Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தற்கொலை

Advertisement

இயற்கை வனப்புகள் நிறைந்த அம்மலையில் இளைஞன் ஒருவன் சோகமாகவும், வேகமாகவும் ஏறிக் கொண்டிருந்தான். அவன் மலை உச்சிக்குச் சென்று இரு நிமிடங்கள் கண்களை மூடி திறந்து குதிக்க தயாரகும் போது ஒரு கை அவனைத் தடுத்தது. அவன் யாரென்று திரும்பிப் பார்க்க நடுத்தரமான வயதுடையவர் முகமெல்லாம் வேர்வையோடு மூச்சு வாங்கி கொண்டிருந்தார். அந்த இளைஞன் அவரின் கைகளை உதறிவிட்டு "என்ன விடுங்க. நா சாகனும். நா பொறந்ததே வேஸ்ட். என்னால யாருக்கும் எந்த பயனும் இல்ல. மத்தவங்களுக்கெல்லாம் நா பாராம தான் இருக்கேன் " என உடைந்த குரலில் கூறினான்.

"நீ ஏன் சாகனும்னு நினைக்கறனு எனக்கு தெரில. ஆனா இந்த உலகத்துல யாரும் வேஸ்டா பொறக்கல. நீ பொறந்தது யாருக்கும் பயனில்லனு ஏன் நினைக்கிற? நீ விட்ற கார்பன் டை ஆக்சைடு மரங்களுக்கு சுவாச காற்றா இருக்கு. உன்னாலயும் ஒரு ஜீவன் வாழ்றதா நினை"

அவ்வாலிபன் அமைதியாக இருக்கவே அவரே அவனை கைப்பிடித்து ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார். "இந்தா இந்த தண்ணிய குடி. உன்ன காப்பத்த மூச்சு வாங்க ஓடிவந்ததுல டையர்டா இருக்கு" எனக் கூறி மரத்தடியில் அமர சென்றார்.

"ஒரு நிமிடம். அங்க எரும்புங்க போகுது. தள்ளி உட்காருங்க"

"இந்த எரும்புங்கள பாத்தியா? இதுக எல்லாம் இன்னிக்கு சாப்பாடு கிடைக்குமானே தெரியாமலே தன்னம்பிக்கையோடு தேடுதுங்க. இந்த இரண்டு அறிவு படைச்ச எறும்புக்கே இவ்ளோ தன்னம்பிக்கை இருக்கு ஆனா ஆறு அறிவு படைச்ச நமக்கு கூட இல்லல" எனக் கூறிவிட்டு தள்ளி அமர்ந்தார்.

அந்த இளைஞனோ சிந்தனையில் ஆழ்ந்தான். "ஆமால எறும்புகளுக்கு எவ்ளோ தடைகள் வந்தாலும் அதுகளே தன்னம்பிக்கையோட உழைக்குதுங்க. ஆனா நா 10 இடத்தில ட்ரை பண்ணி வேலை கிடைக்காததுனாலயும் எல்லாரும் என்ன கேள்வி கேட்குறாங்கனும் தற்கொலை பண்ணிக்ற அளவுக்க வந்தட்டுமே" என வெகு நேராமாக தான் எடுத்த முடிவு சரியா? தவறா? என சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் அந்த மரவெட்டி விறகுகளை வெட்டி வைத்துவிட்டு இளைஞனை நோக்க அவனோ அந்த மாலை மங்கும் நேரத்தில் ஒரு மரத்தில் இருந்த கூட்டை உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அக்கூட்டில் தாய் பறவை தன் குஞ்சுகளுக்கு உணவூட்டிக்கொண்டிருந்தது.

"அம்மானா அம்மாதான்ல, மனுசனோ, விலங்கோ, பறவையோ எல்லாத்துக்கும் தாய்பாசம் ஒன்னுதான்ல. அம்மா சில நேரத்தில் நம்மல திட்டனாலும் அவங்க பாசம் குறையாதுல கோபமும்,ஆதங்கமும் பாசம் வைக்கிற இடத்தில தான் காட்ட முடியும்ல. பாரேன், அந்த தாய்பறவை அலஞ்சி திரிஞ்சி அதோட குஞ்சுகளுக்கு சாப்பாட எடுத்துட்டு வந்திருக்கு. தாய் பாசம்ன தாய் பாசம் தான்யா ''

"ச்சே .நா எவ்ளோ. பெரிய முட்டாள் தனமான முடிவு எடுத்துட்டேன். நா செத்திருந்த அம்மா, அப்பா என்ன நேசிக்கிறவங்களாம் எவ்ளோ கஷ்டப்படுவாங்க. அவங்கள பத்திலாம் யோசிக்காம நா என்னோட கஷ்டத்தை மட்டுமே பார்த்து தப்பான முடிவு எடுத்துட்டேனே." என நினைத்துக்கொண்டான்.

அவனது முகமாறுதலே வைத்தே அவர் மேலும் தொடர்ந்தார், " முதல நாம நம்மல நம்பணும். என்னால முடியும், நா நினைச்ச செய்துடலாம்னது நம்பணும். நம்ம எண்ணங்களுக்கு சக்தி அதிகம். நாம் என்ன நினைக்கிறமோ அத முழுமனசோட நம்புன கண்டிப்பா அது நடக்கும் . அடுத்து நாம நம்மளோட இலட்சியத்தை அடைய தன்னம்பிக்கையோடு அதுக்கு உழைக்கணும் . 'முயற்சிதன் மெய்வருத்த கூலித்தரும்'. நாம ஏதாவது ஒன்ன நம்பி அதுக்காக உழைச்சோம்ன அது கண்டிப்பா நடக்கும்.

அப்புறம், நீ முதல உன்ன நேசி.நீ உன்ன நேசிச்சு இருந்தா தற்கொலை முடிவுக்கே வந்து இருக்க மாட்ட. நீ உன்ன நேசிக்காததுனால தான் உன் வீட்டுல இருக்கறவங்களோட நேசத்தையும் புரிஞ்சிக்காம இந்த முடிவு எடுத்து இருக்க .சுயநேசமும், தன்னம்பிக்கையும் ஒருத்தருக்கு ரொம்ப முக்கியம்" எனக் கூறிவிட்டு தான் எடுத்து வந்த இரண்டு மரக்கன்றுகளை ஒன்றை எடுத்து நட ஆரம்பித்தார்.

அவ்வாலிபனோ மற்றொரு மரக்கன்றை நட்டு வைத்துவிட்டு மகிழ்ச்சியான முகத்தோடு அவருக்கு நன்றி கூறிவிட்டு செல்லலானான். அங்கிருந்த மரங்கள் யாவும் கிளைகளை அசைத்து அவனை வழியனுப்பி வைத்தன.
 
Top