நன்றி சிஸ்.மிகவும் அருமையான பதிவு தீபா.ஷாபாஸ்,அவன் மகன்கள் மேல் வேறு பல வழக்குகள் போட்டிருந்தாலும்,தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததால் பொடோ சட்டத்தில் வெளியே வர முடியாதவாறு செய்து விட்டனர்
.ஹமீதா பானு அவள் பெற்றோருடன் லண்டனுக்கு கிளம்ப,நிஷாவை காஸி சாப் தன் மகளாக பார்த்துக் கொள்வதாக சொல்லிட்டார்
.
தான்வி ஜீனிபூதமாதுரிதமா வேலை பார்த்ததில்,இந்த மிஷனை திறமையாக முடித்ததற்க்கு தங்கம்,தான்வி இருவரையும் மிஸ்டர் சிங் புகழ,ரகோத்தமன் பாரட்டையும் பெற்றுவிட்டனர்
தான்வி,காஸி மாளிகையில் கணவன்,மனைவியாக நடிக்க சென்று ஒன்றாக இருந்து,மூன்று மாதம் அவனோடு அலைந்தவள்,அவனை விட்டு பிரிந்ததில் தலைவனை பிரிந்த தலைவி பசலை நோயால் வாடுவதை போல தான்வி,கோல்டை பிரிந்து தவிப்பது கண்கலங்க வைக்குது.
தங்கம் அவளுக்கு சர்ப்பரைஸ் கொடுத்து அசத்திட்டான்.தான்வி கண்ண காட்டினா பாண்டி குடும்பத்தை மறந்து பின்னாடியே வந்துடுவானா
டேய்,ரஷ்மிஜீட்ட பேசற பேச்சா
தான்வி,கருத்தப்பாண்டியை பீஷ்ம பிதாமகரா உருவகப்படுத்தி கூறுவதும்,என்னை உங்காத்து மருமகளா ஏத்துப்பேளா என உணர்ச்சிவயப்பட்டு கேட்க,பேரன் மனதில் எப்ப சிம்மாசனம் போட்டு
உட்கார்ந்தியோ அப்போவே எங்க வீட்டு மருமகள் தான் என கூறி,ஆடி முடிந்து பெண் கேட்டு வருவதாக பிதாமகர் வாக்கு கொடுத்து விட்டார்.
அமைச்சராக பதவி ஏற்கும் போது,விழா ஏற்பாட்டை நான் தான் பார்த்துக்கொள்வேன் என தான்வி கூற,சிவபாண்டி அவர்களுக்கு ட்ரான்ஸர் கிடைக்குமா என கேட்டு மருமகள் என சொல்லாமல் சொல்லி விட்டார்.
அப்படி என்ன அவா உசத்தி,கலெக்டர் பெண்ணை கட்ட கசக்குதோ என சிலுத்துக்கும் வரலெட்சுமி
மாமியும்,பேச்சி கிழவியும் ஒரே இடத்தில் சேர்ந்தால் என்னென்ன கலாட்டாகள் வருமோ,
இதில் சோலையும் சேர்ந்தால் என்ன ஆகுமோ.