Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 22

Advertisement

praveenraj

Well-known member
Member
அந்த நாளுக்குப் பிறகு இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் நிறைய பார்வைப் பரிமாற்றங்களை செய்துக்கொண்டனர். சித்தாராவும் அவளின் சகாக்களும் தங்களுக்குக் கிடைத்த இந்த முதல் பெரிய வேலையை தங்களால் முடிந்த அளவுக்குத் திறம்பட செய்து முடித்தனர். என்ன தான் சம்பள விஷயம் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் வேலையில் அவர்கள் எவ்வித குறையும் வைக்கவில்லை. ராஜீவுக்கும் அவர்களின் வேலை மிகவும் பிடித்துப்போயிருந்தது. அவளையும் கூட!
அன்று ஒருநாள் ரேஷ்மிக்குப் பிறந்தநாள் (ரேஷ்மி சித்தாராவின் சகாக்களில் ஒருவர்) சோ அன்றைக்கு மாலை எல்லோருக்கும் ட்ரீட் கொடுக்க முடிவு செய்திருந்தாள். ஏனோ தங்கள் குழுவினர் மட்டும் செல்வதாய் முடிவுசெய்ய நந்தகோபால் (இவரும் அந்த குழுவில் ஒருவர்) தான்,"ராஜீவையும் இன்வைட் பண்ணலாமா?' என்று கேட்க ஏனோ எல்லோரும் உடனே ஆமோதித்தனர்.
அன்றைக்கு ராஜீவும் அவர்களுடன் சென்றிருந்தான். வழக்கமான கிண்டல் கேலி சிரிப்பு சாப்பாடு என்று சென்றுக்கொண்டிருந்தது. இந்தப் பக்கம் சித்தாராவும் அவனும் அடிக்கடி பார்வைகளைச் செலுத்திக்கொண்டு இருந்தனர். ஆனால் பேசிக்கொள்ளவில்லை. ராஜீவ் ஓரளவுக்கு வசதியானவன். அவனுக்கு ஒரு தங்கை தம்பி. கல்யாணத்தைப் பற்றி பலமுறை கேட்டும் அவனிடத்தில் 'க்ரீன் சிக்னல்' இன்னும் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் விழித்தனர் அவன் பெற்றோர்.
அவர்களின் பூர்வீக தொழிலாக சில மில்கள் இருக்கிறது. இவனுக்குப் படிப்பில் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாய் இங்கே கொஞ்ச நாட்கள் வேலை செய்ய அவனுக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள் அவன் பெற்றோர்.. அன்று அவனுக்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. தன்னுடைய ரோட்டரி கிளப் தோழியின் மகளை ராஜீவுக்குக் கேட்டு இருந்தார்கள். சின்ன வயது முதல் அவனுக்கு அவளைத் தெரியும். அவள் ராகவி. தன்னுடைய அன்னையின் குணத்திற்கு ஏற்ற பெண் அவள். சோ தன் அன்னைக்கு அவளை தன் மருமகளாய் கொண்டுவர வேண்டும் என்று விருப்பம். நேரடியாக இப்போது தான் விஷயம் அவனை வந்துச் சேர்ந்தாலும் இதற்கான மறைமுக வேலை பலநாட்களாய் நடந்துக்கொண்டு இருப்பதை அவனும் அறிவான்.
ஏனோ சிலரை நமக்குப் பார்த்ததுமே பிடிக்காது அல்லவோ? அப்படித் தான் அவனுக்கு ராகவியும். லாரிகளில் இருக்கும் 10 மீட்டர் இடைவெளி அவசியம் என்பதைப் போல எப்போதும் அவளிடம் பல மீட்டர் இடைவெளியை மெயின்டெய்ன் செய்வான் ராஜீவ். அவளோ அதற்கு ஏற்றார் போல் ராஜீவை சூரியகாந்திப் பூப்போலவே பின்தொடர்வாள். (அதென்ன சூரியகாந்தி பூ? சூரிய ஒளியைப் பெற சூரியன் இருக்கும் திசையிலே இளம் சூரிய காந்தி பூ நகர்ந்துக் கொண்டு இருக்குமாம்!) இவனோ அவளை டைவர்ட் செய்து எஸ் ஆகிக்கொண்டே இருப்பான்.
இப்போது மீண்டும் அதே பேச்சு வர அவனோ எதிரே அமர்ந்து இருக்கும் சித்தாராவைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவளும் புரியாமல் பார்க்க எல்லோரும் சாப்பிட்டும் முடித்தனர். கைக்கழுவி விட்டு வந்ததும் அவளைத் தனியே அழைத்தவன், "அப்புறோம் அடுத்து என்ன பிளான்?'
"நல்லா சாப்டாச்சு போய் தூங்க வேண்டியது தான்"
"நான் இன்னைக்கு என்ன பிளானு கேட்கல. ஆப்டர் திஸ், அதாவது இந்த ப்ரொஜெக்ட் முடியும் தருவாயில் இருக்கு, அப்புறோம்?"
"ஹே சொல்ல மறந்துட்டேன், அன்னைக்கு எதார்த்தமா வந்த அந்த மேசன்(மேஸ்திரி) எங்க ஒர்க்கை பார்த்துட்டுப் போய் அவருக்குத் தெரிந்த பில்டர்ஸ் கிட்ட சொல்லியிருக்காராம். இந்த வாரம் வீக் எண்டு எங்களைப் பார்க்கச் சொல்லி அப்பொய்ண்ட்மென்ட் வந்திருக்கு. அண்ட் தேங்க் யூ ராஜீவ். தேங்க்ஸ் ரொம்ப சின்ன வார்த்தை தான், இருந்தும் சொல்றேன்..."
"ஹே தேங்க்ஸ் எல்லாம் வேணாம். ஆக்சுவல்லி உங்க ஒர்க் பேசுச்சு. பார்த்ததுமே எனக்குப் பிடிச்சு இருந்தது. நான் இல்லைனாலும் கண்டிப்பா உங்க ஒர்க் ரீச் ஆகியிருக்கும். என்ன என்னால ரீச் ஆனதுல எனக்குப் பெருமை"
"ஆஹாம்"
"நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே?"
யோசித்தவள், "அதுதான் சொன்னேனே, அடுத்தடுத்த ப்ரொஜெக்ட்ஸ் இருக்குனு"
"நான் கேரீர் பத்தி மட்டும் பேசல. லைப் பேமிலி அதைப்பற்றி..."
"ஓ மேரேஜ் பத்தியா?"
"ஆமா"
"எனக்குப் பிடிச்சதைப் படிக்கவைச்சாங்க, எனக்குப் பிடிச்ச வேலையையும் செய்ய வைச்சாங்க. இப்போயும் எனக்குப் பிடிச்சது தான் செய்வாங்கனு ஒரு நப்பாசை"
"ஏன் இப்படி? ஓ ஜாலி பேரெண்ட்ஸ்சோ?"
"இல்ல ஜாலி அத்தை மாமா"
புரியாமல் பார்த்தவன், "ஓ சாரி..."
"ஹே அம்மா அப்பா இருக்காங்க. தப்பா நெனச்சிக்காத..."
"புரியில?"
"எனக்கு முன்னாடி ஒரு அண்ணன் இருக்கான். என் மாமா அத்தைக்கு ரொம்ப வருஷமா குழந்தை இல்ல. அப்போ தான் அவங்களும் கன்சீவ் ஆகியிருந்தாகலாம், பட் பேபி இறந்து தான் பொறந்ததாம். சோ என்னைய அவங்ககிட்ட கொடுத்து வளர்த்தச் சொல்லிட்டாங்களாம். அதுனால நான் அவங்க கூடவே வளர்ந்தேன். விவரம் தெரிஞ்சதும் சொன்னாங்க, அத்தைமாமானு தான் கூப்பிடுவேன், ஆனா அவங்க தான் எல்லாமே எனக்கு. என் அப்பா அம்மா எல்லாம் செகண்டரி தான். சோ எல்லாமே என் விருப்பம் தான்"
"ஸ்ட்ரேஞ்(விந்தை)"
"ஹா ஹா"
"உண்மைத் தெரிஞ்சதும் உனக்கு உன் அப்பா அம்மா கூடப் போகணும்னு தோணல?"
"அதெப்படி? சின்ன வயசுல இருந்து என்னைய வளர்த்தது அவங்க. அம்மா அப்பான்னு பீலிங்ஸ் இருக்கு ஆனா அத்தை மாமா தான் எல்லாம்!"
"சூப்பர். அப்போ உன் மேரேஜ் எல்லாம் உன் அத்தையும் மாமாவும் தான் செய்வாங்க ரைட்?"
"அஃ கோர்ஸ்"
"அவங்க சொல்ற பையனைத் தான் கல்யாணம் செய்வையா?"
"எனக்குப் பிடிச்சவனை!"
"அப்போ என்னப் பிடிக்குமா உனக்கு?"
........................................................
அங்கே இளவேனிலிடம் விளையாடிக்கொண்டு இருந்தான் துவாரா. அவளும் அவனோடு சிரித்துக்கொண்டு விளையாட அவள் ஆணைக்கிணங்கி கதையையும் சொல்லிக்கொண்டு இருந்தான். அதும் குழந்தைகளுக்கென்று சொல்லும் அந்த பிரதேயக மொழியில், இழுத்து இழுத்து சுவாரசியமாய் கைகளைக் காற்றில் விரித்து சுவாரசியமாய், அதும் பேண்டஸி கதை. அதாவது பூதம் பற்றியது. அதுதான் இளவேனிலின் பேவோரைட்.
இப்படிச் சிரித்து உற்சாகமாய் ரசனையோடு கதை சொல்லும் இந்த துவாரகேஷ் ஏனோ காலையில் இருந்து அவள் பார்க்கும் துவாரா போல் இல்லாமல் இருந்தான். 'இப்படியே இருந்தால் நல்லா தானே இருக்கிறான்? பிறகு ஏன் காலையில் கோவமாய் பேசி, அடிவாங்கி, அழுது, கோவித்துக்கொண்டு' என்று யோசித்த சரித்திராவிற்கு அவனொரு புதிராகத் தான் தெரிந்தான்.
ஒரு வழியாக கதையை சொல்லிமுடிக்க வழக்கம் போல் அவனுக்கு கதை சொல்லியதற்கான ஃபீஸ் கிடைத்தது. (கன்னத்தில் ஒரு முத்தம்!) பிறகு அவளே ஏதோ தோன்றியவளாய் "தூ மாமா நான் மூஞ்சி கழுவனும்..."
அவன் புரியாமல் விழிக்க,
"ஈவினிங் பேஸ் வாஷ் பண்ணனும். அம்மா திட்டுவாங்க" என்று மழலையில் சொல்ல,
"அம்மாகிட்டப் போகணுமா?"
"உங்களுக்கு எனக்கு பேஸ் வாஷ் பண்ணிவிடத் தெரியாதா?" என்று புரியாமல் வினவினாள்.
"அவ்வளவு தானே பண்ணிட்டா போச்சு?" என்று இவன் டவல் எல்லாம் எடுக்க ஏனோ அங்கு நின்றுக்கொண்டு இருந்த இளவேனிலை சைகையால் அழைத்தாள் சரித்திரா.
மாட்டேன் என்பது போல் தலையை ஆடியவள் "மாமா அவங்க கூப்பிடுறாங்க" என்று சரித்திராவை கைக் காட்டினாள் அவள். சரித்திரா திடுக்கிட்டு நான் தப்பா எதுவும் சொல்லல என்பது போல் செய்ய, அவனோ அவளை பேஸ் வாஷ் செய்ய அழைத்துச்சென்று மீண்டும் கூட்டிவந்தான்.
துவட்டி விட்டு அமரவைக்கவும்,"எனக்கு பவுடர், பொட்டு எல்லாம் யாரு வெப்பா?" என்று கேட்க, இப்போது அதற்கு எங்கே போவான் துவாரா?
"இரு நான் போய் வாங்கிட்டு வரேன்..." என்று நகர ஏனோ ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. எப்படியும் காலையில் நடந்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும், எல்லோரும் இப்போது அங்கே இருப்பார்கள்.பேசிக்கல்லி இவன் ஸ்ஷய்(கூச்சசுபாவம்) இப்போது ஒரு மாதிரி ஹுமிலேட்டடாய் (அவமானப்பட்டதாய்) உணர்ந்தான். அதும் இதித்ரி, மௌனி, பாரு என்று புதியவர்கள் முன்னிலையில் அவன் செல்லத் தயங்கினான்.அவன் நகராமல் இருக்க,
சரித்திரா தான் தன் பையைத் திறந்து தன் மேக்கப் உபகரணங்களை எடுத்து, "இங்க வாங்க நான் செஞ்சு விடுறேன்" என்று வாஞ்சையாய் அழைத்தாள்.
அவளோ மீண்டும் துவாராவைப் பார்க்க அவனும் "போ" என்று தலையை ஆட்டினான். அவள் போக அவளுக்கு சரித்திரா தலை சீவி வித்தியாசமாய் புது ஹேர் செட் செய்து பின்னவும் ஏனோ இது இளவேனிலுக்கு ரொம்பவும் பொருத்தமாய் இருப்பதாய் துவாராவும் நினைத்தான். பிறகு பவுடர் அடித்து லைட்டாக ரோஸ் பவுடர் அடிக்க அவளிடமிருந்து வித்யாசமான பொட்டுகளை எல்லாம் பார்த்தவள் தனக்குப் பிடித்ததாக ஒன்றைக் கைக்காட்ட அதையெடுத்து வைத்து அவனுக்கு நெட்டி முறித்தாள். கண்ணாடியில் தன்னையே பார்த்த இளவேனிலுக்கு ஒரு வித வெட்கம் வர ஓடிச்சென்று துவாராவைக் கட்டிப்பிடித்து முகத்தை மூடிக்கொண்டாள்.
இதையெல்லாம் பக்கத்துக்கு சீட்டில் இருந்த சித்தாராவும் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். ஏனோ இளவேனிலின் இந்த செய்கை அவளையும் ஈர்த்தது. பின்னே யாருக்குமே பொழுது போகவில்லை எவ்வளவு நேரம் தான் தூங்குவது என்று சுற்றி முற்றி வேடிக்கைப் பார்க்க அவளும் துவாரா அவளுக்கு கதை சொல்வதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.
துவாரா அவளை படம்பிடித்து நித்யாவிற்கு வாட்ஸ் அப் செய்தான். ஏதேதோ யோசனையில் இருந்தவளுக்கு சப்தம் வர எடுத்துப் பார்த்தவள் சிரித்து ஆச்சரியப்பட்டு, லவ் சிம்பலை தட்டிவிட்டாள். நித்யா சிரிப்பதைப் பார்த்த மிரு விசாரிக்க எல்லோருக்கும் அந்த புகைப்படத்தைக் காட்டினாள்.
எல்லோரும் அதைப் பார்த்து சிரித்து ஆச்சரியப்பட்டனர். "யாரு மேக் அப் செஞ்சது?"- மிரு தட்ட ,,
"தி கேர்ள் நெக்ஸ்ட் டு மீ"(என் அருகில் இருக்கும் பெண்)
"இரு நான் போய் அவளைத் தூக்கிட்டு வரேன்" என்று மிரு எழுந்தாள்,
"கொஞ்ச நேரம் அவ அங்கேயே இருக்கட்டும் மிரு. இப்போதான் அவன் கொஞ்சம் நார்மலா இருக்கான்.அவ கூட இருந்தா அவன் இன்னும் ரிலெக்ஸ்டா இருப்பான். விடு" - நித்து
"அதும் சரிதான். ஊருக்கு போய் இறங்குற வரைக்கும் யாரும் அவன்கிட்ட வம்பு பண்ண வேணாம்" - விவி
"ஓகே" என்று இப்போது பெண்கள் எல்லோரும் எழுந்து ரெஃப்ரெஷ் ஆக சென்றனர். மணி 04 . 45 ஆனது.
அங்கே இளவேனில் சரித்திரா மற்றும் துவாரா இருவரிடமும் ஓடிப்பிடித்து விளையாடினாள்.
சரித்திராவோ துவாராவின் மலர்ந்த முகத்தை ஏனோ அடிக்கடிப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
................................
பெண்கள் ஒவ்வொருவராய்ச் சென்று முகம் கழுவி வர, ஆண்களும் பின்னாலே சென்று முகம் கழுவி ஃப்ரெஷ் ஆகிவந்தனர். மௌனி மட்டும் எழாமல் பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு படுத்திருக்க, "ஹே அழுக்கு மூட்டை! போய் மூஞ்சி கழுவிட்டு வா. போடி" என்று ஹேமா சொன்னதும் அவளோ முறைத்தாள்.
"சட்டு புட்டுன்னு வாங்கப்பா, ஹேமா மௌனி கதையை முடிக்க வேணாமா?" - ஜிட்டு
ஏனோ இப்போது எல்லோருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.மேலும் இவர்களின் மீதிக் கதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் பெருக எல்லோரும் ரெடி ஆகினர்.
ஜிட்டு தலையை சீவ, "ஐயோ ஐயோ" என்று கத்தினான்,
"ஏன்டா என்ன ஆச்சு?"
"என் முடி. என் முடி எல்லாம் கொட்டுது. அச்சச்சியோ சொட்டை லேசா எட்டிப் பார்க்குது. சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்..."
எல்லோரும் கொஞ்சம் புன்முறுவலிட, "இதி சீக்கிரம் உங்க வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணச் சொல்லு" என்ற ஜிட்டுக்கு,
"சொல்லிட்டேன் ஜிட்டு. மாப்பிள்ள பார்த்துட்டு இருக்காங்களாம்..."
"ஹேய் என்ன விளையாடறயா? குத்துக்கல்லாட்டம் நான் எதுக்கு இருக்கேன்?"
"உனக்கு தான் சொட்ட விழுதே. எனக்கு வழுக்கைத் தலை மாப்பிள்ளை எல்லாம் வேணாம்"
எல்லோரும் மீண்டும் சிரிக்க, ஜிட்டு தான் "பேபி பேபி. முடியெல்லாம் ஒரு பிரச்சனையா?"
"கண்டிப்பா" என்று அவள் சொல்ல, ஜிட்டு அவளை சமாதானம் செய்துகொண்டிருந்தான். (ஆக்சுவல்லி இதித்ரி விளையாடிக்கொண்டு இருந்தாள்)
"டேய் மச்சான் விடுடா. இவ என்னமோ உலகத்துல இல்லாதா அழகினு நெனச்சிட்டு இருக்கா. உன் அழகுக்கும், அறிவுக்கும், ஏன் உன் சொட்டைக்கும்..." என்று சொல்லும்போதே செபாவுக்குச் சிரிப்பு வர, அடக்கிக்கொண்டு "பொண்ணுங்க வரிசையா நிப்பாங்க..."
"கரெக்ட்டா சொன்னடா செபா. ஜிட்டு நீ யானை மாதிரி. உன் பலம் என்னனு உனக்கு இன்னும் தெரியில. இதித்ரி எல்லாம் உனக்கு மேட்சே இல்ல" - இளங்கோ
அவர்களை நோக்கி கரத்தைக் கூப்பியவன், "கொஞ்சம் அமைதியா இருங்கடா. குதுக்கலாமா போயிட்டு இருக்குற வாழ்க்கையில கும்மி அடிச்சிட்டு போயிடாதீங்க" "இதி இவனுங்க எல்லாம் ஏதோ சதி பண்ணுறாங்க நம்பாத..."
"மச்சான் உங்க இன்சூரன்ஸ் ஆபிஸ்ல யாரோ புதுசா ஒரு பொண்ணு வந்ததா சொன்னியே. பேருகூட, ஆம் அம்ஷா. பேரும் அம்சமா இருக்கும் ஆளும் அம்சமா இருக்குனு பன்ச் வேற கொடுத்தியே?" - ஹேமா
இதித்ரி முகம் இப்போது உண்மையிலே கோவமாக, "பேபி பேபி நான் அவனை கிண்டல் பண்ணேன்னு பதிலுக்கு என்னைப் பழிவாங்குறான் பேபி. வேணாம் பேபி"
"இதி முன்னாடி சொன்னியே, 'பேபி பேபினு வருவ இல்ல அப்போ பார்த்துக்கறேன்'னு இப்போ பாரு உன்னை ஐஸ் வெக்குறான்" என்று தியாவும் தன் பங்கிற்கு ஏத்திவிட அவள் கோவமாய்ப் போக திரும்பி எல்லோரையும் முறைத்து, "சத்தியமா சொல்றேன் இந்த விர்ஜின் பையன் சாபம் உங்களைச் சும்மாவே விடாது" என்று சொல்லி இதித்ரி பின்னாலே போனான் ஜிட்டு.
"அப்பாடா இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு" என்று ஹேமா சொல்ல அதற்கு ஆமோதித்து தியா செபா இளங்கோ மூவரும் ஹை பை கொடுத்தனர். பெண்களும் சிரிக்க இருந்தும் மௌனி தான், "அவரு பாவம் அண்ணங்களா..."
"நாயி வாயிருக்குனு என்ன ஆட்டம் ஆடும். கொஞ்சம் அலையட்டும்" என்று எல்லோரும் சொல்ல, அதற்குள் அந்த ஒலியில் lவிவானும் அனேஷியாவும் முழித்துக்கொண்டனர்.
"என்ன ஆச்சு?" என்ற விவானுக்கு,
"சும்மா என்டெர்டெய்ன்மென்ட்..."
அனேஷியா ஃப்ரெஷ் ஆக ரெஸ்ட் ரூம் போக அங்கே வழியில் ஜிட்டு இதித்ரியிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான். "இந்த ஹேமா பையன் வேணும்னே என்னைய பழிவாங்கிட்டான் பேபி. தியாவும் கூட... நீ தான் பேபி எனக்கு ஏத்த ஆளு. ப்ளீஸ் ப்ளீஸ்" என்று அவன் பேச அனேஷியாவிற்கும் புரிந்து சிரித்துக்கொண்டே போனாள். மீண்டும் வரும் போதும் இன்னும் அவர்கள் கம்ப்ரோமைஸ் ஆகாமல் இருக்க வந்து எல்லோரிடமும் சொல்ல பெண்கள் எல்லோரும் கொஞ்சம் கோவமாக, ஆண்கள் மீண்டும் சிரித்தனர்.
விவானிடம் துவாரா அனுப்பிய இளாவின் புகைப்படத்தை நித்து காட்ட அவனும் அவளைப் பார்த்து ரசித்தான், "செம்ம அழகுல்ல என் பட்டுக்குட்டி?" என்று நித்யா சொல்ல "அப்படியே என்ன மாதிரியே" என்று விவான் பதில் சொல்ல, நித்யா முறைத்தாள். விவானும் சென்று ஃப்ரெஷ் ஆக இப்போது இவர்கள் எல்லோருக்கும் கொஞ்சம் பசியெடுக்க ஸ்நேக்ஸ் கொறிக்க ஆரமித்தனர்.
.....................................................................
அங்கே ஜெசிந்தா மட்டும் தனியாக அமர்ந்து மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினாள். அப்போது அங்கு வந்த ரேஷா, "என்ன ஜெசி இன்னும் அதையே நினைச்சிட்டு பீல் பண்றியா? அது தான் அவரு (ஜிட்டு) சொன்னாரு தானே? விடு நாங்க எல்லோரும் எதுக்கு இருக்கோம்? சரி செஞ்சிடலாம். கூல்" என்று ஆறுதல்படுத்த.
"தப்பு என் மேலையும் இருக்கு ரேஷா"
"என்ன சொல்ற ஜெசி?"
"நான் தான் அவரு மனசு புரியாமல் நிறைய காயப்படுத்தியிருக்கேன். அன்னைக்கு ஒரு வார்த்தை வேற சொன்னாரு" என்று சொன்னவள் கண்கள் கலங்க,
"என்ன ஜெசி ஆச்சு? என்ன சொன்னாரு?"
"எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல. உன் அட்டிடூட், என் அப்பா, இந்த வீடு, இந்த பொய்யான வாழ்க்கை எதுவும்... விட்டா எங்கேயாவது கண்காணாத தூரத்துக்கு ஓடிடலாம்னு இருக்கு..." என்னும் போது ஏனோ அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
ரேஷாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளை தன் மடியில் படுக்கவைத்து ஆதரவாய் முதுகை வருடிவிட்டாள்.
'சாரி செபா. உங்க பிரச்சனை, நிலைமை எதுவும் புரியாம நானும் கொஞ்சம் ஓவரா தான் நடந்துக்கிட்டேன். இப்போ இந்த ரிலேஷன்ஷிப்பை நான் எந்த விலை கொடுத்தாவது காப்பாத்தணும். அதுக்கு நான் உங்ககூட கொஞ்சம் இல்ல இல்ல நிறைய பேசணும்.' இப்போது மீண்டும் அவள் கண்கள் கலங்கியது. 'இதுக்காக தான் நமக்கு கல்யாணம் ஆனதும் ரெண்டு முறை வெளிய கூப்டீங்களா? நான் தான் புரியாம?' அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பெரிய உடன்பாடு இல்லாமல் தான் கல்யாணம் செய்தாள். நாளடைவில் செபாவை அவளுக்குப் பிடிக்கவும் செய்தது. ஆனால் செபாஸ்டினிடம் எப்போதும் அந்த மாதிரி ஒரு உணர்வை அவள் பார்த்ததே இல்லை. இது பற்றி அவள் மனம்விட்டு பேசும் ஒரே நபர் பெனாசிர் தான். அவள் தான் அன்று சொன்னாள் "ஒருவேளை அவருக்கு வேற ஏதாவது லவ் ரிலேஷன் ஷிப்புனு" என்று சொல்ல அப்போதே ஜெசிக்கு அதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. ஆனால் பயமும் வந்திருந்தது. இப்போது இல்லை. எப்போது நேற்று ஜிட்டு அதைப்பற்றி தெளிவு படுத்தினானோ அப்போதிலிருந்து...
இருந்தும் அவளுக்கு இப்போது குழப்பம் இன்னும் அதிகமானது. வேறு ரிலேஷன்ஷிப்பும் இல்லை, லவ்வும் இல்லை, ஆனால் திருமணத்தை அதிகம் எதிர்பார்த்தவர் இன்று இப்படி இருக்கிறாரே? கொஞ்சம் கொஞ்சமே அவளுக்கு டாட்ஸ் கிடைத்தது. மீதியெல்லாம் செபாவுக்கே வெளிச்சம். அதை அவனிடமே தான் பேசிப் பார்க்கவேண்டும்.
செபா அன்று அவளிடம், "என் ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் கொஞ்சம் வெளிய டூர் மாதிரி போலாம்னு பிளான் பண்ணியிருக்காங்க. என்னையும் கூப்பிட்டாங்க. நான் போறேன்... ஆனால் அவங்க உன்னையும் கூட்டிட்டு வரச் சொல்றாங்க..." ( பெரிய ஆசை இல்லாவிடினும் இவள் வரவேண்டும் என்று அவனுக்கும் சின்ன எதிர்பார்ப்பு இருந்தது.)
அவளோ அப்போது தான் இந்த ப்ராஜெக்ட் (இப்போது அசாம் செல்கிறார்களே) சம்மந்தமான நிறைய வேலைகள் இருக்க யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டதால் அவளோ, "எனக்கு முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு. சோ..." என்று முடிப்பதற்குள் "ஓகே நோ ப்ரோப்லம்" என்று அவன் சென்றுவிட்டான். ஆனால் அவள் சொல்ல வந்ததோ, "நான் வேணுனா என் ஆபிஸ்ல பேசிப்பார்த்துட்டுச் சொல்றேன்" என்று முடிப்பதற்குள் அவன் சென்றுவிட, 'அப்போ ஃப்ரெண்ட்ஸ் கூப்பிட்டாங்கனு தான் ஒரு கர்டெசிக்கு கூப்பிட்டிங்க இல்ல?உண்மையிலே நான் வரணும்னு நீங்க எதிர்பார்க்கல. ஓகே நான் வரல' என்று இவள் சென்றுவிட்டாள்.
"நீ இப்போவாது வருவேன்னு நான் எதிர்பார்த்தேன். உனக்கு என் கூட வரதுல கூட விருப்பம் இல்ல ரைட்?" என்று அவனும் நினைத்து ஏற்கனவே அவள் மீது இருக்கும் கோவம் தவறான அபிப்ராயம் எல்லாம் சேர்ந்து வாட்ட அங்கே பயணங்கள் முடிவதில்லை என்று ஒரு குருப்பையே கிரியேட் பண்ணி அதில் எல்லோரும் ஜாலியா பேச, ஹேமா தான் , "அப்போ கல்யாணம் ஆனவங்க மட்டும் தான் வரணுமா?" என்று கேட்டான்.
"நீ தாராளமா மௌனியைக் கூட்டிட்டு வரலாம். நோ ப்ரோப்லம்" விவான் என்று சொல்ல,
மிருவும் தியாவிற்காக ஐக்கியமாக, இளங்கோ-பாரு, நித்யா-விவான் என்று ஜோடிகளோடு, ஹேமா-மௌனி வர அவனுக்கு ஆச்சரியம் கூடவே அதிர்ச்சியாக ஜிட்டு-இதித்ரி கூட வந்துவிட, 'என்னால் மட்டும் முடியவில்லையே?' என்று சோகத்தில் இருந்தவன் முதலில் போகவேண்டாம் என்று தான் நினைத்தான், ஆனால் எப்போது துவாரா, விவி என்று சிங்கிள் பசங்களும் வருவதாய் தெரியவும் அவனும் வந்துவிட்டான். இந்த ரயிலில் தான் ஜெஸியும் பயணிக்கிறாள் என்று அவனுக்குத் தெரியாதே? தெரிந்தால் சந்தோச படுவானா? இல்லை கோவப்படுவானா? அது அவனுக்கே இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று இப்போதைக்கு (அதாவது இன்று மற்றும் நாளை (ட்ரைன் பயணத்தின் இரண்டு நாட்கள்) அவளும் பயணிக்கிறாள் என்று அவனுக்குத் தெரியப்போவதில்லை. அது மட்டும் நிச்சயம்!)
.....................................................
லோகேசுக்கும் ஏதேதோ நினைவுகள் தோன்றி மறைந்தது. இஸ்மாயில் கேட்ட கேள்விகள் அவனுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. "அப்படி என்னதான்டா பிரச்சனை உனக்கும் அனேஷியா மேடத்துக்கும்?" என்றதை அவனும் நினைத்துப் பார்த்தான்.
.................................................
அங்கே கீர்த்தனா தான் சில யோசனைகளில் மூழ்கியிருந்தாள். 'ஒருவேளை அப்படி நடந்துவிட்டால்? இல்லை நடக்காது. நிச்சயம் நடக்காது. நடக்காது என்பதைக் காட்டிலும் நடக்கக் கூடாது' என்று யோசித்தாள்.
அந்த சம்பவம் நடக்கும் போது அவள் வெறும் எட்டு மாதக் குழந்தையாம். அவளுக்கு அழுகை வந்தது. அவளுக்கு உண்மையில் தன் அன்னை மீது தான் கோவம். 'எவ்வளவு பிரச்சனை வேணுனாலும் இருந்திருக்கட்டும், அட்லீஸ்ட் எனக்காகவாவது நீ அந்த முடிவை எடுக்காம இருந்திருக்கலாம் இல்ல? என்று யோசிக்காத நாளில்லை. அவளுக்குத் தன் தந்தை மீது அலாதி அன்பு. பின்னே அவளை எப்படியெல்லாம் வளர்த்தார்? அதை நினைக்கையில் அவளுக்கு துவாரா மீது அதீத கோவம் வரும். "விட்டுட்டு போன அம்மா உனக்கு முக்கியம். இருக்கும் அப்பா உனக்கு முக்கியமில்லை அப்படித்தானே?" என்று ஒருமுறை கேட்டும் விட்டாள்.
"அப்படி ஒரு முடிவை நம்ம அம்மாவை, சாரி என் அம்மாவை எடுக்க வச்ச... சாரி தள்ளுன உன் அப்பா எனக்கு முக்கியமில்லை தான்" என்றவன் கோவமாக சென்றுவிட்டான். அதன் பிறகு மீண்டும் இன்று தான் துவாராவிடம் அவ்வாறு பேசினாள். ( பயணங்கள் முடிவதில்லை...)
 
துவா, தன் அப்பாவோட பேசாத காரணம் அவன்அம்மாவின் தற்கொலை...
இன்னும் வேற காரணங்கள் இருக்கும் போல.....
சரித்திரா, யாருக்கு துவாவைப் பற்றி மெஸேஜ் பண்றாள். ?
 
யாழி எப்போ வருவா :unsure: :unsure: :unsure:
ஹேமா மௌனி லவ் ஸ்டோரி இன்னும் முழுசா சொல்லல ;););)
she will come when the train reaches bhuvaneshwar. ya it's non linear story telling where past and present come simultaneously.??
 
துவா, தன் அப்பாவோட பேசாத காரணம் அவன்அம்மாவின் தற்கொலை...
இன்னும் வேற காரணங்கள் இருக்கும் போல.....
சரித்திரா, யாருக்கு துவாவைப் பற்றி மெஸேஜ் பண்றாள். ?
yes it will be revealed. solren. thank you?
 
Top