Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 8.

Advertisement

V R K

Member
Member
அத்தியாயம் ‌8.




ராம் வேலையை முடித்து விட்டு ஜி. எம் ஐ போய் பார்க்க நினைத்து அவளுடைய கேபினுக்கு போனார் .‌ அவர் ஃபோனில் யாருடனே பேசி கொண்டு இருந்தார் . அவர் பெயர் ராம் பிரசாத் . கர்நாடக காரர் . நிறைய அனுபவம் வாய்ந்தவர் . எதை சொல்லதானாலும் அவரே நேரில் ராமின் சீட்டிற்கு வந்து ராமிடம் விளக்கம் கேட்டு விட்டு செல்வார் . வரமுடியாது போது இன்டர் காம் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு அவன் செய்வார் .‌ நல்ல அனுபவஸ்தர் . நல்ல மனிதர் . ஈகோ இல்லாதவர் . அவர் முகத்தில் எப்போதும் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும் . அதிகம் அதிர்ந்து பேசாதவர் . ஆனால் சொல்ல வேண்டிய கருத்தை தெளிவாக ஆணித்தரமாக சொல்பவர் மொத்தத்தில் அந்த கம்பெனியில் இருக்க மிகவும் தகுதியானவர் .





‌ஆனால் மேனேஜ்மென்ட் ‌ஏனோ அவரை இப்பொழுது ஒதுக்கி வைத்திருக்கிறது அதுவும் வீ .பீ வந்த பிறகு வீ. பீ க்குத் தான் இப்பொழுது அதிகமாக மரியாதை . ‌ இருந்த போதிலும் ராம் பிரசாத் எதைப்பற்றியும் துளி கூட கவலைப்படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இப்போது இருக்க ஆரம்பித்தார் . ராமிற்கு அவர் மேல் எப்பொழுதும் ஒரு தனி மரியாதை உண்டு . எதையும் விசாரணை செய்யாமல் செய்ய மாட்டார் . ராமை பார்த்து அவனை செய்கையால் உள்ளே வரச் சொன்னார் . இன்னும்
ஃபோனில் யாருடனே பேசி கொண்டு இருந்தார் பிறகு அவனை‌உட்கார சொல்லி ஜாடை காண்பித்தார் . ‌அவன் தேங்கியூ என்று சொல்லி அமர்ந்தான் . பிறகு ஃபோன் பேசி முடித்த பிறகு ஏதோ ஒரு ஃபைலை எடுத்து பார்த்து கொண்டு இருந்தார் . பிறகு அவருடைய செக்ரட்ரி சுதீரை கூப்பிடு ஏதோ விவரம் கேட்ட அவன் அந்த ஃபைலை எடுத்து வர சென்றான் .‌








பிறகு அவனை
பார்த்து ராம் எனிதிங் இம்பார் டெண்ட் டு சே‌ ( Anything important to say ? ) Ram said that yes sir . I want to talk to you for atleast 30 minutes to tell you something about the incident that took place , three days ago on 7th of this month . He said , o.k man . Now I am urgently go for a meeting at M. D ' s Cabin in another five minutes . Could contact me after sometime ? He said yes sir . Sorry for the inconvenience caused to you I will come after sometime . Let me make a move . Thank you sir . He said , carry on man. Then G .M come out his Cabin to proceed to M. D ' s Cabin in a Hurry Burry .





ராம் பிரசாத் அவருடைய செக்ரெட்டரி சுதீரை கூப்பிடு ஏதோ ஒரு ஃபைலை கேட்க‌‌ , அவன் அதை எடுத்து வர விரைந்தான் . ராம் நான் அவசரமாக எம் . டீ மீட்டிங் போகிறேன் . எனவே நீங்கள் பிறகு வாருங்கள் . பேச லாம் என்று சொல்லி புறப்பட்டார் .ராமும் சரி சார் என்றார் . சிறிது நேரம் கழித்து டைப்பிஸ்ட் கணேஷ் ராம் பிரசாத் கேபினுக்கு வந்தவன் ராமிடம் வந்து , " சார் ஜி .எம் இல்லை ? என்னை மினிட்ஸ் ஆஃப் தி மீட்டிங் டைப்செய்ய வேண்டும் " என்று வரச்சொல்லி இருந்தார் .




அவரை அவருடைய கேபினில் காணவில்லை என்று சொல்லி ராம் முன்பு இருந்த இருக்கையில் அமர்ந்தான் . சார் வரவர வேலை செய்யவே கஷ்டமாக இருக்கிறது . நீங்கள் எல்லாம் மிகவும் பெரிய ஆள் சார் . எப்படி தான் பத்து வருடங்களாக இங்கு வேலை செய்கிறீர்களா ? என்று தெரியவில்லை . நான் வேறு எங்காவது வேறு வேலை தேடிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன் என்றான் . சார் உங்கள் டிபார்ட்மெண்டில் ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் சார் . நான் வந்து விடுகிறேன் . உங்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்றான் . இப்பொழுது எதுவும் வேக்கன்ட் இல்லை . மேலும் உங்கள் மேனேஜர் அதற்கு சம்மதம் சொல்ல‌வேண்டும் அந்தாள் அதை செய்ய மாட்டார் நீ டைப்பிஸ்ட் தான் . உன்னை கிளாரக் காக போட மாட்டார்கள் . கணேஷ் எங்கு போனாலும் இந்த பாலிடிக்ஸ் இருக்க தான் செய்யும் . எனவே தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என்றார் ஐந்து மணி ஆகிவிட்டது .





இன்னும் ஜி எம் ராம் பிரசாத் வரவில்லை . சார் இப்பொழுது என்ன செய்வது என்று கேட்க , ராம் இன்னும் சிறிது நேரம் பார் . இல்லையெனில் புறப்பட்டு விடு என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ராம் பிரசாத் கேபினுக்கு வந்து விட்டார் . கணேஷ் அவருடைய கேபினை நோக்கி சென்றான் . எல்லாமே புறப்படும் விட்டார்கள் வீட்டிற்கு போவதற்கு . ஆனால் ராம் ஆல் போக முடியாது . ஏனெனில் அவனுக்கு முடிக்க வேண்டிய வேலை இருந்தது . அதை முடித்து விட்டு தான் போகமுடியும் . என்ன செய்வது கொடுத்து வைத்தவர்கள் சரியாக ஐந்து மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்கள் . ஐந்தே காலுக்கு கம்பெனி பஸ் புறப்பட்டு விடும் தினசரி மிகவும் லேட்டாக செல்வது கஷ்டமாக இருந்தது . தன்னுடைய சொந்த வேலைகளை கூட செய்து கொள்ள முடியவில்லை .‌ எத்தனை நாளைக்கு இப்படி வேலை செய்ய முடியும் என்று தெரியவில்லை . கேன்டீனுக்கு சென்று டீ குடித்து விட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான் . இரண்டு ஆள் வேலையை செய்ய வேண்டிய சூழ்நிலை . வேலை பளு அதிகமாக இருக்கிறது வேறு ஒருவரை எடுக்க வேண்டும் என்று சொல்ல இருக்கிறவர்களுக்கே வேலை இல்லை . உங்களுக்கு வேலை வாங்கித் தெரியவில்லை என்று சொல்கிறார்கள் . என்ன செய்வது என்று தெரியாமல் அவனே எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தார் .





(தொடரும்)
 
Last edited:
Top