Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுமப்பேன் உனை தாயாக 1

Advertisement

laxmi das

Member
Member
2056

சுமப்பேன் உனை தாயாக

பூலோக சொர்க்கம்,கடவுளின் நாடு, நறுமணம் கமழும் பூமி என்ற பல சிறப்புகளை கொண்டது தான் கேரளா. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்றும் எப்பொழும் குளுமையாக இருக்கும் வானிலையும் மனதுக்கு இதமாக இருக்கும்.

கிளிமானூர், திருவனந்தபுரத்தில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலையில் இருக்கும் அழகிய சுற்றுசூழல் கொண்ட கிராமம். பழமை மாறாமல் இருக்கும் அந்த வீட்டை பார்ப்பவர்கள் ரசிக்காமல் இருக்க முடியாது.

உலகின் எல்லா இடத்திலும் இந்தியனை காணலாம் அதே போல் இந்தியாவிலும் எல்லா இடத்திலும் தமிழனை காணலாம். அதே போல் பத்து வருடம் முன்பு வேலை காரணமாக இங்கே கூடி வந்தவர்கள் தான் சங்கரனின் குடும்பம்.

செல்வி "எங்க எவ்வளவு சீக்கிரமா கிளம்பறீங்க" என்று கிளம்பும் கணவனிடம் கேட்க,

"நாளைக்கு பெரியவளுக்கு ரொம்ப முக்கியமான நாள் அதுவும் நினைச்சு பார்க்க முடியாத இடம் அதான் கொஞ்சம் பயமா இருக்கு கோவிலுக்கு போயிட்டு வரேன் சின்ன குட்டி எழுந்தா நான் கோவில் போனதை சொல்லிடு" என்று பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றார்.

அவர் கிளம்பிய சிறிது நேரத்தில் ஒரு அறையில் 'ஏய் என் கோலி சோடவே என் கறிக்குழம்பே உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ' என்ற சத்தத்தில் அந்த வீடே அதிர,

"ஐயோ என்ன மா இது காலையே இப்படி சத்தமா பாட்டு வைச்சே தலை வலியை கொண்டு வரா நான் வேலைக்கு போய் இப்படி வேலை பார்க்கிறது" என்று பாட்டை வைத்த அடுத்த நிமிடமே பிரியங்கா தன் தாயிடம் சொல்ல,

"நானும் தினமும் சொல்லி பார்த்துட்டேன் எங்க கேட்கிற, அவ என்னமோ பண்ணிக்கிட்டு போற நீ வா சாப்பிட்டு நேரத்தோடு கிளம்பு" என்ற தாயிடம்,

"அப்பா எங்க இவ்வளவு காலையில் எங்க போய் இருக்கார்" என

"நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க கொஞ்சம் பெரிய சம்பந்தம் அந்த பயத்தில் தான் காலையே கோவிலுக்கு கிளம்பிட்டார் எனக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கு தேடி வந்த வரன் வேண்டாம் சொல்லவும் மனசு வரவில்லை பார்க்கலாம் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க எப்படி இருக்காங்கனு" என அதை கேட்ட பிரியங்கா "கவலை வேண்டாம் என் செல்லத்துக்கு.... என்னோட லக் அதை பாரு என்னோட லக் வேற யாருக்கும் கிடையாது" என்று சொல்லி கொண்டே புட்டையும் கடலை கறியையும் காலி செய்ய,

எதோ ஒரு பாடலை பாடி கொண்டே அங்கே வந்தால் கல்பனா, நம் கதையின் நாயகி. அது வரை இதழில் இருந்த மென் புன்னகை மறைந்து ஒரு வித வெறுப்பு ப்ரியங்காவின் முகத்தில் தோன்றியது.

கல்பனா, பத்தொன்பது வயதே நிரம்பிய கல்லூரி மாணவி. பிடித்த படிப்பான பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் படிக்கிறாள். பத்து வருடம் முன் அவள் குடும்பம் கேரளா வரும் போது அவளது வயது ஒன்பதே..... பெரும்பாலும் கேரளவே வாசல்தளம் என்பதால் மலையாளம் அவளது வாயில் சரளமாக வரும் அதற்காக தமிழ் தெரியாது இல்லை. தமிழ் பேச தெரியும். கலையான முகம் கருப்பும் இல்லாத வெள்ளையும் இல்லாத கோதுமை நிறம். அபிநயத்தில் கொஞ்சி விளையாடும் மீன் கண்கள் அளவெடுத்து செதுக்கிய நாசி, எப்பொழுதும் இதழில் கட்டி தவழும் புன்னகையின் அரசி.

இவளை விட பல மடங்கு அழகி தான் ப்ரியங்கா. இருந்தாலும் அவள் மீது ஒரு வித வெறுப்பு. தனக்கு பின் ஆறு வருடம் இடைவெளியில் பிறந்து பெற்றோர் அன்பை பகிர வந்த காரணத்தாலோ அல்லது தான் கேட்டும் கிடைக்காத பல பொருள்கள் அவள் கேட்காமலே அவளுக்கு கிடைப்பதாலோ எதோ ஒரு காரணம் அவளை சிறு வயதில் இருந்தே வெறுத்தாள். வளர வளர வெறுப்பும் வளர்ந்ததே தவிர குறைய வில்லை.

"குட் மார்னிங் சேச்சி மார்னிக் அம்மா" என்றவளை கண்டுக்காமல் தாயிடம் "அம்மா நான் கிளம்புறேன் நாளைக்கு லீவு சொல்லிட்டேன் அதனால இன்றைக்கு வர கொஞ்ச நேரம் ஆகும்" என்று விட்டு வேகமாக தன் கைபையை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

செல்வி கல்பனாவிடம் "சாப்பிட்டு கிளம்பு எனக்கு உள்ள வேலை இருக்கு " என்று கிளம்ப "அம்மா நான் நாளைக்கு லீவு போடவா" என "நீ எதுக்கு அதுயெல்லாம் ஒன்றும் வேண்டாம் நீ போயிட்டே வா" என்று உள்ளே சென்று விட,

'அது என்ன சேச்சிக்கு மட்டும் பக்கத்தில் இருந்து கவனிக்கிறாங்க என்னை மட்டும் நீயே சாப்பிடுன்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டாங்க... சேச்சி என் கிட்ட நல்லா பேச நான் கண்டதே இல்ல அச்சா மட்டும் தான் என் கிட்ட நல்லா பேசுறாங்க.... என்ன கொடுமை ஐயப்பா' என்று புலம்பினாலும் தாயின் கை பக்குவத்தில் தயாராகி இருக்கும் புட்டு கடலைக்கறியை ஒரு பிடி பிடித்து விட்டே கிளம்பினாள்.

கல்லூரியில் "பேபி டால் ஏன் வந்ததில் இருந்து அமைதியா இருக்க திரும்பவும் சேச்சி கூட சண்டையா" என்ற நட்சத்ராவை பார்த்து "சேச்சி கூட நான் சண்டை போடாமல் வேற யார் டி போடா போறாங்க இப்ப என்னோட அமைதிக்கு பின்னாடி இருக்கிற காரணம் வேற டி. நாளைக்கு சேச்சியை பொண்ணு பார்க்க வராங்க அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்" என

"அதுல யோசிக்க என்ன இருக்கு.... உங்க அக்கா அவ மாமியார் வீட்டுக்கு போய்ட்டா உங்க அம்மா உன் கிட்ட தான் பேசுவாங்க டால். நீ சின்ன வயசில் இருந்து எதிர்பார்த்த அன்பு கிடைக்கும் தானே அதை நினைச்சு சந்தோசமா இரு" என்று தோழியின் மனதில் இருக்கும் ஏக்கத்தை உணர்ந்து சொல்ல,

"எனக்கு என் சேச்சியை விட அதிகமா என்னை தான் லவ் பண்ணனும் என்ற பேராசை எல்லாம் இல்ல டி என் கிட்ட பாசமா ஒரே வார்த்தை என் முகத்தை பார்த்து கனிவை சொன்ன அதுவே போதும்" என

"விடு விடு டால் உன்னை கண்ணுல வைத்து பார்த்துகிற மாதிரி ஒரு பையனை பார்த்து கட்டி வெச்சுடுவோம்" என்று அவளை சிரிக்க வைத்து கொண்டே கிளாஸ்க்கு சென்றனர்.


கன்னியாகுமரி,


"எனக்கு பொண்ணை பார்க்க சுத்தமா விருப்பமே இல்லை என்னோட அம்மா தாண்டா எதோ இப்ப விட்டா எனக்கு கல்யாணமே ஆகாத மாதிரி உடனே கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொல்லை பண்றங்க" என்று பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தன் நண்பனுக்கு தொலைபேசி மூலம் சொல்ல,

"கொடுத்து வெச்சவன் மச்சான் நீ எனக்கும் அம்மானு ஒருத்தர் இருக்காங்களே நானே போய் எனக்கு வயசு ஆகிடுச்சு கல்யாணம் கட்டி வைமானு கேட்டா உனக்கு என்ன வயசு ஆகிடுச்சு இப்ப தான் நல்ல உழைக்கணும் என்று தத்துவம் எல்லாம் பேசறாங்க இருக்கிற முடி கொட்டுறதுக்குள்ள கட்டி வைக்க சொன்ன எங்க இந்த 90's கிட் கஷ்டத்தை புரிஞ்சிக்கிறாங்க" என்று தன் கவலையும் சேர்த்து சொல்ல

"AK போதும் நிறுத்து உன்னோட கஷ்டம் உனக்கு இப்படி இதை எல்லாம் சமாளிக்க போறேன் னு சாத்தியமா தெரியல" என

"கல்யாணம் பண்றத்தில் இப்ப என்ன கஷ்டம் உனக்கு" என்று AK கேட்க,

"தெரியல டா இன்னும் நான் பெரிய தொழிலதிபர் ஆகணும் இப்ப இருக்கிறதை விட எல்லாரும் எங்க பிராண்ட் வாங்கணும் இப்படி சொல்லிட்டே போகலாம்" என

"டேய் கேனை இதுக்கும் கல்யாணத்துக்கு என்னடா சம்மந்தம்" எண்றதுக்கு "உனக்கு சொன்ன புரியாது மச்சான்" என்று போனை வைத்து விட்டான்.

பலர் எதிர்பார்த்த சிலர் எதிர்பார்க்காத நாள் விடிந்தது. சூரியன் தன் மேல் படர்ந்து மறைத்த பணியையும் மேகத்தையும் மீறி பூமியில் தன் ஆதிக்கத்தை காட்ட தொடங்கினார்.

சங்கரன் "செல்வி பிள்ளையை ரெடி பண்ணிட்டியா மாப்பிள்ளை வீட்டுல இருந்து எந்த நேரத்திலும் வரலாம்" என்று பதட்டமாக சொல்ல, "அச்சா நான் எப்பவோ ரெடி" என்று கல்பனா வெள்ளை அனார்கலியில் தேவதையாக வர,

"உன்னை யாரு கேட்டா ஒழுங்கா காலேஜ் கிளம்பற ஜோலியை பாரு" என்று செல்வி கடிந்து கொள்ள,

"எதுக்கு குட்டியை திட்டுற இருக்கட்டுமே நீ போய் பெரியவளை பாரு" என்று அவளை உள்ளே அனுப்பி விட்டு, "அவ கிடைக்கிற மா நீ இன்றைக்கு காலேஜ் எல்லாம் போக வேண்டாம்" என

"அச்சானா அச்சா தான் சரி என் கிட்ட யாருமே மாப்பிளையை பற்றி சொல்லவே இல்ல நீங்க கூட சொல்லல அச்சா நான் கோபமா இருக்கேன்" என

அவளை சிறு சிரிப்புடன் பார்த்து "உன் கிட்ட சொல்லாமல் நான் என்ன செய்ய போறேன் மாப்பிள்ளை பெயர் கார்த்திக், மித்ரா குரூப் ஆப் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர். கொளச்சல்லே பெரிய குடும்பம். அப்பா விஷ்வாமித்ரன் அம்மா வான்மதி ஒரே தம்பி அவங்க பெயர் ராகவ். மாப்பிளையோட அத்தை சங்கமித்ரா அவங்களுக்கு ஒரே பொண்ணு ரோஷினி" என்ற தந்தையை பார்த்து,

"எவ்வளவு பெரிய குடும்பம் எல்லாரும் ஒன்றா ஜாலியா இருப்பாங்களா... அச்சா எனக்கு கூட இதே மாதிரி இல்ல இதை விட பெரிய குடும்பமா பார்த்து கல்யாணம் கட்டி கொடுக்கணும் சரியா" என்றவளுக்கு தெரியவில்லை அவள் வாழ போகும் குடும்பம் இது தான் என்று.

"அதுக்கு என்னடா உன் கல்யாணத்தை எப்படி பண்றேன் மட்டும் பாரு இந்த ஊரே திரும்பி பார்க்கிறா மாதிரி யாருமே பண்ணாத அளவுக்கு உனக்கு கல்யாணம் பண்றேன்" என்று அவளை அனைத்து கொண்டார். காணும் கனவு அனைத்தும் நிறைவேற முடியுமா.

செல்வி "ஏங்க அவ கூட என்ன வெட்டி பேச்சு, மாப்பிளை வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க எங்க இருக்காங்கனு" என்று அவரை அனுப்பி விட்டு கல்பனாவை பார்த்து "சும்மா இருக்காமல் போய் எதாவது வேலையை பாரு" என்று மீண்டும் ப்ரியங்காவின் அறைக்கு செல்ல,

'எதாவது வேலையா...... கல்பனா எஸ்கேப் ஆகிடு' என்று மெதுவாக தோட்டத்துக்கு செல்ல அவள் செல்லவும் இவர்கள் வீட்டுக்கு முன் இரண்டு கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

சங்கரன் "செல்வி மாப்பிளை வீட்டில் இருந்து வந்துட்டாங்க பாரு" என்ற குரலில் செல்வி பிரியங்காவை பார்த்து "ஒன்றும் இல்லடா டென்ஷன் எல்லாம் ஆகாமல் இரு. நான் வெளியே போயிடு வரேன்" என்று வந்தவர்களை பார்த்து வரவேற்க,

"வாங்க வாங்க" என்று வரவேற்றதும் விஷ்வாமித்ரன் தன் குடும்பத்தை அறிமுகம் செய்ய, சங்கரன் "மாப்பிள்ளை வரவில்லையா" என்று தயக்கமாக கேட்க,

விஸ்வா "கிளம்பற நேரத்தில் முக்கியமான வேலை வந்துடுச்சு அதை முடிச்சிட்டு பின்னாடியே வந்திருவான்" என்னும் போதே சங்கமித்ரா ராகவை பார்த்து "தம்பி வரும் போது வரட்டும் நாம் முதலில் பொண்ணை பார்த்துடலாம்" என அனைவர்க்கும் அதுவே சரியாக பட,

பிரியங்கா வெண்பட்டை தழைய தழைய கட்டி கண்ணில் மெலிதாக மின்னும் ஆர்வமும் உதட்டில் வெட்க புன்னகையும் தன் தாய் கொடுத்த டீ ட்ரேயை கையில் ஏந்தி கொண்டு தேவதையாக வந்தாள்.

சிறிது ராகவ் தன் தமையனுக்கு கால் செய்ய பின் பக்கமாக வர, அங்கே புக்களுள் பூவாக இருந்த கல்பனாவை பார்த்து "வாவ்" என்று ஆச்சிரியமாக பார்த்தான்.

சுமைகள் தொடரும்..... லஷ்மி

எல்லாருக்கும் என்னோட வணக்கம்.... இது என்னோட முதல் கதை பல தவறுகள் இருக்கலாம். தவறை சுட்டி காட்டுங்க அது எனக்கு என்னை திருத்தக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். அதே மாதிரி நல்லா இருந்தால் அதையும் சொல்லிடுங்க அது என்னை இன்னும் ஊக்க படுத்தும். நன்றி டார்லிங்ஸ்
 
உங்களுடைய "சுமப்பேன்
உனைத் தாயாக"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லக்ஷ்மி தாஸ் டியர்
 
Last edited:
Top