Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 14....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 14.

சபா அந்தக் குண்டைத் தூக்கிப் போட்டதிலிருந்து யோசித்து யோசித்து தலையே சுற்றத் தொடங்கியது சங்கரிக்கு. தன் அண்ணன் தனக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறான் என்ற உண்மை ராணிக்குத் தெரிய வந்தால் என்ன ஆகும்? அண்ணன் மீதுள்ள மரியாதையே போய் விடும். ஆனால் அதற்காக அவளிடம் சொல்லாமல் இருக்கக் கூடாது. யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் எப்படி இந்தச் சிக்கலிலிருந்து வெளிவருவது? பாவம் ராணி, ஏதோ ஊர் சுற்ற முடியவில்லை, வெளியில் வாங்கிச் சாப்பிட முடியவில்லை என சிறிய காரணத்துக்காக பிறந்த வீட்டில் உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கு நல்ல வார்த்தை சொல்லி அனுப்புவதை விட்டு இவர் இன்னொரு கல்யாணம் என்கிறாரே? என என்னென்ன யோசனைகளோ தோன்ற உறங்காமல் விழித்திருந்தாள் சங்கரி.

பொழுது விடிந்து அவரவர் வேலைக்குப் போன பிறகு ராணியைக் கூப்பிட்டாள்.

"என்ன அண்ணி? இன்னைக்கு என்ன மதியம் செய்யலாம்னு கேக்கக் கூப்பிட்டீங்களா? சிக்கன் வறுத்துடுங்க, மீனை குழம்பு வெச்சிருங்க" என்றாள்.

இந்தப் பெண்ணுக்கு சாப்பாட்டைத் தவிர வேறு எதுவும் இல்லையா? என எண்ணிக் கொண்டாள் சங்கரி. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு பேசினாள்.

"அப்படியே செஞ்சிடுறேன் ராணி! ஆனா நான் இப்ப கூப்பிட்டது அதுகாக இல்ல"

"பின்னே?"

"முதல்ல உக்காரேன். அப்படி என்ன அவசரம்? உங்கிட்ட பேசி எத்தனை நாளாச்சு? " என்றாள் நைச்சியமாக. ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே அமர்ந்தாள் ராணி.

"இதைப் பாருங்கண்ணி! திரும்பத் திரும்ப புருஷன் வீட்டுக்குப் போ! அது தான் நல்லதுன்னு அறிவுரை சொல்லப் போறீங்கன்னா, எனக்கு வேண்டாம். நிறையக் கேட்டாச்சு." என்றாள் எடுத்த எடுப்பில்.

"இல்..அது வந்து..அதுக்கு இல்ல! சும்மாப் பேசலாம்னு தான்" என்றாள் அண்ணி.

நாத்தனாரும் மதனியும் சிறிது நேரம் சினிமா, நடிகைகள், டிவி நாடகங்கள் பற்றிப் பேசினர். ராணிக்கு சென்னையைப் பற்றிச் சொல்லச் சொல்ல அலுக்கவே இல்லை. அந்தத் தின்பண்டம் கிடைக்கும், வித்தியாசமான சாட் வகைகள் கிடைக்கும், என பேசினாள். சங்கரியும் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டாள். கொஞ்ச நேரம் கழித்து தன் தூண்டிலை வீசினாள்.

"ராணி! உன் எதிர்காலத்தைப் பத்தி என்ன திட்டம் வெச்சிருக்கே?" என்றாள்.

"நீங்க உங்க எதிர்காலம் பத்தி என்ன திட்டம் வெச்சிருக்கீங்களோ அதான்" என்றாள் வெடுக்கென.

நன்றாக மாட்டினாயா? என்று மனதுள் நினைத்துக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள். "வீட்டை நல்லா கவனிச்சுக்கணும், உங்க அம்மா அப்பா கிட்ட நல்ல மருமகள்னு பேர் வாங்கணும், ரெண்டு குழந்தை பெத்துக்கணும். அதுங்களை நல்லாப் படிக்க வெச்சு ஆளாக்கணும். இது தான் என் ஆசை, திட்டம் எல்லாமே. அப்ப உனக்கும் இது தானே?" என்றாள் குழைந்த குரலில்.

சற்று நேரம் பேசாமல் அமர்ந்திருந்தாள் ராணி.

"உங்களை மாதிரி நான் சராசரி இல்ல. எனக்கு சாதிக்கணும். சமூகத்துல பெரிய ஆளா வரணும். இது தான் ஆசை"

"சமூகத்துல பெரிய ஆளான்னா எப்படி?"

"நாலு பேருக்கு என்னைத் தெரியணும். ராணின்னா அவங்களைத் தெரியுமேன்னு எல்லாரும் சொல்லணும்."

"அப்ப அதுக்கு நீ நடிகையானாத்தான் முடியும். அதுக்கு நீ தயாரா? உங்க அண்ணனுங்க சமாதிப்பாங்களா? இல்லை உங்க வீட்டுக்காரர் தான் ஒத்துக்குவாரா?"

மீண்டும் அமைதி காத்தாள் ராணி.

"மாவட்ட கலக்டர்னா எல்லாருக்கும் தெரியுமே?" என்றாள் விடாமல்.

"அதுக்கு உன்னை பயிற்சிக்கு அனுப்புனாங்க. அங்க போயி லவ் பண்ணிட்டு வந்த."

"அதுனால என்ன? திரும்பவும் பயிற்சிக்குப் போக முடியாதா என்னால? அப்பவாவது எனக்கு பல விஷயங்கள் தெரியாம இருந்தது. இப்ப அப்படி இல்லையே? என் கவனம் சிதறவே சிதறாது. "

இப்போது மௌனமாவது சங்கரியின் முறை. ராணி தொடர்ந்தாள்.

"அப்படி ஒரு வேளை அண்ணனுங்க ஒத்துக்கலைன்னா, நான் வேற ஏதாவது யோசிப்பேன்" என்றாள் சத்தமாக.

"ராணி! உங்கண்ணனுங்க உன்னால நிதியைத் தப்பா நினைக்குறாங்கம்மா! உன்னை அவன் கிட்ட இருந்து பிரிக்கலாம்னு யோசிக்கறாங்க. இது அரசல் புரசலா என் காதுல விழுந்தது."

ஒரு வினாடி கூடத் தயங்காமல் பதிலளித்தாள் ராணி. "எங்க அண்ணனுங்களுக்கு எனக்கு எது நல்லதுன்னு தெரியும். அவங்க சொல்ற படி நான் கேப்பேன்." என்றால் நல்ல பிள்ளை போல.

"அப்ப நிதி உன்னை விவாகரத்து செஞ்சாலும் நீ பேசாம அண்ணன் சொல்றாருன்னு இருப்பியா?"

"ஹூம்! அவன் என்ன என்னை விவாகரத்து செய்யுறது? எங்கண்ணனுங்க அதுக்கு விட மாட்டாங்க. நானே அவனை தூக்கி எறிஞ்சிருவேன். அப்பத்தான் நம்ம குடும்ப மானம் தப்பிக்கும்" என்றாள்.

கேட்கக் கேட்க தலை சுற்றியது சங்கரிக்கு. அழுகையும் கோபமும் வந்தன.

"ராணி! நீ புரிஞ்சு பேசுறியா? இல்லை புரியாமப் பேசுறியான்னே தெரியல்லம்மா! விவாகரத்துக்குப் பிறகு உன் வாழ்க்கை என்ன ஆகும்? நிதியை காதலிச்சுக் கட்டிக்கிட்டு நீ இப்படிப் பேசலாமா?" என்றாள் அழாத குறையாக.

"அண்ணி! நீங்க ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுறீங்க? நான் அப்பவும் சொன்னேன், இப்பவும் சொல்றேன், நிதியைக் கட்டிக்கிட்டா என் இஷ்டத்துக்கு இருக்கலாம்னு தான் கட்டிக்கிட்டேன். "

"ராணி! நீ பேசுறதைக் கேட்டா எனக்கு பயம்மா இருக்கும்மா! கல்யாண வாழ்க்கையை விளையாட்டா நெனச்சுட்டியோன்னு தான் கவலைப் படுறேன். ஒரு பேச்சுக்குக் கேக்குறேன். தப்பா நினைக்காதே! ஒரு வேளை உங்கண்ணன் தப்பா முடிவெடுத்தார்னா என்ன செய்வே?"

"தப்பான முடிவுன்னா?"

"உம்..வந்து...அதாவது உன்னை வேற ஒருத்தனுக்குக் கட்டி வைக்கலாம்னு நினைக்கிறாங்கன்னு வெச்சிக்கோ. அப்ப என்ன செய்வே?"

லேசாக சிரித்தாள் ராணி.

"நானே அந்த மாமா மகனைக் கட்டிக்கிட்டு இருக்கலாமோ, தப்பு செஞ்சிட்டோமோன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். இப்ப அண்ணனுங்க அவனுக்கோ, இல்லை பெரிய பணக்காரன் ஒருத்தனுக்கோ கட்டி வைக்கலாம்னு முடிவு செஞ்சாங்கன்னா நான் தடை சொல்ல மாட்டேன். ஆனா அதுக்கு முன்னால நிதி கிட்ட இருந்து முறைப்படி விவாகரத்து வாங்கணும்" என்றாள் கலக்கமே இல்லாமல்.

வயிறு கலங்கிக் குமட்டிக் கொண்டு வந்தது சங்கரிக்கு. கண்களிலும் நீர் வழிந்தது. என்ன மாதிரியான பெண் இவள்? தான் தமிழ்ப் பெண் என்பதையே மறந்து விட்டாளா? இவன் ஒத்து வரவில்லையென்றால் இன்னொருவன், அவனும் சரிப்படவில்லையென்றால் வேறொருவனா? தூ! மீண்டும் குமட்டியது. பளாரென அடிக்கத் துடித்த கையை அடக்கிக் கொண்டாள்.

"ராணி! இதெல்லாம் நம்ம ஊருக்கு ஒத்து வரும்மாம்மா? என்னைக்கு இருந்தாலும் நீ இன்னொருத்தனோட வாழ்ந்தவ தானேன்னு உன்னைக் கேட்டா அவமானமா இருக்காதா? நல்லா யோசிம்மா. நிதி ரொம்ப நல்ல பையன். உன்னை நல்லா பார்த்துக்குவான். பெண்கள் வீட்டு வேலை செஞ்சாத்தான் உடம்புக்கும் மனசுக்கும் நல்லது. அதைப் போய் பெரிய விஷயமாப் பேசி உன் வீட்டை நீயே அழிக்காதேம்மா!" என்றாள் கெஞ்சும் குரலில்.

நாற்காலியைப் பின்னால் தள்ளி விட்டு எழுந்தாள் ராணி.

"அண்ணி! என் வாழ்க்கையில தலையிடாதீங்க! நான் இங்கே இருக்குறது உங்களுக்கு இடைஞ்சலா இருக்குன்னு நெனக்கிறேன். அதான் என்னை தள்ளி விடுறீங்க. என்னால உங்களை மாதிரி அடிமை வாழ்க்கை வாழ முடியாது. எங்க அண்ணனுங்களும் அதை விரும்பல்ல. நான் இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கறேன் செஞ்சுக்கல்ல அது என் இஷ்டம். இதைப் பத்திப் பேச உங்களுக்கு உரிமை இல்ல" என்று கத்தினாள்.

கண்கள் இருண்டு மயக்கம் வர அப்படியே மயங்கிச் சரிந்தாள் சங்கரி. சுய உணர்வு வந்த போது அவள் தன் அறையில் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். சபா, மாணிக்கம், முத்து மற்றும் மாமியார் மாமனாரின் கவலை தோய்ந்த முகங்கள் தெரிய எழுந்து அமர்ந்தாள். மீண்டும் தலை சுற்ற அப்படியே விழப்போனவளைத் தாங்கிக் கொண்டான் சபா.

"என்னம்மா ஆச்சு உனக்கு? ரொம்ப வேலை செய்யாதேன்னா கேக்க மாட்டேங்குறியே? இப்ப என்ன ஆச்சு பாரு. மயங்கி விழுற அளவுக்கு நிலைமை போயிடிச்சு" என்றன் சபா ஆதரவாக. சங்கரியால் தன் காதுகளையே நம்ப முடியைல்லை. இவருக்கு இத்தனை மென்மையாக பேச வருமா? என யோசித்தாள்.

"சங்கரி! நீ நல்லா ஓய்வெடு! டேய் சபா! முதல்ல சமையல் வேலைக்கு ஆள் போடுறா! ஒத்தை ஆளா இத்தனை பேருக்கு சமைச்சுப் போட்டு தான் பலவீனமா ஆயிட்டா" என்றாள் மாமியார் தன் பங்குக்கு. வெட்கம் தோன்ற மெல்ல எழுந்து நின்றாள்.

"வந்து..அத்த! இது வந்து...அதனால வந்த மயக்கம் இல்ல..வந்து தலை முழுகி நாப்பது நாளாச்சு" என்றாள் மாமியாரின் காதில் மெல்லிய குரலில். மருமகளைக் கட்டி அணைத்துக்கொண்டாள் மாமியார்.

"டேய்! நம்ம குடும்பத்துக்கு வாரிசு வரப் போகுதுடா! மருமக முழுகாம இருக்கா! நாளைக்கே குலசாமி கோயில்ல பொங்கல் வைக்கணும்" என்று நாத்தழுதழுக்கச் சொன்னார் தங்கம்மாள். மாமனாருக்கு உற்சாகத்தில் பேச்சே வரவில்லை. முத்துவும், மாணிக்கமும் அண்ணனைத் தூக்கிக் கொண்டனர். சமையற்கட்டுக்கு ஓடிப்போய் சர்க்கரை எடுத்து வந்து மரும்கள் வாயில் போட்டார் தங்கம்மாள். குடும்பமே குதூகலமாக இருந்தது. இவற்றை மௌனமாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ராணி. அவளுள் என்னென்னவோ எண்ணங்கள்.

சங்கரியை தரையில் நடக்க விடவில்லை குடும்பத்தார். ஆனால் மருத்துவர் தெளிவாகச் சொல்லி விட்டார். அவளது கர்ரப்பபை பலமாக இருப்பதால் முதல் மூன்று மாதங்கள் மட்டும் சற்றே எச்சரிக்கையாக இருந்தால் போதும். மற்றபடி வீட்டு வேலைகள் எல்லாம் செய்யலாம். அதிக சுமை மட்டும் தூக்கக் கூடாது என்று சொல்லி விட்டார். அதனால் வீட்டு வேலைகளைத் தானே செய்தாள் சங்கரி. குமட்டல் நின்று இப்போது நன்றாகப் பசிக்க ஆரம்பித்தது. பிரசவத்துக்கும் அதன் பிறகும் சங்கரியைக் கவனிக்கவும்,. சமைக்கவும் என ஒரு பெண்மணியை வேலைக்கு சேர்த்துக்கொண்டனர். சங்கரி என்ன சொல்கிறாளோ அதன் படி தான் அவள் சமைக்க வேண்டும், மொத்தத்தில் சொல்லப் போனால் சங்கரி வைத்தது தான் சட்டம் என்றானது.

இப்போதெல்லாம் ராணியிடம் பேசுவதற்கே சங்கரிக்கு நேரம் இருப்பதில்லை. எந்நேரமும் குழந்தை வளர்ப்புப் பற்றியும், குழந்தை வயிற்றில் இருக்கும் போது எப்படி சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும் எனப் படிப்பதிலுமே குறியாக இருந்தாள். வேலையை முடிந்து வந்ததும் சபா நேரே அறைக்கு வந்து விடுவான். ராணி ஏதாவது சொன்னால் கூட "கொஞ்சம் இரு! முதல்ல அண்ணியைப் பார்த்துட்டு வரேன். அப்புறம் நீ கேளு" என்று சொல்லி விட்டு போய் விடுவான். ராணியின் அன்னையும் தந்தையும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு யாத்திரை சென்று விட்டார்கள். ஆகையால் ராணிக்கு ஏதாவது வேலை இருந்து கொண்டே இருந்தது. துவைத்த துணியை உலர்த்துவது, அண்ணனுக்கு டீ அல்லது காப்பி போட்டுக் கொடுப்பது. சமையல் வேலை செய்யும் அம்மா விடுப்பு எடுத்தால் முழுச் சமையலும் இவள் தலையில் விழுந்தது. சாதாரணமாக ரசம் வைத்து அப்பளம் பொறித்தால் அவளாலேயே அதை உண்ண முடியவில்லை.

முத்தண்ணனும், மாணிக்க அண்ணனும் இரு பெண்களைக் காதலித்தார்கள். அவர்கள் தூரத்துச் சொந்தம் என்பதால் மூத்த மருமகளின் பிரசவம் முடிந்து கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்து விட்டார்கள் வீட்டுப் பெரியவர்கள். அவர்களுக்கு தங்கள் காதலிகளோடு பேசுவதற்கும், அவர்கள் வீட்டுக்கு வந்தால் கவனிக்கச் சொல்லவுமே நேரம் சரியாக இருந்தது. வந்த அண்ணன்மார்களின் காதலிகள் இருவரும் கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு வந்து விட்டாள் ராணி எனத் தெரிந்ததும் சற்றே அலட்சியப் படுத்துகிறார்களோ என எண்ணம் தோன்றியது ராணிக்கு. இப்போதெல்லாம் அண்ணன்களும் அவளுக்கு ஆதரவில்லை போல உணர்ந்தாள் அவள். ஒரு காலத்தில் தன்னைச் சுற்றி இயங்கிய அந்த வீடு, இப்போது அண்ணி சங்கரியை சுற்றியே இயங்குகிறது என எண்ணிப் புழுங்கினாள்.

நிதியோடு வாழும் போது பல நாட்கள் அவன் பட்டர் சிக்கன் செய்து கொடுத்தது நினைவில் ஆட கண்ணீர் முட்டியது. எனக்கு முக்கியத்துவமே இல்லாமல் போய் விட்டது. எல்லாம் இந்த அண்ணியால் வந்த வினை. எனக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் எல்லாம் இப்போது அண்ணியைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ராணியைக் கவனியுங்கள் என யாருமே சொல்வதில்லை. கேவலம் இந்த சமையல் வேலை செய்யும் வேலைக்காரி நான் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாள். மட்டன் பிரியாணி செய் என்றால் பிள்ளைத்தாய்ச்சிக்கு மட்டன் ஆகாது. அதனால் மீன் தான் செய்ய வேண்டும் என்கிறாள். அதற்கு எல்லாரும் ஒத்து ஊதுகின்றனர். அப்படியானால் என் நிலை இந்த வீட்டில் என்ன? யோசிக்க ஆரம்பித்தாள் ராணி.

சில நாட்களாகவே ராணி சிந்தனை வசப்பட்டு இருப்பதையும் சரியாக சாப்பிடாமல் இருப்பதையும் கவனித்தாள் சங்கரி. சரி நாத்தனார் யோசிக்க ஆரம்பித்திருக்கிறாள். இது தான் சரியான சமயம என இரும்பு சூடாக இருக்கும் போதே தான் அடிக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு அவளது அறைக்குப் போனாள். ஆச்சரியத்தில் வாய் பிளந்தே போய் விட்டது சங்கரிக்கு. காரணம் எப்போதும் பொருட்கள் ஆங்காங்கே இறைந்து, துணிகள் மடிக்கப்படாமல் அலங்கோலமாகக் காட்சியளிக்கும் ராணியின் அறை சுத்தமாக இருந்தது.

"வெரிகுட் ராணி! அறையை நல்லா வெச்சிருக்கியே?" என்றாள் சங்கரி.

"என்ன மகாராணி அண்ணி இன்னைக்கு என் ரூமுக்கு விஜயம் செய்திருக்காங்க?" என்றாள் கிண்டலாய். ஆனால் அதில் தொனித்த வேதனையை உணர்ந்தாள் சங்கரி.

"அவங்க அவங்க வீட்டுல அவங்க அவங்க மகாராணி தானே ராணி! நீயும் பிள்ளை உண்டானா உங்க வீட்டுலயும் இப்படித்தான் உன்னை கையில தாங்குவாங்க. " என்றாள்.

"அப்ப இது என் வீடு இல்லியா?"

"கண்டிப்பா இது எப்பவுமே உன் வீடு தான் ராணி! ஆனா நமக்குன்னு சில கடமைகள் இருக்கும்மா! கல்யாணம் ஆன பிறகு இந்த உலகம் ஒரு பெண்ணைப் பார்க்குற பார்வையே மாறிடுது. அது வரைக்கும் சின்னப் பொண்ணா இருந்த நாம குடும்பத் தலைவிகளா ஆயிடுறோம். அதனால நமக்குப் பொறுப்பு வந்துடுது"

"அது ஏன் அண்ணி பெண்களை மட்டும் அப்படிப் பார்க்கணும்?"

"இல்ல ராணி! இங்க தான் உன்னைப் போலப் பல பெண்கள் தப்பு செய்யுறாங்க! சமூகம் பெண்களை மட்டும் பார்க்குறதில்ல. ஆண்களையும் பார்க்குற பார்வை மாறிடுது. அவன் ஏதாவது பொறுப்பிலாம செஞ்சா அவனை ஏசுது இந்த சமூகம்"

"ஆனா அமெரிக்காவுல இப்படியெல்லாம் இல்லண்ணி! அவங்க கல்யாணத்துக்கு முன்னால எப்படி இருந்தாங்களோ அப்படியே தான் இருப்பாங்க! நம்ம நாட்டுல தான் இப்படி" என்று அலுத்துக்கொண்டாள் ராணி.

அவள் தலையைத் தடவிக்கொடுத்தாள் சங்கரி.

"எனக்கு அமெரிக்காவைவைப் பத்தி அதிகம் தெரியாது ராணி. ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியும். நம்ம நாட்டுல தங்கச்சியோ, குழந்தைகளோ எத்தனை வயதானாலும் கூடப் பொறந்தவங்களோ, பெத்தவங்களோ தனியா அனுப்ப மாட்டாங்க. ஆனா அமெரிக்காவுல பெண்ணோ ஆணோ 18 வயசாச்சுன்னா அவங்க பெத்தவங்க வீட்டை விட்டு வந்து தனியாத்தான் வாழ்ந்தாகணும். நம்ம நாட்டுல அப்படி இருக்காங்களா?"

மீண்டும் யோசித்தாள் ராணி.

"நமக்குத் தேவையான போது அமெரிக்கா கலாசாரம், தேவையில்லாத போது இந்தியக் கலாசாரம்னா எப்படிம்மா?" என்றாள்.

"ஹூம்!" என்றாள் ராணி.

"ராணி! இப்பவே எல்லாரும் உன்னை விலக்கி வைக்குறாங்களோன்னு நெனைக்குற இல்ல நீ? இன்னமும் எனக்குக் குழந்தை பிறந்து அது வளர வளர உன் நிலைமை இந்த வீட்டுல எப்படி இருக்கும்? உன் மத்த ரெண்டு அண்ணனுங்களுக்கும் கல்யாணாமாகி அவங்களும் இந்த வீட்டுக்கு வந்துட்டா உன் நிலை என்ன? அதை யோசிம்மா. வேலை செய்ய முடியாதுன்னு தானே நீ பொறந்த வீட்டுக்கு வந்தே? ஆனா கடந்த ஒரு மாசமா நீ இங்க எவ்வளவு வேலை செஞ்ச?"

"உம்"

"உங்க அண்ணனுங்க உன் மேல வெச்சிருக்குற பாசம் எப்பவுமே குறையாது ராணிம்மா! ஆனா அவங்க அவங்க வாழ்க்கை, அவங்க அவங்க குடும்பம்னு வர போது முக்கியத்துவம் கொடுக்குறது மாறிடும். நல்லா யோசிச்சுப் பாரு. உன் குடும்பம் உன்னைத் தவிர வேற யாருக்கவது முக்கியத்துவம் கொடுக்குமா? நீ அண்ணன் வீட்டுல நீ வாழ்ந்தா உனக்கு என்ன மரியாதை இருக்கும் சமூகத்துல? நீ எளிதாச் சொன்னியே இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கறேன்னு, அதையே நிதி செய்யறான்னே வெச்சுக்கோ. உனக்கு எப்படி இருக்கும்?" கேவல் வெடித்தது ராணியிடமிருந்து.

அறையை விட்டு வெளியில் வந்து விட்டாள் சங்கரி. ஊதுற சங்கை ஊதி விட்டேன். இனி அவளுக்குத்தான் விடிய வேண்டும். யோசிப்பது எப்போதுமே நல்லது. இப்போது ராணி யோசிக்க ஆரம்பித்திருக்கிறாள். நல்லதே நடக்கும் என எண்ணியபடியே வெளியில் வந்து விட்டாள் சங்கரி.

அறையில் தனிமையில் அமர்ந்திருந்த ராணி யோசிக்க ஆரம்பித்தாள். "இரு மாதங்கள் நிதியோடு வாழ்ந்த இன்ப வாழ்வு நினைவில் ஆடியது. தான் பேசிய பேச்சுக்கள் வந்து போயின. "நான் எத்தனை அவமரியாதையாக அவரையும் அவர் குடும்பத்தையும் பேசினேன்? நிதியைக் குறை சொன்னேன். வேலை செய்ய முடியாது என்றேன். அப்படி இருந்தும் அவரே எத்தனை நாள் சமைத்து எனக்கும் வைத்து விட்டு அலுவலகம் போயிருக்கிறார்? இங்கே நான் வேலை செய்ததை யாருமே ஏன் அண்ணனே கூடக் கண்டு கொள்ளவே இல்லையே? இப்போதே அண்ணன்மார்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை. அம்மாவும் அப்பாவும் எப்போதும் வாயே திறக்க மாட்டார்கள். நாளைக்கே மூன்று அண்ணன்களும் குழந்தை மனைவி என பூத்துக்குலுங்கும் மரமாக இருக்க நான் மட்டும் பட்ட மரமாக இருக்க வேண்டுமா? அண்ணி சொன்னதைப் போல நிதி வேறு கல்யாணம் செய்தால் என்ன ஆகும்? அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் தான். அதை வீணாக்குவதும், நன்றாக வாழ்வதும் அவரவர் செய்யும் முடிவு தான். நான் இப்போது எடுக்கும் முடிவு என் வயோதிகம் வரை பாதிக்கும். என யோசித்தாள்.

சங்கரி அன்று மாலை டீ அருந்துவதற்காக ராணியை அழைக்கச் செல்லும் போது ராணியின் உற்சாக சிரிப்பொலி கேட்டது. கதவைத் திறந்த போது தன் துணிகளை பேக் செய்து கொண்டிருந்தாள் ராணி. நாளையே வந்து நிதி அழைத்துக்கொண்டு போவதாக சொல்லியிருப்பதாக அவள் சொல்ல நிம்மதியோடு சிரித்தாள் சங்கரி. ராணி சலுகையாக சாய்ந்து கொள்ள மன விட்டுச் சிரித்தனர் இரு பெண்களும். தன் வீடு எது? என்பதை உணர்ந்து விட்டாள் . இனி ராணி தன் வீட்டுக்கும் ராணி தான். எப்போதுமே.

*************************************************************************************************************

உங்கள் மனம் கவர்ந்த சங்கரி உங்களிடமிருந்து விடை பெறுகிறாள். மீண்டும் இன்னொரு கதையில் வேறு ஒரு பெண்ணை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் நண்பர்களே!
 
Sankari nalla velai seiydha. Ellai enral Rani madiri mental vazhkai la urupadave mattanga. Good story with nice ending ma srija.
 
Rani pondra pengal niraya irukkirargal. Rani, than nilamaiya purinthu nalla mudivu eduththathu feels happy.
 
Excellent
 
Top