Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தருதரன் - பாகம் 2

Advertisement

Hariharan

Member
Member
மின்வெட்டை போல் திடீரென பாய்ந்தது அவ்வெளிச்சம். வெளிச்சம் வந்து மங்கியதில் ஏற்கனவே இருந்த கும் இருட்டு மேலும் 'கும்'மியது. இதுதான் சாவா? புவியில் அவ்வளவு ஆர்பாட்டம் இருக்க இங்கு எவ்வளவு அமைதி? அவன் அந்த அமைதியை ஆத்மார்த்தமாக உள்வாங்கிக் கொண்டான். தன் முன் யாரோ வருவதை உணர்ந்தான். நிமிர்ந்து பார்க்கையில் ஒரு ஒளி ரூபம் அங்கு நின்று கொண்டிருந்தது. அது யார் என்பது அவனுக்கு தன் ஆழ் மனதின் அதீத உணர்ச்சி பொங்களினாலேயே புரிந்தது.

"நீ, நீ தானே?", என்று கேட்டான்.

"நான் நான் தான்", என்று அவ்வாயில்லா அருவம் வார்த்தையில்லா மொழியில் பதில் சொன்னது.

அதிசயமாக அந்த பாஷை அவனுக்கும் விளங்கியது.

"நீ கேட்டது போலவே; இதோ என் சாவு", என்றான்.

அந்த நிழலொளி அருவமானது ஒரு குடுவையை அவனிடம் நீட்டிற்று.

"என்ன இது?", என்றான்.

"எண்ணெய்"

"உன்னை தருகிறேன் என்றுதானே சொன்னாய்?", என்று அவன் ஏக்கமாக பார்த்து கேட்டான்.

"இல்லை. நான் 'சாவை கொண்டு வா; எண்ணெய் தருகிறேன்' என்று தான் சொன்னேன். வேணுமென்றால் வாங்கிக்கொள். இல்லாவிடில் எனக்கு ஒரு கவலையும் இல்லை"

"அடி பாதகி! கிராதகி! வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றிவிட்டாயே! உன் சொல் கேட்டு எனக்கு பிடித்த புவி வாழ்வையே துறந்துவிட்டு வந்தேனே! அதற்கு இதுதானா பரிசு? கள்ளி! ராட்சஸி! அரக்கி!", என்று வைந்துகொண்டே அந்த குடுவையை வாங்கிக்கொண்டான்.

"இப்போது இதைவைத்து நான் என்ன செய்வது?", என்று அவளையே கேட்டான்.

"அதோ", என்று தூரத்தில் அவள் சுட்டிக்காட்டி, "அங்கு போய் உட்கார்ந்து வடை சுடு போ!", என்றாள்.

அவனுக்கு ஆத்திரம் பொத்திக்கொண்டு வந்தது. இவளை நொந்து என்ன பிரயோஜனம்? அடக்கமாக நடக்கலானான்.

அதை பார்த்த அவ்வருவம் ரசித்து ரசித்து சிரித்தது.

"இளிக்காதே! பல்லை பெயர்துவிடுவேன்!", என்றான் ஆத்திரமாக.

அவளுக்கு மேலும் சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது. அவளையே கோபமாக பார்த்து கொண்டு அவன் நின்றான்.

வேண்டியமட்டும் சிரித்து முடித்த பின் அவனை நோக்கி "இங்கு வா", என்றாள்.

அவனும் அருகில் சென்றான்.

தன் இதையத்தை பிளந்து உள்ளிருந்து ஒரு சிகப்பு ரத்தினத்தை எடுத்து அவள் நீட்டினாள். ஒரு இருதையத்தை போலவே அது தோற்றமளித்தது.

ஜொலித்தது!

"என் அனைத்தும் இதில் அடங்கியுள்ளது. இதோ எடுத்துக்கொள்", என்றாள் கனிவாக.

அதை பார்த்த அவன் கண்கள் ஆச்சர்யத்தில் பிதுங்கி வெளியே வந்துவிடும் போல் இருந்தது. இதுவரை தன் வாழ்க்கையில் அப்படியொரு அழகிய பொருளை அவன் கண்டதே இல்லை! "பாக்கியசாலி நான்", என்று பவ்வியமாக வாங்கிக்கொள்ள போனான்.

அதற்குள் அவள் கரங்கள் மாயமாக கரைந்தன. அந்த இதைய வடிவு ரத்தினம் தரையில் விழுந்தது. உடனே கீழே அமர்ந்து அதை எடுக்கலாம் என்று அவன் யத்தனிக்க, ஒரு அணு கூட அவனால் அந்த இருதையத்தை நகர்த்த முடியவில்லை. முட்டி மோதி என்னவெல்லாமோ செய்து பார்த்து கலைத்து போனது தான் மிச்சம். "எவ்வளவு கனம்!", என்று பெருமூச்சு விட்டான். சட்டென ஒரு புன்முறுவல், அவன் உதட்டில். என்ன விஷயம் என்று அவனுக்கு விளங்கிவிட்டது போலும். கீழே ஒரு கால் ஊன்றி அமர்ந்தபடியே நிமிர்ந்து பார்த்து "அம்மணி! உன் இருதையத்தை கனக்கச் செய்யும் பாரம் என்னவோ?", என்றான்.

அவளுக்கு சிலிர்த்துப்போனது. "இதோ! என் இரு கரங்கள் கலவாடபட்டுள்ளன. அதை மீட்டு வந்தால் என் பாரம் குறையும்", என்றாள்.

"இரண்டு காட்டு சக்திகள் என் கரங்களை திருடியுள்ளன. அவை இன்னமும் அந்த அடர்ந்த வனத்திற்குள் தான் இருக்கின்றன. அவர்களிடம் இருந்து என் கரங்களை மீட்டு கொண்டு வா! பின் என் இருதையம் உனக்கு கிடைக்கும்!"

"நான் எப்படி மீண்டும் பூமிக்கு செல்வது? அதான் செத்துவிட்டேனே?", என்று அவன் யோசித்தான்.

"கவலை வேண்டாம்!" - அவன் பின்னாலிருந்து ஒரு பெரும் குரல் கேட்டது.

உடனே திரும்பி பார்க்க அங்கு ஒரு கரிய பெரும் நிழல் உருவம் நின்று கொண்டிருந்தது. அதன் தோற்றம், யாரோ ஒரு கருப்பு போர்வைக்குள் ஒளிந்து இருப்பது போல் இருந்தது.

"என்னால் உன்னை பூமிக்கு மீண்டும் அனுப்ப முடியும்", என்றது.

அவன் மிகவும் மகிழ்ச்சியானான்.

"மிக்க மகிழ்ச்சி. இப்போதே அனுப்புங்கள்", என்றான் உற்சாகமாக.

"ஆனால் ஒரு நிபந்தனை. உன் உயிர் மட்டுமே என்னிடம் உள்ளது. ஆதலால் உன் உயிரை மட்டுமே உலகிற்கு என்னால் அனுப்ப முடியும்"

"அப்போது என் உடல்?"

"பூமிக்கு செல். நீ தகுதியானவனாய் இருந்தால் பூமியே உனக்கு உன் உடலைத் தரும். தகுதியற்றவர் யாருக்கும் பூமியில் வாழ இடம் இல்லை"

"அப்படியென்றால் இப்போது புவியில் இருக்கும் எல்லோருமே தகுதியானவர்களா?", என்று தன் ஆழ் மனதின் பலநாள் சந்தேகத்தை வெளிகேட்டான்.

"ஆம். அதிலென்ன சந்தேகம்? புவியில் பிறப்பதற்கு… அதிலும் மனிதனாய் பிறப்பதற்கு நீரெல்லாம் நூறு ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்…"

மர்மன் தொடர்ந்தான்...

"பூமிக்கு உனை அனுப்புவதால் எனக்கு எந்த பயனும் இல்லை. என் பொழுதுபோக்கிற்காக உனை பணையம் வைக்கிறேன். புவிக்கு சென்ற பின், நீ தகுதியானவனாக இருப்பின், உனக்கு உன் உடல் கிடைக்கும். இல்லாவிடில்… நீ புவியிலேயே உடலற்று ஆவியாக சுற்ற வேண்டியதுதான். சொர்க்கத்திற்கும் செல்ல முடியாது. நரகத்திற்கும் செல்ல முடியாது. உயிர் இருந்தும் அதை பயன்படுத்த உடலின்றி ஒரு பற்றற்ற, கொள்கையற்ற, வெறுமையான நிலையிலேயே காலம் உள்ளவரை நீ கஷ்டப்பட நேரிடும்! இந்த நிபந்தனைக்கு நீ சம்மதமா?"

அந்த மர்ம உருவம் சொன்ன அனைத்தும் கேட்டு தருதரனுக்கு அச்சம் தலைக்கு ஏறியது. பேசாமல் இங்கேயே இருந்துவிடலாமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதைவிட புவிக்கு போக வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. அவன் உறுதியாக முடிவெடுத்தான். "சம்மதம்", என்றான்.

"இன்னொரு விஷயம்", என்று அந்த மர்மன் மீண்டும் தடுத்தான்.

"சொல்லும்! சொல்லி தொலையும்!"

"காலமானது இந்த தளத்தில் விசித்திரமாக செல்லும். புவிக்கு நீ திரும்பும்போது அங்கு எத்தனை ஆண்டுகள் முன்னோ பின்னோ சென்றிருக்கும் என்று யாம் அறியேன்!"

"பின்னுக்கு சென்றிருக்குமா?"

"வாய்ப்பு இருக்கிறது. கடந்த காலத்திற்கு செல்லும் பாக்கியம் புவி வாழ்பவர்களுக்கு தான் இல்லை. இந்த இடம் உன் கற்பனைக்கு அப்பாற்பட்ட இடம். இங்கு எதுவும் சாத்தியம்", என்று சொல்லி பேயாக சிரித்தான்.

"அந்த சவாலையும் நீ இப்போது எதிர்கொள்ள வேண்டும்!" - மீண்டும் சிரிக்கத் தொடங்கினான்.

"எதற்கும் நான் தயார்!", என்றான் அவன், கம்பீரமாக.

அடுத்த நொடி பூமியில் விழுந்து கிடந்தான். "என் உடல்", என்றவுடன் அவனை சுற்றியிருந்த மண், மாசு, தூசு அனைத்தும் அவன் உயிர் அருவத்தை சூழ்ந்தன. ஈரப்பதம் அவைகளை இறுக்கின. இறுகி, வடிவம் பெற்று உடலாக உருமாரின. தருதரன் உடல் பெற்று எழுந்தான். மீண்டும் பிறந்தான்.

இதை தன் இடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த மர்மனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

"இது சாத்தியமே இல்லை!", என்று கத்தினான்.

"எப்படி? இவன் எப்படி தகுதியானவன்? நான் சொன்ன நிபந்தனை புவியில் வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். புவி வாழ்வை துறந்து மீண்டும் பூமிக்கு திரும்பியவன் எவ்வாறு தகுதியானவன் ஆவான்? சாத்தியமே இல்லை!", என்று தலையை பிய்த்துக்கொண்டான்.

"ஒருவேளை, அவன் தகுதியை விட தான் வாழ வேண்டும் என்ற அவன் அவா பெரிதாக இருந்திருக்கலாம்... ஆதலால் பூமி மாதா அவன் ஆசையை நிறைவேற்றினாளோ என்னவோ?", என்றாள் அருகில் இருந்த அந்த ஒளி ரூபினி.

அக்கூற்றை ஏற்றுக்கொள்ள அந்த மர்மனுக்கு கடினமாக இருந்தது. "இப்படியும் ஒரு மனிதனா?", என்று வியந்தான்.

முதல் கட்டமாக தருதரன் ஒரு வாளை வாங்கிக்கொண்டு நேராக அக்காட்டிற்கு சென்றான். அச்சிலை முன் வந்தான். ஏக்க மனதோடு யார் வருகைக்காகவோ எதிர்பார்த்த வண்ணம் இரு கரம் கோர்த்தவாறு நின்றிருந்த அச்சிலையின் நிலை, அக்கரங்கள் இன்றி மேலும் பரிதாபமான நிலையில் கிடந்தது. அதை பார்த்த தருதரனுக்கு தன் லட்சியத்தை நிறைவேற்றும் வெறி பன்மடங்கு உயர்ந்தது. அவ்விடத்தை ஆராய்ந்தான். அச்சிலை இருந்த மண்டபத்திற்கு நேர் எதிரே இரண்டு பாதைகள் பிரிந்தன. இடையில் இருந்த வாளை பற்றிக்கொண்டு, இறைவனை வேண்டிக்கொண்டு, வள பக்கம் நோக்கிச் சென்றான்.

தன் உடல் பாரத்தை தாங்குவதே பெரிய விஷயம் என்ற நிலையில், அத்தனை கனம் கொண்ட போர் வாளை இடுப்பில் தாங்கிக்கொண்டு அவனால் சுத்தமாக சமாளிக்க முடியவில்லை. மூச்சு வாங்கி ஓர் இடத்தில் அப்படியே உட்கார்ந்துவிட்டான். சட்டென ஒரு சத்தம். யாரோ வருவதற்கான காலடி சத்தம். இவன் உடனே எழுந்து நின்று வாளை கையில் எடுத்துக்கொண்டான்.

"ஓய்!", என்று ஒரு குரல்.

"யாரு?", என்றான்.

வந்தது என்னமோ ஒரு சிறுவன். தன்னைவிட ஒரு ஐந்து வயது சிறுவனாக இருக்கலாம் என ஊகித்துக்கொண்டான். ஆள் பார்பதற்கு பெரிய இடம் போல் தெரிகிறது. ஆனால் அவன் தலையில் என்ன கந்தலான சிகப்பு தலைப்பாகை? நமக்கெதற்கு? என்று அச்சந்தேகத்தை உதறிவிட்டான்.

வந்தவனை நோக்கி தருதரன் "என்ன தம்பி? என்ன விஷயம்?", என்று கேட்டான்.

"ஒன்றுமில்லை. என் வீடு இவ்வழி தான். துணையாக வாரும்", என்றான் அச்சிறுவன்.

"வேறொரு சமயம் இவ்வாறு நீ கேட்டிருந்தாயனால் கட்டாயம் உன்னோடு வந்திருப்பேன். ஆனால் இப்போது எனக்கு இக்காட்டில் ஒரு வேளை இருக்கிறது", என்றான் தருதரன்; காட்டை தூரமாக நோக்கியவாறு.

"பரவாயில்லை வாரும் ஐயா. என்ன வேலை என்று சொல்லுங்கள் நானும் உதவி செய்கிறேன்"

"காட்டு சக்த்தியிடம் இருந்து ஒரு பொருளை நான் மீட்க வேண்டும். ஆபத்தான காரியம். புரிந்துகொள். கிளம்பிவிடு", என்று எச்சரித்துவிட்டு மேலும் தன் பயணத்தை தொடர்ந்தான்.

அவ்வாண்டு சிறுவனும் அவனையே பின்தொடர்ந்து நடந்தான்.

"என்ன பார்க்கிறாய்? என்னை அதிகாரம் செய்யும் அதிகாரம் உனக்கு இல்லை! நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்!", என்றான்.

விதியே என்று தருதரனும் நொந்துகொண்டு நடக்களானான்.

இருவரும் இவ்வாறு அப்பாதையில் தேடிச் செல்ல, ஒரு இடத்தில் மட்டும் விசித்திரமான நடுக்கத்தை அவர்கள் உணர்ந்தனர்.

"இங்கு தான் இருக்கிறது" - தருதரன் எச்சரிக்கையானான்.

"யாரது?", என்ற பூத குரல் அக்காடு முழுதும் இருந்து எழுந்து எதிரொலித்தது.

"அடேய் கொள்ளை காரனே! நீ திருடி வந்தது என் காதலியின் கரங்கள்! அவற்றை திருப்பி கொடுத்துவிடு!", என்று தருதரன் பதிலுக்கு கர்ஜித்தான்.

"தாராளமாய் தருகிறேன்! ஆனால் அதற்கு முன் நான் கேட்கும் விஷயத்தை எனக்கு குடு", என்றது அக்குரல்.

"என்ன வேண்டும் கேள்!"

"முதலாவதாக சூரியன்! இரண்டாவதாக பூமி, மூன்றாவதாக மழை! இம்மூன்றையும் கொண்டு வா, பிறகு நீ கேட்பது கிடைக்கும்", என்று அது சொன்னவுடன் இவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. குழம்பிப்போய் கிடந்தான்.

அருகில் இருந்த அச்சிறுவன் எதோ உன்னிப்பாக யோசிப்பது போல் தெரிந்தது. சட்டென தெளிந்து "ஓய் காட்டு சக்தியே! நீ கேட்டது என் காதில் தெளிவாக விழவில்லை! இன்னொரு முறை சொல்லும்!", என்றான் சிறுவன்.

அதுவும் திரும்ப சொன்னது.

"சூரியன்! பூமி! மழை! கொண்டு வா"

"மருக்கா சொல்லு?", என்று கூறி இரண்டடி முன்னே நடந்தான்.

"சூரியன்! பூ… பூமி! ம… மழை! கொண்டு வாஆ", என்று அது சொன்னபோது அக்குரலில் ஏதோ வலி தெரிந்தது.

"இன்னும் ஒருக்க சொல்லேன்", என்று அச்சிறுவன் மேலும் தூண்டினான்.

"அடேய்! சூரியன்! பூமி! மழை! தயவு செய்து கொண்டு வா!"

"சிக்கிவிட்டான்!" - சிறுவன் அங்கு இருந்த ஒரு பாறை அடியில் குனிந்து நின்று எதையோ தோண்டி எடுத்தான்.

என்ன என்பது போல் தருதரன் விழித்து நிற்க, "இதோ உன் காட்டு சக்தி", என்று ஒரு நசுங்கிய செடியை அச்சிறுவன் நீட்டினான்.

"சீக்கிரம்! எனை காப்பாற்று", என்றது அச்செடி.

இருவரும் உடனே காட்டிற்கு வெளியே இருந்த ஒரு ஓடக்கரைக்கு அச்செடியை எடுத்து சென்று, சூரிய வெளிச்சம் படும் வண்ணம் ஒரு பாதுகாப்பான இடத்தில் புதைத்தனர். ஓடத்தில் இருந்து கொஞ்சம் நீரை தன் கரங்களிலேயே எடுத்து வந்து தருதரன் அச்செடிக்கு அபிஷேகம் செய்வது போல் நீர் வார்த்தான். மழைச்சாரல் போல் அந்த நீர்துளிகள் அச்செடி மீது விழுந்தன.

"சூரியன். பூமி. மழை. மூன்றும் கிடைத்துவிட்டது அல்லவா?", என்று அச்சிறுவன் செடியை பார்த்து கேட்டான்.

அச்செடி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெற்று எழுந்து நிமிர்ந்தது. பின் உடனே கருகி மடிந்தது. இருவருக்கும் அதிர்ச்சி. மேலும் அதிர்ச்சி தரும் வண்ணம் அச்செடியில் இருந்து ஏதோ புகை போன்று கிளம்பியது. மெல்ல மெல்ல எழும்பியது. உரு பெற்றது. ஆவியாக இடையோன் சேந்தன் அங்கு கை கூப்பியவாரு காட்சியளித்தான்.

"அண்ணா நீங்களா?", என்றான் தருதரன், தன் கண்கள் காணும் காட்சியை நம்ப முடியாமல்.

இடையோன் முகத்தில் எந்த சலனமும் தெரியவில்லை. சாந்த ஸ்வரூபமாக நின்று கொண்டிருந்தான். "தம்பி. நீ உயிரோடு இருக்கிறாய் என்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது தெரியுமா?", என்று அவன் கூறுகையில் அவன் சாந்த ஸ்வரூபம் லேசென கனிந்தது.

"உன் தலையை நீ அறுத்து கொண்ட பிற்பாடு நானும் அண்ணனும் எவ்வளவு அதிர்ந்து போனோம் என்று நீ எண்ணி பார்த்தாயா? பாவி! சுயநலவாதி! ஒரு பேச்சுக்கு அண்ணனோடு நானும் சாகிறேன், கிழிக்கிறேன் என்று அவர் பின்னாலேயே சுற்றினேன். ஆனால் உண்மையில் எனக்கு அதில் முழு உடன்பாடு இருந்ததில்லை. நாம் மூவரும் ஒன்றாக செத்தால் ஒன்றும் தெரியாது என எண்ணினேன். ஆனால் சட்டென நீ அவ்வாறு செய்த பின்… ஒரு நிமிடம் என் இதயம் நின்று விட்டது. நேசிக்கும் ஒருவரை இழக்கும் வலி… உணர்ந்த பின் தான் புரிந்தது. அவ்வலியை இப்போது நீயும் அனுபவிக்க வேண்டும் என்பதை நினைத்தால் எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனால் ஒன்றை நீ நினைவு கொள்! என் சாவை நான் முழு மனதோடு ஏற்கிறேன்! இதோ… இந்த நான் திருடிய இப்பொருளை உன்னிடம் இப்போது குடுப்பதனால் இங்கு என் கடமை முடிந்து விட்டது", என்று கூறி ஒரு வெள்ளி மாலையை இடையோன் தருதரனிடம் கொடுத்தான்.

"இது…", தருதரனுக்கு அப்பொருள் என்ன என்பது உணர முடிந்தது.

"முதலில் இருந்தே சொல்கிறேன். பொறுமையாக கேள்", என்று இடையோன் விடுபட்ட வரலாற்றை நிரப்ப தொடங்கினான்.

"நீ இறந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்த அடுத்த நிமிடம் நானும் அண்ணனும் எங்கள் உயிரை மாய்த்து கொண்டோம். ஓர் இருண்ட இடத்தில் கண் விழித்தோம். அங்கே கருப்பு போர்வை அணிந்த ஒரு மர்ம ஆசாமியை சந்தித்தோம். அவர் தான் காலன் என்று எங்களுக்கு புரிந்தது. மோட்சதிற்கு வழி காட்டும் படி அவரை பணிந்தோம். அவர் மறுத்துவிட்டார். 'புவியில் உங்கள் காலம் இன்னும் முடியவில்லையே! அதற்குள் இங்கு எதற்கு வந்தீர்கள்?', என்று கூறி மீண்டும் எங்களை பூமிக்கே அனுப்பி வைத்துவிட்டார். எங்கள் உடலும் எங்களிடம் இல்லாத நிலையில் ஆவியாகவே திரிந்தோம். மீண்டும் அச்சிலை முன் சென்று பார்க்கையில் ஒரு விசித்திர சக்தியை எங்களால் உணர முடிந்தது. அச்சிலைக்குள் இருந்து தான் அந்த சக்தி வருகிறது என்று புரிந்துகொண்டோம். உடனே அதன் இரு கரங்களையும் பெயர்த்தோம். ஒரு கரம் தங்க மாலையாகவும், இன்னொன்று இதோ இந்த வெள்ளி மாலையாகவும் மாறியது. தங்க மாலையை அண்ணன் தன் கழுத்தில் அணிந்த அடுத்த நிமிஷம் அவரை சுற்றி இருந்த தூசு, மாசு, புழுதி அனைத்தும் சூழ்ந்து அவருக்கு ஒரு கோர அகோர மிருக உருவத்தை கொடுத்தது. தன் சுயநினைவை இழந்து அவர் மிருகமாகவே மாறி காட்டிற்குள் எங்கோ ஓடிவிட்டார். நான் வைத்திருந்த மாலையை எனக்கு தூக்கி போடவும் மனசில்லை, அணிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. கையில் வைத்துக்கொண்டே திரிந்தேன். அப்போது தான் உயிர் பெற முடியாத பரிதாப நிலையில் கிடந்த ஒரு விதையை நான் கான நேர்ந்தது. என் காலம் முடியும் வரை இச்செடியாக வாழலாமே என்று முடிவு செய்து அந்த விதைக்கு என் உயிரை அற்பணித்தேன். காட்டுச் செடியாக மீண்டும் முளைத்தேன். எத்தனை நாட்கள் அவ்வாறு கழித்திருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. என் சிந்தை மங்க ஆரம்பித்தது. ஆகையால் என் பழைய நினைவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வந்தன. போதா குறையாக திடீரென இன்று ஒரு பாறை என்மீது உருண்டு வந்து விழுந்தது. அவ்வளவு தான். என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நிம்மதி அடைந்த நிலையில் நீ வந்தாய்", என்று கூறி முடித்தான்.

"என் கடமையை முடிக்க உதவி, எனக்கு மோட்சம் கிடைக்க உறுதுணையாய் இருந்ததற்கு உனக்கு கோடான கோடி நன்றி தம்பி", என்று மீண்டும் தன் கரம் கூப்பி வணங்கினான்.

"உனை ஆர தழுவிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது அண்ணா!", என்று தருதரன் அழுதான்.

"உன் காலம் முடிந்த பின் நீ மோட்சதிற்கு வந்தால் அப்போது தழுவிக் கொள்ளலாம். உனக்காக காத்திருப்பேன்", என்று கூறி விடைபெற்று இடையோன் எனப்படும் சேந்தன் சொர்கம் சென்றான்.
 
தருதரன் திரும்ப பூமிக்கு வந்தாச்சு .....?
அண்ணன்களைவிட இவனுக்கு அதிஷ்டம் இருக்கு போல....?
 
Top