Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 41 நிறைவுற்றது

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நிறைவு. உண்மையில் மேகம் வந்து தாலாட்ட பெரிய நிறைவை கொடுத்த கதை. :)

சரண் இந்த கதைக்கு கருத்து சொல்லவே ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்தேன்னு சைட்ல நிறைய புது வாசக அன்பூக்கள். இதைவிட எனக்கு வேற என்ன வேணும்? :)

அவ்வளோ சந்தோஷம். அதுவே இன்னும் எழுத வச்சது. இது எல்லாம் உங்களோட ஊக்கங்களும், கருத்துக்களும் இல்லாம சாத்தியமில்லை. :)

ஒவ்வொரு கதைக்கும் இதைத்தான் நீ சொல்றன்னு சொல்றவங்களுக்கு எத்தனை கதை எழுதினாலும் இதை தான் சொல்லுவேன் நான். நீங்க எல்லாம் இல்லாம என்னால எழுத முடியுமா? வாய்ப்பே இல்லை. :)

அதோட இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா முதல் முதல்ல இரண்டு பாகமா ஒரு நாவல் எழுதியிருக்கேன். :)

எல்லாரும் இதோட செகேன்ட் பார்ட் எழுதுங்கன்னு சொன்னீங்க. இதுவே செகேன்ட் பார்ட்ல தான் போய்ட்டிருந்தது. :)

என்ன ஒன்னு, நான் சொல்லலை. இரண்டாவது பாகம்ன்னு எழுதி அதுக்காக கதையை இழுக்கற மாதிரி ஆகிட கூடாதேன்னு தான் இந்த கதை எவ்வளவு தூரம் போகுதோ அத்தோட முடிச்சிடுவோம்ன்னு இருந்தேன். :)

ஆரம்பிக்கும் போது அப்படி நினைச்சு எழுதலை. ஆனா இரண்டு பாகம் அளவுக்கு வந்திருச்சு. :)

ஒருசிலர் இந்த கதையை கல்யாணம் முடிஞ்சதோட நிறுத்தியிருக்கலாம்ன்னு சொன்னாங்க. காதல் மட்டுமா வாழ்க்கை? இல்லை அதை கல்யாணத்துக்கு கொண்டு சேர்க்கற வரைக்குமா? :)

கதைக்கான கருவா எதை எடுத்தேனோ அதை முழுசா சொல்லனும் தானே? அதுக்காக தான் கலயாணத்துக்கு பின்னால வர நிகழ்வுகளும். அப்படி இருக்கும் போது பாதியோட நான் முடிச்சிருந்தா இன்கம்ப்ளீட் ஸ்டோரி ஆகியிருக்கும். :)

எனக்கும் சொல்ல வந்ததை சொல்லாம விட்டுட்டேன்ற நினைப்பு இருக்கும். எப்பவும் கதையில காம்ப்ரமைஸ் கூடாது இல்லையா? :)

அடுத்ததா எஸ்பிபி. மை காட். இவரோட வாய்ஸ்க்கு நான் அவ்வளோ அடிக்ட். இவரை மாதிரி ரொமாண்ட்டிக்கா எந்த வாய்ஸையும் கேட்டதில்லை. :)

உதாரணமா சொல்லனும்னா காதலுக்கு மரியாதை படத்துல வர தாலாட்ட வருவாளா சாங் ஹரிஹரன் பாடினதுன்னு எல்லாருக்குமே தெரியும். :)

அதே பாட்டை எஸ்பிபியும் பாடியிருக்கார். கேட்டிருக்கீங்களா? நான் அதை தான் கேட்பேன். அந்தளவுக்கு நான் அடிக்ட். :)

இந்த கதைக்கு சாங்ஸ் எல்லாமே எஸ்பிபி வாய்ஸ் குடுக்கனும்னு ஒரு ஆசை. அதான் என்னோட பேவரெட் லிஸ்ட்ல இருந்த சாங்ஸ் கொஞ்சம் கதைக்கு ஏத்த விதமா குடுத்துட்டேன். :)

ஹப்பா எவ்வளோ பெருசா சொல்லிட்டேன். கதை நிறைவுபெற்றது. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. :)

இனி அதிரன், அவன் மேகம் இதை எழுத முடியாது. :)

அவ்வளோ பேர் இந்த கதையை எழுதிட்டே இருங்க ப்ளீஸ்ன்னு சொல்லியிருந்தீங்க. வாவ்ல ஆசை தான். ஆனா கதையை நிறைவு வரும் போது இன்னும் இதுக்காக எழுதினா தான் இழுத்ததா வந்திரும். இல்லையா? :)

இதே சந்தோஷத்தோட இதே நிறைவோட அதிரன் மேகத்துக்கு விடைகொடுப்போம். :)

அடுத்த கதை நூதன கீர்த்தனங்கள் திங்கள் கிழமையில இருந்து மாலை ஆறு மணிக்கு வரும். எனக்கும் கொஞ்சம் ப்ரேக் தேவையா இருக்கு. :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 41 (1)

மேகம் வந்து தாலாட்ட - 41 (2)

மேகம் வந்து தாலாட்ட - 41 (3)

மேகம் வந்து தாலாட்ட - 41 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு


Nice
 
Top