Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-47

Advertisement

praveenraj

Well-known member
Member
தியா விவியுடன் தூங்கச் செல்ல ஏனோ அவன் மனம் குழப்பத்தில் தத்தளித்தது.மிரு அவனிடம் இதுவரை பேசவே இல்லை. 'இப்போது என்ன செய்ய? எப்படி சமாதானம் செய்வது? என் காதலையும் நம்பிக்கையையும் எப்படி அவளுக்குப் புரியவைக்கப் போகிறேன்?' என்ற எண்ணத்தில் இருந்தான்.

விவியோ வேறொரு எண்ணத்தில் சிக்கித் தவித்தான். அது இன்று மாலை நேரு பார்க்கில் நடந்தது. அவளுடன் சேர்ந்துச் சென்றவன் போட்டோஸ், செல்பி எடுக்க அவளோ வெகு சாதரணமாக அவனோடு ஒட்டி நின்று செல்பி எடுத்ததை நினைக்கையில் அவனுக்குத்தான் பரவசமாக இருந்தது. சித்தாராவைப் பிடித்தது போய் இப்போது அவள் பால் மனம் செல்கிறது நிஜம். எல்லோரும் அவரவர் ஜோடிகளுடன் சென்று விட தன்னுடைய ஜோடியாக இவள் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. அவளின் குணம், பழக்கம் எல்லாம் அவனுள் அந்த ஆசை விதையை நட்டது நிஜம். ஏதோ ஓரிடத்தில் அவளுக்கும் அவன்மீது ஒரு நம்பிக்கை இருக்கிறது. இல்லையேல் எப்படி அவனை நம்பி தன்னுடைய பாஸ்டை சொல்லுவாள்? அவனைக் கட்டி அணைத்திருப்பாள்? அதே நேரம் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று முழுவதும் அறியாமல் அவனால் அவளிடம் எதையும் பேச முடியவில்லை. முதலில் இந்த ஃபீல், இந்த பிடித்தம், இந்த உரிமை தான் காதலோ? என்ற கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியவில்லை. அப்படியே இது காதலாக இருந்தாலும் சித்தாரா மனம் என்ன நினைக்கிறது? அவள் இப்போது தான் காதல் என்னும் மாய வலையில் சிக்கி மீண்டிருக்கிறாள். மறுபடியும் அதைச் செய்யத் துணிவாளா? அத்தனை நாட்கள் பழகிப் புரிந்தவனே அவளை உதாசீன படுத்திவிட்டான் என்றால் அவன் மீதான நம்பிக்கை அபிப்ராயம் என்னவாக இருக்கும்? என்றும் யோசித்தான்.

இதற்கு இன்னோர் காரணமும் இருக்கிறது. இன்று காலை துவாராவும் அவனும் சரித்திரவைக் கூட்டிச்சென்று திரும்பும் போது சரித்திராவிடம் துவாரா தனியா பேசிவிட்டு வந்ததை நினைக்கையில் ஏனோ அவன் மனம் அனிச்சையாக சித்துவை தான் நினைத்துக்கொண்டது. அப்போது அவளும் அவனுக்கு ஃபோன் பண்ணி விசாரிக்க ஏனோ தன்னைப் போல் அவளுக்கும் ஃபீலிங்ஸ் வருதோ என்று எண்ணியது நிஜம் . இந்த உலகத்தில் நம்முடைய மிக பெரிய பிரச்சனை ஓவர் திங்கிங் தான். 'இப்படி இருக்குமோ? இல்ல இதுவா இருக்குமோ? அவன் நம்மள பத்தி என்ன நெனச்சி இருப்பான்? அவன் தப்பா எடுத்திருந்தா? அவள் இப்படி யோசித்தால்?' என்று 'நமக்கு நாமே' கேட்டுக் கொள்ளும் அந்தக் கேள்விகளும் அதற்கு நாமே கண்டு பிடிக்கும் விடைகளும் தான் பிரச்சனை. மொபெசாட் (maupasant) என்னும் புகழ்ப் பெற்ற ப்ரெண்ச் சிறுகதை எழுத்தாளரின் 'தி நெக்லெஸ்' என்னும் சிறு கதை இதை அருமையாக விளக்கியிருக்கும். பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தில் இந்தக் கதை இருக்கும். படியுங்கள்.

இப்போது அதே நிலையில் தான் விவி இருந்தான். பல வகைகளில் அவள் தனக்கொரு சிறந்த கம்பெனியனாக இருப்பாள் என்று அவன் நம்புகிறான். துவாராவின் கதை அவனுக்கு அதிக நம்பிக்கை தந்தது. பொதுவாக இலக்கியங்களின் தன்னைத் தூக்கிச் செல்ல ராஜகுமாரன் வருவான் என்று தான் இருக்கும். ஃபார் எ சேஞ் தன்னைத் தூக்கிச் செல்ல ஏன் ராஜகுமாரி வரக்கூடாது? அந்த ராஜகுமாரிக்கு ஒரு கற்பனை உருவம் தந்தால் அதில் ஏன் சித்தாராவின் முகம் வருகிறது? இந்தக் குழப்பம் தான் அவனை வாட்டிக்கொண்டே இருந்தது. அப்படியே தூங்கினான்.

**************

இரவே ஹேமாவின் பெற்றோர்கள் அவனை அழைத்து ஹரிணிக்கு ஓர் நல்ல வரன் வந்திருப்பதாகவும் நாளை சென்று விசாரிக்கலாம் என்று இருப்பதாகச் சொன்னார்கள். இது ஹேமா மௌனி இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தந்தது.

"ஹரிணி ஓகே சொல்லிட்டாளா அம்மா?"

"இல்லடா இன்னும் அவளுக்கு போட்டோ காட்டல. நாம விசாரிச்சிட்டு சொல்லலாம்னு இருக்கோம்" என்றனர்.

இங்கே இவர்களும் இன்றைய தினத்தை அவர்களுக்குச் சொன்னார்கள். சகஜமாகப் பேசிவிட்டு அவர்கள் வைக்க ஹேமா, மௌனி இருவரும் அதைப் பற்றி தங்களுக்குள் பேசிவிட்டுத் தூங்கினார்கள்.

"அச்சச்சோ மறந்துட்டேனே" என்றான் ஹேமா.

"என்ன?"

"இந்த ஊர்ல காலையில எட்டு மணி சங்கு ஊதுவாங்களானு விசாரிக்க நெனச்சேன்"

"எதுக்கு?"

"இல்ல அப்படி ஊதினா நேரா உன் காதுல ஒன்னை ஊதச் சொல்லணும். என்னால எழுப்ப எல்லாம் முடியாதுடா சாமி" என்றவனை கொலைவெறியில் முறைத்தாள் அவள்.

"போடா" என்றவள் தள்ளிப் படுக்க அவளை நெருங்கி சமாதானம் செய்தான் ஹேமா.

************

இளாவைத் தூக்கிச் சென்றவன் அவளை கட்டிலில் கிடத்தி அவள் தூங்கத் தேவையான செட் அப் எல்லாம் செய்தான்."இந்தக் கட்டில் எல்லாம் உனக்குத் தான்டா தங்கம். நீ இப்படியும் உருளலாம் அப்படியும் உருளலாம் ஓகே?"

"கதை கதை..."

"சொல்றேன் சொல்றேன்" என்று அவளுக்கு மறுபுறம் பெரிய தலையணையை வைத்து விட்டு இவன் மறுபக்கம் படுத்தான்.

"ஒரு ஊர்ல ஒரு பிஷ்ஷர் மேன் (மீனவன்) இருந்தானாம். அவன் டெயிலி காலையில மீன் பிடிக்க அங்கயிருக்கும் கடலுக்குப் போவானாம்"

"ஹ்ம்ம்"

"பாப்பாக்கு பிஷ் பிடிக்குமா?"

"பிடிக்கும்" என்று வேகமாகத் தலையசைத்தாள்.

"அன்னைக்கு மீன் பிடிக்க அந்த ஆள் கடலுக்கு அவனோட குட்டிப் படகு (போட்) எடுத்துட்டுப் போனானாம். நீங்க போட்ல போயிருக்கீங்களா குட்டி?"

"ஹ்ம்ம் நிறைய தடவை" என்றாள் இளவேனில்.

"கடலுக்கு நடுவுல போய் அவன் வலையை வீசினானாம். அவனுக்கு எப்பயும் ஒரு கொள்கை இருக்கும்"

"கொள்கைனா?"

"நான் இந்த விஷயம் மட்டும் தான் செய்வேன். இதைச் செய்ய மாட்டேன்னு இருக்கும் பாரு அது தான் கொள்கை" யோசித்தவன்,"ஈவினிங் ஒரு அங்கிள் உனக்கு பொம்மை தந்ததும் நீ ஏன் அப்பாவைப் பார்த்த?"

"அப்பா அம்மாவைக் கேட்காம யார் கொடுத்தாலும் வாங்கக் கூடாது"

"ஏன்?"

"வாங்கக் கூடாதுனு சொல்லியிருக்காங்க" என்றாள் மழலையில்.

"குட். நீ எப்படி உன் அப்பா அம்மாவைக் கேட்காம ஏதும் வாங்க மாட்டியோ அது தான் உன் கொள்கை. அதே மாதிரி அந்த பிஷர் மேன்கும் ஒரு கொள்கை என்னனா ஒரு நாளைக்கு மூணு டைம்க்கு மேல மீன் பிடிக்கக் கூடாது. புரியுதா?"

"ஹ்ம்ம்"

"முதல அந்த ஆள் வலையை வீசினானாம். கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்தா வெய்ட்டா இருந்ததாம். இழுத்தா அது வெறும் கல்லும் சங்குமா தான் இருந்ததாம்"

"அச்சச்சோ மீன் இல்லையா?"

"இல்லையே"

"அப்புறோம்?"

"இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப வலையை வீசினானாம். இந்த முறை திரும்ப வெய்ட்டா இருந்ததாம்"

"அப்போ பெரிய ஃபிஷ் வந்ததா?"

"இல்லையே. ஏற்கனவே கடல்ல மூழ்கிப் போன ஒரு படகோட உடைஞ்ச மரம் தான் இருந்ததாம்"

"இன்னும் ஒரே டைம் தானே இருக்கு. அந்த ஆள் பாவம் இல்ல?" என்றாள் இளா.

"பாவம் தான். அதனால திரும்ப சாமி கும்பிட்டு வலையை வீசினானாம்"

***********************

கோவமாக அறைக்குச் சென்றவள் அவனின் தலையணையைத் தூக்கி வெளியே வீச அப்போது அந்தப் பக்கம் வந்த ஜிட்டனின் மீது விழுந்தது.

"இதி இதி... ப்ளீஸ் ப்ளீஸ் நான் ஏதோ ஓர் உணர்ச்சிவசத்தில் பேசிட்டேன். ப்ளீஸ் ப்ளீஸ்" என்றான் அவன்.

"நீயெல்லாம் இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கற கேஸ். போடா" என்றாள்.

"இப்போ நான் வெளியப் போனா ரோட்ல தான் தூங்கணும். ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டேன்"

"எதை எங்க எப்படிப் பேசணும்னு கூடத் தெரியாதா?"

"நான் ஒரு இன்னொசென்ட் இதி. எல்லோரும் என்னை பிளான் பண்ணி மாட்டி விடறாங்க. நான் அதுல மாட்டிக்கறேன். பிலீவ் மீ டா. நான் 24 கேரட் கோல்டு"

"மண்ணாங்கட்டி. போடா"

"அப்போ உனக்கு உன் மேலயே நம்பிக்கை இல்ல, அப்படித் தானே? குரைக்கிற நாய் எப்பயும் கடிக்காது. நான் நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல. சரி நான் போறேன்" என்று வெளியேற நினைத்தான். அவளோ எதையும் பேசாமல் நிற்க,'இந்நேரம் அவ நம்மளைக் கூப்பிடணுமே...'

"ஜிட்டு நில்"

'ஜிட்டா ராஜ தந்திரங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்திருக்கிறாயடா' என்று அவனை அவனே மெச்சிக்கொண்டான்.

"இல்ல நான் போறேன்"

"வெளிய எல்லாம் போக வேண்டாம். இங்கேயே தங்கிக்கோ" என்றதும் அவன் குஜால் ஆகி வந்தான்.

"ஆனா ஒன்னு. நீ தரையில தான் தூங்கனும். ஓகே?"

'அச்சச்சோ என் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகப் போய்டுச்சே? ஓகே நாளைக்கு வேற பிளான் பண்ணலாம். இதுக்கெல்லாம் மூலக் காரணம் டேய் செபா தியா, யாழ் உங்களை சும்மா விட மாட்டேன். இதுவரை காமெடியனாப் பார்த்த இந்த ஜிட்டன இனி வில்லனாப் பார்ப்பீங்க. சாதா மோட்ல இருந்த என்ன இனி ஆக்சன் மோட்ல பார்ப்பீங்க. ஜிட்டன் கௌன்டிங்க்ஸ் ஸ்டார்ட்ஸ். ஹா ஹா ஹா' என்று முணுமுணுக்க,

"என்ன சத்தம்?"

"இல்ல கொசு கடியா இருக்கே, அதான் குட்நைட் சாதா மோட்ல இருக்கா இல்ல ஆக்சன் மோட்ல இருக்கானு கேட்டேன்"

"குட் நைட்" என்று தூங்கினாள்.

"எங்க குட் நைட்? வெரி வெரி பேட் நைட்" என்று அவன் தனக்குத் தானே முணுமுணுத்தான்.

.............................................................

"நித்யா கொஞ்சம் என் பக்கத்தில வா. ப்ளீஸ்"

"என்ன? இப்போதானே சொன்னேன்? நோ"

"அட ஒன்னும் பண்ண மாட்டேன் வா" என்றவன் அவளை இழுத்து அவன் அருகில் அமர்த்தியவன்,"எஸ் நான் சரியில்ல. எனக்கே அது தெரியுது. பட் அதை விடு நான் இப்போ அதைப் பற்றிப் பேசப் போறதில்லை. ஆர் யூ ஹேப்பி?"

"எஸ் ஐ யம்"

"இல்ல நித்யா நான் அதைக் கேட்கல. எப்படிச் சொல்றது? எல்லோருக்கும் சம் எக்ஸ்பெக்டேஷன்ஸ் (எதிர்பார்ப்பு) உண்ட . நீ டாக்டர். பிஜி பண்ணனும் ஒர்க் பண்ணனும் இப்படி ஏதாவது..."

"நான் தான்" என்று அவள் பேச வர

"நான் பேசிடுறேன். அப்புறோம் நீ பேசு... நீ ஏதாவது நெனச்சி கடைசியில என்னை மேரேஜ் பண்ணதால நடக்காம போய். நம்ம மேரேஜ் முடிஞ்சதும் அப்பாக்கு உடம்பு சரியில்லாம போக பிசினெஸ் எல்லாம் நான் பார்க்க வேண்டி ஆகிடுச்சி. பாப்பா பிறந்து அம்மா கூட வீட்டைப் பார்த்துக்கவே உனக்கு டைம் பத்தலை. அம்மாவும் ரெண்டு தடவை பேசியிருக்காங்க. நீ படிக்க, ஒர்க் பண்ண எதுக்கும் நோ சொல்லிட்ட. யா டைம் அப்படியே போயிடுச்சி. நமக்குள்ளையும் ஓர் கேப் வந்தாச்சி..."

"நோ அப்படி இல்ல..."

"மிக சமீபத்துல நாம இப்படி ப்ரீயா தனியா பேசியிருக்கோமா? சொல்லு"

"நான் ஏற்கனவே சொல்லிட்டேன். ஐ என்ஜோய் மை லைப். யா லாஸ்ட் ஒன்றரை வருசமா நம்ம சூழ்நிலை அப்படி. அதான் இப்போ வந்துட்டோமே. அப்பறோம் என்ன?"

ஏனோ இருவரும் நீண்ட நேரம் தங்கள் வாழ்வில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை எல்லாம் நினைவுகூர்ந்தனர்.

"விவான் நிஜமா நான் ரொம்ப குண்டாகிட்டேனா?"

"உண்மையைச் சொல்லனுமா இல்ல பொய்ச் சொல்லனுமா?"

"உண்மை"

"லைட்டா"

"டேய் இதான் சாக்குன்னு என்னை கிண்டல் பண்றயில்ல?"

"ஓகே நீ நார்மல் ஆகிட்டியா?"

அப்போது தான் ஞாபகம் வந்தவளாய்,"நோ"

"என்னது நோவா?" என்றவன் மணியைப் பார்த்தான். அது பனிரெண்டை கடந்திருக்க சட்டென யோசனை வந்தவனாக,"எஸ் காட் இட்" என்றான்.

"என்னது?"

"எழு. கெட் அப் குவிக்"

"இப்பயா? ட்வல்வ் ஆகிடுச்சி"

"கொஞ்சம் டைம் ட்ராவல் பண்ணலாமா?"

"டைம் ட்ராவல்?"

"ஏழு ஆண்டுக்கு முன்னாடி நீ ஷிப்ட் முடிஞ்சு ரூம் போவ இல்ல? உன்கூட நான் வருவேன் இல்ல? அப்படி ஒரு வாக். என்ன போவோமா?"

"ரியல்லி?"

அவன் ரெடி ஆக எழுந்தான்.

"ஆனா அந்த விவான் கொஞ்சம் ஒல்லியா, மீசை தாடி எல்லாம் ட்ரிம் பண்ணி இருந்ததா ஞாபகம்..."

"கரெக்ட் அந்த நித்யா பிப்ட்டி பைவ் கிலோ தான் இருந்ததா... இப்போ?" என்பதற்குள் அவன் வாயைப் பொத்தியவள்,"போதும் வரேன். நிப்பாட்டு..."

***********

செபா தன்னைப் பற்றியும் தன் ஆசைகள், கனவுகள் தந்தையின் விருப்பங்கள் அதிலிருந்து எப்படியாவது எஸ்கேப் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் வரை ஒன்றை விடாமல் சொன்னான். ஏழு வயசுல எனக்கு என்ன வேணும் வேண்டாம்னு முடிவெக்குற உரிமை என் அப்பா கிட்ட தான் இருந்தது. அது கரெக்ட் ஏன்னா எனக்கு நல்லது கெட்டது ஏதும் தெரியாது. எல்லாம் அவர் தான் சொல்லிக் கொடுத்தார். ஆனா அதையே இருபத்தி ஏழு வயசிலும் செய்யலாமா? இப்போ உன் அப்பா வந்து உன்கிட்ட போன் பண்ணி ஒரு பையனை மீட் பண்ணச் சொல்றார். நீயும் போற. அப்போ திரும்ப உனக்கு போன் பண்ணி எப்படிப் பேசனும் என்ன பேசணும் வரை சொன்னா உனக்கு எப்படி இருக்கும்? எனக்கு எல்லாம் என் அத்தை தான். ஏன் அவங்களாலேயே என் அப்பா கிட்ட ப்ரீயா பேச முடியாது" என்று அவன் சொல்ல ஜெஸ்ஸிக்கு அவன் நிலை நன்கு புரிந்தது.


"விவான் அப்பா, ஹேமா அப்பா எல்லாம் செம டைப். ஏன் துவாரா அப்பாவும் தான். அவங்க நம்ம கிட்ட பேசுற அளவுக்கு கூட நம்ம அப்பா நம்மிடம் பேச மாட்டேங்குறாரேனு கோவம். விவான் அப்பா எடுத்துக்கோ, அவன் நித்யாவை விருப்பறான்னு தெரிஞ்சு அவனுக்காக நித்யாவை அவங்க ஊருக்கே வரவெச்சு பேசி அவங்க வீட்டுல சம்மதம் வாங்கி... அப்பா யோசிக்கவே முடியல. ஹேமா ஜிம் ஆரமிக்கனும்னு சொன்னதும் ஓகே சொல்லி மௌனியைப் பிடிச்சிருக்குனு சொன்னதும் ஓகே சொல்லிட்டார். துவாரா அப்பா இன்னும் பாவம் அவர் பையன் அவர் கிட்ட பேசலானாலும் அவனுக்காக எல்லாம் செய்வார். அவர் நல்லா இருந்த வரை எங்ககூட எல்லாம் அப்படிப் பேசுவார் தெரியுமா? இளங்கோ அப்பா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான் ஆனா அவர் கூட பார்வதியை கல்யாணம் செஞ்சி வெச்சார். நல்லா பேசுவார். காலேஜ்லனு இல்ல ஸ்கூல்ல இருந்து இதே தான். இதெல்லாம் தான் ஜெஸ்ஸி என் கோவம்"

"இட்ஸ் ஓகே. அதான் நான் புரிஞ்கிட்டேன் இல்ல? இனிமேல் அப்படி நடக்காது. ஐ ப்ராமிஸ்" என்றவள்,"ஆமா ஜிட்டன் ஒன்னு சொன்னாரு..." என்று இழுத்தாள்.

"என்ன சொன்னான்? அவன் சொன்ன எதையும் நம்பாத. அவன் வேணும்னே ஏதாவது பொய்ச் சொல்லியிருப்பான்"

"ஏன் இவ்வளவு ஷாக்? அவ்வளவு பயமா?"

"பயமா? ச்சி..."

"அதான் பார்த்தேனே ஒரு நிமிஷம் பிபி ரைஸ் ஆகிடுச்சுப் போல?"

"என்ன சொன்னான்?"

"நீங்க யாரையாவது லவ் பண்றீங்களானு கேட்டேன். அதுக்கு..."

"அதுக்கு?"

"ச்சீ அதுக்கெல்லாம் அவன் சரிப்பட்டு வரமாட்டானு சொன்னார்" என்னும் போதே அவளுக்கும் சிரிப்பு வந்தது. அவனோ பல்லைக் கடித்தான்.

"அப்புறோம் நீங்க தான் உங்க கேங்குலயே..."

"கேங்கிலயே?"

"இந்த நாளுக்காக ரொம்ப ஆவலா இருந்தீங்களாம்"

டக்கென புரியாமல் விழித்தவன், "இந்த நாள்?" என்று யோசித்து,'அட பன்னாடை நாயே என் இமேஜை மொத்தமா க்ளோஸ் பண்ணிடையே' என்று ஆத்திரம் கொண்டான். 'நாளைக்கு இருக்குடா உனக்கு...' என்றவன் இப்போது எப்படி அவளைப் பார்ப்பது என்று எண்ணித் தயங்க,

"ஆனா நீங்க பார்த்தா அப்படித் தெரியலையே? உங்களுக்கு ஏதும் தெரியாதா?" என்றாள்.

"ஐயோ அப்படியெல்லாம் இல்ல ஜெஸ்ஸி"

"அப்போ எல்லாம் தெரியுமா?" என்று மீண்டும் கேட்க,

'என்னடா இது? நான் ஒரு முட்டாள் அப்படிங்கற வாக்கியாயத்திற்கு முன்னால எஸ் போட்டாலும் தப்பு நோ போட்டாலும் தப்பா வருமே அது மாதிரி ஆகிடுச்சே என் நிலைமை. டேய் ஜிட்டேந்தர் நாயே?' என்று நினைக்க,

"என்ன செபா பேச்சே காணோம்? அப்போ..." என்று இழுக்க வெளியே ஒரு சப்தம் கேட்டது அவர்கள் எட்டிப் பார்த்தனர்.

நித்யா வேகமாக ஓடி வர அவள் பின்னாலே விவான் துரத்தி வந்தான். "அடப்பாவிங்களா ரொமான்ஸ் பண்ண வேண்டிய நாங்க இன்னும் பேசிட்டு இருக்கோம் ஆனா பிள்ளைக்கு கதை சொல்லி தூங்க வெக்க வேண்டிய நீங்க இப்படி ரொமான்ஸ் பண்றீங்களே! இது அடுக்குமா?" என்று வாய்விட்டே முனவினான்.

"உங்களை யார் இப்போ ரொமான்ஸ் பண்ண வேணாம்னு சொன்னா?" என்றவளை அதிர்ச்சியாய்ப் பார்த்தான்.

*******************

இதுவரை இல்லாத ஆவல் இளாவைத் தொற்றிக்கொள்ள அதி தீவிரமாகக் கதை கேட்க ஆயத்தமானாள்.

"மூணாவது தடவை கடவுளை வேண்டிட்டு வலையை வீசினானாம். ரொம்ப நேரம் அந்த வலையில எதுவுமே மாட்டலையாம். அப்போ கொஞ்ச நேரம் கழிச்சு எதோ அவன் வலையில பெருசா வந்ததாம்"

"மீன் தானே?" என்றாள் இளா.

"அவன் வலையை இழுத்து மேல எடுத்தா அது பெரிய ஜாராம்"

"ஜாரா? அப்போ இந்த வாட்டியும் மீன் வரலையா? பாவம்"

"ஆமா பெரிய ஜார் மூடி போட்டு இருந்ததாம்"

"ஜார்குள்ள என்ன இருந்தது?"

"அவன் அந்த மூடியைத் திறந்தானாம்"

"என்ன ஆச்சு என்ன இருந்தது?"

"அந்த ஜார்ல இருந்து புகை வந்ததாம். கலர் கலரா வந்த புகைல இருந்து ஒரு பெரிய பூதம் வந்ததாம்"

"பூதமா?" என்றாள் இளா ஆர்வமிகுதியில்,

"ஆமாம் பெரிய பெரிய பூதம். அலாவுதீன் விளக்குல இருந்த பூதம் மாதிரி இது அந்த ஜார்ல இருந்த பூதம்"

"அப்புறோம் என்ன ஆச்சு?"

"அந்த ஃபிஷர் மேன் ரொம்ப பயந்துட்டானாம். அந்த பூதம் ரொம்ப ரொம்ப பெருசா இருந்ததாம் . அது வெளிய வந்ததும் சத்தமாகச் சிரிச்சதாம். ரொம்ப சத்தமா அது இடி இடிச்ச மாதிரி இருந்ததாம். அந்த டே வேற இருட்டத் தொடங்கியதாம்..."

"பயந்துட்டே,நீங்க யாருனு? கேட்டானாம் அந்த ஆள்"

"அதுக்கு, நான் பூதங்களின் ராஜா. நாலாயிரம் வருஷமா இந்த ஜார்ல அடைஞ்சி இருக்கேன்னு பூதம் சொல்லுச்சாம்"

"நாலாயிரம்னா?"

"போர் டவுசண்ட். ஒன் டு த்ரீ ஹண்ட்ரட்ஸ் முடிஞ்சி டவுசண்ட் வரும்"

"அவ்வளவு வருஷமா?"

"ஆமா"

"அப்புறோம் அவன்கிட்ட,"என்னை நாலாயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆள் இந்த ஜார்ல வெச்சி பூட்டி இந்தக் கடல்ல தூக்கி வீசிட்டான். நானும் என்னை யாராச்சும் காப்பாத்துவாங்களானு காத்திருந்தேன். முதல் ஆயிரம் வருஷதில் என்னை யாராச்சும் காப்பதினா அவங்கள நான் ராஜா ஆக்குவேன்னு நெனெச்சேன் ஆனா யாருமே என்னை காப்பாற்ற வரல..."அந்த பூதம் சொல்லுச்சாம்"

"சரி ரெண்டாவது ஆயிரம் வருஷத்துல யாராச்சும் என்னைக் காப்பாத்துனா அவங்களுக்கு நான் நிறைய நகை பணம் எல்லாம் தரலாம்னு நெனெச்சேன் அப்போவும் யாருமே என்னைக் காப்பாற்ற வரல..."

"அப்புறோம்?"- இளா

"சரி மூணாவது ஆயிரம் வருஷத்துல என்னை யாரவது காப்பாற்றினா அவங்களுக்கு நான் அவங்க கேட்டதெல்லாம் தரலாம்னு நெனச்சேன். அப்பயும் என்னை யாருமே காப்பற்றவில்லை. எனக்கு ரொம்ப ரொம்ப கோவம் வந்திடுச்சு. மூவாயிரம் வருஷமா யாருமே என்னைக் காப்பாற்றல அதனால இந்த நாலாவது ஆயிரம் வருஷத்துல யாராச்சும் என்னைக் காப்பாற்றினா அவங்களை நான் கொன்னு சாப்பிட்டுடலாம்னு நெனச்சேன், இப்போ பாரு நீ வந்து என்னைக் காப்பாற்றிட்ட. சோ உன்னை நான் இப்போ சாப்பிடப் போறேன்னு சொல்லுச்சாம்"

"அச்சச்சோ அந்த ஃபிஷர் மேன் பாவம் தானே? அவங்க தானே அந்த பூதத்தை காப்பாற்றனாங்க? அவங்களையே அது சாப்பிடுவேன்னு சொல்லிடுச்சே? ரொம்ப கெட்ட பூதம்" என்று சொன்னாள்.

"கரெக்ட்டா தங்கம். நமக்கு ஒருத்தவங்க ஹெல்ப் பண்ணா நாம அவங்களுக்கு நல்லது தான் செய்யணும். கெட்டது செய்யக் கூடாத . அப்படி கெட்டது செஞ்சா அவங்க எல்லாம் ரொம்ப ரொம்ப பேட் பெர்சன்ஸ்"

"ஆமாம் பேட் பூதம் அது" என்று சொன்ன இளாவை செல்லம் கொஞ்சினான்.

"அப்புறோம் என்ன ஆச்சு? அந்த ஃபிஷர் மேன் எப்படி தப்பிச்சார்?"

"அந்த ஆளுக்கு ஏன்டா இந்த ஜாரை திறந்தோம்னு ஆகிடுச்சு. அந்த பூதமும் அவரைச் சாப்பிட கிட்ட வந்ததாம்..."

"அச்சச்சோ!"

"ஆனா அந்த ஃபிஷர் மேன் இளா குட்டி போல பயங்கர பிரிலியேண்டாம். அவன் உடனே அந்த பூதம் கிட்ட பேசுனானாம், பூதம் பூதம் எப்படியும் நீ என்னை விழுங்க தான் போற. நானும் சாக தான் போறேன். ஆனா சாகரத்துக்குள்ள எனக்கு ஒரு சந்தேகம் அதை மட்டும் தீர்த்து வெச்சிடுனு சொன்னானாம்"

"என்ன சந்தேகம் கேட்டாங்க?"

"அந்த பூதமும் அவனை விழுங்க வந்து அப்படியே நின்று,"என்ன சந்தேகம் கேள்" அப்படினு சொல்லுச்சாம்"

"நீங்க எவ்வளவு பெருசா இருக்கீங்க. ஆனா இவ்வளவு பெருசா இருக்க நீங்க எப்படி இந்த குட்டி ஜார்ல நாலாயிரம் வருஷம் தங்கியிருந்தீங்க? என்னால நம்பவே முடியலனு சொன்னானாம்"

"அந்த பூதமும்,"நீ ஜாடியை திறந்ததும் தானே நான் வெளியே வந்தேன்? நான் அதுல தான் இருந்தேன்" என்றதாம்"

"இல்ல நான் நம்பல நீங்க ஒரே தடவை அந்த ஜார்குள்ள போயிட்டு வாங்கனு சொன்னானாம்"

"அந்த பூதமும் உள்ள போயிட்டு வெளிய வந்ததும் அவனை முழுங்கிடுவேன்னு சொல்லி அதோட உடம்பை குட்டி ஆக்கி அந்த ஜார்குள்ள திரும்ப போச்சாம்"

"சூப்பர் இப்போ அந்த ஜாரை மூடிட்டா அந்த பூதம் வெளிய வராது தானே?" என்றாள் அவள்.

உண்மையில் அவளின் அறிவுத்திறமையை எண்ணி மீண்டும் முத்தம் வைத்தவன், "செம பிரில்லியண்ட்டா தங்கம் நீ" என்றவன்,"ஆமாம் உடனே அந்த ஆள் அந்த ஜாரை மூடிட்டானாம்"

"சூப்பர் சூப்பர். அப்புறோம்?"

"அப்புறோம் அந்த பூதம் திரும்ப அவன்கிட்ட கெஞ்சுச்சாம், ப்ளீஸ் ப்ளீஸ் என்னை திறந்து விடு நான் உனக்கு முதல சொன்ன எல்லாமும் தரேன் என்னை திறந்து விடுன்னு கெஞ்சுச்சாம்"

"நீ சொல்லுடா இப்போ அந்த ஃபிஷர் மேன் என்ன பண்ணனும்?"

"திறக்கக் கூடாது. அது அவனை சாப்பிட்டுடும்" என்றதும்,"கரெக்ட் அவன் அந்த ஜாரை திரும்ப தூக்கி கடலையே போட்டுட்டானாம். அங்கேயிருந்து தப்பிச்சா போதும்னு வீட்டுக்குப் போயிட்டான். அவ்வளவு தான் கதை. எப்படி இருக்கு?"

"சூப்பரா இருக்கு. அது பேட் பூதம். அதுக்கு அது தான் பனிஷ்மென்ட்" என்றாள் இளவேனில்.

"கரெக்ட். தப்பு பண்ண எல்லோருக்கும் பனிஷ்மென்ட் தேவை. நீ எப்பயும் அப்பா அம்மா பேச்சைக் கேட்டு சமத்து பிள்ளையா இருக்கனும் ஓகே?"

"ஓகே?"

"அப்போ தூங்கலாமா?"

"ஹ்ம்ம்"

அப்போது சரியாக சரித்திராவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அவள் பெயரை டிஸ்பிளேயில் பார்த்ததும் சிரித்தவன் அந்த வீடியோ காலை ஆன் செய்தான்.

*******************

விவான் சொன்னதும் குஷி ஆகி அவனோடு வாக்கிங் கிளம்பினாள் நித்யா. பொடி நடையாக அவர்கள் அந்த ரிஸார்ட்டை வலம் வந்தனர்.

இரவு நேர குளிர் காற்று அவர்கள் மேனியைத் தீண்டிச் செல்ல அவர்கள் நடந்தனர்.

"எத்தனை வருஷம் ஆச்சு விவான் இப்படி உன்கூட நைட்ல நடந்து? ஆக்சுவல்லி எனக்கு உன்கிட்ட பிடிச்சதே இது தான். உன் லவ் உன் கேர். சாரி விவான்"

"ஏ எதுக்கு நித்யா சாரி எல்லாம்?"

"நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கேன் இல்ல? நான் அதைச் சொல்லியிருக்கக் கூடாது. (புரியவில்லை எனில் அவங்க பிளாஷ் பேக் படிக்கவும்)"

"அப்பவே சாரி சொல்லி சமாதானம் ஆகி மேடம் என்னை லவ் பண்ணி அப்ஸ்காண்ட் ஆகி நான் உங்களைத் தேடி வந்ததும் கிஸ் பண்ணி லவ் சொல்லி கல்யாணம் ஆகி இளா பிறந்து இப்போ இங்க இருக்கோம். என்ன எல்லாம் மறந்திடுச்சா நித்திமா?"

"நான் அதை மீன் பண்ணல..."

"புரியுது யாரா இருந்தாலும் இப்படி திடீர்னு பார்த்ததும் லவ் சொன்னா இப்படித்தான் பீல் ஆகும். ஆனா அதை உன்னை முதல் தடவை பார்த்ததும் லவ் சொன்னவனுக்கு பொருந்தும் எனக்கில்லை" என்றான்.

"வெய்ட் வெய்ட் என்ன சொன்ன? என்ன சொன்ன இப்போ? அப்போ நீ என்னை ஏற்கனவே பார்த்திருக்கியா?"

அவன் சிரிக்க,

"சொல்லு விவான். எப்போ? எங்க? எப்படி?"

"நம்ம லவ் ஸ்டோரில ஓர் சின்ன அன்டோல்ட் ஸ்டோரி (சொல்லப்படாத கதை) இருக்கு"

"என்னது அது சொல்லு?" (பயணங்கள் முடிவதில்லை...)
 
குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கும் கொள்கை அழகு, நான் கூட பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு ஜிட்டு action ல இறங்க போறான்னு நினைச்சா இப்படி புஸ் ஆகிட்டீங்களே சகோ:p
இத்தனை கேரக்டர்லயும் neme confuse ஆகாம எழுதரதுக்கு (y)(y)
Nice update.
 
Top