Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா... பகைதீரா-12

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா... பகைதீரா-12

திட்டுமேல் ஏறி நின்ற தீரன், அங்கு கூடி நிற்கும் தொழிலாளர்களை பார்த்து, அனைவருக்கும் வணக்கம் என்றான்...

என்ன ராஜா சார்... புதுசா கல்யாணம் ஆனவர், உங்க பொண்டாட்டியை பார்க்கவே நேரம் சரியா இருக்கும்... நீங்க எப்படி ஆபிஸில இருக்கீங்க என்று கபாலி நக்கலாக தீராவை பார்த்து கேட்டான்..

கபாலி பேசுவதை கண்டுகொள்ளாமல் தீரன் ,தொழிலாளர்களை பார்த்து அழகாக புன்னகைத்தான், நான் வரும்போது கபாலி பேசினதை கேட்டுக் கொண்டுதான் வந்தேன்...

தப்பு என் மேலதான் இருக்கு... என்று தீரன் சொன்னவுடன்... கூட்டத்தில் சலசலப்பு... உடனே தீரன் கொஞ்சம் அமைதியா இருந்தீங்கனா நான் சொல்லுறதை கேட்க முடியும்..

குமாரை தீடிரென்று வேலை விட்டு தூக்கனது தப்புதான், சரியா குமாரே என்று அவன் தோள்மீது கையை போட்டான்... சாரு என்ன தப்பு செஞ்சாருன்னு சொன்னீங்கன்னா வசதியாயிருக்கும், திருட்டு கணக்கு எழுதியிருக்காரு... அமைதியாக பேசியபடி ப்ளாருன்னு குமார் கண்ணத்தில் அடித்தான் தீரன்..

ராஜா என்னை மன்னிச்சுடுங்க தெரியாம தப்பு செஞ்சிட்டேன்னு காலை பிடிச்சு அழுதான் குமார்...

உன்னைப்பற்றி போலிஸ்ல கம்பளைன் கொடுக்கல இல்ல அதுதான் நான் செஞ்ச தப்பு... இப்ப புரியுதா, தொழிலாளர்களை பார்த்து கேட்டான் தீரன்... அவங்க இடத்துக்கு போய் வேலையை தொடங்குங்க, கட்டளையிட அனைவரும் கலைந்தனர்..

கபாலிமட்டும் அந்த திட்டில் நிற்க... தன் சிகையை சரிசெய்து... நீ எதுக்கு இந்த கூட்டத்த கூட்டின தெரியும்... ஒழுங்கா இருந்தா வேலையை பார்ப்ப இல்ல இங்கயிருக்க புலிக்கு இறையாயிடுவ... ஜாக்கிரதை.. காரில் ஏறினான்...
.......
சிட்டு அரண்மனைக்குள் நுழைய அங்கே குட்டிபோட்ட பூணைபோல் நடந்திருந்த நீலமேகம் ,

ஏய் இங்க வா... என்று கத்தி சொல்ல..

என்னையா கூப்பிட்டிங்க சித்தப்பா..

உன்னதான் வா... உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் பொண்ணுமேல கையை வைப்ப... ஓ எல்லாம் அந்த தீரன் கொடுக்கிற இடம்.. அனாதைக்கு வந்த வாழ்வு பாரு.. மரியாதை இந்த வீட்டைவிட்டு ஓடிடு இல்ல, உயிரோட இருக்க மாட்ட கோபமாக நீலமேகம் மிரட்ட...

அய்யோ, எனக்கு பயமாயிருக்கு சித்தப்பா இப்படியெல்லாம் பேசாதீங்க நான் எங்காவது போயிடுறேன் என்று கையை கட்டி சிட்டு பயப்பட..

ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்.. நீலமேகம் சொல்லி முடிக்கும்போதே..

ஹா...ஹான்னு சிரித்தாள் சிட்டு... இங்கபாருடா கிழநரியெல்லாம் பேசுது... யார்கிட்ட உன் வேலையை காட்டுற.. நீயும் உன் பையனும் செய்யற தில்லுமுல்லு எனக்கு தெரியாது நினைச்சியா... உனக்கும் எனக்கும் முன்பகையிருக்கும் நினைக்கிறேன்...
சிட்டு பேச பேச அதிர்ச்சியில் அவளை பார்த்துபடி நின்றான் நீலமேகம்..

நான் யாருன்னு இன்னும் சரியா புரிஞ்சிக்கல... உன்ன ஓட ஓட இந்த வீட்டை விட்டு விரட்டல... நீலமேகம் சொடுக்கிட்டு கூற

நீ விரட்ட வேண்டாம் தேவையானது கிடைச்சதும் நானே கிளம்பிடுவேன்...

அப்ப அப்ப இந்த சொத்துக்காக தான் வேஷம் போட்டு நடிக்கிறீயா... அதானே பார்த்தேன் தீரா விரும்பின அந்த ப்ரியாவ இந்தியாவை விட்டே அனுப்பிட்டோம்... நீ எப்ப அவனை காதலிச்ச ஒரே டௌவுட்டா இருந்துச்சு... நீ டாக்டரும் இல்ல, எப்படி உள்ளே வந்த..

ம்ம்... பேஷன்டோட பொண்டாட்டியா.. ஹா..ஹா..என்று சிரித்தாள் சிட்டு... அவனை காதலிக்கிறேன் தெரிஞ்சா நீ ஆளையே தூக்கிடுவே... அதான் லவ் இல்லாம டைரக்டா மேரேஞ்... எப்படி என் புத்திசாலித்தனம்...

அப்ப எத்தனை நாள் ப்ளான்...

ரொம்ப வருஷமா, சித்தப்பூ..

என்ன மரியாதை தேய்து, ஒழுங்கா பேசு சிட்டு...

உனக்கென்ன மரியாதை உண்ட வீட்டுக்கே இரண்டகம் பண்ணுறவன், பார்த்து யோசி எப்படி வீட்டை விட்டு தொறத்தலாம்...

என்னடா பயமில்லாம பேசறா... மனதில் நினைத்த நீலமேகம்.... சரி பாதி தரேன் கூட்டு சேரு..

இந்த ஷேரிங்கே நம்ம பாலிஸி கிடையாது...சோலோ பெர்ம்பாமன்ஸ் சித்தப்பூ... வரட்டும்மா என் டார்லிங் வர டைம் ஆகுது...

அவளை முறைத்துக்கொண்டே நின்றான்... அதற்குள் குணாவிடமிருந்து நீலமேகத்திற்கு போன் வந்தது...

ம்ம்...சொல்லு குணா..

அப்பா எல்லாம் சொதப்பிடுச்சு.. ஸ்ட்ரைக் இல்ல கேன்சல் செஞ்சிட்டான் தீரன்..

ச்சே... என்ன இப்படி ஆச்சு.. இந்த தீரன் பையனை மேகமலைக்கு கூட்டிட்டு வந்தது தப்பாயிடுச்சே... எப்படி சேதுபதியை ஏமாற்றி காசை பார்த்தோம் இனிமே முடியாதுபோல..
........

அன்று இரவு மணி ஒன்று.. மிதமான ஏஸி காற்றில் தலையின் முன் கேசம் தீரனின் நெற்றியை தாண்டி இமைகளில் இருக்க... தண்ணீர் குடிக்க எழுந்த சிட்டு அவனை ரசித்துவிட்டு படுக்கையில் படுத்தாள்..

அடுத்த நிமிடமே... தீரனின் முனகல் சத்தம் வர ஆரம்பித்தது... அய்யோ மகா... மகா கண்ணைத் திறம்மா... மகா என்று வீறிட்டு கத்தி எழுந்தான்...
லைட்டை போட்டாள் சிட்டு..

மகா...மகா கண்கள் ஒரே இடத்தில் வெறித்து பார்க்க.. தீரனின் வாயோ மகா.. மகா என்று ஜபித்தது,

டாக்டர், சிட்டு பதறிக்கொண்டு தீரனை அனைத்து என்னாச்சு டாக்டர்... உடனே தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து இதை குடிங்க டாக்டர்...

தீரன் தண்ணீரை குடித்துவிட்டு, சிட்டு என்றான்..

கெட்ட கனவா டாக்டர்... மறுபடியும் இந்த மகா வந்தாளா..

கனவு இல்ல சிட்டு நிஜம்... இது நான் சாகற வரைக்கும் வரும், கண்கலங்கி பார்த்தான்...
டாக்டர் என்ன சின்ன குழந்தை மாதிரி கண்கலங்கி... அவள் மடியில் சாய்ந்துக்கொண்டான் தீரன்...

யார்கிட்டாவது சொல்லனும் சிட்டு.. மனசு ரொம்ப வலிக்குது...

எங்க அப்பாவுக்கு கூடபிறந்த ஒரே தங்கச்சிதான் மயூரி... மயூ அத்தை என்னை வளர்த்தவங்க... அத்தை பிறக்கும்போதே கால் சரியா நடக்கமுடியாது தாங்கி தாங்கிதான் நடப்பாங்க... சின்ன வயசில அப்பா அத்தையை எங்க போனாலும் தூக்கிட்டுதான் போவாங்க.. அப்பாக்கு அத்தையின்ன உயிர்.. எங்கம்மாவுக்கும் அத்தையை பிடிக்கும்...

அப்பா, அத்தையை விட பத்துவயசு பெரியவங்க... அதனால முதல்ல அப்பாவுக்கு கல்யாணம் செய்து வச்சாங்க அத்தை... நிறைய மாப்பிள்ளையை பார்த்தாங்களாம் ஆனா யாரும், அத்தை ஊணம் என்று கட்டிக்க யோசிச்சாங்க..

அப்பதான் நிர்மலா சித்தி தம்பிதான், நீலமேகம் மாமா.. படிச்சவரு மயூ அத்தையை கட்டிக்க வந்தாரு... நாளைக்கு கல்யாணம் அத்தை ஊரைவிட்டே ஒருத்தனோட ஓடிபோயிட்டாங்க சிட்டு..

அவங்க பிடிச்சவங்களோட தானே போனாங்க டாக்டர்.. இதில் என்னயிருக்கு...

சிட்டு, அப்பாகிட்ட சொல்லிருந்தா அவரே நடத்தி வைத்திருப்பார்.. இது நம்பிக்கை துரோகமில்லையா... அதுவும் ஜமீன் வீட்டு கல்யாணம் நிண்ணுடுச்சுனா... மானமே போயிடுச்சு.. தாத்தா அப்படியே படுத்தபடிக்கையா ஆகிடாரு...
அப்பறம் காய்த்ரி அத்தையை திருமணம் செஞ்சிக்கிட்டாரு நீலமேகம் மாமா... கொஞ்ச நாள்ல தாத்தாவும் இறந்துட்டாரு... அப்பாவுக்கு கோவம் மயூ அத்தை மேல...

வருஷம் வருஷம் அவங்க பிறந்த நாளுக்கு இங்க வருவாங்க சிட்டு... உள்ளே வரமாட்டாங்க... அண்ணா என்று வெளியே நின்று கூப்பிடுவாங்க... அண்ணன் மேல அவ்வளவு பாசம் சிட்டு.. ஆனா நாங்க யாரும் அவங்களை உள்ள வாண்ணு கூப்பிடமாட்டோம்... ஏன் அப்பாவே அவங்க முகத்தில முழிக்க மாட்டார்.. கொஞ்சம் நேரம் அண்ணா அண்ணா கூப்பிட்டு கிளம்பிடுவாங்க..

பிறகு நிறைய பிரச்சனை வந்திடுச்சு சிட்டு... அத்தையால தான் நான் அம்மாயில்லாம இருக்கேன்....

ஒரு முறை அவங்க பிறந்தநாளுக்கு வந்தாங்க அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்க... அப்போ நான் தோட்டத்திலிருந்து உள்ளே வந்தேன்... அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் சிட்டு... என் கையை பிடிச்சிக்கிட்டாங்க... தீரா எப்படிடா இருக்கே கேட்டாங்க...

எனக்கு அவங்க மேல கோவம், நான் அவங்க கையை தட்டிவிட்டு உள்ளே வர படியேறினேன்... அப்ப மயூ அத்தை பொண்ணு மகா வந்திருந்தா... நாலாவது படிப்பா போல... ஓடி வந்து என்னை மாமா சொல்லி அவ என் கையை பிடிச்சா... பிஞ்சு விரல் சிட்டு... அழகா குண்டு முகம், காதுல சின்னதா சிமிக்கி போட்டிருந்தா... என்னை பார்த்து சிரிச்சது...

நான் அப்ப என்ன நினைச்சேன் தெரியல... அந்த பிள்ளையோட இழுத்துட்டு போய் வெளியே தள்ளினேன்.... பக்கத்தில இருந்த நீலமேகம் மாமாகிட்ட.. இவங்கள இங்கிருந்து போக சொல்லுங்க மாமா, போகலைன்னா நாயை அவுத்து விடுங்க சொல்லிட்டு மாடியில இருக்க ரூமிற்கு போயிட்டேன்...

ரூமின் கதவை திறந்து உள்ளே போறதுக்குள்ள... மாமான்னு மகாவோட குரல் கேட்டுச்சு, ஜன்னல் வழியா பார்த்தேன்... அரண்மனையோட வேட்டை நாயை கழிட்டி விட்டிருக்காங்க... சின்ன பிள்ளையில்லையா பயந்து ஓடியிருக்கா... அது துரத்திட்டு போய் அவளை கடிச்சிடுச்சு... நான் பார்த்த அடுத்த நிமிஷமே ஒடிவந்தேன்.. நாய்க்கு பயந்து தோட்டத்தில இருக்கிற அந்த கிணத்துல குதிச்சிட்டா... அத்தையால ஓடி வர முடியல...

இந்த மாமா சிரிக்கிறாரு... எனக்கு பதற்றமா இருந்துச்சு சிட்டு.

நான் உடனே கிணத்திற்குள் குதித்து அவளை மேலே தூக்கிட்டேன்... உடம்பெல்லாம் பச்ச ரத்தம் சிட்டு... என்னால பார்க்கமுடியல... அத்தை பயந்துபோய் மகான்னு அழறாங்க.. பேச்சு மூச்சு இல்லாம கிடந்தா... மகா..மகா இங்க பாருன்னு அவ கண்ணத்தை தட்டினேன்...

அதுக்குள் அவங்க தாத்தா வந்து நீங்கெல்லாம் மனுஷ பிறவியாடா, எங்களை பார்த்து அசிங்கமா திட்டிட்டு மகாவை தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் போயிட்டாங்க...

அப்பறம் என்னாச்சு டாக்டரு..

அவ பிழைச்சிட்டா... ஆனா நான் எவ்வளவு பெரிய பாவியில்ல, ஒரு குழந்தையை நாய்விட்டு கடிக்க வச்சிருக்கேன்... கல்நெஞ்சுக்காரனா இருக்கேன் என்று சொல்லி தன் மார்ப்பில் அடித்துக்கொண்டான்..

அய்யோ டாக்டர், இப்படி அடிச்சிக்காதீங்க தீரனை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டாள்...

சத்தியமா எனக்கு தெரியாது சிட்டு, இந்த நீலமேகம் மாமா நாயை கடிக்க விடுவாருன்னு தீரன் கண்கலங்க, அவன் நெற்றி முன் விழுந்த கேசத்தை விலகிவிட்டு முதல் முத்தம் வைத்தாள்..

----- பகைதீரா என்னவனே
 
Nirmala vandhachu ???
 
அடப்பாவி நீலமேகம்
பச்ச புள்ளைய இப்படி
நாய விட்டு கடிக்க விட்டு இருக்கான்
 
Top