Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-44

Advertisement

praveenraj

Well-known member
Member
இவர்களுக்கு ஒரு மஹேந்திரா டெம்போ இருக்க எல்லோரும் அதில் ஏறினார்கள். இங்கிருந்து ஒரு நாற்பது நிமிட பயணம். பொழுது புலர்ந்தது. அசதி ஒவ்வொருவரையும் வாட்ட சில செல்பி புள்ளைங்க எல்லோரும் விதவிதமான ஆங்கிளில் செல்பிக்களை க்ளிக் செய்து வாட்ஸ் அப் டிபியாவும் எப்பி ஸ்டோரியாவும் போட்டு அலப்பறை செய்துக்கொண்டு இருந்தது. இப்போது ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் அழைப்பு வந்தவண்ணம் இருந்தது.

திவேஷ் விவானுக்கு அழைத்து விசாரித்தான். அஸ்ஸாமின் கிளைமேட் அவர்களை வாட்ட,"மச்சி இங்க கிளைமேட் செம்மயா இருக்குல்ல? பேசாம இங்கேயே தங்கிட்டா என்னவாம்?" என்றான் இளங்கோ,

"ஏன்டா ஏன்? இந்த ஊரு நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா?" என்றாள் மிரு,

"ஏன்டா அடிகளே இந்த ஊரைப் பற்றி உனக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லு?"

"பிரம்மபுத்திரா நதியின் தென் கரையில தான் இந்த ஊரு இருக்கு. சரி அசாமோட கேப்பிட்டல் எது?"

"இது தெரியாதா? கௌஹாத்தி" என்றான் ஹேமா,

"அங்க தான் ட்விஸ்ட் டிஸ்பூர்"

"ஆமாம்" என்று உச் கொட்டினார்கள் எல்லோரும்.

இவர்களின் பேச்சு புரிந்தவராய் அந்த டிரைவர்,"அஸ்ஸாம்ல ஏன் இந்த வட கிழக்கு மாநிலங்களிலே பெரிய ஊருன்னா அது இந்த கௌஹாத்தி தான். இந்த கௌஹாத்தில இருக்கும் ஒரு சின்ன பகுதி தான் அந்த டிஸ்புர். எப்படி சென்னைல தாம்பரம் இருக்கோ அப்படி..."

அவர் தமிழ் கொஞ்சம் திக்கித் திணறி பேசினார்."ரெண்டு நாட்டுக்கூட எல்லையை பகிர்ந்து இருக்கு. பூடான் மற்றும் வங்கதேசம். பிரம்மபுத்திரா ஆறு தான் இந்த மாநிலம் முழுவதும் ஓடுது. விவசாயம், தேயிலைத் தோட்டம், டூரிசம், எண்ணெய் வளம் இது தான் இந்த மாநிலடோட ஆதாரங்கள்"

"இதைவிட முக்கியம் இந்த ஊரோட இயற்கை வளம். மொத்த மாநில பரப்புல முப்பத்தி ஐந்து சதவீதம் காடு தான் இருக்கு. பட்டு உற்பத்தியும் இருக்கு. நிறைய கோவில் வனவிலங்கு சரணாலயம் இப்படி நிறைய இருக்கு"

"பிண்றீங்களே அண்ணா?"

அவர் சிரித்த படியே வண்டியைச் செலுத்தினார். எதிரே இருந்த தியா மிருவையே பார்த்தான். அவன் தன்னையே பார்ப்பது தெரிந்தும் அமைதி காத்தாள் மிரு. இதை ஜிட்டு, பாரு, இளங்கோ, ஹேமா ஆகியோரும் கவனித்தனர். மற்றவர்கள் எல்லோரும் அப்படியே தூங்கி விட்டனர்.

வண்டி அப்படியே ஒரு பெரிய ரிசார்ட்டில் நுழைந்தது. அந்த டிரைவர் வண்டியை நிறுத்த விழித்தான் செபா. எல்லோரும் சற்று கண் அயர்ந்து இருந்தனர். அவன் எல்லோரையும் எழுப்பினான்.

விவான் திவேஷை அழைக்க,"மச்சி மச்சி சாரி இன்னைக்கு சி.எம் மீட்டிங் இருக்கு" என்றவன் தான் அங்கே அவசியம் செல்ல வேண்டும் என்று சொல்ல விவானும்,"மச்சி ஒன்னும் அவசரம் இல்ல. இன்னைக்கு சாயுங்காலம் வரை யாரும் வெளிய போக மாட்டோம்னு தான் நெனைக்கிறேன். எல்லோரும் செம டையர்டா இருக்காங்க. நீ பொறுமையா வா" என்று சொல்ல,

"ஆறு டபில் பெட் ரூம் இருக்கு போதுமா?" என்றான்,

"ஆறு தானா? மச்சி இங்க எல்லோரும் ஒரு ஜோடியோட வந்திருக்கானுங்க மச்சி"

"மொத்தமே ரெண்டு கல்யாணம் ஆன ஜோடி, ரெண்டு கல்யாணம் ஆகாத ஜோடி அவ்வளவு தானே?"

"அதை ஏன் கேட்குற? எல்லோரும் இப்போ ஒரு ஜோடியோட இருக்கானுங்க" என்று சுருங்கச் சொன்னவன்,"அது மட்டுமில்லாம எக்ஸ்ட்ரா ரெண்டு பேர் இருக்காங்க" என்றதும்,

"டேய் நான் ஒரு கலெக்டர்டா. என்னைய வேற வேலைய பார்க்க வெச்சிடாதடா" என்றான் திவேஷ்.

"நீ லைன்ல அப்படியே இரு, டேய் ஆறு டபுள் பெட் ரூம் தான் இருக்காம். பாய்ஸுக்கு மூணு கேர்ள்ஸுக்கு மூணு ஓகே தானே?" என்று விவான் முடிப்பதற்குள்,

"என்னாது? பாய்ஸ் தனியா கேர்ள்ஸ் தனியாவா?" என்றான் ஹேமா.

"ஆமாம் நாம என்ன இங்க காலேஜ் ஐவிக்கு வந்து இருக்கோமா? வாட் இஸ் திஸ் நான் சென்ஸ். நான் சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போவேன்? என்ன கூப்பிட்டு வந்து அசிங்கப் படுத்தறீங்களா?" என்று அநியாயத்துக்குப் பொங்கினான் ஜிட்டு.

"கரெக்ட்டா கேட்ட மச்சான். எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுதாம்?" என்றான் இளங்கோ.

"செபா ஒருத்தனை வெச்சி எங்க எல்லோரையும் எடை போட்டுடக் கூடாது" என்று தங்கள் தரப்பு நியாயத்திற்காக செபாவை மீண்டும் பகிரங்கமாவே பங்கம் செய்தான் ஜிட்டு.

"போராடுவோம் போராடுவோம் தனி ரூம் கிடைக்கும் வரை போராடுவோம்"என்று எல்லோரும் கோஷமே போட, விவான் போனை காதில் வைத்தான்,

"கேட்டிங்களா மிஸ்டர் கலெக்டர் சார்?"

"இரு நான் ரிசார்ட் மேனேஜரிடம் பேசிட்டுச் சொல்றேன்" என்றான் திவேஷ். அதற்குள் நித்யாவையும் பார்வதியையும் இரண்டு அறைகளுக்கான சாவியைக் கொடுத்து போகச் சொன்னான் விவான்.

தூங்கும் இளாவை தூக்கிக்கொண்டு நித்யா செல்ல பார்வதியுடன் இளங்கோ சென்றான். சென்ற இளங்கோ திரும்பி ஜிட்டு ஹேமா இருவரிடமும் 'வெவ்வெவ் வெவ்வே' என்று விரல் காட்டிச் செல்ல எல்லோரும் அவன் மீது கொலைவெறியில் இருந்தனர்.

திரும்ப திவேஷ் அழைத்து எல்லோருக்கும் ரூம் இருப்பதாகச் சொல்லவும்,"வாங்கடா" என்று விவான் அழைக்க எல்லோரும் ஒன்றாகச் சென்றனர். அடுத்த ரூம் கீ வாங்கி ஹேமாவிடம் தர அவனோ மௌனியுடன் கிளம்பினான். அடுத்த கீ வாங்கிய துஷி யாழுடன் செல்ல, பிறகு அடுத்த கீயை மிரு மட்டும் வாங்கிக் கொண்டு தனியே சென்று பிறகு சித்துவை தன்னோடு அழைத்து சென்று விட ஏனோ தியாவைப் பார்த்து எள்ளலாகச் சிரித்தான் ஜிட்டு. அடுத்த சாவியை ஜிட்டு வாங்கி இதியுடன் செல்ல முனைந்தவன் ஒருகணம் நின்று மீதியிருந்த தியா மற்றும் செபா இருவரையும் பார்த்து அந்த சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களைப் பார்த்துச் சிரிக்க, ஏனோ விவானுக்கே சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டு நின்றான்.

தியா கடுப்பில் அங்கிருந்து செல்ல செபாவும் அவனை முறைத்துச் சென்றான். ஏனோ இதைப் பார்த்த இதித்ரி ஜிட்டுவை வெறுப்பேற்ற நினைத்து,"சரி நான் அப்போ மிரு கூடவே தங்கிக்குறேன்" என்றதும் ஜிட்டு முகம் மாற இப்போது விவான் தான் அவனைப் பார்த்துச் சிரிக்க,"இதி இதி இது நியாயமே இல்லை. ஐ அம் பாவம்" என்று அவள் பின்னாலே ஓடினான். சிரித்த விவான், துவாரா - விவி ஆகியோருக்கு இன்னொரு ரூம் சாவியைத் தந்து விடுமாறு சொல்லிச் சென்றான்.

இதி வேண்டுமென்றே மிருவின் அறையை நோக்கிச் செல்ல பின்னாலே சென்ற ஜிட்டு ஓடிச் சென்று இதியிடம் பேசி அவளை தன்னோடு அழைத்துச் சென்றான்.

"உன்கூட தாக்குறதுல எனக்கு ஒன்னும் ஒரு பிரச்சனை இல்லை தான். ஆனா நீ பச்சை தண்ணீர் குடிச்சிட்டு வெளிய போய் பாயசம் குடிச்ச மாதிரி ஒரு பில்ட் ஆப் தருவப் பாரு. அது தான் ரொம்ப இடிக்குது" என்று நேராகவே விஷயத்திற்கு வந்தாள்.

"இதி இதென்ன வம்பா இருக்கு? நாம யாரு?"

"நாம ஃப்ரண்ட்ஸ்" என்று அவனை வெறுப்பேற்றினாள்.

முறைத்தவன்,"விளையாடாத இதிம்மா. நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம் இல்ல?"

"அது கல்யாணம் முடியட்டும்" என்று சொல்லி அவள் செல்ல,

"நீ என்னை நம்பல ரைட்?" என்றான்.

அவள் அவனைப் பார்க்க,

"நான் ஒரு ஜென்டில் மேன். என் விரல் கூட உன்மேல படாது" என்று டைலாக் பேச ஆரமித்தான்.

"ஹலோ ஹலோ ஹலோ நிறுத்து நிறுத்து. நான் உனக்கு பயந்து உன்கூட தங்க மாட்டேன்னு நெனக்கறியா? எனக்கு என் லிமிட்ஸ் தெரியும்"

"அதே தான் எனக்கும் என் லிமிட்ஸ் தெரியும்" என்றான்,

"அப்போ எதுக்கு வெளிய அந்த பில்ட் அப் எல்லாம் கொடுத்த? சுப்ரீம் கோர்ட் அது இதுனு?" என்று அவள் பாயிண்டை பிடிக்க ,

ஜிட்டு திருதிருவென விழித்தான்.

"இங்கப் பாரு உன்கூட நான் தங்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா வெளிய போய் நீ இல்லாததும் பொல்லாததும் சொன்ன, குறிப்பா செபாவையும் தியாவையும் வெறுப்பேத்த என்னை யூஸ் பண்ண நான் சும்மா இருக்க மாட்டேன்" என்றாள்.

"நோ நோ இதி நான் அப்படி எதுவும் பண்ண மாட்டேன்" என்றான்.

ரூமில் ஒரு டபிள் காட் ஒரு சோபா இருக்க,"நான் இந்த பெட்ல படுப்பேன் நீ சோபாவுல தான் படுக்கணும். ஓகே?"

"ஓகே" என்றவன், 'இதுக்கு நான் அவனுங்க கூடவே தங்கியிருக்கலாம்' என்று முணுமுணுத்தான்.

"என்னது?"

"ஒன்னுமில்லை இதி. சும்மா" என்றான்.

அங்கே தியாவும் செபாவும் இருவேறு மனநிலையில் அமர்ந்திருந்தனர். காம்ப்ரமைஸ் ஆகியும் இப்படித் தனித் தனியே இருப்பதை எண்ணி அவன் வருந்த இறுதியில் ஜெஸ்ஸியும் தன்னைப் பிரிந்து செல்ல எவ்வளவு வருந்தினாள் என்று கண்மூடி அந்தக் காட்சியை மீண்டும் மனக்கண்ணில் ஓட்டினான். ஒன்று மட்டும் நிச்சயம், இந்தப் பிரிவு நிச்சயம் ஜெசிக்கும் செபாவுக்கும் வாழ்வில் இனி பிரியவே கூடாது என்ற எண்ணத்தை மட்டும் சொல்லாமல் சொன்னது.

தியானேஷ் அங்கு வேறு யோசனையில் இருந்தான். ஒரு ரிலேஷன் ஷிப்புக்கு அடித்தளமே நம்பிக்கை தான். யாரு என்ன சொன்னாலும் நமக்கு அவங்க மேல அந்த நம்பிக்கை இருக்கனும். அந்த நம்பிக்கையை உடைத்ததால் இன்று எவ்வளவு சிரம படுகிறான் என்று உணர்த்தும் கொண்டான். அதே நேரம் என்ன நடந்தாலும் சரி இந்தப் பயணத்தின் முடிவில் மீண்டும் எப்படியாவது மிருவின் சமாதானத்தைப் பெற்று அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடைய அன்னையிடம்,"இவளை தான் நான் கல்யாணம் செய்யப் போறேன்" என்று சொல்ல வேண்டும் என்று உறுதி பூண்டான்.

******************

அங்கே ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய அனேஷியா மற்றும் அவள் குழுவினர் எல்லோரும் பெரிய ஆரவாரம் இன்றி அமைதியாக தங்களின் ரிஸார்டுக்குள் சென்றனர். அவர்கள் மொத்தமே ஆறு நபர்கள் என்பதால் மூன்று அறைகள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது.

அனேஷியா திவேஷிற்கு அழைத்தாள். அவளின் அழைப்புக்காகக் காத்திருந்தவன் போல உடனே அட்டென்ட் செய்தவன் ரிசெப்சன் சென்று விசாரிக்கச் சொன்னான். "உனக்கு வேணுனா தனியா இன்னொரு ரூம் கூட போட்டுக்கோ அனி" என்றதும்,

"வேண்டாம் திவேஷ். நாங்க இதுல அட்ஜஸ்ட் பண்ணிக்குறோம்" என்று சொன்னாள்.

"ஓகே அனி. எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. ஈவினிங் மீட் பண்ணலாம்" என்றான். இவளும் சரியென்று சொல்லிவிட்டு ரிசப்ஷன் சென்று சாவி பெற்றுக் கொண்டாள்.

லோகேஷும் இஸ்மாயிலும் சென்று விட பெனாசிர், ரேஷா, ஜெஸ்ஸி மூவரிடமும்,"என்கூட யாராவது தங்கிக்கறீங்களா?" என்றாள் அனேஷியா.

அவர்கள் மூவரும் திருதிருவென விழிக்க,

"நோ ப்ரோப்லேம் நான் தனியாவே இருக்கேன்" என்று செல்ல,

"மேடம் நான் வரட்டா?" என்று கேட்டாள் ஜெஸ்ஸி.

சிரித்தபடியே அவளை அழைத்துச் சென்றாள்.

அனேஷியாவுடன் ரூம் சென்றாள் ஜெஸ்ஸி. அவள் முகத்தில் ஆயிரம் குழப்பம், கவலை, ஸ்ட்ரெஸ், பயம் எல்லாம் தெரிய கேட்கலாமா வேண்டாமா என்று குழம்பினாள் ஜெஸ்ஸி.

"மேடம் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டா?"

"ப்ளீஸ் நோ மேடம். கால் மீ அனி" என்று முகம் சுருக்கிக் கேட்டவளிடம் மறுக்க முடியாமல்,"ஓகே அனி. ஆனா நமக்குள்ள மட்டும் தான் வெளிய எப்பயும் போல மேடம் தான்.ஓகே?" என்று கேட்க அவளுக்கு சம்மதித்ததாய் ஒரு புன்னகை செலுத்தினாள்.

அப்போது சரியாக அனேஷியாவின் செல் அழைக்க, எடுத்துப் பார்த்தால் அவள் தந்தை தான் அழைத்திருந்தார்.

"சொல்லுங்க டேட். ஆமாம் அசாம் வந்து இப்போ ரிஸார்டுக்கும் வந்தாச்சு. ஒரு பிரச்சனையும் இல்ல. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க உடம்பு எப்படி இருக்கு?" என்று கேள்விகளை அடுக்கினாள்.

"நான் நல்லா இருக்கேன். நீ ஓகேவா?"

"அதான் சொன்னேனே?"

"நல்லா ரெஸ்ட் எடுங்கமா. அப்புறோம்..." என்று இழுத்தார்,

"அப்பா, நான் ஜாலியா ஊர் சுத்திப் பார்க்க வரல. எனக்கு நிறைய வேலையிருக்கு. அதை நிறைவேற்ற தான் வந்திருக்கேன்..."

"அனி, என்ன நடந்தாலும் ஊருக்கு வந்ததும் நீ கல்யாணம் பண்ணனும். நீயா தான் வாக்கு கொடுத்திருக்க. டூ யூ ரிமெம்பெர்?" என்றார் அவர்.

"நான் எதையுமே மறக்கவில்லை. ஆனா என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லாம் செய்வேன்"

"சரிடா நான் வெக்கறேன். டேக் கேர்" என்று அழைப்பைத் துண்டித்தார்.

தந்தையிடம் பேசிய பின் ஏனோ தனக்கு இருக்கும் பொறுப்பு, வேலை எல்லாம் நினைத்து ஒருகணம் கண்களை மூடித் திறந்தாள். அவளுக்கே மலைப்பாக இருந்தது. அந்த நாட்கள் கண் முன்னே தோன்றி மறைந்தது. யோசனையில் இருக்க ஜெஸ்ஸி கொஞ்சம் ரெஃப்ரஷ் ஆகி விட்டு வெளியே வந்தவள் எங்கேயோ வெறித்தபடியே ஏதோ யோசனையில் இருந்தவளை விந்தையாகப் பார்த்தாள்.

அதற்குள் ஜெஸ்ஸியின் வீட்டிலிருந்து அழைப்பு வர அங்கே அவளை அர்ச்சிக்க ஆரமித்தார் அவள் அன்னை,"ஏன்டி இப்படியா கல்யாணம் ஆகி தனித் தனியா ஊருக்குப் போவீங்க?" என்று கேட்கப்பட, ஏற்கனவே தனக்கு இருக்கும் அதே எரிச்சல் மேலும் கூடி,"சும்மா வாயை மூடும்மா. செபாவும் இங்க தான் இருக்காரு. அண்ட் எல்லாத்துக்கும் மேல இது எங்க லைப். நாங்க பார்த்துப்போம். பயப்படாத நாளைக்கு என் வாழ்க்கையை காப்பாற்றுன்னு சொல்லி உங்கிட்ட கண்ணை கசக்கிட்டு வந்து நிற்க மாட்டோம். என்னைத் திட்டுறதையே முழு நேர வேலையாகப் பார்க்காம கொஞ்சம் அப்பாவையும் தங்கையையும் கவனி. நீ உன் குடும்பத்தைப் பாரு நான் என் குடும்பத்தைப் பார்க்கறேன்" என்று கோவமாகப் பேசி வைத்தாள். இதை எல்லாம் கேட்ட அனேஷியா,"ஜெசி ஒன்னு சொல்லட்டா? தப்பா எடுத்துக்கக் கூடாது..."

"சொல்லுங்க அனி"

"நமக்கு எப்படியும் நம்ம பேரன்ட்ஸ் அதிலும் குறிப்பா அம்மானா ஒரு இளக்காரம் தான். நம்ம அம்மா தானே? என்ன பண்ணிடப் போறாங்க? தப்பில்லை தான்னு தோணும். ஆனா இவங்களோட அருமை நாம எப்போ உணருவோம் தெரியுமா? நாளைக்கு ஒருநாள் உனக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கலாம். உன் தலை விண்ணுனு வலிக்கலாம். யாரு கிட்டயாவது ஆறுதலா பேசலாம்னு தோணும். இல்லை நம்ம அம்மா மடியில கொஞ்சம் படுத்து தூங்கணும்னு தோணும். ஆனா அப்போ அம்மா நம்ம கூட இல்லைனு புரியும் போது..." ஏனோ அனேஷியாவின் நா தழுதழுத்தது."நாம சாப்பிட்டோமா? நமக்கு உடம்பு நல்லா இருக்கா? நமக்கு ஏதாவது பிரச்னையா? இப்படி எல்லாம் நமக்கு குறிப்பா ஒரு பெண்ணுக்கு கேட்க கூடிய ஒரே நபர் அம்மா தான். ஜஸ்ட் பி பொலைட் டு தெம். ஏனோ சொல்லணும்னு தோணுச்சு. சாரி" என்று சொல்லி அவள் சென்றுவிட ஜெஸ்ஸிக்கு ஒரு மாதிரி ஆனது.

"ஜெஸ்ஸி எல்லோரையும் ரெடி ஆகச் சொல்லிடு. பதினோரு மணிக்கெல்லாம் கிளம்பிடலாம். ஈவினிங் வந்து கொஞ்சம் ஊரு சுத்தலாம். ஓகே?"

"ஓகே"

"உன் ஆளு எங்க இருக்காராம் கேட்டியா?" என்றதும் செபாவுக்கு அழைத்தாள்.

*************

அங்கே பார்வதி அறைக்குள் சென்றதும் அதிக களைப்பின் காரணமாக பெட்டில் சரிந்துவிட இளங்கோ தான் அவளை பத்திரமாகப் பார்த்துக்கொண்டான். அவளோ படுத்ததும் உறக்கிவிட இளங்கோ தான் சற்று பயந்து நித்தியாவை அழைத்தான்.

"சொல்லு இளங்கோ?"

"பாரு கொஞ்சம் இல்ல ரொம்ப டையேர்டா இருக்கா. என்ன பண்ண?"

"லூசாடா நீ? ஐம்பத்தி ஐந்து மணிநேரம் ட்ராவல் பண்ணியிருக்கோம். சாதரண ஆளுக்கே நாக்கு தள்ளும். அவ கேரியிங் வேற? நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். அவளை டிஸ்டர்ப் பண்ணாம விடு" என்றவள் பாருவின் டேப்ளெட்ஸ் எல்லாம் அவளுக்கு வாட்ஸ் அப் செய்யச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

என்ன தான் ஏ.சி என்றாலும் பயணிக்கும் பொழுதைக் காட்டிலும் பயணம் முடிந்ததும் தான் அதன் களைப்பு உணர முடியும் என்பதால் அவளும் சோர்வாக இருந்தாலும், ஒரேயடியாக குளித்துவிட்டு வந்து உறங்கலாம் என்று குளிக்கச் சென்று விட்டாள் நித்யா. அப்போது உள்ளே வந்த விவானிடம் இளாவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்றுவிட விவானிற்கு லலிதாம்மா அழைத்தார். அவரிடம் ரூம் வந்து விட்டதாகச் சொன்னவன் இளவேனிலை தன்னோடு அணைத்துக்கொண்டு உறங்கினான். பின்னே எப்போதாவது தானே இளவேனிலுடன் அவன் உறங்குவான். பெரும்பாலும் அவள் அவளின் பாட்டியிடம் தான் இருப்பாள். இவனும் எஸ்டேட் வேலையெல்லாம் முடித்துவிட்டு வீடு வந்து சாப்பிட்டால் இரவாகிவிடும். அப்படியே உறங்கிவிடுவான்.

குளித்து ரெப்ரெஷ் ஆகி வந்தவள் தந்தையும் மகளும் ஒன்றுபோலவே கால்களை குறுக்கி ஒரு பக்கமாக உறங்க இருவரையும் ரசித்துவிட்டு அவளும் உறங்கினாள்.

*****************

அங்கே சரித்திராவையும் அவள் தாத்தாவையும் அழைத்துச் சென்றவன் முதலில் அவர்கள் தங்க ஒரு அறையை புக் செய்தான். உண்மையில் இப்பொது தான் சரித்திராவே துவாராவின் அருகாமையை விரும்பினாள்.'லவ் இஸ் நாட் அபௌட் டேக்கிங் இட் இஸ் ஆல் அபௌட் கிவ்விங்' (அன்பு /காதல் என்பது நாம் எவ்வளவு பெறுகிறோம் என்பதில் இல்லை அது நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது). இங்கே துவாரா அவளுக்கு முன்பாகவே அதை நன்கு உணர்த்து விட்டான். சரித்திராவின் தாத்தாவுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு எல்லாமும் செய்தான். இது அவனுடன் இருந்த விவிக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஆச்சரியம் துவாராவின் மாற்றங்களில் இல்லை. இது தான் துவாரா. அவனோடு யாரானாலும் வெகு விரைவில் ஒட்டிக்கொள்ள முடியும். அதுவும் அவனுக்குப் பிடித்தவர்கள் என்றால் அவனின் வேகம் இன்னும் கூடிவிடும். ரொம்ப லவ் ரொம்ப கேரிங் பெர்சன்.

ஆனாலும் சமீப ஆண்டுகளில் அவன் நடவடிக்கையில் நிறைய மாறுதல்களை ஒரு நண்பனாக அவனே பார்த்திருக்கிறான் தான். ஒரு கோவம், ஒரு வெறுப்பு, யாரிடமும் அதிகம் ஒட்டாமல் குறிப்பாக பெண்கள் என்றால் நிறைய விலகிச் சென்றான். அதற்கு இந்தப் பயணம் ஒன்றே சாட்சி. இருந்தும் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் இந்தப் பயணத்தின் வழியே தான் இவன் மாறவேண்டும் என்று இருக்கிறதோ என்னவோ? அவர்களை ரூமில் தங்க வைத்துவிட்டு அவர்கள் செல்லும் அட்ரெஸை வாங்கி அதற்கு ஒரு வாகனம் ரெடி செய்து முடிக்கவே காலை எட்டு ஆனது.

சரித்திராவின் தாத்தாவிற்கு நல்ல ஓய்வு தேவை என்பதால் இன்று மாலை வரை நன்கு ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டான். பின்னே இங்கிருந்து நூறு கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே. அப் அண்ட் டவுன் இருநூறு ஆகுதே. எல்லாம் விசாரித்துவிட்டு இன்று மாலையோ இல்லை நாளை காலையோ புறப்படச் சொன்னான்.

ஏனோ சரித்திராவிற்கு இப்போது வாய் வரை வந்த தேங்க்ஸ் என்ற வார்த்தை அப்படியே நின்றது. அவள் துவாராவைப் பார்க்க,"இங்கப் பாரு சரு. உனக்குப் பிடிக்காட்டி நீ பார்க்க வேணாம். அவரைப் பார்க்கவும் பேசவும் விடு. இல்லை நான் கூட வரணுமா?"

"இல்ல துவாரா நான் பார்த்துப்பேன்.நோ ஒற்றீஸ்"

"கேர்புள். ஏதாவதுனா கால் பண்ணு. என் ஃப்ரண்ட் தான் இங்க கலெக்டரா இருக்கான். பார்த்துக்கலாம்" என்று பேசியவன் அவளின் எதிர்பார்ப்பு புரிந்தவனாய் அவள் கரத்தைப் பிடித்து,"உண்மையிலே எனக்கு கல்யாணம் ஏன் காதல் இது மேல எல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லாம தான் இருந்தேன். ஆனா இப்போ நம்பனும்னு தோணுது. எனக்கு கிடைக்காத அந்த பேமிலி வாழ்க்கை எஸ் உனக்கும் கிடைக்காத அந்த பேமிலி வாழ்க்கை அதை நான் உன்கூட சேர்த்து நம்ம குழந்தைக்கு தரணும்னு ஆசையா இருக்கு. எதையும் போட்டு குழப்பிக்காத... நான் உன்னை லவ் பண்ரேனானு கேட்டா எனக்கு பதில் தெரியில... ஆனா உன்கூடச் சேர்த்து என் மீதி லைப் எல்லாம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோணுது. நான் காதலைக் கொடுத்து தான் பழகியிருக்கேன். அன்புக்கு ஏங்கியிருக்கேன்.ஆனா இப்போ எனக்கு காதல் கிடைக்குது. அன்பு என்னைத் தேடி வருது. நான் ரிஸீவிங்க் எண்டுல இருக்கேன். எனக்கு இது பிடிச்சு இருக்கு"அதற்கு மேல் எதையும் பேசாமல் அவன் ஒற்றை அணைப்பில் எல்லாம் சொல்ல விழைந்தான்.

அது அவளுக்கும் ரொம்ப நிம்மதியைத் தந்தது. அவள் காதில் மெதுவாக,"தைரியமா போ நான் சட்டுனு மனசு மாறுறவேன் எல்லாம் இல்ல. இந்த ட்ராவல் முடிஞ்சதும் என் அப்பா கிட்ட முதல பேசணும். அவரை கூட்டிட்டு வந்து உன் அம்மாவிடம் பேசுறேன். பை" என்றவன் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து விடுவித்தான்.

அங்கிருந்து அவனும் விவியும் அவள் தாத்தாவிடம் சொல்லிவிட்டு விடைப்பெற்றனர். "சீக்கிரம் அங்க வந்து எங்க கூட டூர்ல ஜாயின் பண்ணு சரு. பத்திரம்" என்றவன் ஏதோ தோன்றியவனாய் பர்ஸ் எடுத்து,"பணம் இருக்கா?" என்றான்.

"அதெல்லாம் நிறையவே இருக்கு துவாரா. பை" என்று சொன்னாள். அங்கிருந்து அவர்கள் இருவரும் ரெசார்ட்டின் அட்ரெஸ்ஸுக்கு வந்தனர்.

...................................................

செபாவுக்கு அழைத்தவள் அவன் இருக்கும் ரிசார்ட்டின் அட்ரெஸை கேட்க அவன் சொன்னதும் வியந்து எதையும் சொல்லாமல் கொஞ்சம் தனிமையில் பேசிக்கொண்டார்கள். தியா தான் அவனின் சலம்பல் தாங்காமல்,'அடேய் இந்த டூருக்கு வர வரைக்கும் எப்படி இருந்தான்? ஏன் நேத்து வரை எப்படி இருந்தான்? ஆனா இன்னைக்கு ஆளே ஒரே அடியா மாறிட்டானே? சரி எல்லாம் காதல் செய்யும் மாயை போல. ஹ்ம்ம் நம்ம நிலைமை தான் ரொம்ப மோசமா இருக்கும் போலயே? என்ன பண்ணலாம்?' என்று யோசிக்க அவன் அன்னை தான் அழைத்தார்.

ஏனோ அவரின் எண்ணை டிஸ்பிளேயில் பார்த்ததுமே ஒரு கோவம் அவனுக்கு வந்தது. இருந்தும் அதை மறைத்து கொஞ்சம் பேசினான். அவன் அன்னையோ எங்கே இவனும் மிருவும் ஒன்று சேர்ந்து விட்டார்களோ என்று எண்ணி லாவகமாகவே பந்துகளை வீசினார். அதன் பொருள் நன்கு உணர்ந்தும் இப்போது மிருவை சமாதானம் செய்யாமல் எதையும் பேசிக் கெடுக்கக் கூடாது என்று எண்ணியவன் அமைதி காத்தான்.

உடனே தன் அண்ணனை அழைத்து எல்லா விஷயத்தையும் அவரிடம் சொல்ல, அவரோ,"ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ மிருவை மட்டும் சமாதானம் செய். மற்றத்தை எல்லாம் நானே பார்த்துப்பேன்" என்று ஒரு நண்பனாய், தந்தையாய் அண்ணனாக பதிலளித்தார். கொஞ்சம் அவருடன் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். அங்கே செபாவோ இன்னும் அவன் ஆளுடன் பேசிக்கொண்டு இருக்க கடுப்பாகி வெளிய வந்தான்.

அலைகள் போலவே

காதல் மோதுமே

சேருமா ஓர் கரை

மோதும் மோதும் ஓயாமல் மோதும்

ஓர் நாளும் சேர்ந்தே தீரும்

அந்நாளும் வந்தே சேரும் ,,

ஆசை ஆசை கொண்டு

ஓசை ஓசை இன்றி

நாளும் நானும் வருவேன்

கோடி கோடி யுகம்

நாடி நாடி வந்து

சேவை சேவை புரிவேன் ...
(பாடல் வரிகள் )

(பயணங்கள் முடிவதில்லை)
 
? ? ?
பேசும்போது யோசிக்காம பேசிட வேண்டியது அப்பறம் அதை நெனச்சு வருந்த வேண்டியது நம்மில் பலர் இப்படித்தான் தியாவைப் போல் :( :( :(
 
Last edited:
? ? ?
பேசும்போது யோசிக்காம பேசிட வேண்டியது அப்பறம் அதை நெனச்சு வருந்த வேண்டியது நம்மில் பலர் இப்படித்தான் தியாவைப் போல் :( :( :(
that's human nature ... thank u ?
 
துவா கொடுத்த நம்பிக்கை சூப்பர்...... செபா, ஜெஸிஸி தனி room போவார்களோ.....தியா க்கு எப்போ நல்லது நடக்க போகிறது..... Interesting ud
 
Top