Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தி ரேஸ்! | கிருஷ்ணா பச்சமுத்து | சிறுகதை

Advertisement

writerkrishna

Member
Member
தி ரேஸ் !

- கிருஷ்ணா பச்சமுத்து



பார்வை 1 - பசியாறித் திளைத்தல்

கதிரவன் யாரையும் கண்டுகொள்ளாது, தான் இருந்த நிலையிலேயே இருந்தான். புவியும் யாரையும் கண்டுகொள்ளாது, தன் சுழற்சிப் பணியில் மூழ்கியிருந்தது. கிழக்கிலிருந்து கதிரவனின் கதிர்கள் மரங்கள் விட்ட வழியில் நுழைந்து மண்ணைத் தொட்டு, ஒளிர்ந்து கொண்டிருந்தது. அருகில் பல்வேறு அதிர்வெண்களில் ஒலி ததும்பிக்கொண்டிருந்தது. கூடியிருந்த விலங்குக் கூட்டத்தில் யாவரும் ஒரே சேதியை வேறு வேறு விதமாக பேசிக்கொண்டனர்.

கூச்சல்! கூச்சல்!

இதுதான் எல்லாருடைய வாயிலிலும் அரைந்தது.

"ஏன்டா.. முயல்தான வேகமாக ஓடும்? இத என்னடா போய் வேடிக்கை பாக்க வந்துருக்கீங்க?" ஒரு மிருகம்.

"ஆமா ஓடும் தான். ஆனா ஆமை நடக்கவே நடக்காதுனு எதும் இல்லையே! எல்லைக்கோட்ட தாண்டுவதுதான வெற்றி, யாரு தாண்டுறாங்கனு ஓட விட்டாத்தான தெரியும்." மற்றொரு மிருகம்.

"எப்படியோ.. நமக்கு இன்னைக்கு நல்ல பொழுதுபோக்கு" மூன்றாம் மிருகம் சொல்ல, அருகிலிருந்த மிருகங்களனைத்தும் சிரித்தன.

"ஓ... ஏ.. யே.. ஆ.. ஊ.. ஊஉ" என கூச்சல் தொடர்ந்தது.

ஆமையும் முயலும் துவக்கக்கோட்டில் வந்து நின்றன. துப்பாக்கி வெடித்தது.

முயலைக் காணவில்லை. ஓட்டம் பிடித்திருந்தது. ஆமை அப்போதுதான் தன் காலை தூக்கியிருந்தது.

"ஹா.. ஹஹா.. " என சிரிப்பலை பறந்தது.

"டே நீ எதுக்குடா இந்த ரேசுக்கெல்லாம் வர..? முடியாதுனு உனக்கே தெரியாதா? வந்துட்டான் ஆட்டிக்கிட்டு.." கூட்டத்திலிருந்து சத்தம்.

"ஊஊஊஊஊஉ......" ஆமை தோற்றுவிட்டதாக கூச்சல் சொன்னது.

முயல் ஓடியது. ஓடியது. நெடுக இருந்த கூட்டம் "ஓ" வென முயலைத் ஊக்கப்படுத்தியது. திடீரென முயல் சாலையோரத்தில் படுத்து உறங்கியது.

"எடுத்துக்கோ.. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ.. ஆமை வரதுக்குள்ள விடிஞ்சுடும்..." கூட்டம் கத்தியது.

நேரம் போனது. கூட்டத்திற்கு பரபரப்பு கூடியது. ஆமை முயலைத் தாண்டியது.

கூட்டம் இப்போது, ஆமைக்கு ஆதரவாக கத்தியது.

“போ.. போ…” உற்சாகப்படுத்தியது.

நடையைத் தொடர்ந்த ஆமை, மெதுவாய் நடந்து நடந்து எல்லைக்கோட்டைத் தொட்டது. எல்லா மிருகங்களும் முயலை தலைக்கணம் பிடித்தென்று திட்டின. இப்போது ஆமையை அனைத்து மிருகங்களும் கொண்டாடின. "நான் உங்கள் பரம ரசிகன். நீங்கள் தான் உண்மையான வீரன்..!" என புகழாரம் சூட்டின."

"என்னதான் திறமைசாலியா இருந்தாலும், இப்படி தலைக்கணம் இருக்க கூடாது.. ஜெயிக்கிறதுக்கு முன்னாடி தூக்கம் உனக்கு கேக்குது? முடடாள்!" முயலுக்கு புத்திமதி சொல்லி மிருகங்கள் கலையத்துவங்கின.

பார்வை 2 - கடமையைச் செய்தல்

துவக்கக்கோட்டில் ஆமை நின்றிருந்தது. அதன் மனதில், அதன் மனைவி சொன்ன வார்த்தைகள் மட்டுமே திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தன. அவள் சொன்னதை அப்படியே செய்வதாக முடிவு செய்தது. தான் ஒரு பெரிய வித்தைக்காண்கிற கூட்டத்தின்முன் நிற்பதையே அது மறந்திருந்தது. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் தன் வேலையை துவங்கியது. தன்னால் இயன்ற வரைக் காலை முன்னோக்கி வைத்தது.

ஒன்று.. இரண்டு.. மூன்று..!

காலடிகள் தொடர்ந்தன. தன்னை எதிர்த்து ஓடும் முயலோ, கத்திக்கொண்டிருக்கும் கூட்டமோ ஆமையின் கவனத்தை சிதறடிக்கவில்லை. சிதறடிக்க முடியவில்லை. ஆமை தொடர்ந்தது! "எப்போது தான் அடி எடுத்து வைப்பதை நிறத்தப்போகிறோம்" என யோசிக்கவில்லை. மாறாக, "எவ்வளவு தூரமாயினும் கடக்கப்போகிறோம்" என மனதில் உறுதியாய் இருந்தது.

நடக்கணும்..

கடக்கணும்..

முடியும்..

நம்மால் முடியும்..

மனதில் ஒலித்த நம்பிக்கை வார்த்தகள் இவை.

திடீரென எல்லைக்கோடு ஆமையைக்கடந்து, பின்னோக்கி சென்றது. ஆம், முயல் இன்னும் எல்லைக்கோட்டைக் கடக்கவில்லை என்பதை ஆமை அறியாது. முயலைத் தாண்டி வந்தது கூட அதற்கு தெரியாது. அது அறிந்துகொள்ளவும் முயலவில்லை. தொடர்ந்தது நடையை. கால்களை நிறுத்தவில்லை. தொடர்ந்து போகும்போது, அதன் மனதில் “தான் எல்லைக்கோட்டை கடந்துவிட்டதாகவும், அதுவரை தன் மனத்தை ஒரு நிலைப்படுத்தி தன் மனைவி சொன்னதை மட்டும் நினைவில் வைத்து, முன்னேறியதாகவும், அனைத்திற்கும் அவளே காரண்மென்று சொல்லி அவளுக்கு முத்ததை பரிசளிக்கவும்..” நினைத்துக்கொண்டு ரேஸில் வைத்ததை விட வேகமாக கால்களை வைத்து, நடந்தது ஆமை.

கூட்டத்தின் குரல்கள் ஆமைக்கு கேட்கவே இல்லை. செவிக்கெட்டி மூளைக்கெட்டவில்லை!

பார்வை 3 - எவன் செத்தா எனக்கென்ன?

போட்டி நடக்கும் நாள். அதிகாலை.

முயலின் மனைவிக்கு, தலைப் பிரசவம். எப்போதுவெண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். வலியை பொறுத்து, புன்னைகை விரித்து, தனக்கு நம்பிக்கை கொடுக்கும் மனைவியின் முகம் காணும்போது, மனது வலித்தது. ஒவ்வொரு முறை இமை மூடும்போதும், முயல் கூட்டத்தலைவரான, தன்னுடைய குரு சொன்னதை மூளை திரும்ப ஒலித்துக்காட்டியது.

“நாம தான் ஜெயிப்போம். அது எல்லாருக்கும் தெரியும். ஆனா போட்டினு வந்துட்டா நாம நம்மல நிரூபிச்சுதான் ஆகனும். இத பாரு.. நீ தான் கலந்துக்க போறனு முடிவெடுத்து, எல்லார்டயும் சொல்லியாச்சு.

இனிமே மாத்துறது கஷ்டம். ஆரம்பிச்ச உடனே, பட்டுனு ஓடிட்டு வந்துடு. இதெல்லாம் நமக்கு சுசுபி..”

இமைகளை இணைக்க மனம் விடவில்லை.

போட்டி நேரம் வந்தது. துவக்ககோட்டில் நின்று, தனக்கு போட்டியாய் வந்த ஆமையைப் நோக்கி, "உனக்கு மனைவி யாருமில்லையா..?” என்பதைப்போல பார்த்தது. கூட்டத்தை நோக்கி "உங்களுக்கு வேற வேலையில்லையா?” என்பதைபோல பார்த்தது. பதிலுக்கு “ஏஏஏ.. நீ தான் ஜெயிக்கப்போற!” எனக் கூச்சலிட்டது முட்டாள் கூட்டம்.

துப்பாக்கி சத்தம்! முடித்துவிட்டால் ஆளை விட்டுவிடுவார்களென ஓட்டம் பிடித்தது முயல்.

ஓடியது.

ஓடியது.

பாதிதூரம் கடந்த பிறகு, முயலிடம் துவக்கத்தில் இருந்த வேகமும் பலமும் குறையத்துவங்கியது. விடாமல் ஓடியது.

உறங்காமலும், சரிவர சாப்பிடாததாலும் முயல் மயங்கி சாலையோரம் விழுந்தது. இரவிலிருந்து இமைகளை இணைய விடாமல் இருந்த முயலின் மனதும், மூளையும் இப்போது விட்டிருந்தது. இமைகள் இறுக மூடிக்கொண்டன.

நீண்ட நேரத்திற்கு பிறகு,

முயலின் இமைகள் பிரிந்தன. கண்கள் திறந்தன. கூட்டம் கலைந்திருந்தது. திடீரென நினைவில் பொறி தட்டி, எழுந்து ஓடியது. துவக்கக்கோட்டை நோக்கி ஓடியது முயல். சற்று நேரத்தில், வீட்டை அடைந்தது. வீட்டில் பிறந்த குழந்தைகளோடு மனைவி படுத்திருந்தாள். மனைவிக்கும் பிறந்த ஏழு குழந்தைகளுக்கும் முத்தமழை பொழிந்து, மகிழ்வுற்று தலை தூக்கி, அருகிலிருந்த தலைவரைப்பார்த்தது. அதன் அர்த்தம், “எவன் ஜெயிச்சா எனக்கென்னயா?” என்பது போலிருந்தது.

பார்வை முடிவில், மீண்டும் குழந்தைகளுக்கு முத்தமிட்டு, மனைவியைப் பார்த்தது முயல். மயக்கத்திலிருந்து எழுந்தவள், லேசாய் புன்னகைத்தாள்!



**** தி ரேஸ் - முற்றிற்று ****​
 
??3வது
பார்வை வித்தியாசமாக இருக்கிறது. மகிழ்ச்சி..
 
# புதுக்கவிதை :
பூனையும் எலியும்..

( பேச்சு வழக்கில்.)

சூழ்நிலை: ஒரு பூனை ‌பகலில்‌ ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு எலியை வேட்டையாட பார்த்து கொண்டு இருந்தது.

எலி பூனையை பார்த்து:

குந்திகினு இருக்காரே ! குறுகுறுன்னு பார்க்கரே !
ஓடியாடி வேல செய்ய கூடாதா பூனை மச்சான்? ஓடி ஆடி வேல
செய்யகூடாதா பூனை மச்சான்?

பூனை எலியை பார்த்து:

கண்ணுரெண்டும் தெரியலே.‌ காது ரெண்டும் கேக்கலே. கிட்ட வந்து சொல்லக் கூடாதா எலி மச்சான்? கிட்ட வந்து சொல்லக் கூடாதா எலி மச்சான்?

எலி பூனையை பார்த்து:

கிட்ட வந்தா நீ என்ன செய்வே?
கிட்ட வந்தா நீ என்ன செய்வே?
எனக்கு தெரியாதா? எனக்கு தெரியாதா?

( எலி ஓடியே போய்ச்சு.)

இந்த புதுக்கவிதை உங்களுக்கு பிடித்திருந்ததா என்று கமெண்ட் செய்யவும்.
 
Top