Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-43!

Advertisement

praveenraj

Well-known member
Member
இரவு உணவை வாங்கிய தியா வழக்கமாக அஸ்ஸெம்பல் ஆகும் நித்யாவின் கம்பார்ட்மென்டுக்கு வர அங்கே பெண்கள் எல்லோரும் தூங்கி இருந்தனர். பின்னே எல்லோருக்கும் பயணக் களைப்பு. இளவேனில் மட்டும் தூங்காமல் நித்யாவின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டவன்,"குட்டிமா சாப்பிடுறீங்களா? பசிக்குதா?" என்று வினவ தலையை ஆட்டிவள் திடுமென சீட்டிலிருந்து கீழ இறங்க அவளை இவ்வளவு நேரம் தன் கைக்குள் வைத்திருந்த நித்யா அவள் இறங்கியதில் பதறி விழித்தாள். நல்ல வேளையாக அருகே தியானேஷ் இருந்ததால் ஆசுவாசம் அடைந்தவள் இளவேனிலை முறைத்தாள். "என்ன சொன்னேன் பாப்பு? என்னைக் கேட்காம கீழ இறங்கக் கூடாதுனு சொன்னேன் இல்ல?" என்று குரல் உயர்த்த தியா தான் நித்யாவை சமாதானம் செய்து டிபனை நித்யாவிடம் தர எழுந்து மற்றவர்களை எழுப்பி விட்டு எல்லோரையும் சாப்பிடச் சொன்னார்கள். விவானுக்கான உணவை இங்கேயே வைக்கும்படிச் சொல்லிவிட்டு அவனை இங்கே வருமாறு சொல்லியனுப்பினாள் நித்யா.

"சரி நித்யா நீங்க சாப்பிடுங்க நான் போய் எல்லோருக்கும் டிஸ்ட்ரிபியூட் பண்ணிட்டு வரேன்" என்றவன் மிருவை மட்டும் ஒரு முறை ஏக்கமாகப் பார்த்து விட்டுச் சென்றான். மிருவோ அவனைக் கண்டுக்கொள்ளாமல் இளவேனிலுக்கு ஊட்டினாள். அருகே அனேஷியாவும் அவர்களோடு இணைந்து உண்டாள்.

தியா அங்கிருந்து அப்படியே அடுத்த கம்பார்ட்மண்ட் சென்று செபா, ஜெஸ்ஸி, விவி சித்து, சரித்திரா, அவள் தாத்தா அதற்கடுத்து இளங்கோ, துவாரா, ஹேமா, ஜிட்டு, துஷி யாழ் என்று எல்லோருக்கும் கொடுத்தான். விவானிடம் அவனை நித்யா அழைத்ததாகச் சொல்லிச் சென்றான்.இதில் முக்கால் வாசி நபர்கள் தூங்கிக்கொண்டு தான் இருந்தனர். கூடவே எல்லோரையும் தங்கள் செல்லில் காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து தூங்குமாறும் சொல்லிச் சென்றான். பின்னே 04 . 55க்கு கௌஹாத்தி சென்றடையும் என்பதால் எல்லோரும் எழுந்து ரெப்ரெஷ் ஆக வேண்டுமே.

அங்கே பெண்கள் எல்லோரும் கொஞ்சம் கதை பேசிவிட்டு சாப்பிட்டதும் படுத்தனர். அனேஷியாவுக்கு இப்போது உறக்கமே வரவில்லை. ஏனோ மனதில் ஒரு இனம் புரியாத நிலை வந்து சென்றது. இன்னும் விவான் வரவில்லை என்றதும் நித்யா அவனுக்கு அழைக்கவும் அவன் வரவும் சரியாக இருக்க, அவள் எதையும் பேசாமல் அவனுக்கு உணவைக் கொடுக்கவும் சாப்பிட்டவன் இளவேனிலுடன் கொஞ்சம் பேசிக்கொண்டு இருந்தான். சாப்பிட்டுவிட்டு இளாவைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அங்கே கொஞ்சம் நடந்தான் விவான். ஏனோ நிறைய ஆட்டம் பாட்டம் என்று சென்றதாலும் ட்ரெயின் ட்ராவல் அசதியாலும் தந்தையின் தோளுக்கு தாவிய சில நிமிடங்களில் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள் இளவேனில். அவளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தவன் எண்ணமெல்லாம் எதன் மீதோ தீவிரமாக இருப்பதாய் உணர்ந்தவள் அவனை நெருங்கி இளவேனிலைத் தூக்கிக்கொண்டு வந்து மிருவின் அருகில் கிடத்திவிட்டு அங்கே சென்றாள்.

இருவரும் எதையும் பேசிக் கொள்ளாமல் மெளனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்."விவான் என்ன பிரச்சனை? எதுனாலும் என்கிட்ட ஷேர் பண்ணு ப்ளீஸ். நீ மட்டும் இப்படி மனசுல வெச்சிக்கிட்டு கஷ்டப்படுறது எனக்கு என்னவோ போல இருக்கு..."

அவன் எதையும் பேசாமல் இருக்க,

"ஊர்ல ஏதாவது பிரச்சனையா? இல்ல நம்ம எஸ்டேட்ல? இல்ல அப்பா அம்மாக்கு?" என்று அடுத்தடுத்த பாசிபிலிட்டிஸ்ஸை அடுக்க, அவனோ எதையும் பேசாமல் அவன் கரங்களை விரித்துக் காட்ட புரிந்தவளாக அவன் நெஞ்சில் தஞ்சம் கொண்டாள். "என்ன ஆச்சு விவான்? ப்ளீஸ் எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு. எதுனாலும் என்கிட்ட சொல்லு. ப்ளீஸ்" என்று அவள் அவனை அணைத்துக் கொண்டே கேட்க, இன்னும் டைட்டாக அவளை அணைத்தவன்,"ஐ மிஸ் யுவர் க்ளோஸ்நெஸ்" (உன் அருகாமையை வேண்டுகிறேன்)
"ஹே நான் இங்க தானே இருக்கேன்? இதுல என்ன இருக்கு?" என்று கேட்டாலும் அவன் மறைப்பது நித்யாவிற்கு நன்கு புரிந்தது. இருந்தும் அவனைக் கட்டாயப்படுத்திக் கேட்க அவள் விரும்பவில்லை. எதுவென்றாலும் அவனாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தாள். மேலும் தன்னிடம் நீண்ட நேரத்திற்கு எதையும் விவானால் மறைக்க முடியாது என்றும் அறிந்திருந்தாள்.

நிமிர்ந்து அவனை விட்டு கொஞ்சம் விலகி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து,"இப்போ டைம் எய்ட் தேர்ட்டி இன்னும் எட்டு மணி நேரம் தான் இருக்கு. அப்புறோம் இந்த ட்ரெயின் ட்ராவல் முடிஞ்சிடுமே. டோன்ட் ஒர்ரி" என்று சொல்ல ரெஸ்ட் ரூமிற்கு வந்த இதி,"ஹ்ம்ம் ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க" என்று சொல்லிச் சென்றாள்.

"ஐ ஃபீல் பெட்டெர் நவ்" என்றான் விவான்.

"அடடே இது தெரிஞ்சிருந்தா ரெண்டு நாளுல நிறைய கட்டிப்பிடி வைத்தியம் போட்டு இருப்பேனே?" என்று சொன்ன நித்யாவைப் பார்த்துச் சிரித்தான் விவான். ஏனோ அவன் சிரித்த பின்பு தான் நித்யாவிற்கும் மனம் சற்று ஆறுதலாக இருந்தது. மீண்டும் அவர்களை க்ராஸ் செய்த இதி,"ஹலோ கபிள்ஸ் இன்னையோட ஒன்னும் இந்த உலகம் அழிஞ்சிடப் போறதில்லை? போங்க போய்த் தூங்குங்க" என்றவள் சென்றுவிட்டாள். உண்மையில் ஒரு கலாய் கலாய்த்து விட்டுத்தான் சென்றாள்.

"சரி நான் போறேன். பாப்பா முழிச்சு நான் இல்லைனா அழுவா" என்று சொல்லிவிட்டு நித்யா செல்ல மீண்டும் அவளை தன்னோடு இழுத்திருந்தான் விவான்.
"என்ன?" என்றாள் சற்று கோபத்துடன்,

"குட் நைட்.ஸ்வீட் ட்ரீம்ஸ்" என்றான் அவன்.

"ஹ்ம்ம் ஹ்ம்ம்" என்று உரைத்துச் சென்றாள் நித்யா. இப்போது தான் விவானுக்கு ஒன்று நன்கு புரிந்தது, நித்யா தன் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்றும், அவள் தான் தன் பலம் என்றும் அறிந்தவன் ஓகே என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு திவேஷை அழைத்தான்.

"ஹலோ டேய் நானே கூப்பிடணும்னு நெனச்சேன். கொஞ்சம் வேலை ஜாஸ்திடா" என்று சொல்லவும்,

"பரவாயில்ல. இப்போ வரை கரெக்ட்டா தான் வருது ட்ரெயின். காலையில ஐந்து மணிக்கு ரீச் ஆகிடுவோம்டா"

"நோ இஸ்ஸுஸ் நான் வேன் அனுப்பிடுறேன். அதே ட்ரைன்ல எனக்கு வேண்டிய இன்னொரு கேங்கும் வருது. அவங்களையும் பிக் அப் பண்ணனும். அதுக்கும் ஒரு ஜீப் வரும்" என்று சொல்ல,

"யாருடா அது எனக்குத் தெரியாத இன்னொரு கேங்கு?"

"சஸ்பென்ஸ்" என்றான் திவேஷ்,

"சரி மச்சி டையேர்டா இருக்குடா. நான் தூங்குறேன் பை" என்று சொல்லி காலை கட் செய்த விவானும் சென்று உறங்கினான்.

இங்கே திவேஷ் அவன் கேட்ட அந்தக் கேள்வியிலே மூழ்கினான். 'இந்த நாளுக்காக நான் எவ்வளவு நாள் காத்திருந்தேன் தெரியுமா?' இருந்தாலும் திவேஷிற்கு முழு நம்பிக்கை இல்லை. அவன் நினைப்பது நடக்க வேண்டுமென்றால் நிறைய தடைக் கற்களைத் தாண்ட வேண்டுமே?

நிகழ் காலம் கண்முன் முன்னே

வருங்காலம் கனவின் பின்னே

விதி போடும் கணக்கிற்கு விடையில்லையே ?

இரவும் பகலும் நகரும்

வெயிலும் மழையும் தொடரும்

இதயம் இணையும் தருணம்

வருமா ?

இருளும் ஒளியும் பழகும்

விடிந்தும் விடியா நிமிடம்

விடிந்தால் வாழ்க்கை தொடங்கும்

கனவா?(நா. முத்துக்குமார் வரிகள்)

...............................................................

அங்கிருந்து உறங்கச் சென்ற நித்யாவிற்கு இப்பொது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. விவானும் உறங்கச் சென்று விட ஏனோ உறக்கம் வராமல் தவித்தாள் அனேஷியா. அங்கே ரேஷாவும் தூங்காமல் இருக்க, துஷியும் அதே நிலையில் தான் இருந்தான். தன் எதிரே நன்கு தூங்கிக்கொண்டு இருக்கும் யாழைப் பார்த்தவனுக்கு கோவம் பீறிட்டு வந்தது. "இந்த உலகத்துலயே பெஸ்ட் ஃப்ரண்டும் பரம துரோகியும் ஒரே கலவையா இருக்கும் ஆள் நீயா தான்டி இருப்ப" என்று தூங்கும் யாழை வசைப் பாடினான் துஷி. 'என்னை மட்டும் இப்படி தூக்கம் வராம புலம்பவிட்டு நீ மட்டும் நல்லா தூங்குறியா உன்ன...' என்று அவள் கன்னத்தை நறுக்கென்று கிள்ளினான் துஷி. அந்தோ பாவம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த யாழுக்கு அது ஒரு கொசுக்கடிப் போலவே தோன்ற அலட்டிக் கொள்ளாமல் உறங்கினாள் யாழ்.

அவளின் வெள்ளை சருமம் அவன் கிள்ளியதில் சிவப்பாக மாறியிருக்க அவளுக்காக வருந்தி மீண்டும் அங்கே நீவி விட்டான் துஷி. யோசனையில் இருந்தவன்,'நாளைக்கு அவ எங்க போவான்னு தெரியாது. ஒழுங்கா இப்போவே போய் அவ கிட்ட நடந்ததை சொல்லணும்' என்று துஷி செல்ல அங்கே ரேஷா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அருகே முழித்திருந்த பெனாசிர் அவனைக் கேள்வியாகப் பார்க்க கொஞ்சம் அவளோடும் பேசிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான்.

அங்கே ஆழ்ந்து குறட்டை விட்டு தூங்கும் ஜிட்டுவைப் பார்த்த ஹேமா அவனை திட்டிக்கொண்டு இருந்தான்."டேய் இப்படி குறட்டை விட்டா நான் எப்படிடா தூங்குறது?" என்று புலம்பியவன் அவன் வாயை பிளாஸ்திரி வைத்து மூடிவிடலாமா என்றும் கூட யோசித்து இறுதியில் தன் காதில் ஹெட் போன் போட்டு பாட்டு கேட்டபடியே உறங்கிப் போனான்.

அங்கே விவியனுக்கும் தூக்கம் வரவில்லை. ஏனோ சித்துவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.'சித்தாரா' என்று சொல்லிப் பார்த்தவன்,'இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும். நீ ஒரு ஏமாற்றத்துல இருந்து அப்படியே வந்திருக்க, நான் உன்னை எப்படி கன்வீன்ஸ் பண்ணுவேன்? முதல இது காதலா இல்ல வெறும் அட்ரெக்சனா?' என்று யோசித்தவன் ஏனோ நேற்று தன்னை அணைத்து அழுத சித்தாராவை நினைக்கையில் அவளின் ஏமாற்றங்கள் வலிகள் எல்லாமும் விவியனால் நன்கு உணர முடிந்தது. இதுவரை அவனுக்கு இந்த மாதிரியான 'மையல்' உணர்வு தோன்றியதே இல்லை. இருந்தும் இது ஒர்க் அவுட் ஆகுமா என்ற கேள்வி தான் மீண்டும் மீண்டும் அவன் மனதில் நிழலாடியது.

'ஓகே எப்படியும் இந்த டூர் முழுக்க எங்ககூட தான் இருக்கப் போறீங்க. ஒரு வேளை இப்போ எனக்கிருக்கும் இதே ஃபீல் இந்த டூர் முடியும் போதும் அப்படியே இருந்தா நிச்சயமா நான் என் ஃபீலிங்க்ஸை உங்க கிட்ட கன்பெஸ் பண்ணிடுவேன். முடிவு உங்க கையில தான் சித்தாரா. பட் ஒன் திங், என்னைக்கும் எனக்காக உங்கள மாற்றிக்கச் சொல்ல மாட்டேன் ' என்று எண்ணியவனுக்கு சித்தாராவுடன் நல்ல ரேப்போ (ஒரு பிணைப்பு) இருப்பதாகவே தோன்றியது. அவன் சென்று உறங்கினான்.

அங்கே நீண்ட நாட்கள் கழித்து எவ்வித பாரமும் இல்லாமல் செபா, ஜெஸ்ஸி இருவரும் உரையாடிக்கொண்டு இருக்க இடையில் ஜெஸ்ஸிக்கு தூக்கம் வர அவளிடம் நாளை பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி உறங்கினார்கள் ஜெஸ்ஸி செபா. தன் கையிலிருந்த தன் பொக்கிஷத்தைத் திறக்கும் சாவி தன் கையை விட்டு சென்றதாக நினைத்திருந்தவனுக்கு மீண்டும் அந்த சாவி அவன் கரத்தை நோக்கி வருவதைப் போல் ஒரு மாயை...

கண்களையே மூடி படுத்திருந்தாலும் உறக்கம் வராமல் தவித்த அனேஷியா கண்ணில் எதிரே தன் தாயின் மீது தன் பிஞ்சு கால்களைத் தூக்கிப்போட்டு உறங்கும் இளவேனில் பட, என்னவோ நினைவுக்கு வந்தவளாய்ச் சிரித்தாள். எல்லாம் ஃபாஸ்ட் பார்வேர்டாய் அவள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. அவள் அன்னையின் இறுதி நொடிகள் உட்பட.'மிஸ் யூ மாம். நீ தான் எனக்கு துணையா இருந்து எல்லாம் சரியா நடக்க உதவி பண்ணனும்' என்று வேண்டிக் கொண்டாள். மணி இரவு ஒன்றானது . இன்னும் நான்கு மணிநேரத்தில் இந்த ஐம்பத்தி ஐந்து மணி நேரப் பயணம் முடிவுக்கு வந்து விடும். நடக்குமா?
*********************
அந்த நிசப்தமான வேளையில் ட்ரெயின் குகைக்குள் போனதும் அந்த எக்ஹோ சப்தம் கேட்டு விழித்தாள் ரேஷா. மணியைப் பார்க்க அது மூன்றரை என்று காட்டியது. சற்று நேரத்திற்கு முன்பு இந்த வழியில் மழை பெய்ததற்கான அறிகுறியாக விழித்து ஜன்னலைத் திறந்தால் மண் வாசம் அவள் நாசியில் கமழ்ந்தது. நன்றாக மூச்சை இழுத்து விட்டாள். அருகே குளிரில் நடுங்கி தன் உடலை நன்கு குறுக்கியபடியே படுத்திருக்கும் பெனசிருக்கு அவள் போர்வையை சரியாகப் போர்த்தி விட்டவள் கொஞ்சம் கண்கள் எரிய எழுந்து முகம் கழுவச் சென்றாள்.

மணி நான்கு ஆனதும் சரியாக ஹேமாவுக்கு அழைப்பு வந்தது. அவன் பெற்றோர்கள் தான் அழைத்தனர். விழித்து எடுத்தவன்,"சொல்லும்மா..."

"டேய் நாலு ஆகுது. எல்லோரும் எழுந்து ரெடி ஆகுக்குங்க சரியா இருக்கும். கரெக்ட் டைமுக்கு தான் ட்ரெயின் போகுது. எல்லோரையும் எழுப்பி விடுங்க" என்றதும் ஜிட்டுவின் அலாரம் அடித்தது. அதை ஆப் செய்து விட்டு அங்கிருந்து தியாவுக்கு அழைத்தான் ஹேமா. கால் அட்டென்ட் செய்யப் படாமல் இருக்க மீண்டும் ஒரு அலாரம் அடித்தது ஜிட்டு செல்லில். எடுத்தால் 4, 4.05, 4 .10 என்று வரிசையாக நாலரை வரை அலாரம் செட் செய்யப் பட்டு இருந்தது. ஏனோ இன்ஸ்டண்டாக ஒரு குறுநகை ஹேமாவின் உதட்டில் குடிக்கொண்டது மட்டும் நிச்சயம். பின்னே காலேஜ் படிக்கும் போது செமஸ்டர் எக்ஸாம் அன்று காலையில் இப்படித் தான் அலாரம் வைத்திருப்பான் ஜிட்டு. சமயங்களில் அலாரம் எல்லாம் இவர்கள் ஆப் செய்து விடுவார்கள். ஆனால் ஜிட்டு தான் பயங்கர உசாராச்சே? அலாரம் ஆனில் இருக்கிறதா? அடிக்குமா? என்று எடுத்துப் பார்த்தே இரவெல்லாம் சரியாக உறங்கவே மாட்டான். அவனுக்கு 'எக்ஸாம் டே ஸ்லீப்பிங் டிஸார்டர்' (exam day sleeping disorder - உண்மையில் இப்படி ஒரு வியாதி எல்லாம் இல்லை) இருக்கிறதே? மற்ற நாட்களில் நார்மல் மோடில் இருப்பவர்களே எக்ஸாம் நாட்களில் ஆக்டிவ் மோடிற்கு அல்லவா சென்று விடுவார்கள் என்றால் மற்ற நாட்களிலே ஆக்டிவ் மோடில் இருக்கும் ஜிட்டு போன்றோர் அந்த நாட்களில் ஹைப்பர் மோடிற்குள் சென்று விடுவார்கள். ஹாலிவுட் படங்கள் தோற்கும் அளவிற்கு ஒவ்வொரு செயலிலும் ஒரு பரபரப்பு, ஒரு விறுவிறுப்பு இருக்கும். இன்றோ ஏகாந்தமாக குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். மெல்ல அவன் காதில் சென்று,"டேய் ஜிட்டு எக்ஸாமுக்கு இன்னும் அரை மணிநேரம் தான் இருக்கு. நீ எக்ஸாமுக்கு வரலையா?" என்று கேட்கவும் திடுக்கிட்டு பதறி எழுந்தவன்."டேய் என்ன சொல்ற என்ன சொல்ற? அரை மணிநேரம் தானா? ஆமா இன்னைக்கு டாம் (dom -டயனமிக்ஸ் ஆப் மெஷினரிஸ்) எக்ஸாம் தானே?" என்று கேட்டு எழுந்தான்.

"என்ன மச்சி இன்னும் அந்த கோபால சுப்பிரமணியம் ப்ரொபெஸரை நீ மறக்கல போல? இது தான் சப் கான்ஷியஸ் மெமோரியா? காலேஜ் முடித்து ஏழு வருஷம் ஆகுது, ஆனா இன்னும் அதே ஹேங் ஓவர்ல தான் இருக்கப் போல?"

சுற்றிமுற்றி பார்த்தவன்,"டேய் ஆமாயில்ல? எனக்கு என்னவோ கனவு, நாம எல்லோரும் ரொம்ப நாள் கழிச்சு இப்படி ஒன்னா ட்ராவல் பண்றதாலோ என்னவோ? எனக்கு நைட் தூக்கத்துல எல்லாம் ஒரு திக் திக்னே இருந்தது. நாளைக்கு தான் செமஸ்டர் எக்ஸாம் மாதிரியும் நான் சரியா படிக்காத மாதிரியும் ஒரு பயம். அந்த ஞாபகத்துலையே இருந்தேனா நீ வேற எக்ஸாமுக்கு வரலையானு கேட்டதும் பதறிட்டேன்" என்று ஜிட்டு சொன்னதில் அவன் எவ்வளவு பயந்திருக்கிறான் என்று அறிந்துகொண்டான் ஹேமா.

"எனக்கும் அப்படித் தான் ஜிட்டு இருந்தது. என்னவோ ஒரு மாதிரி நாஸ்டால்ஜிக் ஃபீலிங்ஸ். நாம எல்லோரும் இன்னும் அதே காலேஜ் ஸ்டூண்ட்ஸ் மாதிரியே ஒரு ஃபீல்" என்றவன் சிலிர்க்க,"பாரு கையெல்லாம் கூஸ்பம்ப்ஸ் (மயிர்க்கூச்செறிதல்) சரி வா எல்லோரையும் எழுப்பலாம். நீ ஃபிரஷ் ஆகிட்டு வா" என்று சொன்னவன் திரும்ப எதிரே ரேஷா வந்தாள்."குட் மார்னிங்" என்றவனுக்கு அவளும் பதில் சொல்லி புன்னகைத்தாள். "கௌஹாத்தி தானே?" என்றான்.

"ஆமாம்"

"டைம் ஆச்சு வேக் தெம் அப்" என்றான் (அவர்களை எழுப்பி விடுங்கள்)

அங்கே உறங்கிக்கொண்டு இருந்த துவாராவை எழுப்பிவிட்டு அப்படியே தியா துஷி, யாழ், இளங்கோ, விவான் என்று எல்லோரையும் எழுப்பியவன் அடுத்த கம்பார்ட்மெண்ட் சென்று சரித்திரா, அவள் தாத்தா, செபா, ஜெஸ்ஸி, விவி, சித்து எல்லோரையும் எழுப்பினான். நித்யாவின் கம்பார்ட்மெண்ட் செல்ல அதற்குள் மிரு எழுந்திருந்தாள். அவளே மற்றவர்களை எழுப்ப எல்லோரருக்கும் இன்ஸ்ட்ரக்சன்ஸ் கொடுத்துவிட்டு வந்து அவனும் ரெப்ரெஷ் ஆனான்.

அதற்குள் பெனாசிர் அனேஷியாவை எழுப்ப, ஏற்கனவே விழித்திருந்த அனேஷியா அவளுக்கு பதில் சொல்லிவிட்டு ரெடி ஆனாள். வேகமாக வந்துகொண்டிருந்த திப்ருகார்க் எக்ஸ்பிரஸ் காமக்கியா வந்தடைந்தது. இங்கிருந்து இன்னும் இருவது நிமிடங்களில் கௌஹாத்தி சென்றடையும் திப்ருகார்க் எக்ஸ்பிரஸ்.

ரெடி ஆனா விவான், திவேஸுக்கு அழைக்க அப்போது தான் தூக்கத்திலிருந்து விழித்தவன்,"மச்சி சாரிடா இறங்கிடீங்களா?" என்றான்.

"இல்லடா இன்னும் பிப்ட்டின் மினிட்ஸ் தான் இருக்கு"

"ஓகே நைட்டே ட்ராவெல்ஸ் கிட்ட சொல்லிட்டேன். ஸ்டேஷன்ல இருந்து வெளிய வந்ததும் அவரே உன்னைக் கூப்பிடுவாரு. இங்கிலிஷ்ல பேசுவாரு" என்றவனுக்கு சரியென்று பதிலளித்தான் விவான்.

காமக்கியாவில் ரயில் நிற்க,"டேய் இது தான் நான் சொன்ன டெம்பிள். எப்படி ஊரு பேரே செமயா இருக்கு இல்ல?" என்றாள் யாழ்.

யாழ் மீது செல்லப் கோபத்தில் இருக்கும் துஷி அவளை முறைத்தான்.

"ஏன் இப்படிப் பார்க்கற?"

"நான் பார்க்கல முறைக்கிறேன்" என்றான்,

"சரி ஏன் முறைக்கிற?"

"நேத்து உன்னால தான் அவ திரும்ப கோவிச்சிக்கிட்டுப் போயிட்டா. போடி" என்றான்,

"இங்கப் பாரு துஷி, டோன்ட் ஒர்ரி. இதைவிட ஒரு நல்ல பொண்ணு உனக்குக் கிடைப்பா"

அவனோ இன்னும் கொலைவெறியில் அவளை முறைத்தான்.

"என்ன பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா?"

உடனே வேகமாக தலையை ஆட்டினான் துஷி,

தலையில் அடித்துக்கொண்டவள்,"எல்லாம் என் நேரம்" என்று சொல்லிவிட்டு,"இப்போ நான் உனக்கு என்ன பண்ணனும்?"

"வெரி சிம்பிள் யாழு பாப்பா, நீ ரேஷாவிடம் போய் 'நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. நாங்க நல்ல ஃப்ரண்ட்ஸ் தான்.அன்னைக்கு என்ன ஆச்சுன்னா நாங்க சண்டை தான் போட்டோம்...' "

"ஹேய் ஹேய் நிறுத்து நிறுத்து..."

"என்ன யாழ் பாப்பா?"

"முதல அவ என்ன நினைக்கறானு எனக்கு எப்படித் தெரியும்?"

"போடி என் வாழ்க்கையில ஒரே ஒரு நல்லது நடக்கனுன்னு இருந்தப்போ" என்று 'உனக்காக எல்லாம் உனக்காக' படத்தில் கார்த்திக் கவுண்டமணியிடம் அழுது பேசுவதைப் போல் பேச,

"சரி சரி பேசித் தொலையுறேன்"

"ஹி ஹி ஹி" என்றான் துஷி,

"உன்ன..." என்று விரல்களை மடக்கி நெருங்கினாள் யாழ்,

அங்கே விவான் அந்த ட்ராவெல்ஸ் டிரைவரிடம் பேச எல்லோரும் ரெப்ரெஷ் ஆகி தங்கள் உடமைகளோடு ரெடியாக இருந்தனர். இளவேனில் மட்டும் எழாமல் இருக்க அவளை அப்படியே தூக்கி தோள் மீது போட்டுக்கொண்டாள் நித்யா. மற்ற அனைவரும் ரெடி ஆகிவிட்டனர்.

துவாரா சரித்திராவின் தாத்தாவிடம் வந்து பேச ஏனோ அவர்கள் இருவரையும் தனியாக விட்டுப் போக மனமில்லை அவனுக்கு. பின்னே எங்கே சென்று ரூம் போட்டு அதும் இந்த விடியற் காலையில் என்றதும் யோசித்தவனாக விவானிடம் பேசினான் துவாரா.

"மச்சி நான் இவங்களைக் கூட்டிட்டுப் போய் ரூம் புக் செஞ்சு கொடுத்துட்டு நேரா அங்க வந்திடுறேன்" என்றான்.

"டேய் நாமளே ஊருக்கு புதுசு. எப்படிடா?" என்றவனுக்கு,"அது தான் நாமளே புதுசு அவங்க என்ன பண்ணுவாங்க சொல்லு? சரி நானும் விவியும் அவங்க கூடப் போயிட்டு வரோம். நீங்க எல்லோரும் அங்க ரெசார்ட்டுக்கு போயிட்டு எனக்கு லொகேஷன் ஷேர் பண்ணுங்க ஓகே?" என்று சொல்லிவிட்டு விவியை அழைத்துச் சொன்னான். சித்தாராவும் இவர்கள் உடனே டூர் வருவதாகச் சொன்னதும் அவளையும் தங்களோடு தங்க அவர்கள் அழைத்துச் சென்றனர்.

திப்ருகார்க் எக்ஸ்பிரஸ் கௌஹாத்தி ரயில் நிலையத்தை வந்து அடைந்தது. தத்தம் கம்பார்ட்மென்டிலிருந்து அவர்கள் எல்லோரும் இறங்கினார்கள். கிட்டத்தட்ட அந்த டிரைனே காலியானது. மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் தரையைத் தொட்டனர். எல்லோர் முகத்திலும் சோர்வு, சோம்பல் அப்பட்டமாகத் தெரிந்தது.

பின்னால் இறங்கிய அனேஷியா தன்னுடைய டீமை தேடிச் செல்ல ஆயத்தமானாள். எல்லோருக்கும் ஒரு பை சொல்லிவிட்டு தூங்கும் இளவேனிலை முத்தம் வைத்து விட்டும் சென்றாள். ஜெஸ்ஸியும் செபாவுடனிருந்து பிரிய மனமில்லாமல் இருக்க, "ஜெஸ்ஸி நாம இன்னைக்கே வெளிய வேலை விஷயமா கிளம்பனும். டோன்ட் ஒர்ரி அவங்க கிட்ட அட்ரஸ் வாங்கிக்கோ நாம ஈவினிங் அங்கப் போயிடலாம்" என்று சொல்லிவிட்டு அவர்கள் பிரிந்தனர்.

செபாக்கு தான் ஒரு மாதிரி ஆக, ஜெஸ்ஸியின் ஃபீலிங்ஸ் புரிந்தவளாய் அனேஷியா, "சரி உங்க ரிசார்ட் பேர் என்ன?" என்று கேட்டவள் பார்க்க இரண்டும் ஒரே வளாகத்திற்குள் தான் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொன்னவலள்,"இப்போ போலாமா ஜெஸ்ஸி?" என்று அனேஷியா அவளை வார, இங்கே பாய்ஸ் கேர்ள்ஸ் எல்லோரும் சேர்ந்து செபாவை வாரினார்கள்.

அந்த பனி கால காலைப் பொழுதில் விடிந்தும் விடியா நொடியில் கீழே ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, குளிர் காற்று வீச அதற்குள் ஒரு கூட்டம் குளிருக்கு இதமாக டீ குடிக்கச் சென்றுவிட்டனர்.

அங்கே லோகேஷ், பெனாசிர், ரேஷா, இஸ்மாயில் நால்வரும் ஜெஸ்ஸி மற்றும் அனேஷியாவுக்காகக் காத்திருந்து அவர்களுடன் சென்றனர்.

"டேய் ஹேமா, இதுக்கு நீ இவங்களைச் சேர்த்து வெக்காமலே இருந்திருக்கலாம்டா" என்று சிரித்தபடியே சொன்னான் ஜிட்டு.

அவன் எதை 'மீன்' பண்ணுகிறான் என்று சிலர் சிரிக்க, சிலரோ புரியாமல் விழித்தனர்.

"பசியில இருக்கறவனுக்கு பிரியாணி பொட்டலத்தைக் காட்டி அவன் பிரிச்சு சாப்பிடலாம்னு நினைக்கும் போது அதைத் திரும்ப பிடுங்கிட்டா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு செபா நிலைமை இப்போ" என்று சொல்லி ஆணவத்தில் கொக்கரித்தான் ஜிட்டு.

ஓங்கி ஜிட்டுவின் காலில் மிதித்த இளங்கோ,"மூடிட்டு இருடா. அவனை ஏன் வெறுப்பேத்துற இப்போ?" என்றான்,

"இதுக்கு பஞ்சு மூட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம் இதி" என்று மீண்டும் ஜிட்டு சொல்ல ஏனோ இம்முறை அங்கிருந்த எல்லோரும் அவன் சொன்னதன் பொருள் நன்கு உணர்ந்து சிரிப்பை அடக்க முயன்றும் முடியாமல் சிரிக்க செபா வெறுப்பேற்றப்பட்டான். (ஜோக் புரிந்ததோ? புரியாவிட்டால் சாரி!)

"கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லைன்னு நெனைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?" என்றான் ஹேமா மௌனியிடம்,

காலை வேளையில் இப்படி வயிறு வலிக்க சிரித்தது ஏனோ அவர்கள் எல்லோருக்கும் அன்றைய தினம் ரொம்ப ப்ரெஷாக இருப்பதைப்போல் தோன்றியது."ஜிட்டு சீரியசுலி உன் டைமிங் இருக்கு பாரு..." என்று எல்லோரும் சிரித்து முடித்த பின்பும் மீண்டும் ஆரமித்தான் இளங்கோ.

"டீ குடிச்சிடீங்களா? எல்லோரும் வாங்க போலாம்" என்றான் விவான். (பயணங்கள் முடிவதில்லை...)
 
ரயில் பயணம் முடிந்து ஊர் வந்து சேர்ந்தாச்சு...55 மணி நேரம்
விவான் அண்ட் கோ வோடு கூட பயணம் செய்த உணர்வை தந்தது உங்க எழுத்து.. ?
தொடரப் போகும் வாழ்க்கை பயணங்களுக்காக வெயிட்டீங்.
 
ரயில் பயணம் முடிந்து ஊர் வந்து சேர்ந்தாச்சு...55 மணி நேரம்
விவான் அண்ட் கோ வோடு கூட பயணம் செய்த உணர்வை தந்தது உங்க எழுத்து.. ?
தொடரப் போகும் வாழ்க்கை பயணங்களுக்காக வெயிட்டீங்.
very long journey isn't it? yes still 20+ epis are there...
 
உண்மையில் ரயில் பயணம் அருமை, போன epila பகல்ல பசுமாடு தெரியாது, இருட்டில எருமைமாடு தெரியுமான்னு கேட்க்குறது, இந்த epila எக்ஸாம் ஜிட்டுவோட கனவுன்னு சிரிக்க வச்சிடுறிங்க சகோ ? nice update.
 
Very interesting.Aduthu enna nu romba aarvama irruku.
Small request ,ella name um tha ,the, thu, ippadi aarambicha eppadi boss confuse aakuthila. Inni varum mandayan(Thushi) peravathu konjajam alter seyammo.
Jittu as usual no chance.
Joke sathiyam manasilavala,its ok . Athu venda.
Nanellam korachu mandiya,athu kondu yethengilum clear seyanae. ok pls.
 
Top