Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-28

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-28

பெரியவீட்டில் கார் வந்து நின்றது. காரின் சத்ததை கேட்டு வெளியே வந்தார்கள் ஆனந்தவல்லியும் ,பவளத்தாயும்.

சுந்தரி காரிலிருந்து இறங்கியவுடன் , சுந்தரி என்று கட்டிக்கொண்டாள் ஆனந்தவல்லி.

அக்கா உள்ளே கூட்டிட்டு போ ஏற்கனவே டயர்டா இருக்கிறா.

வாடா உள்ள கையை பிடித்து அழைத்து வந்தாள் . எல்லோரும் ஹாலில் அமர்ந்தார்கள். அக்கா இவரு மாதவன் பொம்மிக்கூட வொர்க் பண்ணறாரு ரொம்ப நன்றி தம்பி, பூவரசு எல்லாம் சொல்லிச்சு.

பரவாயில்ல அக்கா, நன்றியெல்லாம் எதுக்கு மாதவன் கூற...

அக்கா மாதவன் என்கூட தான் தங்க போறாரு, அடிக்கடி பேசிக்கலாம். இப்ப எல்லாருக்கும் சாப்பாடு போடு.

மாதவன், பரதா வாங்க சாப்பிடலாம் டெபிளில் எடுத்து வைத்தாள்.என்ன நடந்தது என்று பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.

அக்கா நான் வரேன்க்கா , பொம்மிய பார்த்துக்கோ...

ஏன்டா இங்கே தூங்க வேண்டியதுதான, அமைதியாக இருந்தான் பூவரசன், சுந்தரி எழுந்து தன் ரூமிற்கு செல்ல. சரிக்கா நான் கிளம்பறேன்.

புரிந்துவிட்டது ஆனந்தவல்லிக்கு இரண்டுபேரும் சண்டையில் தான் இருக்கிறார்கள் என்று பரதாவை பார்க்க...

விடுக்கா, அவங்க இரண்டும் நம்ம பேச்ச கேட்காது, அவங்களே சமாதனம் ஆயிடுவாங்க. நீ பயப்படாத உன் தம்பிதான் துடிச்சி போய்விட்டான் சுந்தரிக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு.

கடவுள்கிட்டதான் வேண்டிக்கிட்டேன் பரதா எப்படியாவது இதுங்க ஓண்ணா சேர்ந்து வாழணும்.

காரின் ஹாரன் அடிக்க, அக்கா நான் வரேன் என்று காரில் ஏறினான்.

ஒருவாரம் சென்றது ,சுந்தரி முழுவதும் குணமாயின. திங்கள் அன்று காலை, பரதா பூவரசன் அறைக்குச் சென்றான்.

மாப்பிள்ள, வெளிய வாப்பா இன்னிக்கு உனக்கு பிறந்தநாள் நிறைய வேலையிருக்க நீ இப்படியே படுத்திருக்க.

மாமா இன்னும் பொம்மி எனக்கு விஷ் செய்யில்ல. போன்கூட பண்ணல,அவ பேசினது அப்பறம்தான் நான் வெளியே வருவேன் என்று போனையே பார்த்துக்கொண்டியிருந்தான்.

எப்படா குளிப்ப , குலதெய்வம் கோவிலுக்கு போகணும் உங்க அம்மா வேண்டிக்கிட்டாங்க.

தெரியும் அதுக்கு என்ன செய்யறது, அவ திமிரு போனையே எடுக்கல, மெசேஜ் அனுப்பல , என்னைய தணியா விடுங்க.

குப்புறப்படுத்து சுந்தரியை தீட்டிகொண்டிருந்தான். இவளுக்கு என்மேல எதுவுமில்ல. அவ போட்டோவை தூக்கி தூர எறிந்தான். எழுந்து கப்போட்டை திறந்து அவன் டிரஸ் எடுக்க சுந்தரி டிரஸ்ஸை எல்லோம் தூர எறிந்தான். அப்போ ஹேங்கரில் மாட்டியிருந்த பிராக் உன்ன மயக்கதான் இந்த டிரஸ் வாங்கினேன் சொன்னது ஞாபகம் வந்தது, அதை எடுத்து நெஞ்சில் அனைத்துக்கொண்டான்.

என்னை ஏன்டி இப்படி துடிக்க வைக்கிற அட்லிஸ்ட் போன் பண்ணிருக்கலாம், மாமன் மேல உனக்கு அக்கரையே இல்ல, ஐ ஹேட் யு.

என்ன பண்ணலாம் உன்ன,ஆணியில் டிரஸ் மாற்றி கட்டிலில் உட்கார்ந்து அம்பை எறிந்தான். அது நேராக டிரஸ் குத்தியது. செம்ம செம கீப் இட் அப் பூவரசு,ஐந்து குச்சிகளை எறிதான் எங்கிட்ட வம்பு பண்ணுவியாடி டெமேஜ் செஞ்சிடுவேன்டி மீசையை முறுக்கி இப்ப என்னடி பண்ணுவ.

மாதவன் உள்ளே கதவை திறந்து வர, பூவரசு ,சுந்தரி புது டிரஸ் கொடுத்து அனுப்பிருக்கா,

ஏன் அவ வரமாட்டாலா, நீ கொண்டுவர

பூவரசு சீக்கரம் ரெடியாயிட்டு வாடா பர்த் டே பேபி.

ம்ம் வரேன், பாத்ரூமில் குளிக்க போனான். குளித்து துண்டைக்கட்டி வெளியே வந்தவுடன் போன் அடிக்க சுந்தரி நினைத்து ஓடி போய் எடுத்தான்.

பூவரசு ரெடியா இப்பவே டைம் 7.30 ஆகுது. நாங்க கிளம்பி அங்க வரோம். நான் வரலக்கா.

ஏன்டா அவக்கிட்ட போன குடு.

எவக்கிட்ட, ம்ம் நான் பெத்தேனே என் பொண்ணு அவகிட்ட, காலையில ஐந்து மணிக்கே அங்க வந்து என் மாமானுக்கு நான் புடிச்ச மாதிரி சமைக்க போறேன், எல்லோரும் இங்க வந்து சாப்பிடுங்க சொன்னா. என்னடா செய்யறா வேலை ....

போனை கட் செய்து வெளியே வந்து பார்த்தான் கிச்சனில் பால் பாயசத்திற்கு முந்திரி , திராட்சை தாளித்துக்கொண்டிருந்தாள். அன்னம்மாக்கா இதயெல்லாம் எடுத்து டைனிங் டெபிள்ள வை சொல்லிக்கொண்டே திரும்ப பூவரசனை பார்த்தாள்.ஆகாய நிறத்தில் சாப்ட் சில்க் அணிந்திருந்தாள். காதில் சிமிக்கி தொங்க, மல்லிப்பூவை இருப்பக்கம் தொங்கவிட்டிருந்தாள். முந்தியை எடுத்து இடுப்பில் சொருகிருந்தாள்.

ரொம்ப நாள் பிறகு பளிச்சேன்று புன்னகை புத்திருந்தது முகத்தில். கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான்.கும்முன்னு இருக்காளே, வேண்டுமென்றே இப்படி என்னைய அட்டராக்ட் செய்ய இப்படி டிரஸ் பண்ணிருக்கா. கண்ணில் ஐலைனர் போட்டிருந்தாள். ஐயோ இந்த கண்ணுக்குள்ளே விழுந்திடுவோமோ. பூவரசு உஷாருடா.

டேய் மாப்பிள்ள துண்டு கீழே விழுதுடா என்று பரதா சொல்ல,

ஐயோ என்று இடும்பில் கை வைத்தான். துண்டு இடுப்பிலிருந்தது மாமான்னு பரதாவை முறைக்க. பொறந்த நாள் அதுவும் நல்ல தரிசணம்டா மாதவன் வாரா.

போங்கடா பொம்மி இங்கயிருக்கா சொல்ல வேண்டியதுதான.

வெளிய வாடா எத்தனைவாட்டி கூப்பிடறது, ரூமிற்குள் சென்றான். பின்னாடியே சுந்தரி சென்றாள். பூவரசை உட்கார வைத்து தலை துவட்டினாள், ரூமை சுற்றி பார்க்க...

அது ஒரு எலி உள்ளே போயிடுச்சு அதான் எல்லா துணியும் மெதுவாக சொல்ல, ரூமின் மூளையில் பார்த்தாள் அவள் போட்டோ அங்கே விழுந்திருந்தது.

அது... நீ வரலன்னு கோவம் –பூவரசு. தங்க செயின் எடுத்து பூவரசன் கழுத்தில் அணிவித்தாள். மாமா என்னுடைய சம்பளத்தில முதன்முதலா உனக்கு வாங்கியிருக்கேன் , எப்படி மாமா இருக்கு...

ம்ம் நல்லாயிருக்கு, அதுயென்ன உன் பணம் என் பணம் பிரிச்சி பேசற, எல்லாமே நீதான் ஹாண்டல் பண்ணுற.

இவன் சொல்லுதை கேட்டு, மாமா இன்னிக்கு உன்கூட சண்டை போட கூடாது நினைக்கிறேன். போய் ரெடியாகுங்க நான் ரூமை கிளின் செய்யறேன்.

துணியெல்லாம் எடுத்து கம்போர்டில் வைத்தாள் கதவை மூடிட்டு பார்க்க சொல்ல ஆணியில் தொங்கிய பிராக்கை பார்த்தாள்.பூவரசன் ஷர்ட்டை போட்டுக்கொண்டு பொம்மியை பார்க்க, ஐய்யையோ இத எடுத்து வைக்கலையா.

மாமா சொல்லி அவனை முறைக்க...

அது பொம்மி என்று இழுத்தான், அது ஏன் மாமா ஒரே இடத்தில அம்பை விட்டிருக்க.

அது அங்கதான உன் ஹார்ட் இருக்கு, ஸோ உன் ஹார்ட்டை குத்தி மாமாவை வெளியே எடுக்கலாம்ம்ம்...

ரைட் சைட்டும் பண்ணுருக்கீயே, அங்க ஹார்ட் இருக்கா... சிரித்துக்கொண்டே வெளியே சென்று விட்டான்

அனைவரும் வந்துவிட்டார்கள் காலை உணவை முடித்துவிட்டு கிளம்பினர். பொம்மி இன்னிக்கு நல்லா சமைச்சடா மாதவன் கூற.

எல்லாம் பூவரசனுக்கு பிடிச்ச டிபன் பார்த்து பார்த்து பொம்மி செஞ்சிருக்கு.

குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்கள், கோவிலில் அம்மனுக்கு புடவை சாத்தி அர்ச்சனை கொடுத்தார்கள். பூவரசனும் பொம்மியும் கணவன் , மனைவி சமேதர்களாக அம்மன் முன் நின்றார்கள். சாமியை கும்பிட்டு திரும்பினார்கள், ஓத்தையடி பாதை என்பதால் சிறிது தூரம் நடந்து சென்று காரை அடைந்தார்கள்.

அம்மா அர்ச்சன தட்டை மறந்து கோயில்லே விட்டுட்டேன், இருங்க நான் போயி எடுத்திட்டு வரேன் , திரும்பி நடந்தாள்,பின்னாடியே பூவரசன் சென்றான். நீ போ நான் எடுத்துட்டு வரேன்.பரவாயில்ல மாமா இதோ கோவிலே வந்திடுச்சு. மழை தூவ ஆரம்பிக்க பொம்மி சீக்கரம் வா, சரி மாமா , தட்டை எடுத்துக்கொண்டு தன் புடவை தலைப்பை மழையில் நனையாதவாறு மாமன் மேல் போர்த்தினாள், கோவிலைவிட்டு வெளியே வந்தவுடன் நிறைய மழை பெய்ய ஆரம்பித்தது. தூண் பக்கத்தில் நின்றார்கள். சாறல் நன்றாக தெளிக்க பொம்மியை ஓட்டி நின்றான். அவளை பார்க்க, எதுக்கு வம்பு நம்ம மழையே பார்க்கலாம். அப்பறம் பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி பேசுவா.

சிறிய இடைவெளிதான் இருவருக்கும்,மாமா.. என்று சுந்தரி அழைக்க.

ம்ம் மழையை பார்த்தே கூறினான். கண்ணத்தில் முத்தமிட்டு ஹாப்பி பர்த் டே மாமா சொன்னாள் சுந்தரி.

ஓ எங்க அக்கா பொண்ணா இருந்து சொல்லுற.

புரியில...

என் பொண்டாட்டியா இருந்தா அங்க கிஸ் பண்ணமாட்டா, அவ பண்ணற இடமே வேற.

இப்படிதான் உங்க அக்கா பொண்ண கிஸ் செய்ய விட்ட ...மழைவிட்டுச்சு போகலாம்.

பொம்மி, இன்னிக்கு பசங்க பார்ட்டி கேட்பாங்க கொடுக்கட்டு ம்மா, வேணாம்மா.

கொடு , நீ எதுவும் போட்டுக்காத கரெக்டா ஒன்பது மணிக்கு வீட்டுல இருக்கனும் சொல்லிட்டேன் மாமா.

ஏய் பார்ட்டியே எட்டு மணிக்குதான்டி ஸ்டார்ட் ஆகுது. காரில் ஏறினார்கள்.

ஊரின் சந்தையில் இறங்கினார்கள்,ஆனந்தவல்லி ...நானும் அம்மாவும் வீட்டுக்கு போறோம், எங்களை விட்டுட்டு வரச்சொல்லு பூவரசு

சரிக்கா, பரதாவிடம் தணியா பேசினான், மாமா என் ராயலை லோகுவ எடுத்திட்டு வரசொல்லு மாமா, நான் பொம்மியை சேலத்துக்கு கூட்டிட்டு போகலாம் இருக்கேன்.

சரி மாப்பிள்ள சொல்லி சுந்தரியும் , மாதவனையும் விட்டு வண்டி சென்றது. பூவரசன் போன் அடிக்க, சொல்லுங்க பிரஸிடன்ட்,ஏம்பா பூவரசு சந்தைக்கு வந்திட்டியா, நேரா மாட்டுச்சந்தையாண்ட வா சுருக்கா வாப்பா, ஓரே பிரச்சனை, சரி வரேன்...

பொம்மி ஏதாவது வாங்கிட்டு இரு, இதோ வரேன்.. பூவரசன் அந்தப்பக்கம் போக, ஹாய் சுந்தரி, மாதவன் சார் ,குரல் ஓலிக்க அங்கே சார்மி பிரசன்னமானால்,ஹாய் எப்ப ஊரிலிருந்து வந்த சார்மி.

நேத்துதான், இந்தக்கடையில்ல நிறைய நியூ மாடல் இருக்கு பாரேன் அதற்குள் நுழைந்தார்கள். கடையை அலசி ஏதோ எடுத்தார்கள். பணம் கொடுக்கும் போது சுந்தரியிடம் வாங்க மறுத்தான் கடைக்காரர். வேணாம்மா உன் மாமன்தான் இந்த கடையை போட்டுக்கொடுத்தது. கஷ்டத்தில இருந்த எனக்கு கடையை போட பணம் கொடுத்ததும் உன் மாமாதான். பரவாயில்ல அண்ணா, வாங்கலைன்னா மாமா என்னைய திட்டும் என்றாள்.

பாரேன் உன் மாமன் அவ்வளவு அப்ப டக்கரா என்றாள் சார்மி.

என்ன இந்த பொண்ணு பூவரசனை இப்படி பேசுது யோசித்துக்கொண்டே வந்தான் மாதவன். ஏய் அங்க பாருடி என் ஆளு எப்படி பைட் போடுறாரு , யாரு இவ ஆள்ளா , அவள் சொன்ன திசையை பார்த்து திடுக்கிட்டான் மாதவன்.

சுந்தரி கண்கள் விரிய, அச்சோ பூவரசனையா இவ ஆள் சொல்லுறா,

பின்னாடி வந்த பரதா , அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா.

தெரியும் அண்ணா, ஆனா அவங்க பொண்டாட்டி ஒரு முட்டாள், எவ்வளவு ஹாண்ட்ஸம், நல்லவங்க பூவரசு ,குடும்பம் நடத்த தெரியில அவளுக்கு.

சுந்தரி அவளை பார்க்க, ஆமாண்டி நான் எல்லாம் விசாரிச்சேன், நான் அவரை சந்தோஷமா வச்சிப்பேன் தோனுது, ஐ லவ் ஹிம்...

மாதவன் பரதனை பார்க்க , அவளுக்கு தெரியாது.சண்டையை கெமிராவில் படம் பிடித்திருந்தாள். துரைபாண்டியை , திவாகரையும் அடித்துக்கொண்டிருந்தான். சந்தையில் அவங்க ஊர் ஆட்களைத்தவிர யாரும் கடை போட கூடாது என்று திவாகர் அவன் ஆட்களுடன் பிரஸிடண்டிடம் சண்டை போட, வாய் பேச்சு கை பேச்சாக மாறியது.

டேய் ஏற்கனவே , கோர்ட்ல ஸ்டே ஆர்டர் வாங்கிட்ட, இப்பவும் என்னைய அடிச்சிட்ட இல்ல அனுபவிப்படா , நான் யாருன்னு காட்டறேன் திவாகர் கத்த,

ஆங் காட்டு உன் ஷோவ நான் எப்படியிருக்குன்னு பார்க்கிறேன்.

டேய் பூவரசு, பொம்மி வந்திருக்கு கிட்ட போய் சொன்னவுடன் அவர்களை விட்டான் பூவரசன். நேராக பொம்மியை பார்க்க, அய்யையோ கண்ணாலே திட்டறாளே. காலையில் எவ்வளவு அழகா பார்த்துச்சு இந்த கண்ணு.

ஹாய் பூவரசு சார்.... வாங்க சார்மி, லவ் பேட்ர்ஸ் வாங்க கடைக்கு போக, சுந்தரி பக்கத்தில் இருந்தான், சார்மி தெரிந்தவர்களிடம் வெளியே பேசிக்கொண்டிருக்க. பரதா வீட்டுக்கு அந்த புளு கலர் லவ் பேட்ர்ஸ் வாங்குங்க. பறவைங்க தான் ஆனா எவ்வளவு அழகா கொஞ்சுதுங்க , சில பேரு மத்தவங்கள அடிக்க மட்டும்தான் செய்வாங்க என்று பூவரசனை குத்தி பேச. அங்க பாரு பூவா இரண்டு நாய்களும் எப்படி விளையாடுது.

ம்ம் உனக்கு நாய், பறவை லவ் பண்ணா புடிக்குது, நான் செஞ்சா புடிக்காது. மாப்பிள்ள மைன்ட் வாய்ஸின்னு சத்தமா பேசிட்ட.

பரதா அதான் முறைக்கிறாளா பொம்மி. அந்த நாய் புதிய வெள்ளை நாயை பார்த்து அங்கே போய் தன் முகத்தை தேய்க்க, சுந்தரி காதில் மெதுவாக சொன்னான், இந்த நாயோட காதல் உங்கப்பா காதல் மாதிரி , வேறொருத்தி வந்தவுடன் அங்க போயிட்டாரு. சுந்தரி பல்லைக்கடிக்க , எங்கிட்டேவா போடி என்றான் பூவரசன்.

லோகு வண்டியை கொடுக்க ,வண்டியை ஸ்டார்ட் செய்தான் பூவரசு. சுந்தரி நான் பூவரசோட கிளம்புறேன் ப்ளிஸ்டி என்னைய உன்கூட கூப்பிடாத, சார்மி கெஞ்ச சரி என்றாள் சுந்தரி.

சார் , என்னைய டிராப் பண்ணுங்க ப்ளிஸ் என கெஞ்ச தீடிரென்று வண்டியை நிறுத்தினான். சார்மி வண்டி ஏதோ ரிப்பேர் போல நீ பரதா கூட போங்களேன். பேசிக்கொண்டே இருக்கும்போது சண்முகவேலு நடுவில் வந்து வாம்மா சுந்தரி நம்ம வீட்டுக்கு போகலாம் என கூப்பிட.

போகாதடி என கண்ணில் மிரட்டினான்....சுந்தரியின் சுந்தரன்.....
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

அட என்னப்பா பூவரசனும் சுந்தரியும் இன்னும் இப்படி தெற்கேயும் வடக்கேயும் பார்த்துக்கிட்டு முறுக்கிக்கிட்டு இருக்காங்க
எப்போத்தான் இரண்டு பேரும் ஒண்ணு சேருவாங்க?
இதுக்கு நடுவிலே துரைப்பாண்டியும் திவாகரும் லொள்ளு பண்ணிக்கிட்டு இடைஞ்சல் பண்ணிக்கிட்டே இருக்கிறாங்களே
இந்த சண்முகவேல் லூசு எதுக்கு இப்போ பொண்ணைக் கூட்டிட்டு போறேன்னு சொல்லிக்கிட்டு குறுக்காலே வந்து நிற்கிறான்
பூவா ரொம்பவே பாவம்ப்பா
இதிலே சார்மி வேற இடைஞ்சல் பண்ணப் பார்க்கிறாளே
 
Last edited:
?????lovely epi romba nallarundhuchu poovarasanukku than kattam sari illai ?? kalailaye sundhari veetuku vandhatha parkama dress la ambu vidaranga ? sundhari avanga appavoda poiduvangala sis?
 
எவ அவ ஷார்மி
சுந்தரி கோபமா போயட்டாளா
 
Top