Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தருதரன் - பாகம் 3

Advertisement

Hariharan

Member
Member
கண்களில் துளித்த கண்ணீரை துடைத்து எறிந்தான் அவன்.

"போகலாம் வா", என்றான் அருகில் இருந்த சிறுவனிடம்.

"அவ்வளவு தானா?", சிறுவன் நிமிர்ந்து பார்த்து கேட்டான்.

"இறந்தது உன் அண்ணன் தானே? ஒரு இரங்கல் கூட தெரிவிக்க மாட்டாயா?"

"என்ன பிரயோஜனம்?", என்றான் தருதரன் அலட்சியமாக.

"என்ன கேள்வி இது?"

"அவன் வாழ்கை முழுதும் சாவை நோக்கி ஓடினான். இப்போது செத்துவிட்டான். அவ்வளவு தான் அல்லவா? வாழ்கை? கண்றாவி வாழ்கை" - அவன் கண்கள் இரத்த சிகப்பாக கொந்தளித்தது.

"வா போகலாம்", என்றான் மறுபடியும்.

"நான் வரவில்லை நீ போய் வா! அடுத்தவர் இறப்பை துச்சமாக நினைப்பவன் வாழவே தகுதி இல்லாதவன். அப்படிப்பட்டவனோடு நட்பு கொள்ள எனக்கு விருப்பம் இல்லை", என்று கூறி அச்சிறுவன் இறந்த அச்செடியை கை எடுத்து கும்பிட்டு கிளம்பினான்.

இருவரும் இரண்டொரு பாதையில் தனித்தனியாக பிரிந்தனர். தருதரன் மனதிற்குள் பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

"கத்தி அழு! கதறி அழு!", என்றது ஒரு பக்கம்.

"நீ அழுது ஒன்னும் ஆக போறதில்ல. கண்ணீர் தான் வீண்", என்றது இன்னொரு பக்கம்.

அவன் இரண்டாவது பக்கத்தையே ஆதரித்தான்.

'யாருக்கும் சம்மந்தம் இல்லாமல், யாரையும் நாடாமல், எதற்கு வாழ்ந்தோம் என்பதற்கே அர்த்தமில்லாமல் செத்துவிட்டான். மூடன். அதற்கெதற்கு பிறந்திருக்க வேணும்? அது சரி… அதை முடிவு செய்வது நம் கையில் இல்லை அல்லவா… அதே போல் தானே இறப்பும் இருக்க வேண்டும்? எதற்கு அதை முடிவு செய்யும் உரிமை மட்டும் மாந்தனுக்கு அளிக்க வேண்டும்? யார் தான் இதை நிர்ணயம் செய்கிறார்கள்? சோகம், மகிழ்ச்சி, இழப்பு, துயரம், கோபம்… ஓர் மனிதனின் இவ்வனைத்து போராட்டங்களுக்கும் அர்த்தம் தான் என்ன? என்ன பயன்?'

அவன் பலவாறாக இவ்வாறு தனக்கு தானே கேள்விகள் கேட்டு பித்து பிடித்தவன் போல் திரிந்தான். அப்போது வழியில் ஒரு நாற்றம். மூக்கை பீய்த்து எரியத் தோன்றும் அளவுக்கு நாற்றம். வழியார இறந்த காட்டு விலங்குகளின் பிணங்கள் கிடந்தன. முன் ஏற்பட்ட அதே நடுக்கம் அவனுக்கு மீண்டும் ஏற்பட்டது. இதோ… கண்முன்னேயே அந்த மிருகம். பெரும் யானையை வீழ்த்தி அதை ருசித்து கொண்டிருந்தது.

"அண்ணா!", என்றான்.

அந்த மிருகம் சட்டை செய்யாமல் வேளையில் மும்முரமாக இருந்தது.

"நீ திருடிய பொருளை உடனே கொடுத்துவிடு!"

மெல்ல அந்த மிருகம் எழுந்து திரும்பியது. வாயில் இரத்தமும், பல்லில் சிக்கிய சதை துண்டுகளும் என கோரமாக நின்று கொண்டிருந்தது.

"என்ன பொருள்?", என்று அது விகாரமான குரலில் கேட்டது.

"என் காதலியின் கரம்"

"ஓ! உன் காதலியின் கரம்! ஆம்! என்னிடம் தான் உள்ளது"

"திருப்பி கொடு"

"உன்னிடம் அதை கொடுத்து விட்டால் எனக்கு?"

"என்ன வேணும் உனக்கு?"

"கரத்திற்கு கரம். உன் வலக்கரம். அறுத்து கொடு. கொடுத்துட்டு நீ கேட்டத வாங்கி போ", என்று கூறியது அந்த மிருகம்.

தருதரன் உடனே மறுத்தான்.

"நீ என் அண்ணனாய் இருந்தால் உனக்காக என் உயிரை கூட கொடுத்திருப்பேன்! ஆனால் இப்போது நீ ஒரு ராட்சசன்! மனிதம் இழந்த மிருகம்! உன்னை மதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை! சொல்லுக்கு நீ அடங்கவில்லை என்றால் என் வாளிடம் பதில் சொல்!"

தன் வாளை உருவி சுழற்றிக்கொண்டு நேராக அந்த மிருகத்தை நோக்கி தருதரன் ஓடினான். மிருகத்தின் தலையை குறிவைத்து வீசும் தருவாயில் அந்த கனத்த கத்தி அவன் கையை விட்டு நழுவியது. அதை பார்த்து மிருகம் கோரமாக சிரிக்க தொடங்கியது. இதான் சரியான நேரம் என்று தன் கணுக்காலில் சொருகி இருந்த குத்துவாளை எடுத்து அந்த மிருகத்தின் மார்பில் குத்தினான். மிருகம் வலியில் அலறிக்கொண்டு சம்மணம் இட்டு அமர்ந்தது. தருதரன் அதன் பிடரியை வாகாக பிடித்துகொண்டு மேலும் அந்த குறுங்கத்தியை மிருகத்தின் நெஞ்சுக்குள் சொருகினான். மிருகம் 'ஓ'வென துடிதுடித்து கத்தியது. அதன் கருவிழிகள் உருண்டு பின்னே சென்றன. மயக்க நிலைக்கு அது தள்ளப்பட்டது. திடீரென மீண்டும் விழித்து தருதரனை உதறி தள்ளிவிட்டு கீழே கிடந்த அவன் போர் வாளை எடுத்துக்கொண்டு அவனை நோக்கி கோரமாக கத்திக்கொண்டே ஓடி வர, தருதரன் செய்வதறியாது பின்னாலேயே தவழ்து தவழ்ந்து செல்ல, உயர்த்திய வாளை அந்த மிருகம் தருதரனின் இதையத்திற்குள் பாய்ச்சும் தருணத்தில் "ஓய்!", என்ற ஒரு குரல்! திரும்பினால் அங்கே சிகப்பு தலைப்பாகை அணிந்த அச்சிறுவன். கையில் எதையோ வைத்துக்கொண்டு மந்திரம் ஓதி அம்மிருகத்தை நோக்கி வீச, அவன் கைகளில் இருந்து மணல் துகள்கள் அந்த மிருகத்தின் மீது விழுந்தன. உடனே மிருகம் எரிந்து போனது.

"மாந்திரீகம் அறிவாயா?", என்றான் தருதரன் சிறுவனை பார்த்து.

"ஓ! நன்றாக அறிவேன்", என்று பதிலளித்தான் அவன்.

மிருக சாம்பல் காற்றில் கரைந்து புகையாகி, புகை உருவெடுத்து மூத்தோன் சோமன் அங்கு காட்சியளித்தான். தோன்றியதும் அவன் கூறிய முதல் வார்த்தை, "மன்னித்துவிடு!".

அவன் தன் புவி வாழ்வின் இறுதி உரையை உரையாற்றத் தொடங்கினான்.

"என்னை மன்னித்துவிடு! என் வாழ்வை மட்டுமல்லாமல் என் இரு சகோதரர்கள் வாழ்வையும் சேர்த்து நாசம் செய்ய பார்த்தேன். அதற்காக என்னை மன்னித்துவிடு! நீ எதுவும் சொல்ல தேவையில்லை! உன் மனோநிலை எப்படி இருக்கும் என்று என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. நான் இறந்த அடுத்த நொடி சாவை சந்தித்தேன். சாவு, காலன்… ஏதோ ஒன்னு! அது எங்களை மீண்டும் பூமிக்கு அனுப்பி விட்டது. பல யுகங்கள் பின்னுக்கு தள்ளி அனுப்பிவிட்டது. நானும் இடையோனும் முதல் முதலில் முதல் உயிர் உருவாவதை காணும் வாய்ப்பை பெற்றோம். ஒன்றுமில்லாத பாறையில் இருந்து இத்தனை அழகான ஒரு காவியம் தொடங்கும் என்று யார் கண்டிருப்பார்கள்? ஆம். வாழ்கை ஒரு காவியம். முதல் முதலில் பூமி அழிவதையும் எங்களால் காண நேர்ந்தது. யார் தான் கண்டிருப்பார்கள்? ஒரு நொடியில் அக்காவியம் சூனியம் ஆகக்கூடும் என்று? ஆம். வாழ்கை ஒரு சூனியமும் கூட. அன்று தொட்டு இந்த நாள் வரை ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும் தான் நான் காத்திருந்தேன். இதோ. இந்த நொடிக்காக!", என்று கூறி தன் கழுத்தில் இருந்த தங்க மாலையை கழட்டினான் சோமன்.

"இதை உன்னிடம் ஒப்படைத்துவிட்டால் அத்தோடு என் கடமை முடிந்து விட்டது. நான் பல யுகங்களாக வாழ்ந்தது என்னமோ வெற்று வாழ்கை தான். ஆனால் ஒரு நொடி கூட அதை நான் வெறுக்கவில்லை. ஒன்றன் அழகு அது இல்லாமல் போன பிறகு தான் தெரியும். எனக்கும் வாழ்வின் அழகு அதை இழந்த பின்பு தான் தெரிந்தது. 'பிறப்புக்கும் இறப்புக்கும் இடற்பட்ட இடைவெளிகளை நிரப்ப நாம் பாடுபடும் ஒவ்வொரு நொடிகளே வாழ்கை'. சாகும் வரை வாழ்வின் என் புரிதல் இவ்வாறு தான் இருந்தது. அது தவறு என்று இத்தனை ஆண்டுகள் பூமியில் வெறுமையாக அலைந்து, பல உயிர்களின் ஆக்கத்தையும் அழிவையும் கண்டு, என் கற்பனை எல்லைக்கு எட்டிய அளவு, ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். வாழ்கையாவது... பிறப்புக்கும் இறப்புக்கும் இடற்பட்ட இடைவெளிகளில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும், செயல்களும் அச்செயல்களுக்கு ஏற்ப ஏற்படும் எதிர்வினைகளும், அவ்வெதிர்வினைகள் நமக்கும் நம்மை சூழ்ந்தும் ஏற்படுத்தும் தாக்கங்களும், அந்த தாக்கங்களை தாங்கிக்கொண்டு அந்த இடைவெளியை கடப்பதேயாகும். என் பாதையின் விளிம்பில் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இதோ இந்த மாலையை உன்னிடம் கொடுக்கிறேன்", கழட்டிய மாலையை தருதரன் கழுத்தில் அணிவித்தான் சோமன்.

"இந்த என் முடிவு என்னவெல்லாம் எதிர்வினைகளை ஏற்படுத்த போகிறது என்று நான் மோட்ச்சத்தில் இருந்து ரசிக்கப் போகிறேன். இந்த பித்தனின் இச்சிறிய அறிவுரையையும் ஏற்றுக்கொள். வாழ்கை வாழ வேண்டியது. ரசிக்க வேண்டியது. ஒவ்வொரு நொடியையும் ரசி" - அவன் தன் கரம் கூப்பி வணங்கினான். காற்றில் கரைந்தான்.

மூத்தோன் எனப்படும் சோமன் சொர்கம் சென்றான்.
 
Last edited by a moderator:
Pirapu.. Irappu... Idaipata vazhkai- adhu romba azhaga solli irukeenga.
Tharutharan oru type-a dhan irukan... ?. Irandha annanuku sir azha kooda matarama? ?‍?
Podusu yara irukum ?
 
Pirapu.. Irappu... Idaipata vazhkai- adhu romba azhaga solli irukeenga.
Tharutharan oru type-a dhan irukan... ?. Irandha annanuku sir azha kooda matarama? ?‍?
Podusu yara irukum ?
Next part la he will realise his mistakes. Pavam chinna paiyan dhana? Life will humble him? And thank you so much for spending your time to read my story? I was a little skeptic about sharing it online. Neenga ivlo enjoy pandradhu pathu enaku romba happy?
 
Last edited:
Next part la he will realise his mistakes. Pavam chinna paiyan dhana? Life will humble him? And thank you so much for spending your time to read my story? I was a little skeptic about sharing it online. Neenga ivlo enjoy pandradhu pathu enaku romba happy?
Yes I totally enjoyed ur work. A different kind of story after a longgggg time. And thanks for sharing it.
 
அந்த சின்ன பையன் யார் ..?
இவனுக்கு உதவி புரியதான் வந்தான் .....
 
Top