Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-27

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-27

நாங்க கிளம்புறப்ப, அந்த பொண்ண தூக்கிட்டு வந்தாங்க, அப்ப அந்த பொண்ணு கடைசி நேரத்தில பொம்மிக்கிட்ட பேசிச்சு.

அக்கா நான் ரொம்ப முக்கியமான விஷியம் பேசனும் சொல்லுச்சு, நாங்க முதல்ல ட்ரிட்மெட் செய்ய போராடிணும் அந்த பொண்ணு அக்கா நான் விஷம் குடிச்சு நிறைய நேரமாச்சு, நான் பாஸ்கரன் சார் எஸ்டெட்ல வேல செய்யறேன் இன்னிக்கு காலையில என்னை அழுதுக்கொண்டே சொன்னாள், பாஸ்கரன் சார் அவங்க நன்பன் இரண்டு பேரும் தண்ணீ போட்டு என்னைய கெடுத்திட்டாங்க. நான் வெளிய சொல்லிடுவேன் அங்கிருந்து கிளம்ப அப்போ அவங்க ஆளுங்க விஷத்தை என் வாயில் ஊத்திட்டாங்க. அக்கா இத மாதிரி நிறைய பொண்ணுங்க வெளியே சொல்ல பயப்படுறாங்க. எப்படின்னா அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்க, சொல்லி இறந்திடுச்சு.

அத விடியோ பிடிச்சு, அந்த மெமரி கார்டை தனியே பத்திரப்படுத்துனும். பொண்ணு இறந்திடுச்சு அவங்க ஆளுங்கிட்ட தெரியப்படுத்தனம்.

உடனே சுந்தரி பாடியை ஜி.எச்சுக்கு அனுப்ப போன் செஞ்சிட்டா, அப்ப கதவை திறந்து உள்ள நுழைந்த பாஸ்கரனும் அவங்க ஆளுங்களும், எதுக்கு ஹாஸ்பிட்டலுக்கு போன் செஞ்ச மீரட்டினாங்க. நீ செஞ்ச காரியத்துக்கு உன்னைய போலிஸ்ல பிடிச்சு கொடுத்தா தான் அந்த பொண்ணோட ஆத்மா சாந்தியடையும் சுந்தரி பாஸ்கரனை நோக்கி பேச, அதற்குள் ரூம் கதவை பூட்டினார்கள் பாஸ்கரனின் ஆட்கள்

மாதவனை பின்னாடி தலையில் ஒரு ஆள் அடிக்க,கீழே விழுந்தான் மாதவன், அவனை சேரில் கட்டி போட்டார்கள். ஏய் விடுங்கடா அண்ணா , அண்ணா என்று சுந்தரி கத்த, இரவு நேரம் ஆரம்பித்தது.

சுந்தரியின் தலைமுடியை பிடித்து எல்லாத்துயும் சொல்லிடுச்சா அந்த பொண்ணு, வந்தவுடன் உன் பார்த்தேன் செம பிகரு நீ , ம்ம் சொல்லு உன்னைய கட்டிக்கிறேன்.

ச்சீ நாயே கையை எடுடா சுந்தரி சொல்ல பளாரு முகத்தில ஒரு அறையை விட்டான் , என்னடி சொன்னே நாயா நான்

ஆமான்டா வெறி நாய், என்னைய அடிச்சிட்டல்ல, என் மாமன் வருவான்டா உனக்கு கையில்லாம பண்ண.

ஆஆ என்று நகைத்து, என்ன உன் மாமன் ஹீரோவா, வர சொல்லு அதுக்கு முன்னாடி நீ என்கிட்ட என்ன பாடுபட போற பாரு.

கத்தியை எடுத்து அவள் முதுகில் கிழித்தான், ஆ என்று கத்தினாள். அவளை சுவற்றில் முட்டினான். டக் டக் கதவு தட்டினார்கள், கதவை திறந்தான் அடிஆள் ஒருவன். திரும்ப வந்து

ஐயா ஊரு செனங்க வந்திருக்காங்க தங்கம் பாடியை கேட்டு, டேய் இவங்க இரண்டுபேரையும் பூட்டிட்டு வாங்க வந்து கவனிச்சிக்கலாம். எல்லோரும் சென்றவுடன் பாஸ்கரனின் பி.ஏ. சுந்தரியிடம் வந்து டாக்டர்ம்மா அந்தப்பக்கம் கதவு பூட்டல நீங்க தப்பிசிடுங்க , என் குழந்தையை உலகத்துக்கு கொண்டுவந்த தெய்வம் நீங்க. இங்க இருக்கிற எல்லா கிராமத்திலும் ஆள் தெரியும் பாஸ்கரனுக்கு விரசா ஊருக்கு போயிடுங்க.

நன்றிங்க சுந்தரி,மாதவனை விடுவித்து முகத்தில தண்ணீர் தெளித்து எழுப்பி பின்பக்கமாக வந்து காரை எடுத்தார்கள். சிறிது நேரத்தில் தப்பிச்சிட்டாங்க ஒருவன் பாஸ்கரனிடம் சொல்ல போய் தேடுங்கடா இரண்டுபேரும் இங்க வரனோம் .

அப்ப நாங்க காரில போகசொல்ல ஏற்கனவே மண்சரிவு நடந்திச்சு எங்களால போக முடியில ஸோ மரத்தில இடிச்சிட்டு அந்த மழையில அந்த பக்கமா இருந்த பாதையில இறங்கி நடந்தோம், மழையால் சுந்தரிக்கு முடியாத போயிடுச்சு மயங்கி விழுந்தா அந்தப்பக்கமா போன நம்ம ஊர் தலைவர் , எங்கள பார்த்து காப்பாத்தி கூட்டிட்டு வந்தாங்க.

ரொம்ப நன்றீங்க ஐயா பூவரசன் தலைவரிடம் கை கூப்பி வணங்கினான்,பரவாயில்ல தம்பி எங்க பொண்ணுங்களும் அங்க வேலைக்கு போறாங்க. எங்க பொண்ணுங்களோட மானமும் முக்கியம் தம்பி.

சரி மாதவா நாளைக்கு எஸ்டேட்ஸ் போறோம் கொஞ்சம் வேல பாக்கியிருக்கு இப்படியே நேற்று நடந்ததை யோசித்துக்கொண்டே வந்தான்

பூவரசன். பாஸ்கரனின் பங்களா வந்தவுடன் ,சுற்றியிருக்கும் ஆட்களை உற்று கவனித்தான், ஓ நீங்க தான நேத்து வம்பு பண்ணியது, அப்போ டூரிஸ்ட் இல்ல, பரதா,மாதவனும் உருட்டு கட்டையை எடுத்து வெளுக்க ஆரம்பித்தனர். மாமா எனக்கு மெயின் ஆள்கிட்ட வேலையிருக்கு நான் உள்ளே போகவா,

உன் வேலையை ஆரம்பி மாப்பிள்ள ....

ஏய் இங்க என்ன சத்தம் என்று உள்ளிருந்து வெளியே வர கரெக்டா பூவரசனிடம் மாட்டினான் பாஸ்கரன், அப்பவே எனக்கு ஒரு டவுட் இருந்தது. என் பொண்டாட்டிய அப்படி வர்ணிச்ச, அப்பவே உடைச்சிருக்கனும் உன் வாயை சொல்லிக்கொண்டே முகத்தில் குத்து விட்டான். கையை முறுக்கி இந்த கைதான் என் பொம்மியை தொட்டது, உனக்கு பொண்ணுங்கன்னா போதை பொருளாடா அதுவும் வயிற்று பிழைப்பு உழைக்க வந்த பொண்ணுங்க மேல கையை வைப்ப கூறிக்கொண்டே கையை உடைத்தான் பூவரசன்.

ஆ அம்மா... என்று கத்தினான் பாஸ்கரன் நான் அடிக்கிற அடியில அந்த எண்ணமே வர கூடாது உனக்கு. போலிஸிடம் இன்பார்ம் பண்ணிவிட்டுதான் கிளம்பினார்கள்.போலிஸ் வந்துவிட ஜீப்பில் பாஸ்கரன் மற்றும் அடியாட்களை ஏற்றினார்கள். போலிஸில் மெமரி கார்ட்டை ஓப்படைத்தாள் சுந்தரி. பிறகு டாக்டராக மாதவன் தங்கம் உடலை பற்றி கம்பளைன் கொடுத்தான்.

எல்லா பார்மலிட்டிஸ் முடித்தவுடன் ஊருக்கு கிளம்பினார்கள் நால்வரும். மலையை விட்டு இறங்கியவுடன் மதியம் உணவிற்கு ஹோட்டலில் நிறுத்தினார்கள்.பரதா நீயும் மாதவனும் போய் ஆடர் கொடுங்க நாங்க பின்னாடி வருவோம்- பூவரசன்.

பெரும் மூச்சுவிட்டு, மெல்ல சுந்தரியை பார்த்தான் பூவரசன், பொம்மிக்குட்டி என்னடா கோவமா, அமைதியா வர.

மேலும் அமைதியாக இருந்தாள் சுந்தரி.

லவ் பண்ணலாமா பொம்மி ரொம்ப நாளாச்சு, சுந்தரி பூவரசனை பார்த்து முறைக்க.

லவ் பண்ணலாமா கேட்டேன் , ஐயா ஹாப்பி மோட்ல இருக்கேன்.

எதுக்கு, நீ யாரு மொத்தல்ல அதை சொல்லு.

ம்ம் உன் மாமன்,பூவா, இன்னும் புரியிலையா உன் புருஷன்.

அதான் இரண்டு மாசமா தள்ளிவச்சியா, பொண்டாட்டிய வேணா சொல்லிட்டு போனவன் தானே.

அப்ப நீ தப்பு பண்ண அதான்.

இப்ப எப்படி தப்பு ரைட்டா மாறிடுச்சு,

பூவரசன் அவளை பார்க்க, என்னடி ரொம்ப பிகு பண்ணற , நான் கீழ இறங்கி வந்ததால. ம்ம் நீ பேசு டாக்டரம்மா, என்னைய ஹாங்கிரி பேர்ட்டா மாத்த போறேன் தெரியுது நீ பேசு.

கொடைக்கானல்ல எல்லா இடத்திலும் தேடின நான் கிடைக்கல, ஒரு ஆக்ஸ்சிடண்ட் பார்த்து உனக்கு பயம் வந்திடுச்சு, நான் செத்திட்டேனோ. அப்ப உன் கோவம் எல்லாம் போயிடுச்சு.

ம்ம் அப்பறம்.

மூனு வருஷமா தள்ளிவச்சே, அப்ப உன் அக்கா பொண்ணு, இப்ப உன் பொண்டாட்டி, ஒரு நாலு நாள் சேர்ந்து வாழ்ந்தோம்மா, அதுக்குள் பிரிஞ்சி போய்யிட்ட, இதுக்கு பேர் என்ன மாமா லவ்வா. எப்பவுமே நீ கேர் எடுத்துப்ப அது மாதிரி இப்ப என்மேல அன்பு வந்திருக்கு அவ்வளவுதான் காதல் கிடையாது .

நீ என்ன செஞ்சிருக்கனும் தப்பு பண்ணிட்டேன்னா கூடவே வச்சிருந்து தண்டனை கொடு நான் ஏத்துக்கிறேன், ஆனா ஓதுக்கிட்டல்ல.

எனக்கு உன் மாதிரி பேச தெரியில, இங்க பாருடி , அவள் கண்ணங்களை கையால் அழுத்தி. நான் எவ்வளவு சொன்னேன் என்னைய கல்யாணம் பண்ணிக்காத, உனக்கு நான் செட்டாக மாட்டேன் , பிளான் பண்ணி கல்யாணம் செஞ்சது யாரு, அப்பவும் இப்படிதான் இருந்தேன். இப்பவும் இப்படிதான்.

நான் எப்படி தெரிஞ்சிதான கல்யாணம் செஞ்சிக்கிட்ட, இப்ப நான் சரியில்ல . அன்னிக்கே சொன்னேன் நீ டாக்டரு, நான் உனக்கு செட்டாக மாட்டேன்.

மாமா, நம்ம வாழ்க்கைக்கும் டாக்டருக்கும் என்ன சம்பந்தம்,

அதுதான் எல்லாத்துக்கும் காரணம், நீ தப்பு பண்ண, எனக்கு கோவம் வந்திடுச்சு.

இன்னொரு தப்பும் பண்ணிருக்கேன் மாமா அதுக்கு சேர்த்து பிரிஞ்சிடு , அப்பறம் கோவம் குறைச்சவுடனே கூட்டிட்டு போ.

என்ன தப்பு

அது உனக்கே தெரியவரும.

அடக்கடவுளே வாழ்க்கையில நிம்மதியா இருக்கமுடியாதா,என்னடி நான் கேட்டேன், ஆசையா உன் பார்த்தது தப்பா, நான் இறங்கி வந்திருக்க கூடாது .நான் காட்டுமிரண்டி தான் எனக்கு எக்ஸ்பிரஸ் செய்ய தெரியில. டாக்டருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குமே சொல்ல வேண்டியதுதானே. மாமா,மாமா இந்த இடத்துல தப்பு செஞ்சேன்னு

மாமா...

வாயை மூடுடி, நான் நீ தொலைஞ்சத நினைச்சி என் பொம்மி , என் உயிரு, என் ம---- புலம்பிருந்தேன், நல்லா சொல்லி குடுத்தம்மா பாடத்த

இன்னோருமுறை உன்கிட்ட வந்தா கேளுடி நீ யாருடான்னு....கத்திவிட்டு கதவை திறந்து டமால் என்று முடினான்.

பிறகு இருவரும் சாப்பிட வர, இவர்களின் அமைதியை பார்த்து என்ன என்று மாதவன் கண்களால் பரதனை கேட்க,

பரதன் இப்படிதான் அடிக்கடி சண்டையை போட்டுக்கும், அப்பறம் சமாதனம் நம்ம ஆளு செய்வான் பேசிக்கொண்டே காரின் அருகே வந்தார்கள் பரதனும் மாதவனும். மாதவன் புரியாமல் பார்க்க,

என்ன புரியிலையா மாதவா,நம்ம பூவரசோட குடும்மி நம்ம சுந்தரி கையில, இரண்டு பேருக்கும் அளவு கடந்த காதல், அண்பு...

அந்த சண்டைதான் போயிருக்கும், அப்பறம் நம்ம பூவரசு சுந்தரி கால்ல விழுந்துக்கிடப்பான்.

ஏன் சுந்தரி அப்படி பண்ணுது.

இவன் அடங்கமாட்டான் மாதவா, ஊருல இருக்கிற பஞ்சாய்த்தெல்லாம் இவன்தான் பார்ப்பான். சுந்தரி பயந்துட்டே இருக்கும் மாமனுக்கு ஏதாவது ஆகுமா. இப்பயில்ல சின்ன வயசிலே சுந்தரி இப்படிதான்.

கோவம் நிறைய வரும்பா பூவரசுக்கு, சுந்தரிக்கு மட்டும்தான் கண்ட்ரோல் ஆவான். அதோட ஜல்லிக்கட்டுக்கெல்லாம் போனா, சுந்தரி சாப்பிடாத சாமி ரூமில மாமனுக்காக வேண்டிருக்கும். நான் போன் பண்ணி சொன்ன பிறகுதான் சாப்பிடும்.

வெரி இன்டிரஸ்டிங் பரதா. இவங்க இரண்டுபேரையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நடந்ததை எல்லாம் மாதவனிடம் சொன்னான் பரதன்.

சாப்பிட்டு முடித்து சுந்தரியும் பூவரசனும் வர திரும்பவும் பயணித்தார்கள்.

இருவரும் தள்ளியே அமர்ந்தார்கள். மாதவா எங்க தங்கியிருக்கிங்க.

சேலம் மேன்ஸ் ஹாஸ்டல்ல,

நீ எங்க கூடவே தங்கிடே மாதவா, பிறகு உன் குடும்பத்தை கூட்டிட்டு வா வீடு பாத்து வைச்சிடுவோம். சரி பூவரசு. மாடி ரூமூல தங்கிடுங்க.

ஊருக்கு போன் செஞ்சி சொல்லிட்டியா பரதா

அக்காகிட்ட சொல்லிட்டேன், அப்பறம் திவாகர் ரொம்ப கோவமா இருக்கானா உன்மேல.

யாரு எது கொடுத்தாலும் ஈயின்னு இளிச்சிட்டு வாங்கிட்டா, புலி வால்ல பிடிச்ச கதைதான் கடிக்காம விடாது, சொன்னா நான் கோவக்காரன், அவ அப்பா ஹீரோ, நான் ஜீரோ சொல்லுவா.

பூவரசனை பார்த்து சுந்தரி முறைக்க, போடி சரிதான் கண்களால் ஏளனமாக பார்த்தான்.

------------------------
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

அடப் பரதேசி பாஸ்கர் பொறுக்கி நாயே இவன் வேலைதானா இது?
பொம்மியின் முதுகில் கத்தியாலே கோடு கிழிச்ச அவன் கையை உடைக்காம விட்டுட்டியே பூவா மாமூ
நல்லவேளை ஊர் ஜனங்கள் வந்ததாலே சுந்தரிக்கு ஒண்ணும் ஆகலை

என்ன திருப்பியும் ஜம்பிங் வருதே, லக்ஷு பேபி

அடுத்த கச்சேரி திவாகருக்கா?
அப்படியே அந்த துரைப்பாண்டி பொறுக்கிக்கும் சேர்த்து சிறப்பாக செஞ்சுடு, பூவா

திவாகர் என்ன செஞ்சான்?
இவனிடம் சுந்தரி என்ன வாங்கினாள்?
இல்லை வேற யாரு என்னத்தை வாங்கினாங்க?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

அடப் பரதேசி பாஸ்கர் பொறுக்கி நாயே இவன் வேலைதானா இது?
பொம்மியின் முதுகில் கத்தியாலே கோடு கிழிச்ச அவன் கையை உடைக்காம விட்டுட்டியே பூவா மாமூ
நல்லவேளை ஊர் ஜனங்கள் வந்ததாலே சுந்தரிக்கு ஒண்ணும் ஆகலை

என்ன திருப்பியும் ஜம்பிங் வருதே, லக்ஷு பேபி

அடுத்த கச்சேரி திவாகருக்கா?
அப்படியே அந்த துரைப்பாண்டி பொறுக்கிக்கும் சேர்த்து சிறப்பாக செஞ்சுடு, பூவா

திவாகர் என்ன செஞ்சான்?
இவனிடம் சுந்தரி என்ன வாங்கினாள்?
இல்லை வேற யாரு என்னத்தை வாங்கினாங்க?
ரொம்ப நன்றி பானும்மா, சுந்தரி அவங்க அப்பாகிட்ட வாங்கின சொத்து, அதி்ல் தான் திவாகர் பேக்டரி கட்ட பிளான். ஜம்பிங் ன்னா ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா பாணு மேம். நான் திருத்திக்கிறேன். என் லெப்டாப் கீ சரியில்ல அதுவும் பிராப்பளம்
 
Top