Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 5.

Advertisement

V R K

Member
Member
அத்தியாயம் 5





ராம் ஹோட்டலுக்கு சென்று அங்கு டிபன் சாப்பிட்டு விட்டு இரவு பசித்தால் என்ன செய்வது என்று இரண்டு பச்சை நாடான் ? வாழைப்பழத்தையும் மற்றும் நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் இரண்டு பக்கெட்களும் வாங்கி கொண்டு தான் ஜலஹல்லி கிராஸில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்து பார்க்க வீடு பூட்டி இருந்தது. அவனுடைய ரூம் மெட் கலைமணி இன்னும் வரவில்லை . அவன் பர்சேஸ் டிபார்ட்மெண்ட் இல் வேலை செய்கிறான் ,

ராம் வேலை செய்யும் அதே தனியார் கம்பெனியில் . அவன் வழக்கமாக பர்சேஸ் முடித்து விட்டு லேட்டாகத் தான் வீட்டுக்கு வருவான் . எனவே அவனிடம் கம்பெனியில் இன்று நடந்ததை சொல்லலாம் என்று நினைத்தான் . அதுவும் ராமிற்கு முடியாமல் போனது .
இது என்னடா வாழ்க்கை என்று விரக்தி ஏற்பட்டது . கம்பெனியில் சொல்லலாம் என்றால் வி.பி , ஜி.எம் ( யூனிட் ) ஆகியோர் சாப்பிட சென்றவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்று தெரியவில்லை . தான் வரும் பொழுது இரவு 8 .30 மணிக்கு மேல் ஆயிற்று . கலைமணி எத்தனை மணிக்கு வருவான் என்றும் தெரியவில்லை.

ராம் கதை புத்தகங்கள் நிறைய படிப்பான் . அவனுடைய அப்பா , அம்மா எல்லோரும் புத்தகம் படிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அவனுடைய தங்கை இவர்களை போல புத்தக பையித்தம் இல்லை . அவர்கள் வீட்டில் புத்தகத்திற்கு ஒரு கணிசமான அளவு பணம் அவனுடைய அப்பா செலவு செய்து எல்லாவிதமான புத்தகங்களையும் வாங்கி விடுவார் . அப்பொழுது எல்லாம் ஆனந்த விகடன் , குமுதம் , கல்கி , கலைமகள் , அணில், முயல் ( சிறுவர் பத்திரிகை ) அப்புறம் தமிழ் தினமணி பேப்பர் , ஆங்கில பேப்பர் The Hindu ஆகியவற்றையும் வாங்குவார். வீட்டில் தடுக்கி விழுந்தால் புத்தகத்தின் மேல் தான் விழ வேண்டும் . இது இல்லாமல் அவர் சேலம் கலெக்டர் மீட்டிங் வந்தால் , கண்ணதாசன் என்று ஒரு புத்தகம் கண்ணதாசன் நடத்தி கொண்டு இருந்தார் . அப்பொழுது எல்லாம் விலை அதிகம் இல்லை இப்போது போல . அதுவுமில்லாமல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தம் முள்ள இந்துமதம் புத்தகம் பாகம் , பாகமாக வெளிவரும் .

அப்பொழுது நிறைய எழுத்தாளர்கள் நன்றாக எழுதினார்கள். ராம் தி.ஜானகிராமனின் மோகமுள் முதல் மரப்பசு , செம்பருத்தி , மற்றும் அவரது கதைகள் நிறைய படித்திருக்கிறார் . அவன் சிறிய வயதில் இருக்கும் போது அவனுடைய அப்பா கதைகள் படித்து அதை அவர்களுக்கு சொல்வார் . மேலும் ஆனந்த விகடன் குமுதம் , கலைமகள் ஆகிய பத்திரிகைகளில் வரும் கதைகளை பைண்ட் செய்து படிக்கும் வழக்கம் உண்டு அதேபோல் சிவசங்கரி இந்துமதி , அனுராதா ரமணன், சுஜாதா , கல்கி , புனிதன் துமிலன் , புஷ்பா தங்கதுரை , ஸ்டெல்லா புரூஸ் , இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் .
அகிலன் , ஜெயகாந்தன் , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . நிறைய பேர் இருந்தார்கள் . இப்பொழுது எழுதிக்கொண்டு இருக்கும் சில எழுத்தாளர்கள் ராஜேஷ் குமார் , தேவிபாலா , ஆகியோர் பிறகு வந்தவர்கள் .

1988 காலகட்டத்தில் பாலகுமாரன் என்பவர் பிரபலம் அடைந்து கொண்டு இருந்தார் . அவன் அவருடைய புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்து இருந்தான் . பாக்கெட் நாவல் ஒன்று வந்து கொண்டிருந்தது . அதில் பாலகுமாரன் ‌கதைகளை எழுதி கொண்டு இருந்தார் . தனிமையை போக்க ஓரே வழி புத்தகம் படிப்பது தான் . இல்லையெனில் ஏதாவது படத்திற்கு செல்வது லீவு நாட்களில் ஊருக்கு சேலம் செல்லவில்லை என்றால் , ஏதாவது ஒரு ஆங்கில படத்திற்கு செல்வது . இல்லை என்றால் நடிகர் விஷ்ணு வர்த்தன் நடித்த கன்னடம் போய் பார்ப்பார்கள் மெஜெஸ்டிக் சர்க்கள் சென்று . இல்லை ‌என்றால் M. G Road சென்று ஆங்கில படம் பார்ப்பார்கள் . எப்படியாவது பொழுதைக் கழிக்க வேண்டும்

சிவாஜி நகர் சென்றால், K.C Das செல்வார்கள் அவனும் அவனுடைய பாஸ் தியாகராஜனும் . கல்கத்தா ரசகுல்லா சிறிய மண்பானையில் கொடுப்பார்கள் . நன்றாக இருக்கும் .குலோப் ஜாமூன் அதுவும் மிகவும் நன்றாக இருக்கும் . அப்பொழுது தான் கம்யூட்டர் வந்த புதிது . சிவாஜி நகரில் இருக்கும் யுனெட்டெட் கம்யூட்டர் சர்வீசஸ் என்று அதன் பெயர் . அங்கு தான் எங்கள் ஜாப் காஸ்டிங் டேட்டா வை எல்லாம் பஞ்ச் பண்ணி ரிப்போர்ட் எடுத்து வருவோம் . விடிய விடிய ஜாப் காஸ்டிங் ரிப்போர்ட் 800 பக்கங்களுக்கு மேல் பிரிண்ட் ஆகிக் கொண்டு இருக்கும் . இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் ராம் இன் மனதில் இதெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அவனுடைய இன்றைய கவலை சற்று நேரம் மறந்து இருந்தான் .

மனது சரியில்லை என்றால் புக் ஏதாவது எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவான் . இன்று படிப்பிற்கு மூடு இல்லை . மேலும் மனதும் சரியில்லை . சிறிது நேரம் குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டுக் கொண்டு இருந்தான் . அவன் ஊரில் இருந்து National Panasonic Tap Recorder எடுத்து வந்து இருந்தான் ரேடியோ மற்றும் கேசட் போட . அப்பொழுது எல்லாம் அது தான் பெரிய விஷயம் ‌. இன்று போல் செல் போன் இல்லை . இவ்வளவு வசதிகள் இல்லை . ஏதாவது அர்ஜெண்ட் என்றால் டிரங்கால் புக் செய்து தான் காத்திருந்து பேச வேண்டும் . இல்லை என்றால் தபால் தான் கொரியர் சர்வீசஸ் எல்லாம் அப்பொழுது தான் ஆரம்பித்து இருந்தது . எப்பொழுது தூங்கினான் என்று தெரியவில்லை .

காலையில் எழுந்திருக்க நேரம் ஆகிவிட்டது . இன்று கம்பெனி க்கு நேரம் கழித்து தான் போகமுடியும் . 8.05 , க்கு மேல் ஒரு மாதத்தில் கார்ட் பஞ்ச் செய்தால் , அரை நாள் லீவ் என்று கணக்கிட்டு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் . மேஜேமெண்ட் பாலிஸியை யாரும் ஏன் என்று கேள்வி கேட்ட‌ முடியாது . ஏன் என்று கேட்டால் அது மேஜேமெண்ட் பாலிஸி அப்படித்தான் என்று பதில் வரும் . ஐந்து மணிக்கு மேல் வேலை செய்தது எல்லாம் கணக்கில் வராது . கேட்டால் அது உங்கள் கடமை வேலையை முடித்து கொடுத்து விட்டு செல்லவேண்டும் . தேவை என்றால் பர்மிஷன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் வரும் . எவ்வளவு வேலை என்றாலும் புதிதாக ஆள் எடுக்க மாட்டார்கள்
இந்த மாதிரி நிறைய பார்த்து அலுத்து விட்டது .

இன்று என்ன என்ன பிரச்சினை வரப்போகிறதோ . யார் என்ன சொல்லப்போகிறிர்களோ . இந்த வேலையில் சேர்ந்த பிறகே ராமிற்கு B. P (Blood Pressure) இரத்த அழுத்தம் வந்தது . அவ்வளவு வேலை பளு . டென்ஷன் . ராம் கம்பெனியில் கார்ட் பஞ்ச் செய்த போதே Personal Officer கிருஷ்ணய்யா அவனை பார்த்து சிரித்து குட்மார்னிங் என்று சொல்ல அவனும் சிரித்து கொண்டே திருப்பி குட்மார்னிங் சொல்லி விட்டு அவனுடைய சீட்டிற்கு வேகமாக சென்றான் . கிருஷ்ணய்யா அவனுக்கு குட்மார்னிங் சொல்லி விட்டு தன் வாட்சை பார்த்த மாதிரி ஞாபகம் . பார்த்தால் பார்க்கட்டும் . அதைப்பற்றி எல்லாம் கவலைபடுகிற நிலையை கடந்தாகி விட்டது . நேற்று வெகு நேரம் கழித்து போன போது யாரும் எதுவும் பார்க்க வில்லை . அதற்கு என்ன ஓவர் டைம் அலவன்ஸா தரப் போகிறார்கள் . நன்றி கெட்டவர்கள் . மேனேஜ்மென்ட் பாலிஸி எப்படி என்றால் , வேலை செய்யரவனுக்கு அதிக வேலை கொடு . வேலை செய்யாதவனுக்கு அதிக கூலி கொடு . நல்லதிற்கே காலம் இல்லை .

ஃபேக்டரியில் காலை சுமார் 9 மணிக்கு டீ வரும் ப்ரி தான் . தேவையென்றால் இன்னும் ஒரு கப் வாங்கிக் கொள்ளலாம் . ஆனால் அது தித்திப்பாக இருக்கும் . அதிகமாக சர்க்கரை போடப்பட்டு இருப்பதால் குடிப்பது சிரமமாக இருக்கும் .வேறு வழி இல்லை . ஏனெனில் காலையில் 6.30 மணிக்கே டிபன் சாப்பிட்டு வருவதால் பசிக்கும் . அந்த டீ ஐ குடித்தால் பிறகு 2 மணிக்கு தான் சாப்பிட போக முடியும் . 12 மணியில் இருந்து 1.30 மணி வரை ஒரே கூட்டமாக இருக்கும் .2 மணிக்கு போனால் அவ்வளவாக கூட்டம் இருக்காது . கேன்டீன் தனியார் நடத்துகிறார்கள் காண்டிராக்ட் முறையில் . ( Contact Basis ) சாப்பாடு சுமாராகத்தான் இருக்கும் . அதை விட்டால் வேறு வழியில்லை . வாய்க்கு ருசியாக சாப்பிட்டு நிரம்ப நாட்களாகி விட்டது . வீட்டிற்கு சென்றால் தான் உண்டு ருசியாக சாப்பிட .

சேலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் போக முடியும் அதுவும் ஒரு நாள் இரண்டு நாள் லீவில் . அதிகமாக லீவு கொடுக்க மாட்டார்கள் . கேட்டால் ராம் சேவை கம்பெனிக்கு தேவை என்று சொல்வார்கள் . அதற்கு மேல் கேட்டால் , வேலையை ராஜினாமா செய்து விட்டு உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என்று இளக்காரமாக கூறுவார்கள் . காலையில் வேலை அதிக அளவில் இருந்தது . தினசரி ரிப்போர்ட் மற்றும் சம்பள பில் போடுவது , பர்ச்சேஸ் ஆர்டர் எல்லாம் பாஸ் செய்தவது . விலையை மார்க்கெட் விலையுடன் ஒப்பிட்டு , மற்ற பார்ட்டிகளின் விலைப்பட்டியலை பார்த்து முதலில் அது எந்த விலைக்கு வாங்கப்பட்டது என்பதையும் பார்த்து அதைவிட விலை கம்மியாக அல்லது அதே விலை இருந்தால் மட்டுமே ஆர்டர் செய்ய அனுமதியளிக்க வேண்டும் . ராம் கையெழுத்து போட்டு அதை பார்த்து தான் ஜி‌. எம் அல்லது வி பி கையெழுத்து போடுவார்கள் . ஏதாவது சந்தேகம் இருந்தால் ராமை இன்டர் காமில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு அதன் பிறகே பர்ஸேச் ஆர்டர் பாஸ்ஸாகும் . அவசரமாக ஏதாவது ஸ்பேர் வாங்க வேண்டும் என்றால் முதலில் ஜி.எம் அல்லது வி .பி பர்மிஷன் வாங்கி விட்டு பிறகு அந்தபொருளை வாங்கி பிறகு பர்சேஸ் ஆர்டர் போட்டு அதை சரி செய்வார்கள் . எப்படி இருந்தாலும் ராம் மற்ற எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் .

மதியம் வாக்கில் டைப்பிஸ்ட் ராஜன் , ராம் இருக்கும் இடத்திற்கு வந்தான் மிகவும் பழக்கம் . வணக்கம் சார் என்றான் கணேஷ் . என்னய்யா இன்னைக்கு வணக்கமெல்லாம் பலமா இருக்கு என்று ராம் கேட்க , அதற்கு அவன் நீங்க பெரிய ஆளு சார் . நேத்து உங்க கோபத்த பார்த்து நான் பயந்து போயிட்டேன் சார் என்றான் சிரித்து கொண்டே . ஆமாய்யா தேவை இல்லாம கண்டபடி பேசினா சும்மா இருக்க முடியுமா ? பேச வேண்டிய எடத்திலே பேசித்தானே ஆக வேண்டும் . வேற வழியே இல்லை . நேத்து நல்ல பேசினிங்க சார் . பட்டையாக பிடிச்சி உட்டீங்க . அந்த ஆளு ஒரு வேலையும் ஒழுங்கா செய்யாம எப்ப பார்த்தாலும் படிச்சிகிட்டே இருக்காரு . உங்களை போய் அப்படி பேசராரு . எங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமாக போச்சு சார் . நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க சார் . அந்த ஆளு சரியில்லை . மேனேஜர் வேலைக்கே லாயிக்கில்ல சார் என்னய்யா இன்னிக்கு இங்க வந்திருக்க என்ன விஷயம் . நீ விஷயம் இல்லாம எங்களையும் வரமாட்டேயே என்று ராம் , கணேஷை கேட்க , சார் உங்களுக்கு விஷயம் தெரியுமா என்று கேட்டான் கணேஷ் . என்னய்யா விஷயம் என்று கேட்க , உங்களுக்கு சார்ஜ் மெமோ டைம் செய்ய சொல்லி தங்கராஜ் எங்கிட்ட கொடுத்திருக்காரு சார் . நீங்க வாங்கிடாதிங்க சார் என்றான் கணேஷ் . எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது சார் அதை டைப் பண்ண என்றான் .

என்ன வேண்ணாலும் டைப் பண்ணட்டும் . எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை . உலகத்துலே ஞாயம்ண்ணு ஒண்ணு இருக்குமில்லை . நீதிண்ணு ஒன்னு இருக்கில்ல . சத்தியண்ணு ஒன்னு இருக்கில்ல . பார்த்திடலாம் . யார் சொன்னது தப்பு ? யார் சொன்னது சரிண்ணு ? இதுக்கெல்லாம் கவலைப்படாதே கணேஷ் .‌இதுக்கெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு இருந்த இந்த சீட்டுலே என்னாலே இருந்து வேலே பாக்க முடியாது . அந்தாளு என்ன பண்ண முடியுமோ செய்யட்டும் . நான் இது மாதிரி எவ்வளவோ பார்த்து விட்டேன் . இதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று ராம் சொன்னார் . சார் இன்னும் ஒரு விஷயம் சொல் மறந்துட்டேன் . காலையில் இருந்து நான்கு அல்லது ஐந்து முறைக்கு மேலே பி டி ( Personnel Department ) க்கு நடையா நடந்து கொண்டு இருக்கார் சார் , மேனேஜர் தங்கராஜ் அந்த சார்ஜ் மெமோ வைத்து க் கொண்டு . என்ன விஷயம் தான் தெரியலை , என்று சொன்னான் கணேஷ் . சரி சார் நான் வரேன் . இங்கே அதிக நேரம் இருந்தா அதுக்கு என்னை ஏதாவது செய்தாலும் செய்வார் . இல்லை என்றால் இதற்கும் ஏதாவது சொல்வார் . இதையெல்லாம் நான் சொன்னேனனு யாருகிட்டேயும் சொல்லிடாதிங்க சார் . நான் வேறு டிரைனிங் பீரியட்லே இருக்கேன் ( Training Period ) என்று சொல்லி விட்டு கணேஷ் போய் விட்டான் .


ராமி ற்க்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . தங்கராஜ் ஏதோ தனக்கு கெடுதல் விளைவிக்கும் செயலை செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் என்று மட்டும் நிச்சயமாக புரிந்தது . பார்க்கலாம் என்ன தான் செய்யப் போகிறார் என்று .‌ தான் அதற்குள் தன் தரப்பு ஞாயத்தை ஜி எம் அல்லது வி பி எல்லோரிடமும் சொல்லி விட வேண்டும் என்று நினைத்தான் ராம் .

என்ன செய்வது என்று ஒன்றும் ஐடியா எதுவும் வரவில்லை கணேஷ் வந்த சிறிது நேரம் கழித்து தங்கராஜ் கையில் ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டு வி பி ஐ பார்க்க அவருடைய கேபினுக்கு வெளியே இருந்து பார்த்து விட்டு திரும்பவும் சென்று விட்டார் . மறுபடியும் திரும்பவும் வந்தார் , கையில் பேப்பரை எடுத்து கொண்டு . பிறகு ஜி .எம் கேபினுக்கு வெளியில் இருந்து ஜி .எம் இருக்கிறாரா என்று பார்த்து திரும்பவும் சென்று விட்டார் . குட்டி போட்ட பூனை ? போல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார் . இதையெல்லாம் ராம் தன்னுடைய இடத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார் இருந்தார் என்று சொல்வதை விட எதேச்சையாக கண்களில்
பட்டுக்கொண்டிருந்தது. ஏனெனில் ராமின் சீட் ‌ ஜி.எம் அல்லது வி பி கேபினுக்கு எதிர் புறம் இருந்தது . அப்பொழுது வேறு வேலையாக அந்த வழியாக வந்த P. D ( Personnel Department ) கிருஷ்ணசாமி , ராம் நேரம் கிடைக்கும் போது நீங்கள் என் சீட்டுக்கு வாங்க என்று சொன்னார் . இப்பொழுது வரவேண்டுமா ? கொஞ்சம் முக்கியமான ரிப்போர்ட் ஒன்று தயாரித்து கொண்டு இருக்கிறேன் ஜி.எம் (Press Shop ) கேட்டிருக்கிறார் . என்ன விஷயம் என்று இங்கேயே சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் . இல்லை என்றால் நானே உங்கள் இடத்திற்கு வருகிறேன் இந்த ரிப்போர்ட் ஐ முடித்து விட்டு என்று ராம் சொன்னார். அதற்கு அவர் இங்கு அந்த விஷயத்தை சொல்ல முடியாது . ரொம்பவும் இரகசியமானது . உங்களிடம் தான் சொல்ல வேண்டும் , தனியாக என்றார் . ரிப்போர்ட் ஐ முடித்து விட்டே வாருங்கள் . ஒன்றும் அவசரம் இல்லை என்று கூறி சென்று விட்டார் .



(தொடரும்)

ண்ெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெெ
 
Top