Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சில்லுனு ஒரு காஃபி..!!(E1)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew
Hellloooo makkale!!!!

Here comes the first epi of
சில்லுனு ஒரு காஃபி..!! ? ☕

Share your thoughts friendsss!!!!



காஃபி-1




அழகிய காலை நேரமது...! விடிந்து சில மணிநேரங்கள் ஆகியிருந்தாலும் அந்த காலை நேரத்திற்கே உரிய குளுமை மாறாமல் இருந்தது....மிதமான வெயிலுடன்கூடிய அந்த காலை...!

கடல் பச்சை நிறத்தில் சாயம் பூசப்பட்டிருந்த அந்த அறையும் அதற்கேற்றார்போல் அங்கிருந்த யன்னலில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த வெள்ளைநிற திரைச்சீலையும்...சுவற்றினில் அதே வெள்ளை நிறத்தால் வரையப்பட்டிருந்த பட்டாம்பூச்சியும்...ரசனைக்குரியதாக இருந்தது.

கதிரவன் பெரிய மனதுடன் திறந்திருந்த அந்த யன்னல் வழியாக தன் கரங்களை நீட்டி அந்த அறையை அணைத்திருக்க...சூரிய ஒளியில் அந்த அறையே பளீரென்றானது...!

ஆனால் அதை ரசிக்க வேண்டியவளோ நன்றாக குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த அறையிலிருந்த காத்தாடி அவள் அனுமதியின்றியே நின்றுவிட...ஏசிபோடும் பழக்கமில்லாதலால்...போர்வையினுள் இருந்தவளுக்கு ஒரு கட்டத்திற்குமேல் வேர்த்துக்கொட்ட அதில் தூக்கம் தொலைந்தவளாக...எழுந்துவிட்டாள் தாரா...!

எழுந்தவள் ஒரு நொடி கண்களை மூடி ஆழ மூச்சிழுக்க அவள் நாசியை அழகாக தீண்டிச் சென்றது அந்த பூவாசம்...!
கண்களை திறந்தவள் ஸ்விட்ச் போர்டை பார்த்தால் ஃபேன் ஸ்விட்ச்சோ அணைக்கப் பட்டிருந்தது.

"சந்து பேபி!" என்றவளின் இதழினில் தானாக வந்து ஒரு புன்னகை ஒட்டிக்கொள்ள...கட்டிலை விட்டிறங்கியவள் சோம்பல் முறித்தவாரே ஹாலிற்கு வந்தாள். அந்த சோஃபாவில் கையில் ஒரு செய்தித் தாளை வைத்துக் கொண்டு கண்ணிலிருந்த மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறு இருந்த சிவநாதன்...இவள் வரும் அரவம் கேட்க திரும்பியவர் இவளைப் பார்த்தவுடன்,

"ஹே!!! வா வா...குட் மார்னிங்டாமா!!!" என்றவர் உள்ளே நோக்கி "மதிமா!!! தாரா எழுந்தாச்சு பாரு!!" என்று குரல் கொடுக்க.. தாராவோ வசதியாக அவர் மடியில் தலை வைத்தவாறு "பாரு ஷிவ்!!! இந்த சந்துபேபிய வேலை மெனகெட்டு ஃபேன ஆஃப் பண்ணிருக்கு..." என்று குறைகூற, ஷிவ் ஆகப்பட்ட சிவநாதனோ "பாரேன் என்ன டெக்னிக்கா உன்னைய எழுப்பிருக்கா...!" என்று அதிசயிப்பதுப் போல் பாவனை செய்ய... கையில் காஃபியை ஆற்றியவாறு வந்த சந்திரமதி இருவரையும் முறை முறையென்று முறைக்கத் தொடங்கினார்
"ஏன் ஷிவ் இதுக்கு பேருதான் மொறப்பொண்ணோ...இந்த முறை முறைக்குதே நம்ம பேபிமா" என்றவள் சிவநாதனின் காதை கடிக்க

சந்திரமதியைப் பார்த்த சிவநாதனோ சிரிப்பை அடக்க முயன்று தோல்வியை தழுவிக்கொண்டிருந்தார். அதை கண்டுக் கொண்ட சந்திரமதி "உங்கள..." என்று வசவை தொடங்க தயாராய் நின்றார் இவர்களால் சீண்டப்பட்டவராய்..!!

அதை உணர்ந்தவளாய் இடையில் புகுந்த தாரா "சந்து பேபி!!! எவ்ளோ நேரந்தான் அந்த காஃபிய ஆத்துவ...?" என்று தவளை தன் வாயால் கெடும் என்பதை நிரூபித்திருந்தாள்.

சிவநாதன் 'இப்படி மாட்டிக்கிட்டீயேடா!' என்று அவளை பரிதாபமாக பார்க்க...

சந்திரமதியோ "எழுந்திருக்கிற நேரமா இது...? நைட் முழுக்க அரட்டையடிக்க வேண்டியது...இப்படி லேட்டா எழுந்தா எப்போ சாப்பிட்டு..." என்று புலம்பியவரைப் பார்த்து சிவநாதன் "லீவ் நாளுதானே மதிமா..." என்று அவளுக்கு சப்போர்ட்டிட சந்திரமதியோ "நீங்களே செல்லம் குடுத்து கெடுத்துருவீங்க அவள...தாத்தாவும் பேத்தியும் கொஞ்ச நஞ்ச வரத்தா வர்றீங்க..!! போதாக்குறைக்கு அந்த வாண்டுகளையும் கூட்டு சேர்த்துகிட்டு...நீங்கல்லாம் தூங்கிட்டீங்க இவ இரண்டு மணிவர முழிச்சிருக்கா..." என்று போட்டு உடைத்துவிட்டார்.

சிவநாதன் பேத்தியை கேள்வியாக நோக்க தாராவோ அவரைப் பார்த்து அசடுவழிந்தவாறு "அதில்ல ஷிவ்...ஒரு சின்ன வேலையிருந்துதா..." என்றவள் கேவலமாக சமாளிக்க முயல்வதை கண்டுக் கொண்ட சிவநாதன் பேச்சை மாற்றும் விதமாக "என்னடா இது இப்படி வேர்த்து கொட்டிருக்கு...?" என்றார்.

அதை புரிந்துக் கொண்டவளோ இதுதான் சரியான நேரமென்பதுபோல் சந்திரமதியையும் இழுத்தமர்த்தி...தாத்தாவின் மடியில் தலை வைத்தவள் "எல்லாம் இந்த சந்து பேபியால வந்தது ஷிவ்..." என்று குறைகூறினாள்.

சந்திரமதியோ "நான் என்ன பண்ணேன்...?" என்றார் அப்பாவியாய்...!

"என்ன பண்ணேனா...? பாட்டியா லட்சணமா...எனக்கு பெட் காஃபி கொடுக்காம...ஓடிக்கிட்டிருந்த ஃபேனையும் ஆஃப் பண்ணிட்டு அப்பாவியா கேக்கறத பாரு ஷிவு!!!" என்று வராத கண்ணீரை துடைத்தாள்.

"என்ன மதி நீ...பிள்ளை பாவம் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விட்றுக்கலாம்ல..." என்று அவளுக்காக வாதாட...

சந்திரமதியோ" அதுசரி எப்படி எப்படி...? நேத்து அவ்ளோ நேரம் படம் பாக்கும் போது தெரியலையாக்கும்...இருங்க வரட்டும்... அந்த வாண்டுகளும் வரட்டும்!! ஒரு வாரத்துக்கு ஸ்வீட் கட்!!" என்று தீர்ப்பு வழங்க

'அவசரப்பட்டியே தாத்தா...' என்றுப் பார்த்தவள் பாட்டியிடம் திரும்பி "நாட்டாமை!!! தீர்ப்ப மாத்தி சொல்லு!!!" என்று கத்தியவளாய் முறையிட்டாள்.

"எந்த தீர்ப்ப தக்காளி...?" என்றவாறு வீட்டினுள் நுழைந்த அபிநந்தன்...தாத்தாவின் மடிமேல் தலை வைத்து மல்லாக்க படுத்து பாட்டியிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தவளிடம் வம்பிழுக்கவென்றே ஆஜரானான்...!

"நண்டு!!!"

"தக்காளி!!!"

"டேய்!!! நண்டு உன்ன சூப் வச்சிருவேன் பாத்துக்கோ!!!"

"சூப்லாம் அப்புறம் வைக்கலாம்...அம்மா தேடுனாங்களே உன்ன...சரி சரி சீக்கிரமா தோட்டத்துக்கு வந்துரு!" என்றவன் வந்த வேலை முடிந்தது என்பது போல் சென்றுவிட


மடமடவென்று அந்த காஃபியை குடித்துவிட்டு "அம்மா எழுந்தாச்சா...?" என்று பாட்டியிடம் வினவ

"எழுந்து வாக்கிங்கையும் முடிச்சாச்சு...ஏதோ ஆஃபிஸ் வேலையா இருக்காடா". என்றுவிட அப்பொழுதுதான் நினைவு வந்தவளாக

"அச்சோ!!! மறந்தே போயிட்டேன் இருங்க பேபீஸ் நான் வரேன்!". என்றெழுந்துக் கொண்டவள் தலையில் தட்டியவளாய் அன்னையை நாடிச் சென்றாள்.

துள்ளலுடன் நடந்துச் சென்ற தாராவையே பார்த்த சிவநாதன் "ஏண்டா...அவள இவ்ளோ சீக்கிரம் எழுப்பின...?" என்று வினவினார் பாசம் தொய்த்த குரலில்...!

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சந்திரமதியும் "இல்லப்பா அவ தான் எழுப்ப சொன்னா...உடம்பு என்னத்துக்காகறது!? இப்படி நேரங்கெட்ட நேரத்துல எழுந்தா..."

"லீவ் நாளுலதானடா...மத்த நாள்லாம் அவதானே மொத ஆளா எழுந்துக்கறா??!"

"இப்ப எழுப்பலன்னா காலை சாப்பாட்ட சாப்பிட மாட்டாப்பா..." என்றவரின் நியாயம் புரிய அதற்குமேல் அவர் அதைப் பற்றி கேட்கவில்லை.

தாரா...
அவளுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் வாழவேண்டும்...ரசிக்க வேண்டும்...நேசிக்க வேண்டும்...முக்கியமாக அவள் அன்பை காட்டிவிட வேண்டும்...!

அது அவளது கடந்த காலம் அவளுக்கு கற்று தந்த பாடம்...!

"குட்மார்னிங்மா!!!" என்றவாரே அறையினுள் நுழைந்தாள் தாரா.

அந்த அறையின் வலதுபுறமிருந்த மேசையில்...அந்த டெஸ்க்டாப்பிற்குள் மூழ்கியிருந்த அமரா இவளின் குட்மார்னிங்கில் திரும்பியவர்...

"குட்மார்னிங்டா கண்ணா!!! இப்போதான் எழுந்தியா...?"

"ஈஈஈ..." என்று சமாளிப்பாய் சிரித்தவள் "என்ன வேலைமா காலைலயே...?" என்று வினவியபடி அங்கிருந்த ஃபைல்களைப் புரட்டினாள்.

"க்ளையன்ட் மீட்டிங்குக்குதான்டா!! ஆமா அந்த ரிபோர்ட்ஸ்..." என்று அவர் முடிப்பதற்குள்ளே "ஹாஹா...மெயில் செக் கரோ மாதாஜி..." என்றவாரே அந்த டீஷர்ட்டின் காலரை தூக்கிவிட்டவள் "அதெல்லாம் நைட்டோட நைட்டா அனுப்பிட்டோம்ல" என்றவளைப் பார்க்க பார்க்க சிரிப்பு வந்தாலும் அதே சமயம் பெருமையாகவும் இருந்தது.


ஒரு புறம் பார்ட் டைம் MBA-வும்...மறுபுறம் அன்னையுடன் சேர்ந்து பிஸ்னஸுமாக சுற்றிக் கொண்டிருப்பவளாயிற்றே...!
நடுவில் குடும்பம் வேறு...!!

மெயிலை பார்த்தவர் திருப்தியாக "பெர்ஃபெக்ட் டா கண்ணா..." என்றுவிட அவள் முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் பல்ப்..!!

"அஹான்!! டாங்கூ டாங்கூ!!!" என்று இடைவரை குனிந்து நிமிர அவள் தலையிலேயே லேசாக குட்டியவர் "போ...போய் மொதல்ல பல்ல தேய்!!!" என்றுவிட

"ஸ்ஸ்ஸ்!!! போம்மா...காலையில் தினமும் கண்விழித்தால்னு பாட்டு பாடலாம்னு வந்தா...போ பாட்டு கேன்ஸல்"

"அது காஃபி குடிக்கறதுக்கு முன்னாடி வந்துருக்கனும்" என்று அவர் சொன்னதுதான் தாமதம்

"வாயில அடி வாயில அடி!!! என்ன வார்த்தை சொல்லிட்டமா??!!"

"யாரு வாயிலடா கண்ணா...?" என்று அப்பாவியாய் கேட்பவரை பார்த்து "ரைட்டூ!!!" என்றவள் அடுத்த நொடியே அங்கிருந்து ஓடியிருந்தாள்.

அவருக்கு நன்றாக தெரியும் அவளுக்கு காஃபி...அதுவும் காலை நேர காஃபி எவ்வளவு பிடித்தம் என்பது...அந்த காஃபிதான் அவளுக்கு அந்நாளுக்கான எனர்ஜி பூஸ்டர் என்பாள்...அப்படிபட்டவளிடம் காஃபியை பற்றிய பேச்சை ஆரம்பித்தால் போதும் அரை தம்ளர் காஃபியை சிலாகித்து அரைமணி நேரம் பேசுவாள்.

அவர் சொன்னது போலவே அனைத்து வேலைகளையும் முடித்தவள்...அந்த தோட்டத்தை நோக்கி தன் நடையை கட்டினாள்.

"ஹே!!! தக்காளி என்ன உன் மார்னிங் மொக்கை முடிஞ்சிதா...?"என்றவாறு ஓடி வந்தது வேறு யாருமல்ல அவளின் 'நண்டு' அபிநந்தனே.

"நண்டூ!!!"

"ரைட்டு விடு"

"ஹ்ம்ம் அது!! ஆமா எங்கே நமது படை வீரர்களான நார்த்தங்கா, ஜக்கம்மா, சப்பமூக்கன்...?"

"எல்லாம் கீறிபுள்ளயோட சேர்ந்து பின்னாடி இருக்காங்க...நான் உன்ன கூப்பிடத்தான் வந்தேன்...வா" என்றவாறு அவன் முன்னே நடக்க ஆரம்பித்தான்.

"பின்னாடியா...? என்ன பண்றாங்க???"

"ம்ம்ம் எக்ஸஸைஸ் பண்றாங்க"

'எக்ஸஸைஸா...அதுங்க அதெல்லாம் பண்ணாதுங்களே' என்ற சிந்தனைவயப்பட்டவளாய்

"மாமா எங்க..?" என்றாள்

"மாமா வேலையா வெளில போயிருக்காங்க, அம்மாவும் அத்தையும் கடைக்கு போயிருக்காங்க..."

"ஓ!!! அப்போ சித்தி வீட்ல இல்லையா...?"

"இல்ல.. ஏன்?"

"அதான் நண்டு இந்த துள்ளு துள்ளுது"என்று தன் சித்தி மகனின் தலையில் தட்டிவிட்டு தோட்டத்திற்குள் ஓடினாள் அந்த பாசக்கார(?) அக்கா.

சில்லிடும்....
 
Top