Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 29 நிறைவு பகுதி

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதையில் பயணித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே :) :) :)

கவிதை பேசும் வானம் – 29 (1)

கவிதை பேசும் வானம் – 29 (2)

கவிதை பேசும் வானம் - 29 (3)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

ராகாக்கு கார்டியன் ஸ்ரீநி :oops::oops::oops: ஏண்டா ஏன்.......

ராகா ??????????
தெளிவான தீர்க்கமான பேச்சு ராகா.......
பையன் அப்பாவை ஏத்துக்கிட்டான்.......
பையனுக்காக மற்றவர்களும் ஏத்துக்கிட்டாங்க.......
நரகம் அனுபவித்த ராகா :unsure::unsure::unsure:
மனைவி துணிந்து நின்றால் இது தான் கணவன் கெதி....... பார்த்தாலும் கேட்டாலும் தெரிந்தாலும் என்ன தான் பண்ணிடுவா னு தில்லா நிற்பது தான் பல ஆண்களின் வாடிக்கை........

அக்னி முரட்டு பீசு ஸ்ரீநியை மனுசனா பார்க்கிறான் போல.......

எம்மா நீங்க ரெண்டு பேரும் பிள்ளைங்களை மாமியார் கிட்ட விட்டுட்டு பூவை கோர்க்க வரவேண்டியது தானே........
சோப்பு சும்மா தானே இருப்பாங்க...... மாலதி னு கூப்பிட்டு சொல்ற வேலையை நட்சத்ரா கிட்ட சொன்னால் கூட மாலதி கிட்ட அழகா சொல்லுவா........ அவளுக்கும் ட்ரைனிங் கிடைக்கும்......
அதை விட்டுட்டு அந்த பிள்ளையை கூட வச்சுக்கிட்டு ப்ரோப்ளேம் பிரச்சனை னு சொன்னால் நாளைக்கு கூட்டத்தில் சொல்லப்போறா..... சாதனா முன்னாடி மானம் போக போகுது.....
உங்களை பார்த்து சுரேன் கூட கத்துக்கிட்டான் பாரு.......

கடைசிவரை அந்த ராகா-சாதனா-அடைக்கலம் விஷயம் சொல்லலைனு நினைக்கிறேன்...... அக்னி கல்யாணத்துக்கு என்ன பண்ணுங்க இவங்க???

ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் மாதிரி அக்னி மாதிரி ஒரு மருமகன் கெரகம் ஸ்ரீநியும் ஒரு மருமகன் இவங்களுக்கு.......
பொண்ணு எழுந்ததும் மனசுக்கே சந்தோசம் தான்......
ஆனாலும் சேர்ந்துட மாட்டங்களானு ஒரு தவிப்பு எப்போவும் இருக்கும்......
ராகா பட்ட ரணம் என்றைக்கும் போகாதே அவளுக்கு.......
The mental torture kills you from the inside னு சொல்வாங்க......
அதான் அவள் வாய் வார்த்தைகள்.......

கதை நல்லா இருந்து சரண் :love::love::love:........
எனக்கு அக்னிசெல்வனும் கடைசி எபிஸ் ல வந்த ராகவும் தான் ரொம்ப ரொம்ப புடிச்சுது......
இந்த சந்திரிகா மாமியார் கொஞ்சமும் பிடிக்கலை.......
 
Last edited:
"இன்னும் வேணும் வேணும்னு ஆசைப்படறத விட இருக்கறதே போதும்ங்ற எண்ணம் வளர்த்துக்கனும்"
சுயநலத்தால் அடி வாங்கிய ஸ்ரீனிவாஸ் உணர்ந்த பாடம் எல்லோருக்குமே ஒரு படிப்பினை...

மனதை தைத்த கதை, சரண்யா..
 
Last edited:
வாழ்க்கை வானமென்றால்
சூரியனும் நிலவும் நாமே
அக்னி நட்சத்திரமாகவும் கொளுத்திடலாம்
குளிரில் தேடும் இதமாகவும் மாறிடலாம்..
தங்க நிலவாகவும் ஜொலித்திடலாம்
நிலவு தொலைந்தும்
வாழ்க்கையையும் தேடலாம்..

சிதறிய நட்சத்திரங்கள்
நல்ல நினைவுகளாகிட
புகை மூட்டம் மாசுபடுத்தாது
பாதுகாப்போம்
நல்வாழ்வை


வாழ்த்துகள் சரண்:love:
 
Last edited:
???

கதை சூப்பரா இருந்துச்சு சரண்... ராகாவோட முடிவு...??? ஸ்ரீநி அவனை பத்தி என்ன சொல்ல.. அவனை அவ்வளவு திட்டி இருக்கோம்.. ஆனாலும் கடைசியில சின்னதா ஒரு பரிதாபம் அவன் மேல வருது... ராகா, ஸ்ரீநி ஒண்ணு சேருவாங்களா.... இல்லையாங்கிறது காலத்தோட கையில தான் இருக்கு...

நீ மத்தவங்களுக்ககு, ஊருக்கு எப்படி இருக்கியோ, முதல்ல உன் குடும்பத்துக்கு உண்மையா, நேர்மையா இரு..???
இனி வேணும்னு நினைக்கிறதை விட போதும்னு நினைக்க கத்துக்கணும்..???

சாரதா, மகேஷ்வரன் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.. திருந்தாத ஜென்மங்கள்...
இந்த ராகாவும், சாதனாவும் அக்னி & இனியா கல்யாணம் நடக்க என்ன ஹெல்ப் பண்ணாங்கன்னு கடைசி வரை சொல்லவே இல்லை....

நம்பிக்கை கூட சாமி மாதிரிதான்.. உண்மையா இருந்தா பலமடங்கு பலன் தரும்.. பொய்யா நடிச்சா என்னைக்காச்சும் அதோட விளைவு இன்னும் மோசமா இருக்கும்..???

இனிமே பிரச்சினை பண்ண அக்னி வர மாட்டான்... அவனை ரொம்பவே மிஸ் பண்ணுவோம்...☹☹☹. அப்படியே சீக்கிரமா அடுத்த கதையோட வாங்க... ???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா????.ஶ்ரீநியை பார்க்கும் வினய் ,ராகாவிடம் அப்பா அடிச்சாங்களா என கேட்பதும்,அடிக்கக்கூடாது, இங்கே பிடிக்க மாட்டீங்க தானே என வினய் ஶ்ரீநியிடம் சொல்வது கலங்க வைக்கிறது????.ஒன்றரை வருடத்திற்க்கு பிறகும் வினய்,ஶ்ரீநி செய்தவற்றை மறக்காமல்,அவனிடம் போக பயப்படுவதே ஶ்ரீநிக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை??? ..

பொண்டாட்டி போச்சுன்னா சகலமும் போச்சு என உணர்ந்து, ஶ்ரீநி தன் தவறுகளுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாலும்,கல்யாணம் செய்ய கேட்கறப்போ இப்படித்தானே பேசுனீங்க உங்களை நம்ப முடியவில்லை,இன்னொரு முறை நம்பி ஏமாற முடியாது என ராகா சொல்வதும், சாரதா அவளைப் பற்றி தப்பாக பேசும் போது ஶ்ரீநி எதுவும் சொல்லாததுஎன ராகா , ஶ்ரீநியிடம் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையும் அருமை??????.

இனி வேணும்னு நினைக்கிறதை விட போதும்னு நினைக்க கத்துக்கனும் என சொல்வது , ஶ்ரீநியின் மாற்றத்தை சொல்கிறது.சாரதா நல்ல தாயாக இருந்திருந்தால் ஶ்ரீநி இப்படி நடந்திருக்க மாட்டானோ என எண்ண தோனுகிறது????.

அடைக்கலம் கலக்கறார்.சுவிஸ் பேங்க் லாக்கர் போல யாரோட ரகசியத்தையும் சொல்லலையாம்???.அடைக்கலம், ராகா,சாதனாவின் கூட்டணியை பற்றி எதுவும் சொல்லலையே??.

அக்னி,கீர்த்தியின் காதலைப் போலவே,அவன் பிரச்சனைகளும்,அதை குழந்தை முன்பு சொல்லி வாங்கும் பேச்சுகளும் குறைவில்லை????.அக்னி பொள்ளாச்சி வீட்டுக்கு ரெஸ்ட் எடுக்க செல்வதும், அவனுடன் சுரேனும் சேர்ந்து கொள்வது அருமை☺☺☺.
அருமையான குடும்பகதை சரண்யா????.எபிலாக் இருக்கா☺☺.
 
Last edited:
Top