Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 27 (நிறைவு பகுதி)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நன்றி நன்றி நன்றி. இந்த கதைக்கு நீங்கள் அளித்த உற்சாகத்திற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள் :) :) :)

இந்த கதைக்களமும் எனக்கு ரொம்பவே புதிது. இப்படியும் நடக்குமா என்பவர்களுக்கு கண்டிப்பாக. ஒரு ஜாதகம் எத்தனையோ பேர் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் கொடுத்திருக்கு. அதே நேரம் அசட்டுத்தனமான நம்பிக்கைக்கு பெரிய ஆபத்தையும் தந்திருக்குது.

நான் ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி என்னோட கதைகள்ல எப்பவுமே சில உண்மை சம்பவங்கள் இடம்பெறும். சது சின்னதோ பெரியதோ. இந்த கதையிலையும் அப்படித்தான்.

அடுத்த கதையான வாசமல்லியின் மனத்தோடு அந்த சின்ன மூக்குத்தி பூவோடு வரேன் நமது 6 மணிக்கு. விரைவில் ....


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 27 (1)
கொள்ளை நிலா - 27 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
ஐ .. நான் முதல்
வாழ்த்துகள் சரண்
அழகான முடிச்சு
அருமையான சோடி
அழகு கதை
இனிய நிலா
இளம் மனதை கொள்ளை அடித்தாளே
சிறந்த எழுத்தாளினி:love:
 
Last edited:
???

கதை ரொம்ப நல்லா இருந்துச்சு சரண்... வாழ்த்துக்கள்..??

வாவ்!! மெக்குக்கும், ட்ரம்முக்கும் ஒரு குட்டி தேவதையா.. மெக்கோட கெத்து வெத்தாகுறது பொண்டாட்டிகிட்ட மட்டும் தானா...???

கோபால் ஜோசியத்தை விட்டுட்டாரா... வெற்றி பாவம்.. அவனை வெறுப்பேத்துறதே சூர்யாவுக்கு வேலையா போச்சு...??





வாசமல்லியோட வர்ற திங்கள் கிழமைதானே வர்றீங்க...???
ரெஸ்ட் எடுத்து மெதுவா வந்தாலும் போதும்...??
 
Last edited:
நிறைவான பதிவு.....
Thanks dear Kani Hema....
அருமை யான கதாபாத்திரங்களும்....
சொந்தங்களின் அன்பான பிணைப்புகளையும் ..
அழுத்தம் ஆக பதிவேற்றிய ..
நெஞ்சம் கொள்ளை கொண்ட
அழகிய முழு நிலா....
உங்கள் எழுத்தில் நிலா ....உலா வந்து ஜொலித்தது....

வெற்றி __சூர்யா நட்பு ம் பாசமும் ...இன்னும் இன்னும் படித்து கொண்டு இருக்கலாம்....
Super Super.....
வாழ்த்துக்கள்....
இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள்....

வாழ்க வளமுடன்
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.மோகனா தனக்காக சமைத்திருப்பார்,பாலாவுக்கு பிடித்தது செய்ய மாட்டார் என தெரிந்து சூர்யா,பாலாவுக்கு பிடித்த உணவு வாங்கி தருவதும்????.பாலா தனக்கு எப்ப என்ன தேவை என யோசிக்கும் முன்னே,அதை செய்து கொடுப்பதால் நிஜமாகவே
மெக் கெத்துன்னு ஒரு வழியா ஒத்துக்கிட்டா????.

கோபாலின் மவுனத்துக்கு பின்னே ஏதோ விஷயம் இருப்பதாக சூர்யா நினைத்தது போல,குழந்தை பிறந்த நேரம் தாய்க்கு ஆயுள் பலத்தையும்,தந்தைக்கு பூரண ஆயுளையும் தரும் என கணித்தது போல,சோதனைகளை சந்தோஷ பூக்களாக மாற்ற தேவதை பிறந்து விட்டாள்?????..

"மெக் மகளும் மெக்", "மெக் தான்ப்பா கெத்"???.பொண்டாட்டி,பிள்ளைய கோவிலுக்கு அனுப்பிட்டு தனியா இருக்கறவனுக்கு போட்டோ அனுப்பி வச்சு வம்பு பண்றானே மெக்????

கோபாலசுவாமி,சூர்யாவின் ஆயுளை காக்கும் கவசமாக பாலாவின் ஜாதகம் இருப்பது தெரிந்து திட்டமிட்டு பாலா,சூர்யா திருமணம் செய்து வைப்பதும்,சூர்யாவுக்காக வெற்றி இதற்க்கு சம்மதிக்க, பாலாவின் விபத்துக்கு பிறகு வெற்றிக்கு தெரியாத உண்மைகள் தெரியவர அதிர்ச்சியை கொடுக்கிறது????.அனைவர் முன்னே கோபாலசுவாமி வில்லனாக தெரிகிறார்???.

இத்தனை வருடங்களாக மகன் ஆயுளை எண்ணி தவித்தவர்,பாலாவுக்கு விபத்து ஏற்பட்ட பின் அனைவரின் வெறுப்புக்கு ஆளாகி,குழந்தை பிறந்த நேரம் அனைத்து சோதனைகளும் தீர,தன் வம்சத்தை காக்க,தன் குலசாமியே பேத்தியாக பிறந்த மகிழ்ச்சியில்,இத்தனை நாளாக இருந்த மனஅழுத்தம் காரணமாக மயங்கி விழ, தந்தையாக ஜெயித்து விட்டார்????.

கட்டுக்குள் நிற்காத கொள்ளை நிலாவை காக்கும் சூரியனாக கூறியது அருமை???.
அருமையான கதை.எளிமையான நடை.இனிமையான முடிவு. வாழ்த்துக்கள் சரண்யா????.
 
Last edited:
Top