Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் :) :)

இந்த பொங்கல் நன்னாளில் ஒரு புதிய கதையின் அறிமுகத்துடன் உங்களின் முன்னே நான் :)

தலைப்பு - சூரியனவனின் ஆழ்கடல்

கதைமாந்தர்கள் - மின்னொளி, அருள்ஜோதி, தர்மராஜ்


வழக்கம்போல இந்த கதைக்கும் உங்களது உற்சாகத்தையும், ஊக்குவிப்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறேன் ப்ரெண்ட்ஸ் :)


இதோ கதையின் சிறு துளி

சூரியனவனின் ஆழ்கடல்

“இதா இந்த கோமிக்க வேல ஏங்கிட்ட வெச்சிக்காத. நாக்க நறுக்கிப்புடுவேன். போனா போவுதேன்னு ஒம்மவன விட நெனச்சா போலீஸுக்கு சொல்லவெச்சிடுவ நீயே?...” அன்னம் பேசியதால் உண்டான கோபத்தில் அவருக்கு மேல் சீறிக்கொண்டு மின்னொளி அன்னத்தின் மேல் பாய பார்க்க,

“இந்தா அவள இழுத்தாந்து உள்ள விடுங்க. ஊரு சிரிச்செது பத்தாதோ?...” முருகைய்யன் மனைவி ராஜாத்தி சொல்லை கேட்டு மகளை நெருங்க திரும்பி தகப்பனை பார்த்த பார்வையில் அப்படியே நின்றுவிட்டார். மீண்டும் அன்னத்தை பார்த்த மின்னொளி,

“ஒம்மவன் வேணுமா? வேணாமா?...” அவளின் அழுத்தம் திருத்தமான கேள்வியில் அன்னத்தின் கோபம் பன்மடங்கானலும் இவளை இப்படியே விட்டுவிட்டு செல்வதா?, இல்லை மகனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டு பிறகு பார்ப்பதா? என யோசனையுடன் நிற்க,

“இது செரிப்பட்டு வராது. ஏலே அமிக்கிணி போய் ஏட்டு வீட்டு கதவ தட்டி கூட்டியாலே...” என்றதும்,

“நீயெல்லா என்னத்த வாழறன்னு பாக்குதேன்டி...” என்று கண்ணீருடன் சொல்லியவர் மகனை பார்க்க தலைகுனிந்து அமர்ந்திருந்தான் அவன். தர்மராஜ்.

“கேட்டியாலே. அந்த கோட்டிக்காரானுவ கூட சேராதன்னேன்...” என அழுதுகொண்டே அவனின் கையில் கட்டப்பட்டிருந்த தாவணியை கழட்டிகொண்டே வசைபாட அவனோ நிமிரவே இல்லை.

விடியல் கொஞ்சம் கொஞ்சமாக தன் வெளிச்சத்தை பரப்பிகொண்டிருக்க ஊரில் இருந்தவர்கள் கூடியிருந்தனர். அழுதுகொண்டே மகனை அழைத்துக்கொண்டு அன்னம் செல்ல போகும் நேரம் மின்னொளியை அவர் பார்த்த பார்வையில் தான் அத்தனை வெறுப்பும், ஆத்திரமும் அலையாய் பெருகியது.

“லே கூட்டாளி வெக்கிதது முக்கியமில்லலே. ஒ சோக்காளி யோக்கியனா இருக்கனும். ப்பே. போயி...” என மின்னொளி எகத்தாளமாய் சொல்ல அவன் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்க்க அந்த பார்வை வீச்சில் வார்த்தை அப்படியே நின்றது.

அழுத்தமாய் பார்த்துக்கொண்டே அவன் செல்ல கூட்டம் மொத்தமும்,

“அன்னம் மவன் எம்புட்டு யோக்கியம்ன்னு நமக்குத்தேன் தெரியுமே. இவ அடங்காக்குதிர. இவக்கிட்ட சிக்கிட்டாம் பாவத்த...” என முணுமுணுக்க,

“படம் பாத்தா பாத்திட்டு கம்முக்கு போவனும். அத்த விட்டு இங்க என்னவே பேச்சு? என்கிட்டே வந்து பேசுங்கல...” மின்னொளி அதற்கும் சத்தமிட கப்சிப்பென்று கலைந்தனர்.

“இதெல்லா நல்லதுக்குன்னு நெனைக்கிதீகளா? மான மருவாதின்னு எல்லாத்தையும் வாங்கிப்புட்டா...” ராஜாத்தி அழ ஆரம்பிக்க அவரை கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் வேகமாய் வீட்டுக்குள் நுழைந்தாள் மின்னொளி.

உள்ளே நுழைந்த வேகத்தில் மீண்டும் வாசலுக்கு வர அங்கே நின்றபடி இவர்கள் வாசலை வெறித்தவண்ணம் நின்றான் அருள்ஜோதி. அவனை பார்த்ததும் உண்டான எரிச்சலுடன்,

“வந்துட்டான் பலகாரச்சீரை தூக்கிட்டு, யார் கேட்டா இவன்கிட்ட?...” என்று அவள் முறைக்க முருகய்யனும் ராஜாத்தியும் என்ன செய்வதென புரியாது விழிபிதுங்கி நின்றனர்.

அருளோ அவள் பேசியதும் அவளுக்கு மேலான கோபத்துடன் வேகமாய் அங்கிருந்து கிளம்ப பதறிப்போயினர் முருகய்யனும், ராஜாத்தியும். அதை ஒருவித அலட்சியத்துடன் பார்த்து நின்றாள் மின்னொளி.



----------------------------------------------------------------------------------------------------

கதையின் பதிவை வாரம் இரண்டு நாட்கள் கொடுக்கிறேன் :) :)

உங்களது கருத்துக்களையும் நிறை, குறைகளையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் :)

வரும் வெள்ளியன்று முதல் பதிவுடன் உங்களை சந்திக்கிறேன் :)
 
உங்களுடைய "சூரியனவனின்
ஆழ்கடல்"-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:
Top