Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தனிமை-ஹரிஹரன் பாலாஜி

Hariharan

Member
Member
"அடடே! ரொம்ப நேரம் தூங்கிட்டோம் போலயே!", கண்விழித்தவுடன் கந்தசாமி தனக்குத்தானே கூறிக்கொண்டார்.

தூங்கப்போகும்போது தலைக்கு மேலே பிரகாசித்த சூரியன் இப்போது ஒரு மரத்திற்கு பின்னே சென்று ஒளிந்து கொண்டிருப்பதை கண்டவுடன் அந்த கிழவருக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. "பேரம்பேத்திக்கூட வந்திருந்தோம்ல? எங்க பொய் தொளஞ்சிதுங்க அந்த வாண்டுங்க?"

பூங்காவிற்கு வருபவர்கள் களைப்பாருவதற்க்காக அமைக்கப்பட்டிருந்த நீளமான மேசைமீது கந்தசாமி படுத்திருந்தார். பேரன், பேத்தியின் ஞாபகம் வரவே, திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்.

நாலாபுறமும் அவர் கண்கள் சுற்றித் தேடி அலைந்தன. போதாததற்கு, வேறு பரிமானங்களுக்கும் சென்று அவர் கண்கள் தேடின. அதாவது, அவர் கனவு பரிமாணத்தில் கண்ட விசித்திர சம்பவங்களையும் சிறிது நேரம் நினைத்து பார்த்தார்.

தன் பிறந்த நாளன்று நண்பர்கள், சொந்தக்காரர்கள் என எல்லோரும் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அவர் மகள் ஒரு தொலைபேசியை அவருக்கு பரிசாக கொடுத்தாள்.

இவ்வாறெல்லாம் அவர் கனவில் தோன்றியிருந்தன.

வௌவால் ஒன்று தடுமாறி கந்தசாமியின் தலைமீது வந்து 'தொப்'பென்று விழுந்தவுடன், அவர் கனவுலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்தார். வௌவால் கீழே மயங்கிக்கிடந்தது. "விழரத்துக்கு வேர இடம் கெடைக்களையா உனக்கு?" என்று கூறியவாறு அந்த வௌவாலை தூக்க முயன்றார். சட்டென்று விழித்துக்கொண்ட வௌவால், பறந்து சென்றுவிட்டது. "பாத்து போ!" என்று கந்தசாமி அதை வழியனுப்பிவைத்தார்.

அந்த பூங்காவில் இருந்தவர்கள் இருவரே. ஒன்று, பேரன் பேத்தியை துலைத்த கிழவர்; மற்றொன்று, வேலையை துலைத்த ஓர் வாலிபர். கந்தசாமி அந்த வாலிபரை அணுகி பேரன், பேத்தியை பற்றி விசாரிக்கலாமென்று முடிவு செய்தார்.

உடனே தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தார். "ஐயோ! முதுகு புடிச்சிகிச்சி! பெருமாளே! இந்த எழுபது வயசு கிழவன ஏன் இவ்ளோ சோதிக்கிற?".

பத்து மாத குழந்தை தன் பிஞ்சுபாதங்களை தரையிலே ஊன்றி 'தத்தக புத்தக'வென்று நடனம் ஆடுவது போல் மெல்ல மெல்ல நடந்து செல்லும். அதை போன்ற நிலைமையில் இப்பொழுது தானும் சிக்கிக்கொண்டோமே என்று கிழவர் வருந்தினார்.

மெல்ல நடந்து பாதி தூரத்தை கடந்துவிட்டார். "ஐயோ!" என்றவாறு அருகிலிருந்த மேசை மீது அமர்ந்து, சிறிது நேரம் உடலை வளைத்து நெளித்து பிடிப்பை போக்கி கொள்ளலாம் என்று நினைத்தார். அதில் வெற்றியும் கண்டார். "அப்பாடா! ஒருவழியா பிடிப்பு செரியாச்சி!"

மீண்டும் எழுந்து உற்சாகத்துடன் நடக்கலுற்றார் கந்தசாமி.

அந்த வாலிபன் திறன்பேசியில்(ஸ்மார்ட் போன்) யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை கவனித்தார். இன்னும் அருகே சென்றவுடன் அவன் பேசிக்கொண்டிருப்பதுபோல் தெரியவில்லை; யாரிடமோ விவாதம் பிடித்து கொண்டிருப்பதுபோல தெரிந்தது. பெரியவர் வருவதற்கும், வாலிபனின் திறன்பேசி விவாதம் முடிவதற்க்கும் சரியாய் இருந்தது. என்ன பேச்சுவார்த்தை நடந்ததோ என்னமோ? அந்த பிள்ளையின் முகத்தை அப்பொழுது பார்த்திருக்கவேண்டுமே! அப்பப்பா! கோபக்கனல்கள் கொழுந்து விட்டு எறிந்த அவன் கண்களின் பிரகாசம் கதிறவனுக்கே கண்கூச செய்துவிட்டிருக்கும். நல்லவேளையாக அச்சமயத்தில் சூரியத்தேவன் உறங்கச் சென்றுவிட்டிருந்தான்.

கோபம் முற்றிப்போய், வாலிபன் தன் கையில் இருந்த திறன்பேசியை தூக்கி எறிந்தான். அது பத்து அடி தாண்டிச்சென்று விழுந்தது. பெரியவர் கந்தசாமிக்கு அதை கண்டவுடன், "இவன் செரியான பைத்தியக்காரனா இருப்பான் போலயே! திரும்பி போய்டலாமா?" என்று ஒருகணம் தொனிற்று. வேறுவழியின்றி மனதை திடப்படுத்திக்கொண்டு அச்சிறுவனை அணுகினார்.

"தம்பி…" என்ற குரல் கேட்டவுடன், குரல் வந்த திசையை நோக்கினான் அந்த கோபமே உருவான வாலிபன். நின்றுகொண்டிருந்தது, சோகமே உருவான ஒரு முதியவர்.

"இந்த 'பார்க்'குக்கு நா வந்ததுல இருந்து நீ இங்க தா இருக்க. என் பேரன் பேத்தியோட நா வந்திருந்தேன். அதுங்க பாட்டுக்கு வெளாண்டுகிட்டு தான இருக்குனு நா கொஞ்சோ கண்ணு அசந்தேன். ஏழுந்து பாக்கும்போது அதுங்கள காணோம். ரெண்டும் பத்து வயசு பிஞ்சிங்க. நீ எங்கேயாச்சி பாத்தியா பா?", என்று கந்தசாமி கூறிக்கொண்டிருக்கும்போதே, ஒரு சிறு கண்ணீர் துளி அவர் கண்களில் எட்டிப்பார்த்தது.

வாலிபன் பெரியவர் அழுவதை கண்டு திடுகிட்டுப்போய் எழுந்தான்.

"ஐயா! ஐயா! இப்பிடி வந்து உக்கருங்க. இந்தாங்க தண்ணி குடிங்க…" என்று தன் பையில் இருந்த தண்ணீர் குடுவையை எடுத்தான்.

'ஆகா! இப்படியும் ஒரு பிள்ளையா! இவனை போல ஊருக்கு ரெண்டு பேர் இருந்தா நம்ம நாடு எங்கயோ போய்டுமே! எவ்ளோ மரியாதை தெரிஞ்ச பயனா இருக்கான்!' என்று கந்தசாமி அவர் மனதிலே அந்த வாலிபனுக்கு புகழாரம் சூட்டினார்.

'ஆனா இவ்ளோ நேரம் கோவமா இருந்தவன் சட்டுனு சாந்தமாய்ட்டானே!' என்ற வியப்பும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்தது.

வயதானவர்களுக்கு இருக்கும் வியாதிகள் அனைத்தும் கந்தசாமியின் உடம்பில் குடிக்கொண்டிருந்தன. அதில் சர்க்கரை வியாதிக்கும் இடம் அளித்திருந்தார் அந்த வல்லல். ஆகையால், அவருக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை வியர்த்து கொட்டியது. தண்ணீரை குடித்துவிட்டு, "ரொம்ப தான்க்ஸ் பா!" என்று தன் வாயை துடைத்தபடி கூறினார்.

வாலிபன் சென்று, கீழே இருந்த தன் திறன்பேசியை எடுத்துக்கொண்டு வந்தான். பெரியவருக்கு அந்த திறன்பேசியை பார்த்தவுடன் ஒரு யோசனை தோன்றியது.

"நா இருந்த கஷ்டத்துல உலகத்தையே மறந்து பொய் உக்காந்துன்னு இருந்தேன், ஐயா! உங்க பேரன், பேத்திய நா பாக்கல" என்று வாலிபன் வருத்தத்துடன் கூறினான்.

"தம்பி! இந்த போன் கொஞ்சோ குடுக்குறியா? ஒரு கால் பண்ணிக்கிறேன்?"

"தாராளமா பண்ணிக்கோங்க. நம்பர் சொல்லுங்க நானே டைப் பண்ணி தாரேன்"

பெரியவர் தன் பேரனின் கைபேசி எண்களை கூற கூற வாலிபன் அதை தன் திறன்பேசியின் தோடு திரையில் 'டைப்' செய்தான். பின்னர் போனை காதில் வைத்துக்கொண்டு, சிறிதுநேர மௌனத்திற்குப்பிறகு, "இந்தாங்க ரிங்கு போஹுது" என்று கூறி திறன்பேசியை பெரியவரிடம் கொடுத்தான்.

கந்தசாமி அந்த 'போனை' வாங்கிக்கொண்டு காதில் வைத்தார். தன் பேரனின் குரலை கேட்க அவளுடன் காத்திருந்தார். "ஹலோ" என்ற குரல் கேட்டது. ஒரு பெண்ணின் குரல். தன் மகளின் குரல் தான் என்று ஊகித்தார்.

"ஹலோ, சிவகாமி?"

"அப்பா? நீங்களா?" என்று கந்தசாமியின் மகள், சிவகாமி கேட்டபோது, அவள் குரலில் ஒரு உற்சாகமும் அதேசமயம் ஆச்சர்யமும் தொனித்திருந்தது.

"ஆமா மா! அப்பா தா பேசுறேன்."

"ஒருவழியா இப்போவாவது உங்களுக்கு ஒரு போனு வங்கணும்னு தோணுச்சே! எப்படி பா இருக்கீங்க?"

காதசாமிக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. "என்ன மா திடீர்னு விசாரிக்கிற? காலைல தான பாத்த? ஒரே வீட்ல தான இருக்கோம்".

"என்ன பா ஒளருறீங்க? நா மும்பை போய் ஒரு மாசம் அவபோதே?".

"ஏது? நா பொய் சொல்றேன்னா சொல்ற? மதியம் கூட பேரன், பேத்திய கூட்டிட்டு பார்க்குக்கு போனேனே? யார ஏமாத்த பாக்குற!"

"நல்லா கனவு கண்டுருக்கீங்க போங்க. உங்க பேரன் பேத்தி ரெண்டுபேரும் இங்க என் பக்கத்துலதான் ஹோம்ஓர்க் செஞ்சிக்கினு இருக்காங்க. வேணுனா நீங்களே அவங்ககிட்ட கேளுங்க"

கந்தசாமிக்கு எல்லாம் இப்போது விளங்கியது. தான் தனிமையில் இருந்ததாலேயே அவ்வாறு இல்லாதது இருப்பது போன்ற மருட்சி தோன்றியது என்று புரிந்தது. பூங்காவிற்கு அவர் போனது உண்மைதான்; ஆனால் பேரன் பேத்தியோடு போனதென்பது அவர் மனப்பிராந்தி.

"நா அப்புறமா பேசுறேன்மா. இது வேர ஒருத்தரோட போனு. ரொம்ப நேரம் அவர காக்க வெச்சிட்டேன்"

"அப்பா! நான் நாளைக்கே கிளம்பி சென்னைக்கு வரேன். எனக்கும் உங்க ஞாபகமாவே தா இருக்கு"

"மாப்பிள வேல விஷயமா தான மா அங்கிட்டு போனீங்க?" என்று ஒருவாறாக பழைய நினைவுகளை பெற்று கேட்டார்.

"ஒருநாள் தான. லீவ் போட்டுகிட்டா போச்சி"

"எதுக்குமா சிரமப்பட்டுகிட்டு?"

"அதெல்லாம் ஒன்னு கெடையாது. நா ஒருவாட்டி முடிவு பனிட்டா அத மாத்திக்க மாட்டேன்!"

"சரி உன் இஷ்டம் மா. அப்போ நா வெச்சிடறேன்! மாப்பிள்ளைய கேட்டதா சொல்லு"

"ம் சரி பா. நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க. பேரன் பேத்தி கல்யாணத்த பாக்கவிடாம நா உங்கள போக விடமாட்டேன்"

"ஹாஹாஹா! நம்ம கைல என்னமா இருக்கு? எல்லா அந்த ஆண்டவன் கைல தா. சரி ரொம்ப நேரமாய்டிச்சி. நாளைக்கு பேசிக்களா. இப்போ கட் பன்றேன்".

இந்த நொடிக்காகவே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த அந்த வாலிபன், "என்ன ஐயா? எங்க இருக்காங்களாம் உங்க பேரன் பேத்தி?" என்று ஆவலுடன் கேட்டான்.

"ம்? அவங்களா? வீட்ல தா இருக்காங்கலாம்"

"ஓ! ரொம்ப சந்தோஷம் ஐயா"

"அப்போ நா கிளம்புறேன் தம்பி! உன் உதவிக்கி ரொம்ப நன்றி!" என்று கூறிவிட்டு மேசையிலிருந்து எழுந்தவர் விறுவிறுவென்று நடைகட்டினார்.

அந்த வாலிபன் ஏதோ சாதித்த மகிழ்ச்சியுடன் ஒரு ஊஞ்சலில் அமர்ந்தான். 'ஒரு செல்பி எடுக்கலாமா?' என்று அவனுக்கு திடீரென்று தோன்றியது. "அடச்சே! போன அந்த பெரியவர்கிட்ட இருந்து வாங்க மறந்துட்டோமே!". அவன் விறைந்து சென்று பார்த்தபோது கிழவர் வீதியின் எல்லைக்கு போய்விட்டிருந்தார். வாலிபன் அவரை பின்தொடர்ந்து ஓடினான். அவரை நெருங்கியவுடன், "ஐயா!" என்று கத்தினான். அது கந்தசாமியின் காதில் விழவில்லை. அவர் மீண்டும் கனவு லோகத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.

பின்னர் ஒரு வீட்டிற்குள் சென்றார். அது அவர் வீடு தான். வாசலிலே ஒரு பூனை படுத்துக்கொண்டிருந்தது. உடனே அதை தூக்க முயன்றார். அப்பொழுது அவர் கையிலிருந்த திறன்பேசியை கவனித்து, "அடாடா! அந்த சின்ன பையனோட போன் ஆச்சே இது! இத அவன்கிட்ட குடுக்க மறந்துட்டோமே! இத கொடுகுரத்துக்குன்னு இப்ப அவலோ தூரம் திரும்பி போகனுமா!" என்று சோம்பலில் புலம்பினார்.

"சரி நாளைக்கி பாத்துக்கலாம். எப்படியோ அவன் போன் தொலைஞ்சத கவனிச்சோனே வேர போன்ல இருந்து கால் பண்ணுவான்".

அந்த போனை அவர் சட்டை 'பாக்கேட்'டில் போட்டுக்கொண்டார்.

"ஓ பூனைகுட்டியே! என்ன தூக்கம் உனக்கு?" என்று அந்த செவ்வன்னே என்று தூங்கிக்கொண்டிருந்த பூனையை கையில் எடுத்தார்.

தனிமையில் வாடுபவர்களுக்கே கிடைய்த்த வரம்! வாயில்லா ஜீவன்களின் பாஷையையும் புரிந்துகொள்பார்கள். கந்தசாமியின் கேள்விக்கு, "மீயாவ், மியாவ்" என்று பதிலளித்தது அப்பூனை.

"ஓ! பசிக்கிறதா? பால் வேணுமா மீன் வேணுமா உங்களுக்கு?" என்று கெட்டுக்கொண்டே வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தார்.

இருள் சூழ்ந்த அவ்விடத்தில் 'சுவிட்ச்சை' அமுக்கியவுடன் குழல்விளக்கின் ஒளியானது வீட்டின் மூலைமுடுக்குகளுக்கும் பரவி வெளிச்சத்தை பரப்பச்செய்தது.

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா!" என்று காந்தசாமியின் மகள் உற்சாகத்துடன் கூவிக்கொண்டு அவரருகில் வந்தாள். அவளை பின்தொடர்ந்து மருமகனும் தோழர்களும் வந்து வாழ்த்தினார்கள். கந்தசாமிக்கு அளவில்லா ஆனந்தம். அவர் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகளை அவர் கண்களால் நம்பமுடியவில்லை. கண்களை கசக்கி விட்டு பார்த்தபோது கண்முன்னே கண்ட கோலாகலம் அணைத்தும் காணாமல் பொய்யிருப்பதை கண்டார். "அட! இது என்னடா விசித்திறம்?" என்று நினைத்தபோது அவர் கரியமுகம் சோகத்தில் மேலும் வாடி, கருகிப்போனது.

பின்னர் 'பிரிட்ஜி'லிருந்து பாலை எடுத்து கிண்ணத்தில் ஊற்றினார். அந்த பூனை ஏதோ பத்து நாள் பட்டினி கிடந்தது போல் வேகவேகமாக பாலை குடித்தது. "இவ்ளோ பசிய வெச்சிக்கிட்டு எப்படி உனக்கு தூக்கம் வறுது?" அன்று அவர் அப்பூனையை நோக்கி கேட்க, பூனை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு "மியாவ்", என்று பதில் அளித்தது. கிழவரோ, "ஓஹோ, அப்படியா" என்று அப்பூனை கூறியதை புரிந்துகொண்டதுபோல் மறுமொழி கூறினார்.

இதையெல்லாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருந்த வாலிபனுக்கு ஒரு விஷயம் மட்டுமே மனதில் தோன்றியது. இந்த பூனைகளுடன் பேசும் விசித்திர சித்தப் பிரம்மைக்காரரிடமிருந்து எப்படி தன் 'போன்'னை மீட்பதென்று.
 
Nirmala senthilkumar

Well-known member

Nirmala vandhachu 😍😍😍
Muthumaiyin kodumaihal 😔😔😔
Nalla story 💐💐💐
 
Top