Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தன்மானம் அல்லது சுயமரியாதை அத்தியாயம் 9 .

Advertisement

V R K

Member
Member
அத்தியாயம் 9.






அடுத்த நாள் வந்தது .‌ ராம் Personnel Department சென்றார் கிருஷ்ணசாமி யை சந்திக்க . அவர் சிறிது நேரம் கழித்து வருவார் என்றும் அவனை காத்திருக்கும் படியும் சொன்னார்கள் . அவர் வந்து , " எஸ் ராம் சொல்லுங்கள் அந்த ஸ்ரீ ராமுலு விஷயமாக தான் அகெளண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்க்கு சென்றிருந்தேன் ...! " பார்மால்டி எல்லாம் முடிந்தது .‌ இன்னும் சிறிது நேரம் இங்கு இருங்கள் ... நான் வந்து விடுகிறேன் ... ! "என்று சொல்லி புறப்பட்டார் . பிறகு வந்து , " சொல்லுங்கள் ராம் ... என்ன நடந்தது அன்று என்றார் ... ? " நான் , " சார் அன்று சம்பள நாள் ... அதனால் பணம் ஃபில்லிங் செய்ய வரச்சொன்னார் . நான் ஜி. எம் கேட்ட ரிப்போர்ட் தயாரித்து கொண்டு இருந்தேன் . அப்பொழுது தான் இவர் வந்து வரச்சொல்ல , நான் என் டிபார்ட்மெண்ட் ஸ்டாப்ஸ் எல்லோரையும் முதலில் அனுப்பி விட்டு , ஜி . எம் வேலை முடித்து விட்டு பிறகு வருகிறேன் என்றேன் . அவரும் சரி என்று கூறி சென்று விட்டார் . அப்பொழுது பார்த்து வீ . பீ கூப்பிடு வேறு ஒரு ரிப்போர்ட் தயாரித்து கொடுக்க சொன்னார் . நான் ஜி .எம் இடம் , " இந்த மாதிரி வீ . பீ ரிப்போர்ட் கேட்கிறார் அவசரமாக என்ன செய்வது ... ? " என்று கேட்டேன் . அதற்கு அவர் நீங்கள் என் ரிப்போர்ட் டை பிறகு தாருங்கள் . முதலில் வீ .பீ கேட்ட ரிப்போர்ட் டை தயாரித்து கொடுங்கள் என்றார் .




அப்பொழுது மறுபடியும் தங்கராஜ் வந்து , என்னை வரச்சொல்ல நான் விஷயத்தை கூறினேன் . வேண்டும் என்றால் வீ பீ இடம் பேசுங்கள் நான் அந்த வேலைக்கு வருகிறேன் என்றேன் . அவர் நான் அவரிடம் பேச முடியாது . அந்த ரிப்போர்ட் ஐ முடித்து விட்டு உடனே வாங்க என்று சொன்னார் . நானும் அதற்கு சரியென்று சொல்லி வேலை செய்து கொண்டிருந்தேன் .





பிறகு அந்த வேலை முடித்து விட்டு உடனே சாப்பிட கூட இல்லாமல் அக்களெண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் சென்று , " வேலை முடித்து விட்டு உடனே வந்திருக்கிறேன் ... என்ன செய்ய வேண்டும் ‌... ? " என்று கேட்க , தங்கராஜ் என்னை " இடியட் " என்று திட்டினார் . எனக்கு கோபம் வந்து விட்டது . நானும் அவரை, " நான் இடியட் என்றால் நீங்களும் தான் இடியட் ...‌ ! " என்று கூறி விட்டு திரும்பி வந்து விட்டேன் என் சீட்டுக்கு . என்னை அவமானம் படுத்தும் வகையில் பேசினால் நான் எவ்வாறு
பொறுத்துக்கொள்ள முடியும் ? இவருக்கு என்னை பேச யார் அதிகாரம் கொடுத்தது ? அநாகரிகமான எப்படி இப்படி பேசலாம் ? தன்மானத்தை அவர் டச் செய்யற மாதிரி பேசினால் , நான் எப்படி பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும் ? என்று கேட்டார் . அதற்கு கிருஷ்ணசாமி நீங்கள் சொல்வது சரி தான் . ஆனால் தங்கராஜ் தான் தப்பே செய்யாத மாதிரி இங்கு வந்து பேசினார் . இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது ‌என்று எனக்கு தெரியாது . நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரிந்தது .




அதற்கு ராம் , " நீங்கள் கூட அன்று சண்டை நடக்கும் போது அங்கு வந்தீர்கள் ". நான் பார்த்த மாதிரி ஞாபகம் வருகிறது . என்று சொல்ல , " ஆமாம் ஒரு வேலையாக வந்தேன் . பிறகு கூட்டமாக இருந்ததால் பிறகு வரலாம் என்று திரும்பி வந்து விட்டேன் ...' என்றார் கிருஷ்ணசாமி . அடுத்த நாள் காலை தங்கராஜ் இங்கு வந்தார் . ஒரு சார்ஜ் மெமோ எடுத்துக் கொண்டு என்னிடம் அதை உங்களுக்கு தரச் சொல்லி என்னிடம் கேட்டார் .





அதற்கு நான் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினேன் . பிறகு உங்கள் டைம் கார்டு எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் ராம் இந்த வாரமே இரண்டு நாள் லேட்டாக வந்திருக்கிறான் . எனவே அதை வைத்து அவர்மேல் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேள்வி கேட்டார் . அதற்கு அவர் மேனேஜ்மென்ட் ஸ்டாப் . அவர் தினமும் 8 மணிக்கு மேல் போயிருக்கிறார் . எனவே ரூல் படி தான் நடந்தது கொண்டு இருக்கிறார் . மேலும் ஓவர் டைம் பார்க்க கம்பெனி பணம் தருவதில்லை .சில சலுகைகளை தான் தருகிறது





எனவே நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது சட்டப்படி . மேலும் அவர் பர்மெணட் எம்ளாயீ வேறு . 10 வருடங்களுக்கு மேல் சர்வீஸ் ஆகிவிட்டது . நீங்கள் சொல்வது போல் எல்லாம் செய்ய முடியாது . மேலும் அவர் ஒரு சின்சியர் மற்றும் ஹானஸ்ட் ஸ்டாப் . எனவே நாங்கள் அவர் மேல் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது . நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் , டிபார்ட்மெண்ட் ஆக்ஷன் எடுத்துக் கொள்ளுங்கள் . அது கூட உங்களால் எடுக்க முடியாது . நீங்கள் ஜி . எம் பைனான்ஸ் இடம் அனுமதி வாங்க வேண்டும் . பிறகு வீ .பீ இடம் அனுமதி வாங்க வேண்டும் . பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி அனுப்பி வைத்து விட்டேன் . தங்கராஜ் வேகமாக ‌, கோபமாக புறப்பட்டு சென்று விட்டார் என்று கிருஷ்ணசாமி சிரித்துக் கொண்டே சொன்னார் . மேலும் தப்பு பூராவும் தங்கராஜ் மேல் இருக்கிறது . அதை அவர் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள வில்லை . அவர் பாட்டுக்கு என்னென்னவோ பேசிக்கிட்டு இருந்தார் . எனக்கு என்ன சொல்வதேன்று தெரியவில்லை . நான் அவருடைய அறியாமையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டு இருந்தேன் . என்ன செய்வது இது மாதிரி ஆட்களை ‌பார்க்க வேண்டி இருக்கிறது இங்கு இருப்பதால் . வேறு வழியே இல்லை என்றார் . அப்புறம் D . G . M (Personnel) விஜய் குல்கர்னியை போய் பார்த்தார் தங்கராஜ் . அவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை . என்னிடம் ஒன்றுமே சொல்லாமல் சென்று விட்டார் தங்கராஜ் , என்றார் சிரித்துக் கொண்டே . ராம் எனக்கு தெரியும் அந்த ஆள் என்ன வேணும்னாலும் பண்ணுவார்ண்ணு . இது எது வரை போகிறது என்று பார்க்கலாம் என்று தான் நான் சும்மா இருக்கிறேன் .






என்ன நடந்தாலும் சரி , நான் சும்மா இருக்க மாட்டேன் . எப்பொழுது இவ்வளவு தூரம் ஆகிவிட்டதோ , நானும் ஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை . என்மேல் தப்பு இல்லாத போது நான் ஏன் கவலைப்பட வேண்டும் ? வருவது வரட்டும் . பார்த்து விடலாம் நானா அவரா என்று . ஜி.எம் இடம் அப்பாயிண்ட்மெட் கேட்டிருக்கிறேன் இதைப்பற்றி விவரமாக பேச . அவரும் அவர் ப்ரீயா இருக்கும் போது கூப்பிடுவதாக சொன்னார் . நான் வேண்டுமானால் விஜய் குல்கர்னியை போய் பார்க்கட்டுமா என்று கிருஷ்ணசாமியை கேட்க அதற்கு அவர் லீவில் இருக்கிறார் . நீங்கள் கவலைப்பட வேண்டாம் . நான் அவரிடம் முதலிலேயே இந்த விஷயங்களை கூறி விட்டேன் . நீங்கள் இன்று சொன்னதையும் அப்படியே சொல்லி விடுகிறேன் . தேவையென்றால் அவர் வந்த பிறகு ‌, நீங்கள் பேசுங்கள் என்றார் . " சரி சார் நான் புறப்படட்டுமா ?" என்று கேட்க அதற்கு அவர் நீங்கள் கவலைபடாமல் புறப்படுங்கள் இதை பிறகு பார்க்கலாம் ‌என்றார் .‌ ‌மனதில் உள்ள பாரம் சற்று குறைந்த மாதிரி இருந்தது கிருஷ்ணசாமி யிடம் பேசிய பிறகு . பிரச்சினை இன்னும் முடியவில்லை . கிணற்றில் போட்ட கல் மாதிரி அப்படியே தான் இருக்கிறது .





ஆனால் ஒன்று மற்றும் நிச்சயம் . தங்கராஜ் மட்டுமே நினைத்தால் ‌ஒன்றும் செய்ய முடியாது . ஜி எம் பைனான்ஸ்ஸை மீறி ஒன்றும் செய்ய முடியாது . அப்படியே செய்வதாக இருந்தால் வீ பீ மூலம் ஏதாவது செய்யவும் முடியாது . காரணம் வீ .பீ இடம் போனால் அவர் ஜி எம் இடம் கேட்காமல் , அவருடைய அனுமதி இல்லாமல் ஒன்றும் செய்ய மாட்டார் . அவர் மிகவும் அனுபவசாலி . எதையும் விசாரணை செய்யாமல் செய்ய மாட்டார்
தன்மானம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவரும் ஒப்புக்கொள்வார் . ஒருவன் தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம் . எதற்காகவும் தன்மானத்தை இழந்து வாழ முடியாது . தன்மானம் இல்லாமல் வாழும் வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை . அதற்கு வாழாமல் இருந்து விடலாம் . இப்படி மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றியது .





(தொடரும் )
 
Last edited:
Top