Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 15

Advertisement

கனமான பதிவு சரண்யா????.ஒற்றை பெண் என செல்லமாக வளர்ந்த மொழி,பெற்றவர்களை ஒரே நாளில்விபத்தில் இழந்து,மனம் விட்டு அழுவதற்க்கும் முடியாமல்,எதிர்காலத்தை நினைத்து பயந்து எவ்வளவு சிரமப்பட்டிருப்பாள்????.

அம்மா,அப்பாவோடு போனப்ப இருந்த உரிமை,நிராதரவாக நின்ற போது சாப்பாடு கேட்கவும் அவ்வளவு தயக்கமாய் இருக்கும் என மொழி சொல்வது கண்கலங்க வைக்கிறது????.

பெற்றவர்களை இழந்த நிலையில் ,திருமணம் முடிந்த சிலநாட்களில் கணவரின் இறப்பு,வீட்டை விட்டு வெளியேற்றியது எனவருத்தத்தில் இருக்க ராசியில்லாதவள் ,அதிர்ஷ்டமில்லாதவள் என சொல்வது அவள் மனதை எத்தனை வருத்தும் என ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை???.

தியாகு பாடம் சொல்லிக் கொடுக்கறத விட்டுட்டு,தெரியாத வேலையை செஞ்சு தொழில்ல நஷ்டமாயிடுச்சுன்னு மொழி வந்த நேரம்னு குறை சொல்வானா????.

மொழிக்கு பிடித்ததை ஞாபகம் வைத்து ஜீவன் வாங்கி தருவதும்,நிஜமாவே உங்களுக்கு என்னை அப்பவே...பிடிக்குமா என கேட்க வந்து சொல்லாமல் நிறுத்துவதும்,வர்ஷா,ஜீவனை காதலிக்காமல் இருந்திருந்தால் இருவரும் விரும்பியிருப்பார்கள் என எண்ண வைக்கிறது????.
ஆடத் தெரியாதவன் அரங்கம் கோணல் என்று சொன்ன கதை போல் தான், ஒழுங்காக தொழில் செய்யத் தெரியாத தியாகு மொழியின் அதிர்ஷ்டத்தை குறை கூறுவது. :mad:
 
Top