Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-34 (final 2)

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-34 (final 2)



இரண்டு நாள் பிறகு, கான்ஸியஸ் வந்து கண்னை திறந்தாள் சுந்தரி. நர்ஸ் வெளியே வந்து , எல்லோரிடமும் சுந்தரி கண்னை முழிச்சிட்டாங்க சொல்ல... ஆனந்தவல்லி கண்னை துடைத்துக்கொண்டு, நாங்க போய் பார்க்கலாமா.

இல்லங்க டாக்டர் செக் செஞ்சிட்டு இருக்காங்க. மதியம் மேல போய் பார்க்கலாம்.

டேய் பூவரசு, இப்பவாச்சும் சாப்பிட வாடா, இரண்டு நாளா தூக்கமில்லாம வேறும் காபி, தண்ணீ குடிச்சிட்டு இருக்க, வா மாப்பிள்ள.

ஆமாம் பூவரசு , நீ வீட்டுக்கு போய் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வாப்பா-ஆனந்தவல்லி.

ஆஸ்பிட்டல் சேர்த்தவுடனே சண்முகவேலு, பவி, பவளத்தாய், ஆனந்தவல்லி அனைவரும் வந்துவிட்டார்கள். ஆனந்தவல்லியால் பூவரசு முகத்தை பார்க்க முடியவில்லை. என் தம்பி இப்படி உட்கார்ந்துட்டானே. அனைத்தும் சண்முகவேலும்,பரதாவும் பார்த்துக்கொண்டார்கள். உள்ளே சுந்தரியை மாதவன் இம்மியும் நகராமல் பார்த்துக்கொண்டான்.

மதிய வேளை நார்மல் வார்டுக்கு மாற்ற ஒவ்வொருவராக பார்த்து வந்தனர். பரதா உள்ளே சென்று பார்க்க, சுந்தரி எப்படிடா இருக்க.

ம்ம் என்று தலையை ஆட்டி பரதா , மாமா இன்னும் என்னைய பார்க்க வரல, மாமா எங்கே ...

இரண்டு நாளா தூங்கல, சாப்பிடல அதான் வீட்டுக்கு அனுப்பினேன், டயர்டுல தூங்கிட்டு இருப்பான் . உன்ன பார்க்காம எங்க போக போறான்.

இரவு மணி 12.00 மெதுவாக உள்ளே நுழைந்தான் பூவரசன். சுந்தரி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து முன் நெற்றியில் முத்தமிட்டான் , அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான். பூவா என்று சுந்தரி அழைக்க தன் கண்னை திறந்து அவளை பார்த்தான். பூவா மறுபடியும் சொல்ல, அவள் தலையை தடவி கொடுத்து, சொல்லுடி...

ஏன் மாமா இப்படியிருக்க கண்ணெல்லாம் உள்ளே போயி, சோர்வா இருக்க சாப்பிட்டியா...

ம்ம் நைட் சாப்பிட்டேன்.

மாமா .. ரொம்ப பயந்திட்டியா.

ம்ம் செத்துட்டேன்டி...பயப்பட வச்சிட்ட.கண்கள் கலங்க அவளை பார்த்து இப்படி படுத்திருக்கியேடி என்னால பார்க்கவே முடியில..

அவள் கையை பிடித்துக்கொண்டே தூங்கினான் பூவரசன்... அதன் பிறகு பூவரசன் அடிக்கடி வந்து பார்க்கவில்லை. நாளுக்கு ஒரு முறை என்று பார்த்துவிட்டு செல்வான். அவள் குடும்பமே அவளை தாங்குவதை பார்த்து, தான் தனியாக இருப்பதுப்போல் நினைக்க ஆரம்பித்துவிட்டான் பூவரசன். அவனது ஒட்டாத தன்மை அவளை யோசிக்க வைத்தது.

எல்லோரும் வந்து போனாலும் சுந்தரி தன் மாமனையே எதிர்பார்ப்பாள். துரைப்பாண்டியும் பூவரசனிடம் சகஜமாக பேசினான். அன்று திவாகரை போலீஸில் ஓப்படைத்து, அவன்மேல் கேஸும் போட்டான்.

வீட்டிற்கு வந்து இன்றோடு ஒரு மாதம் ஆனது.ஆனந்தவல்லி, பவளத்தாய் கவனிப்பில் ,சுந்தரி அவளே தன் வேலையை செய்ய ஆரம்பித்தாள். சுந்தரி செல்லின் அழைப்பை ஏற்றாள். சொல்லு பரதா... நீ நினைச்ச மாதிரிதான் காசிக்கு போறானாம். எனக்குக்கூட தெரிய கூடாதுன்னு டிராவல்ஸ்ல புக் பண்ணிருக்கான்.

என்ன பண்ணலாம் சுந்தரி...

நான் சொல்லுறதை செய் பரதா..ஓகே டண்

பண்னைவீட்டில், என்ன மாப்பிள்ள எங்கே கிளம்பிட்ட,

ஆங் மாமா நான் கொஞ்சம் சேலம் வரை போயிட்டு வரேன். வீட்டை பார்த்துக்கோ , கணக்கு கரேக்ட்டா எழுதி பொம்மிக்கிட்ட காண்பிச்சுடு மாமா.

சரி மாப்பிள்ள அங்க பாரு சொல்ல, பூவரசு பரதா கையை காட்டும் திசையை நோக்கி திரும்ப, முகத்தில் ஸ்பிரே அடித்தான் பரதா. அப்படியே மயங்கி விழ,பின்னால் இருந்த மாதவன் தாங்கி பிடிக்க பூவரசனை காரில் ஏற்றினர்.

பூவரசன் கண்னை திறந்து பார்க்க இரு கைகளும் கட்டிலில் கட்டப்பட்டிருந்தன. அவன் பக்கத்தில் சுந்தரி படுத்துக்கொண்டே டிவியில் நியூஸ் கேட்டுக்கொண்டிருந்தாள்.

ஏய் என்னடி செய்யற.

ஷ்ஷ், உன்ன கடத்திட்டு வந்துருக்கேன் பார்த்தா தெரியில ,அவன் முகத்தை தன் கையால் நிமிர்த்தி, என்னடா சாமியாரு ஓடிபோகலாம் நினைச்சியா. அதுவும் காசிக்கு. அங்க போய் என்ன பண்ண போறே மாமா.

பூவரசன் முறைக்க , என்ன முறைக்கிற, இதோ கத்தியால குத்தினானே அவன் பொண்டாட்டி தேவகியே உனக்கு லவ் லட்டர் கொடுத்தவ தானே.

உனக்கு எப்படி தெரியும் பொம்மி.

ம்ம் முதல்ல எங்கிட்ட தான் கொடுத்து உன் மாமன்கிட்ட கொடுன்னு சொன்னா. இந்த ஊருல இருக்க பொண்ணுக்கிட்ட இருந்து உன்ன பாதுகாக்கவே நாக்கு வெளியே தள்ளிடுச்சு. இதுல நீ எஸ்கேப் ஆக பார்க்கிற.

ஓ, எனக்கு லட்டர் குடுத்த பொண்ணுங்க ஏன்டா இப்படி ஒடுது இப்பதான் புரியுது. அதுல யாராவது கட்டினா என் வாழ்கை நல்லா போயிருக்கும்.

என்னடா சொன்ன அவன்மேல் ஏறி அமர்ந்தாள். டேய் மவனே எங்கிட்டே வா. அய்யோ நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி. எனக்கு பயமா இருக்குடி, அப்படியே அழுது டயலாக்கா விட்டே. நடிகன் தோத்துட்டான் உன்கிட்ட.

கை கட்ட அவிழ்துட்டு பேசுடி தைரியம் இருந்தா...

ஏன் எனக்கு என்ன பயம், சொல்லி கயிரை கழிற்றினாள். அவள் பிரித்த மறு வினாடி, அவள் இதழை சிறை செய்தான் நம் பூவரசன். எவ்வளவு நேரம் ஆனது என்று இருவருக்கும் தெரியவில்லை. தன் காதலை வார்த்தையில்லாமல் உரையாடினர். தொட்டாவே பணியா உருகும் சுந்தரி தன்னை மறந்து மயங்கினாள் சுந்தரனிடம்.

ஏய் பொம்மி, உன்னைய பக்கத்துல வச்சிட்டு மாமனால் கன்ட்ரோல் பண்ணமுடியில. சரி நம்மள பார்த்து குழந்தையில்லன்னு அழுதாளே ஒரு மாசம் காசி, இமய மலை போய் மைன்ட பிரஷ் பண்ணிட்டு பிறகு ஒரே பிரசவத்துல பத்து குழந்தை கொடுக்கனும் தயார் ஆயிட்டு இருந்தா. சிவனேன் இருந்தவனை கிளப்பிவிட்டுட்டுயே பொம்மிக்குட்டி.

அய்யோ மாமா எனக்கு வெட்கமா வருது, விடு என்னைய. இப்பதான் சரியாயிட்டு வர போனா போகுதுன்னு விடுறேன்.

க்கும், போ பூவா நான் பயந்தே போயிட்டேன். பூவா என்னைய வெறுத்திட்டியோ ,பொம்மி கண்கள் கலங்க.

உன்னையவிட்டு எல்லாம் அவ்வளவு தூரம் போக முடியாதுடி. போன அடுத்த நாளே வந்துடுவேன் புரியுதா பொம்மி....

மூன்று வருடங்கள் சென்ற பின்....

பண்னைவீட்டில் , வாடா மாப்பிள்ள இன்னும் அந்த பந்தா போகலடா குளிங்கிலாஸ்சை கழிட்டி சட்டையில் மாட்டினான்,என்ன பூவரசு சிரித்த முகமா வர மாதவன் கேட்க.

ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா.... ஐம் ஹாப்பி இரு தோள்களை தூக்கி சொன்னான். செல் அடிக்க அதை பார்த்தான்.

அட்டன் செய்யுடா பூவரசு. செல்லையே முறைத்துக்கொண்டிருந்தான், பிறகு அழைப்பை ஏற்று சொல்லு பொம்மி என்றான்.

மறு முனையில் எங்கடா எங்க அப்பாவை கொண்டுபோய்விட்ட, போன்ல எங்கயிருக்கேன் தெரியில சொல்லுறாரு.

ஆமாம் , அப்படியே உங்க அப்பா சின்ன பிள்ள பாரு, விட்டா ஊரையை ரூவாக்கு இரண்டுன்னு விற்பாரு, அவரே வருவாரு, ரொம்ப பயப்படாதே

நீ வீட்டுக்குதானே வருவே உனக்கு இருக்குடா கச்சேரி.. வையுடி போனை.

டேய்ய மாப்பிள்ள எங்கடா விட்ட உன் மாமனாரை.

ரவுஸு தாங்க முடியில பரதா, இந்த ஆளு எனக்கு பி,ஏ வாம். எப்ப பாரு என் பின்னாடியே வரது. எனக்கு ஆபத்தாம், அதான் என் பொம்மி இவரை பாடிகார்டா வச்சிருக்கா. ஊர் பிரஸிடன்ட் ஆனதுல இருந்து தாங்க முடியலடா மாதவா. நம்ம ஊருல இயற்கை விவசாயம் தான் செய்யனும் மாத்தினேன் அதுக்கு அந்த மினிஸ்டர் அவார்டு கொடுத்தாரே. அப்ப அவரு .சொன்னாரே கட்சிக்கு வாங்க அதை அப்பாவும், பொண்ணு கையில எடுத்துட்டாங்கடா. இந்த கிழவன் என் வாழ்க்கையில கும்மியடிக்காம இருக்க மாட்டான் போல, அதான் 100 கிலோமிட்டர் தள்ளி அங்க நடந்த திருவிழாவில விட்டுட்டு வந்துட்டேன்.

அடப்பாவி இப்படியா பண்ணுவ..

பரதா மாமா என் உலகம் பொம்மி, குட்டி,அக்கா,அம்மா, நீங்க போதும்டா இந்த அரசியல் வேணாம்பா. இருவரும் பூவரசை கட்டிக்கொண்டனர். எப்படிடா வீட்டுக்கு போவ...

நேரபோய் பொம்மி கால்ல விழுந்துடுவான் நம்ம பூவு, மாதவன் சொல்லி சிரிக்க. டைம் ஆயிடுச்சு.

சேலத்தில் S.S என்ற பெயரில் ஹாஸ்பிட்டல் கட்டிக்கொடுத்தான், அதை மாதவனும், சுந்தரியும் பார்த்தனர்.சண்முகவேலு கொஞ்சம் கொஞ்சமாக பேசி ஆனந்தவல்லியிடம் சேர்ந்துவிட்டார். திவாகர் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான். நம்ம பூவரசன் தலைமையில் துரைப்பாண்டிக்கு கல்யாணம் நடந்தது.

சுந்தரியின் ரூமுக்குள் வந்தான் பூவரசன், டேய் பட்டுக்குட்டி இன்னும் தூங்கலையா, தன் 8 மாத பெண்னை தூக்கி மடியில் வைத்துக்கொண்டான் பூவரசன். என் பட்டும்மா சொல்ல தன் அப்பாவை கண்டு அழகாக சிரித்தது.பூவரசனின் கண்ணங்களை சப்பிட்டு,

ஏய் என் பட்டு சொல்லுறா, டாடி பீளீஸ் எங்கியும் போகாதீங்க எனக்காக உங்க டைம்ம ஸ்பென்ட் பண்ணுங்க சொல்லுறா.

ம்ம் அவ சொல்லுறா என்று பொம்மி முறைக்க.

என்னடி மாமாவ வச்ச கண்ணு வாங்காமா பார்க்கிற.பட்டு உங்க அம்மா பூவாவ சைட் அடிக்கிறா சொல்லி சிரிக்க, குழந்தையும் சிரித்தது. பாப்பாவுக்கு தூக்கம் வருதா, பொம்மி பாப்பாவுக்கு பால் கொடுத்துட்டு தூங்க வை, அப்படியே மாமாவையும் தூங்க வை ,

அடங்க மாட்டியாடா நீ....

மாட்டேன் என்னடி செய்யுவே பெட்டில் படுத்து உறங்கினான். குழந்தையை தூங்க வைத்துட்டு தன் மாமா அருகே வந்தாள். தலையை சிலுப்பிவிட்டு பூவா என்று அழைக்க , அவளை அனைத்துக்கொண்டான். தன் வேலையை ஆரம்பிக்க , விடு மாமா..

என்னடி நீ டாக்டருக்கு தானே படிச்ச....

ஆமாம் இதுவே நூறு வாட்டி கேளு, குழந்தை பிறந்த மூனாவது மாசமே ஆரம்பிச்சிட்ட.

வேணா வேணா சொல்லிட்டு நீதான்டி..... அவன் வாயில் ஒரு அடி வைத்து, போய் உங்க பூஜ்ஜிக்குட்டிய தூக்கிட்டு வாங்க அம்மாகிட்ட இருக்கா. இரண்டு பேரையும் சமாளிக்க முடியில போங்க.

ம்ம் நான் உன்ன வளர்த்தேன் அப்ப என்ன ரௌடிதனம் செஞ்ச , இப்ப உங்க அப்பா என் பொண்ணை வளர்க்கட்டும் அப்ப தெரியும் .மாமா மூடுல இருக்கேன் வாடி பொம்மி.

மாமா பசி தாங்க மாட்டா போயி கூட்டிட்டு வாங்க. சரிடி கீழே ஆனந்தவல்லி ரூமின் கதவை தட்டினான் பூவரசன்,

வாடா பூவரசு, இன்னும் தூங்காம விளையாடுறா குட்டியை தாத்தாவிடமிருந்து வாங்கி அவனிடம் கொடுத்தாள். சரிக்கா என்று தலை அசைத்தான். இரு குழந்தையும் தூங்க வைத்து தன் மாமனிடம் வந்தாள். பூவா ம்ம் சொல்லுடி கண்ணை மூடிக்கொண்டே பேசினான். பூவா ...ம்ம் சொல்லு...

நீ இப்பவேல்லாம் உன் பொம்மியை கொஞ்சறேதேயில்ல, எப்ப பார்த்தாலும் நம்ம பாப்பாவையே கொஞ்சற... போ என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

என்னடி இப்படி சொல்லிட்டே, மாமா இப்பதான் இரண்டு பிள்ளைய கொடுத்திருக்கேன், இன்னும் எட்டு இருக்கு.

அய்யோடா தன் கண்கள் விரிய பார்த்தாள். சும்மா சொன்னேடி

தன் மனைவியை பூப்போல் அனைத்துக்கொண்டான் பூவரசன். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் உயிரே நீதான்டி நீ இல்லாமல் இந்த பூவா இல்லடி பொம்மிக்குட்டி. உன்ன மாதிரியே இரண்டு பாப்பா கொடுத்திருக்கே வேற என்ன வேனும்டி. தன் அன்புக்கு, காதலுக்கு எல்லையே இல்லை என்று நிருபித்தான் சுந்தரியின் சுந்தர பூவரசன்.

------ சுபம் ----------

நன்றி. friends

இந்த கதைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. சின்ன கதையா வரும் நினைச்சேன். பிழை இருந்தால் மன்னித்துவிடுங்கள். உங்கள் விமர்சனம் எனக்கு விரைவாக எழுத ஆர்வத்தை தந்தது. நன்றி மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்.

உங்கள்

lakshu
 
ரொம்பவே அழகான நிறைவான குடும்ப நாவல், லக்ஷு அருணாச்சலம் டியர்

ஹா ஹா ஹா
காசிக்கு போறியா பூவரசன்?
உன்னால் முடியுமா?
உன் சுந்தரி உன்னை விட்டுடுவாளா?
மயக்க மருந்து ஸ்பிரே அடிச்சு சுந்தரி பூவாவைக் கடத்தினாளா?
ஹா ஹா ஹா

பலே பலே
பூவரசன் ஊரு பிராசிடென்ட்டா?
சூப்பர் சூப்பர்
மந்திரி முந்திரி கூப்பிட்டும் பூவா அரசியலுக்கு போகவில்லையா?
இதுவும் சூப்பர்தான்

பார்றா
இரட்டைப் பிள்ளைகளா?
நம்ம பூவரசன் தீவிரமாகத்தான் வேலை பார்த்திருக்கிறான்
ஹா ஹா ஹா

இந்த நாவல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு லக்ஷு டியர்
இதே போல அடுத்ததொரு அழகிய நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Last edited:
ரொம்ப நல்லா இருக்கும்மா
பூவா பாசம்
பொம்மி காதல்
பரதா மாதவன் அனுசரனைனு
அழகான கதை
 
Top