Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-54(2)

Advertisement

praveenraj

Well-known member
Member
இதெல்லாம் நடந்து முடிந்து,விவான் ஓய்வுக்காக நித்யாவோடு டூர் போகலாம் என்று முடிவெடுக் அது அப்படியே ஆட்களைச் சேர்க்க அன்றைய அனேஷியாவின் அழைப்பும் அதற்கு வலுசேர்த்தது. சொல்லப்போனால் விவான் தன்னுடைய திருமணத்திற்குக் கூட அனேஷியாவை முறையாக அழைக்கவில்லை. ஜஸ்ட் மெசேஜ் மட்டும் செய்தான். அப்போதும் தன்னைத் தொடர்ப்புக்கொள்ளாதவள் அன்று திடீரென்று அழைத்தது விவானுக்கே ஆச்சரியம். கல்லூரி சேர்ந்ததும் திவேஷ் ஒருநாள் விவான் துவாராவை அழைத்துப் பேச அவனையும் தங்களோடு சேர்த்துக்கொண்டனர். ஆக அனேஷியாவை விட்டது தொல்லை என்று நினைக்கும் போது தான் அனேஷியா துவாராவை சந்திக்க வேண்டுமென்று சொல்ல கோவத்தில் விவான் கண்டபடி திட்டி வைத்துவிட்டான். ஆனால் விடாமல் அழைத்து தொந்தரவு செய்ய வேறு வழியின்றி யாழ் மற்றும் துஷியிடம் நடந்ததைச் சொல்லி அதன் பின் தான் இந்த நாடகம் அரங்கேறியது.

அவர்கள் நால்வரும் (திவேஷும் இவர்கள் அணியில் சேர்த்துவிட்டான்) எதற்காக அவள் துவாராவை சந்திக்க விரும்புவதாகக் கேட்க, அவனிடம் மன்னிப்பு வேண்டும் என்றும் அதுவே தன் தாயின் இறுதி ஆசை என்றும் பேச மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டனர்.பின்னே துவாரா விஷயத்தில் மட்டும் தான் அவள் அப்படி நடந்துகொண்டாள். மற்றபடி அவர்கள் எல்லோருக்கும் அவள் என்றும் பழைய அனேஷியாவாகவே இருந்தாள். விவான் இதற்கு சம்மதித்ததற்கு ஒரே காரணம் சமீப காலங்களாக துவாராவின் நடவடிக்கை சரி இல்லை என்பதும் ஒருவேளை அவன் மனதில் இன்னும் அனேஷியா இருப்பதால் தான் அவன் இப்படி இருக்கிறானோ என்றும் யோசித்து அவள் திட்டத்திற்கு
சம்மதித்தான். துஷியின் மூலமாக கீர்த்தி விஷயம் அறிந்து இது நடக்கவே கூடாது என்று தான் சரித்திராவை அனுப்பினாள்.

அனேஷியாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் அவள் அன்னை தான். கல்லூரி யூஜியை தன் வீட்டிலிருந்து டேஸ்காலராக
தொடர அன்னையின் எண்ணமும் அன்பும் ஓரளவுக்கு அவளுக்குப் புரிந்தது. எப்போதும் தந்தையுடன் சேர்ந்து அன்னையை மட்டம் தட்டுவதும் கிண்டல் செய்வதுமாகவே இருந்தவளுக்கு கொஞ்சம் அன்னையின் வார்த்தைகளையும் கேட்க ஆரமித்தாள். யூஜி முடியும் வரையில் திரும்ப துவாராவை சந்திக்க அவள் விரும்பவில்லை ஆனால் பிஜி படிக்கும் போது அன்னையுடன் அதிகம் ஒன்றியிருந்தாள். அவரின் வார்த்தைகளில் உள்ள நியாயம் புரிய ஆரமித்தது. அவள் செய்த செயல்களை நினைக்கையில் அவளுக்கே தப்பாக இருக்க, துவாராவின் மீது அத்தனை வெறுப்பைக் காட்டியிருக்கக் கூடாதோ என்று யோசிக்கும் வேளையில் தான் அவளையே அறியாமல் அவனுக்கு ஆறா வடு ஒன்று கொடுத்தாள்.

அனேஷியா பிஜி முடித்து பிஎச்டி போட்ட அதே பல்கலைக்கழகத்தில் தான்
கீர்த்தி மற்றும் சரித்திரா யூ.ஜி படித்தனர்.கீர்த்தியைப் பார்க்க வந்தவன் கண்களில் அன்று ஏன் அனேஷியா தென்பட்டால் ?அவன் ஏன் அனேஷியாவைப் பார்த்ததும் அப்படித் துள்ளி குதித்து ஓடினான்?அதே கல்லூரியில் படிக்கும் ஒருவன் ஏன் அனேஷியாவைக் காதலிப்பதாகச்சொல்லி டார்ச்சர் தர வேண்டும்? தினமும் தன் பின்னாலே வருபவனுக்கு அன்று ஏன் அனேஷியா பாடம் புகட்ட நினைக்க வேண்டும்? தன்னை நெருங்கியவனை எதற்கு அனேஷியா தன் காலில் இருந்த செருப்பைக் கழட்டி திரும்பி அவனை அடிக்க வேண்டும்?அதுவரை அனேஷியாவைப் பின்தொடந்தவன் அப்போது விலகி ஏன் இடையில் துவாரா நுழையவேண்டும்? ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முடிந்து கேம்பஸில் இருக்கும் போது ஏன் இது நடக்கவேண்டும்? தன் அண்ணனைத் தேடி சரித்திராவுடன் வெளிய வந்த கீர்த்தியின் கண்களிலும் ஏன் இது விழ வேண்டும்? ஆயிரம் நபர்கள் இருக்கும் இடத்தில் தான் ஒருவன் மட்டும் ஏன் நிர்வாணமாக இருப்பதைப் போல் துவாராவிற்குத் தோன்ற வேண்டும்? இதற்கு பெயர் தான் விதியோ?

இது தான் நீங்கள் இவ்வளவு நாளாக எதிர்பார்த்த 'அந்த' சம்பவம் . (பயணங்கள் முடிவதில்லை )
 
அந்த சம்பவத்தை, கேள்விகள் மூலமாவே
விளக்கிட்டீங்க....
தூவாவிடம் தான் நடந்து கொண்ட முறை தவறென்று உணர்ந்த போது..
அறியாமல் செய்த தவறு, மிகப் பெரிய தவறாகிவிட்டது...
காலம் முழுவதும், அவளைத் தொடரப் போகும் குற்ற உணர்வு....தான்
அவளுக்கான தண்டனை....
துவா மன்னித்தாலும சரி, மறந்தாலும் சரி....

கீர்த்தி, தன் அண்ணனை விட தெளிவு....
தன் அம்மா குடும்பத்தோடு இணைய முடியாதென்பதை புரிந்துக் கொள்கிறாள்,,
அவள், அனியை வெறுக்க, இந்த சம்பவம் தான் காரணமோ,,?

இத்தனை compications இடையே வளர்ந்தாலும்,
துவா மனபலம் உடையவனாத்தான் இருக்கிறான்
 
இப்படி சம்பவத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை சகோ ??
இவ்வளவு நடந்தும் துவா அனுவை ஒன்றும் செய்யாமல் விட்டாதே பெரிய விஷயம்.?
Nice update.
 
Last edited:
அந்த சம்பவத்தை, கேள்விகள் மூலமாவே
விளக்கிட்டீங்க....
தூவாவிடம் தான் நடந்து கொண்ட முறை தவறென்று உணர்ந்த போது..
அறியாமல் செய்த தவறு, மிகப் பெரிய தவறாகிவிட்டது...
காலம் முழுவதும், அவளைத் தொடரப் போகும் குற்ற உணர்வு....தான்
அவளுக்கான தண்டனை....
துவா மன்னித்தாலும சரி, மறந்தாலும் சரி....

கீர்த்தி, தன் அண்ணனை விட தெளிவு....
தன் அம்மா குடும்பத்தோடு இணைய முடியாதென்பதை புரிந்துக் கொள்கிறாள்,,
அவள், அனியை வெறுக்க, இந்த சம்பவம் தான் காரணமோ,,?

இத்தனை compications இடையே வளர்ந்தாலும்,
துவா மனபலம் உடையவனாத்தான் இருக்கிறான்
நான் அதை விளக்க விரும்பவில்லை அதான்! அனேஷியா தெரிந்து அதை செய்யவில்லை. கண்டிப்பா அது தான் தண்டனை. எஸ் அவளும் அதைக் கண்டாலே? அதனால் தான் துவா இந்தக் கதையின் அடிநாதம். அவன் தான் இந்தக் கதையையும் பயணத்தையும் உருவாக்க காரணமாக இருக்கிறான். நன்றி??
 
இப்படி சம்பவத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை சகோ ??
இவ்வளவு நடந்தும் துவா அனுவை ஒன்றும் செய்யாமல் விட்டாதே பெரிய விஷயம்.?
Nice update.
சில விஷயங்கள் அப்படித்தான். இதான் இந்தக் கதையோட ஒன் லைனே. இதை டெவெலப் செய்து தான் இந்த 'நட்பென்னும் முடிவியில்' பயணத்தை எழுத ஆரமித்தேன். நன்றி??
 
இது ரெண்டு பேருக்குமே என்றைக்கும் மாறாத வடுவாக நெஞ்சில் இருக்கும்...... அவமானமாகவும்........ குற்ற உணர்ச்சியாகவும்........ :( :( :(
 
இது ரெண்டு பேருக்குமே என்றைக்கும் மாறாத வடுவாக நெஞ்சில் இருக்கும்...... அவமானமாகவும்........ குற்ற உணர்ச்சியாகவும்........ :( :( :(
நிச்சயமாக. அதான் அனேஷியாவை துவாராவுக்கு ஜோடியா போடல. ஏன்னா ஆரம்பத்துல இவங்க ரெண்டு பேரும் தான் ஜோடியா நெனச்சு வெச்சியிருந்தேன். அப்புறோம் யோசிக்கும் போது இது நடைமுறையில் சாத்தியமில்லைனு தெரிஞ்சு சரித்திராவை உள்ளே கொண்டு வந்தேன். சரித்திரா கேரக்டர் அதனால் தான் சடனா உள்ள வந்திருக்கும்... நன்றி?? சோ மத்த ஜோடிகள் போல துவா- சரு ஜோடிக்கு அழுத்தமான காதல் காட்சிகள் இருக்காது...
 

Advertisement

Top