Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடியுணைச் சரணடைந்தேன் - 3

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
ஃப்ரண்ட்ஸ்.. அடுத்த எபி போட்டாச்சு.. படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை கொஞ்சம் சொல்லுங்க.. உங்கள் கருத்துக்கள் மட்டுமே எனக்கான எனர்ஜி. 24*7 என்னோட வொர்க். உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், அதுவும் இப்போ கொரோனோ வந்ததும் எக்ஷ்ரா ஆகிடுச்சு. சுத்தமா டைமே இல்ல. கிடைக்குற நேரம் கண்டிப்பா எபி கொடுக்குறேன். திருப்பூர்லயும் மூனு பேர் பாதிக்கப்பட்டுருக்காங்க ன்னு சொல்லிருக்காங்க. எங்க ஹாஸ்பிடலுக்கு ஃபீவர் ந்னு யார் வந்தாலும் உடனே GH தான் அனுப்பிட்டு இருக்கோம். குட்டீஸ் எல்லாரையும் சேஃபா வச்சுக்கோங்க. வெளிய அழைச்சிட்டு போகாதீங்க. கூட்டம் சேர்க்காதீங்க.. டேக் கேர் ஃப்ரண்ட்ஸ்.. டேக் கேர் ஆஃப் அவர் குட்டீஸ்..







தேடியுணைச்சரணடைந்தேன் – 3






அழகு தேவதையே
யார் தயவும் எனக்கு வேண்டாம்.
வர்ணனையும் வேண்டாம்.
அலங்கார வார்த்தைகளும் வேண்டாம்.
நாளை
விடியல் நன்றாக இருக்கும்.
நாம் இருவரும் சந்திக்கும் போது
என் உதடுகள் நம் காதலை உச்சரிக்காது.
எப்போதும் உன் பெயர் சொல்லி துடிக்கும்
என் இதயம் உன் பெயர் கூறி அழைக்காது.
நான் உன்னை காணும் அந்த அற்புத தருணத்தில்
நம் காதலை நீ என் கண்களில் வடியும் கண்ணீரில் உணருவாய்.
பதிலுக்கு நீ என் பெயர் உச்சரித்து "நான் உன்னை......."


“உன் போன் இல்லையா” என்றவனிடம் “அது எங்கேன்னுத் தெரியலையே, தாத்தா வச்சிருப்பார் போல” பதில் கூறியவள், அவன் போனை வாங்கி வேகமாய் “உங்கக்கிட்ட புகழ் மாமா நம்பர் இருக்கு தானே” எனவும்..

அந்த சில நிமிடங்கலிள் தோன்றிய இனிமையும் சட்டென்றுத் தொலைந்து போக “ம்ம்ம் இருக்கு” என்று இறுக்கமானக் குரலில் கூறிவிட்டு வெளியேப் பார்வையைப் பதிக்க, அவளோ அதைக்கண்டு கொள்ளமால் நம்பரை அழுத்த, அதில் வாணன் என்று பெயர் வர, சிரித்துக் கொண்டே காலிங் பட்டனை அழுத்த, அது ‘ஸ்விட்ச் ஆப்..’ என்று வர, “என்னாச்சு தெரியலையே...” என வாய்விட்டு புலம்பியவள், அந்த போனைக் கொண்டே தன் நெற்றியில் தட்ட, பக்கத்திலிருந்தவன் அவள் கையில் இருந்ததை பிடுங்கி விட்டு முறைத்துப் பார்த்தான்.


“ப்ச்… எதுக்கு இப்ப போனை பிடுங்கினிங்க, அதை நான் என்ன முழுங்கிடவா போறேன், ஒரு போன் கால் பண்ணிட்டு தரேன் கொடுங்க.” எனக் கோபமாய் பேச..

“நான் எப்ப தரலைன்னு சொன்னேன், கொடுத்த போனை என்ன செய்த, எதுக்கு தலையில தட்டின,” என அவனும் எகிற

“ம்ப்ச்.... கொடுங்க எனக்கு புகழ் மாமா கிட்ட பேசனும், என்னாச்சுத் தெரியல போன் சுவிட்ச் ஆப்ன்னு வருது” என கலங்கிய குரலில் பேச,

உடல் மொத்தமாய் இறுக, போனை அவள் கையில் திணித்துவிட்டு, சீட்டில் தலையை சாய்த்தவனுக்குத் தோன்றிய உணர்வுகளின் குவியலை வார்த்தையில் வடித்திட முடியாது..

முடிந்ததா..? எல்லாம் முடிந்ததா..? தன் வாழ்க்கை அவ்வளவு தானா..! இதுவே அவனது மனதை அலைக்கழித்தக் கேள்வி கணைகள். எண்ணங்கள் மீண்டும் தன் பால்யத்திற்க்கு திரும்ப எத்தனிக்க, அதை வழுக்கட்டாயமாகத் திசைத் திருப்பியவன் அருகே அமர்ந்தவளை பார்க்க, அவளோ அந்தப் போனோடு போராடிக் கொண்டிருந்தாள்..

மனைவியின் முகத்தில் இருந்த பதட்டமும் பயமும் அவனுக்கு வேறுகதை சொல்ல, மனதில் தோன்றிய வலியை எப்போதும் போல மறைத்தவன், மனைவியிடமிருந்த போனை வாங்கித் தன் பாக்கெட்டில் போட்டு விட்டு அவளைப் பார்க்க,

“போன் ஸ்விட்ச் ஆப்னே வருது ஆக்ஸிடெண்ட் மாதிரி எதுவும் ஆகியிருக்காது தானே, பாவம் புகழ் மாமா. எல்லாமே என்னால தான்” என்றவள், முன் சீட்டில் தலையைப் புதைத்து அழ, இரண்டாவது முறையாக அவளின் அழுகையில் உயிர்த்தான் வெற்றி.

ஆனால் இரண்டு முறையும் அவளின் அழுகை புகழுக்காகத்தான் இருந்தது. ஒருமுறை விடுமுறையில் அனைவரும் ஆலங்குடி வந்திருக்க, சிறுவர்கள் அனைவரும் கிணற்றில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். புகழும், மங்கையை அழைத்துக்கொண்டு அங்கே போயிருந்தான் கிணற்றில் குளிக்க.

அப்போது மேலிருந்து விழுந்த புகழ் தவறுதலாக பாறையில் மோதி விட, அதில் இரத்த வழிந்து தண்ணீரிலே அவன் மயக்கமாகி விட அதைப் பார்த்து அதிர்ந்த மங்கை, அவனை காப்பாற்றும்படி கதறினாள் அங்குள்ளவர்களிடம். மற்ற சிறுவர்கள் முயன்றுக் கொண்டிருக்க, அந்த வழியில் வந்த வெற்றி, இவளின் அழுகையைப் பார்த்து என்னவென்று வர, அவளும் அழுது கொண்டே புகழின் நிலையைச் சொல்லி, காப்பற்றும் படி கதறினாள்.

அன்றும் அவனுக்காகத்தான், இன்றும் அவனுக்காகத்தான். மனதை அழுத்திய வலியயை முயன்று சமன் செய்ய முயலுகிறான் முடியவில்லை. அந்நிலையிலும் அவளின் வீழிநீரை நிறுத்தும் வேகம் பிறக்க, தன்னை தன் உணர்வுகளை வழக்கம் போல உள்ளே புதைத்தவன், மீண்டும் மொபைலில் இருந்து ஒரு எண்ணுக்கு அழைத்தான். அது இரெண்டே ரிங்கில் எடுக்கப் பட்டு “வெற்றி உன் உன்னோட மேரேஜ் முடிஞ்சதா, எந்தப் பிரச்சனையும் இல்லையே” எனக் கேட்க, அதைக் கேட்டவனின் உணர்வுகள் எப்படி இருக்கிறாதாம்.

“ எனக்குத் தான் இந்த மேரேஜ் முடியும்ன்னு உனக்கு எப்படித் தெரியும், அதுதான் உன்னோட ப்ளானா, ஆனா ஏன்..? ஏன் உன்னையே நம்பின பொண்னை அநியாயமா ஏமாத்திட்டியே” எனக் குரலை உயர்த்தாமல், ஆனால் அவனின் அழுத்தமான வார்த்தைகளிலேயே அந்தப்பக்கம் யாரென்று உணர்ந்து கொண்டாள் மங்கை.

முகம் பிரகாசமாக, வெற்றியின் முகத்தையே ஆவலோடுப் பார்க்க, அந்தப் பக்கம் புகழோ “அது அப்படி இல்லை வெற்றி நான் சொல்றதைக் கேளு” என புகழ் ஆரம்பிக்கும் முன்னே, தன்னையும் போனையும் மாறி மாறி பார்த்தவளின் கையில் அதைத் திணித்து விட்டு வண்டியை நிறுத்தச் சொல்லி, இறங்கி வெளியே சற்றுத் தூரமாக, அவர்களின் பேச்சுச் சத்தம் கேட்காதத் தூரத்தில் நின்று கொண்டான். அவன் இறங்கியதுமே டிரைவரும் இறங்கி விட்டார்.
போனைக் காதில் வைத்து “மாமா.. மாமா எங்கே போனிங்க? இப்போ எங்கே இருங்கிங்க? ஏன் உங்க போன் சுவிட்ச் ஆப்னு வருது? நான் சொன்னேன் தானே வீட்ல பேசி மேரேஜை நிறுத்தாலாம்னு, கேட்டுருக்கலாம் தான, இப்போ எல்லோரும் உங்களைத் தப்பா பேசுறாங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு மாமா, என்னால தான எல்லாம். எனக்கு உதவி செய்யப் போய், சாரி மாமா, வெரி சாரி” என அழுதவளை, எப்படித் தேற்றுவது என்றேத் தெரியவில்லை புகழுக்கு...

“மகி” என்றான் அழுத்தமாக. அந்தக் குரலில் இருந்த அழுத்தத்தில் அவளது அழுகை நிற்க, “மகி நான் சொல்லுறதை முதல்ல கவனமாகக் கேளு, உன்னோட பிரச்சினையை யாரால சால்வ் செய்ய முடியுமோ, அவங்கக் கிட்டத்தான் உன்னை விட்டுட்டு வந்துருக்கேன், சரியா. இனி உனக்கு என்னோட உதவி தேவைப்படாது. தேவைப்பட்டாலும் நீ அதை வெற்றிகிட்டதான் கேட்கனும். அவன் உன்னோடக் கணவன். உனக்காக இருக்கான். அவனைக் கேளு. உனக்காக செய்வான். இப்ப அழுத மாதிரி எப்பவும் என்னை கேட்டு அவன் கிட்ட அழக்கூடாது. இது என்மேல சத்தியம். நீ எனக்கு கால் பண்ணாத நானே ப்ரபளம் எல்லாம் சால்வானதும் பேசுறேன்.”

“வெற்றி உன்னை பாத்துகிறதை விட, நீதான் அவனைப் பார்த்துக்கனும், இதுவரைக்கும் தனியாவே இருந்துருக்கான். நீ வந்தப் பிறகும் அப்படியே இருக்க விடக்கூடாது. அவனை நல்லாப் பார்த்துக்கோ, பாய்..” என போனை வைத்து விட, கையிலிருந்த போனையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

சில நொடிகள் பின் ஒரு முடிவுக்கு வந்தவளாகக் கதவைத் திறந்து வெளியில் இருந்தவனை “மாமா.. மாமா” என அழைக்கத் தூரத்தில் தெரிந்த தொடுவானில் வைந்திருந்த தொலைத்துக் கொண்டிருந்த தன் எண்ணங்களை மீட்டு, அவளது அழைப்புக்கு மதிப்புக் கொடுத்துத் திரும்பியவனை ‘வாங்க’ என்பது போல் அழைத்த அவள் செய்கையில் அழைப்பைக் கண்டு காரில் ஏறினான்...

கார் மெல்ல மெல்ல ஒட்டமெடுத்தது. இருவருக்குள்ளும் அமைதி பேரமைதி. ஓட்டுநர் இருக்கையில் இருந்த சீனுசாமி அந்த வீட்டின் விசுவாசி. இருவரையும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இருவருக்கும் விரைவிலேயே மன நிம்மதியடைந்து வாழ்க்கை செழிக்க வேண்டும் என அந்த நல்ல உள்ளம் கடவுளை வேண்டியது..

திருமண அலைச்சல், காலையில் புகழ் உண்டாக்கி விட்டுச் சென்ற புயல், அதை சமாளிக்க தன் தலையை உருட்டிய விதம், என எல்லாம் சேர்ந்து வெற்றிக்கு தலையை வலிக்க, அவளிடம் எதையும் பேசாமல் புகழ் என்ன பேசினான் என்றும் கூட கேட்கமால், உறக்கத்தைக் கட்டாயமக வரவழைத்துக் கொண்டான்.

மங்கையும் இதே நிலையில் தான் இருந்தாள். புகழ் கடைசி நிமிடத்தில் இப்படி ஒரு முடிவெடுப்பான் என்று அவளும் தான் எதிர் பார்க்கவில்லையே. வெற்றி தன்னைப்பற்றி என்ன நினைப்பனோ என்றுக் கவலை வேறு மனதை பிசைந்தது. என்ன காரணம் சொல்லி அவள் தன் நிலையை விளக்குவது என்றும் புரியவில்லை.

சிறுவயது முதல் இப்போது வரை அவளுக்கு எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதை சரி செய்ய உடனே புகழ் வேண்டும். அப்படித்தான் இந்த பிரச்சினையிலும் அவனை இழுத்து விட்டாள், வழக்கம் போல் அவனும் தலையை நுழைத்து விட்டான். இதெல்லாம் வெற்றிக்குத் தெரிய வரும் போது என்னவாகும் அப்போதைய தன் நிலை, நினைக்கவே பயங்கரமாக இருந்தது.

ஒன்றொன்றாக அனைத்தையும் நினைவுப் படுத்தியவளை, தொல்லை செய்யமால் தூக்கம் தூரம் போக, அதிலிருந்து கணவனை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இவனை ஏன் அத்தைக்கு பிடிக்கவில்லை. கருமை என்று கூட சொல்ல முடியாது, மாநிறம் தான் அப்படியிருக்க ஏன் இவனை பிடிக்காமால் போனது அவருக்கு. பெற்ற பிள்ளையை விட அழகென்ற, போதைக்கு அடிமையாகிப் போனாரா.? இதுதான் அவளுக்குத் தோன்றிய முதன்மையான கேள்வி தன் தாய்க்கும் மேலாக மதிக்கும் அத்தைக்குள் இப்படி ஒரு எண்ணம் அதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


தானும் வெற்றியைப்போல் கருமை நிறமாக இருந்திருந்தால், அத்தை தன்னையும், இப்படித்தான் ஒதுக்கி வைத்திருப்பரோ என்ற எண்ணமும் கூடவே உருவானது. அப்படி இருந்திருந்தால்.?

மங்கையின் பெற்றோர் இறக்கும் போது அவளுக்கு பத்து வயது. அப்போதிலிருந்து அவள் தாத்தா பாட்டியின் கவனிப்பின் கீழ் வந்து விட்டாள். அங்காத்தாள் இருந்தவரை எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை, அவரின் இறப்பிற்குப் பிறகு ராமசாமியின் வயது முதிர்வால் இருவரும் வனிதாவின் வீட்டிற்கே வந்து விட்டனர்.

தொழில்கள் மொத்தமும் பாலனின் கீழ் வந்து விட, ராமசாமியும் முதுமையின் காரணமாக வீட்டிலிருந்தப் படியே தேவையான வேலைகளை மட்டும் பார்த்துக் கொள்வார்.. புகழும் இன்ஜினியரிங் முடித்ததும், புனேவில் உள்ள கல்லுரியில் எம்பிஏ சேர்ந்து விட, மங்கை மருத்துவ படிப்பைத் தேர்ந்தெடுக்க, தொழிலைப் பார்க்க வேண்டிய வாரிசாச்சே என்றுத் தயங்கினாலும், புகழ் இருக்கிறானே அவன் பார்த்துக் கொள்வான் என்று பெரும் நிம்மதியடைந்து அவளது மருத்துவப் படிப்பிற்கு சரியென்றனர்.

அடுத்து சென்னை, தஞ்சை என இரண்டு இடத்திலும் சீட் கிடைக்க, மங்கைத் தேர்ந்தெடுத்ததோ தஞ்சாவூரைத்தான். அதற்கும் வனிதா ஒரு ஆட்டம் போட, அப்போதும் புகழ் நுழைந்து தான், பேசித் தஞ்சை மருத்துவ கல்லூரியில் சேர்த்து விட்டான். அவளுமே படிப்பதில் மட்டுமே குறியாக விட, பள்ளி விடுமுறை நாட்களில் மணிமொழி ஆலங்குடி வரும் சமயங்களில் வெற்றியைத் துணைக்கு வைத்துக்கொண்டு மங்கையை காண வருவாள்.

தன் தாய் மாமானின் மகள், தன் உறவுப் பெண் என வெற்றி அவளிடம் பேசினாலும், அவனின் ஆளுமையானத் தோற்றத்தை கண்டு மங்கை பயந்து ஒதுங்க ஆரம்பிக்க, ஆனால் வெற்றியோ தன்னுடைய தாயைப் போலத்தான் இவளும் தன் நிறத்தை கண்டே ஒதுங்குகிறாள் என நினைத்து அவன் முற்றிலும் ஒதுங்கி கொண்டான்..

தங்கையுடன் வந்தாலும் மகையைப் பார்க்க என்று அவள் முன் வருவதே இல்லை வெற்றி. இதில் தீடீர் விடுமுறை என்றால் வேறு வழியில்லாமல் மங்கை ஆலங்குடி வரும் சமயங்களில், வெற்றி வீட்டிற்கே வருவதில்லை. தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே இருந்து விடுவான். இந்த செய்கை நாச்சிக்கு யோசனை ஓடினாலும், பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. அப்போது மங்கையும் யாரையும் தொல்லை செய்யமால் புத்தகமும் கையுமாகத் தான் இருப்பாள்.

அதனால் பெரியவருக்கு பெரியதாக எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. புகழ் படிப்பை முடித்து வந்து தாத்தாவின் தொழிலைக் கையிலெடுக்க, வெற்றியும் நாச்சியாரின் சொத்தை பல மடங்காகப் பெருக்கியிருந்தான். இருவருமே செய்வதற்கு முன் தங்கள் தந்தையிடம் யோசனைகள் கேட்காமல் செய்வதில்லை. அந்த வகையில் ஒற்றுமையானவர்கள் தான் என பாலன் நினைத்து கொள்வார். அதோடு இரண்டு வீட்டிலுமே பாலன் ஒரே ஆண் என்பதால் அவருக்கு தெரியமால் எதுவும் இருக்கக்கூடாது என்பதும் பிள்ளைகளின் எண்ணம். எந்த இடத்திலும் தந்தை தலைக்குணிவை கண்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால் தொழில் விசயத்தில் இருவருக்குள்ளும் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை.

விசேஷங்களுக்கு எனக் குடும்பமாக வரும் போதுதான், அதிலும் வனிதா வரும் போதுதான் பிரச்சினைகள் வெடிக்கும். வெற்றி அந்த ஊரிலேயே பிறந்து, ஒவ்வொருவரையும் பார்த்துப் பழகி அவர்களது உணர்வுகளை உள்வாங்கி வளர்ந்தவன். அங்குள்ள மக்களுக்கு நாச்சி தெய்வம் என்றால், அவரது வாரிசான வெற்றியும் தெய்வம் தான். அவர்கள் அப்படித்தான் பார்ப்பார்கள்.

வனிதா ஊருக்கு வந்து விட்டால், வெற்றிக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்து எரிச்சல் வரும். தன் மகனுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் கோபமாக மாறி பிரச்சினைகளாக உருவெடுக்கும். முதல் மரியாதை, பரிவட்டம் என வரும் போது வெற்றி எப்போதும் முன் நிற்க மாட்டான். பாலன் இருக்கும் போது அந்த மரியாதை அவருக்கேப் போய் சேரவேண்டும் என உறுதியாக எல்லோரிடமும் சொல்லி விடுவான்.

அதேக் கருத்து தான் மற்ற எல்லோருக்கும் அதனால் அந்த விதத்தில் பெரிதாக எந்தப் பிரச்சினையும் வராது. புகழை வெற்றியின் பக்கம் விடமால் வளர்த்த வனிதாவால், மொழியை அப்படி வளர்க்க முடியவில்லை. அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததுமே தன் பெரியண்ணனின் பக்கம் வந்து விட்டாள். அவளுக்கு அவன் மட்டுமே ஹூரோ. யார் என்ன சொன்னாலும் காதில் வாங்க மாட்டாள். வெற்றிக்கும் அப்படித்தான் தன் மேல் உண்மையான பாசம் காட்டிய செல்லத் தங்கையை அவன் எங்கும் விட்டுக் கொடுத்ததில்லை. வனிதாவின் முறைப்புகளும், ஏச்சுக்களும், பேச்சுக்களும் கொஞ்சமும் செல்லுபடியாகவில்லை…

இதற்கிடையில் மங்கையின் படிப்பு முடியும் தருவாயில் இருக்க, திருமணப் பேச்சை ஆரம்பித்தார் வனிதா. புகழுக்கு மங்கையை முடித்து விடலாம் என்ற நெடுநாளைய எண்ணம் அவரது. ஆனால் ராமசாமியோ வெற்றியை மனதில் வைத்து, சம்மந்தியிடம் பேசிவிட்டு முடிவு செய்யலாம் எனச்சொல்ல, அதற்கு தகுந்தாற்போல நாச்சியாரும் மூத்தவன் இருக்கும் போது இளையவனுக்கு எப்படி முடிப்பது எனக் கேள்வித் தொடுக்க, வனிதாவோ ஆடித் தீர்த்து விட்டார்.

அப்படி யென்றால் அவனுக்கு முதலில் முடியுங்கள் என தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் பேச, அதன்பிறகு திருமணப் பேச்சை வெற்றி எடுக்கவே விடவில்லை. அப்படியே ஏதேனும் பெண் என்று நாச்சி ஆரம்பித்தாலும், அந்தப் பெண்ணைப் பார்க்காமலே பிடிக்கவில்லை என்று சொல்லிவிட, பெரியவர் ஓய்ந்து தான் போனார்.

இப்படியே நாட்களும் நகர்ந்து விட, புகழையும், மங்கையையும் ஒரே வீட்டில் வைத்திருந்ததால், பார்ப்பவர்கள், வேண்டாதவர்கள் என சிலர் தவறாகப் பேச, அதனால் பிரச்சினைகள் வெடிக்க, இதற்கு மேல் பொறுக்க மாட்டேன் என வனிதாவும் அனைவைரையும் எதிர்த்து புகழுக்கும், மங்கைக்கும் திருமண ஏற்பாட்டை நடத்தினார், இருவரின் சம்மதங்களையும் கேட்காமல்.

எண்ணச் சுழற்சியில் சுழன்றிருந்தவளைக் களைத்தது கார்க்கண்ணாடியைத் தட்டும் சத்தம். அதிர்ந்து விழித்தவள் அப்போது தான் கார் நின்றிருப்பதையே உணர்ந்தாள். சத்தம் வந்த பக்கம் கண்ணாடியை திறந்து என்னவென்றுப் பார்க்க, அருகே உறங்குபவனை எழுப்புமாறு சைகை செய்தார் வெளியே நின்றிருந்த சீனுசாமி. அவர் அருகே தாத்தா ராமாசாமி.

எப்போதும் இருக்கும் இறுக்கமான முகம் தளர்ந்திருக்க, எனக்குச் சிரிக்கவேத் தெரியாதி எனக் காட்டும்படியான அழுத்தமான உதடுகள், சற்றே அழுத்தம் தளர்ந்து விரிந்துக் கிடக்க, யோசனைகளில் சுருங்கிக் கிடக்கும் நெற்றி, சுருக்கங்கள் அற்று இருக்க, அகண்டிருக்கும் உடலை சுருக்கி, அந்த இடத்திற்கு ஏதுவாக உடலைக் குறுக்கி, ஒரு கையை மடக்கி, அதில் தலையை வைத்து சிறு குழந்தைப் போல் உறங்குபவனைப் பார்க்க பாவமாக இருந்தது மங்கைக்கு.

இதுதான் அவனது இயல்போ. மற்றவர்கள் ஒதுக்கி, அவர்களிடமிருந்து ஒதுங்கி, தன்னை கம்பீரமாகக் காட்டிக் கொண்டு, மிகுந்த சிரமப்படுகிறானோ என்றுத் தோன்றியது அவளுக்கு. இவன் உடல் என்ன மலை போல் பெரிதாக, அவன் என்னை அணைத்தால், அண்டாக்குள் அடங்கும் செம்பு போல இருப்பேனோ.. என நேரம் காலம் தெரியாமல் மன்சாட்சி கிண்டல் செய்தது.

அனைவரும் வருந்துகிறார்கள் என்றால் நானும் என் பங்கீற்கு வருத்துகிறேனோ என்றக் கவலை ஒரு பக்கம். என்னால் அவன் வருந்தக் கூடாது, வருந்தவேக் கூடாது என்ற மனதின் எண்ணம் ஒரு பக்கமாக அலைக்கழிக்க, சீர் செய்ய வேண்டும். அனைத்தையும் சீர் செய்ய வேண்டும். அவன் இழந்த அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற உறுதியும் பிறந்தது.

அவனோடான வாழ்க்கை இன்னும் நீண்டு கிடக்கிறது. ஒரே நாளில் எதற்கு இத்தனைப் போராட்டம். ஒரே நாளில் எதற்கு இத்தனைப் போராட்டம். பார்த்துக் கொள்ளலாம் எது வந்தாலும் என்ற எண்ணம் தோன்ற, இதுவரை இருந்த அலைக்கழிப்பை ஓரமாக இருத்திவிட்டு, அவன் தலையை வருடி, “மாமா.. மாமா” என்று மென்மையாக அழைக்க,


அவளின் அழைப்பு அவனுக்குச் சென்று சேர்ந்ததோ என்னவோ..? ஆனால் “வனி.. என்னைவிட்டுட்டுப் போகாதே வனி..” என்றான் முணுமுணுப்பாய்.

கணவனின் முணுமுணுப்பில் ‘வனி’ என்ற பெயரைக் கேட்டவள் அதிர்ந்து தான் போனாள். யார் அந்த வனி, கணவனின் காதலியோ… அவளை விரும்பியிருக்கிறானா..? நான் தான் தேவையில்லாமல் என்னுடைய சுயநலத்திற்காக இதில் இவனை இழுத்து விட்டேனா..? என மருண்டு போனவளின் காதில் வெற்றியின் செல் போன் அழைப்பு வந்ததற்கான அறிவிப்பில் பாடத்தொடங்க, அதில் ஒலித்த

மங்கை நீ மாங்கனி...
மடல் விடும்...
மல்லிகை வாழ்த்திடும்...
மழைத்துளி...
பாடலைக் கேட்டவள், பிரம்மைப் பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். அலைபேசியின் அழைப்பில் எழுந்தவன், தனக்கு மிக அருகில் இருந்த மனைவியை முதலில் அதிர்வாய் பார்த்தாலும், சூழல் சட்டென்று உணர, அவளைக் கேள்வியாகப் பார்த்துவிட்டு, வேறொன்றும் சொல்லாமல், போனைக் காதுக்குக் கொடுத்துப் பேசிக்கொண்டே காரில் இருந்து இறங்கிவிட்டான்.

இதற்கு என்ன அர்த்தம், எதற்கு, யாருக்கு இந்தப் பாட்டு..? ஏன் அப்படி பார்த்தான். என்ன சொல்ல வருகிறான். புரியவைல்லை அவளுக்கு. மங்கைதான் குழப்பத்தின் உச்சியில் மாட்டிக் கொண்டாள். குழப்பங்களை எப்படி சரிசெய்வது என்றக் கேள்வியுடனே காரை விட்டு இறங்கினாள்.

தொடரும்…
 
ஒருவேளை ரைட்டர் வதனியை தான் வனி னு சொல்லிருப்பானோ..?????


அப்ப வெற்றி மங்கையை இதுக்கு முன்னாடி காதலிஞ்6சிருக்கான்..நம்ம மனசு அவளுக்கு தெரிஞ்சிடுச்சோ அப்டினு குழப்பத்தில பாத்திருப்பானோ
 
ஹாய் ஹாய்
வதனிக்கா கதை உன்மையா நல்லாருக்கு.அடுத்து என்ன என்ன எண்டு ஒரு எதிர்பார்ப்ப தூண்டுது. உங்கட எழுத்து நடையும் நல்லாருக்கு..எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள். கெதியெண்டு அடுத்த எபி போடுங்கோ.
 
Top