Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 12....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 12.

ராணி தாய் வீடு வந்து நாட்கள் 10 ஓடி விட்டன. மிகவும் மகிழ்ச்சியாகத் திரிந்து கொண்டிருந்தாள். தோழிகளை அழைப்பதும், அவர்களோடு வெளியில் செல்வதுமாக இருந்தாள். இரு முறை மாப்பிள்ளை ஃபோன் செய்தாரா? என அண்ணி சங்கரி கேட்டாள். ஆனால் அதை தட்டிக் கழித்து விட்டாள் ராணி. அவள் பிறந்த வீட்டில் இருப்பதைக் குறித்து யாருக்குமே அக்கறை இல்லை. மாமனார் பேசுவதே இல்லை என்பதால் அவர் என்ன நினைக்கிறார் எனத் தெரியவில்லை. ஒரு நாள் கணவனிடம் மெல்ல ஆரம்பித்தாள்.

"ஏங்க! நம்ம ராணி! இப்படி வீட்டுல வந்து உக்காந்திருக்காளே? அவளை நாம அவ வீட்டுல கொண்டு விட வேண்டாமா?" என்றாள்.

சுள்ளென எரிந்து விழுந்தான் சபா.

"ஏன் அவ இங்க இருந்தா உனக்கு என்ன? பாவம்! நொந்து போயி வந்திருக்கா. அவளைப் போகச் சொல்ல முடியாது. இது தான் அவ வீடு. அவளுக்குத்தான் முதல் உரிமை. அதை எப்பவுமே மனசுல வெச்சுக்கோ. இந்தத் தலையணை மந்திரம் போடுற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே" என்றான்.

வாயடைத்துப் போனாள் சங்கரி. இனி இவனிடமோ மற்ற மைத்துனர்களிடமோ இதைக் குறித்துப் பேசுவதில் பயனில்லை என உணர்ந்தாள். நேரே மாமியாரைப் போய்ப் பார்த்தாள்.

"அத்தை! நீங்க வாழ்ந்தவங்க. நல்லது கெட்டது உங்களுக்குத் தெரியும். கல்யாணமான மூணே மாசத்துல இப்படி இவ கோவிச்சுக்கிட்டு வந்து உக்கார்ந்துக்கிட்டா, உங்களைத்தான் எல்லாரும் கேப்பாங்க. அவளைக் கூப்பிட்டு நல்ல வார்த்தை சொலுங்க அத்தை" என்றாள் மெதுவாக. சபா போல கோபப்படவில்லை என்றதுமே கொஞ்சம் பெருமூச்சு வந்தது சங்கரிக்கு.

"சங்கரி! உன் கவலை எனக்குப் புரியுது! ஆனா ஒரு விஷயம் நல்லாப் புரிஞ்சுக்கோ! அவ ராணி! இந்த வீட்டுக்கு எப்பவுமே ராணி தான். ஏதோ அவசரப்பட்டுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா. அதுக்காக அவளை தூக்கியெறிய முடியுமா? அந்தப் பையன் வரட்டும். அப்ப பார்க்கலாம். இது அவ வீடு. அதனால யாரும் என்னை எதுவும் கேக்க மாட்டாங்க" என்று சொல்லி விட்டுக் கோயிலுக்குப் போய்விட்டாள்.

இனிமேல் மறைமுகத் தாக்குதல் பயனில்லை. நேரிடையாக ராணியையே கேட்டு விட வேண்டியது தான் என எண்ணிக் கொண்டு நல்ல சந்தப்பர்த்துக்குகாகக் காத்திருந்தாள். அந்த சந்தர்ப்பம் வெள்ளிக்கிழமை வாய்த்தது. எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு கூந்தலை ஆற வைத்துக்கொண்டிருந்தாள் ராணி. சமையலை முடித்து விட்டு அப்போது தான் வந்தாள் சங்கரி. மாமியாரும் மாமனாரும் மாடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். மற்றவர்கள் வேலைக்குப் போய் விட்டனர். சங்கரியைக் கண்டதும் சலுகையாக வந்து கட்டிக்கொண்டு அண்ணீ எனக் கொஞ்சினாள் ராணி.

"இப்படிக் குடு! தலையை சரியாவே துவட்டிக்கல்ல!" என்று சொல்லி அடித்தலையில் ஈரம் போக துடைத்தாள்.

"ஏன் ராணி! உன் வீட்டுக்காரர் நேத்து ஃபோன் செஞ்சார் போல இருக்கே?" என்று பேச்சை ஆரம்பித்தாள்.

"ஆமா! எங்கிட்ட எத்தனை நாள் வீராப்புக் காட்ட முடியும்? நேத்து தான் 10 நாள் கழிச்சுப் பேசினாரு. ஆனா நான் விட்டுக்குடுக்கவே இல்லையே? வீட்டுக்கு வந்து எங்கண்ணன் கிட்ட பேசுன்னு சொல்லிட்டேன்" என்றாள் பெருமையாக.

நாத்தனாரை எதிரில் இருந்த நாற்காலியில் அமர வைத்து விட்டு சாம்பிராணி போட்டுக்கொண்டே பேசினாள் சங்கரி.

"ராணி! நீ இன்னமும் சின்னப்பிள்ளையா? எதுக்கு அவர் கூட சண்டை போட்டுக்கிட்டு வந்தம்மா?" என்றாள் மெல்ல.

"ஐயையோ! அதுவே உங்களுக்குத் தெரியாதா அண்ணி? அவரு அதான் நிதி, என்னை ரொம்பக் கொடுமைப்படுத்தினாரண்ணி. அதைப் பார்க்க மாணிக்க அண்ணனுக்கு சகிக்கல்ல. அதான் கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டாரு." என்றாள் மீண்டும் பெருமையாக.

"அப்படி என்ன செஞ்சாரு உன்னை? அடிச்சாரா? இல்லை உனக்கு இஸ்டமில்லைன்னானும் கட்டாயப்படுத்தினாரா?" என்றாள்.

"ஹ! அதெல்லாம் எங்கிட்ட முடியுமா? சபா அண்ணன் தங்கச்சி நான். பதிலுக்கு மூஞ்சியை கிழிச்சுர மாட்டேன்?"

"அப்ப என்ன தாண்டி நடந்தது?"

"என்ன நடந்ததா? என்ன நடந்ததுன்னா கேக்கறீங்க? அவரு சரியான திமிரு பிடிச்சவரு. பெண்கள்னா எப்பப் பார்த்தாலும் வேலை செஞ்சுக்கிட்டே இருக்கணும்னு எதிர்பார்க்குறாரு. சமைக்கணும், துணி காய வைக்கணும், வீடு பெருக்கணும் துடைக்கணும், திரும்ப சமைக்கணும். இது ஒரு வாழ்க்கையா அண்ணி?" என்றாள் கோபமாக.

சாம்பிராணி கரண்டியை தள்ளி வைத்து விட்டு அவள் எதிரில் அமர்ந்தாள் சங்கரி.

"இப்ப நான் என்ன செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு நீ நினைக்கறா ராணி? நீ சொன்னா மாதிரி சமைக்குறது, வீட்டை மெயிண்டையின் பண்றது. இதானே? "

"கரெக்ட் அண்ணி! ஆனா நீங்க ஏழை வீட்டைச் சேர்ந்தவங்க. உங்க அண்ணன் உங்களை தள்ளி விட்டாப் போதும்னு எங்கண்ணனுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சுட்டாரு. ஆனா எங்கண்ணனுங்க அப்படியா?எவ்வளவு பெரிய பணக்காரங்க? அங்க சென்னையில எங்க வீட்டைப் பார்த்தீங்க இல்ல? நம்ம வீட்டுக் கூடம் அளவு தான் இருக்கும். அங்க போயி நான் ஏன் இருக்கணும்?" என்றாள்.

நாத்தனார் பேசிய பேச்சுக்கள் மனதைக் காயப்படுத்தினாலும் அறியாப் பெண் போனால் போகிறது என விட்டு விட்டாள் சங்கரி.

"சென்னையில இத்தனை பெரிய வீட்டை வாடகைக்கு எடுக்க முடியுமாம்மா? அவர் வருமானத்துக்குள்ள தானே நீங்க வாழணும்?

கைகளைத் தட்டினாள் ராணி.

"அதான் ஏன்? ஏன்னு கேக்குறேன். எங்க அண்ணனுங்க கிட்டப் பணம் வாங்கி எனக்காகச் செலவழிச்சா என்ன குறைஞ்சா போயிருவாரு?. தேவையில்லாத ஈகோ அவருக்கு. அவருக்கு நீங்க ஏன் சப்போர்ட் பண்றீங்கன்னு எனக்குப் புரியல்ல." என்றாள் வஞ்சகமாக.

"அப்படி இல்லை ராணி! நீ இப்பக் கல்யாணம் ஆன பொண்ணு. இப்படி பொறந்த வீட்டுல வந்து உக்காந்தா மத்தவங்க நம்ம குடும்பத்தைப் பத்தித் தப்பாப் பேச மாட்டாங்களா? நிதியை நீ ஆசைப்பட்டுத்தானே கட்டிக்கிட்ட? ஆசையா சென்னையில குடும்பம் நடத்தணும்னு தானே போன? இப்ப ஏன் இப்படி?"

சங்கரி முடிக்கு முன் கத்தினாள் ராணி.

"அண்ணி! என் இஷ்டப்படி தான் நான் இங்க இருப்பேன். இந்த வீட்டுக்குப் பெரியவங்களே பேசாம தானே இருக்காங்க. உங்களுக்கு என்ன? ஆசைப்பட்டேன் தான். அதுக்காக என் மானம் மரியாதையை விட்டுக் கொடுத்துட்டு அடிமை மாதிரி வாழ நான் ஒண்ணும் உங்களை மாதிரி படிக்காதவ இல்ல" என்றாள்.

மனதுக்குள் பலமாக அடி வாங்கினாள் சங்கரி. ஏன் இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாள்? அவளுக்கு நல்லது தான் சொல்கிறேன் என ஏன் உணரவில்லை? கண்டிக்கவேன்டிய பெற்றோரே பேசாமல் இருக்கும் போது நான் ஏன் இதில் தலையிட வேண்டும் என் எண்ணி ஒதுங்கிக் கொண்டாள். ஆனால் ராணி எதுவுமே நடந்தாற் போலக் காண்பித்துக்கொள்ளாவில்லை. எப்போதும் போல அண்ணியோடு பேசுவதும் வெளியில் போவதும் வருவதுமாக இருந்தாள். எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல இருந்தாள் சங்கரி. அப்போது தான் ஒரு நாள் திடீரென வந்து நின்றான் நிதி.

அவனுடன் அவன் தாயார், அக்கா அகிலா, அவள் கணவன் குணா மற்றும் குழந்தை ஆகியோர் இருந்தனர். அவர்கள் முகங்கள் மிகவும் சீரியசாக இருந்தன. வயிற்றைக் கலக்கியது சங்கரிக்கு. ஆனால் பதட்டமே படாமல் அவர்களை வரவேற்று அமர வைத்தாள் ராணி. சங்கரி வந்தவர்களுக்கு பானம் கொடுக்க, அவர்கள் வாங்கக் கூட இல்லை.

"இந்த வீட்டுக்கு பெரியவங்க கிட்டப் பேச வந்திருக்கேன்" என்றார் தமக்கையின் கணவர் குணா.

"எது பேசுறதானாலும் என் மகன் கிட்டப் பேசிக்குங்க. இப்ப அவன் தான் இந்த வீட்டுப் பெரியவன். எங்க வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை. நான் இதுல தலையிடுறது இல்லை" என்று சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டாள் ராணியின் தாயார். அவள் அப்படிப் பேசியதும் வந்தவர்களின் முகங்கள் கோணலானது. சபாவுக்கு ஃபோன் செய்து வரவழைத்தாள். அவன் வரும் வரை சங்கரி பேசி கொண்டிருந்தாள்.

"என்ன விஷயம் பெரியம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்று பேச்சை ஆரம்பித்தாள் சங்கரி.

"நான் என்னத்தைச் சொல்லுறது சங்கரி? மூணு பொண்ணுங்களைப் பெத்தேன். கல்யாணம் கட்டிக் குடுத்தேன். அவங்க வாழ்க்கை முருகன் அருளால சலனமில்லாம ஓடுது. குலத்துக்குன்னு ஒரு பையனைப் பெத்து அவன் வாழ்க்கையை நானே பாழடிச்சுட்டேனோன்னு பயமா இருக்கு" என்றாள் வெடுக்கென அந்த அன்னை.

"என்னம்மா இப்படிப் பேசுறீங்க? ராணி நல்ல பொண்ணு தானே?" என்றாள் சங்கரி விட்டுக்கொடுக்காமல். அந்த அம்மாள் பார்த்த பார்வையில் சங்கரி இரண்டு துண்டாக போகாமல் இருந்தது தான் ஆச்சரியம்.

"அம்மா! நீங்க ஏன் இவங்க கிட்டப் பேசுறீங்க? இவங்க குடும்பமே இப்படித்தான். பேசாம இருங்க. வர வேண்டியவங்க வரட்டும். அப்ப பேசிக்கலாம்" என்றாள் நிதியின் தமக்கை. அவமானத்தில் முகம் சுண்டியது. கண்ணீரை அடக்கியபடி சமையலறைக்குள் நுழைந்தாள் சங்கரி. இனி இந்த விஷயத்தில் தலையிடுவதே இல்லை என்ற தீர்மானமும் செய்து கொண்டாள். சபா வந்தான். வரும் போதே ஆர்பாட்டமாக தங்கையை கொஞ்சினான். வந்தவர்களுக்கு ராணி தனக்கு எவ்வளவு முக்கியம் எனக் காட்டுகிறானாம். உள்ளூர சிரிப்பு வந்தது சங்கரிக்கு.

"சங்கரி! வந்தவங்களுக்கு ஏதாவது குடுத்தியா? நம்ம வீட்டுக்கு வரவங்க யாரா இருந்தாலும் நாம உபசரிக்கணும்" என்றான். அவனை விட வேகமாகப் பதில் சொன்னாள் நிதியின் தமக்கை.

"எல்லாம் நல்லாத் தான் கவனிச்சாங்க" என்றாள் வெடுக்கென. மனதுக்குள் "சபாஷ் சரியான போட்டி" என நினைத்துக் கொண்டாள் சங்கரி.

சோஃபாவில் தளர்வாக அமர்ந்து கொண்டு "என்ன பிரச்சனை?" என்றான் சபா. அவனது குரலில் அதிகாரம். அவனை அயர்ந்து போய்ப் பார்த்தார்கள் மற்றவர்கள்.
 
சங்கரி ராணி விசயத்தில பேசாம இருக்கனும். இந்த சபாவின் தோரணையை பார்த்தா ராணிய அனுப்பி வைக்க மாட்டான் போலவே. மத்த அண்ணிகளும் வந்த தான் கொஞ்சம் அடங்குவாளா ராணி. Nice update
 
Top