Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-29

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-29

கண்ணை அழுத்தி மூடி திறந்தான் பூவரசன், இவ திருந்தவே மாட்டாளா, காலை கீழே உதைத்தான். இவனை பார்த்துக்கொண்டே அவள் அப்பா வண்டியில் ஏறினாள் சுந்தரி.

கண்களாலே சுந்தரியை எரித்துக்கொண்டிருந்தான் பூவரசன். சார் வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சா , சார்மி கேட்க

இவ ஒருத்தி நைய நையன்னு, இல்ல சார்மி வண்டி ரிப்பேர் நினைக்கிறேன், இருங்க நான் பரதாவ கூப்பிடுறேன். நீங்க அவர்கூட போங்க.

சார் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷியம் பேசனும் நினைச்சேன். பூவரசன் மூட் அவுட்டில், சொல்லுங்க சார்மி என்ன விஷியம்...

அது இப்ப வேணாம் இன்னொரு நாள் பேசேறேன் சார், பரதா நேரே பூவரசனிடம் வந்தான், சார்மி நீ கார்ல உட்காருங்க, இதோ வரேன்

என்ன மாப்பிள்ள ஒரு மாதிரி இருக்க , எங்க சுந்தரி....

அவ அவங்க அப்பாக்கூட போயிட்டா மாமா, ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவன் நிற்க, சரி எங்கயும் போகாதே , இந்த பொண்ணைவிட்டுட்டு வரேன். மாதவன் எங்கே.

பிரண்டுக்கிட்ட பேசிட்டு இருக்கான், சரி மாப்பிள்ள மணி 6.00 ஆகுது எங்கயும் போகாதே நான் வரேன்... அமைதியாக இருந்தான் பூவரசன்.

என்ன பூவரசு , இங்க நிற்கிற, வண்டி ரிப்பேரா,பிரஸிடண்ட் கேட்க

இல்ல பரதா மாமா வரேன் சொன்னாரு,

ஓ அப்படியா, நீ எப்படிப்பா உங்க மாமாவ ஏத்துகிட்ட, ரொம்ப கோவமா இருந்த, இப்ப உங்க மாமாவ உங்க வீட்டில தங்க வைச்சிட்ட.

என்ன சொல்லுறீங்க சித்தப்பா....

உன் மாமன்தான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு திரியிறான்,அதான் பாக்கியம் ஒரு மாசத்துக்கு முன்னே இறந்திச்சே அப்ப சுந்தரிக்கிட்ட சத்தியம் வாங்கிச்சாம். உன் மாமாவ பொண்ணுக்கூடவே வச்சிக்கிறதா.

ஏன் உனக்கு தெரியாதா...

அடிப்பாவி இப்படியா என்கிட்ட மறைப்ப, அவன மொத்தல்ல உள்ளே சேர்த்தாதானே. அவள, நிம்மதியில்லாம பண்ணிட்டா....மனதிற்குள் அர்ச்சனை செய்தான்.

டேய் மாப்பிள்ள , எங்கடா இருக்க பரதா போனில் கேட்க ... எதுக்கு நான் சொல்லமாட்டேன், ஆனா நிம்மதியா இருக்கேன்...

என்னடா ஓரு மாதிரி பேசறே, மாதவன்கிட்ட போனைக் கொடு, போனை மாதவனிடம் கொடுத்தான். ஹலோ பரதா சீக்கீரம் வா, இங்க இவன் பண்ணுற அலும்பல் தாங்க முடியல...

எங்க இருக்கீங்க, இங்க பண்ணைவீட்டில... இதோ வரேன்

பரதா அங்க வர, வா மாமா வா வந்து ஜோதியில கலந்துக்கோ. நவ் ஐயம் ஹாப்பி மை பிரண்ட்ஸ்.

டேய் இன்னிக்கி உன் பிறந்த நாள் அதுவும், சுந்தரி திட்டுவாடா... என்ன செஞ்சிட்டு இருக்க.

மாமா அந்த ராட்சஸி பேச்ச எடுக்காத. நான் சந்தோஷமா இருக்கேன். பரதா வாயை திறக்க ச்சூ பேசாத குடி மாமா....

மாதவா உனக்கு கல்யாணம் ஆகல இல்ல, பண்ணிக்காத அப்பறம் என்னைய மாதிரி புலம்புவே. ஃபிரியா இரு....

செஞ்சாலும் வாய் பேசாத பொண்ணை பார்த்து பண்ணிக்கோ. இன்னும் சந்தோஷமா இருப்ப.

போடா என் தங்கச்சி உன்னைய கொடுமையா படுத்தினா , அவ உன்மேல எவ்வளவு பிரியம் தெரியுமா..

கல்யாணம் ஆகுற வரை சுத்தினா மாமா மாமான்னு, அப்பறம் பைத்தியம் பிடிச்சு நான்தான் அவ பின்னாடி சுத்திட்டுயிருக்கேன்.

சரி நீங்க தூங்குங்க , நான் அக்காவ பார்த்திட்டு வரேன்... டேய் நீ நிதானத்தில இல்ல சொல்லிக்கொண்டிருக்கும் போதே வண்டிச்சாவி எடுத்திட்டு போய் ராயலை ஸ்டார்ட் செஞ்சான்...

பூவரசை நடுவில் உட்கார வைத்து , பரதா வண்டியை ஓட்டினான், பூவரசுக்கு பின்னாடி மாதவன் உட்கார்ந்தான். வீட்டிற்குள் நுழைந்தான். அக்கா, பொம்மி என்று கத்தினான். ஆனந்தவல்லி கிச்சனிலிருந்து வெளிய வர.. சுந்தரி ரூமிலிருந்து வந்தாள்.

அக்காவின் பக்கத்தில் சோபாவில் உட்கார்ந்தான். அக்கா ஸாரிக்கா, நான் குடிச்சுட்டு வந்திருக்கேன். தப்பா நினைக்காதே அக்கா...

ஆனந்தவல்லி பூவரசனை பார்க்க, ஏன்டா நம்ம பொண்ணை இவனுக்கு கட்டிவைச்சோம்ன்னு இருக்கா..

இல்ல பூவரசு, என்னடா பிரச்சனை எங்கிட்ட சொல்லு , அக்கா நான் இருக்கேன்ல.

அக்கா எனக்கு ரொம்ப கோவமா வருது. கோவத்தில சுந்தரிக்கிட்ட சண்டை போடுறேன், அடிச்சேன் போன முறை. அதான் தண்ணி அடிச்சா என்னால பிஸிக்கலா எதுவும் செய்ய முடியாது பேசுவேன் அவ்வளவு தான்.

பூவரசன் பேசுவதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள் சுந்தரி...

அக்கா உன் பொண்ணு யாரை கேட்டு அவ அப்பனை இங்க தங்க வைக்கிறேன் சொல்லுறா..

என்னடி இது , சும்மாவே இருக்க மாட்டியா.

அம்மா, ஒரு மாசத்துக்கு முன்னாடி, பாக்கியம் எங்க ஹாஸ்பிட்டல்ல சீரியஸா அட்மிட் பண்ணிருந்தாங்க. அவங்க கடைசியா எங்கிட்ட பேசினது. தப்பெல்லாம் என்மேல தான் இருக்கு சுந்தரி, கடைசி காலத்தல உங்க அப்பாவை நீ பாத்துங்கணும் , உங்க அம்மாக்கு நான் செஞ்ச துரோகம் எனக்கு மன்னிப்பே கிடையாது. உங்க அப்பாவ நீ உன்கூடவே வச்சுக்கோ, உன்மேல அவ்வளவு பிரியும். சாவபோற எனக்கு சத்தியம் பண்ணு சொன்னாங்க.

நான் என்ன செய்யறதும்மா , கடைசி நேரத்தில அவங்க ஆத்மா சாந்தி அடையுனும் சத்தியம் செஞ்சேன்.

அத ஏன் அப்பவே சொல்லலை, பூவரசன் கேட்க.

ஏன்னா நீ இந்த விஷியத்தை ஒத்துக்க மாட்டே...

தெரியுதுல்ல அப்பறம் ஏன் சத்தியம் பண்ண டாக்டரு...உனக்கு உன் அப்பா மேல பாசம்டி.

இரண்டு மாசம் பிரிஞ்சி இருந்ததுக்கு எவ்வளவு ஃபில் செஞ்சே. இரண்டு பசங்க பெத்து இன்னொருத்திய கல்யாணம் பண்ணிட்டு வந்தானே உங்க அப்பா, எங்க அக்கா எப்படி துடிச்சிருப்பா. இதே எங்க அக்கா இந்த தப்பை செஞ்சா... இரண்டு பிள்ளைங்களை பெத்துக்க மட்டும் தெரிஞ்சுதா உங்க அப்பாவுக்கு, எல்லா உணர்வுகளை கொண்ணுட்டுதானே எங்க அக்கா வாழ்ந்துட்டு இருக்கா ...

இப்படி கடைசி வரை இருக்குனும்மா மாமா எங்க அம்மா ஒத்தையிலே

வேணா நான் ரொம்ப கோவத்தில இருக்கேன் பேசாதே சொல்லி டீப்பாயின் கண்ணாடியை கையால் குத்தினான். கையில் கண்ணாடி சில்லுகள் பொத்திருந்தன.

மாமா என்று கத்தினாள்,பூவரசு என்னடா செய்யுற..பரதாவும், ஆனந்தவல்லி கத்த.

பின் என்னக்கா நான் சொல்லுறதை புரிஞ்சிக்கிறாளா உன் பொண்ணு ,இன்னிக்கு என் பிறந்த நாள் ,ஆசையா இவள வெளியே கூட்டிட்டு போகலாம் வந்தா அந்த ஆளுக்கூட போறா, சொல் பேச்சு கேட்காம.

டேய், ரத்தம் வருதுடா பூவரசு..பரதா மாமாவ என் ரூமில்ல விடுங்க நான் பார்த்துக்கிறேன், எல்லாரும் போய் தூங்குங்க.

சுந்தரி ரூமில் விட்டு , பரதா வெளியே சென்றான்.பெட்டில் காலை நீட்டி உட்கார்ந்திருந்தான். உள்ளே பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்து வந்தாள். அவன் கையை அவளிடம் கொடுக்காமல் கையை தூக்கினான்.

என்ன மாமா இப்படி பண்ணுற, ஒழுங்கா கையை காட்டு,கிளீன் செய்யனும். அவன் கையை நீட்ட,மெதுவாக கண்ணாடியை எடுத்தாள், ஸ்ஸு வலி பொறுக்காமல் ,வலிக்குது விடுடி கை இழுத்து படுத்துக்கொண்டான்.

மாமா பிளிஸ் நான் வலிக்காம கீளின் செய்யறேன். அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் முகத்தை திருப்பினாள்.

என்னைய தொடாத சொல்லிட்டேன். மாமா தோ மருந்து போட்டேன் ,கொஞ்ச நேரம்.பிறகு செப்டிக் ஆக கூடாதுன்னு ஊசி போட வர.

அய்யோ வேணாடி என்னைய விடு, அடம்பிடிக்க, இன்னும் ஊசிய பார்த்தா பயம் ,ஆனா கத்தியால குத்தினா வலிக்காது. அவளின் இடுப்பை கட்டிக்கொண்டான் ,முகத்தை அவளின் வயிற்றில் புதைத்துக்கொண்டு. கண்ணை இறுக்கி மூடிக்கொண்டான்.

சுந்தரிக்கு ஏதோ செய்ய, மாமா விடு ...

க்கும் மாட்டேன்.. மெல்ல ஊசியை செலுத்தினாள். ஆ வென பூவரசன் அலற, சின்ன பசங்களே பயப்பட மாட்டறாங்க, இவன் சேட்டை தாங்கமுடியல சாமி என்று எழ பார்த்தாள்.

அவளை அடக்கி, சுந்தரியின் மடியில் படுத்தான். எங்கடி போற மாமாவ தூங்க வச்சிட்டு போடி...

சுந்தரி முறைக்க... என்ன முறைக்கிற எல்லாத்துக்கும் நீதான் காரணம், எவ்வளவு சந்தோஷமா இருந்தேன். என்னுடைய நிம்மதிய நீ கெடுத்திட்ட, அதுக்கு நீ கிஸ் என்ற விஷத்தை கொடுத்திட்டு போ நான் நிம்மதியா சாகுறேன்.

ஓ நான் முத்தம் கொடுக்கிறது , உனக்கு விஷமா இருக்கா..

எஸ் , சீக்கிரம்..ஆனா நான் டச் பண்ண மாட்டேன்

இந்த விஷம் உனக்கு தேவையில்ல, இப்ப நீ குடிச்சிருக்க...

அதுக்குதான் ஹால்ஸ் போட்டிருக்கேன், சுந்தரி முறைக்க.

அடிங்க எனக்கேவா, நான் பயங்கற லோக்கல் உனக்கு தெரியும் அப்பறம் பச்சை பச்சையாக திட்ட ஆரம்பிக்க. அவன் இதழில் இதழ் வைத்தாள், அவனின் பொம்மி. சிறிது நேரத்தில் தூங்கினான் பூவரசன்.

காலை மணி 8.00 மெல்ல கண்ணை திறந்தான். தலைவலி ஒரு பக்கமாக வலிக்க கையை பார்த்தான், கொஞ்சமாக ஞாபகம் இருந்தது. அதற்குமேல் நினைவில்லை. தன்னை சுத்தபடுத்திக் கொண்டு கண்ணாடியில் பார்த்தான் ,ஏதோ செஞ்சிருக்கோம், நினைத்துக்கொண்டே கீழே இறங்கினான்.

ஆனந்தவல்லி காப்பியை பூவரசன் கையில் கொடுக்க. என்னம்மா உன் தம்பிக்கு போதை தெளிஞ்சிடுச்சா, இன்னும் ஏத்திக்கனும்மா.

கேளு, என்ன பிராண்டுன்னு வாங்கிட்டு வரேன். தலையை குனிந்திருந்தான் பூவரசன். வயசு என்னாகுது சின்ன பசங்க மாதிரி ஊருல சண்டை போடறது, குடிச்சிட்டு வீட்டில கண்ணாடியை உடைக்கிறது. என்ன உன் தம்பிக்கு பெரிய ஹுரோ நினைப்பா.

பிரச்சனை உனக்கும் எனக்கும் இல்ல மாமா, எங்க அப்பாவுக்கும் உன்னுடைய அக்காவுக்கும் அவங்க பேசிப்பாங்க,நமக்கு உரிமையில்ல அவங்க விஷியத்தில தலையிட.

எங்கன்னா பெரிய மனுஷன் மாதிரி யோசிக்கிறீயா, இதுல அடுத்த பிரஸிடண்ட் ஆக நிக்க வைக்க போறாங்களாம் ஊர் தலைவருங்க சொல்லுறாங்க.

ஊர் தலைவரில்ல உன் அப்பனுடைய ஆசையின்னு சொல்லு, அந்த ஆளுதான் ஊரு முழுக்க சொல்லுறான். எனக்கு ஒண்ணும் ஆசையில்ல, அக்கா நான் வரேன்.

டேய் சாப்பிட்டு போட, ஆனந்தவல்லி கத்த காதில் வாங்காமல் சென்றான், சுந்தரியின் பூவரசன்.

------------------------

இனிய பொங்கல் மற்றும்

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..............பிரண்ட்ஸ்

with love
lakshu
 
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் and மிகவும் அருமையான பதிவு, லக்ஷு அருணாச்சலம் டியர்

பூவரசன் கேட்பது நியாயம்தானே
இரண்டு குழந்தைகளுடன் ஆனந்தவல்லியை விட்டுட்டு பாக்கியம் பின்னாடி சண்முகவேலு போனான்
இப்போ அவள் செத்ததும் இவனை திரும்ப சேர்த்துக்கணுமா?
லூசு சுந்தரி எதுக்கு அந்த கேடுகெட்ட பாக்கியத்துக்கு சத்தியம் செய்தாள்?
 
Last edited:
ரொம்ப நல்லா கேக்கிறான்
அங்கப்பன் எத்தனை
தப்பு செஞ்சு இருக்கான்
இவ அப்படி செய்யலாமா
 
Top