Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-52

Advertisement

praveenraj

Well-known member
Member
"என்ன சார் முந்தியெல்லாம் மக்கள் பேங்குல கடன் வாங்க பயந்தாக இப்போ பேங்க் கடன் தர பயப்படுத்து போல?" என்றாள் பெனாசிர் ஜிட்டுவைப் பார்த்து,

"அதையேன் கேக்கறீங்க? வெட்கத்தை விட்டு சொல்றேன் பேருக்கு தான் பேங்க் மேனேஜர் ஆனா நாய் பொழப்புமா. ஒரு படத்துல வடிவேல் அரசாங்க வேலை கிடைச்சிடுச்சினு கெத்தா போவாரே கடைசியில நடக்கும் பாருங்க அதான் எங்க நிலைமை. நான் இன்சுரன்ஸ் ஆபிஸ்ல இருந்தாலும் எல்லாம் இதே நிலை தான்"

"அதும் சரி மக்கள் கிட்ட நாணயம் குறைஞ்சிடுச்சி இல்லையா?" என்றாள் யாழ்

"மக்களை குறை சொல்லக் கூடாது. எல்லாம் இந்த பொலிடீஷியன்ஸ் பண்றது. அவங்க சுய லாபத்துக்காக மக்களை சோம்பேறி ஆக்குறாங்க" என்ற வாதத்தை முன் வைத்தான் லோகேஷ். எல்லோரும் அவன் கூற்றுக்கும் ஆமோதித்தனர்.

"பொலிடீஷியன்ஸ் மட்டுமில்ல அரசு ஊழியர்களும் கூட சுயநலமா தான் இருக்காங்க" என்றான் இளங்கோ ஏனோ சொன்னவன் எதோ தோன்றியவனாய் திவேஷைப் பார்க்க,

அவனோ,"சில பேர் இல்லை, பல பேர் பண்றதை வெச்சு எல்லோரையும் குறை சொல்ல கூடாது. கரப்ட் (ஊழல்) ஆபிஸர்ஸ் இருக்குற இதே நாட்டுல தான் ஸ்டில் நிறைய கரெக்ட் ஆபிஸர்ஸ் ஏன் பொலிடீஷியன்ஸ் கூட இருக்காங்க. மாணிக் சர்க்கார் கேள்விப் பட்டிருக்கீங்களா? திரிபுரா முன்னாள் முதல்வர். இருவது வருஷம் தொடர்ந்து ஆட்சியில இருந்தாரு. அவருக்கு சொந்த வீடும் இல்லை காரும் இல்லை. அவர் முதல்வரா இருந்த காலத்துல ஏன் இப்போவரை வீடும் காரும் இல்லாத ஒரே முதல்வர் அவர் தான். வெறும் அஞ்சு வருஷம் ஆட்சியில இருந்தே சொத்தை குவித்த முதல்வருக்கு மத்தியில இவர் ஒரு ஜெம் தான். ஆனா என்ன பண்ணீங்க? அவரையும் தோற்கடிச்சுடீங்க. இப்போ சொல்லுங்க தப்பு பொலிடீஷியன்ஸ், ஆபிஸேர்ஸ் மேல மட்டும் தானா?" என்று நிதானமாக அதே நேரம் தீர்க்கமான வாதத்தை முன் வைத்தான் திவேஷ்."நாட் ஒன்லி ஹிம் நிறைய பேர் இருக்காங்க இப்படி..."

"வேற ஏதாவது பேசலாமா?" என்றான் ஹேமா,

"ஸீ இன்னைக்கு இளைஞர்கள் ஏன் மக்கள் யாருமே பாலிடிக்ஸ், எகனாமி (அரசியல் பொருளாதாரம்) பற்றிப் பேசுனாலே ஏன் பேச ஆரமிச்சாவே போர், இரிடேட்டிங்கா இருக்குனு சொல்றாங்க. சாரி ஹேமந்த். நான் உங்களை ஸ்பெசிபை பண்ணல இன் ஜெனரல் (பொதுவாகச் சொன்னேன்)"

"நோ ப்ராப்ளேம்" என்று அவன் தலையசைக்க

"சரி எல்லோரும் அவங்க ஆம்பிஷன் (லட்சியம்) என்னனு சொல்லுங்க? ஏதாவது புதுசா இருந்தா பெட்டரா இருக்கும்.அதாவது பணம், பதவி, வசதி தாண்டி ஏதாவது இருந்தா?" என்று முடித்தான் திவேஷ்.

"எனக்கு என் டான்ஸை இன்னும் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கணும்" என்றாள் யாழ்.

"நைஸ்"

"ஆக்சுவல்லி எனக்கொரு புக் எழுதணும். லைக் நாவல். ஆனா இந்த மௌன ராகம் மௌன கீதங்கள், முந்தானை முடிச்சு கதையெல்லாம் இல்லாம (இதைப்பற்றி இன்னும் நிறைய இருக்கு பேச ஆனா என்னுடைய வேறொரு கதை இதைச் சார்ந்தது என்பதால் இப்போது இதோடு நிறுத்துகிறேன்!) என் ஜர்னலிசம் மூலமா உண்மையை எடுத்து உலகத்திற்குச் சொல்லணும். எந்த பக்கமும் சாரமா. உண்மையான நடுநிலையான பத்திரிகையா..."

"அது கஷ்டம் ப்ரோ" என்றான் திவேஷ். தியாவுக்கும் அவன் சொல்ல வருவது நன்கு புரிந்தது.

"எனக்கொரு ஆசை இருக்கு. என்னை மாதிரியே ஆர்பனேஜ்ல வளர்ந்த ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கனும்"என்றாள் மௌனி.

"நைஸ்"

இந்த உரையாடல்களைக் கேட்க அநேக நபர்களுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது. 'நாம் எதையெல்லாம் சாதனை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ எதெல்லாம் வாழ்க்கையென்று நினைக்கிறோமோ அது உண்மையில் வாழ்க்கையே இல்லை. அதையும் தாண்டி நிறைய இருக்கு. லெபனான், சிரியா, ஆப்கானிஸ்தான் ஏமன், சோமாலியா, இராக், சூடான் போன்ற நாடுகளில் இன்னமும் மக்கள் அடிப்படை உரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் ஏன் வாழ்வதற்காகவும் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்!'

"சரி நீங்க எல்லோரும் எப்படி இப்படி இருக்கீங்க? இத்தனை வருஷம் கடந்தும் அந்த ஃப்ரெண்ட்ஷிப்பை அப்படியே மெயின்டெய்ன் பண்றீங்க?" என்று கேட்டாள் இதி.

அவர்கள் ஐவரும் (விவா, துவா, திவே, யாழ், துஷி ஏன் விவி மிரு கூட துவாராவுக்கு சைல்ட்ஹூட் ஃப்ரெண்ட்ஸ் தான்) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"உங்க ஃப்ரெண்ட்ஷிப் எப்படி உருவாச்சு? எப்படி இன்னும் கண்டினு ஆகுது?" என்னும் போது விவானுக்கு மெசேஜ் வந்தது. அனி தான் மெசேஜ் செய்திருந்தாள். "நான் கிளம்பிட்டேன்" என்று இருந்தது அதில்.

"எங்க ஃப்ரெண்ட்ஷிப் இன்னும் தொடர சில காரணங்கள் இருக்கு. முதல நாங்க ஸ்கூல்ல மட்டும் ஒன்னா படிக்கல, அதாவது விவா, துவாரா ஒன்னா காலேஜ் படிச்சாங்க. நானும் இவளும் (யாழ்) சேர்ந்து படிச்சோம். மோரெவர் நாங்க எல்லோரும் செகண்ட் ஸ்டேண்டர்டுல இருந்து ஒன்னா படிச்சோம். பத்து வருஷம் ஒரே கேம்பஸ் ஒரே ஹாஸ்டெல், ஒரே கேங்" என்றான் துஷி.

"பதினொன்னுடா வெண்ண" என்றான் விவான்.

"ஓ பதினொன்னு"

இதைக் கேட்ட போது தான் ரேஷாவின் மரமண்டையில் ஏதோ புரிவதைப் போல் இருந்தது.இருந்தும் அன்று ட்ரைனில் யாழ் லவ்வர் என்றாளே என்று எண்ணி அவர்களை முறைத்தாள் ரேஷா.

"ஐயோ பதினோரு வருஷமாவா? செம இல்ல?" என்றாள் சித்தாரா. அவளும் ஹாஸ்டெலில் படித்தவள் தான். இருந்தும் இவர்களைப்போல் ஒரே ஸ்கூலில் படித்தவள் இல்லை.

"செம லூட்டியா இருந்திருக்கும் இல்ல? அப்போ. அப்போ சில கேள்விகளுக்கு இப்போ பதில் சொல்லுங்க பார்ப்போம்?" என்றாள் பாரு.

"கேளு" என்றனர்.

"உங்க எல்லோருடைய பர்ஸ்ட் க்ரஷ் (பள்ளிக்கால இல்லை விடலை பருவ காதல் / ஈர்ப்பு) பற்றி சிறு குறிப்பு வரைக" என்றாள்.

இதைக் கேட்டதும் அவர்கள் ஐவர் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி. இப்படியொரு கேள்வி அதும் இந்த சமயத்தில் எதிர்பார்க்கவில்லை. நால்வரும் துவாரவைப் பார்த்தனர். அவனோ கீழே கிடந்த குச்சியில் மண்ணை நோண்டிக்கொண்டு இருந்தான் என்பதைக் காட்டிலும் கோவத்தில் குத்திக்கொண்டு இருந்தான் என்று வேணுமானால் சொல்லலாம். ஆடு திருடியவர்கள் போல அவர்கள் நால்வரும் முழிக்க,

"சபாஷ் சரியான கேள்வி பாரு. ஒரே கேள்வியில அவங்களை மொத்தமா ஆப் பண்ணிட்ட பாரு" என்று ஹேமா ஹை பை கொடுத்தான்.

"அய்யய்யோ நித்யாவுக்கு கண்ணெல்லாம் சிவகுத்தே. பதட்டத்துல கையெல்லாம் நடுங்குதே. இப்போ கோவமா கல்லை தூக்கிப் போடுவா பாரேன்" என்று நித்யாவை சீண்டிக்கொண்டு இருந்தான் ஜிட்டன்.

எல்லோரும் அவன் சொன்ன தொனியை ரசித்து சிரித்தனர். ஆனால் அவர்கள் நால்வரோ பேந்த பேந்த முழிக்க,

"என்ன நித்யா கிட்ட ரியாக்சனே காணோம்? ஓ வெறியேத்துறாளா ஏத்து ஏத்து" என்று மீண்டும் கலாய்க்க இம்முறை ஒரு கல்லைத் தூக்கி ஜிட்டனை நோக்கி எறிந்தாள் நித்யா. அது சரியாக அவன் அடிபட்ட காலிலே பட,"ஐயோ" என்று அலறினான்.

"என்னப்பா யாருகிட்டயும் பதிலே காணோம்? என்ன ப்ரீஸ் ஆக்கிடீங்களா? என் கேள்வி அப்படி?" என்று பாரு மெச்சிக்கொள்ள தூரத்தில் யாரோ நடந்து வருவதைப் போல் தெரிந்தது.

"என்ன இது யாருமே பதில் சொல்ல மாட்டேங்குறீங்க?"

ஏனோ ரேஷா சற்று ஆவலாக துஷியைப் பார்த்தாள். திவேஷ் பின்னால் திரும்பிப் பார்த்தான். ஆக்சுவல்லி துவாராவுக்கும் விஷயம் தெரியும் என்று அவர்கள் ஐவருக்கும் (அனேஷியா உட்பட) தெரியாது. ஆனால் இதெல்லாம் தெரிந்ததிலிருந்து ஏன் தற்சமயம் அவன் காதுகளிலும் மனக்கண்ணிலும் பழைய கசப்பான அந்த நினைவுகள் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தங்கள் அருகே எரியும் நெருப்பைக் காட்டிலும் அவன் மனம் அதிகம் அவமானத்தில் கொதிக்கிறது என்று அவர்கள் அறியவில்லை. இவ்வளவு விஷயங்களை தன்னிடமிருந்து விவான் மறைந்துவிட்டான் என்பதைக் காட்டிலும் இன்னும் சற்று நேரத்தில் அவன் தன்னுடன் பேசப் போவது அதிக வலியைத் தரும் என்று இப்போது நித்யா அறியவில்லை. நிழலாகத் தெரிந்த அவ்வுருவம் அவர்கள் கண்களில் புலப்பட்டது.

யாரோ தூரத்தில் இருப்பதைப்போல் உணர்த்த இதி கைக்காட்ட எல்லோரும் திரும்பி அங்கே பார்த்தனர். அவள் முன்னே வர வர இங்கே நித்யா, இதி, மௌனி, பாரு நால்வரும் ஒரே சமயத்தில் "அனி" என்றனர். அதைக் கேட்டதும் ஜிட்டன் திரும்பிப் பார்த்து,"ஆத்தி இவளா? இவ அவயில்ல?" என்றவனின் எண்ணம் அன்று ட்ரைனில் அவன் மீது போர்வையைப் போட்டு 'பவாரியா' கொள்ளைக்காரன் என்று கத்தியது ஞாபகம் வர,'உஷாரா இருடா ஜிட்டா' என்று அவனுக்கு அவனே வார்னிங் தந்துகொண்டான்.

அவள் பார்வையோ அந்த நெருப்பின் அருகில் அமர்ந்திருந்த துவாராவையே மொய்த்துக்கொண்டிருந்தது. மெதுவாக தன்னிடம் இருந்த குச்சியை வைத்து நோண்டிக்கொண்டிருந்தவன் இப்போது தீவிரமாக குத்த,"ஏன் இவ்வளவு நேரம் அனி? தலைவலின்னு சொன்னாங்க இப்போ பரவாயில்லையா?" என்ற நித்யாவை சட்டைசெய்யாமல் துவாராவையே பார்த்தவளைக் கண்டு,"அனி இது தான் துவாரா, துவாரகேஷ். டேய் துவா இது அனி சாரி அனேஷியா" என்று இருவரையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்த, அங்கே அவர்கள் நால்வரும் (துஷி, யாழ், விவா, திவே ) அடுத்து என்ன நடக்கப் போகிறதென்று புரியாமல் திக் திக் நிமிடங்களில் இருந்தனர். கோவமாக அந்தக் குச்சியை ஓங்கியவன் குத்தியதில் அக்குச்சி உடைய வெடுக்கென எழுந்தான். இப்போது தான் அங்கே சுற்றியிருந்த எல்லோருக்கும் ஏதோ தவறாகப் பட அதற்குள் அனேஷியா கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. விவான், துஷி இருவரும் துவாரா பின் ஓட யாழ், திவே அனேஷியாவை நோக்கி ஓடினார்கள்.

இவர்களின் இந்த திடீர் செய்கையால் அங்கே குடிகொண்டிருந்த அமைதி கலகலப்பு முற்றிலும் ஓய்ந்தது. "ஹே அனி இரு பேசலாம்" என்ற யாழுக்கு,"இல்ல யாழ் அவன் என்னைப் பார்க்கக் கூட தயாரா இல்லை போல, ஐ டீசெர்வ் திஸ்" என்று சொல்ல திவேஸுக்கு இரண்டு வித உணர்வு. 'இந்தக் காதல் எப்பயும் இப்படி தான் போல? தர விருப்பமுள்ளவங்களை நோக்கி செல்லாமல் வேண்டாம் என்று ஒதுங்கிச் செல்பவர்களையே தான் தேடிப் போகும் போல' என்று வருந்தியவன் கூடவே அனேஷியாவை இப்படி பார்க்கவே மனமில்லாமல் வருந்தினான். ஆம் அவர்களுக்கு தெரிந்து அவள் அழுததில்லை.பழகுவதற்கு இனிமையானவள், பிடிவாதக்காரியும் கூட. ஆனால் எந்த சூழலிலும் அவளை போல்டாக காட்டிக்கொள்ளத் தான் விரும்புவாள். இன்று மொத்தமாக இப்படி மாறியிருப்பது அவனுக்கு அதிர்ச்சியே.

"என்னால முடியல யாழ். அம்மா இறந்து ரெண்டு வருஷம் ஆகுது. இந்த ரெண்டு வருஷமா என் அம்மா என்கிட்டே அந்த இறுதி நொடிகள்ல என் கையைப் பிடிச்சு கேட்டதைச் செய்ய முடியாம நான் ரொம்ப குற்றயுணர்ச்சியில இருக்கேன். ஏற்கனவே நான் அவனுக்கு நிறைய கெடுதல் செஞ்சிட்டேன்.என்னை அவன் பார்க்கக் கூட தயாரா இல்லை தானே?" என்று கேவினாள்.

"அப்படியெல்லாம் இல்ல அனி. துஷியும் விவானும் போயிருக்காங்க. கண்டிப்பா பேசுவான்" என்று ஆறுதல் செய்த யாழை எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்த்தனர். அவர்கள் பேசுவதில் சிலது புரிந்தாலும் எல்லோரும் இன்னும் குழம்ப,"யாழ் என்ன நடக்குது இங்க? கலெக்டர் சார் நீங்களாச்சும் சொல்லுங்க" என்றான் ஹேமா.

"அனி உனக்கு ஏற்கனவே விவானைத் தெரியுமா?" என்று சற்று அதிர்ந்து கேட்டாள் நித்யா. ஏனோ நித்யாவை எதிர்கொள்ள தயங்கினாள் அனேஷியா. பின்னே இரண்டரை நாட்கள் அவளோடு எவ்வளவு நட்பு பாராட்டினாள். ஏதோ ஒரு விதத்தில் அவை எல்லாம் நடிப்போ பொய்யோ என்று நித்யாவிற்குத் தோன்றியதால் இந்த அதிர்ச்சி அவளுக்குப் பெரியதாக இருந்தது.கூடவே விவான் மீது ஒரு கோவமும் வந்தது. தன்னிடமிருந்து எதையும் மறைக்காதவன் இதை எப்படி மறைத்தான்? ஏன் விவான் அவ்வளவு ஸ்ட்ரெஸ்டா இருந்தான் என்று இப்போது தான் அவளுக்குப் புரிந்தது. அன்று ட்ரைனில் இருமுறை கேட்டும் சொல்லாதவனை நினைத்து கோவம் கொண்டாள்.

நித்யாவுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழித்தாள். ஆனால் அவள் நார்மலாக இல்லை என்று அறிந்ததும் மெதுவாகத் தன் தலையை ஆட்டியவள்,"விவான், துவாரா, திவேஷ், யாழ், துஷி, நான் எல்லாம் ஒரே ஸ்கூலில் படித்தவர்கள். ஒரே கேங்" என்றதும் மற்றவர்களும் அதிர்ந்தனர். விவான் என்று இல்லை யாழும் துஷியும் கூட அனேஷியாவை ஏற்கனவே தெரிந்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லையே?

அதற்குள் அங்கே அடிக்கும் சப்தம் கேட்டு எல்லோரும் அங்கே விரைந்தனர். என்ன நடந்தது என்றால் கோவமாக எழுந்துச் சென்ற துவாராவை சமாதானம் செய்ய விவான், துஷி இருவரும் செல்ல அவர்களை உதாசீனம் செய்தவன் முன்னே நடந்தான். விவானும் துஷியும் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் கையைப்பிடித்து நிற்க வைக்க அதீத கோவம் கொண்டவன் கையை உருவ முயல போராடி கையை விலக்க மீண்டும் பிடித்த துஷியை உதறி அவன் கன்னத்தில் இரண்டு அறைந்தான். அந்த சப்தம் கேட்டு தான் எல்லோரும் அங்கே விரைந்தனர்.

"டேய் துவாரா இப்போ எதுக்கு அவனை அடிக்குற?" என்றான் விவான்.

"எனக்கு இருக்குற கோவத்துக்கு அவனை இல்ல உங்க எல்லோரையும் கன்னம் பழுக்குற வரை அறையணும்னு தோணுது. விடுங்க" என்றான்.

"டேய் துவாரா நில்லுடா நில்லுடா" என்னும் போது எல்லோரும் அங்கே கூடிவிட்டனர். இப்போது இன்னும் கோவம் கொண்டவன்,"விவான் என்னை விடு நான் செம கோவத்துல இருக்கேன். நீ கூப்பிட்டேன்னு நம்பி தானே வந்தேன்? இப்படி அவ கூட கூட்டுசேர்ந்து சதி பண்ணியிருக்க? வெட்கமா இல்ல? நான் எதையும் பேச விரும்பல போயிடு" என்று மீண்டும் செல்ல முற்பட இம்முறை பலமாக அவனைப் பிடித்து நிறுத்த, நிமிர்ந்து அவனை முறைத்தான் துவாரா."ஒழுங்கா என் கையை விடு. என் பொறுமைக்கு ஒரு அளவு இருக்கு" என்று எச்சரித்தான் துவாரா,

"அப்படியெல்லாம் விட முடியாது" என்று முடிப்பதற்குள் கையை உருவியவன் விவான் கன்னத்தில் மாறி மாறி நான்கு அறைகளை வைக்க எல்லோரும் அதிர்ந்து அவர்களை நெருங்க அதற்குள் நித்யாவின் கை துவாராவை அடிக்க ஓங்கப்பட அதைப் பிடித்திருந்தான் விவான்."அவனை எதுக்கு நித்யா அடிக்க வர? போ" என்றவன் துவாராவை நோக்கி,"இப்போ என்ன உனக்கு என் மேல கோவம்? ஓகே அடி" என்று நிற்க கோவமாய் துவாரா கையை ஓங்க மீண்டும் நித்யா தடுக்க வருவதற்குள், "உனக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாதா நித்யா? இது எங்க பிரச்சனை நாங்க பார்த்துப்போம். போ இங்கேயிருந்து" என்றான் காட்டமாக.

"அவன் உன்னை அடிக்கிறான், நான் கேட்பேன்" என்று நித்யா மீண்டும் கோவமாகவே பதில் சொல்ல,"அவன் என்னை அடிப்பான். அதைக் கேட்க யாருக்கும் உரிமை இல்ல" என்றவன் கோவத்தில்,"உன்னை எனக்கு எட்டு வருஷமா தான் தெரியும். இவனை எனக்கு இருவது வருஷமா தெரியும். உன் வேலையைப் பார்த்திட்டு கிளம்பு" என்று சொன்னதும் அவமானமாக உணர்ந்தவள்,"அப்படியா? கிளம்பறேன்" என்று அங்கிருந்து கிளம்பினாள்.

"நீ ஏன்டா நிக்கற? வா வந்து அடி. வா" என்று விவான் துவாராவை அழைக்க அவனை அணைத்தவன்,"ப்ளீஸ் டா மச்சான் என்னை விடு. நான் கிளம்பறேன். போய் நித்யாவை சமாதானம் செய். நான் ஊருக்குப் போறேன்" என்றான் சற்று தணிந்த குரலில்.

அங்கே கோவமாக சென்ற நித்யாவை பெண்கள் நிறுத்தி,"அக்கா ப்ளீஸ் இப்படி கோவப் படாதீங்க. என்ன ஏதுன்னு நமக்கு எதுவும் தெரியாது. அண்ட் அவங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ப்ளீஸ்" என்று சொல்ல நித்யாவிற்கு அது புரிந்தாலும் அவன் இறுதியாகச் சொன்ன,"உன்னை எனக்கு எட்டு வருஷமா தான் தெரியும்..." என்ற வார்த்தைகள் தான் அவளை அதிகம் காயப்படுத்தியது.

"நீங்க வாங்க வாங்க" என்று அவளை டெண்டினுள் அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

அங்கே அனேஷியாவோ தன்னால் நித்யா விவானுக்கு இடையில் சண்டை வந்ததை நினைத்து இன்னும் கேவ, யாழ் திவே இருவரும் ஆறுதல் செய்தனர். அனிக்கு இப்போது 'அந்த' விஷயம் கண்முன் தோன்ற இன்னும் அழுதாள்."நான் போறேன்" என்ற துவாராவின் வார்த்தைகள் அவள் காதில் ஒலிக்க,"இல்ல யாழ் நீங்க எல்லோரும் இருந்து டூரை முடிச்சிட்டு வாங்க நான் கிளம்பறேன்" என்றாள் அனேஷியா.

சாதரணப் பிரச்சனை என்று நினைத்துகொண்டிருந்த மற்ற எல்லோரும் இந்த களேபரங்களால் உண்மையில் கதிகலங்கினார்கள். விவான் துவாராவிற்குள் அவர்களுக்குத் தெரிந்து காலேஜில் எப்போதும் சண்டை வந்ததில்லை. விவானும் ஜாலி டைப் தான் துவாராவும் ஜாலி டைப் தான். அப்படியே ஏதேனும் சண்டை வந்தாலும் நிச்சயம் விவான் தான் கோவபடுவானே ஒழிய துவாரா கோவப்பட்டதே இல்லை.அதனால் இன்று துவாரா விவானை அறைந்தது எல்லோருக்கும் பீதியைக் கிளப்பியது. அன்று ட்ரையினில் அத்தனை நபர்கள் முன் விவான் துவாராவை அடித்த போதுகூட பதிலுக்கு துவாரா அடிக்கவில்லை. ஏன் தடுக்கக் கூட முயற்சிக்க வில்லை. ஆனால் இன்று அவன் கோவம் எல்லோருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

"நீயேன் அனி போகணும்? நீ உன் வேலையைப் பாரு. அவன் அவன் வேலையைப் பார்க்கட்டும்" என்றாள் யாழ்.

"ஸ்கூல்ல நீதானே அவனை நம்ம கேங்ல சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்ட? உனக்குத் தானே அவனைக் கண்டாலே பிடிக்காது? உன் கிட்ட பேச எத்தனை முறை அவன் உன்னைத் தேடித் தேடி வந்திருப்பான்? நீ அவனைக் கண்டுக்காமல் போகும் போதெல்லாம் கூட அவன் உன்னையே தேடி வருவான் தானே?" என்று யாழ் வினவ,

"அன்னைக்கு ட்ரெக்கிங் (மலை ஏறுதல். ஒரு வகை போட்டி ஹாபி போன்றது) அப்போ அவனை எப்படி அலையவிட்ட?" என்று யாழ் அவள் செய்ததையெல்லாம் நினைவு படுத்தினாள். "அப்படி என்னடி உனக்கு அவன் மேல காண்டு?" என்றாள்.

தனியாகச் சென்று அமர்ந்த நித்யா சற்று ஆசுவாசம் அடைந்து வெளியே வர எல்லோரும் யாழ் சொன்னதை எல்லாம் கேட்டனர். அவர்களின் யூகம் ஊர்ஜிதமானது. எல்லோரும் ஸ்கூல் மேட்ஸ் என்றும் புரிந்தது.

"ஏன்னா அவன் என் அத்தை பையன்" என்றாள். இது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சி. அதிலும் குறிப்பாக யாழ் மற்றும் திவேஸுக்கும் பேரதிர்ச்சி. இப்போது தங்கள் பள்ளி வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் யாழும் திவேஸும் நினைத்துப் பார்த்தனர்.

"அதெல்லாம் உன்னை அனுப்ப முடியாது துவாரா. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள? அவ உன் மாமா பொண்ணு தானே?" என்றான் விவான்.

'உனக்குத் தெரியுமா?' என்ற பார்வையைப் பார்த்தான் துவாரா.

ஸ்கூல் முடிக்கும் வரை ஏன் கல்லூரி முடிக்கும் வரை துவாராவிற்கு அனேஷியா என்றாலே நெஞ்சில் இதமாகவே தென்றல் வீசும். முதலில் யாரென்று தெரியாமல் தான் அவள் மீது ஆசை கொண்டான். பின்பு தான் அவள் தன்னுடைய மாமன் மகள் என்று அறிந்தவன் இதன் மூலமாவது பிரிந்து சென்ற தன்னுடைய அன்னையின் குடும்பத்தோடு ஒன்று சேர முடியுமா என்று நப்பாசை கொண்டான்.( இதெல்லாம் நடக்கும் போது துவாரா தன்னுடைய அப்பாவை அதிகம் வெறுத்தான் என்று நினைவு படுத்தவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்!). உண்மையில் இவன் தந்தை மீது இவனுக்கிருந்த கோவம் வெறுப்பாக மாறக்காரணம் அனேஷியா தான்.

ஒவ்வொரு முறை அனேஷியாவை நெருங்கி பேச நினைக்கும் போதெல்லாம் நெருப்பைப் போல அவனுள் கனலைக் கக்கி அவனுக்கு காயம் ஏற்படுத்துவாள். ஆனால் அவள் ஒவ்வொரு முறை அவனை அவமானப் படுத்தியும் மீண்டும் அவள் முன் சென்று நிற்பவனைப் பார்த்து,"உனக்கெல்லாம் கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லையா? என்பாள். "உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மான அவமானமே இல்லையா?" என்று கேட்கும் போதெல்லாம் கூட ஏதோ கோவத்தில் சொல்கிறாள் என்று தான் நினைத்தான். 'ஆனால் என்று அவள் அத்தனை பேர் முன்னிலையில் தன்னை தன்னை' என்று அதை நினைக்கவே அவனுக்கு மனமில்லை. அப்போது தான் ஒன்று அவனுக்கு நன்கு புரிந்தது. அவள் இதுவரை சொன்னதெல்லாம் வெறும் வாய் வார்த்தையாகச் சொல்ல வில்லை என்றும் எல்லாம் மனதால் சொல்லியிருக்கிறாள் என்றும் புரிய அவள் தந்த வலி, அவமானம் எல்லாம் அவனை அதிகம் பாதிக்கிறது. ஆனால் 'அந்தச்' சம்பவம் உண்மையிலே அவளின் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் அனிச்சையாக நடந்தது என்று இதுவரை அவன் அறியவில்லை.மேலும் அது வேறொருவருக்காகச் செய்யப்பட்டதில் அவன் வந்து மாட்டிக்கொண்டான் என்றும் அவன் அறியவில்லை.

அப்போது நித்யா மற்றும் அனைத்து பெண்களும் அங்கே அனேஷியாவைத் தேடி வர யாழ் எல்லோரையும் ஒரு வித தர்ம சங்கடத்துடன் பார்த்தாள். பின்னே ட்ரைனில் அன்று ஏறியதுமே அவள் முதலில் கண்டது என்னவோ அனேஷியாவைத் தான். பேச ஆரமிக்க சென்றவளை துஷி கிள்ளி தடுத்துவிட பின்பு தான் அன்று பாய்ஸ் எல்லோரையும் கலாய்த்து அவரவர் ஜோடிகளுடன் சண்டை ஏற்படுத்தினாள்.யாழோ இப்போது திருதிருவென விழிக்க நித்யாவோ அனேஷியாவைத் தான் முறைத்தாள்.

இதி, பாரு இருவரும் ஏற்கனவே அனேஷியா மீதும் யாழ் மீதும் சற்று அதிருப்தியில் தான் இருந்தனர்.(ஜிட்டுவை அன்று அனி அடித்ததால் இதியும், தனக்கும் இளங்கோக்கும் சண்டை மூட்டியதால் யாழ் மீது பாருவும் கொஞ்சம் கோவமாக இருக்க) இன்று அந்தக் கோவத்தோடு இதுவும், அதாவது தங்களிடம் உண்மையை மறைத்து நாடகமாடியதால் இரட்டிப்பு கோபத்துடன் கூடவே நித்யாவை இன்று மனமுடைய செய்ததும் அவர்களுக்கும் அதிக கோவத்தைத் தந்தது.அந்தளவுக்கு இதி மற்றும் பாரு இருவருக்கும் நித்யா பேவோரைட் ஆகியிருந்தாள். இதி ஏற்கனவே நித்யாவின் தூரத்து உறவாக இருந்தாலும் இப்போது நட்பு வட்டத்திற்குள் வந்திருந்தாள்.

"என்ன பெர்பார்மென்ஸ்? என்ன தத்ரூபம்? நடிகர்கள் எல்லாம் உங்ககிட்ட வந்து நடிப்பைக் கத்துக்கணும் போல. பேஷ் பேஷ்" என்றாள் இதி.

"ஒரு டைரக்டர் வந்து கோ ஆர்டினேட் பண்ணியிருந்தால் கூட இவ்வளவு பர்பெக்ட்டா இருந்திருக்காது. சொல்லுங்க எதுக்கு இந்த ட்ராமா?" என்றாள் பாரு.

யாழுக்கு அவர்கள் இப்படிப் பேசுவது எரிச்சல் கூடவே வருத்தம் இரண்டும் தந்தது. மிரு சித்தாரா ஏன் ஹேமா, இளங்கோ, ஜிட்டு, விவி, செபா என்று யாரும் தங்களுக்கு ஆதரவாகப் பேசாமல் அதே கேள்விக்கான பதிலை வேண்டி நிற்பதைப் போல் தான் யாழ் மற்றும் திவேஸுக்குத் தெரிந்தது.

"ட்ராமா போடணும்னு எல்லாம் நான் நினைக்கல. ஆக்சுவல்லி பிளான் சொதப்பிடுச்சி" என்றாள் யாழ்.

பெனாசிர், ரேஷா, லோகேஷ், இஸ்மாயில் கூட மெளனமாக அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

"சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க? பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" என்று பாட்ஷா ஸ்டைலில் ஜிட்டு கேட்க எல்லோரும் அவனை ஒருசேர முறைத்தனர்.

அவர்களுக்கு வேண்டிய பதிலைச் சொல்ல வாய் மொழிந்தாள் யாழினி.(பயணங்கள் முடிவதில்லை!)
 
துவாவின் ஆக்ரோஷம்....
துஷி, விவான் மீது...அறையாக மாறுகிறது...
நட்புகளுக்கிடையே குழப்பம், அதிர்ச்சி
அனி, அப்படி என்னதான் செய்தாள் , சொன்னாள் ...????
ஆவலுடன் அடுத்த பதிவிற்காக
 
அனு விஷயத்தில் தன் அப்பா மீது தவறிருப்பதாக நினைத்திருக்கிறான் துவாரா, அப்பா செய்த தவறை தான் சரி செய்ய நினைத்து அனுவை அணுகியிருக்கிறான்...
அப்போ துவாராவை புரிந்து கொள்ளாத அனுவிற்கு இப்போ புரிகிறது...?‍♀️
துவாரா அவன் அப்பாவை வெறுக்க, முக்கிய காரணமா அனு இருந்திருப்பாளோன்னு தோணுது ?
எல்லாம் என் கெஸ்தான் ?
அனு அப்படி என்னதான் செய்திருப்பா? ? nice update.
 
அச்சோ டென்ஷன் ஏத்துறீங்க ரைட்டர் ஜி அப்படி என்ன தான் நடந்தது அனி துவாக்கு நடுவுல....
'அந்த'சம்பவம் என்னனு தெரிஞ்சுக்க ரொம்ப ரொம்ப ஆவலுடன்.....
 
துவாவின் ஆக்ரோஷம்....
துஷி, விவான் மீது...அறையாக மாறுகிறது...
நட்புகளுக்கிடையே குழப்பம், அதிர்ச்சி
அனி, அப்படி என்னதான் செய்தாள் , சொன்னாள் ...????
ஆவலுடன் அடுத்த பதிவிற்காக
solren wait ... thank you??
 
அனு விஷயத்தில் தன் அப்பா மீது தவறிருப்பதாக நினைத்திருக்கிறான் துவாரா, அப்பா செய்த தவறை தான் சரி செய்ய நினைத்து அனுவை அணுகியிருக்கிறான்...
அப்போ துவாராவை புரிந்து கொள்ளாத அனுவிற்கு இப்போ புரிகிறது...?‍♀️
துவாரா அவன் அப்பாவை வெறுக்க, முக்கிய காரணமா அனு இருந்திருப்பாளோன்னு தோணுது ?
எல்லாம் என் கெஸ்தான் ?
அனு அப்படி என்னதான் செய்திருப்பா? ? nice update.
of course anu is the reason behind dhuvara's attitude towards his father...solren??
 
Top