Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேசாந்தர காதலி -1 (ஆக்கம் - பூமி மோகன்)

Advertisement

Boomi_K

New member
Member

"சலங்கை குலுங்க ஓடும் அலையே

சங்கதி என்ன சொல்லடீ வெளியே ?

கரையை கடந்து நீ வந்தது எதற்கு ?

கண்ணுக்குள்ள ஒரு ரகசியம் இருக்கு"




கே
ட்ப்பொறியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் யுவனுக்குள் புத்துணர்வை பாய்ச்சியது . அருணனின் கிரணங்கள் மெல்ல பூமிக்கு புத்தாடை அணிவித்து கொண்டிருக்கும் காலை வேளையில் அவன் செல்லும் சாலையில் நெரிசல் சற்று குறைவாகவே இருந்தது .



ஒரு மந்தகாச புன்னகையை வரவழைத்து இருந்தது அந்த பாடல் வரிகள் . ஊடே அவளது நினைவுகளும் . அவளும் அவனுக்காக பல தூரங்கள் கடக்க துடிக்கும் அலை போலத்தான். அவனது அலை (அவளேதான் ) ஒரு நாள் காணொளி அழைப்பில்தான் கால்கொலுசை காட்டியது உடனே ஞாபகத்திற்கு வந்தது .



" யுவி .. இங்க பாருங்களேன் " என்று காணொளி அழைப்பில் (வீடியோ கால்) தனது கொலுசை ஆர்வமாக காட்டியதோடு நிற்காமல் தரையில் ஜல் ஜல் என்று சத்தம் வரும்படி அசைத்து காட்டினாள். ஏதோ மணிமகுடம் அணிந்து இருப்பது போல உற்சாகம் அவளுக்குள் . அதை மொத்தமாய் பார்வைகளால் அள்ளி பருகியவன் , வேண்டுமென்றே



"ம்ம்ம்ம் ... எங்க ஊருல மாட்டுக்கு மாட்டிவிடுற கொலுசு மாதிரியே இருக்குடா, ரம்மி " என்றான். அவளோ சிணுங்கவும் இல்லை , கோபப்படவும் இல்லை . மாறாக அவனது ரம்மி ,



" அப்படியா ? நீங்க நடக்கும்போது எனக்கு சத்தமே கேட்கலையே " என்று தூசு தட்டி கொள்வது போல அவனுக்கு பதில் கொடுத்தாள் .



"அது சரி ..ஒரு மாடுதானே இன்னொரு மாட்டை காதலிக்கும் " என்றபடி இன்னும் சில நேரம் வம்பளந்து கொண்டிருந்தான் யுவன் . ஆனால் , அந்த நாள் முதல் நாளுக்கு நாள், ரம்மியின் நடையில் வேகம் ; தயக்கம்;பதவிசு அனைத்தையும் கொலுசொலியில் கணிக்கும் கலையில் அவன் தேர்ச்சி பெற்றது அவன் மட்டுமே அறிந்த ஒன்று . ஒருவேளை சொர்க்கத்தில் இருக்கும் திருவள்ளுவர் , செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்பதை நன்காராய்ந்து வாழும் இவனை கண்டு மெச்சி இருக்கலாம் .



மெல்ல பெருமூச்செறிந்து கொண்டான் யுவன் . பொதுவாக இரவு வேலை முடிந்து அவன் வீட்டிற்கு திரும்பும்போதெல்லாம் அவனது ரம்மி அலைப்பேசியில் ஆஜராகி விடுவாள் . யுவன் இருக்கும் சென்னைக்கும் , ரம்மியின் சிங்கப்பூருக்கும் இரண்டரை மணி நேர இடைவெளி இருப்பதினால் , அவன் இரவு வேலை முடிந்து உறங்கும்போது இவளுக்கு நாள் தொடங்குவது வழக்கமான ஒன்று .



சில நாட்கள் அவனுக்கு விரைவாக வேலை முடிந்து அயர்ந்து தூங்கி விடுவான் . அவன் குரல் கேட்கும் ஆவலில் சிலமுறை அழைக்கும் ரம்மிக்கு இன்னொரு புறம் அவனது தூக்கம் கலைப்பானேன் ? என்று எண்ணம் தோன்றவும் , மேலும் தொந்தரவு செய்யாமல் அவன் இதற்கு முன் அனுப்பிய குரல் பதிவுகள் கேட்டு கேட்டு அசைப்போட்டுக் கொண்டே நாளைத் தொடங்குவாள் .



"தினம் நீ தூங்கும் வரை தான் என் வாழ்க்கையே ..

விடிந்து உன் பேச்சொலி கேட்டாத்தான் எடுப்பேன் மூச்சையே
" இந்த வரிகளை அடிக்கடி பாடி தனது தாபத்தை வெளிப்படுத்துவாள் அவள் .



"யுவி, என்னத்தான் குளிர் தண்ணியில குளிச்சாலும் , ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டை சத்தமா வெச்சு கேட்டாலும் , உங்க சோர்வான குரல்ல நீங்க சொல்ற குட் மார்னிங்ல கிடைக்கிற சுகம் இல்லப்பா .. எனக்கு அத கேக்கலைன்னா நாளே விடிய மாட்டிங்குது ..என்கிட்டே பேச முடியலைன்னாலும் , ஒரு குட் மார்னிங் சொல்லி வாய்ஸ் நோட் போடுங்கப்பா " என்று இவள் தழைத்த குரலில் கெஞ்ச , நல்ல பிள்ளையாய் அடுத்த ஓரிரண்டு நாட்களுக்கும் அதை செய்வான் யுவன் . பிறகு பழைய குருடி கதவை திறடி என்று அவளை அலைக்கழிக்க வைத்து விடுவான் .



இப்படி தன் குரலுக்காக தவமாய் தவமிருந்த தன் தொலைத்தூர காதலி இப்படி மாயமாகி போனாளே ? இந்த பிரிவு தற்காலிகமானது தானே ? தான் மனதில் கொண்டுள்ள ஆசையெல்லாம் கொஞ்சம் நடைமுறைக்கு ஒத்துவராமல் இருக்கிறதோ ? அனைத்துமே நினைத்தது போல இயங்கவும் இயக்கவும், இது சினிமாவும் இல்லை ; மாய உலகும் இல்லை ! நிஜ வாழ்க்கைக்கு எந்த அளவு சாத்தியம் ? அதை அதிகம் நினைத்தால் தலைவலிதான் மிச்சம் என்று உணர்ந்து , எல்லா பாரத்தையும் காலத்தின் மீது போட்டுவிட்டு பயணத்தை மேற்கொள்ளும் நமது கதாநாயகனிடம் இருந்து தற்பொழுது விடைப்பெறுவோம் தோழமைகளே .
 

Attachments

  • 300540083_1410346972810639_5528207033413830782_n.jpg
    300540083_1410346972810639_5528207033413830782_n.jpg
    28.5 KB · Views: 0

Advertisement

Top