Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி எனக்குப் பிடித்தது ஏன்?

Advertisement

Vetrimathi

Well-known member
Member
முதல் பதிவிலேயே நான் இதைத்தான் சொல்ல போகிறேன் என்று தைரியமாகக் கடைசி அத்தியாயம் முதலில் பதிவிட்டதற்கே ஒரு தில் வேண்டும், அங்கேயே ஷோபா சகோதரி வெற்றிக்கான 50 % படி ஏறிட்டார்கள்,

கணித படத்தில் எல்லா கணக்கும் நாம் எப்படி வேணா போடலாம் அதற்குப் பதில் சரியாய் வரும் இல்ல வராது...

ஆனால் LHS ( இ.ப) = RHS (வ. ப) என்று நிறுவவும் என்ற கணக்கு இப்படித்தான் போடவேண்டும் அப்போதுதான் அதனைச் சரியாய் செய்ய முடியும்..

ஷோபா சகோதரி கதை இரண்டாம் ரகம்... என்ன கதை எழுத போகிறோம் எப்படி எழுத போறம் என்று ஒரு தெளிவான சிந்தனையுடன் எழுதிய கதை..

இந்த கதையை ஒரு துளி கண்ணீர் கூட விடாமல் படித்தேன் என்று யாராவது கூறினால் அது 100 % பொய் என்று அடித்துக் கூறுவேன்..

என்ன இல்லை இந்த கதையில் என்று நினது பார்த்தால் எல்லாமே இருக்கு.
௧) காதல்
௨) பாசம்
௩) நட்பு
௪) தாய்மை
௫) குடும்ப உறவுகள்
௬) இளமை
௭) துரோகம்
௮) கோவம்
௯) சகோதர அன்பு
௧௦) சமூக அவலங்கள்
௧௧) சோகம்/வலி
௧௨) அசுர வதம்....

௧௩) விறுவிறுப்பு...
இப்படி சொல்லிவிட்டே போகலாம்

காதல்:
இந்த கதை முழுவதும் ஆட்சி செய்வது துளசி & மூர்த்தி சார் இருவரின் காதல் எப்படிப் பட்ட காதல், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத காதல்... தன் இணையை எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் காதல்....

இதை எல்லா விதத்திலும் & எல்லா நிலையிலும் ஷோபா சகோதரி அருமையா சொல்லி இருக்கிறார்கள்,

கிராமத்தில் பரட்டை தலையுடன் கண்ட போதும் சரி, அவலங்களுக்கு இடையில் கோமளை கண்ட போதும் சரி கொஞ்சம் கூட மாறாத காதல் மூர்த்தி சார்..

அவளை அங்கு இருந்து மீட்டது மட்டும் அல்லாது அவளின் மன போராட்டத்திலிருந்தும் மீட்டு, அவன் மேல் அவள் கொண்ட காதலையும் ஊழிக் கால கடல் பிரவாகம் (சுனாமி) போல் கரைகளைக் கடந்து அவனைச் சேரும் அளவிற்கு அவள் மீது காதல் செய்த மூர்த்தி சார் என்ன வென்று சொல்வது...

இந்த கதையில் இன்னொரு காதல் மூர்த்தி சார் காதலுக்கு நிகராக சொல்லக் கூடியது மாசியின் கோமல் மீதான காதல்.. என்னடா இத போய் இப்படி சொல்லுகிறேன் என்று பலர் நினைக்கலாம் ஆனால் என் கருது இதுதான்..

மாசி காதலை நினைக்கும் பொது எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகின்றது

ஒரு ஊரில் அம்மா & 2 பருவமடைந்த மகள்கள் வாழ்ந்து வந்தனர், ஒரு நாள் தாய் இறந்து விட்டார், அவரின் இறப்பிற்குத் தப்பு வைத்தனர் பெரிய மகளுக்குத் தப்பு அடித்தவன் மேல் கண்டதும் காதல் வந்து விட்டது.. எல்லா காரியமும் முடிந்து விட்டது அவளுக்கு அவன் பேர் ஊர் என்று எதுவுமே தெரியாது ஆனால் அவனைக் காண வேண்டும் எப்படியாவது அவனிடம் தன் காதலைக் கூறி சேர வேண்டும் அது மட்டுமே அவளுக்கு முக்கியம் அதற்காக அவனைக் காண வேண்டும் எப்படி என்று தான் தெரியாமல் கடைசியாக அதற்காக தன் தங்கையைக் கொன்று விடுகிறாள்..

இப்போது புரிகிறதா மாசியும் அப்படித்தானே கோமளை காணவேண்டும் எப்படி அதற்கு அந்த மனித மாமிசம் தின்னும் கூட்டத்திற்குச் சென்று வர வேண்டும் என்ற ஒரே கஞ்சனத்திற்காகப் பல பெண்களின் வாழ்க்கையைத் தெரிந்தே நாசம் செய்துள்ளான், அவன் செய்கையின் ஆணிவேர் அவனின் காதல் மட்டுமே, எவெரி திங் ரைட் இந்த லவ்...

இது மட்டும் இல்லாமல் செல்வம் & நந்தினி காதல் நிறைய அயுத்தம சொல்ல வில்லை என்றாலும் அழகாகச் சொல்லி இருப்பார்கள் ரசிக்கும் படி.....

பாசம்:
பாசம் என்றதும் முதலில் மனதிற்கு வருவது மூர்த்தி & தங்கம் பாசம் தான், மூர்த்தி தாய்மாமன் & அக்காள் மகளாக ஒரு இடத்திலும் தெரியவில்லை என் கண்ணுக்கு, என் கண்ணுக்கு ஒரு தாய் & சேய் அன்பு மட்டுமே தெரிந்தது, தன் குட்டியை வயிற்றில் சுமக்கும் கங்காரு போல எப்போதும் அவன் முதுகில் தொங்கிக்கொண்டு திரியும் ஒரு செல்லம்..

கருப்பன் & துளசி பாசம், கருப்பம் முதலில் மூர்த்தி வீட்டைச் சேர்ந்தது என்று நினைத்தேன், பிறகுதான் தெரிந்தது அது துளசியின் தாத்தா வீட்டில் வளைந்தது என்று..

ஏன் துளசி & பிஸ்கெட் சாப்பிடும் காக்கா கூட பாசத்தில் சேர்க்கலாம்..

தாய்மை:
மூர்த்தி & பானு பாசம் தமக்கை & தம்பி என்று இல்லாமல் தாய் & தனயன் என்ற அளவிற்கு அவ்வளவு அழுத்தும் & அன்பு, பானு பாசத்துக்கு எடுத்துக் காட்டாக சொல்லவேண்டும் என்றால் தன் மகள் நந்தினி தாய்மாமன் வேண்டும் என்று தற்கொலை செய்யத் துணிந்த போதும் மூர்த்தி துளசியை விரும்புகிறேன் என்று தெரிந்ததும் தன் மகளை விட தன் வளர்த்த மகன் உயர்வாக எண்ணி ரயில் ஏறுவது....

பானு தான் பெற்ற மகனான மணி யை விட மூர்த்தியை தன் மூத்த மகனாக என்னும் அந்த தாய்மை....

மூர்த்தி தங்கத்தில் மேல் இருப்பதாய் கூட பாசத்தைத் தாண்டி தாய்மை என்று கூறலாம். தங்கம் பிறந்த உடன் அவன் வாங்கியதும் அவன் உணர்ந்தது தாய்மையைத் தான்...

நட்பு:
சத்தியன் & மூர்த்தி நட்பு என்ன ஒரு அற்புதம்.. தன் திருமணம் இருந்த பொழுதும் மூர்த்தியாக மும்மையில் அவன் திரிவது, துளசி டெல்லியில் அவள் சித்தியின் பிடியில் மாட்டிக்கொண்டால் என்று தெரிந்த உடனே மும்பையிலிருந்து டெல்லி விரைவது என்று பலவற்றைச் சொல்லலாம். எனக்கு சத்தியன் & மூர்த்தி இருவராகத் தெரியாமல் சத்தியமூர்த்தி என்று ஒருவராகத் தெரிந்தார்கள்..

அடுத்து செல்வம் & துளசி நட்பு இவர்களுக்குச் சிதையில் மைத்துனன் & மைனி என்ற உறவினை தாண்டி ஒரு உன்னதமான நட்பு தெரிந்தது. அதனால் தான் திருமணத்திற்க்கு இரண்டு நாள் இருக்கும் பொழுது அவனை நம்பி அந்த இரவில் அவனுடன் தனியாகச் சென்றது...

இளமை:
துளசி & அவளுடைய கல்லூரி நண்பர்கள், அவர்கள் செய்யும் சேட்டை, துளசி அந்த விடுதியில் செய்யும் அலப்பறை, அவர்கள் ஒன்றாக அடுமனையில் செய்யும் குறும்பு, கல்லூரி ராக்கிங் என்று கல்லூரி பாகம் முழுவதும் ஒரே இளமை & துள்ளல் தான்....

மூர்த்தி & துளசி திருமணம் ஒரு அருமையான கொண்டாட்டம் என்று கூறலாம்.

குடும்ப உறவுகள்:
சத்தியன் & அவன் குடும்பம் ஒவ்வொருத்தரும் மற்றவர்கள் மேல் வைத்துள்ள பாசம். அந்த குடும்ப ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்று கூறிய விதம்.

துரோகம்:
நமது சமூகத்தில் பெற்றோர் அன்பு சரியாகக் கிடைக்காமல் இருக்கும் இருக்கும் குழந்தைகள் வாழ்க்கை எப்படிச் சிதைந்து சின்னாபின்னமாகப் போகின்றது என்பதை கோமல் தன் தாத்தா & பட்டி இழந்த பிறகு டெல்லியில் பாசத்திற்காக ஏங்கி கவுரவ் போன்ற குள்ள நரிகளின் துரோகத்தில் வாழ்க்கையைத் தொலைகின்றார்கள் என்பதைக் கூறியுள்ளது.

ஒரு பெண்ணின் மனதைப் பல வகையில் களைத்து தன் வீட்டை விட்டு ஓடி வரும் அளவிற்கு அவள் அறியாமல் ஏமாற்றி அவளைத் திருமணம் என்ற ஒரு பொய்யான நம்பிக்கை கொடுத்து அதன் பிறகு அவன் செய்தது எல்லாமே துரோகம் மட்டுமே..

அவனுக்கு விபத்து என்று நாடகம் ஆடி கொடுமையைச் செய்யத் துணிகின்றான்.. இப்படி எத்தனை பெண்கள் ஏமாற்றப் பட்டு வாழக்கையை தோய்கின்றனர்.. இருந்தும் இன்னும் காதல் என்ற பெயரில் கயவர்கள் இடம் கன்னிகள் ஏமாறத்தான் செய்கின்றனர்.

துளசியின் சித்தி செய்ததும் துரோகம் தான்.. ஆனால் எனக்கு அவளை விட ராஜன் மேல் தான் அதிக கோவம் எனக்கு, அவர் செய்த துரோகம் தான் எல்லா வற்றுக்கும் விதை என்று கூறுவேன், துளசி விசயத்தில் அவர்தான் முதல் குற்றவாளி...

கோவம்:
மணி மூர்த்தியின் மீது கொண்டதை கோவம் என்று சொல்லலாம், எல்லா வற்றிலும் மூர்த்தி அடுத்ததா அவன் என்ற பொழுது, தனக்குக் கிடைக்கவேண்டியது தாக்கு கிடைக்காத போதுகூட வருத்தம் மட்டுமே தோன்றும் ஆனால் அது அடுத்தவர்க்குக் கிடைக்கும் பொது தோன்றுவது தான் கோ
வம்...
மணி போன்று தடம் மாறியவர்கள் பலர் இந்த உலகில்.

சோகம்/வலி:
கோமல் கயவர்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு பல பருந்துகளால் வேட்டையாடப்படும் வெண்புறாவாக.. அந்த பதிவுகள் மொத்தமே ஒரே சோகம் & வலிகள் நிறைந்தவை.. நான் படிக்கும் போதே ஷோபா சகோதரியிடம் விரைவாக முடிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.. அவள் படும் கொடுமைகளைப் படிக்கும் போதே மனது கூறு போட்டுவிட்டது. மகாநதி படத்தில் ஓர் அளவிற்குக் கூறி இருப்பார்கள் ஆனால் இவ்வளவு தெளிவாக ஷோபா சகோதரி கொடுத்தது ரொம்ம ராவா இருந்தது..

அதோடு மூர்த்தி துளசியை விட்டுச் சென்ற பிறகு மருத்துவமனை காட்சிகள் வழிகளில் உச்ச பட்சம்..

சகோதர அன்பு:
செல்வம் தன் அண்ணனைத் தனது ரோல்மாடல் கதாநாயகனாகக் கருதுவது.. அண்ணன் பேச்சிக்கு மறுத்துக் கூறாதது, மூர்த்தி அண்ணன் ஒவ்வொரு முறை அவன் வரும் போதும் அவனுக்காக ரயில் நிலையத்தில் காத்திருப்பது..

துளசியின் தம்பி..அதிகமாக அக்காவுடன் இல்லை என்றாலும் அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்று அவன் பாசம்...

சமூக அவலங்கள்:
இந்த கதை முழுவதுமே பெண் குழந்தைகள் & பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகள், வன் புணர்வு, சிகப்பு விளக்கு அவலங்கள், ஒரு மந்திரி மகளாகவே இருந்தாலும் பெண்களுக்கு இந்த உலகில் பாதுகாப்பு இல்லை என்று ஆணித்தரமாய் தெரிவித்து மற்றும் இல்லாமல், அது குறைய வேண்டு என்றால்.. ஆண்கள் எல்லோரும் தன் குடும்ப பெண்களைப் போலவே மற்ற பெண்களையும் நினைக்க வேண்டும்...

கெளசிக் போன்ற பெண்களுக்குப் பெண்களே எதிரிகளாக இருக்கும் வரை என்ன வென்று கூறுவது...

குரோதம்/அசுர வதம்....
கதையின் ஆரம்பமே அசுர வதத்தில் தான் தொடங்குகிறது...
தன் வீட்டுப் பெண்களின் மேல் கைவைத்து விட்டார்கள், அழகான மூர்த்தியின் புறாக் கூட்டில் கல் எறிந்தார்கள் என்று தெரிந்த உடனே தன் மனைவியைக் கூட காணாது அதற்குக் காரணமான அணைத்து புல்லுருவிகளையும் பூண்டோடு அழிக்கும் குரோதம் கொண்டு 28
பேர்களை அசுர வாதம்..

விறுவிறுப்பு:
அதற்கு ௦௦ அத்தியாயத்தில் இருந்து இறுதி அத்தியாயம் வரை எங்களை ஒரு பரபரப்புடன் வைத்து இருந்த பெருமை ஷோபா சகோதரிக்கு எப்போதுமே உண்டு...

வலிகளைக் கூட ரசிக்கும் படி அருமையாகக் கொடுத்த சகோதரிக்கு நன்றிகள் பல...
எங்களைச் சிரிக்க அழத் துடிக்க ஆச்சரியப்படச் சினம் கொள்ள எனப் பலதரப் பட்ட உணர்ச்சிகளை எங்களுக்குத் தந்த சகோதரி என்ன சொல்லுவது..

முடிவு என்னவாக இருக்கும் என்று எல்லோரையும் புலம்ப வைத்து கடைசியில் அருமையான நிறைவான முடிவைக் கொடுத்தமைக்கு மேலும் ஒரு பாராட்டுக்கள்

ஒரு அருமையான விருந்து என்றே சொல்லலாம் இந்த கதையை.. இப்படி எல்லாம் ஒருங்கே பெற்ற கதையை யார் தான் வெற்றி பெறத் தகுதி இல்லை என்று கூற மனம் வரும்...

வாழ்த்துகள் சகோதரி உங்கள் எழுத்து பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துகள்....
 

Attachments

  • 1478.jpg
    1478.jpg
    8.6 KB · Views: 0
  • 1485.jpg
    1485.jpg
    13.6 KB · Views: 0
  • 1425.jpg
    1425.jpg
    10 KB · Views: 0
அட்டகாசம்.... கதை reviewக்குள்ள ஒரு குட்டி கதை.

கதை பற்றி கட்டுரை வடுவில் ஒரு விமர்சனம்....

கலக்கல் போங்க
 
அட்டகாசம்.... கதை reviewக்குள்ள ஒரு குட்டி கதை.

கதை பற்றி கட்டுரை வடுவில் ஒரு விமர்சனம்....

கலக்கல் போங்க
எல்லாம் உங்கள் தயவு தான்
 
Top