Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செளந்தர்யாசெழியனின் கூட்டத்திலே ஒரு தனிமை புறா அத்தியாயம் 4

Advertisement

Sowndharyacheliyan

Member
Member
ஹாய் மக்களே,
அடுத்த எபி போட்டாச்சு pls read and share ur comments.


அத்தியாயம் 4


அடுத்த நாள் விடியல் அழகாக விடிந்தது பயணக் களைப்பிலும் புது இடம் என்பதாலும் தூக்கம் வராது இரவு முழுவதும் புரண்டு கொண்டிருந்த பவ்யாவை நடுநிசிக்கு மேல் நித்திரை தேவி அவளை ஆட்கொண்டது.

வெகு நேரம் சென்று உறங்கியவள் சில மணி நேரம் கழித்து கேட்ட மாடுகளின் சத்தத்தில் அவளது தூக்கம் முழுமையாக கலைந்து விட,

இதற்கு மேல் தூக்கினாலும் தூக்கம் வராது என நினைத்தவள் எழுந்து குளியறைக்குள் சென்று முகத்தில் நீரை அடித்து கழுவி மிச்ச தூக்கத்தையும் விரட்டியவள், வெளிவந்து மணி பார்க்க அது 6.00 என காட்டியது.

படுக்கையில் ஆழ்ந்த நித்தரையில் இருந்த தேவாவை ஒரு பார்வை பார்த்தவள் சிறு புன்னகையுடன் வெளியேற,
அதே நேரம் விக்கியும் அறைக் கதவை திறந்துக் கொண்டு வந்தான்.

அவனைப் பார்த்து புன்னகைத்த பவ்யா,"என்ன டா உனக்கும் தூக்கம் வரலையா"எனக் கேட்க,

அவளின் கேள்வியிள் சிரித்தவன், "அப்ப உனக்கும் தூக்கம் வரலையா"?? என அவன் பதில் கேள்வி கேட்க,

உதட்டை பிதுக்கி இல்லை எனும் விதமாக தலையாட்டியவள் 'புது இடம்கிறனால தூக்கம் வரல விக்கி'

எனக்கும் அதே தான் திரும்ப தூங்குனாலும் தூக்கம் வராது, சரி எதுக்கு ரூம் உள்ளயே உக்கார்ந்து இருக்கணும்னு தான் வெளியே வந்தேன், அது சரி நீ மட்டும் தான் வந்திருக்க தேவா எங்க பவி??

என்னன்னு தெரியல டா அவளுக்கு என்னமோ பழக்கப்பட்ட இடம் மாதிரி நல்ல தூக்கத்துல இருக்கா, சரி அவள தொந்தரவு பண்ண வேண்டாம் அவளாவது நல்லா தூங்கட்டும்னு எழுப்பாமா நான் மட்டும் வந்துட்டேன்.

ம்ம்ம்...... அதுவும் சரி தான் வா கீழ போகலாம் என்று விக்கி சொல்ல அவர்கள் கீழிறங்கி சென்றனர். அதுவரை அவர்கள் செல்வதற்காக அவர்களின் பேச்சை அறையின் உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்தான் நரசிம்மன்.

வழக்கம் போல் எழுந்தவன் தனது காலை கடன்களை முடித்துக் கொண்டு வெளியேற போன சமயம் இவர்களின் உரையாடலை கேட்டவன் அமைதியாக உள்ளிருந்துக் கொண்டான்.

அவர்கள் சென்று விட்டதை உறுதிப் படுத்திக் கொண்டு வெளியே வந்தவன்,சற்றும் தாமதிக்காது தேவா இருந்த அறையினுள் நுழைந்து கதவை அடைந்திருந்தான்.

தூங்கி கொண்டிருந்தவளின் அருகில் கட்டிலில் ஒரு ஓரத்தில் அமர்ந்தவனின் காதுகளில் சற்று முன் பவ்யா கூறிய "பழக்கப்பட்ட இடம் " என்ற வார்த்தை மீண்டும் ஒலித்து இவனது உதடுகளில் அழகிய முறுவலை தோற்றுவித்தது.

கழுத்து வரை போர்வையை நன்றாக இழுத்து மூடி முகம் மட்டும் தெரியுமாறு படுத்திருந்தவளை கண்டவனின் விழிகள் ரசனையுடம் அவள் மீது மேய்ந்தன.

"தேவி" என முணுமுணுத்தவனின் கைகள் அவளது கன்னத்தை வருட, அவன் ஸ்பரிசத்தில் அவளது உதடுகள் மில்லி மீட்டர் அளவில் புன்னகையை சிந்தின.

அவளை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு திடீரென அந்த எண்ணம் தோன்ற அவளின் உறக்கம் கலையாதவாறு அவளது போர்வையை கழுத்திலிருந்து சற்று விலக்கியவனின் விழிகள் தனக்கு சொந்தமான பொருளை அங்கு தேடியது.

வெகு நேரம் தேடியும் அவன் விழிகளுக்கு அவன் தேடியது கிடைக்காமல் போக சட்டென்று ஒரு கோபம் உடல் முழுவதும் பரவியதில் அவளது போர்வையை விருட்டென்று முழுவதுமாக உருவி விட்டான்.

அவன் இழுத்த வேகத்தில் பதறியடித்துக் கொண்டு எழுந்தவள் ஒரு நிமிடம் புரியாது விழிக்க,அதுவரையிலும் கோபத்தில் இருந்தவனின் விழிகள் அவள் நெஞ்சம் எனும் மஞ்சத்தில் துயில் கொண்டிருந்த பொருளை கண்டதும் அவனின் இறுக்கம் தளர்ந்து அங்கு மகிழ்ச்சி குடிகொண்டது.

தன் எதிரே நின்றவனை கண்டவளிற்கு வெறுப்பு மேலிட அவனை முறைத்து பார்த்தவள்,
அவனின் பார்வை தன் மீதே இருப்பதை உணர்ந்து அவன் விழிகள் சென்ற திசையில் தன் பார்வையையும் செலுத்தியவளுக்கு,

அவனின் மகிழ்ச்சிக்கு காரணம் பிடிபட்டது. அவன் தன்னை கண்டு கொண்டதை எண்ணி அவமானம் மேலிட,

அவன் கையிலிருந்த போர்வையை வெடுக்கென்று பிடுங்கி முழுவதுமாக தன்னை முன்பு போல் மறைத்துக் கொண்டவள்,
"ஏய்" அறிவில்ல உனக்கு?? இப்புடி தான் ஒரு பொண்ணு தனியா இருக்குற ரூமூக்குள்ள வருவியா??

வரும்போது கதவ தட்டிட்டு வரணும்கிற மேனர்ஸ் கூடவா இல்ல இடியட்! "வெளிய போடா" என தனது ஒட்டு மொத்த கோபத்தயும் அவன் மீது இறக்கியிருந்தாள்.

அதுவரை அவளை ரசித்து கொண்டிருந்தவன் அவளின் மரியாதை அற்ற விளிப்பில் நொடியில் மகிழ்ச்சி மறைந்து சினம் குடி கொள்ள அவளை அழுத்தமாக பார்த்தவன்,

சின்ன குழந்தைகள்ள இருந்து எல்லாரும் எழுந்திரிச்சுட்டாங்க! இன்னும் என்ன உனக்கு தூக்கம் வேண்டி இருக்கு ?? எழுந்து கீழ வா என்றவன் ஏதும் பேசாது கதவருகில் செல்ல,

நீ சொன்னவோடனே நா கேக்கணுமா?? என சிலுப்பியவள் மீண்டும் படுத்துக் கொள்ள,

அவளின் செய்கையில் தனது கோப விழிகளை அவள் மேல் படர விட்டு
அசையாது அவளை பார்த்தப்படி நின்றவனின் பார்வையில் அவளுக்கு உள்ளூர பயம் எடுத்தாலும், வெளியே காட்டாது அசையாது படுத்திருந்தாள்.

சில நிமிடங்கள் பொறுமை காத்தவன் அவள் எழவில்லை என்றதும் வெளியே சென்று சிறிது நேரத்தில் திரும்பியவன்,

தன் கைகளில் மறைத்து வைத்திருந்ததை அவளின் போர்வையின் அருகில் வைத்து விட்டு சற்று தள்ளி நின்றுக் கொண்டான்.

அவன் அருகில் வருவது தெரிந்தாலும் கண்களை இறுக மூடி படுத்திருந்தவளின் தோள்களில் சில நொடி கழித்து சொரசொரப்பாக ஏதோ உரசுவதை உணர்ந்தும் விழி திறவாது படுத்திருந்தாள்.

மீண்டும் மீண்டும் அதே உணர்வு ஏற்படுவதை உணர்ந்தவளின் கைகள் அனிச்சை செயலாக தோள் பட்டையை தொட்டுப் தடவியது.

தடவியவளின் கைகளில் வழுவழுப்பாக ஏதோ தட்டுபட,
"என்ன இது கொழகொழன்னு ஒரு மாதிரி இருக்கு" என யோசித்தவள் மெல்ல போர்வையை விலக்கி விட்டு தனது தோள் பட்டையை ஆராய்ந்தவள்,

அங்கு ஒய்யாரமாக ஒரு தவளை குட்டி அமர்ந்திருப்பதை கண்டவள் அடுத்த நிமிடம் ஆ..ஆஆ..... என்று கத்த முயன்றவளின் குரலை தனது கைகள் கொண்டு அவள் வாயை மூடி வெளிவராது செய்திருந்தான் அவன் நரசிம்மன்.

தோள் பட்டையில் இருந்த தவளை மெல்ல தாவி தாவி வந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ந்தவள் அதனை தட்டி விட போக அதற்கும் வழி இல்லாது தனது மற்றொரு கையால் அவளின் இரு கைகயையும் வளைத்து பிடித்து கொண்டான்.

அவனை முறைத்துப் பார்த்தவள் பின் தவளையை பார்க்க அது அவள் கழுத்திற்கு வந்திருந்தது.

சகதியில் நன்றாக சொகுசாக உறங்கி கொண்டிருந்ததை அப்படியே எடுத்து வந்திருப்பான் போலும் அதனை பார்க்கவே அருவெருப்பாகவும் உமட்டிக் கொண்டும் வந்தது தேவாவிற்கு.

பத்தாதிற்கு அது தனது நாக்கை நீட்டி அவளின் கன்னத்தை ருசி பார்க்க முயன்றுக் கொண்டிருந்ததை கண்டு அரண்டவள், அவனை பார்வையினாலே தவளையை தட்டி விடுமாறு இறைஞ்ச,

அவளின் கெஞ்சலய் உணர்ந்தவன்,
"என்ன? தவளைய எடுத்து விடணுமா" என்று கேட்டவனிடம்,

"ஆமாம் ஆமாம்" என தனது தலையை உருட்டி அவனின் கேள்விற்கு பதில் அளித்தாள்.

அவளின் தலை உருட்டலில் சிரித்தவன், "சரி அப்ப ஒரு டீல் வச்சிக்கலாம் தவளைய தட்டி விடணும்னா நா சொல்றத நீ கேட்கணும், அப்புடி கேட்குறேன்னு சொன்ன நா அத எடுத்து விடுறேன் என்க,

"எந்த நிலமையில டீல் பேசுறான் பாரு!! இவனா" என பல்லை கடித்தவள் 'கேட்க மாட்டேன்' என்பது போல் அவள் தலையை இடம் வலமும் ஆட்டி தனது சம்மதமின்னையை காட்ட,

ஓஓ..., அப்ப என்னாலயும் தவளைய எடுக்க முடியாது என்றவன் அவளை பார்த்தவாறு நின்றுக் கொண்டான்.

தோல்வியை தழுவினாலும் விடாது தனது முயற்சியினால் அவளின் கன்னத்தை தனது நாவினால் ருசி பார்த்து அதில் வெற்றியும் கண்டிருந்தது அத்தவளை.

அதில் மேலும் அரண்டவள், அவனை பார்க்க அவனோ, தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது போல் அத்தவளையை சுவரஸ்ஸியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க,

வேறு வழியின்று அவளின் டீலிற்கு சம்மதம் சொன்னாள்.

'பேச்சு மாறமாட்டியே' அப்பொழுதும் அவளை நம்பாமல் அவன் கேட்க,

அவனை முறைத்தவள், 'இல்லை' எனும் விதமாக அவள் தலையாட்டினாள்.

பின் அவளை விடுவித்தவன், தவளையை எடுத்து அங்கிருந்து ஜன்னல் வழியாக தூக்கி எறிந்து விட்டு, அவளை பார்க்க...,

இவனை தான் விடாது முறைத்துக் கொண்டிருந்தாள்.

அதனை கண்டவன் 'ஓய்.., என்ன டி முறப்பு..,? ஒழுங்கா போய் ப்ரஸ் ஆகிட்டு இன்னும் பத்து நிமிஷத்துல கீழ இறங்கி வர..., வரணும்...., தட்ஸ் பைனல்( That's final)

நா போன அப்பறம் திரும்ப தூக்கலாம்ணு நினச்சு உன் டகால்ட்டி வேலைய காட்டுண??

இப்ப தவளை விட்ட எனக்கு பாம்ப.., விட ரொம்ப நேரம் ஆகாது.., என்று அவன் மிரட்டி விட்டு சென்று விட,

இரண்டாவது தடவையாக அவனிடம் தோற்ற இயலாமையில் அவள் கண்கள் கண்ணீரை சுரந்தன,

பின் நேரமாவதை உணர்ந்து குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

"பாட்டி நீங்க இந்த ஷோபாவுக்கு நடுவுல உக்காந்துக்கோங்க, சொக்கலிங்கம் சாரும் , துரை சாரும் உங்க ரெண்டு பக்கமும் இருக்கட்டும் மத்த ரெண்டு பேரும் ஷோபா கைப்பிடியில உக்காருட்டும் அவுங்க ரெண்டு பேரு பக்கத்துல ஜென்ஸ் இரண்டு பேரு நிக்கட்டும்,

பொண்ணுங்க எல்லாரும் ஷோபாக்கு பின் பக்கம் நின்னுக்கோங்க, குட்டி பசங்க எல்லாரும் ஷோபாக்கு முன்பக்கம் உக்காந்துங்கோங்க என அனைவருக்கும் அவர்கள் அமரும் இடத்தை சொன்னவள்

" பாட்டி எல்லாரும் வந்துட்டாங்களா? போட்டோ எடுத்துருலாமா?? என்ற பவ்யாவின் கேள்விற்கு,

'இல்ல மா இன்னும் எம் பேரனுங்க வரல'??

'அவுங்க எங்க பாட்டி வரச் சொன்னிங்கன்னா சீக்கிரம் பேட்டிய ஆரம்பிச்சரலாம்' என்றான் விக்கி.

என் சின்னப் பேரன கூப்புட்டு வர பெரியவன் போயிருக்கான்ய்யா கொஞ்ச நேரத்துல வந்துடுவாக..,

ஓஓ... சரி பாட்டி என்றவன்,
'பவி! தேவா எங்க? எல்லா ரெடியா' ?..,

அவ இன்னும் வரல, மேல ரூம்ல தான் இருக்கா??

இன்னும் வரமா என்ன பண்ணிட்டிருக்கா என்றவன் தன் மொபைலில் அவளை அழைக்க,

யோசனையில் இருந்த தேவாவை அலைப்பேசி ஒலி கலைக்க, அதனை ஏற்றவள்,

சொல்லு விக்கி!! என்க

என்னாச்சு தேவா இன்நும் வராமா என்ன பண்ணிட்டு இருக்க??

பைவ் மினிட்ஸ் விக்கி வந்துரேன்...,

ம்ம்ம்.... சீக்கிரம் வா என்றவன் போனா கட் செய்து விட,

ஆழ்ந்த மூச்செடுத்து யன்னை சமன் செய்தவள், 'எப்புடி இருந்தாலும் இந்த சிச்சுவேஷன ஹெண்டில் பண்ணி தான் ஆகணும் பி ஸ்ட்ராங் தேவா', என தன்னை தானே தைரியம் மூட்டியவள் கீழிறங்கி செல்ல,

அவள் வருவதை கண்ட மரகதம்,

"எம்மா ! இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அவ்ளோ நடந்த அப்பறமும் திரும்ப இந்த வீட்டுக்கு வருவா??..,

சனியன் ஒழிச்சதுன்னு நினச்சா திரும்ப வந்துருக்கு...., ச்சை..., திமிரெடுத்தவ கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம எப்புடி நடந்து வர பாரு!! என தனது கோபம் முழுவதையும் வார்த்தைகளால் தனது அன்னை வசந்தியிடம் கொட்டினாள்.

ம்ப்ச் மரகதா நீ எதுக்கு வெசனப்படுற?? என்ற தனது அன்னையின் கேள்விற்கு,

எப்புடி மா வெசனப்படாமா இருக்க சொல்லுற இவ வந்ததுல இருந்து இந்த ஆச்சி ஆடாத ஆட்டமால ஆடுது....,
போனாவா அப்புடியே ஒழிச்சு போயிருக்க வேண்டியது தான திரும்ப இவள யாரு வர சொன்னா எனக்கு என்னமோ இவ இங்க வந்ததுல இந்த ஆச்சிக்கும் பங்கு இருக்குமோன்னு தோணுது ம்மா?

இருக்கலாம் மரகதா எனக்கு அந்த சந்தேகம் இருக்கு பாக்கலாம் இவ இங்க வந்திருக்கிறது திருவிழாவ பேட்டி எடுக்கதான்னு மதினி சொன்னாவ, ஒரு வாரம் பொறுத்து இருந்து பார்ப்போம் இப்ப நீ அமைதியா இரு என்று அவர் அதட்ட,

சரி ம்மா...., உள்ளுக்குள் கடுகடுத்தாலும் வெளியே ஏதும் காட்டி கொள்ளாது நின்றாள்.

பிச்சை நேற்று இரவே அனைவரையுன் அழைத்து தேவாவின் வருகையையும் அதற்கான காரணத்தையும் கூறிவிட,
அப்போதிருந்து மரகதத்தின் கடுப்பு ஆரம்பமாகி விட,

நேற்றிலிருந்து விடாது தேவாவை திட்டி தீர்ந்தவளாய் அவளின் அன்னை அதட்டி அமைதியாக்கிட,
கொஞ்சம் அடக்கினாள்.

தற்பொழுது தேவான்ஷியை கண்டதும் மீண்டும் அவளது கடுப்பு தாறுமாறாக எகிறி திட்டி தீர்த்தவளய் வேறு வழியின்று அதட்டி அடங்க வைத்தார் அவளின் அன்னை வசந்தி, பின் இவள் பேசுவது யார் காதிலாவது விழுந்து வைத்து விட்டால் வம்பல்லவா!

தேவா, விக்கி, பவ்யா மூவரும் தங்களது வேலைகளை செய்துக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் நரசிம்மனும் அவனது தம்பியும் உள் நுழைந்தனர்.

வந்தவனை ஒரு பார்வை பார்த்த தேவா பின் வேலையில் கவனமானாள்.
காலையில் அவனை அவளின் அறையில் பார்த்ததோடு சரி, அவன் மிரட்டி விட்டு சென்ற பின் கீழிறங்கியவளின் கண்களில் அகப்படமால் இப்போது தான் பார்க்கிறாள்.

அவளை பதில் பார்வை பார்த்தவன் ஏதும் பேசாது சென்று விட்டான்.

வாய்யா! வாய்யா! தமிழு என்ற பிச்சையின் வரவேற்பில் அந்த தமிழாகபட்டவன் அவரை நோக்கி சிறு புன்னகை ஒன்றை சிந்தி விட்டு அவர் இருகில் சென்று தன் அன்னை நீட்டிய மோரை குடித்து விட்டு அமர்ந்தவனை அனைவரும் சூழ்ந்து நலம் விசாரிக்க ஆரம்பிக்க,

போதும் எல்லாரும் அவன விடுங்க, நீ போய் கொஞ்சம் பிரஷ் ஆகிட்டு வாடா!!
உனக்காக தான் இவுங்க காத்துட்டு இருக்காங்க என்ற நரசிம்மனின் பேச்சிற்கு அனைவரும் கலைந்து செல்ல ,

சிறிது நேரத்தில் தமிழும் பிரஷ் ஆகிவிட்டு வந்து விட, அவர்களின் பேட்டி ஆரம்பமானது.

பாட்டி நா முன்னாடி சொன்ன மாதிரி எல்லாரும் உக்காருங்க, 'விக்கி' நீ முதல்ல அவங்கள ஒரு குரூப் போட்டோ எடுத்திடு,

அப்றம் தேவா இன்டர்வீயூ பண்ணும்போது தனி தனியா எல்லாருக்கும் ஜூம் வச்சிடு என்ற பவ்யா சற்று தள்ளிருந்த ஷேரில் அமர்ந்துக் கொள்ள,

அவள் சொன்ன மாதிரி விக்கி முதலில் ஒரு போட்டோ எடுத்து விட, அடுத்து தேவா கேள்விகள் கேட்க தன்னை தயார்படுத்திக் கொள்ள, அதனை வீடியோ எடுக்கும் பணியில் விக்கி மூழ்க,

நீயூஸ் பேப்பரில் போடுவதற்காக அங்கு நடப்பவற்றை கன்டென்ட்டாக ரெடி செய்ய பவ்யா தயராக இருந்தாள்.

விக்கி எல்லாம் ரெடியா?? என கேட்டுக் கொண்டே தனது ஷேர்ட்டின் முனையில் சிறிய மைக்கை மாட்டியவள் அந்த ஷோபாவின் முன் இருந்த குஷன் ஷேரில் தேவா அமர்ந்துக் கொள்ள,

ம்ம்... ரெடி தேவா என்ற விக்கி அனைத்தயும் சரிபார்த்து விட்டு தன் கேமராவை இயக்க இவள் பேச ஆரம்பித்தாள்.

" ஹலோ மக்கள் வெல்கம் டூ நிலா டிவி, நான் உங்கள் தேவான்ஷி எல்லாரும் எப்புடி இருக்கீணங்க, ஹோப் எல்லாரும் நல்லா இருப்பீங்கன்னு நம்புறேன்.

வார வாரம் "ஊரை தேடி" என்கிற நிகழ்ச்சி நம்ம ஒவ்வொரு கிராமம்மா தேடி போய் அங்க நடக்குற திருவிழா மற்றும் அவுங்க பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் நாங்க உங்களுக்கு டெலிகாஷ்(ஒளிபரப்பு) பண்ணோம்.

அந்த வரிசையில இப்ப நாங்க வந்திருக்கிற ஊர் பேரு 'ஆண்டிப்பாளையும்' ஒட்டன்சத்திம் பக்கத்துல இரண்டு மணி நேர பயணத்துல இருக்குற கிராமம். இங்க நாளையில இருந்து திருவிழா ஆரம்பிக்கப் போகுது அத நாங்க எங்க நிலா சேனல் மூலமா உங்களுக்கு டெலிகாஷ் பண்ணப் போறாம், அதுக்கு முன்னாடி இந்த கிராமத்துல தலைமுறை தலைமுறையா கூட்டுக் குடும்பமா இருக்குற பண்ணையார் வீட உங்களுக்கு நாங்க அறிமுகப்படுத்தப் போறோம் வாங்க நிகழ்ச்சிக்குள்ள போகலாம் ".

'வணக்கம் ' என்ற தேவா பிச்சையை பார்க்க,

அதுவரை அவளுக்கு ஜூம் வைத்திருந்த கேமரா பிச்சையை நோக்கி திரும்பியது.

'வணக்கம்' என தனது கைகளை கூப்பி கேமராவை நோக்கி பதில் வணக்கம் வைத்தார் பேச்சி.

உங்க பெயர் சொல்லுங்க? - தேவா,

என் பேரு பிச்சையம்மாள் வயசு எழுபதுக்கு மேல ஆகுது - பிச்சை,

ஓஹை..... எத்தன வருஷமா நீங்க இப்புடி கூட்டுக் குடும்பமா இருக்கீங்க - தேவா,

எங்க மாமனார் காலத்துல இருந்து கூட்டுக் குடும்பமா
இருக்கோம் - பிச்சை,

சரி உங்களுக்கு எத்தன வயசுல கல்யாணம் ஆச்சு? எத்தன பசங்க உங்களுக்கு? உங்களுக்கு கல்யாணம் ஆகும் போது உங்க கணவருக்கு எத்தன வயசு? - தேவா,

எனக்கு பதினாறு வயசுல கல்யாணம் ஆச்சு, அப்ப என் கணவருக்கற இருபத்தி நாலு எனக்கு மொத்தம் அஞ்சு பசங்க - பிச்சை,

இவ்வளவு சின்ன பொண்ணா இருக்கும் போது கல்யாணாமா!!! நீங்க எப்புடி குடும்ப பொறுப்புகள எல்லாம் சமாளீச்சிங்க. - தேவா

அந்த காலத்துல எல்லாம் யாரும்மா வயசு பாத்து கல்யாணம் பண்ணாங்க?
எங்கம்மாக்கு கல்யாணம் ஆகும் போது பண்ணெட்டு வயசு ,எங்க மாமியாருக்கு பதிமூணுல கல்யாணம் ஆச்சு,
சின்ன வயசுல இருந்தே அடுத்த வீட்டுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி போய்டுவேன்னு சொல்லி சொல்லி தான் வளத்தாங்க, அந்த வயசுலயே சமையலும் கத்து கொடுத்தனால எங்களுக்கு அவ்வளவா கஷ்டம் தெரியல - பிச்சை ,

ம்ம்ம்..... உங்க குடும்பத்து ஆட்கள நாங்க அறிமுகம் பண்ணுறத விட நீங்களே பண்ணிங்கன்னா கேக்கவும் நல்லா இருக்கும், ஷோ நீங்களே மக்களுக்கு நேரடியா சொல்லிடுங்க என்று தேவா சொல்ல அதற்கேற்றார் போல பிச்சையும் பேச ஆரம்பித்தார்.

அதன் சாரம்சாரம்,

பிச்சையின் கணவர் பெயர் வீரச்சாமி ,வீரச்சாமியின் உடன் பிறந்தவர்கள் இரண்டு அக்கா, இரண்டு தங்கை என அனைவரும் பெண்கள் இவர் மட்டும் ஆண். எனவே தனது பிள்ளைகளை தன் அக்கா மற்றும் தங்கை குழந்தைகளுக்கு மணம் முடித்து வைத்து தங்களுடனே வைத்துக் கொண்டார். வீராச்சாமியின் அப்பா மற்றும் தாத்தா அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்தனர், எனவே, வீராச்சாமியும் அதனை பின்பற்றினார், அவர் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட, தற்போது பிச்சை தனது கணவரின் ஆசையை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்.

வீரச்சாமி - பிச்சையம்மாள் தம்பதியருக்கு மூன்று ஆண் மற்றும் இரண்டு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள்.

மூத்தவர் பெயர் விசாலாட்சி அவரின் கணவர் பெயர் திருமூர்த்தி ( வீரச்சாமியின் அக்காவின் மகன் ) சொந்த அத்தையின் மகனையே திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒற்றை மகன் பெயர் தீலீப் பழநியில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜராக இருக்கிறான். இவனின் மனைவி பார்வதி. இவர்களக்கு ஆறு வயதில் யாழினி என்ற பெண் குழந்தை உள்ளது.

வீரச்சாமி - பிச்சையின் இரண்டாவது புதல்வன் சொக்கலிங்கம் - லக்ஷ்மி (திருமூர்த்தியின் தங்கை) பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொண்டனர். இவர்களுக்கு இரு தவப் புதல்வர்கள் மூத்தவன் நரசிம்மன் (வெஃட்னேரி) மருத்துவராக இருப்பவன், இரண்டாமவன் தமிழரசு(பல்) மருத்துவராக பழநியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிகிறான்.

வீராச்சாமி-பிச்சையின் மூன்றாவது புதல்வன்,
ராஜதுரை - அமுதா (வீரச்சாமியின் இரண்டாவது அக்காவின் மகள்) இவர்களுக்கு இரு பிள்ளைகள் மூத்தவள்
வேதவள்ளி - ராஜேஷ்(ஒட்டன்சத்திரத்தில் ஆடிட்டராக இருப்பவன்) இவர்களுக்கு ஹரிஸ், கிரிஷ் என இரட்டை செல்வங்கள்.
இரண்டாவது வருண் (பொறியியல் பயில்பவன்).

பிச்சையின் நான்காவது புதல்வி தேவகி - பாண்டிதேவன்(வீரச்சாமியின் தங்கையின் மகன்) இவர்களுக்கு ஒரே ஒரு புதல்வி தமயந்தி(கல்லூரியில் முதலாமாண்டில் இருப்பவள்).

வீரச்சாமியின் கடைசி புதல்வன் ஆறுமுகம் - செல்வி( வீரச்சாமியின் கடைசி தங்கையின் மகள்) இவர்களுக்கு ஆதிரா
(எட்டாம் வகுப்பு) அருள் (ஆறாம் வகுப்பு )என இரு பிள்ளைகள்.

வசந்தி(வீரச்சாமியின் ஒன்றுவிட்ட சித்தாப்பாவின் மகள்) வசந்தியின் பத்து வயதில் தாய் ,தந்தையர் இருவரும் இறந்து விட அவரின் அம்மா வழி பாட்டியின் பொறுப்பில் வளர்ந்தார்.

அவர் பாட்டியின் முதுமை காரணமாக வசந்திக்கு பதினேழு வயதில் திருமணம் முடித்து விட , அவரின் முப்பது வயதில் வசந்தியின் கணவர் காசநோயினால் இறந்து விட,

புகுந்து வீட்டு ஆதரவும், பிறந்த வீட்டு ஆதரவும் இன்றி ஏழு வயது மரகதத்துடன் நிற்கதியாக இருந்தவரை வீராச்சாமி அரவணைத்துக் கொண்டார். தமயந்திக்கும், மரகதத்திற்கும் ஒரே வயது இருவரும் (பழநியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கின்றனர்).

பிச்சை அவர் குடும்பத்தை அறிமுகப்படுத்தியவுடன் அடுத்து சில பல கேள்விகளை தொடுத்த தேவா அத்துடன் பேட்டியை முடித்துக் கொள்ள,
அடுத்தடுத்து அவர்கள் மூவரையும் அவர்களது வேலைகள் இழுத்துக் கொள்ள அதில் மூழ்கி விட்டனர்.

கடைசியாக விக்கி இன்னுமொரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வீட்டினர் அனைவரும் கலைந்து சென்றனர்.

தன்னை கடந்த சென்ற தமிழரசின் ஓர் பார்வைக்காக தேவா அவன் முகத்தையே விழி எடுக்காது அவனை
தனது விழிகளால் தொடர,

அவளின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்த தமிழின்
முகம் இறுக அவளை பார்க்காது தனதறைக்கு சென்று விட்டான்.

இதனை எதிர்பார்த்திருந்தாளும் சிறு நம்பிக்கை அவளிற்கு இருந்தது அவன் தன்னை பார்ப்பான் என்று,
ஆனால் அந்த நம்பிக்கையை தனது செயல்களால் சுத்தமாக துடைந்தெறிந்து விட்டு சென்றவனை கண்டவளின் முகம் வாடியது.
 
Semma sis.....anga anga...spelling mistake .....word mistake iruku sis....
 
Top