Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-51

Advertisement

praveenraj

Well-known member
Member
"இல்ல கீர்த்தி அது வந்து... எனக்கு எதுவும் தெரியாது..." என்று இழுக்க,
"கண்டிப்பா இன்னைக்கு அவனே உங்க கிட்ட எல்லாம் சொல்லுவான். ப்ளீஸ் அவனை எப்படியாவது பழையபடி நார்மலா இருக்க வைங்க. இன்னைக்கு பேசும் போது,"அவர் எப்படி இருக்காருன்னு" கேட்டான். எனக்கு என் காதையே நம்ப முடியல. நான் ரெண்டரை வயசு குழந்தை. என்ன ஏதுன்னு தெரியாத என்னைப் பற்றிக்கூட என் அம்மா வீட்டு சைட்ல இருந்து யாரும் எதுவும் கண்டுக்கல. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? என் அம்மாக்கு அவங்க வீட்டுல செஞ்ச நகை சீர்வரிசை முதற்கொண்டு எல்லாம் திரும்ப வாங்கிக்கிட்டாங்க அவங்க. ஆனா எங்க ரெண்டு பேரையும் பார்மாலிட்டிக்காக கூட கூப்பிடல. கூப்பிட்டிருந்தாலும் எங்க அப்பா தந்திருக்க மாட்டாரு அது வேற. எங்க அப்பா எங்க ரெண்டு பேரையும் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தாருன்னு எனக்குத் தான் தெரியும். எங்க அப்பாக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வெக்க என் பெரியப்பாங்க முயற்சி பண்ணாங்களாம். எங்களுக்காக எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு இன்னைக்கு வரை எங்களை தனியாவே வளர்த்தியிருக்காரு"
"போதும் எங்களுக்கு புதுசா எந்த சொந்தமும் வேண்டாம் அண்ணா. சில விஷயங்கள் மாறம அப்படியே இருக்கறது தான் எல்லோருக்கும் நல்லது. இருபத்தி இரண்டு வருஷம் ஓடிடுச்சி. இனியும் அப்படியே போகட்டும். நான் வெக்கறேன்" என்று அவள் அழைப்பைத் துண்டித்தாள். விவானுக்கு திக் பிரமை பிடித்தது போல் இருந்தது. உண்மையில் இதெதுவும் அவனுக்குத் தெரியாது. ஆம் அனேஷியாவின் தந்தைக்கும் தன் தந்தைக்கும் ஓரளவுக்கு பழக்கம் இருக்கு தான். அந்தப் பழக்கமே அவர்கள் இருவரின் நட்பினால் உண்டானது. ஆனால் கூட இவை எல்லாம் அவனுக்கு புதுசு. அவன் பெற்றோருக்கு துவாரா வேறு எத்தனை நெருக்கம்? 'சொல்ல முடியாது ஒருவேளை இவையனைத்தும் என் தந்தைக்கு தெரிந்திருந்தாலும் ஆச்சரியம் பட வேண்டிய அவசியமில்லை தான். ஆனால் எனக்கு எதுவும் தெரியாது' என யோசனையில் இருக்க,"என்ன மச்சான் பயங்கர யோசனையில் இருக்க? இன்னைக்கு எங்க ஓடிப்பிடிச்சு விளையாடலாம்னா?" என்று செபா அவனை வார எல்லோரும் பலமாகச் சிரித்தனர். நித்யா அதிக எம்பேரேசுக்குள்ளானாள். அவனோ நிமிர்ந்து செபாவை முறைத்தான்.
"சரி சரி முறைக்காத, டேய் கைஸ் இன்னைக்கு எல்லோரும் அவங்கவங்க ரூம் ஜன்னலை இழுத்து மூடிக்கணும். யாரும் வெளியப் பார்க்கக் கூடாது" என்று மேலும் விவானை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான். அவன் முகத்தை வைத்தே கண்டுக்கொண்ட தியா,"டேய் மூடுடா எவெரி திங் ஹாஸ் எ லிமிட்" என்றதும் அனைவரும் கப் சிப் ஆனார்கள். துவாராவோ எதையும் பேசாமல் விவானையே கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏனோ நண்பனின் பார்வையை முதன் முறை எதிர்கொள்ளத் துணிவின்றி தடுமாறினான் விவான்.
"சீக்கிரம் சாப்பிடுங்கடா போலாம். பத்தவெக்க வேண்டிய வேலையெல்லாம் இருக்குள்ள?" என்ற யாழை விவான் துவாரா இருவரும் முறைத்தனர். அந்த ரிசார்டில் இரவு கேம்ப் பையர் போடுவதற்கென்றே தனியாக ஒரு இடம் இருக்க சாப்பிட்டவர்கள் எல்லோரும் அங்கே சென்றனர். திவேஷ் கொஞ்சம் வேலை இருப்பதால் வர தாமதம் ஆகும் என்று உரைத்துவிட எல்லோரும் நடையைக் கட்டினார்கள்.
"ஒன்னும் ஸ்பெஷல் இல்லையா?" என்றான் இளங்கோ,
"என்ன ஸ்பெஷல்? அதான் போறோமே" என்றதும் அவன் ஹேமாவிற்கு சிக்னல் செய்தான்.
ஹேமாவோ திரும்பி மௌனியைப் பார்த்து வாயில் விரலை வைத்தான்.
உடனே அவன் தியாவை சிக்னல் செய்ய, பாய்ஸின் இந்த ரகசிய பாஷைகள் எல்லாம் கேர்ள்சுக்கும் புரியாமல் இல்லை.
"சாரிப்பா உங்க எல்லோரின் மனம் எனக்குப் புரியுது தான் ஆனால் இந்தக் கதையில் இவை எப்போதும் இடம்பெறாது"
"யாருடா அது?" என்றான் ஹேமா,
"நான் தான் பிரவின். இந்தக் கதையோட ரைட்டர்"
"அது சரி" என்றவர்கள் அங்கே சென்றவுடன் பையர் போட வேண்டிய வேலைகளில் இறங்கினார்கள். சில நாட்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த பையரின் சுவடுகள் தெரிந்த இடத்திலே அதைப் போட்டார்கள்.இளவேனிலுக்குத் தூக்கம் வரப்போகிற அனைத்து அறிகுறிகளும் வர, பக்கத்தில் டெண்டை ஏற்படுத்தி அவளை உறங்கவைக்க நித்யா சென்று விட்டாள்.
"மச்சான் செம இல்ல? ரொம்ப வருஷத்துக்கு அப்புறோம் நைட் நாம எல்லோரும் கதைபேசப் போறோம். லவ்லி"
"டேய் கோவா டூர் ஞாபகம் இருக்கா? பாஹா பீச்சல நைட் புல்லா அந்த அலையோசையில் கதை பேசுனோமே?"
எல்லோரும் அந்த நாட்களை மனதில் நினைத்து நிறைந்தனர். யாழ், துஷி, விவா துவாரா நால்வரும் பள்ளியில் ட்ரெக்கிங் சென்ற நாட்களையும், nss கேம்ப் போட்ட இரவுகளையும் சேர்த்து நினைத்தனர்.
"டைம் ப்லைஸ் இல்ல துவாரா?" (காலம் பறக்குது தானே?)
எல்லோரும் ஆமோதித்தனர்.
"எப்பயாவது பழைய நாட்களை எல்லாம் திரும்ப அசைபோடுறது உண்டா?" என்றாள் யாழ். அங்கே ஹேமா, இளங்கோ, செபா, தியா ஆகியோர் கேம்ப் பையர் போட்டுக்கொண்டிருக்க இங்கே இவர்கள் நால்வரும் (யாழ், துஷி, துவாரா, விவான்) தனியாக அமர்ந்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
"நான் அடிக்கடி நெனப்பேன். பொதுவா ஹாஸ்டல் வாழ்க்கை நரகம்னும் பேரெண்ட்ஸ் விட்டு தனியா இருக்கறது கொடுமைனு பெரும்பாலானோர் சொல்லுவாங்க. என்னைக் கேட்டா ஹாஸ்டல் வாழ்க்கையைப் போல ஒரு சொர்க்கம், ஒரு வரம் இல்லவே இல்லை. விதவிதமான மனிதர்கள் வெவ்வேறு சுபாவங்கள். அதும் நம்ம ஸ்கூல் லைஃப் படிப்பை மட்டும் போகஸ் பண்ண வெக்க கூடியது இல்லை. எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்கு நம்ம ஸ்கூல் பிரதர் கொடுத்த அளவுக்கு எந்த ஸ்கூலும் தந்ததா எனக்குத் தெரியல. உன்கிட்டப் போய் இதைப் பற்றிச் சொல்றேன் பாரு? நீயும் விவானும் தானே வருஷா வருஷம் பேட் மிட்டன்ல டிஸ்ட்ரிக்ட் சாம்பியன்ஸ். ஸ்டேட் லெவல்லக் கூட மூணு வாட்டி ரெப்ரெசென்ட் செஞ்சி இருக்கீங்க. அந்த உடல் நடுங்கும் குளிர்ல காலையில ஜாகிங் பண்ணி, படிச்சு, குளிச்சு, பிரேயர் அட்டென்ட் பண்ணிட்டு அடிச்சிக்கோ புடிச்சிக்கோன்னு மெஸ்ல சாப்பிட்டு ஸ்கூல் அட்டென்ட் பண்ணப் போவோம். ரொம்ப சீக்கிரம் விடியும் பொழுதும் அதை விட சீக்கிரம் மதியமே முடியும் ஸ்கூலும் ரொம்ப லேட்டா வரும் மாலையும் இரவும் எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத வாழ்க்கையில்ல?" என்று மெய்மறந்து தங்கள் பள்ளிக்கால நினைவுகளுக்கே சென்றவளோடு பாய்ஸ் எல்லோரும் சென்றனர்.
"தி பெஸ்ட் போர்டிங் (ரெசிடென்ஷியல் - அங்கேயே தங்கிப் படிக்கும் பள்ளிகள்) ஸ்கூல். அதும் நம்ம படிச்சப்போ இருந்த பிரதர் அவ்வளவு தங்கமானவர். கோ எஜுகேஷன் (ஆண்கள் பெண்கள் என்று இரு பாலரும் படிக்கும் பள்ளி) எல்லாம் சேர்ந்த ஒரு அழகிய இடம்" என்றான் துஷி.
"அங்க படிச்சதுல என்ன கிடைச்சதோ இல்லையோ உங்களைப் போல ஒரு ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுச்சு. யோசிச்சுப் பாருங்க இன்னைக்கு நம்ம கேங் எல்லோரும் ஓரளவுக்கு நல்ல நிலைமையில தான் இருக்கோம். கலெக்டர், ப்ரொபெஸர் பிசினெஸ்மேன்" என்று அவள் சொல்ல பாய்ஸ் மூவரும் கோரஸாக,"டேன்செர விட்டுட்ட? ப்ரொபெஷனல் கிளாசிக்கல் டேன்செர் கம் டீச்சர் மிஸ் யாழினி கௌதமன்" என்றதும் அவளையும் அறியாமல் அவள் உதடு சிரிப்பைத் தழுவியது. பின்னே அது தானே அவளுடைய அடையாளம். "மச்சி வெரி காஸ்ட்லீ அண்ட் மோஸ்ட் வான்டெட் டான்ஸர்டா. அதை விட்டுடீங்க? ஒடிசாவுல ஒன் ஆப் தி ரெப்புட்டேட் (புகழ்பெற்ற) ஸ்கூல்ல ஒர்க் பன்றாங்க. அவங்களை விட்டா எப்படி?" என்றவன்,
"எங்க ஸ்டேப் போடு? 'தை தை தித் தை, தையும் தக்க தையும் தாக' கமான்" என்று அவனுக்கே உரிய குறும்பில் துஷி அவளை வாரினான்.
"எனக்கு அதெல்லாம் வேண்டாம். சலங்கை ஒலில கமல் கிணறுமேல நின்னுட்டு ஆடுவாரே? 'தகிட ததிமி தகிட ததிமி தம் தானா, இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா, இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா? என் கதை எழுதிட மறுக்குது என் பேனா,சுருதியும் லயமும் ஒன்று சேரனும்' ஒரே ஒரு ஸ்டெப் ப்ளீஸ் யாழ்" என்று சிரித்துக்கொண்டே கெஞ்சினான் விவான்.
"ஏன்டா நாய்களா நான் உயிரோட இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா? எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலைடா" என்றாள் யாழ்.
"என்னடி யாழ் இப்படி குண்டைத் தூக்கிப் போடுற? நான் உன்ன நடனத்துக்காக தன்னையே அர்பணிச்ச ஷோபனா மாதிரி நெனச்சிட்டு இருக்கேன்..." என்று தன் பங்கிற்கு வாரினான் துவாரா.
"டேய் என்னங்கடா என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உங்க எல்லோருக்கும்?"
பாய்ஸ் மூவரும் சிரிக்க,"அப்படி மட்டும் பண்ணா ஒரு ஆண்மகனின் வாழ்க்கை உன்கிட்ட இருந்து காப்பாற்றப்படும்னு நெனச்சோம்" என்று குரல் வந்த திசையில் நால்வரும் திரும்ப திவேஷ் அங்கே அவர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.
"நல்ல வார்த்தை சொன்ன நல்ல வார்த்தை சொன்னடா" என்றான் துஷி.
"ஏம்பா உங்களுக்கே இது நல்லா இருக்கா? அங்க நாங்க எல்லோரும் கேம்ப் பையர் போட்டுட்டு இருக்கோம், நீங்க இங்க ஹாயா இருக்கீங்களே?" என்றான் இளங்கோ.
"கேம்ப் பையர் தானே போடுறீங்க? என்னமோ நெருப்பையே நீங்க தான் கண்டுபிடிச்சு ஒலிம்பிக் ஜோதியைத் தூக்கிட்டு ஓடுற மாதிரி சீன் வேற?" என்று கவுன்ட்டர் கொடுத்தான் விவான்.
திரும்பிப் பார்க்க கேம்ப் பையர் தயாராகியிருந்தது. தன்னருகே நின்ற திவேஷிடம் தன் கரத்தை துஷி நீட்ட(அதாவது துஷி தன்னை இழுக்குமாறு சொல்ல) அவனும் இழுக்க துஷி எழுந்தான். அவன் தன்னுடைய கையை யாழுக்குத் தர யாழ் எழுந்து துவாராவுக்குத் தர துவாரா எழுந்து விவானுக்குத் தந்தான். ஃப்ரெண்ட்ஸுக்குள் இது ரொம்பவும் சாதரண விஷயம் தான் இருந்தும் இவர்களின் இந்தப் புரிதல் கண்டு இளங்கோவே சற்று பொறாமையில் அவர்களை நோக்கினான்."நான் ஏன்டா உங்களோடு ஸ்கூல்ல படிக்காம போயிட்டேன்? என்றான் உண்மையான ஆற்றாமையில்.
"ஏன் மச்சான்? என்ன மேட்டர்?"
"உங்களை மாதிரி ஒரு கேங்கை நாங்க மிஸ் பண்றோம்" என்றான் இளங்கோ. அப்போது ஹேமா, செபா இருவரும் வர,"ஆயிரம் சொல்லுங்க யாழ் நீ பெரிய பாவம் பண்ணிட்ட" என்றான் ஹேமா.
எதைச் சொல்ல வருகிறான் என்று புரியாமல் எல்லோரும் விழிக்க,"இந்நேரம் என் மச்சான் எங்க எப்படி இருந்திருக்கணும்?" என்று கவுண்டமணி ஸ்டைலில் (கவுண்டமணி இளையராஜா போல் பாடகர் ஆகவேண்டும் என்று இருக்க, ஊமையாக நடிப்பாரே அந்த ஜோக் டைலாக் போல் சொன்னான்) "அவனை இங்க இப்படிப் பண்ணிடீங்களே? நெருப்பை அணைய வெக்க வேண்டியவனை இப்படி நெருப்பை மூட்ட வெச்சிட்டியே இது நியாயமா? அடுக்குமா?" என்று சொல்லி செபாவை பாவமாகப் பார்க்க எல்லோரும் அவன் சொன்னதன் பொருள் உணர்ந்து கலகலத்தனர்.
"என்னடா நடக்குது இங்க? நான் மேல வந்துட்டேன்டா" என்று வடிவேலு பாணியில் கவுன்ட்டர் தந்தான் செபா.
"ஒன்னுமில்லை மச்சான். உரிமைக் குரல் கொடுத்திட்டு இருந்தேன்" என்றான் ஹேமா.
"என்னைய தான் கலாய்க்கறீங்கன்னு தெரியுது ஆனா என்னனு தான் புரியல. இட்ஸ் ஓகே வாங்க பையர் ரெடி"
"இதென்ன பையரு? இன்னும் கொஞ்ச நேரத்துல பிடிக்கும் பாரு பையரு" என்று மைண்ட்வாய்ஸை வெளியில் சொல்லிவிட்டாள் யாழ்.
ஏனோ தன்னையும் அறியாமல் விவானுக்கு ஒரு கிலி பிடித்துக்கொண்டது நிஜம்."சரி வாங்க போலாம்" என்று அவர்கள் செல்ல விவான் நித்யாவைத் தேடிச் சென்றான். அங்கே இளாவைத் தட்டிக்கொடுத்தபடி அமர்ந்திருந்தாள் நித்யா.
"ரெடியா விவா போலாமா?"
"கொஞ்சம் இரு" என்றவன் அவள் அருகில் அமர்ந்து அவள் மடியில் படுத்துக் கொண்டான். "என்ன ஆச்சு விவான் உடம்பு சரியில்லையா?"
"பாப்பா தூங்கிட்டாளா?"
"பத்து நிமிஷம் ஆச்சு. நீ சொல்லு என்ன மேட்டர்?"
"நித்யாக்கா வாங்க" என்ற பாரு விவானைக் கண்டு நிற்க,"நீ போ நித்யா நான் வரேன்" என்றவன் எழுந்து இளவேனில் அருகில் படுத்தவன் அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.
"சீக்கிரம் வா" என்று சொல்லி அவள் சென்றாள்.
"என்னை மட்டுமே கிண்டல் பண்றீங்க? கிடைக்கிற கேப்புல எல்லாம் எப்படி கெடா வெட்டுறதுனு நீங்க விவானைத் தான் கேட்கணும்" என்ற செபா நித்யாவைப் பார்க்க, "டேய் என்னை உங்க வம்புக்கு இழுக்காத அவ்வளவு தான்" என்றவள் காலை நீட்டி அமர்ந்திருந்த ஜிட்டுவைத் தாண்டிச் செல்ல,"ஹேய் நித்யா உனக்கு அறிவில்லை? இப்படியா காலைத் தாண்டுவாங்க? ஒழுங்கா திரும்ப தாண்டு" என்றான்.
"மச்சான் நீ இன்னும் மாறவேயில்லையாடா" என்று இளங்கோ கிண்டல் செய்தான். அவன் எப்போது கீழே படுத்திருந்தாலோ இல்லை அமர்ந்திருந்தாலோ வம்பிழுக்க அவனைத் தாண்டிவிடுவார்கள் அவர்கள். பிறகு அவர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி மீண்டும் தாண்ட வைப்பான் ஜிட்டன்.
"எதாவது பேசுன அப்படியே உன் காலை மிதிச்சிடுவேன் பார்த்துக்கோ" என்று அவனை மிரட்டிய நித்யா பெண்களோடு சென்று அமர்ந்தாள்.
"ஜிட்டா இன்னும் கால் வலிக்குதா?" என்ன என்று நக்கலாகக் கேட்டான் தியா,
"இல்லை குளுகுளுனு இருக்கு.கேட்கறான் பாரு கேள்வியை?" என்று முறைத்தான்.
"அண்ணா நீங்க எப்பயுமே இப்படித் தானா அண்ணா?" என்றாள் பாரு,
"எப்படி?" என்றான் ஜிட்டன்.
"அதுவா நீ எப்பயுமே இப்படி முட்டா பீஸாவே அரை மென்டலா இருப்பியா இல்லை அமாவாசை அமாவாசைக்கு மட்டுமான்னு கேட்கறா என்ன பாரு?" என்றான் தியா. எல்லோரும் சிரிக்க,
"ஐயோ அண்ணா நான் அதைக் கேட்க வரல, இப்படித் தான் டெர்ரரா இருப்பிங்களா?" என்றாள்.
"டெர்ரரு? யாரு நானு? ஆனா இவனை (தியா) மாதிரி வெளிப்படையா கலாய்க்கறவனைக் கூட நம்பலாம், ஆனா உன்னை மாதிரி கூட இருந்தே உள்ளடி அடிக்கறாங்க பாரு அவங்களை மட்டும் நோ" என்றான் ஜிட்டன்.
"தெரிஞ்சிடுச்சா? முழுசா தெரிஞ்சிடுச்சா?" என்று காஞ்சனா லாரன்ஸ் போல ஜிட்டு மற்றும் பாருவை கலாய்த்தான் ஹேமா.
'ஆஹா சும்மாவே நம்மள அந்த கலாய் கலாய்ப்பாங்க. இன்னைக்கு ஒரு முழு நைட் வேற இருக்கே? எப்படியாவது டாப்பிக்கை உன்கிட்ட இருந்து வேற யாருக்காவது மாத்திவிடுவா ஜிட்டா' என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டவன், "ஆஹா இந்தக் குளிருக்கு இந்த நெருப்பு இதமா இருக்குள்ள?" என்றான்
"சாரு உசாராமாம். அப்படியே கேசுவலா டாபிக்கை மாத்தறாராம்" என்றான் இளங்கோ.
'மறுபடியும் உன் ராஜ தந்திரங்கள் எல்லாம் வீணாப் போச்சே ஜிட்டா' என்று சொல்லிக்கொண்டான். எல்லோரும் மீண்டும் கலகலத்தனர்.
அப்போது ரேஷா, பெனாசிர், லோகேஷ், இஸ்மாயில் ஆகிய நால்வரும் அங்கே வந்தனர். அவர்களை ஜெஸ்ஸி தான் இங்கே வரச் சொல்லியிருந்தாள். "ஹாய்" என்ற அவர்களை எல்லோருக்கும் அறிமுகம் செய்தாள் ஜெஸ்ஸி.
அங்கே துவாரா, யாழ், திவேஷ் ஆகியோருடன் அமர்ந்திருந்த துஷியை ஒன்றரைக் கண்களால் 'டா'வடித்தபடியே வந்தாள் ரேஷா.
"ஆமாம் அனி எங்க?" என்றாள் நித்யா ரேஷாவிடம்.
"ஆமாம் அனி எங்க?" என்று பெண்கள் எல்லோரும் கோரசில் கேட்டனர்.
"கொஞ்சம் தலைவலியாம் ரெஸ்ட் எடுக்கறாங்க" என்றதும் பேச்சை மாற்ற,"கொஞ்சம் தள்ளி உட்காருடா" என்று துஷியை ஒட்டி அமர்ந்தாள் யாழ்.
"இதுக்கும் மேல நான் தள்ளிப் போணும்னா அந்த நெருப்புல தான் போய் உட்காரனும்" என்றவன் அவளைப் பாவமாகப் பார்த்தான். பின்னே,'பேச்சை மாற்ற உனக்கு வேற ஆள் இல்ல வேற டாபிக் கிடைக்கலையாடி ? நான் தான் சிக்கினேனா? ஏற்கனவே நெற்றிக் கண்ணைத் திறந்துப் பார்க்கற மாதிரிதான் பார்ப்பா அந்த முட்டைக்கண்ணி இப்போ அவ்வளவு தான்' என்று முணுமுணுத்தான் துஷி.
"இன்னைக்கு ஒர்க் எப்படி போச்சு?" என்றாள் ஜெஸ்ஸி."அப்பாடா" என்று மூச்சை விட அவர்கள் கொஞ்சம் வந்த வேலையைப் பற்றிப் பேசினார்கள். இப்போது தான் அந்த கேம்ப் பையர் ஒழுங்காக எரிந்தது.
ஏனோ வந்து அமர்ந்தது முதல் தியாவின் பார்வை முழுவதும் மிருவையே சுற்றிக்கொண்டு இருந்தது. நேற்று, இன்று என்று இரண்டு நாட்கள் முடிந்தது. அவள் அவனிடம் சரியாகவே... இல்லை இல்லை பேசவே இல்லை. இவனும் இந்த இரண்டு நாட்களில் பெரியதாக அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. ஆனால் காலம் குறைந்துகொண்டே இருக்கிறது என்று உணர்ந்தவன் எப்படியாவது இன்றிரவு மிருவிடம் பேசியே தீரவேண்டும் என்று உறுதியாக இருக்கிறான். அவள் முக பாவங்களில் கூட எவ்வித ரியாக்சனும் இல்லை. தன்னையே ஒருவர் வெறித்துப் பார்ப்பதை உணர்ந்தவள் திரும்ப தியாவைக் கண்டு அமைதியாக அவனைப் பார்த்தாள்.
ஒருபக்கம் சிலர் பேசிக்கொண்டிருக்க மிரு-தியா, ரேஷா-துஷி ஆகியோர் அடிக்கடி பார்வைகளால் ஒருவர் மற்றொருவரைத் தீண்டிக்கொண்டு இருந்தனர். எங்க இன்னும் விவானைக் காணோம் என்று பார்த்த நித்யாவின் பார்வைப் புரிந்தவனாய் திவேஷ் உள்ளே சென்றான்.
இப்போது தான் அந்த இரவு மெதுவாக பனி பொழிய துவங்கியிருக்க அந்த நெருப்பைச் சுற்றிப் பெரிய ரேடியஸில் அமர்ந்திருந்த எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வந்தனர். பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென மொத்தமாக அமைதியானார்கள். நம்ம ஸ்கூல்ல எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென ஒரு கனப்பொழுது நிசப்தம் ஆகுமே? அப்படி ஒரு அமைதி. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.
விவானுடன் வெளியே வந்த திவேஷ் எல்லோரும் இப்படி அமைதியாக இருப்பதைக்கண்டு ஆச்சரியமாகப் பார்த்தபடி வந்தமர்ந்தார்கள்.
"என்னடா எல்லோரும் ஒன்னா இருக்கும் போது நீ மட்டும் இப்படி தனியா போனா என்ன அர்த்தம்?" என்று விவானை கடிந்துகொண்டான் இளங்கோ.
"செம இல்ல? இப்படி எல்லோரும் அவங்கவங்க ஜோடியோட ஒண்ணா உட்கார்ந்து பேச" என்ற இதிக்கு,"எங்க எல்லோரும் ஜோடியா இருக்காங்க? கலெக்டர் சார், துவாரா விவி, சித்தாரா, துஷி, யாழ், லோகேஷ், ரேஷா, பெனாசிர், இஸ்மாயில், ஜிட்டு அப்புறோம் நீனு இத்தனை சிங்கிள்ஸ் இருக்கீங்க" என்று சொன்னான் ஹேமா.
அவன் போட்டிருந்த செருப்பைக் கழட்டி ஹேமாவை நோக்கி வீசினான் ஜிட்டு. "என்னை ஏன்டா இதுல சேர்த்துற? எனக்கு ஆள் இருக்கு. நான் சிங்கிள் இல்லை" என்றான் ஜிட்டன்.
"அப்போ தியாவும் மிருவும் கபில்சா?" என்றாள் ஜெஸ்ஸி.
இப்போது விவி சித்தாராவைப் பார்க்க, ரேஷா துஷியைப் பார்த்தாள்.
ஜெஸ்ஸியின் கேள்விக்கு யார் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தனர். இருந்தும் சம்மந்தப் பட்ட அவர்கள் இருவரே பதில் சொல்லட்டும் என்று அமைதிகாக்க அவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். செபா ஜெஸ்ஸியின் கையைக் கிள்ளி சிக்னல் செய்ய, பேச்சு அப்படியே மாறியது. மிருவுக்கோ 'கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை' என்பது போல் தியாவை விருப்புகிறாள் ஆனால் சட்டென மன்னிக்க மட்டும் மனம் இடம் தரவில்லை.
"இன்னைக்கு நிலைமைக்கு நீங்க எப்படி இந்த டூரை அரேஞ் பண்ணீங்க?" என்று வியப்பாக விவானைப் பார்த்துக் கேட்டான் இஸ்மாயில்.
அவன் கேள்வியின் பொருள் எல்லோருக்கும் புரியத்தான் செய்தது. ஒரு வாரத்தில் இதுவரை இரண்டு நாட்கள் ட்ரைனிலும் இருநாட்கள் கெளஹாத்தியிலும் என்று நான்கு நாட்கள் பறந்துவிட்டது. ஆனால் உண்மையில் நாட்கள் அவர்கள் யாருக்குமே பறக்கவில்லை. ஒருநாளில் இருக்கும் இருபத்தி நான்கு மணிநேரங்கள், ஆயிரத்தி நானூற்றி நாற்பது நிமிடங்கள், எண்பத்தாறாயிரத்தி நானூறு வினாடிகள் என்று நான்கு நாட்களை (அன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறிய நிமிடத்திலிருந்து இன்று வரை) நிறுத்தி நிதானமாகவே அனுபவிக்கிறார்கள். இன்றைய அவசர உலகத்தில் அதும் ஸ்மார்ட்போன், டிவி, கம்ப்யூட்டர், கேட்ஜெட்ஸ் (சிறுகருவிகள்) ஆகியவை பெரும்பாலும் இல்லாமல் வெறும் மனிதர்களும் வார்த்தைகளும் உறவுகளும் என்றே கடத்துவது எல்லோருக்கும் உண்மையில் மன நிம்மதியைத் தான் தந்தது. தந்துகொண்டிருக்கிறது. இரைச்சல் ஆம் கடிகார முட்கள் முதல் தொலைக்காட்சி மின்விசிறி வாகனங்கள் என்று நம்மை சுற்றியிருக்கும் அந்தக் கூச்சல்களுக்கு மத்தியிலே பொழுதைக் கழித்த (கழிக்கும்) அவர்களுக்கு இந்த அமைதி, இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், குயில் கூவல் முதல் மழை பெய்யும் சப்தம், மண்வாசனை குளிரூட்டப்பட்ட அறைகள் ஏதுமில்லாமல் இப்படி வெட்டைவெளியில் நிலவொளியில் கூடவே தங்கள் முன்பு மூட்டப்பட்டிருக்கும் நெருப்பு வரை வாகனங்கள் போக்குவரத்து சப்தம் ஏதுமில்லாமல் இந்த அமைதியான இடம் எல்லோருக்கும் நிச்சயம் புதிய வாழ்க்கையாகத் தான் தெரிகிறது.
புதிய மனிதர்கள், புதிய இடம், புதிய உணவு வகைகள் என்று எப்போதும் இருக்கும் அந்த 'வழக்கம்' ஏதுமில்லாமல் ஒரு வாழ்க்கை. கடுமையான பணி சுமைகள் டார்கெட்ஸ், ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்று பந்தைய குதிரைகளாகவே ஓடியவர்களுக்கு இன்றோ ஓய்வு. இன்னும் பெரிய சவால்கள் எல்லாம் அவர்களுக்காகக் காத்திருக்கிறது. கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம், சுமாரான வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை, தம்பி-தங்கை-அக்காகளின் கல்யாணம், அப்பா அம்மாவின் உடல்நிலை, வாங்கிய லோன்களுக்கு இ எம் ஐ வட்டி, இல்லை வாங்கப் போகும் லோன்கள் பற்றியக் கவலை என்று இப்படி நிறைய காத்திருக்கிறது அவர்கள் எல்லோருக்கும். பெண்டுலம் சுற்றுவதை எல்லோரும் பார்த்திருப்போம். ஒருமுறை ஒரு புறத்தை அடைந்ததும் மைக்ரோ வினாடிகளுக்கு அது நிற்கும் ஏனெனில் மீண்டும் தன் ஊசலைத் தொடங்க வேண்டும் தானே?
சொல்லப்போனால் அவர்கள் எல்லோருக்கும் இந்தப் பயணம் முடிந்ததும் அடுத்த ஒரு மாதமோ இரு மாதமோ அதீத வேலை பழு காத்திருக்கிறது. ஜிட்டனின் பேங்க் விவானின் எஸ்டேட், ஹேமாவின் ஜிம், செபாவின் ப்ராஜெக்ட், மிருவின் திருமணம் யாழின் நடனப் பள்ளி என்று இப்படி நிறைய இருக்கிறது.
இஸ்மாயிலின் கேள்விக்கு பதிலளித்தான் விவான். "இது ஒன்னும் சுலபமா நடந்திடல இஸ்மாயில். கடந்த ஒரு வருஷமாவே ஹோல்ட்டுல இருந்தது. ஈரமான தீப்பெட்டி மாதிரி அப்பப்போ ஸ்பார்க் வரும் ஆனா உடனே அணைஞ்சிடும். திரும்ப பத்தும். கடைசியா ஒர்க் அவுட் ஆகிடுச்சு. இதுக்கு உண்மையிலே எனக்கு நம்பிக்கை இல்லை. டிக்கெட் போடும் வரை ஏன் போட்டதுக்கு அப்புறோம் கூட பக் பக்னே இருந்தது. எங்க எவன் போன் பண்ணி சாரி மச்சானு சொல்லிடுவானோனு பயந்துட்டே இருந்தேன் தெரியுமா? உண்மையிலே அன்னைக்கு ட்ரைன் ஏறும் வரை ஒரு பதற்றம் இருந்துட்டே இருந்தது. நல்ல வேளை யாரும் ஜெகா வாங்கல"
விவான் சொல்லி முடித்ததும்,"எல்லோரும் நம்ம மச்சானுக்கு ஒரு 'ஓ' போடுங்க" என்றான் ஹேமா. எல்லோரும் கத்த திடீரென தோன்றியவளாய்,"டேய் பாப்பா தூங்குறாடா. முழிச்சிப்பா" என்று நித்யா பதறவும் எல்லோரும் திரும்பி அந்த டெண்டை பார்த்தனர். திவே எழுந்து சென்று திறந்துப் பார்த்துவிட்டு இல்லை என்று தலையாட்டினான்.
"இன்னைக்கு புல்லா ஓடியாடுனா இல்ல? அதான் நல்ல டையேர்ட். இல்லைனா இந்நேரம் முழிச்சி இருப்பா" என்றாள் நித்யா.
மீண்டும் பேச்சு ஒவ்வொருவராய் வந்தது.
(பயணங்கள் முடிவதில்லை...)
 
நான் போன எபி ல அனேசியா வை தப்பா நினைச்சிட்டேன்,ஆனால் அனு பாவம் ?
ஜிட்டு வாவது இந்த கூட்டத்தில தாக்கு பிடிக்கிறான் , ஆனால் இந்த writer பிரவீன் அறிமுகத்தோடு ஓடிட்டார் ?
இந்த எபி க்கு ஜிட்டுக்கு துணையா யாழ் ?
எல்லா உணர்வுகளும் கலந்த பயணம் ?
Nice update.
 
டென்ஷனோட விவான்....
அமைதியா துவா....
தலைவலியோட அனு...

தியா, மிரு...
துஷி, ரேஷா...
காத்திருத்தலோடு....

எத்தனை நெருக்கமாக இருந்தாலும்...
எல்லா விஷயங்களும் பகிரப்படுவதில்லை..
துவாவின் அம்மா சைட் உறவினர்களைப் பற்றி
விவான் அறியவில்லை...
 
ஏன் அனி வரல.... நடுவுல வந்து ஜாயின் பண்ணுவாளா :unsure: :unsure: :unsure:
விவான விட எங்களுக்கு டென்ஷன் ஏறுது துவா அனி மீட் பண்ணா என்ன ஆகும்னு :oops::oops::oops:
ஏன் ரைட்டர் ஜி ஒரே வார்த்தைல ஓடி வந்துட்டீங்க ஒரு சீனுக்காவது வருவீங்கன்னு நெனச்சேன் ? ? ?
 
நான் போன எபி ல அனேசியா வை தப்பா நினைச்சிட்டேன்,ஆனால் அனு பாவம் ?
ஜிட்டு வாவது இந்த கூட்டத்தில தாக்கு பிடிக்கிறான் , ஆனால் இந்த writer பிரவீன் அறிமுகத்தோடு ஓடிட்டார் ?
இந்த எபி க்கு ஜிட்டுக்கு துணையா யாழ் ?
எல்லா உணர்வுகளும் கலந்த பயணம் ?
Nice update.
முழுக்கதையும் கேட்டுட்டு யார் பாவம்னு சொல்லுங்க. வேற என்ன பண்ண? ஜிட்டுவின் மன தைரியம் எனக்கில்லை?� நன்றி?
 
டென்ஷனோட விவான்....
அமைதியா துவா....
தலைவலியோட அனு...

தியா, மிரு...
துஷி, ரேஷா...
காத்திருத்தலோடு....

எத்தனை நெருக்கமாக இருந்தாலும்...
எல்லா விஷயங்களும் பகிரப்படுவதில்லை..
துவாவின் அம்மா சைட் உறவினர்களைப் பற்றி
விவான் அறியவில்லை...
கண்டிப்பா எல்லாமும் எல்லோரிடமும் சொல்ல முடியாது. எல்லோருக்கும் சில பெர்சனல் பக்கங்கள் இருக்கும். இருக்கனும். நன்றி??
 
Top