Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-8

Advertisement

Bhavatharini

Tamil Novel Writer
The Writers Crew
pYc9O7P6zNttkOllang3_04Wa54MVfkIIygTKtokAgklV7GxOXNEMfRVXa6SDV1gF5EL9g-j4LydoFs5TzVEUG0UQAJ0Qwc896855qqrcfZ8-qdkFISqN45lfIiRzgSrjWum9z6m



அன்புள்ள தோழர்களே!

உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி!.
படித்து விருப்பம் மற்றும் கருத்துகள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!. உங்களது மேலான கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.



சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-8..


அகிலன் அவருடைய அண்ணனின் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பனை பார்க்கச் சென்றான். அகிலனின் பால்ய நண்பன் சரவணன், ஏற்காடிலேயே ஒரு பைக் பட்டறை வைத்துள்ளார். அகிலன் எப்பொழுது ஊருக்கு வந்தாலும் பெரும்பாலான நேரம் சரவணின் கடையில்தான் பொழுதுபோக்குவான்.

யாழினியின் இதழ் தந்த ஈரம் மனதை அறுத்துக்கொண்டே இருந்ததால், ஒரு தடவையாவது யாழினி இடம் பேசிவிடுவோம் என்ற ஆசையால் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பனின் பட்டறைக்கு சென்றான். யாழினிக்கு தனியாக மொபைல் கிடையாது, கல்லூரி மாணவர்கள் பதிவேட்டை பார்த்ததில், யாழினியின் வீட்டு தொலைபேசி எண் மட்டுமே அகிலனால் கண்டுபிடிக்க முடிந்தது.

யாழினி வீட்டைப் பொறுத்தவரை தொலைபேசியின் அழைப்பு மணி கேட்டால், முதலில் அண்ணன், அண்ணன் இல்லையெனில் அண்ணி கல்பனாதான் எடுப்பார். சின்ன அண்ணன் கலையரசன் தனியாக மொபைல் வைத்திருப்பதால் அவர் வீட்டு தொலைபேசியை கண்டு கொள்ளமாட்டார். யாழினிக்கு தொலைபேசி எடுத்து பேசும் வழக்கம் கிடையாது, யாரும் இல்லாத போது மட்டுமே தொலைபேசி அழைப்பு வந்தால் எடுப்பாள்.

அகிலனுக்கு சிறிது தயக்கமாக இருந்தாலும், மனது கேட்காமல் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சரவணன் கடையிலிருந்து யாழினியின் வீட்டிற்கு போன் செய்தான். ஆனால் யாழினியும், அவள் அண்ணியும் பக்கத்தில் இருந்த பெரியப்பா வீட்டிற்கு சென்றிருந்தனர். வீட்டில் இருந்த அண்ணன் எடுத்து 'ஹலோ' என்று கூற, ஆண் குரலை கேட்டதும் பக்கென்று பயந்து எதுவும் கூறாமல், பட்டென தொலைபேசியை வைத்து விட்டான் அகிலன்.

சரவணன் "ஏண்டா டக்குனு வெச்சிட்ட? போன் போகுதா இல்லையா?" என்றான்.

"டேய்! ஆம்பளை வாய்ஸ். அதான் வெச்சுட்டேன்." என்றான் அகிலன்.

'என்னது உன் ஆளுக்கு ஆம்பளை வாய்ஸா!' என்று சரவணன் ஆச்சர்யமாக கேட்டான்.

"டேய் லூசு, அவளோட அண்ணன் பேசுறார் போல. உன் அறிவுக்கு பட்டறையே அதிகம்டா! " என்றான் அகிலன் கடுப்பாக.

யாழினியின் பெரிய அண்ணனுக்கு வெளியில் வேலை இருந்ததால், பத்து நிமிடம் கழித்து அவர் வீட்டிலிருந்து கிளம்பிவிட, அடுத்த அரை மணி நேரம் கழித்து மீண்டும் அகிலன் முயற்சி செய்தான்.

சரவணன் குறுக்கே புகுந்து, "இப்ப போன என்கிட்ட குடுடா, என் ராசிய பாரு" என்று அவனிடம் இருந்து பிடுங்கி கொண்டான்.

வீட்டில் யாழினியின் பாட்டி மட்டும் தனியாக இருக்க, தட்டு தடுமாறி வந்து தொலைபேசியை எடுக்க, ஆர்வகோளாரில் சரவணன் "என்ன பேச்சையே காணோம், இன்னும் நேத்து பஸ் மயக்கத்தில் இருந்து அம்மணி வெளிய வரவில்லையோ" என்றான்.

அங்கு பாட்டி, " எடுபட்ட பயலே! எவன்டா அவன், பஸ், கிஸ்ன்னு பேசுறவன். " என்று திட்டி கொண்டிருக்கும் போதே அகிலன் தொலைபேசியை கையில் வாங்க பாட்டியின் குரலை கேட்டு தொலைபேசியை அணைத்தான்.

சரவணன், அகிலனிடம் "ஏண்டா, உன் ஆளு இப்படி திட்டுறா?" என்று கேட்க அகிலன் முறைத்துவிட்டு, "எருமை மாடு, பேசுறது அவங்க பாட்டி, இருபதுக்கும், எழுபதுக்கும் வித்தியாசம் தெரியலையா? முன்னபின்ன பொம்பளைங்க கிட்ட பேசாதவனிடம் கொடுத்தேன் பாரு, என்னை நானே அடிச்சுக்கணும்" என்று தலையில் அடித்துக் கொண்டான் அகிலன்.

"ஒரு வருஷம் ஆச்சு இன்னும் ஒன்னையும் கரெக்ட் பண்ணலையாம், நானா இருந்தா இந்நேரம் வீட்டுக்கே போயிருப்பேன். இவன் என்னை சொல்லுறான்" என்று முணுமுணுத்து கொண்டே வேலையைப் பார்க்கலானான்.

"இது லவ்டா முட்டாள். அவளுக்கும் தோணனும். கம்பியை எடுத்து உன் மண்டைய பொலந்துருவேன். நீ உன் வேலைய பாரு." என்றான் அகிலன்.

அடுத்த நாள் அகிலன் மீண்டும் முயற்சி செய்ய, அப்பொழுது அண்ணி தொலைபேசி எடுக்க 'ஹலோ "என்ற பெண் குரல் கேட்டது, முதலில் சந்தோஷப்பட்டாலும் பிறகு, இது அவள் குரல் இல்லை என்று தெரிந்து, என்ன செய்வது என்று தெரியாமல்" ராங் நம்பர்" என்று கூறி வைத்து விட்டான்.

இப்படியே இரண்டு நாளைக்கு ஒருமுறை தொலைபேசி அழைக்க, யாழினியின் வீட்டில் "யார் இது? சும்மா கால் பண்ணிட்டு இருக்காங்க? யாருன்னு கேட்டால் ராங் நம்பர்ன்னு சொல்லிட்டு வெச்சுடுறாங்க" என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

யாழினிக்கு மனதில் திடீரென்று ஒரு திகில் தோன்றியது. 'அகிலனா இருக்குமோ!' என்று மனது படபடத்தது, 'அடுத்த முறை வரும்போது நாம போய் போன் எடுக்க வேண்டும்' என்று முடிவு பண்ணினாள்.

அதேபோல் அடுத்த தொலைபேசி அழைப்பின் போது அண்ணங்கள் இருவரும் வெளியில் சென்றிருந்தார்கள், அண்ணியும் கர்ப்பமாக இருக்கும் களைப்பினால் உறங்கிக் கொண்டிருந்தார்கள். யாழினி தொலைபேசியை எடுத்து பதட்டத்துடன் 'ஹலோ' என்று கூற மறுமுனையில் கலை இல்லயாப்பா, நான் அவனுடைய பிரண்ட் பேசுறேன் என்று ஒரு குரல் கேட்டது.

அவளுக்கு 'சே! ரொம்ப யோசிச்சு விட்டோமோ' என்று எண்ணிக் கொண்டு 'அண்ணன் வெளியே போயிருக்காங்க' என்று கூறிவிட்டு வைத்துவிட்டார்.

யாழினி மனதிற்குள் ’என்ன மடத்தனமான வேலை பார்க்கிறோம். பேருந்தில் நடந்தது அனைத்தும் விபத்து. அதில் காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை. அகிலனிற்கு நம் வீட்டு போன் நம்பர் கூட தெரியாது, நான்தான் லூசு மாதிரி யோசித்துகொண்டு இருக்கிறேன், நாம போன் எடுத்தா, கண்டிப்பா யாரு? எதுக்கு? என்று ஏதாவது வீட்டில் கேட்பார்கள்? தேவையா நமக்கு?' என்று நினைத்தாள். "ராங் நம்பரோ! ரைட் நம்பரோ! அமைதியாக இருப்போம். கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், காலேஜ்க்கு போறது அதுவே கடைசி நாள்.' என்று அவளே, அவளை கண்டித்துக் கொண்டாள்.

அகிலன் அன்றும் யாழினியை அழைக்க எண்ணும்போது அவன் தோழன் சரவணன்," டேய் மாமா!, அவுங்க வீட்டுல அந்த பிள்ள போனை தொடாது போல. அதான் ஒரு கூட்டமே அவுங்க வீட்டுல இருக்கும்ன்னு சொன்னியே! அப்புறம் எப்படி அது எடுக்கும்? ரொம்ப கஷ்டம்டா, நீ காதல் பண்ணுன மாதிரிதான், சும்மா போன் பண்ணி வம்புல மாட்டிக்காதே!" என்று கூற அகிலனும் செய்வதறியாமல் அழைப்பதை நிறுத்திக் கொண்டான்.

உலகமே அலைபேசியில்

அளவளாவியபடி!

காதலி நீயோ

அழைப்பு மணி கேட்காத


தூரத்தில்!

இப்படியாக அவளது நினைவுகளுடன் விடுமுறையும் முடிந்து, மீண்டும் கல்லூரி திறக்கும் நாளும் வந்தது. இரண்டாம் வருடம் ஆரம்பித்து விட்டது, கூடவே ஒரு தலைவலியும்.

கல்லூரி இரண்டாவது வருடம்..

இவர்கள் சீனியர்கள், பழக்கமான இடம், பழக்கமான தோழர்கள், ஆசிரியர்கள், சொல்லாத காதல், சொல்லிய காதல் என்று பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பித்தது அந்த வருடம். கல்லூரி வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் எழுதும் வருடம் அது. அன்று கல்லூரி வாழ்க்கை இவர்களுக்கு மிகவும் கெத்தான, மிதப்பான வாழ்க்கையாக அமைந்தது. முதல் இரு மாதங்கள் அனைவரும் பேசுவதும், சிரிப்பதுமாக குதூகலத்துடன், கல்லூரி நாட்கள் நகர்ந்தன. அகிலனும், யாழினியும் அவ்வப்போது ஒரு தோழர்களைப் போல பேசிக் கொள்வதுண்டு. அகிலன் விடுபட்ட பாடத்தை எழுதி அனைத்திலும் தேர்வு பெற்றிருந்தான். யாழினி, அகிலனை, ஒரு உயிர் தோழனாக மட்டுமே பார்த்தாள், சொல்லாத காதலை நெஞ்சில் வளர்க்காமல் பார்த்துக்கொண்டாள். அகிலனோ, யாழினியை காதலியாக, மனைவியாகப் போகும் ஒருத்தியாக பார்த்தான். தோழனுக்கும், காதலனுக்கும் ஒரு நூல் இடைவெளிதான். ஆனால் யாழினி கோட்டிற்கு இந்த பக்கமும், அகிலன் கோட்டிற்கு அந்தப் பக்கமும் இருந்தார்கள்.


பயணிப்போம்

ஒரு பயணம்

ஆயுள் முழுதும்!

கட்டளையிடு கண்மனி

கரம்பற்றி வருகிறேன்

களைப்பாகும்


வரை!

இரண்டு மாதத்திற்கு பிறகு முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகை ஆரம்பித்தது. கூடவே அகிலனுக்கு தலைவலியும் சேர்ந்து வந்தது.

இவர்கள் கல்லூரியில் பெரிய அளவு ராக்கிங் கிடையாது. ஆனால் சிறிய அளவில் ஆண்கள் மட்டும் ரேக்கிங் செய்வதுண்டு. முதலாமாண்டு சேர்ந்த எம்எஸ்சி படிக்கும் பெண்களிலே ஒருத்தி மட்டும் மிகவும் அழகாக இருந்தாள். கல்லூரிலேயே அவள்தான் அழகுன்னு எல்லாரும் சொல்லுவாங்க." என்று அகிலன் தன்னுடைய கல்லூரி நினைவுகளை கூறிக் கொண்டிருக்கும் போது, ஹைத்ராபாத்தில் இருந்து சென்னை சென்றுக்கொண்டிருந்த அவர்களுடைய பேருந்து, ஒரு நெடுஞ்சாலை ஓர டீக்கடையில் நின்றது.

அகிலன் கூறுவதை நிறுத்தி, பேருந்தில் இருந்து இறங்க முற்பட, செல்வம் அகிலனிடம்," ஏய்! நீ சொல்லு, திடீரென்று ஒரு அழகான பொண்ணு, அதுவும் மொத்த காலேஜுக்கும் அவதான் அழகு, அப்படி இப்படின்னு சொல்லிட்டு நீ கிளம்புனா எப்படி? அவளுக்கும் உனக்கும் என்ன பிரச்னை? " என்று கேட்டான்.

"அடிங்க, பொண்ணுனா போதுமே இருடா! ஒரு டீ குடிச்சுட்டு, வந்து அப்புறம் சொல்றேன். எல்லாம் சொன்னதுக்கப்புறம் கடைசியா, என்னால ஒண்ணும் பண்ண முடியாது, அப்படின்னு மட்டும் சொல்லு, உன்னை கொன்னே போடுவேன்" என்று மிரட்டி விட்டு அகிலன் பேருந்தைவிட்டு கீழே இறங்கினான்.

"டேய் மச்சான், இது வேறயா! சீக்கிரம் முடிச்சுட்டு வாடா, அந்த அழகி என்ன பண்ணினாள் நானும் தெரிஞ்சுக்கணும்." என்று செல்வம் கேட்டுக்கொண்டே அகிலனின் பின்னால் இறங்கி ஓடினான்.

'பின்னாடியே வராதே! அங்கேயே நில்லுடா பாத்ரூம் போய்ட்டு வரேன்டா. அடுத்தவன் வாழ்க்கை எப்படி நாசமாக போச்சுன்னு தெரிஞ்சுக்குறத்துல உங்களுக்கு எல்லாம் எவ்வளவு ஆர்வம்டா " என்று கூறிவிட்டு அகிலன் நகர்ந்தான்.

இருவரும் டீ குடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் ஏறினர். பேருந்தும் இதமான காதல் பாடலுடன் வேகம் பிடித்தது.


தேநீர்

தெருவோரத் தேநீர்க்கடைகளில்


காலையில் கலகலக்கும்

மாலையில் சலசலக்கும்

உன்னையும் என்னையும்

கரைத்து நிரம்பிய‌ தேநீர்ப் பொழுதுகள்.

அது வாழ்வில்


மெல்ல சுமைகள் மறக்கும் நிமிடங்கள்!


செல்வம் மிக ஆர்வமாக "அகிலன் அதான் பஸ் கிளம்பியாச்சு, நீயும் டீ குடிச்சாச்சு, இன்னும் ஏன் நேரத்தை கடத்துகிறாய், சொல்லு, அந்த ரதியோட பேருதான் என்ன?"

"என் வாழ்க்கை உனக்கு கதையா போச்சு நேரம்! இதுக்கு தான் கஷ்டத்தை மத்தவங்க கிட்ட சொல்ல கூடாது" என்று அகிலன் சலிப்போடு தலையில் அடித்துக் கொண்டான்.

"இல்லடா, நான் கண்டிப்பா உனக்கு ஒரு நல்ல சொல்யூஷன் சொல்லுவேன்" என்றான் செல்வம் உண்மையான அக்கறையுடன்.

அகிலன் ஒரு பெருமூச்சுடன் , "அவள் பெயர் நந்தினி, கல்கியின் கதையில் வரும் நந்தினியை போல இவளும் அழகானவள், ஆனால் அவளைப் போல இவள் ஒன்றும் கோபம், முன்விரோதம் அதெல்லாம் இல்லை. சொல்லப்போனால் அவளுக்கும் எனக்கும் இடையில் ஒன்றும் இல்லை" என்றான் .

"கஷ்டம்டா! உனக்கும், யாருக்கும் இடையில் தான் என்ன இருக்கு. ரெண்டுல எதை நீ லவ் பன்னுன!" என்றான் செல்வம்.

"கல்லூரியிலேயே நந்தினி அழகு, ஆனால் என் யாழினி கல்கியின் குந்தவை போல் மேன்மையான அழகு. "

"நந்தினி கொஞ்சம் வசதியான பொண்ணு, அதனால அவள் போடுகிற டிரஸ் எல்லாமே அழகா, புதுசு புதுசா இருக்கும். அவளுக்கே அவள் அழகு மேல ஒரு கர்வம் கூட உண்டு. அது அவளுக்கா வந்ததா, இல்லை மற்றவர்கள் பார்வையினாலேயே அவளுக்கு ஏற்பட்டதா தெரியவில்லை."

கல்லூரியில் எம்.எஸ்.சி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான வகுப்புகள் புதிதாக கட்டப்பட்ட அடுக்கு மாடியில் முதல் தளத்தில் அமைந்திருந்தது. படிகட்டில் இருந்து வலது பக்கம் முதலாம் ஆண்டிற்கான வகுப்பும், இடது புறம் இரண்டாம் வகிப்பிற்கான வகுப்பும் அமைந்திருக்கும். கம்ப்யூட்டர் லேப் இடது புறத்திலே கடைசி வகுப்பாக இருந்தது. அதனால் முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருமுறையும் இவர்களை கடந்தே செல்ல வேண்டும். கல்லூரியில் குடிநீர்க்கான பெரிய அளவிலான சுத்திகரிப்பு செய்த குடிநீர் கலன், இரு வகுப்புகளுக்கு நடுவிலே இருக்கும். வலது, இடது வகுப்புகளை இணைத்து ஒரு பெரிய வராண்டாவும் அங்கு இருந்தது.

பெரும்பாலும் இடைவெளி நேரத்தில் அகிலன், மற்றும் சக ஆண் மாணவர்கள் அவர்களுடைய வகுப்புக்கு வெளியில் வந்து வராண்டாவில் நின்று கொள்வார்கள்.

"முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு, நான் என் சக மாணவர்களுடன் கல்லூரி வராண்டாவில் நின்று கொண்டு சும்மா லைட்டா ரேக்கிங் பண்ணிட்டு இருந்தோம். நான் பொண்ணுங்கள பார்த்தாலே வேற பக்கம் திரும்பிக்குவேன், ரேக்கிங் பண்றவங்களையும் ஒன்றும் சொல்ல மாட்டேன்" என்று அகிலன் கூறி கொண்டிருக்கும் போதே

செல்வம் "ஆமா! நீ பொண்ணுங்ககிட்ட இப்ப வரைக்கும் பேச மாட்டேங்குற, அப்போ நீ பொண்ணுங்கள ரேக்கிங் பண்ணிட்டாலும்" என்றான்.

"இப்படியே எல்லாத்துக்கும் கவுண்டர் குடுத்துட்டு இருந்த, சப்புனு விட்டுருவேன்" என்றான் கோபமாக அகிலன். அவன் கோபத்தில் அடிக்க கூட செய்வான் என்பது செல்வத்திற்கு தெரியும்.

"சத்தியமா இனிமேல் நான் வாயே திறக்கலை! நீ சொல்லு" என்றான் செல்வம்.

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் வந்து ஒரு சில நாட்களிலேயே அகிலனின் வட்டாரத்துகிட்ட நந்தினி அகப்பட்டாள். சாதரணமாக எல்லாரையும் கேட்கிற மாதிரி தான் ஒவ்வொருத்தனும் மாறி மாறி பேர் என்ன? ஊர் என்ன? இதுக்கு முன்னாடி என்ன காலேஜ்? பாட தெரியுமா? ஆடத் தெரியுமா ?அப்படியே கேட்டு ஒரு கட்டத்தில் ஒருவனின் கேள்வி வரம்பு மீறிச் சென்றது. அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி நின்றாள். "

அதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த அகிலனுக்கு கோபம் தலைக்கேறியது, அகிலன் நண்பனிடம் "டேய் ஒரு நிமிடம் இங்கிருந்த, என்கிட்ட அடி வாங்குவ, கிளம்புடா" என்று முறைத்துவிட்டு, நந்தினியிடம் திரும்பி "நீ போம்மா" என்று அனுப்பிவைத்தான்.

அதன்பிறகு யாராவது கிண்டல் பண்ணினாள் நந்தினி வந்து அகிலன்கிட்ட சொல்வதும், அகிலனும் ஆரம்பத்தில் பாவம் என்று அவளுக்கு ஆதரவாக பேசுவதுமாக இருந்தான்.

அதுவே பின்னாளில் அவனுக்கு வினையாகிப் போனது. அகிலன் வாழ்வின் முக்கிய திருப்பத்தை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

தொடரும்...
 
அருமை தோழி, நந்தினிதான் வில்லியோ...........:unsure:
ஏன் தோழி யாழினி என்ன ஆனாள் என்று எப்போது சொல்வீங்க.......???
 
அருமை தோழி, நந்தினிதான் வில்லியோ...........:unsure:
ஏன் தோழி யாழினி என்ன ஆனாள் என்று எப்போது சொல்வீங்க.......???
ஹா..ஹா... ஆம். நந்தினி ஒரு குட்டி வில்லி. யாழினி விரைவில் வருவாள் அன்புத்தோழி.:love:
 
Top