Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 11 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 11 (2)

இந்த பதிவின் அடுத்த பதிவு தான் கதை ஆரம்பித்த அன்னைக்கு போட்ட 00 பதிவு. அதை 12 பதிவா மாத்திடறேன். படிக்காதவங்க படிங்க. படிச்சவங்க திரும்ப ஒருவாட்டி படிங்க ;) ;) ;)

அதோட லிங்க்


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 12 (00)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

என்ன ஒரு ராஜதந்திரம் 2 எபி போடுறேனு பழசையும் சேர்த்து ஓட்டுறாங்க :p:p:p


ஓஹோ வீட்டோட மருமகனுக்கு தான் இவ்ளோ பேச்சா???
இவ நாக்கை அறுத்துவிடனும் எங்கேயும் பேசவேண்டாம்னு.........

இன்னொரு முறை சொல்லுங்க னு கேட்டால் உதையா :p:p:p
அதுக்கு தான் கொக்கா இருக்காளே...... நீங்களும் ஏன் ஆபிஸர்........

ரிசல்ட் வந்ததுமே ஆட்டமா இவளுக்கு........
அப்போ MLA வீட்டுக்காரங்களை தூண்டிவிடுவாளே இவளே........

அப்பா அம்மா ரெண்டு பேரும் சரியில்லை உத்ராக்கு......
அதென்ன பெத்த வீட்டில் மதிப்பில்லைனா போற இடத்தில மதிப்பாங்க........
இங்கே என்ன live streaming ஓடுதா???
நீ எப்படி நடந்துக்குறியே அப்படிதான் மதிப்பு எங்கேனாலும்.......

Decision making is very important for administration.......
அதுவும் 4 பேருக்கு நல்லது பண்ணுற முடிவு......
ஆனால் உனக்கும் அதுக்கும் காத தூரம் போல.......
ஏம்மா பூவி இவனை நீ கல்யாணமே பண்ணியிருக்கவேண்டாம்........
ஸ்டெடி மைன்ட் இல்லை இவனுக்கு.......

போன் அடிச்சு மெசேஜ் பண்ணுறப்போ எல்லாம் பேசமுடியாத இவன் கிட்ட என்ன பேச்சு.......
கல்யாணம் முடியட்டும் பேசுறேன் னு வெளுத்துட்ட போல அக்காவை.......
அக்காவை மட்டும் தானா இல்லை கலெக்டருக்கும் விழுந்துச்சா :p:p:p
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அட கெரகம் புடிச்சவங்களா
உங்க வீட்டுப் பொண்ணு உங்களுக்கு உசத்தியா இருக்கிற மாதிரிதானே பூவிதயா வீட்டிலும் நினைத்து அவளை வளர்த்திருப்பாங்க
அதுவும் பத்து பைசாவுக்கும் லாயக்கில்லாத உத்ராவுக்கே ருக்மணி இவ்வளவு சப்போர்ட் செஞ்சால் எல்லாத் திறமையும் இருக்கிற அரசு உத்தியோகம் பார்க்கும் பொறுப்பான பெண்ணை அவள் பெற்றோர் எப்படி தாங்குவாங்க?

அடக் கருமமே
வீட்டோடு மாப்பிள்ளையா தம்பி போனாலும் தன் புகுந்த வீட்டுப் பக்கம்தான் அவனுக்கு பெண் எடுக்கணும்ன்னு இவன் பெத்த பீத்தல் பொண்ணு பேச்சைக் கேட்டு அது மாதிரியே செஞ்சிருக்கலாமே கேடுகெட்ட சிவசுந்தரம்

வீணாக ஒரு பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து விட்டு நிச்சயம் செய்து ஐந்து மாதம் கழித்து திருமணத்தை நிறுத்த சொல்வது நியாயமில்லை

அப்படியும் அந்த பொண்ணு துணிச்சலாக இவன்தான் மாப்பிள்ளைன்னு வம்படியா கல்யாணம் செஞ்சால் மனம் புண்படப் பேசி வாழ விடாமல் துரத்தி விடுவீங்களா?

அந்த வெளங்காத மூதேவி உத்ராவை மட்டும் பெரியதாக நினைத்து இதெல்லாம் செய்த ருக்மணியும் அவள் புருஷனும் இன்னொரு பெண் நிஷா இருப்பதை மறந்துட்டாங்களோ?

ஒரே மருமகளை வாழ விடாமல் துரத்தியதை கேள்விப்பட்டால் நிஷா பொண்ணை எவன் கட்டுவான்?

இது கலிகாலம்
தப்பு செஞ்சால் கை மேல தண்டனை கிடைக்குமே
சிவசுந்தரமும் அவன் பொண்டாட்டியும் இதை மறந்துட்டாங்களா?

இல்லை ஒருவேளை இந்த மாதிரி ஏதாவது பிரச்சினை வந்துதான் இதயாவை பையனுடன் சேர்க்க நினைத்தாங்களோ?

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்
கலெக்டருக்கு செலக்ட் ஆனதை கட்டிக்கப் போறவளிடம் முதலில் சொன்ன கண்ணபிரான் அடுத்து பூவிதயாவின் போன் கால், மெசேஜ் இதுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லவில்லை?
என்ன காரணம்?

அக்காங்கிற மூதேவியும் அவளுக்கு வேப்பிலை அடித்த அப்பனின் பேச்சையும் கேட்டு கண்ணன் அமைதியாயிட்டானா?
என்ன காரணமாக இருந்தாலும் அப்பவும் உத்ராவின் நாற வாய் பேச்சில் இதயா கலங்கிப் போய் நின்னப்பவும் கண்ணன் பதில் கொடுக்காமல் மௌனமாக இருந்தது ரொம்ப ரொம்ப தப்பு

இப்போ காலம் போய் இவனுக்கு சௌகரியப்பட்ட பொழுது வந்து கூப்பிட்டால் நாய்க்குட்டி மாதிரி வாலை ஆட்டிக்கிட்டு பின்னாடியே பூவிதயா போகணுமா?
என்ன கொடுமையடா சரவணா?
 
Last edited:
பொண்ணுக்கு எடுக்கும் புடவை போல எனக்கும் வேணும் என்று கேட்பது கூட பிறந்த வீட்டு பெண்ணின் உரிமைன்னு கூட விடலாம், அது என்ன உத்ரா நீ சொன்ன சேலை, நீ சொன்ன விலையில் தான் எடுக்கணும்னு திமிர் தனம் பண்ணுவது,உனக்கு கல்யாணமா இல்லை உன் தம்பிக்கா......????
ஏம்ப்பா கலெக்டர் உனக்கு தெரியாமயே கல்யாண பேச்சை நிப்பாட்டி இருக்கட்டும், அதை நீ இதயா போன் பன்னுறப்ப கூட அவகிட்ட சொல்லலாம்ல, வாய்ஸ் மெசேஜ் கூட அனுப்பினாளே அதுக்கும் பதில் சொல்லல... நீயும் உன் பங்குக்கு அமைதியா இருந்திருக்க ??
 
Last edited:
???

இதுக்கு பேருதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்காயா???? ??
இதெல்லாம் போங்காட்டம்..... ஒத்துக்க முடியாது.... ???

ஏம்மா உத்ரா கல்யாணம் உனக்கா??? உன் தம்பிக்கா??? என்னா ஆட்டம் போடுற.... வேலவன் சார், உத்ராவை மாத்துறதைப் பத்தி நீங்க கொஞ்சம் கன்சிடர் பண்ணலாம்....???

சொந்த அக்காவை கண்ட்ரோல் பண்ண தெரியலை.... நீங்க எல்லாம் மக்கள் பணி செஞ்சு... ??? கலெக்டர் சார் உங்களை பத்தி ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.... ???

 
Last edited:
Top