருந்தாலும் வசந்தி வாய மூடமா அப்பப்ப எதாவது பேசிட்டே இருக்கு??.இதெல்லாம் திருந்தாது????

முதல் கண்ணு உன் மாமாவோடது தான்???பொண்டாட்டிய பார்க்கபோற சந்தோஷத்துல பாட்ட
அலற விட்டு பந்தயத்துல போறது போல வண்டிய ஓட்டிட்டு வந்தவன்,பவியோட ஊருக்கு போறப்ப
ஆடி அசைஞ்சு போறதும்,ஆகாஷை குறை சொல்றதும்???,குடும்பஸ்தன் பேர்ல அராஜகம் தான் பண்றான்.விஜய்ட்ட மாட்டிட்டு ஆகாஷ்,ப்ரணேஷ் இருவரின் நிலை????.

இத்தனை நாட்களாக அண்ணன் சொன்னா சரின்னு வாய தொறக்காம மிக்சர் சாப்பிட்டு ஓரமா இருந்த பழனி??,உங்க மரியாதைக்காக,உங்க சம்பந்த வீட்ல பேரை காப்பாத்த,உங்க மக வாழ்க்கைய நெனச்சு என எருமைய பார்த்து கேட்க,எருமை வாயடைச்சு போயிருச்சு???.

துக்கம் விசாரிக்க வந்தவங்கள கல்லால அடிச்சு,காயம்பட்டவங்களுக்கு உதவி பண்ணவும் போகக் கூடாதுன்னு சொன்னவனை ராட்சஷனை போல தான் பார்ப்பாங்க????.தலை பிரசவம் தாய் வீட்டில் நடக்கனும் என சொல்றவ முதல்ல தாயா நடந்திருக்கனும்??.பவிய தன்னோடு அழைத்து போறதா சொல்லவும் குதித்த வசந்திக்கு நாக்க புடுங்கறதை போல நல்லா பதில் சொன்னான்???

மகளாக நினைப்பதாக சொன்னது மட்டுமல்ல பவிக்கான எல்லா விஷேசங்களை ஜெகனும், அவன் அப்பாவும் செய்வது அருமை.அருமையான மனிதர்கள்??எருமைய கடைசிவரை மன்னிக்கவும் இல்லை மகளை தொட அனுமதிக்கவும் இல்லை.சில தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது.....

விஜய் விரும்பியது போல மதுவே மகளாக பிறந்து வந்துட்டா.பார்க்க மட்டுமல்ல விஜய் மேல் கொண்ட பாசத்திலும் மதுவந்தியே தான்???.மாதவன் இங்கே வராவிட்டாலும் அவரை பார்க்க குடும்பமாக நட்பு,சொந்தம் சூழ வரும் மகனை கண்டு மாதவனுக்கு மனநிறைவு☺☺☺.

அருமையான குடும்ப கதை.எளிமையான நடை. நிறைவான முடிவு????.
வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா??????.
 
Last edited:
நினைவுகளில் பசுமையாக
மனதில் பதிந்து
கொண்ட காலமில்லை..
தொழில்நுட்பம் வளர்ந்து வருகையில்
இறந்தவரின் நினைவுகளை மனதாலும்
பதிவேற்றிய மொழி காற்றாக
காதில் ஒலித்துக்கொணடிருக்கும் வரை அவரின் குரலும்
உடனிருக்க
இழப்பின் வலி குறைந்திடும்..
 
Last edited:
Top