Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

டிங் டாங் காதல் - 7

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
நெடுஞ்சாலையை தாண்டி இரண்டு பக்கமும் மரங்களால் சூழப்பட்டிருந்த அந்த சாலையில் மிதமான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது அந்த சுசூகி அக்சஸ் 125. மொத்தமும் தென்னை மரங்கள், வாழை மரங்கள் மட்டுமே இருக்க அந்த கிளை சாலையில் ஆங்காங்கு ஓங்கி உயர்ந்திருந்த புளியமரங்களும் வாரி வாரி காற்றை கொடுத்தது.

"இது தான் காலை பொழுதா? இவ்ளோ வெள்ளன நான் எந்திரிச்சு மூணு வருஷம் ஆச்சு. கொடும பண்றீங்க மை லார்ட்" மொத்தமாய் வண்டியை ஓடிக்கொண்டிருந்த வைஷ்ணவி மேல் சாய்ந்து புலம்பினாள்.

"வாழ்க்கைல முன்னேறுற எண்ணமே இல்ல, வெட்டி முண்டம் வீணா போன தெண்டமே"

"எட்டு மணிக்கு வர சொல்லிட்டு எட்டு மணி வரைக்கும் தூங்குனவங்க எல்லாம் முன்னேற்றம் பத்தி பேசலாமா மை லார்ட்?"

"பாவம் நைட் என்ன கழட்டுற வேலை இருந்துச்சோ விடுங்க ஷெர்லின்... சரி வண்டி ஓட்டுரியா?" - வைஷ்ணவி

"கருமம் அதெல்லாம் எவன் பண்ணுவான்? இப்டி சொகுசா பின்னாடி ஒக்காருறோமா வேடிக்கை பாத்தோமா... கிராஸ் ஆகுற கார் குள்ள இருக்க பையன சைட் அடிக்கிறோமான்னு இருக்கனும்" - ஷெர்லின்

"இப்டியே பேசிட்டே இரு அந்த கார்குள்ள உருட்டிவிடுறேன்... ச்ச இப்டியா போற வர்ற பசங்க எல்லாரையும் பாக்குறது... கூச்சமா இல்ல" - வைஷ்ணவி

"அதெல்லாம் எதுக்கு அசிங்கமா வச்சிக்கிட்டு... ஏன் லார்ட் இந்த வாழை தோப்புல பாம்பு அதிகமா வரும்ல?" தாங்கள் செல்லும் பாதையில் நீண்டு கொண்டே சென்ற தோப்பை பார்த்து கேட்டாள்.

"வாழை தோப்புல பாம்பு வராம, பல்லியா வரும்" - வைஷ்ணவி "அப்றம் அத எப்படி வெரட்டுவாங்க?" - ஷெர்லின்

"பூச்சி மருந்து இல்லனா கொசு மருந்து அடிச்சு விட்டா வராது மை லார்ட்" வண்டியை ஓடிக்கொண்டிருந்த ஸ்வாரஸ்யத்தில் என்ன பேசுகிறோம் என்பதையே தெரியாமல் வைஷ்ணவி உலர அதையும் அந்த சிறு பெண் நம்பிவிட்டாள்.

"அடேங்கப்பா... ஏன்லா வைஷு... இதுக்கு தான் பூச்சிமருந்து அடிக்க கூடாதுன்னு சொல்றாங்களா? பாம்பையே கொல்லுது பாரேன்"

ஆச்சிரியமாக கேள்வி எழுப்பியவள் திடீரென, "ஐயையோ வைஷு பாம்பு..." ஷெர்லின் அலற, வண்டியை மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த வைஷ்ணவிக்கு பயம் மலையளவு உருவாகியது, "என்னது பாம்பா-ஆஆ" கைகளை முற்றிலும் தளர்வுற்று வண்டியிலிருந்து பிடிமானமும் தளர அந்த இரு சக்கர வாகனம் மொத்தமாய் வைஷ்ணவியின் கட்டுப்பாட்டை இழந்து அவர்களுக்கு முன்னாள் சென்றுகொண்டிருந்த ஒரு காரின் மீது மோதி இருவரும் சாலையிலே சரிந்தனர்.

அவர்கள் நல்ல நேரம் அந்த நேரத்தில் கூட்டம் பெரிதாக இல்லை, அந்த காரின் வேகமும் சற்று குறைவே. விழுந்த வேகத்தில் ஷெர்லின் கைகளில் ஆங்காங்கு சிராய்ப்பு இருக்க, வைஷ்ணவிக்கு தான் அடி சற்று அதிகம், மணிக்கட்டில் ரத்தம் கூட வழிந்தது, அதுவும் இல்லாமல் காலில் வண்டி விழ சற்று வலி இருந்தது.

வண்டிக்கு அடியில் சிக்கிக்கிடந்த வைஷ்ணவியை பார்த்து தன்னுடைய வலியை மறந்து ஷெர்லின் சிரித்துக்கொண்டிருக்க, "ஏலா என்ன இந்த சிரிப்பு சிரிக்கிறவ? சட்டு புட்டுன்னு எழுந்து கையை பிடிச்சு தூக்கி விடு டீ"

முகத்தில் வலியின் ரேகை அப்பட்டமாக இருந்தது. "எதுக்குடி நீ வண்டிய கீழ விட்ட?"

"நீ தான டீ பாம்பு-னு சொன்ன?"

காரிலில் இருந்து துரிதமாக இறங்கி வந்த ஒருவன் இரவர்கள் இருவரையும் கோபத்துடன், "ஏன்மா வண்டிய ஓட்டுறப்ப கண்ண என்ன பொடனிலையா வச்சிருந்த?"

"யோவ் பேசிட்டு இருக்கோம்ல என்ன நடுல வந்து? பேசாம வண்டிய தூக்கிவிடு" ஷெர்லின் அந்த மனிதனை ஆணையிட அவன் கோவத்தில் முகம் சிவந்தான்.

"நீ என் கார்ல வந்து மோதிட்டு..."

"ஆமா பாம்புன்னு சொன்னேன் தான்... பாம்பு நடுல வந்தா என்ன பண்ணுவன்னு பாக்க அப்டி சொன்னேன்..." எழுந்து நின்ற ஷெர்லின், வைஷ்ணவி மீதிருந்த வண்டியை தூக்கிவிட்டு வைஷ்ணவிக்கும் உதவினாள்.

"பொறுடி ஒரு நாள் லாரி-கு உள்ள வண்டிய விடுறேன்"

"சேர்ந்தே சொர்கம் செல்லலாம் மை லார்ட்" இடுப்பை பிடித்துக்கொண்டே ஷெர்லின் பேசினாள்.

"நமக்கெல்லாம் சொர்கம் கெடைக்கும்ன்னு நம்பிக்கை இருக்கா? உன் அண்ணனோட லவ்வ பிரிச்சு விட்டதுக்கே நரகம் தான்டி"

குனிந்து ஷெர்லின் காதில் சன்னமாய், "அவன் வண்டி பெருசா அடி வாங்கிருக்கே ஷெரூ... காசு வேற இல்லையே"

"நானும் பாத்தேன் டீ, அதுக்கு தான் அவனை சைலன்ட் ஆக்கி வச்சிருக்கேன்... வா அப்டியே சண்டையை கண்டினியூ பண்ணலாம்"

உடனே இருவரும் விலகி நிற்க, "ஓ இப்டி காதுல வந்து மன்னிப்பு கேட்டுடா என் கைல பட்ட அடி தான் போய்டுமா... இல்ல இந்த நிக்கிறான் இவனோட கார்ல இருக்க காயம்..." எதை மறைக்க நாடகம் நடக்கிறதோ அதையே ஷெர்லின் வெட்ட வெளிச்சமாக்க அவள் காலை ஓங்கி மிதித்தாள் வைஷ்ணவி.

"ஆஆ..." - ஷெர்லின்

"என்ன என்ன? ஆஅ? கையோட செத்து காலையும் லிஸ்ட்ல சேத்துக்கோ"

"ஏங்க நீங்க அப்றம் சண்டை போடுங்க... என்னோட கார்..."

அவனை பேச விடாமல், "என்ன என்ன... யாரு இங்க சண்டை போடுறது? உன்கிட்ட சொன்னோமாலே நாங்க சண்டை போடுறோம்ன்னு? வைஷு பேபி நாம சண்டையா போடுறோம்?" ஷெர்லின் வரிந்துகட்டி அந்த ஆணிடம் சண்டைக்கு சென்றாள்.

"இல்லையே... என்னங்க ரோடுல சும்மா சுத்துற பொண்ணுங்ககிட்ட தேவையில்லாம சண்டைக்கு வரீங்க?"

வண்டியின் நம்பர் பிலேட்டை பார்த்த ஷெர்லின், "சென்னை நம்பர்... திருநெல்வேலி காரங்களை பத்தி தெரியாதே... கைலயே அருவாளோட சுத்துவோம்... என்னலே அருவாளை பாக்கணும்னு ஆசையா?"

"இப்ப நான் என்ன கேட்டேன்னு இந்த குதி குதிக்கிறிங்க ரெண்டுபேரும்..." அவனுக்கோ கோவம் எல்லையை கடந்தது.

"எங்க ஊருக்கு வந்து எங்களையே கேள்வி கேக்குற அவ்ளோ தில்லு இருக்கா? இன்னிங்க்கு நாங்க யாருன்னு காட்டியே ஆகணும்டியே உனக்கு... நீ எங்கையும் போக கூடாது, இங்கையே இரு நீ நாங்க ஊர்ல இருக்க ஆள எல்லாம் கூட்டிட்டு வர்றோம்... வைஷு வண்டிய எடுடி இன்னைக்கு ஒரு சம்பவம் பண்ணாம விடுறதா இல்ல..."

வைஷ்ணவி திரும்பி விரலை காட்டி எச்சரிக்கை செய்ய கோபத்துடன் அவர்களை நோக்கி அவன் ஒரு எட்டு வைக்க வைஷ்ணவி வண்டியை கிளப்பியிருந்தாள் ஆனால் ஷெர்லின் இன்னும் விடாமல், "மூஞ்சிய பாரு... மூஞ்சியும் மொகரக்கட்டையும்" என்று கூறியது தெளிவாக அவன் காதில் விழுந்தது. வண்டி சில பல மீட்டர்களை தாண்டிய பிறகு தான் மூச்சே வந்தது இருவருக்கும்.

"ஆத்தி... இதோட நாலாவது ஆளு. இனியாவது எவன் வண்டியையும் இடிக்காம போ டீ... இந்த தடவ எஸ்கேப் ஆகிட்டோம். கோடான கோடி நன்றி ஏசப்ப கோட்டான கோடி நன்றி"

"முயற்சி பண்றேன் ஷெர்லின் அவர்களே"

வாக்குவாதமும், பேச்சுகளுமாக இருவரும் கார்த்திக் தெரிவித்திருந்த அந்த இடத்திற்கு வந்து நின்றனர். இன்றோடு கார்த்திக் அவனுடைய ரிசார்ட் கட்டுவதற்கான இடத்தில் பூமி பூஜை போட்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. யோசனையில் உலர்ந்துகொண்டிருந்தவளை அவள் அன்னை மஹேஸ்வரி தான் வேலைக்கு சென்று சிறிது அறிவை வளர்த்துக்கொள்ளுமாறு விரட்டி அடித்தது.

'நீ மட்டும் என்ன பண்ற சும்மா தான இருக்க கூட வா' என்று ஷெர்லினையும் கையேடு வர ஏற்பாடு செய்தாள் அவளை வைத்தே. ஷெர்லின் கார்த்திக்கிடம் சென்று தானும் வரலாமா என்று கேட்க சம்மதித்து இடத்தையும் விளக்கமாக கூறியே அனுப்பிவைத்தான்.

அதன் விளைவு இப்பொழுது அவன் வர கூறியதற்கு அரை மணி நேரம் கழித்து வந்தது. ஆனால் அதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், "ஏன் டீ பேரிக்கா கொட்டை, சரியா இந்த இடம் தானா?" கண்களை சுற்றிலும் அலையவிட்டு தேடினாள் வைஷ்ணவி.

"இதே இடம் தான் டீ பலாக் கொட்டை" இருவரும் நாளா பக்கமும் தேட சரியாக ஷெர்லின் கண்களில் சற்று தூரத்தில் தெரிந்தது அந்த வெள்ளை போர்டு.

"வைஷு அங்க இருக்கு பாரேன்லா" வைஷ்ணவி ஷெர்லினை தாண்டி எட்டி பார்த்தாள்.

பத்து அடி உயரத்திற்கு உயரத்தில் இருந்த ஒரு இரும்பு கம்பில் வெள்ளை நிற பலகை ஒன்று, 'Brooklyn Resort Under Construction'

புரூக்லின் ரிசார்ட் கீழ் இடது பக்கத்தை நோக்கி ஒரு அம்புக்குறி இருக்க அந்த குறி இருந்த பக்கம் மொத்தமும் சிகப்பு நிற ரூபிங் சீட்ஸ் மூலம் மறைக்கப்பட்டிருந்தது.

"வா ஏறு" தோழியை அழைத்தவள் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை அந்த இடத்திற்கு அழைத்துச்சென்றாள். பெரிய தற்காலிகமான இரும்பு கதவு பாதி திறந்திருக்க உள்ளே சென்றவள் இரு சக்கர வாகனங்கள் இருந்த இடத்தில் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி அதை ஆராய்ந்தாள்... அடி எல்லாம் அதிகம் இல்லை ஆனால் சில இடங்களில் கீறல்கள் தெளிவாக தெரிந்தது.

"உன் அண்ணனுக்கு கால் பண்ணி கேளு எங்க இருக்கான்னு" வைஷ்ணவியிடம் அவன் எண் இல்லை, ஷெர்லின் மட்டுமே வைத்திருந்தாள், அதுவும் இல்லாது அவர்கள் முன்னாள் பறந்து விரித்திருந்த அந்த காலி நிலத்தில் பலர் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

"அண்ணா, நாங்க வந்துட்டோம்" "ம்ம்ம் சரி ண்ணா" இணைப்பை துண்டித்து, "இங்க தான் ஏதோ வேலையா போயிருக்காராம். பத்து நிமிசத்துல வந்துடுவார்"

தோழிக்கு செய்தியை கூறி, "இடம் ரொம்ப பெருசா இருக்குல்ல?"

"அத தான் நானும் பாத்தேன்... ஆமா எதுக்கு இவ்ளோ பெரிய இடம்? ஒரு ஹோட்டல் தானே வைக்க போறாங்க?" - வைஷ்ணவி

"தோ வர்றாரு அவர்ட்டயே கேளு" வைஷ்ணவிக்கு பின்னால் கண்ணை காட்டினாள் ஷெர்லின். வைஷ்ணவி திரும்பி பார்க்கும் பொழுது முதுகுப்பையுடன் தன்னுடைய கருப்பு நிற மஹேந்திரா XUV காரில் வந்து இறங்கினான். இவர்களை பார்த்ததும் ஷெர்லினை பார்த்து சிரித்தவன் வைஷ்ணவியை ஒரு பார்வையோடு தீண்டிவிட்டு அப்டியே வேலை செய்பவர்களை பார்வையிட்டது.

இருவரையும் நெருங்கியவன், "சைட் என்ஜினீயர் ஒர்க் தான் மா. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லல?" ஷெர்லினிடம் மட்டுமே ஆணின் பார்வை.

"அப்ப எனக்கு என்ன பிளான் போடுற வேலை தானோ?" வைஷ்ணவி கார்த்திக்கிடம் கேட்டாள்.

எதற்கு சம்மந்தமே இல்லாமல் இதை கேட்கிறாள் என்று கார்த்திக், "என்ன?" என்றான் புரியாமல்.

"இல்ல கேள்வி அவளுக்கு மட்டும் தானே வந்துச்சு அதான் கேட்டேன், எனக்கு பெரிய பதவியோன்னு" இனி ஒரு தரம் என்னை புறக்கணித்து பார் என்று சவால் விட்டது அவள் குரல்.

"இல்ல சித்தாள் எப்டினாலும் வெயில்ல தான் வேலை பாக்கணும் அது தான் கேட்ருக்க மாட்டாரு" தோழியிடம் பதில் கூறி, "சரி தானே ண்ணா?" கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பினாள்.

"பிச்சை எடுத்தானாம் பெருமாளு..."

வைஷ்ணவி இழுக்க, "அடியேன் தான் ஹனுமான். சரி அந்த மண்சட்டி எடுத்துட்டு மண் அல்லி போடு" சந்தர்ப்பம் மொத்தமாய் ஷெர்லின் வசமானது.

"சுண்டெலி எல்லாம் என்ன கலாய்க்கிற நேரம்... சரி உன் அண்ணன்ட்ட வேலை என்னனு கேளு, நமக்கு வேலை இல்லாம சும்மா எல்லாம் இருக்க முடியாது. கை கால் எல்லாம் பம்பரமா சுத்திட்டே இருக்கனும்" - வைஷ்ணவி.

"ஓஓ அது தான் இந்த ரெண்டு வருசத்துல உங்க வீட்டு மாடி ஒரு அடி கீழ இறங்கிடுச்சோ..." - ஷெர்லின்

"போன வருஷம் முட்டு சந்துல நின்னு நீ சிகரெட் புடிச்சல, அந்த போட்டோ அன்னைக்கு தான் எங்கையோ பாத்தேனே..." வைஷ்ணவி தீவிரமாய் யோசிக்க இவர்கள் பேச்சை கண்டும் காணாததுமாய் கேட்டுக்கொண்டே சற்று தள்ளி சென்று நின்றான் கார்த்திக்.

அவள் கையை ஆதூரமாய் பிடித்து ஷெர்லின், "ச்ச எதுக்கு தேவையில்லாம அந்த வீணா போன மொபைல நோண்டி கண்ண கெடுத்துட்டு, இந்த அழகான கண்ணுக்கு கண்ணாடி போட்டா நல்லாவா இருக்கும்?"

தன் கை மீது வைத்த கையை இரண்டு முறை தட்டிக்கொடுத்து, "கண்ண நான் பாத்துக்குறேன், உன் வாய மட்டும் நீ பாத்துட்டா போதும். அந்த எம்டன் கிட்ட என்ன வேலை-னு கேளு போ"

ஆயிரம் அர்ச்சனைகளை உள்ளுக்குள்ளே செய்து கார்த்திக்கிடம் சென்றவள், "அண்ணா இவளுக்கு கை கால் ஒடஞ்சு, நடக்க முடியாம ஓட முடியாம, வாய் பேச முடியாம போகுற மாதிரி ஏதாவது கஷ்டமான வேலை குடுங்க"

"அப்ப குஷ்டம் தான் வரணும்" பின்னாலிருந்து வைஷ்ணவி குரல் கேட்டது.

ஷெர்லின் திரும்பி அவளை பார்க்க, வைஷ்ணவி கை கட்டி புருவத்தை தூக்கி பார்க்க, அப்பாவி சிரிப்போடு, 'சும்மா' என்ற பதிலுடன் மீண்டும் கார்த்திக்கிடம் திரும்ப அவன் சிரிப்பை அடக்கி இவர்கள் இருவரையும் தான் பார்த்து நின்றான்.

'நீ ஏற்கனவே அப்டி தான் டீ இருக்க' மனதில் பதிலளித்து, "அண்ணா..." பாவமாக ஷெர்லின் பார்க்க, "என்ஜினீயர் இப்ப வந்துடுவார்மா. அவர் வந்ததும் பாத்துக்கலாம்"

அவ்வளவு மென்மையாக மனிதன் பேச முடியுமா என்ற சந்தேகம் வந்தது ஷெர்லின்னுக்கு அவன் பேச்சில். "ச்ச நீங்க சூப்பர் ண்ணா"

பற்கள் வரிசை தெரிய மெலிதாக சிரித்தவன் அமைதியை மட்டுமே பதிலாக தந்தான். 'இந்த பயல அண்ணன் ஸ்தானத்துல வச்சு தப்பு பண்ணிட்டோமோ' ஷெர்லின் மனது வருத்தமுற்றது.

வைஷ்ணவி அருகில் சென்றவள் தோழிக்கு தகவல் கூறி இருவரும் பேசிக்கொண்டிருக்க கார்த்திக், "என்ஜினீயர் வந்தாச்சு ஷெர்லின்" இருவரும் திரும்பி பார்க்க வந்த வாகனத்தை பார்த்து இருவரும் மலைத்து போய் நின்றனர்.

"மகளே... எனக்கு ஏன் இது அது மாதிரி தெரியுது?"

ஷெர்லின் பீதியுடன் வைஷ்ணவியிடம் கேட்க, "அட கெழவி அது மாதிரி இல்ல இது அதுவே தான்" அடித்து கூறினாள்.

இருவரும் பீதியடைய காரணம் அவர்கள் முன்னாள் கம்பீரமாக வந்து நின்ற சிகப்பு நிற மஹிந்திரா தார் வண்டியை பார்த்து தான். சில நிமிடங்களுக்கு முன் அவர்கள் காயம் உண்டு செய்து, தப்பித்து ஓடி வந்த அதே கார், முன் இருக்கையில் அமர்ந்து கருப்பு கண்ணாடியை அணைந்து ஓடிக்கொண்டிருந்ததும் இவர்கள் சண்டைக்கு இழுத்த அதே ஆண்.

"வா டீ குற்றாலத்துல ஒரு குளியலை போட்டு அப்டியே வீடு திரும்பி போவோம். ஆண்டவனா பாத்து குடுத்த வேலை ஆண்டவனாவே எடுத்துத்தான்... ஹ்ம்ம்... அநேகமா இந்த வேலை இருக்காது" - ஷெர்லின்.

"செவனேனு அவன் கால்ல விழுந்துருக்கலாம்... வீச்சருவா, திருநெல்வேலி-னு டயலாக் பேசிட்டு இப்டி பண்ணிட்டியே டீ, கஷ்டப்பட்டு வாங்குன வேலை" - வைஷ்ணவி.

"என்னமோ கஷ்ட பட்டு இன்டெர்வியூ அன்டன் பண்ணி வாங்குன மாதிரி பேசுற, பிச்சை தான வந்துச்சு" - ஷெர்லின்

"எனக்காவது பிச்சை போட்டாங்க, உன் மூஞ்சியெல்லாம் பிச்சை போட கூட தகுதி இல்ல போல" வாய்க்குலேயே சிரித்த தோழியை எதுவும் செய்ய முடியாத நிலை ஷெர்லின்னுக்கு. இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவன் கார்த்திக் அருகில் வந்துவிட்டான்.

"ஹலோ கார்த்திக், சாரி போன வாரம் வர முடியல, மதுரைல பைனல் ஒர்க்ஸ் இருந்துச்சு" இருவரையும் சட்டையே செய்யவில்லை அவன்.

"இருக்கட்டும், ஆனா எனக்கு கொஞ்சம் சீசன் ஸ்டார்ட் ஆகுறதுக்குள்ள ஒர்க் முடிச்சு மட்டும் தந்துடுங்க"

"சொல்லவே தேவ இல்ல, இனி இங்க ஒர்க் முடிச்சிட்டு தான் அடுத்து, கவலை படாதீங்க"

"தேங்க்ஸ்" வைஷ்ணவி, ஷெர்லின் பக்கம் திரும்பி, "இவங்க தான் நான் சொன்ன ரெண்டு பேர்... ஷெர்லின், வைஷ்ணவி"

இருவருக்கும் அறிமுகப்படுத்தியவன் பிறகு, "இவர் தான் இந்த சைட் என்ஜினீயர், சுந்தர்"

இருவரும் எதுவும் நடக்காதது போல், "ஹலோ சார், ஹாய் சார்" என்று நடிப்பை போட்டு நின்றனர்.

"ஓகே கார்த்திக், சைட் என்ஜினீயர் தான்-னு சொல்லிட்டீங்களா?" கார்த்திக்கிடம் பேசும் பொழுது இனிமையாக தான் பேசுகிறான், இந்த பக்கம் திரும்பி இவர்களை பார்க்கும் பொழுது தான் ஏதோ ஒரு பாவனை அவன் முகத்தில்.

"தெரியும் சுந்தர் அவங்களுக்கு"

"ம்ம்ம் ஓகே கார்த்திக், வாஸ்துல கொஞ்சம் மாத்திருக்கு வாங்களேன் இவங்களுக்கு பிளான் சொல்லி அப்டியே உங்களுக்கும் சொல்லிடறேன்"

அவனுடைய வண்டியை காட்டி அழைக்க கார்த்திக் தயங்காமல் அவனுடன் பேசிக்கொண்டே செல்ல, ஷெர்லின் மட்டும் தான் ஒரு வித நடுக்கத்தோடு அவர்களை தொடர்ந்தாள். வாகனத்தை நெருங்கியதும் சுந்தர் வாகனத்தை திறந்து ஒரு பிளான் ஷீட்டை எடுத்து அந்த பெரிய வாகனத்தின் பானெட்டில் அந்த பேப்பரை விரித்து வைத்தான்.

"என்ன ஆச்சு சுந்தர் எப்படி வண்டில அடி பட்ருக்கே" உள்ளே சென்றிருந்த இடத்தில் அழுத்தி பார்த்தான் கார்த்திக்.

"வழில ரெண்டு காட்டானுக இடிச்சிட்டாங்க கார்த்தி" வைஷ்ணவி ஷெர்லின் இருவரையும் பார்த்து கூற இருவரும் மேகத்தின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர் தெரிந்தே...

"விட்டுட்டா வந்திங்க?"

'இவன் ஒருத்தன் அவனே சும்மா விட்டாலும் இவன் விட மாட்டான் போலயே' - வைஷ்னவி மனம்.

"விட மாட்டேன் கார்த்தி, அவங்க ஜாதகம் தான் இப்ப என் கைல இருக்கே" ஜாடையாக சுந்தர் கூற இருவரும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டனர்.

"ஹோட்டல் எண்ட்ரன்ஸ் வடக்கு பக்கம் இருக்குறத விட தெற்கு பக்கம் வச்சா தான் கார்த்திக் தொழிலுக்கு நல்லா இருக்கும், அதுனால அத மாத்திருக்கேன், ஸ்விம்மிங் பூல் ரெஸ்டாரண்ட் லாபி-கு ரைட் சைடு ஒன்னும், ரெஸ்டாரண்ட் பின்னாடி ஸ்விம்மிங் பூல் ஒன்னும் இருக்கு. ரெஸ்டாரண்ட் தான் சென்டர்ல இருக்கும். ரெஸ்டாரண்ட் சுத்தி ஏழு ரிசார்ட். இந்த ரிசார்ட், ரெஸ்டாரண்ட் ரெண்டையும் மொத்தமா கனெக்ட் பண்ற மாதிரி மொத்தமும் ஸ்விம்மிங் பூல் மட்டும் தான்.

ரெஸ்டாரண்ட் வழியா தான் ரிசார்ட் போக முடியும், சோ ரெண்டையும் கனெக்ட் பண்ண ஒரு மர பிரிட்ஜ் மாதிரி வைக்கிறோம் நடுல. இதுல மூணு கப்பிள்ஸ்க்கு ஸ்பேஸியஸ் பெட்ரூம், பாத்ரூம் மட்டும். மிச்ச நாளும் பேமிலி வந்து தங்குற மாதிரி. அதுலயும் மூணு பத்து டூ பதினஞ்சு பேர் தங்குற மாதிரி பர்ஸ்ட் ப்லோர்ல பாத்ரூம் ரெண்டு, அப்றம் ஒரு பெரிய ஹால் மட்டும் தான்"

"டிரஸ் மாத்துறது எல்லாம் எப்படி சார் பண்ணுவாங்க?" ஷெர்லினை கண் தூக்கி பார்த்தவன்,

"நான் இன்னும் சொல்லி முடிக்கலையே, ட்ரெஸ்ஸிங் ரூம் உள்ளேயே இருக்கும், மேல பர்ஸ்ட் ப்லோர்ல ஒரு சின்ன ரூம் வித் பாத்ரூம், மிச்ச எல்லா இடத்துலயும் மேல ரூப் ஷீட்ஸ் போட்டு நைட் டைம்ல லைட்ஸ் போட்டு விட போறோம். மிச்சம் இருக்க இன்னொரு ரிசார்ட் குறைஞ்சது நாப்பது பேர் தங்குற மாதிரி ரொம்ப பெருசு, ஆனா அதே மாதிரி கீழ பெரிய ஹால், மேல ரெண்டு ரூம் அவ்ளோ தான் வித்யாசம்.

இதுல பார்க்கிங் முதல ரிசார்ட் பக்கத்துலயே வைக்கலாம்னு நெனச்சேன் ஆனா ரிசார்ட்ட பாத்தா சிலர் அங்க தங்குற ஐடியாக்கு வருவாங்க அதுனால ரிசார்ட்-கு கொஞ்ச தூரத்துல அதாவது ரெஸ்டாரண்ட் பின்னாடி பார்க்கிங் போடலாம். இப்ப ரெஸ்டாரண்ட், லாபி பக்கத்துல ஸ்விம்மிங் பூல், கிட்சேன் பிளஸ் டுவெண்ட்டி பெர்ஸன்ட் சீட்டிங் கேபாஸிட்டி மட்டும் தான் கிரௌண்ட் ப்லோர்ல. மத்த சீட்டிங் எல்லாமே பர்ஸ்ட் ப்லோர்ல தான் வைக்கிறோம் வித் ஓபன் வீயூ. மொத்த இடமும், நீங்க கேட்ட மாதிரி ஓடு வச்ச மாதிரி ரூப்ஸ் தான். முன்னாடி ஒரு குட்டி ப்லே கிரௌண்ட்"

அவனுடைய லேப்டாப் எடுத்து வைத்து, "இது தான் த்ரீ-டீ வீயூ" அவன் கூறியதை கேட்ட இருவரும் வாயை பிளந்தபடி அதன் த்ரீ டீ வீயூவை பார்க்க இன்னும் மொத்தமாய் வாயடைத்து போயினர்.

"ம்ம்ம் ஓகே சுந்தர், எனக்கு எல்லாமே திருப்தி தான். ஆனா ரெஸ்டாரண்ட்ல நாங்க கேட்ட மாதிரி தூண் வச்சு கொஞ்சம் இருந்தா நல்லா இருக்கும், அதே மாதிரி எண்ட்ரன்ஸ் கருங்கல் வச்சு காட்டினா நல்லா இருக்கும்"

"தாராளமா பண்ணிடலாம் கார்த்திக், வேற ஏதாவது?"

"ஒரு பெரிய விசியம் விட்டுடுங்க சார்" கேள்வி கார்த்திக்கிடம் தான் ஆனால் சந்தேகம் வந்தது வைஷ்ணவிக்கு.

மூவரும் அவளை பார்க்க, "எல்லாம் சரி தான் ஆனா இந்த கிளப் பப் எல்லாம் இல்லையா?" ஆசையாய் கேட்டவள் அவனை தலை தூக்கி பார்க்க அவனோ அவளை முறைத்து நின்றான் கார்த்திக்.

"ச்ச ச்ச இப்டி எல்லாம் நான் கேட்பேன்னு நீங்க கனவுல கூட நெனச்சு பாத்துடாதீங்க சார், நம்ம ஊர் கலாச்சாரம் என்ன பண்பாடு என்ன, அத பொத்தி பொத்தி வளக்க வேணாம்? இந்த மாதிரி யாராவது கேட்டா கல்ல எடுத்து அடிங்கன்றேன். இந்த கேள்வியை கேட்ட உடனே எனக்கு அந்த மாதிரி ஆசை இருக்குன்னு மட்டும் நீங்க யாரும் கனவுல கூட நெனச்சு பாக்க கூடாது" மொத்தமாய் பல்டி அடித்திருந்தாள் பெண்.

Hello... எப்படி இருக்கு? கமெண்ட் சொல்லிட்டு போங்கோ ப்ளீஸ்...
 
ஆனாலுமம இவளங்கஇந்த அளவுக்கு அலும்பு பண்ண கூடாது... ரொம்ப ஓவர் வாய் ஷெர்லின் அண்ட் வைஷ்வுக்கு...??? கார் damage பண்ணதுக்கு சுந்தர் வச்சு செய் சாமி அப்போ தான் அடங்கும் ரெண்டும்
 
Top