Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 6.

Advertisement

V R K

Member
Member
அத்தியாயம் 6 .





அன்று ராமிற்கு நிறைய வேலை இருந்தது . கிருஷ்ணசாமி வரச்சொல்லி இருந்தார் . ஆனால் ஜி.எம் ரிப்போர்ட் முடிக்கவே நேரம் அதிகம் ஆகிவிட்டது . எனவே சாப்பிட்டு விட்டு வந்து பிறகு அவரை பார்க்கலாம் என்று நினைத்து அவருடைய சீட்டிற்கு சென்று பார்க்க அவர் அங்கு இல்லை .‌ சரி பிறகு பார்க்கலாம் என்று நினைத்து சாப்பிட போகலாம் என்று புறப்படும் நேரத்தில் பிரஸ் ஷாப் மேனேஜர் ஸ்ரீ ராமுலு வேகமாக ராமிடம் ஏதோ சொல்ல வந்தவர் பிறகு வருகிறேன் என்று சொல்லி வி.பீ ஐ பார்க்க சென்று விட்டார் . பிறகு அவனிடம் வருகிறேன் என்று சைகையால் சொல்லி மிக வேகமாக சென்றார் . ஏதோ பெரிய பிரச்சினை நடந்தது கொண்டு இருக்கிறது என்று மட்டும் ராமிற்கு புரிந்து . ஆனால் என்ன என்று
தான் தெரியவில்லை . அவர் வருகிறேன் என்றால் கட்டாயம் வருவார் . நல்ல மனிதர் . ஆனால் நல்லவர்களுக்கு தான் காலம் இல்லையே என்று நினைத்து கொண்டார் .



அப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் போது அவனுடைய இன்டர் காம் ‌ஒலித்தது . அதை எடுத்து ஹலோ‌ என்று சொல்ல , ஜி.‌எம் ஃபைனான்ஸ் ராஜாகோபாலன் அவனை உடனே அவருடைய கேபினுக்கு வரச் சொல்ல‌ , அவருடைய கேபினுக்கு ராம் விரைந்தான் . அவர் அவனிடம் பிரேக்கஸ் இந்தியா கஸ்டமர் ஸ்பாக்கெட் தயாரிக்க அனுப்பிய ரா மெட்டீரியல் சமீபத்தில் எவ்வளவு வந்தது ? இப்பொழுது ஸ்டோர்ஸூல் எவ்வளவு இருக்கிறது ? என்று நேரே பார்த்து விட்டு வந்து எனக்கு ஒரு ரிப்போர்ட் கொடு . ஃக்யிக் என்றார் . அவன் விரைவாக சென்று ஸ்டோர்ஸூல் கிளார்கை கேட்க பிறகு பின் கார்டில் ( Bin Card ) இருக்கும் ஸ்டாக்கை செக் செய்து , பிறகு நேரடியாக அந்த ரா மெட்டீரியல் இருக்கிறதா ? என்பதையும் சரி பார்த்து அதையெல்லாம் ஒரு ரிப்போர்ட் ஆக பேப்பரில் எழுதி பிறகு அதை ஜி . எம் இடம் கொடுக்க , அவர் அதை பார்த்து விட்டு , நீ நேரில் சென்று ஸ்டோர்ஸூல் ஸ்டாக் இருக்கான்னு பார்த்தாயா ? என்று கேட்க அதற்கு அவன் , ஆமாம் இப்போழுது தான் நீங்கள் சொல்லியபடி பார்த்து விட்டு வந்து தான் ரிப்போர்ட் தருகிறேன் என்றான் .




அவர் அந்த ரிப்போர்ட் பேப்பரை ஐ கையில் ‌எடுத்துக் கொண்டு எம்‌ . டீ ஐ பார்க்க விரைந்தார் கேபினுக்கு , அவனை இருக்கச் சொல்லிவிட்டு . அவனுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை . பிறகு சிறிது நேரம் கழித்து வந்தவர் சரி நீ போகலாம் ‌என்றார் . எதாவது பிரச்சனையா சார் ? என்று கேட்க , பிரேக்ஸ் இந்தியா , அவருடைய ஸ்பாக்கெட் ( Sprocket ) வரவில்லை என்று மேனேஜர் பிரஸ் ஷாப் ஸ்ரீ ராமுவுக்கு ஃபோன் செய்து கேட்க ‌அதற்கு அவர் ‌ரா மெட்டீரியல் இல்லை என்று சொல்லி இருக்கிறார் . அவர்கள் உடனே எம் டீ க்கு ஃபோன் செய்து , சமீபத்தில் தான் ராமெட்டீரில் அனுப்பி உள்ளோம் . உங்கள் ஒர்க்ஸ் மேனேஜர் ரா மெட்டீரியல் இல்லை என்று சொல்கிறார் . உங்கள் கம்பெனியில் என்ன தான் நடக்கிறது ? என்று கேட்க , உடனே எம் டீ ‌ , வீ‌ பீக்கு ‌‌ஃபோன் செய்து கேட்க வீ .பீ ஸ்ரீ ராமுலு வை கூப்பிடு சத்தம் போட , ‌‌ ‌ ஒரே பிரச்சினை தான் . இப்பொழுது ராமிற்கு தெளிவாக புரிந்தது .என்ன பிரச்சினை என்று .




இதனால் இன்று எத்தனை பேருடை தலை உருலப் போகிறது என்று தெரியவில்லை . ஆனால் மிகவும் பெரிய பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை . வீ பீ , ஸ்ரீ ராமுலுவை கூப்பிட்டு சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார் . பிறகு எல்லோரும் எம் டீ கேபினுக்கு சென்றார்கள் . சிறிது நேரம் கழித்து என்ன நடந்தது என்று தெரியவில்லை . ஆனால் ஸ்ரீ ராமுலு வேகமாக வந்தார் .‌ அவருடைய முகமே சரியாக இல்லை . சிறிது நேரத்திற்கு பிறகு தான் தெரிந்தது ஸ்ரீ ராமுலுவை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் என்று . மிகவும் நல்ல மனிதர் . என்ன செய்வது நேரம் சரியில்லை என்றால் என்ன வேண்டும் என்றாலும் நடக்கும் . ஒரே ஆறுதல் மூன்று மாதங்களுக்கு சம்பளம் கொடுத்து அனுப்பி இருப்பார்கள் . யாரோ செய்த தப்பிற்கு இவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது .





அப்புறம் விசாரித்த பிறகு தான் தெரிந்தது ,‌ மெட்டீரியல் பிளானிங் டிபார்ட்மெண்ட் நரம்சிம்ம ரெட்டி செய்த தவறு தான் அந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்று . அவரைக் கேட்டால் நான் நேற்று ஒரு நாள் லீவில் இருந்தேன் என் அஸிஸ்டெண்ட் நேற்று வந்த கஸ்டமர் மெட்டிரிலையை கணக்கில் எழுதவில்லை . நான் இன்று தான் லீவு முடிந்து வேலையில் சேர்ந்தேன் . என்னிடமும் சொல்லவில்லை . எனவே நான் தப்பு செய்யவில்லை .‌ மேனேஜர் ஸ்ரீ ராமுலு ஸ்டோர்ஸூல் போய் ரா மெட்டீரியல் இருக்கிறதா ?என்று பார்த்து பிறகு கஸ்டமரிடம் பேசி இருக்க வேண்டும் . அவரும் என் அஸிஸ்டெண்ட் கொடுத்த ரிப்போர்டை நம்பி‌ கஸ்டமரிடம் மெட்டிரியல் இல்லை என்று சொல்லி இருக்கிறார் . நான் என்ன செய்ய ? என்றான் . கடைசியில் மேனேஜரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் .





யாரே குற்றம் சொல்லி என்ன செய்வது ? எந்த வித பிரயோஜனமும் இல்லை .‌ ராமிற்கு இதையெல்லாம் கேட்க கேட்க மனசே சரியில்லை . யாரையும் நம்பி வேலை செய்ய முடியாது . இருந்தாலும் யாரையாவது நம்பி தானே வேலை செய்ய வேண்டி இருக்கிறது . எல்லாவற்றையும் நாமே செய்ய முடியுமா ? மேனேஜராக இருந்த பாவத்திற்கு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது . பழி ஓர் இடம் . பாவம் ஓரிடம் என்பது சரியாக தான் இருக்கிறது .





ஒரு மேனேஜருக்கே இந்த நிலமை என்றால் தனக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை . சரி இனிமேல் கவலைப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை . நடப்பது நடக்கட்டும் . நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்போம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தார் . அன்று ஸ்ரீ ராமுலுவை பற்றி தான் ‌ஒரே பேச்சாக இருந்தது . அவரும் தான் கஸ்டமரிடம் பேசுவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை அவருக்கு கொடுக்கப்பட்ட தகவலை சரிபார்த்து பிறகு பேசி இருக்க வேண்டும் . அவர் அதை செய்ய வில்லை . அது தான் பிரச்சினை க்கு முக்கிய காரணம் . அவர் எளிதில் அஸிஸ்டென்டை நம்பி பெரிய பிரச்சினையில் வசமாக மாட்டிக்கொண்டு விட்டார் . விதி வலியது என்று சொல்லுவார்கள் அது சரியாக தான் இருக்கிறது . இதை வேறு என்னவேன்று சொல்வது ? விதியை மதியால் வெல்லலாம் என்று வார்த்தைக்கு சொல்லலாம் . ஆனால் அப்படி விதியை வெல்லக் கூட விதி , அப்படி இருக்க வேண்டும் . பலவித சிந்தனையில் ராம் வேலை பார்த்து கொண்டு இருந்தார் . ஒன்று மட்டும் நிச்சயம் . நடப்பது நடந்தே தீரும் . அதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை . ஒரு ஒர்க்கர் காட்பாடி ஃபேக்டரிக்கு வேலை விஷயமா ஆன் டியூடியில் ( On Duty ) சென்று திரும்பிய வந்து இருந்தான் . அவன் டி ஏ பில் எழுத அவனுடைய டி . ஏ எவ்வளவு என்று கேட்க மேலும் , தான் செய்த செலவை சொல்லி , அதை எவ்வாறு எழுத வேண்டும் என்று கேட்க வந்திருந்தான் . ராம் அவனுடைய கிரேடை ஐ (Grade ) கேட்டு பிறகு விவரங்களை சொல்லி ‌அகெளெண்ட் டிபார்ட்மெண்டில் ஃபார்ம் வாங்கி பில்லப் செய்து அவனுடைய மேலதிகாரி கையெழுத்தை வாங்கி பிறகு தன்னிடம் தரச் சொல்லி‌ அவனை அனுப்பி வைத்தார் .





( தொடரும்)
 
தவறுதலாக எனது தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 6. இங்கு போஸ்ட் ஆகிவிட்டது . இதை எவ்வாறு எனது thread க்கு மாற்றுவது என்று தெரியவில்லை. எனவே #அட்மின் இதை எனது கதை தளத்திற்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் . நன்றி .
 
Top