Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-50

Advertisement

praveenraj

Well-known member
Member
அந்த ப்ரோபோசலை பார்த்த சித்தாராவிற்கு ஏனோ பழைய நினைவுகள் ஞாபகம் வர அன்று அவன் (ராஜிவ்) செய்த ப்ரோபோசல் நினைவுக்கு வந்ததும் முகம் மாற,

"என்ன பழைய ஞாபகமா?"

"இல்ல விவி. நான் கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன். நான் இன்னும் நல்லா யோசிச்சி இருக்கனும்" என்றவள்,"ஆனா ஹேமா மௌனி ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு. பாருங்க அவங்க ரெண்டு பேருக்குள்ளும் சண்டை இருந்தது. இன் பேக்ட் அந்த சமயத்துல ஹேமாவை அவள் எவ்வளவு வெறுத்திருப்பா ஆனா இன்னைக்கு அவ முகத்துல என்ன மாதிரி ஃபீல். ஒரு ஹேப்பி. நமக்காக இவ்வளவு செய்யறானேன்னு கர்வம் கூடவே காதல். ஷி இஸ் வெரி லக்கி . அண்ட் ஹேமா ரியல்லி நைஸ் மென்"

"ஏன் சித்தாரா நான் ஒன்னு கேட்கட்டா?"

"கேளு விவி. என்ன பெர்மிஷன் எல்லாம்?"

"இல்ல நீங்க திரும்பவும் காதலிப்பிங்களா?"

"வாட்?" என்று அதிர்ந்தாள் சித்தாரா.

"ஐ மீன் உங்க லைஃப்ல மீண்டுமொரு லவ் வருமா?"

"தெரியல விவி. இப்படியே இருக்க முடியாது அண்ட் கூடவும் கூடாது. மூவ் ஆன் ஆகணும் தான். ஆனா இப்போதான் அடிபட்டிருக்கேன். ஒருவேளை நல்ல பையனைத் திரும்பவும் பார்த்தா சான்ஸ் இருக்கு..."

"நல்ல பையன்னா?"

"எனக்குச் சொல்லத் தெரியல. பட் ராஜிவ் மாதிரி இல்லாம. என் ப்ரீடம், என் ரெஸ்பெக்ட் கெடுக்காத... மதிக்குற ஒருத்தர்"

அவன் எதுவும் பேசவில்லை.

..................................................................

"ஏன் நித்யா வேண்டாம்ட்ட?"

அவள் முறைத்தாள்.

"சொல்லு?"

"நீ சும்மாவே ஜங் ஜங்ன்னு குதிப்ப, இதுல கால்ல சலங்கை வேற கட்டணுமா?" என்றவள் குறும்பு பார்வைப் பார்க்க,

"இஸ் இட்? அப்படியா?" என்றவன் அவளோடு கரம் கோர்த்து செல்பி எடுத்தான்.

............................................

இதி இதி

இவனுங்க எல்லாம் சேர்ந்து செய்யறாங்க சதி

உனக்கோ இருக்கு நிறைய மதி

இவங்க கூட கூட்டு சேர்ந்திடுச்சி விதி

இதுக்கெல்லாம் நீ கோவிச்சிகுட்டா என்னாகுறது என் கதி ?

நம்மள சுத்தி இருக்கிறதோ பிரம்மபுத்திரா நதி

நீ அடிக்கடி முறைச்சா எனக்கு கிளம்புது பீதி

நீயோ என் ரதி

நான் தான் உன் பதி


என்று அவன் பாட்டிற்கு கவிதையாகப் பேச (என்னது இது கவிதையா? கவிதைக்கு உண்டான மரியாதை போச்சேடா!) உண்மையில் அவன் பேசியதில் காதல் வந்ததோ இல்லையோ அவன் மீதிருந்த கோவம் சென்று சிரிப்பு தான் வந்தது இதித்ரிக்கு. அவள் சிரிக்க,

"அப்பாடா நீ சிரிச்சிட்டே. ப்ளீஸ் ப்ளீஸ் என்னை நம்பு" என்று அவன் சொல்ல அவளோ அவனை அழைத்து ஜோடியாக செல்பி எடுத்தாள்.

பிறகு இருட்டத் துவங்க எல்லோரும் அங்கிருந்து கிளம்பி நேராக தங்கள் ரிசார்ட் வந்தனர்."நேற்றே மிஸ் செய்துவிட்டோம் இன்று கண்டிப்பாக கேம்ப் பையர் போட்டே தீரவேண்டும்" என்று யாழ் அடம்பிடிக்க எல்லோரும் அதற்கு ஆதரவும் செய்தனர். எப்படியும் கேம்ப் பையர் போட்டால் இரவு தூங்க லேட் ஆகும் என்பதால் இரவுவரை எல்லோரும் சற்று ஓய்வெடுக்க திட்டமிட்டனர். அதன்படியே எட்டு மணிக்கு எல்லோரும் அந்த ரிசார்ட்டில் கேன்டீனில் ஆஜராகவேண்டுமென்று பிளான் செய்து கலைந்தனர்.

அங்கிருந்து வந்ததும் துவாரா உடனே சரித்திராவை அழைத்தான். அவன் அழைப்பை எதிர்நோக்கியவளாகவே காத்திருந்த சரு உடனே எடுக்க அவள் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது.

"என்னாச்சு சரு? ஏன் இப்படி குரல் டல்லா இருக்கு?" என்றான்.

"என்னனு தெரியில துவாரா, மனசு ஒரு மாதிரி இருக்கு. அங்க ஹாஸ்பிடல் போனோம். அவரை (சரித்திராவின் தந்தை) அந்தக் கோலத்துல பார்க்கவே மனசில்லை. என்ன சொல்ல? எழும்பும் தோலுமா பார்த்ததும் ஒரு வித பரிதாபத்திற்குரியத் தோற்றம். நாங்க யாருனு கூட முதல தெரியில. தாத்தா தான் ரொம்ப அப்செட் ஆகிட்டாரு. அவரைப் பார்க்கப் போய் தாத்தா வேற மயங்கிட்டாரு" என்றாள்.

"ஐயோ! என்ன சொல்ற? இப்போ எப்படி இருக்காரு தாத்தா?"

"பரவாயில்ல. அவரைக் கூட்டிட்டு ஹோட்டல் வந்துட்டேன்"

"அப்போ உங்க அப்பாவை நீ?"

"என்ன பண்ணச் சொல்ற துவாரா? எனக்கும் பார்க்க பாவமா தான் இருந்தது. ஆனா அந்த ஆளுக்கு ஹெல்ப் பண்ணவோ இல்லை நான் தான் உன் பொண்ணுன்னு சொல்லி உறவு கொண்டாடவோ என் மனசு இடம் கொடுக்கல. அந்த நிமிஷம் எனக்கு என் அம்மா மட்டும் தான் நினைவுக்கு வந்தாங்க. இன்னைக்கு வரை அவங்க பெருசா எதையும் அனுபவிச்சதில்லை துவாரா. எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்காங்க. எவ்வளவு அவமானம், பழிச்சொல், இழிவு எல்லாம் கடந்து வந்திருப்பாங்க?"

"அப்போ அடுத்து என்ன பிளான்?"

"என்ன பிளான்? அவரை தாத்தா பார்த்தாச்சு. பேசியாச்சு. வந்த வேலை முடிஞ்சது. திரும்ப கிளம்ப வேண்டியது தான்"

"எனக்குப் புரியல?"

"என்னை மன்னிச்சிடுப்பா உன்கூடவே என்னைக் கூட்டிட்டுப் போப்பா ப்ளீஸ் அப்படி இப்படினு கெஞ்சுனாரு. என் தாத்தா திரும்பி என்னைப் பார்த்தாரு. நான் இல்லைனு தலையை ஆட்டினேன். அவ்வளவு தான்"

உண்மையிலே துவாராவிற்கு இதைக் கேட்கும் போது மனம் என்னவோ செய்தது. தன்னைப் பெற்றவரும் தான் பெற்றவளும் இருந்தும் இப்படி ஒரு அநாதை நிலை யாருக்கும் வரக் கூடாது என்று எண்ணி வருந்தினான்.

"துவாரா லைன்ல இருக்கீங்களா?"

"ஹ்ம்ம்"

"என்னாச்சு எனி ப்ராப்ளேம்?"

"இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாதில்லை?"

"வயசும் தேக ஆரோக்கியமும் இருக்கும் போது இல்லாத ஆட்டம் ஆட வேண்டியது. இன்னைக்கு அதெல்லாம் போனதும் வெறும் நீலிக்கண்ணீர் வடித்தால் சரியாகிடுமா என்ன? துவாரா ஒன்னு சொல்லட்டா? உங்க அப்பா எல்லாம் அந்த ஆள் கூட கம்பேர் பண்ணா லட்சம் மடங்கு பரவாயில்லை துவாரா. உங்க அம்மா இறந்ததும் வேற பொண்ணைத் தேடிப் போகாமா, உங்களை நல்லா படிக்க வெச்சி ஓரளவுக்கு நல்ல நிலைமையில இன்னைக்கு ஆளாக்கியிருக்கார். கீர்த்தியைப் படிக்க வெச்சி அவளுக்கு கல்யாணம் செஞ்சு, பேரன் வரைக்கும் ஒரு அப்பாவா எல்லாம் ரொம்ப கரெக்ட்டா செஞ்சி இருக்காரு" என்றதும் ஏனோ துவாராவிற்கு அவன் மேலே கோவம் வந்தது. ஆம் ஒரு கணவனாக வேண்டுமானால் அவன் தந்தை தோற்றுப்போயிருக்கலாம். ஆனால் ஒரு தந்தையாகவும் தாத்தாவாகவும் மனிதனாகவும் எந்த இடத்திலும் அவர் சோடைப் போகவில்லை என்று எண்ணினான்.

கீர்த்தியின் திருமணத்தின் போது கூட விவானை அழைத்தவர் அவன் மூலமாக கல்யாணத்திற்கான பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டார். அதற்கு மேல் துவாராவும் அவன் சம்பாதித்ததில் இருந்து செலவு செய்தான் தான், ஆனால் ஒருபோதும் ஒரு தந்தையாக அவர் கடமையிலிருந்து அவர் தவறவில்லை. கீர்த்தியின் பையனுக்கு மொட்டையடித்து காது குத்தும் விழா உட்பட அனைத்திற்கும் அவளுக்கு ஒரு தந்தையாக எல்லாம் செய்துவிட்டார். ஏன் அவர்கள் வீட்டை துவாராவின் பெயரிலும் அவன் ஊரில் அவர் பெயரில் இருந்த நிலத்தை சரி சமமாகப் பிரித்து கீர்த்தி மற்றும் துவாராவின் பெயரில் மாற்றியது வரை எல்லாம் சரிவரச் செய்து விட்டார். அவன் வேலைக்குச் சென்ற இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட அவனிடமிருந்து எந்தப் பணமும் அவர் பெற்றதில்லை. இறுதியாக ஆறுமாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்து விட அப்போது கீர்த்தி அவரைத் தன்னுடனே அழைத்துச் சென்று விட்டாள். அதன் பின் கூட அவன் அவரைச் சென்று பார்க்கவில்லை. அப்போதும் கூட அவரைப் பார்க்க சென்ற விவானிடம் அவர் பெயரில் வங்கியில் இருக்கும் ஆறு லட்சத்தை அவருக்கு பின் நான்கு லட்சத்தை கீர்த்திக்கும் இரண்டை துவாரவிற்குமென்று வரைச் சொல்லிவிட்டார். 'எந்த இடத்திலும் அவர் என்னை விலக்கி வைக்கவில்லை. எனக்கு அவர் செய்ய வேண்டியதை எங்கேயும் எப்போதும் நிறுத்தவில்லை' என்று எண்ணியவன் ஏனோ நீண்ட நாட்கள் இல்லை நீண்ட வருடங்களாக அவன் செய்த செய்யும் தவறுகள் எல்லாம் அவன் கண் முன்னே வந்துச் சென்றது.

இறுதியாக எப்போது அவரிடம் பேசினான்? ஆம் காலேஜ் சேரும் முன் எதையோ அவனிடம் அவர் கேட்க இவன் பதிலெதுவும் பேசாமல் இருக்க இத்தனை வருடங்கள் இருந்த பொறுமை அவரைவிட்டுச் சென்றுவிட அன்று சற்று ஆக்ரோஷமாகவே கேட்டார். கேட்டார் என்பதைக் காட்டிலும் சண்டையிட்டார் தான்."ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய்?" என்று கேட்டப் போது அனிச்சையாக அவள் சொன்ன அந்த வார்த்தைகள் ஞாபகம் வர அதை அப்படியே கேட்டும் விட்டான்."ஏன் அம்மாவை அடிச்சுக் கொன்னது பத்தாதா? நீங்கவொரு கொலைக்காரன். கொலைக்காரன்" என்று சொல்லிச் சென்று விட்டான். அந்த வார்த்தை இன்றளவும் அவர் மனதில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. எங்கே இனி தன்னை தன் மகன் முற்றிலும் வெறுத்துவிடுவானோ என்ற பயத்திலே அவனிடம் பேசுவதையே விட்டுவிட்டார். விடுமுறைக்கு வருபவன் கீர்த்தி விவியிடம் ஏன் அண்டை வீட்டு நபர்களிடம் கூடப் பேசுவான் அவரிடம் மட்டும் பேசவே மாட்டான்.

துவாரவின் அமைதி சரித்திராவிற்கு நன்கு புரிந்தது. "என்னாச்சு துவாரா?"

"இல்லை ஒண்ணுமில்லை" என்றவன் குரல் மாறியிருந்தது.

"உன் அப்பா மேல உனக்கிருந்தது கோவம். யா ஒருவேளை அது நியாயமாகக் கூட இருக்கலாம். ஆனா இப்போ உனக்கு உன் அப்பா மேல வெறும் கோவம் மட்டுமில்லை, வெறுப்பும் இருக்கு. நிச்சயம் இந்த வெறுப்புக்கு நீ காரணம் இல்லை. யாரோ உன் அப்பா மேல உனக்கு வெறுப்பு வரும் படி தூண்டி விட்டிருக்காங்க ரைட்? நீயும் அதை அப்படியே பிடிச்சிக்கிட்டு இத்தனை வருஷம் வாழ்த்திட்டு இருக்க"

ஆம் அவளைத் தேடித் தேடிச் சென்றவனை வெறும் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டே இருப்பாள் அவள். அதிலும் தன்னையும் தன் குடும்பத்தையும் சேர்த்து காயப் படுத்துவாள். தான் செய்யாத ஒரு தவறுக்கு அதும் அவன் தந்தை செய்த தவறுக்கு (அவனைப் பொறுத்தவரை அது தான் சரி) அவன் தண்டனையை அனுபவித்தது தான் இத்தனை களேபரங்களுக்கும் காரணம். அவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? அவளுக்கு ஏன் துவாராவின் மீதும் அவன் தந்தை மீதும் இத்தனை வன்மம்? முன்னமே சொல்லியிருக்கிறன் பின்பு சொல்கிறேன்.

"சாரி சரித்திரா நான் நிறைய தப்பு பண்ணியிருக்கேன். நான் அவள் சொன்னதையெல்லாம் நம்பி" என்று அழுதான் துவாரா. அவனைத் தேற்ற முயன்றவள் இறுதியாக,"அப்போ நான் ட்ரைன்ல அவ்வளவு சொன்னேனே அதுக்கெல்லாம் என்ன பதில்? சொல்லு துவாரா? இதுவரை நடக்கல அப்போ கண்டிப்பா இன்னைக்கோ இல்லை நாளைக்கோ நடக்கும். அப்போ என்ன பண்ணப் போற? உனக்குத் தெரியும் அனேஷியாவும் அஸ்ஸாம்ல தான் இருக்கா. அவ உன்னை மீட் பண்ணத் தான் இந்த டூர் ட்ராமாவே. அதனால தான் விவான் அண்ணா உன்னை அடிச்சாரு. இதை நான் சொல்லலாமான்னு எனக்குத் தெரியல ஆனா அவர் தான் டபிள் கேம் ஆடுறாரு. நான் சொல்லி நீ நம்பவில்லை ஆனா அனேஷியா அந்த கம்பார்ட்மெண்ட்ல தான் இருந்தாங்கனு நீயே உன் கண்ணால பார்த்த ரைட்? (எப்போ பார்த்தான் இரண்டாம் நாள் இரவு ட்ரைல பயணத்தில்.) தெய் ஆர் பிளானிங் எ ட்ராமா. பி ரெடி டு பேஸ் இட்" அவன் உடல் நடுங்க அதை உணர்ந்தவளாக,"துவாரா ரிலேக்ஸ் காம் டவுன். ஒண்ணுமில்லை" என்று அவனைத் தேற்றினாள். அப்போது சரியாக யாழ் அவன் அறையைத் தட்ட எழுந்து திறந்தவன் உடல் எல்லாம் ஒரு மாதிரி இருக்க,"என்ன ஆச்சு துவாரா? ஏன் இப்படி இருக்க?" என்று துடித்தவள் அவனை நார்மல் செய்தாள்."யாழ் கெட் மீ எ காஃபீ ப்ளீஸ்" என்றதும் கொஞ்சம் நார்மல் ஆனான்."யாரோ எதுவோ சொன்னா நீ அதாகிடுவையா? நீ ஜெம் ஆப் எ பெர்சன்" என்னும் போது யாழ் துஷி இருவரும் வந்துவிட,"நான் கூப்பிடுறேன் வெய் சரு"

"துவாரா, ஒரு சிட்சுவேஷனை பேஸ் பண்ணனும். கோவப்படமா எமோஷன் ஆகாம ரிலெக்ஸ்டா சரியா?"

"ஹ்ம்ம்"

"நாளைக்கு நான் அங்க இருப்பேன் ஓகே?"

"ஹ்ம்ம்"

"டூ யூ லவ் மீ?"

"........."

"என்ன பதிலே காணோம்?"

"இவ்வளவு நாள் ஏன் என் லைஃப்ல நீ வரல சரு?"

"நீ என்னைப் புரிஞ்சிப்பையா மாட்டியானு சந்தேகம்..." என்று இழுக்க,

"ஐ மிஸ் யூ"

"நாளை காலையில அங்க இருப்பேன் ப்ராமிஸ்" என்றாள்.

அவன் பேசிய இறுதி வார்த்தைகள் யாழ், துஷி இருவருக்கும் என்னவோ செய்ய அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

துஷி அவன் அருகில் அமர்ந்து அவனிடம் சகஜமாகப் பேசினான். "மச்சி யாரு அந்த ட்ரைன்ல பார்த்தப் பொண்ணா?"

"ஹ்ம்ம்"

"டூ யூ லவ் ஹெர்?" என்று தயங்கியபடியே கேட்டான் துஷி.

"எஸ்" என்று கான்பிடெண்டாக பதிலுரைத்த துவாராவை ஏனோ குழப்பமாகப் பார்த்தான்.

அதற்குள் அந்த அறைக்கு வந்த மிரு,"என்னப்பா இங்கே என்ன மீட்டிங் போகுது?" என்றதும்

"ஒண்ணுமில்லை சும்மா தான்" என்றாள் யாழ்.

"அப்போ வாங்க டின்னர் சாப்பிடப் போலாம். அப்போ தான் கேம்ப் பையர் போட முடியும்" என்றாள்.

யாழ் மற்றும் துஷி கிளம்ப,"மிரு கொஞ்சம் இரு உன்கூடப் பேசணும்" என்றான் துவாரா.

"என்ன ஆச்சுடா?"

"நான் ரொம்ப குழம்பி இருக்கேன். கோவம் ஆத்திரம் ரெண்டும் ஒரு சேர வர மாதிரி ஒரு ஃபீல்"

"ஏன்?"

******************

அங்கே அறைக்குள்ளே வந்த ஹேமாவை பின்னிருந்து அணைத்தாள் மௌனி.

"என்னாச்சு அழுக்கு மூட்டை?"

"ஐ ஃபீல் லைட். ஹேப்பி" (நான் சந்தோசமாக பாரமில்லாமல் உணர்கிறேன்)

"ஏன்?"

"நான் அதை எதிர்பார்க்கல. ஒரு மாதிரி ஹையா ஃபீல் பண்றேன். தேங்க்ஸ்"

"தேங்க்ஸ் எல்லாம் சொல்லுவாங்களாடி?"

"இல்ல ஹேமா ஒவ்வொருமுறை நீ உன் காதலை உணர்த்தும் போதெல்லாம் நான் உன் அளவுக்கு எதையும் செய்யாத மாதிரி ஒரு ஃபீல். என்ன சொல்ல? நீ என்னை கடங்காரி ஆக்குற ஹேமா"

"அப்படியா அப்போ கடனை அடைச்சிடு"

"எப்படி?"

"ஜஸ்ட் டௌசன்ட் கிஸ்ஸஸ் அண்ட் ஹக்ஸ்" (ஆயிரம் முத்தங்களும் கட்டியணைப்பும் போதும்)

"டேய்?"

"நிஜமா"

"அவ்வளவு தானா?"

அவனோ திருதிருவென விழித்து,"அது கடனை அடைக்க முடியாடியும் அட்லீஸ்ட் வட்டிகளையாச்சும் அடைக்கலாமில்ல?" என்று கண்ணடித்தான்.

"டேய் பிராட்" என்று அவனை நெருங்கினாள் மௌனி.

*******************

"இதிமா நீ சமாதனம் ஆகிட்டியா?"

"ஏன் கேட்கற?"

"சொல்லேன் ப்ளீஸ்"

"அது தான் செல்பியே எடுத்துட்டோமில்ல?"

"அப்போ சமாதானம் ஆகிட்ட ரைட்?"

"அப்படியும் வெச்சுக்கலாம்"

"அப்போ நான் தான் இதெதுவும் தெரியாம இருந்திருக்கேன்?"

"என்னது?"

"எனக்குள்ளையும் ஒரு கம்பன், ஷெல்லி மாதிரி கவிஞன் இருந்திருக்கான் பாரேன்? அப்போ நான் கவி பாட ஆரமிச்சா எனக்கொரு நோபல் பரிசும் ஆஸ்கருக்கு வெயிட்டீங்ள இருக்கு. சோ இன்னைக்கே போறேன் பேப்பர் பேனா எடுக்கறேன் கவிதைகளா எழுதுறேன் நோபல் பரிசு வாங்குறேன். அந்த நோபல் பரிசு வாங்கும் போது,'என் கவிதைகளுக்கெல்லாம் சொந்தக்காரி.என்னுள் மாற்றம் தந்த மாயக்காரி, இப்படி காரி காரி காரினு ரைமிங்கா சொல்லுவேன் எப்படி?"

முறைத்தவள்,"இப்படியே உளறுனா எல்லோரும் பைத்தியம்னு காரி மூஞ்சில துப்புவாங்க. ஆசையைப்பாரு" என்று அங்கிருந்து கிளம்பினாள்.

"வைரமுத்து மட்டும் காரா ஆட்டக்காரானு எழுதலாம் நான் சொந்தக்காரி மாயக்காரி ஆட்டக்காரின்னு எழுதக் கூடாதா? நீ இன்னைக்கு திடீர்னு கவிஞன் ஆனது இதிக்கே பிடிக்கலடா ஜிட்டா. எங்க நான் பேமஸ் ஆகி என் பெண் விசிறிகள் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கோங்க கல்யாணம் பண்ணிகொங்கனு கேட்டுடுவாங்களோனு பயப்படுறா. சீக்கிரம் 'காதல் கிறுக்கனின் காதல் கிறுக்கல்கள்னு' ஒரு புத்தகம் ரிலீஸ் பண்ணனும்" என்று கிளம்பினான்.

*****************

உமாநந்தா தீவிலிருந்து வந்ததும் அவரவர் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தனர். மிருவுடன் சென்ற சித்தாரா அப்போது தான் அங்கு விவி கேட்டதை மீண்டுமொரு முறை யோசித்தாள்."நீங்க திரும்ப காதலிப்பீங்களா?" இது தானே அவன் கேட்டக் கேள்வி. ஏனோ அவன் கேட்ட சமயத்தில் அவள் போட்டோ எடுப்பதிலும் சுற்றிப்பார்பதிலும் பிசியாக இருந்ததால் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போ அந்தக் கேள்வியின் உள்ளார்ந்த அர்த்தம் என்னவாக இருக்கும் என்ற எண்ணம் தான் அவள் மூளையில் ஓடிக்கொண்டிருந்தது. என்னவென்று அவளால் சரியாக வரையறுக்க முடியவில்லை என்றாலும் ஒரு வித குறுகுறுப்பு அவளிடம் இருந்தது உண்மை. அன்று எப்படி யாரோ ஒரு ஸ்ட்ரேஞ்சேரிடம் தன்னைப்பற்றி முழுவதும் சொல்லத் துணிந்தாள்? எப்படி அவனை நம்பி இந்தக் கூட்டத்தில் ஐக்கியமானள்? யா இவர்கள் எல்லோரும் நல்லவர்கள் தான். அதில் ஐயமில்லை. இரண்டு நாட்கள் ட்ரைனிலும் நேற்று, இன்று என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களைப் பற்றி நினைத்து வியக்கிறாள் தான். ஈகோ இல்லாம காலேஜ் முடிஞ்சு இத்தனை வருஷம் ஆகியும் அதும் அவங்கவங்க பார்ட்னர்சுடன் அந்த ப்ரெண்ட்ஷிப்போடு ஏனோ தனக்கு இதுபோல் ஒரு கூட்டம் இல்லையே என்ற ஏக்கம் அவளிடத்தில் இருக்கிறது தான்.

ஃப்ரெண்ட்ஸ் பார் லைஃப். அதாவது வாழ்க்கை முழுவதற்குமான நண்பர்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறாள் ஆனால் இன்று இவர்களோடு நேரம் செலவழிக்கும் போதெல்லாம் அதை ஆத்மார்த்தமாக உணருகிறாள். வாழ்க்கையில் நாம் பெறக்கூடிய விலைமதிப்பற்ற செல்வன் எனப்படுவது இதுதானே? உண்மையான தூய்மையான நட்பு. என்ன தான் இப்படி ஒருத்தரை ஒருத்தர் பயங்கரமா கலாய்ச்சிக்கிட்டாலும் மாற்றுக்கருத்து வந்தாலும் சண்டை வந்தாலும் அதையெல்லாம் கடந்து அவங்களோட ஃப்ரெண்ட்ஷிப் அது தான் அவளுக்குத் தெரியுது.

ஒரு மாதிரி எப்பயும் ஜாப் கேரீர் என்று சீரியஸ் லைஃபை அனுபவித்துக் கொண்டிருந்தவளுக்கு இவர்களின் நட்பு குறிப்பாக ஜிட்டுவின் ஜோவியல், ஹேமா மௌனியின் கொஞ்சல்கள், ஜிட்டு இதித்ரியின் செல்லச் சீண்டல்கள் சண்டைகள், இளங்கோ பாருவின் காதல், அவ்வளவு கோவமாக அடாவடியாக தெரிந்த செபாவோ இன்று ஜெஸ்ஸியுடன் கைக்கோர்த்துச் செல்லும் அழகு, இதற்கெல்லாம் மேல் நித்யா விவானின் புரிதல் இன்னும் மாறாத காதல், துவாராவைப் பற்றிப் பெரியதாகத் தெரியவில்லை என்றாலும் அவன் மீது விவி, விவா இருவருக்கும் இருக்கும் நட்பு பாசம் இளவேனில் அவன் மீது காட்டும் அன்பு அதற்கும் மேல் ஹேமாவின் பெற்றோரும் விவானின் அன்னையும் அவர்கள் எல்லோரிடத்திலும் காட்டும் அன்பு, ஊருக்கே கலெக்டரா இருந்தாலும் ஃப்ரெண்டுசுக்கு அதே கலாய் வாங்கும் திவேஷ், யாழ் கேரக்டர் முதலில் சித்துவுக்கு சற்று எரிச்சலைத் தந்தாலும் யாழ், துஷி ஆகியோரின் பெஸ்டி ரிலேஷன்ஷிப் வரை எல்லாம் அவளுக்கு நிறைய ஆச்சரியங்களையும் புதிய அனுபவங்களையும் கூடவே வாழ்க்கையில் இறப்பதற்குள் இதுபோல் இல்லையென்றாலும் குறைந்தது இரண்டு உற்ற நண்பர்களையாவது பெற்றே தீரவேண்டும் என்று நிறைய நிறைய அவளுக்குக் கற்றுத் தந்துள்ளது.

"என்ன பலமான யோசனை போல?" என்ற மிருவுக்கு

"இனிமேல் நானும் உங்க கேங்ல சேர்த்துக்கலாம் தானே?"

"எங்க கூட தானே இருக்க? என்ன பிரச்சனை?" என்று புரியாமல் கேட்டவளுக்கு,

"அதில்லை மிரு நாளைக்கு நாம எல்லோரும் ஊருக்கே போனாலும் எப்பயும் கான்டெக்ட்ல இருந்து, அதாவது என்னையும் உங்க ஃப்ரெண்டா சேர்த்துக்கொள்வீர்கள் தானே?" என்றாள் ஐயத்துடன்,

"நீ எப்பயோ எங்க கேங்ல சேர்ந்துட்ட. சோ நீ இல்லாம எல்லாம் எங்கேயேயும் போக மாட்டோம் ஓகே?"

"தேங்க்ஸ்" என்று அணைத்துக்கொண்டாள்.

"ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்"

"சரி நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்" என்று அவள் சென்றதும் தான் மிரு துவாராவைத் தேடிச் சென்றாள்.

*************************

அங்கிருந்து வரும் வரை யாழிடம் அதிகம் பெட் ஆகிக்கொண்டாள் இளவேனில். அதனால் அவளைத் தன்னுடன் அழைத்துச்சென்று விட்டாள் அவள். அதன் பின் நித்யா அவளைத் தூக்கிச் சென்று ரெப்ரெஷ் செய்து விவானோடு சாப்பிட வந்தனர். இளாவோ தன் அன்னையிடம் நேற்று துவாரா சொன்ன கதையை அப்படியே அவளோட ஸ்டைலில் ஒப்புவித்தாள். ஏதோ யோசனையில் இருந்தாலும் விவானுக்கு அவள் சொன்னதெல்லாம் காதில் ஒலித்துக்கொண்டு தான் இருந்தது. இறுதியாக கதை சொல்லிவிட்டு,'தப்பு பண்ண எல்லோருக்கும் பனிஷ்மென்ட் தேவை' என்று அந்த மாரலை சொல்ல விவானுக்கு தான் என்னவோ பொறித் தட்டியது.

உடனே தன்னுடைய அலைபேசியை எடுத்தவன் அனிக்கு அழைத்தான்.

"சொல்லுடா?"

"அப்படி அவனுக்கு என்னத்தடி பண்ணித் தொலைச்ச?"

அந்தக் கேள்வியை எதிர்பார்காதவள் மௌனமாக இருக்க,

"பேசு அனேஷியா. நீ கேட்டங்கற ஒரே காரணத்துக்காக நான் ஏன் எதுக்குன்னு எதையும் கேட்காம அவனை நான் இங்க வரைக் கூட்டிட்டு வந்துட்டேன். நீ இப்படி நெருப்புல விழுந்த புழுவா குற்றயுணர்ச்சியில தவிக்கற அங்க அவன் இந்த நாலஞ்சு வருஷமா சரியே இல்லை. ஒரு மாதிரி பயந்து நடுங்குறான். என்னைக்கும் இல்லாத சம்பவமா நீ இப்படி அவன் கிட்ட பேசவே பம்புற. யா எனக்கு நீயும் முக்கியம் துவாராவும் முக்கியம். நாம ரெண்டு பேரும் கிண்டர் கார்டன்ஸ்ல இருந்து ஒன்னா படிச்சவங்க தான். அவன் இடையில வந்தாலும் இந்த நிமிஷம் வரை அவன் தான் என் பெஸ்ட் ஃப்ரண்ட்"

"யா ஆரம்பத்துல நானும் அவனை டீஸ் பண்ணியிருக்கேன் தான். ஆனா எப்போ அவன் என் ஃப்ரண்ட் ஆனானோ அப்போயிருந்து இப்போ வரை எதையும் மறைச்சதில்லை இந்த ட்ராவல் முன்னாடி வரை. உனக்கேன் அவன் மேல ஒரு வெஞ்சேன்ஸ்? அண்ட் அவனுக்கும் உன்னைத் தெரியும் தானே? ஐ மீன் நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்க. இல்லைனா எதுக்கு நீ அவனை அவ்வளவு அவாய்ட் பண்ணியும் அவன் உன் பின்னாலே சுத்திட்டு வரணும்? அதையெல்லாம் விட இப்போ அவன் உன்ன அவாய்ட் பண்ணும் போது நீயென் அவனைத் தேடி வரணும்? எனக்கு குறைந்தது சில விஷயங்களாவது தெரியணும். சொல்லு இல்லைனா இன்னைக்கு கேம்ப் பையேரே நடக்காது. துவாராவை அங்க வரச் சொல்ல மாட்டேன்"

"அவன் என் அத்தை பையன்"

"வாட்? அப்போ அவன் அம்மா?"

"எஸ் என் அத்தை. என் அப்பாவோட சொந்த தங்கை. என் அம்மா அவன் அப்பாவோட சித்தப்பா பொண்ணு. நாங்க எல்லாம் ஒரே பேமிலி"

விவான் மொத்தமாய் அதிர்ந்தான். மீதிக்கதையை எல்லாம் சொன்னாள். ஏனோ இப்பொது விவானுக்கு அனேஷியா மீது கொஞ்சமே கொஞ்சம் சாப்ட் கார்னர் வந்தது. இருந்தும் அவள் 'அந்த' சம்பவத்தை மட்டும் மறைத்து விட்டாள். மறைத்து விட்டாள் என்பதைக் காட்டிலும் சொல்ல முடியவில்லை என்பது நிஜம். ஏனெனில் அதைச் சொல்லியிருந்தால் நிச்சயம் விவான் துவாராவை அங்கே அழைத்து வர மாட்டான் என்று அவளுக்கு அறுதியாகத் தெரிந்தது.

"இவ்வளவு தான் விஷயமாடி இல்லை வேற எதாவது இருக்கா?"

அப்போது சரியாக நித்யா அந்த பால்கனி கதவைத் திறந்துவிட சட்டென திரும்பினான்.

"எவ்வளவு நேரம் விவான் கூப்பிடறது? பாப்பாக்கு பசிக்குதாம் டைம் ஆச்சு போலாம் வா" என்று அழைக்க,

அதற்குள் இளாவே,"அப்பா போலாம்" என்றாள்.

"சரி போலாம்" என்று அழைப்பைத் துண்டித்தான். விவானுக்கு ஏதோ தவறாகவே பட்டது. இப்போது தான் சரித்திராவின் ஞாபகம் வர கீர்த்தி அன்று தன்னிடம் சொன்னதையெல்லாம் நினைத்தவன்,'அப்போ அனேஷியா வரானு தெரிஞ்சதுனால தான சரித்திராவை கீர்த்தி அனுப்பியிருக்கா. சோ அவளுக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு. யாரு சொல்லியிருப்பா?' என்று யோசிக்க துஷி கீர்த்தியிடம் பேசிக்கொண்டு இருந்தான். அவனுக்குப் புரிந்தது. இவன் தான் எதாவது உளறியிருக்கணும் என்று நினைத்தவன் அவனை முறைக்க,"இரு கீர்த்தி விவான் பேசுறானாம்" என்று அவனிடம் போனை தந்தான்.

"சொல்லு கீர்த்தி"

"அண்ணா எப்படி இருக்கீங்க?" என்று சாதாரணமாகப் பேசிவிட்டு இறுதியாக,"நீங்க துவாராவை அனேஷியாவிடம் மீட் பண்ண வைங்க இல்ல பண்ணாதீங்க ஆனா எனக்கு அவன் பழைய துவாராவா வரணும். எப்படியும் உங்களுக்கு அவ எல்லாம் சொல்லியிருப்பா ரைட்?" என்று நிறுத்தினாள்.

"இல்ல கீர்த்தி அது வந்து... எனக்கு எதுவும் தெரியாது..." என்று இழுக்க,

"கண்டிப்பா இன்னைக்கு அவனே உங்க கிட்ட எல்லாம் சொல்லுவான்..."(பயணங்கள் முடிவதில்லை)
 
அப்போ விவிக்கு சித்ரா வா ?
அட அட அட.. என்னமா கவிதை பேசுற ஜிட்டு,? இந்தா உனக்கு த்தான் இந்த ரோஸ் ?????
அப்பா விஷயத்தில துவாரா.. 0
ஜிட்டு நீயெல்லாம் வைரமுத்துவுக்கு மேல ராசா ??
விவான் அனுக்கிட்ட பேசினது ??
Nice update.
 
இப்போ துவா கோபம் விவான் மீதா. .. கவிபுயல் ஜிட்டு ? ? ? சித்தரா feel பண்றதை தான் எனக்கும் தோணுது :cry::cry:...... துவா பிரச்சினை சரியாகி அவருக்கு நிம்மதி கிடைக்கட்டும்.....
 
துவா , அனி இடையே நடந்தது பற்றி
எனக்கு ஒரு கெஸ் இருக்கு...
அவங்க இருவரின் சந்திப்புக்காக வெயிட்டீங்...
 
ஒரு வேளை அத்தை செத்து போனதால அதுக்கு பழி வாங்குறேன்னு அது மாதிரி எதாவது அனி செஞ்சிருப்பாளா..... ஐ மீன் அவளும் அப்போ சின்னப் பிள்ளையாத்தான இருந்திருப்பா அப்போ பெரியவங்க துவா அப்பாவாலதான் இப்படி ஆகிருச்சுனு பேசும்போது அவ இப்படி தப்பா புரிஞ்சிருப்பாளோ :unsure: :unsure: :unsure:

Interesting epi.... waiting.....
 
அப்போ விவிக்கு சித்ரா வா ?
அட அட அட.. என்னமா கவிதை பேசுற ஜிட்டு,? இந்தா உனக்கு த்தான் இந்த ரோஸ் ?????
அப்பா விஷயத்தில துவாரா.. 0
ஜிட்டு நீயெல்லாம் வைரமுத்துவுக்கு மேல ராசா ??
விவான் அனுக்கிட்ட பேசினது ??
Nice update.
எஸ்! என்னது இது கவிதையா? டேய் ஜிட்டு நீ என்ன பண்ணாலும் உனக்கு சப்போர்ட் பண்றாங்கலே?(மருதமலை படத்துல பிச்சைக்காரன்கிட்ட அதிக பணத்தைப் பார்க்கும் வடிவேலுவின் நிலையில் நானிருக்கேன்??) என்னது வைரமுத்துவுக்கு மேலயா? நன்றி??
 
Top