Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-46

Advertisement

praveenraj

Well-known member
Member
"என்னடா எப்படி இருக்கீங்க? நாராயணா இங்க ஒரே கொசு தொல்லையா இருக்கே?" என்றவன் தன்னையே சுற்றிச் சுற்றிப் பார்க்கும் தியா, செபா, யாழ், துஷி ஆகியோரைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதித்ரி அங்கே வந்தபோது,"ஹாய் இதி எப்படி இருக்கீங்க? நான் சொன்னது சரி தானே?" என்றாள் யாழ்.

"என்ன சொன்னீங்க? எது சரியான்னு கேட்கறீங்க?" என்றாள் அவள்.

"என்ன இதித்ரி அது தான் சொன்னேனே, குள்ளமா இருக்கவங்க அந்த விஷயத்துல ஸ்ட்ராங்கா இருப்பாங்கன்னு. நான் ஜிட்டுவைக் கேட்டேன். அவர் தான் அவரே சொல்றதைக் காட்டிலும் சம்மந்தப்பட்ட உங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கச் சொன்னார்" என்று கூலாக யாழ் கேட்க அவள் கேட்டது ஏனோ தியா, செபா ஏன் துஷிக்கும் கூட பேரதிர்ச்சியாக இருக்க ஜிட்டுவுக்கு வயிறு கலங்கியது. அவன் பாவமாகத் திரும்பி அவளைப் பார்க்க இதியோ கொலைவெறியில் அவனை முறைத்தாள்.

"கரெக்ட் மச்சான். எங்களுக்குத் தெரியுமே உன்னைப் பற்றி. காலையிலே நீ சாவியை வாங்கி குதூகலமா போகும் போதே நான் யூகிச்சேன்" என்றான் தியா.

"ஸ்டாப் இட். அறிவில்லையா உங்களுக்கு? இவன் என்ன சொன்னாலும் நீங்க அதை நம்பிடுவீங்களா? நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்லை. நான் மட்டும் தான் கட்டிலில் படுக்கறேன். இவன் கௌச்ல தான் தூங்குறான். கிட்டவே சேர்க்கறதில்லை" ஜிட்டுவைப் பார்த்து,"கடைசியில அவ்வளவு சொல்லியும் இப்படிப் பண்ணிட்ட இல்ல?" என்றாள் இதி.

"ஏன் இதி நீ சொல்றதைப் பார்த்தா ஜிட்டு பச்சை தண்ணியைக் குடிச்சிட்டு பாயசம் குடிச்ச மாதிரி பில்ட் அப் பண்ற மாதிரி தெரியுதே?"னு ஒன்றும் அறியாதவள் போல் யாழ் கேட்க,

"இவன் பச்சை தண்ணியைக் கூடக் குடிக்கல. எனக்குத் தெரியும் இவன் செபாவையும் தியாவையும் வெறுப்பேற்ற இதையெல்லாம் சொல்லியிருக்கனும்"

"அப்போ ஒண்ணுமே நடக்கலையா இதி?" என்று மீண்டும் பிட்டை போட்டாள் யாழ்.

"இல்ல நடக்கும். இதுவரை சோபால படுத்தவன் இனி தரையில தான் படுப்பான். இனிமேல் ஏதாவது சொன்னான்னா அந்த ரூம்ல இருந்தே துரத்தி விட்டுடுவேன்"

"அச்சச்சோ என்ன சொல்ற இதி? அப்போ ஜிட்டு நாய் மாதிரி தெருவுல தான் தூங்கணுமா?"

"அவசியம் ஏற்பட்டா அதும் நடக்கும்" என்றவள் அங்கிருந்து கிளம்பினாள். இங்கே எல்லோரும்,"போன் வையர் பிஞ்சி ரொம்ப நாள் ஆகுது. ஹா ஹா ஹா" என்று சிரிக்க, ஜிட்டு கொலைவெறியில் எல்லோரையும் முறைத்தான்.

"இந்தமாதிரி ஒரு பொண்ணு கூட தங்கறதுக்கு பேசாம நம்மளை மாதிரி பசங்க கூடவே தங்கிடலாமே?" என்றான் தியா.

எல்லாத்தையும் செய்த யாழ் அமைதியாக ஜூஸ் குடிக்க ஜிட்டு அவளை மனதில் கருவினான்.

"ஹா ஹா ஹா ஹா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" என்றவன் உடனே அவ்விடத்திலிருந்து எஸ் ஆனான்.

"தேங்க்ஸ் யாழ். இல்லைனா அவன் எங்களை ரொம்ப வெறுப்பேத்தி இருப்பான்" என்றான் தியா.

துஷி அவளைக் கிள்ளி,"அதுக்குன்னு இப்படியாடி கேட்ப? நானே ஷாக் ஆகிட்டேன் தெரியுமா?"

"அவனை எல்லாம் இப்படித் தான் ஆப் பண்ணனும். அது சரி இன்னைக்கு என்ன இங்கேயே இருக்கறதா பிளானா? எங்கேயும் அவுட்டிங் இல்லையா?"

"திவேஷை கேட்கணும். ஆனா அவனை கண்லயே இன்னும் பார்க்கல..." என்னும் போது தான் விவான் உட்பட அனைவரும் வந்தனர். எல்லோரும் சாப்பிட மௌனி ஹேமா கூட வந்துவிட்டனர். "என்ன மச்சான் பிளான்?" என்றான் இளங்கோ.

"சொல்றேன். ஆமா எல்லோருக்கும் ட்ராவல் பண்ண களைப்பு போயிடுச்சா? இப்போ வெளிய போலாம் தானே? ஒன்னும் அப்ஜெக்சன் இல்லையே?"

"எப்போடா போவோம்னு இருக்கு. நீ வேற ஏன்டா?" என்றார் யாழ். அப்போது சரியாக திவேஷ் வந்தான். அவனை விவான்,யாழ், துஷி ஆகியோர் கட்டியணைத்து நட்பை வெளிப்படுத்த மற்றவர்கள் எல்லோரும் வெறும் பழக்கம் என்பதால் ஹாய் என்றனர்.

"இவ்வளவு நேரம் ஆகிடுச்சு கலெக்டர் சார்?" என்றான் ஹேமா.

"கைஸ் ப்ளீஸ் இந்த தளபதி ரஜினி மாதிரி கலெக்டர் சார் கலெக்டர் சார்னு எல்லாம் கூப்பிடாதீங்க ப்ளீஸ். நானும் உங்க வயசு தான். சோ கால் மீ திவே" என்றான்.

அப்போது தான் துவாரா அங்கே வந்தான். இருவரும் பார்த்துப் புன்னைகைத்தனர். இருந்தும் பேசிக்கொள்ள வில்லை. விவான், யாழ் தான் அவர்களை பரபரப்பாக பார்க்க,

"எப்படி இருக்க மச்சான்?" என்றான் திவேஷ்.

"யா குட்" என்றவன் கைகொடுக்க விவான் தான் திருதிருவென விழித்தான். பின்னே கடந்த கால நிகழ்வுகள் அப்படி? யாழ் சகஜமாய் திவேவின் தோளில் கைபோட்டு இழுக்க விவான், துஷி, துவாரா மூவரும் கட்டிப் பிடித்தனர்.

மற்றவர்கள் எல்லோருக்கும் இது சற்று விந்தையாக இருக்க,"என்னடா பண்றீங்க?" என்றான் ஜிட்டன்.

"இது எங்க ட்ரேட் மார்க். ரொம்ப நாள் இல்ல ரொம்ப வர்ஷம் ஆச்சு இல்ல? மிஸ் தோஸ் டேஸ்" என்றான் விவான்.

"கைஸ் இவங்க நட்புக்கு ஒரு 'ஓ' போடுங்க" என்றான் ஹேமா. அங்கிருந்தவர்கள் எல்லோரும் 'ஓ' போட்டனர்.

இளவேனிலும் அவர்களை நோக்கி வர செல்லமாய்த் தூக்கிய திவேஷ்,"வாங்க" என்று செல்லம் கொஞ்சினான்."அப்படியே உன்னோட டிட்டோடா விவா" என்றான் அவன்.

"எல்லாத்துலயும் விவான் டிட்டோ தான். தூங்கும் போது காலைத் தூக்கி பக்கத்துல இருக்கவங்க மேல போடுற வரை" என்றான் துவா.

ஏன் இளா இப்படிச் செய்கிறாள் என்று நித்யாவிற்கு இப்போது தான் புரிந்தது.

"மச்சி இப்போல்லாம் நான் அப்படி இல்ல. நம்பாட்டி நித்யாவைக் கேளுங்க" என்றான் விவான்.

"நீ விட்டிருக்கலாம் மச்சி. ஆனா அந்த ஜீன் வருதே" என்ற துஷியை விவான் தவிர்த்து எல்லோரும் ஹைபை கொடுத்தனர்.

"ஏ வாழு எப்போடி கல்யாணம் பண்ணப் போற?" என்றான் திவே.

"ஒருத்தனும் சிக்க மாட்டேங்குறான் மச்சான். என்ன பண்ண?" என்றாள் யாழ்.

"டேய் அந்தப் பரிதாபத்திற்குரிய ஜீவன் வாழ்க்கையில இன்னும் கொஞ்ச நாளாச்சும் நிம்மதியா இருக்கட்டுமே" என்றான் விவான்.

"இருடா நித்யா கிட்ட சொல்லி உன்னை டீல் பண்ணிக்குறேன்" என்றாள் யாழ்.

"உனக்கு என்னடா ஆச்சு?" என்றான் துஷியைப் பார்த்து.

"அது ஒரு ட்ராக் ஓடுது" என்றாள் யாழ்.

"யாரது?" என்றான் விவான்.

"சொல்றேன் சொல்றேன்" என்றாள்.

"சரி எங்களையெல்லாம் விடு. நீ எப்போ கல்யாணம் பண்ணப் போற ? நல்ல வேலை நல்ல ஊர். ஆனா இப்படி சிங்கிளா இருக்க என்னடா தலையெழுத்து?" என்றாள் யாழ்.

"அது..." என்று தடுமாறினான் திவேஷ்."கூடிய சீக்கிரம் பண்றேன்"

"நீ சொல்றதைப் பார்த்தா யாருக்கோ வெய்ட் பண்ற மாதிரி தெரியுதே? என்னடா?" என்றான் துஷி.

"அப்படியே எங்களையும் கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும்" என்றான் ஜிட்டு.

இப்போது தான் அவர்கள் அந்தக் கூட்டத்தையே கவனித்தனர்.

"சாரி கைஸ். ரொம்ப நாள் கழிச்சு நேர்ல மீட் பண்ணோமா, அந்த எக்ஸைட்மெண்ட்ல கொஞ்சம் ஓவர் எமோஷனல் ஆகிட்டோம்" என்றான் திவேஷ்.

தன் காரில் இருந்த அந்த பார்பி பொம்மையை எடுத்தவன் இளாவைத் தூக்கி முத்தம் வைத்துவிட்டு கொடுத்தான். அவளோ திரும்பி விவானைப் பார்க்க அவன் "வாங்கிக்கோ" என்று சொல்லவும் பெற்றுக்கொண்டாள்.

"சே தேங் யூ" என்றான் .

அவள் தேங் யூ சொன்னாள்.

"இப்போ என்ன பிளான்டா எங்க போறோம்?"

மணி நான்கரையை நெருங்க,"கைஸ் இங்க பக்கத்துல நேரு பார்க் இருக்கு.நல்லா இருக்கும். க்ரீன் ஏரியா. நிறைய செடி, மரம், சிலை, சிற்பம், ராக் கார்டன், திறந்த வெளி அரங்கம் இப்படி நிறைய இருக்கும். போலாமா?"

எல்லோரும் ஆமோதிக்க அங்கிருந்து கிளம்பினார்கள்.

"ரொம்ப க்ரௌட் ஆன ஏரியா. ஆனா ரொம்ப பாப்புலர்" என்றவன் வண்டியை அந்த பார்க்கின் முன் நிறுத்தச்சொன்னான். அவர்களோடே சேர்ந்து அவனும் அந்த ட்ரைவேல்ஸ் வண்டியிலே பயணித்தான்.

வெளிய பெரிய ஸ்ட்ரீட் பூட் இருக்க எல்லோரும் ஆர்ப்பரித்து சாப்பிட நினைக்க, "கைஸ் இதேதும் உள்ள அலோவ் பண்ண மாட்டாங்க. இங்கேயே சாப்பிட்டு விடணும்" என்றான்.

மோமோஸ், ஜல் மூரி (நம்ம ஊர் பேல் பூரி போல்), லச்சி (நம்ம ஊர் பூரி போல்) சௌமேய்ன் (அத்தோ போல்), பாயசம் முதலியவையுடன் வேர்ல்ட் பேமஸ் அசாம் டீயையும் சேர்த்து ஒரு பிடி பிடித்தனர்.

இதை யாராவது வெளி ஆள் பார்த்திருந்தால் இவர்கள் யாரும் இதுவரை சாட் ஐட்டங்களையே கண்ணில் பார்த்திருக்கமாட்டாள் என்று தான் எண்ணியிருப்பார்கள்.

திவேஷ் எல்லாத்துக்கும் பணம் செலுத்தினான்.

இப்போது அவர்கள் பார்க் உள்ளே சென்றனர். வீக் டேஸ் என்பதால் பெரும் கூட்டமில்லாமல் இருந்தது. அந்த சிற்பங்களை எல்லாம் வாயைப் பிளந்து பார்த்தனர். சுற்றி பச்சை பசேர் என்று காட்சியளித்தது. சும்மாவே வளைத்து வளைத்து செல்பி எடுப்பார்கள். இப்போது சொல்லவா வேண்டும்? அப்படியே செல்பி எடுக்க இளாவைக் கூட்டிக்கொண்டு திவேஷ், துவாரா, செபா, தியா மட்டும் முன்னே சென்றனர். மற்ற எல்லோரும் தங்கள் ஜோடியுடன் சுற்றிக்கொண்டு இருந்தனர். விவி கூட சித்தாராவின் பின் சென்றான்.

இப்போது தான் இதை கவனித்த திவேஷ் செபாவைப் பார்த்து,"நீங்க மட்டும் தான் இன்னும் சிங்கிளா?" என்றதும்,

"டேய் இவனுக்கு கல்யாணமே ஆகிடுச்சு" என்று சுருங்கச் சொன்னான் துவாரா.

"அடப்பாவி அப்போ நாம மட்டும் தான் மொட்ட பசங்களா?" என்றான் திவே துவாராவைப் பார்த்து."நான்" என்ற தியாவை துவாரா பார்க்க அமைதி ஆனான். இளாவைக் கூட்டிக்கொண்டு சில்ட்ரன்ஸ் பார்க் சென்றவர்கள் அவளோடு இணைத்து விளையாடினார்கள்.

உள்ளே செல்லும் வரை இருந்த கூட்டம் அப்படியே கலைந்தது. ஹேமா-மௌனி தனியாக சென்று போட்டோஸ் எடுக்க நித்யா-விவான், இளங்கோ- பார்வதி, ஜிட்டு- இதி, யாழ்-துஷி என்று கூட்டம் பிரிந்தது. இதில் சித்து -விவி வேறு. இறுதியில் மிரு மட்டும் தனித்து விடப்பட அவள் இளவேனிலுடன் வந்து விட்டாள்.

துவாரா திவே இருவரும் கொஞ்சம் பேசினார்கள். நீண்ட நேரம் கழித்து ஜோடிகள் ஒவ்வொன்றாய் அந்த சில்ட்ரன்ஸ் பார்க் நோக்கி வந்தது.

"அப்பா எப்படி இருக்கார்?" என்றான் திவே,

"ஹ்ம்ம் நல்லா தான்..." என்று முடிக்கும் முன்,

"நீ கடைசியா எப்போ பார்த்த?" என்றான் திவே,

அவன் மௌனமே அவனுக்கு பதில் சொன்னது."கீர்த்தி?" என்றான்,

"ஹ்ம்ம் நல்லா இருக்கா"

"ஏன் இன்னும் மேரேஜ் பண்ணல?"

அவன் சரித்திராவைப் பற்றிச் சொன்னான். இது திவேக்கு ஆச்சரியம் கூடவே அதிர்ச்சியையும் தந்தது.

"இப்போ தான் மேரேஜ் பண்ணனனும் தோணுது. இந்த டூர் முடியட்டும் அவ வீட்ல பேசனும்" என்னும் போது விவான் அவர்கள் அருகில் வர அவர்கள் அமைதி ஆனார்கள்.

"என்னடா ரகசியம் பேசுறீங்க?" என்றான். யாழ் மற்றும் துஷிஆகியோரும் அவர்களோடு இணைய டாபிக் மாறியது.

நன்றாக இருள் சூழ அவர்கள் அங்கே இருந்து விடை பெற்றனர். திவே வீட்டிற்குச் சென்று நாளை வருவதாகச் சொல்ல மற்றவர்கள் தங்கள் ரிசார்ட் வந்தனர். அங்கே ஸ்வீட் சர்ப்ரைஸாக ஜெஸ்ஸி உடன் ரேஷாவும் இருந்தாள். செபா சர்ப்ரைஸில் ஃப்ரீஸ் ஆனான். துஷ்யந்த்தும் அதிர்ந்தான். நித்யா மற்றும் அனேஷியா ஆகியோர் இந்த சர்ப்ரைஸ் ஏற்படுத்தினர்.

"கேம்ப் ஃபையர் போடலாமா?" என்று யாழ் கேட்க,"இன்று வேண்டாம் நாளை போடலாம்" என்று கலைந்தனர்.

.................................................

திவேஷ் கிளம்பும் போதே நாளை முதலில் கோவிலுக்கு சென்று பிறகு வன விலங்கு சரணாலயம் செல்லாம் என்று சொல்லி விட்டான். அதன் பிறகு ஒரு தீவை கண்டுவிட்டு இறுதியாக கப்பலில் ஒரு சின்ன பயணம் மேற்கொள்ளலாம் என்று சொல்லிவிட அதை எல்லோரும் ஆமோதித்தனர். அங்கிருந்து கிளம்பி வரும் போது தான் ஜெஸ்ஸியையும் ரேஷாவையும் பார்த்தனர்.

மாலை அனேஷியாவுக்கு மீண்டும் அழைத்த நித்யா செபா-ஜெஸ்ஸியைப் பற்றிப் பேசி அவர்களுக்காக எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஜெஸ்ஸியைப் பார்த்தவன் மகிழ்ச்சியில் நெருங்கி அணைக்க எல்லோரும் ஆரவாரம் செய்தனர்.

சாப்பிடலாம் என்று முடிவெடுக்க யாருக்கும் பெரியதாக பசி இல்லாமல் போனது. நித்யாவின் ஆர்டரில் இளங்கோ, விவான், ஜிட்டன், ஹேமா நால்வரும் அறையை அலங்காரம் செய்யப் போக அங்கே செபாவை ரெடி செய்ய துவாரா, தியா, துஷி ஆகியோர் இருந்தனர். பெண்கள் எல்லோரும் ஜெஸ்ஸி தயார் செய்தனர்.

அலங்காரம் எல்லாம் செய்து முடிக்க ஜிட்டன் தாவி அந்தக் கட்டிலில் அமர்ந்தான். இளங்கோ,ஹேமா, விவா மூவரும் கொலைவெறியில் முறைக்க,"டேய் நீங்களாச்சும் இதெல்லாம் ஏற்கனவே அனுபவிச்சு இருக்கீங்க. நான் இப்போ தான் இந்த செட் அப்பையே நேர்ல பார்க்கறேன். ஒரு பரவசம்" என்றான்.

"டேய் நானும் சிங்கிள் தான்" என்றான் ஹேமா.

அவனை முறைத்தவன்,"கடவுள் இருக்குனு சொல்றான் பார் அவனை நம்பலாம். இல்லைனு சொல்றான் பார் அவனையும் நம்பலாம். ஆனா நான் தான் கடவுள்னு சொல்றான் பார் அவனை மட்டும் நம்பவே கூடாது" என்றான் ஜிட்டன்.

"டேய் இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம கமல் டைலாக் எல்லாம் பேசுற?" என்றான் ஹேமா.

"விவான் இளங்கோ மாதிரி ஃபர்ஸ்ட் நைட் கொண்டானவங்களை நம்பலாம், இல்லை என்னை மாதிரி அக்மார்க் முரட்டு சிங்கிளயும் நம்பலாம். ஆனா உன்னை மாதிரி நடுவுல உதார் விடுறாங்கப் பார் அவங்களை மட்டும் நம்பவே கூடாது" என்று ஜிட்டன் சொல்ல இப்போ இளங்கோ, விவான் இருவரும் சிரித்தப் டியே அவனுக்கு ஹைபை தந்தனர். ஹேமா கடுப்பானான்.

அவர்கள் நால்வரும் வெளியே வர,"என்னடா ரெடியா?" என்று கேட்ட நித்யாவிற்கு "ஹ்ம்ம் ஹ்ம்ம்"என்றான் ஜிட்டன்.

அப்போது செபா அங்கே வர அவனைப் பார்க்காமல் ஜிட்டு செல்ல, வம்படியாக ஜிட்டுவை அழைத்தவன் ஒரு நக்கல் சிரிப்பை உதிர்க்க,

"வேணாம்..." என்றான் ஜிட்டு

"நான் உனக்கு என்ன தரேன்னு வேண்டாம்னு சொல்ற?"

"நீ எதையுமே தர வேண்டாம்னு சொல்றேன்"

"அப்படியெல்லாம் சும்மா விட முடியாது மிஸ்டர். காலையில என்ன ஓட்டு ஓட்டுன?"

"டேய் அசோக் இல்ல செபா, இந்த நாள் உன் டைரில குறித்து வெச்சிக்கோ. எப்படி நீ இப்படி ஸ்டைலா, கெத்தா ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடப் போறியா, இதே மாதிரி நானும் கெத்தா, ஸ்டைலா ஃபர்ஸ்ட் நைட் ரூம்குள்ள போவேன். அப்போ உன்னைப் பார்த்து நீ இப்போ சிரிச்ச மாதிரியே பதிலுக்குச் சிரிப்பேன். 'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுவே முதலிரவுனு' பாட்டும் பாடுல என் பேர் ஜிட்டேந்தர் இல்ல" என்று அண்ணாமலை ரஜினி போல் வீராவேசமாகப் பேசி தொடையைத் தட்ட எல்லோரும் அவனுக்கு பின்னால் பார்க்கவும் பயந்து திரும்பினான். அங்கே இதி நெருப்பாய் முறைக்க நித்யா, மிரு, பாரு எல்லோரும் சிரிக்கவும்,"விவஸ்தை கெட்ட நாயே! இப்படியா பேசுவ?" என்றனர்.

'ஆஹா அனாவிசியமா ஆவேசப் ட்டதால இப்போ எல்லோரும் ஒன்னு கூடிட்டாங்களே! என்ன பண்ணலாம்?' என்று யோசித்தவன்,"அச்சச்சோ நேரம் ஆச்சு. இப்போ மிஸ் ஆனா இன்னும் நாலு நாள் வெய்ட் பண்ணனும்" என்றதும் எல்லோரும் துரிதமாக அவர்களை அனுப்ப நேக்காக எஸ் ஆனான் ஜிட்டு.

யாழ் தான் இதிலெதும் நம்பிக்கை இல்லாமல் இருக்க,"ஏன் இப்படி இருக்க?" என்றாள் மிரு.

"அவங்களைப் பேசாம உள்ளே அனுப்பி இருக்கலாம். எதுக்கு இப்படி தேவை இல்லாம இந்த சம்ப்ரதாயம்? எனக்கு இதுல துளியும் நம்பிக்கை இல்லை" என்றாள்.

"நித்யா தான் இதெல்லாம் சொன்னா"

"என்னமோ போங்க. எனக்கு தூக்கம் வருது. பை" என்று சொல்லி விடைபெற்றாள்.

கூட்டம் அப்படியே கலைந்தது. எல்லா ஜோடிகளும் தத்தம் அறைகளுக்குள் செல்ல தியா, விவி மற்றும் துவாரா உடன் செல்ல இன்னொரு சிங்கிள் ரூம் வாங்கியிருந்தான் துவாரா. இளவேனிலை தன்னோடு வைத்திருந்தவன், விவியை தியாவுடன் அனுப்பிவிட்டு இளவேனிலுக்கு வேடிக்கை காட்டினான்.

விவான் தங்கள் ரூமுக்கு செல்ல நித்யா இளாவை வாங்க அங்கே வந்தாள்.

"வாடி போலாம். மாமாக்கு குட் நைட் சொல்லு" என்றாள்.

"நாங்க வரமாட்டோமே" என்றான் துவா இளாவைப் பார்த்தபடி.

நித்யா புரியாமல் பார்க்க,"நீங்க என் தங்கப் புள்ளைய சரியா தூங்கவே விட மாட்டேங்குறீங்களாம். பாப்பா நிறைய கம்பளைண்ட் பண்றா. என்னடா அம்மு?" என்று அவளைப் பார்த்துக் கேட்டான். அவளும் துவாரா தனக்கு சப்போர்ட் செய்வதாக எண்ணி தலையை வேகமாக ஆட்டினாள்."அதனால பாப்பாவும் நானும் ப்ரீயா தூங்க போறோம். நீங்க பாப்பாக்கு இடம் கூட குடுக்க மாட்டேங்குறீங்களாம் என்னடா?" என்றான். அவள் காலையில் நடந்ததை எண்ணி வேகமாக தலை ஆட்டினாள்.

"ஓ அப்படியா பிளான்?" என்றாள் நித்யா.

"நாங்க கதை கேட்க போறோமே, என்னடா தங்கம்?" என்றதும்,

"பேண்டஸி கதை" என்றாள் இளா.

"அம்மாக்கு குட் நைட் சொல்லுடா" என்றதும் அவள் சொல்ல நித்யாவுக்கும் துவாராவின் எண்ணம் புரியாமல் இல்லை. இளாவை முத்தம் வைத்தவள் துவாராவைப் பார்த்து,"தேங்க்ஸ்" என்றாள் நித்யா.

"ஏய் சீ போ நீயும் உன் தேங்க்ஸ் உம்" என்றவன்," சார் உன் கூட தனியா பேசி ரொம்ப நாள் ஆகுதாமே? நல்லா பேசுங்க" என்றான்.

"என்னனு தெரியில அவன் ரொம்ப டல்லா இருக்கான். இனிமேல் தான் கேட்கணும்" என்றாள் நித்யா.

"அது தான் சொன்னேனே பேசுங்க. பை"

"பை" என்றவள் அங்கிருந்து கிளம்பினாள். இளாவைத் தூக்கிக் கொண்டவன் அவன் அறைக்குச் சென்றான்.

**********************

அங்கே மாலை தங்களின் வேலையெல்லாம் முடித்து ரிஸார்ட்க்கு வந்த அனேஷியா குழுவினர் ஜெஸ்ஸியை கொஞ்சம் இல்லை நன்கு கலாய்த்து விட்டு அனுப்பினார்கள். இதில் எல்லோருக்கும் ஒரு ஆனந்தம். அதிலும் பெனாசிர் மற்றும் லோகேஷ் இருவருக்கும் சற்று அதிக மகிழ்ச்சி.

அதன் பின்னர் ரெடி ஆனவளை ரேஷாவுடன் அனுப்பி வைத்தனர். அவர்கள் தங்கியிருக்கும் இடமும் செபா கூட்டமும் ஒரே ரிசார்ட்டில் வேறுவேறு பிளாக். அது மிகப் பெரிய பரப்பளவு கொண்ட இடம். நான்கு நுழைவு வாயில்கள் இருந்தது. இவர்கள் வேறு வேறு நுழைவாயிலின் அருகில் இருக்கும் பிளாக்கில் தங்கியிருந்தனர்.

ஜெஸ்ஸி சென்று விட்டதால் அனேஷியா மட்டும் தனியாக அந்த அறையில் இருந்தாள். அவள் சரியில்லை என்பது குட்டிப்போட்ட பூனையைப் போல நடப்பதிலே தெரிந்தது. (குட்டி போட்ட பூனை எப்படி நடக்கும்? அது டையார்ட் ஆகி ரெஸ்ட் தானே எடுக்கும் என்று லாஜிக் கேள்விகள் கேட்கக் கூடாது!) தன்னுடைய தந்தைக்கு அழைத்தவள் அவரோடு கொஞ்சம் பேசினாள். சில விஷயங்கள் நடக்கப்போவதில்லை என்று தெரிந்தாலும் மனம் ஒரு நப்பாசை கொள்ளும். இந்தியா ஜெயிக்க இன்னும் இரண்டு ஓவேரில் இருவது ரன்கள் தான் வேண்டும் என்னும் போது பன்னிரண்டு பந்துகள் இருக்கே? பனிரெண்டு சிக்ஸ் என்றாலும் எழுபத்தி ரெண்டு இல்லை பனிரெண்டு ஃபோர் என்றாலும் நாற்பத்தி எட்டு, இல்லை பனிரெண்டு டபிள்ஸ் என்றாலும் இருபத்தி நான்கு என்று நாம் ப்ராபபிலிட்டி போடலாம். ஆனால் களத்தில் நிற்பது ஒன்றும் தோனியும் கோலியும் அல்ல ஆஷிஷ் நெக்ரா என்றால்? பந்து வீசப்போவதும் ஸ்டார்க் ஸ்டெய்ன் போன்றோர் எனில்?

ஆசைகள் அண்டம் போல் எவ்வளவு வேண்டுமானாலும் விரிவடையலாம் ஆனால் அதில் டார்க் எனர்ஜி மற்றும் டார்க் மேட்டர் தான் 95 விழுக்காடுக்கும் மேல் ஆக்கிரமைத்து உள்ளது என்றும் நாம் பார்க்கும் சூரிய குடும்பம் நட்சத்திரங்கள் கேலெக்சிஸ் போன்றவை ஐந்து விழுக்காடுக்கும் குறைவு என்பது போல் அது நிறைவேறும் சாத்தியக் கூறுகள் சொற்பம் தான்.

"தவறுகள் குற்றமில்லை" என்றார் ஜெயகாந்தன். ஆனால் அதைச் சொல்லும் உரிமை தவறு இழைத்தவருக்கு இல்லை. தவறு இழைக்கப்பட்டவருக்குத் தான் அந்த உரிமை உண்டு. பின்னர் சொன்னவராக அனேஷியா இருந்தால் பிரச்சனை இல்லையே? ஆனால் அவளோ முன்னர் சொன்னவராச்சே?

****************

செபா அறைக்குள் சென்றிருந்தான். அவனுக்கு ஒரு நெர்வஸ் இருந்தது தான். இப்படிங்கறதுக்குள்ள வாழ்க்கை மாறும் என்று கதைகளில் தான் படித்திருக்கிறான். ஆனால் அவனுக்கு உண்மையிலே மாறிவிட்டது. ஜெஸ்ஸி வந்தாள். நித்யா சும்மா இல்லாமல் நிறைய அலங்காரங்கள் செய்து அனுப்பி விட அவளும் அதே நெர்வசில் தான் இருந்தாள்.

நீண்ட மௌனம். இருவருக்குள்ளும் ஒரே எண்ணம் தான். இன்னும் அவர்களுக்குள் பேச நிறைய இருப்பதாய்த் தோன்றியது. இங்கே பலரும் அந்த மொமெண்ட் அடைந்ததும் அடுத்ததை நோக்கி தான் யோசிக்கிறார்களே தவிர அந்த மொமெண்ட்டை யாரும் அனுபவிப்பதில்லை. என்ன தான் ட்ரைனிலே நிறைய பேசியிருந்தாலும் இன்னும் பேச பாக்கி இருக்கிறது. அவள் வேலை, அவளுக்குப் பிடித்தது பிடிக்காதது என்று நிறைய. மெல்ல பேசத் துவங்கினார்கள்.

*****************

விவான் அவன் அறையில் எஸ்டேட் மேனேஜரிடம் உரையாடியவன் தன் பெற்றோர்களுடன் பேசிவிட்டு அமர்ந்திருந்தான். நித்யா அப்போது தான் உள்ளே வந்தாள். அறையைப் பூட்டிவிட்டு வந்தவளைக் கேள்வியாய்ப் பார்த்தவன்,"பாப்பா எங்க?" என்றான்.

நிமிர்ந்துப் பார்த்துவிட்டு எதையும் பேசாமல் வந்தாள்.

"இளா எங்க நித்யா?"

"காக்கா தூக்கிட்டு போயிடுச்சி" என்று கைகளை விரித்து மேலே காட்டி கூலாக வந்து அமர்ந்தாள்.

"ஓ மேடம் எதுக்கு கோவமா இருக்கீங்கனு தெரிஞ்சிக்கலாமா?"

"விவான் நீ எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிற. எனக்குப் புரியுது. பட் யூ ஆரென்ட் நார்மல். நான் ஒரு மாதிரி இருந்தா நீ ஏன்னு கேட்கற தானே? உனக்கு கஷ்டமா இருக்கும் தானே? அப்போ எனக்கும் அப்படித் தானே இருக்கும்"

"அது வந்து..."

"இந்த ஏழு வருஷமா எனக்குத் தெரிந்த விவானைக் காட்டிலும் நீ இந்த நாலு நாளா சரியில்லை. ஒரு வேளை என் மேல ஏதாவது..." என்று முடிக்கும் முன்னே அவள் வாயைப் பொத்தியவன்,"எதுக்கு எதை எதையோ கம்பேர் பண்ற?"

"ஆமாம் என்கூட தனியா பேசணும்னு துவாரா கிட்ட சொல்லியிருக்க, ஆனா என்கிட்ட சொல்லல?"

விவானுக்கு அவன் தவறு புரிந்தது."இப்போ என்ன பண்ணனும்?"

"ஜஸ்ட் மேக் மீ ஃபீல் நார்மல்"

"எப்படி?"

"அது உன் சாமர்த்தியம். பட் பேச்சு பேச்சா தான் இருக்கனும் பார்த்துக்கோ" என்று சிரித்தாள். (பயணங்கள் முடிவதில்லை)

சாரி கரெண்ட் ஸ்டோரி ஒன்னு முடியும் தருவாயில் இருக்கு. அதான் நேற்று அப்டேட் கொடுக்கமுடியவில்லை.
 
அனு செய்த குற்றம், விவான் மூட் அவுட்,
தூவா, திவே சந்திப்பில் நட்புக்களின் அதிர்ச்சி...
அனு, தூவா இன்னும் மீட் பண்ணலை...
எதோ தொடர்பு இருக்கு... :unsure: :unsure: :unsure: :unsure:
 
அனு செய்த குற்றம், விவான் மூட் அவுட்,
தூவா, திவே சந்திப்பில் நட்புக்களின் அதிர்ச்சி...
அனு, தூவா இன்னும் மீட் பண்ணலை...
எதோ தொடர்பு இருக்கு... :unsure: :unsure: :unsure: :unsure:
wow absolute wait for few epis... thank you!
 
Top