Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-61

Advertisement

praveenraj

Well-known member
Member
அஸ்ஸாமின் பாரம்பரிய உணவான கார் (khaar) எனப்படும் அசைவ உணவும், வாத்துக்கறியும் டேங்கி மீன் கறியும் இதர வித்தியாச அசைவ உணவுகளாகிய புறாக்கறி அதற்கு இணையான மூங்கில் தண்டு குழம்பு முதலிய சைவ உணவுகளும் தயாராக இருந்தது. பேம்பூ பிரியாணி (மூங்கிலில் வேகவைத்த பிரியாணி) சில நான் ரொட்டிகள் என்று அனைத்தையும் வரவழைத்திருந்தான் திவேஷ். கூடவே டெஸெர்ட்ஸ் எனப்படும் ஐஸ்க்ரீம், ஜூஸ் என்று சகலமும் அங்கே இருந்தது. சும்மாவே நம்ம பசங்க சாப்பாட்டு விஷயத்துல வெளுத்து வாங்குவார்கள். இப்போது சொல்லவா வேண்டும்? என்னமோ இன்றோடு உலகம் அழிந்துவிடுதைப்போலவும் இதுவே கடைசி வேளை உணவு என்பதைப்போலவும் எண்ணி, புகுந்து விளையாடினார்கள். அனேஷியா குழுவினர்கள் பயணங்கள் முடிவதில்லை குழுவினர்கள் என்று மொத்தம் இருபத்தி நான்கு நபர்கள் (இளாவையும் சேர்த்து) அந்தப் பெரிய மேஜையில் அமர்ந்து ஒரு கட்டு கட்டினார்கள். பாவம் அந்தக் கூட்டத்தில் நித்யா மட்டும் சைவமாகி மாட்டிக்கொண்டாள்! நித்யா சைவம் என்றாலும் இளாவை நான் வெஜ் சாப்பிடப் பழக்கியிருந்தான் விவான்.
"கலெக்டர் சார், நீங்க உண்மையிலே பெரிய மனுஷனு நிரூபிச்சுடீங்க போங்க. ராஜ உபசாரம் அப்படினா எப்படி இருக்கும்னு இன்னைக்கு இப்போ நல்லாவே கண்கூட பார்த்துட்டேன் போங்க. சபாஷ்" என்ற ஜிட்டன் அனைத்தயும் ஒரு பிடிப் பிடித்துக்கொண்டிருந்தான்.
"டேய் ஜிட்டா கொஞ்சமா சாப்பிடுடா அப்புறோம் வயிறு பலூன் மாதிரி உப்பி வெடிச்சிடப்போகுது" என்றான் ஹேமா.
"மச்சி ஏற்கனவே அவன் வயிறு வீங்கிப் போய்த் தான் இருக்கு. சோ அலெர்ட்டா இரு ஹேமா நீ தான் அவன் பக்கத்துல இருக்க" என்றான் இளங்கோ.
ஜிட்டு இதெதையும் காதிலே வாங்காமல் வந்த வேலையை செவ்வெனவே செய்துகொண்டிருந்தான்."மச்சி இப்போ என்ன பேசுனாலும் ஜிட்டு காதுல விழாது. அவன் சாப்பிடுறதுல தீவிரமா இறங்கிட்டான் போல" என்றான் விவான்.
எல்லோரும் அவர்கள் பேச்சில் கலகலத்தனர். அவனை வம்பிழுக்க முடிவுசெய்த தியா, "ஆமா இதி உனக்கு நான்-வெஜ் சமைக்கத் தெரியுமா?" என்றான்.
"ஐயோ காலேஜ் படிக்கும் வரை எனக்கு அந்த ஸ்மெல் கூட ஆகாது. ஆனா ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்த்து ஏமாத்தி சாப்பிட வெச்சுட்டாங்க. ஆனா சமைக்க எல்லாம் மாட்டேன்" என்றாள் இதி.
"கல்யாணத்துக்குப் பிறகு நாங்க வாரம் ஒரு ஹோட்டல்னு போய்க் கூடச் சாப்பிடுவோம்.உனக்கேன் அந்தக் கவலை? ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்டதாம். சோ நீ மூடிட்டு சாப்பிடு" என்றான் ஜிட்டு.
"லவ் யூ பேபி" என்றாள் இதி.
"எது பேபியா?" என்று திடீரென்று அதிர்ச்சியடைந்த செபாவைப் பார்த்து எல்லோரும் சிரித்தனர்.
"டேய் நீங்க எல்லோரும் அந்த ரைட்டர் கூட சேர்ந்து என்னை எவ்வளவு கலாய்ச்சி இருப்பீங்க. நீங்க என்னை கலாய்ச்சி கலாய்ச்சியே எனக்குன்னு ஒரு பேன்ஸ் க்ளப் உருவாக்கிக் கொடுத்திட்டிங்க. சோ அசாம் வர வரை இருந்த ஜிட்டு வேற இப்போ ரிட்டர்ன் போகும் போது இருக்கும் ஜிட்டு வேற. சீக்கிரம் என் மேரேஜ் இன்விடேஷனோட உங்க எல்லோரையும் மீட் பண்றேன் பாருங்க" என்று எள்ளலில் கொக்கரித்தான் ஜிட்டு. (மகனே பாவம் போனாப் போகுதுனு உனக்குக் கல்யாணம் பண்ணலாம்னு நெனச்சேன். நீ ஓவரா போறயே...)
எல்லோரும் பேசிக்கொண்டே சாப்பிட்டாலும் எல்லோருக்கும் இந்தப் பயணம் இவ்வளவு சீக்கிரத்தில் முடியப் போகிறதே என்ற கவலை மட்டும் குறையவேயில்லை. மற்ற நேரமாக இருந்திருந்தால் இப்போது ஜிட்டு பேசியப் பேச்சுக்கு ஆளாளுக்கு ரவுண்டு கட்டி கலாய்த்திருப்பார்கள். ஏனோ திங்கக்கிழமை பள்ளிக்குப் போகும் மாணவனுக்கு ஞாயிறு அன்றே ஒரு கிலி பிடிக்குமே? அதுபோல் நாளை பொழுது விடிந்தால் எல்லோரும் பேக் டு நார்மலுக்கு செல்லவேண்டியதை எண்ணி உள்ளுக்குள் வருந்தினர்.
"சரி சரி வரிசையா எல்லோரும் கல்யாணம் செய்யப் போறீங்கன்னு மட்டும் நல்லாவே தெரியுது. எதுவா இருந்தாலும் கொஞ்சம் கேப் விட்டுப் பண்ணுங்கப்பா. ஏற்கனவே நிறைய லீவ் எடுத்தாச்சு. அதனால் அடிக்கடி லீவ் எடுக்க முடியாது" என்று ஒரு தேர்ந்த எம்ப்லாய் போல் பேசினான் செபா.
"கரெக்ட்டா மச்சான். எல்லோரும் கொஞ்சம் கேப் விட்டுச் செய்யுங்கடா. ஆனா யாருது முதல நடக்கப் போகுது?" என்றான் இளங்கோ.
"ப்ரோ அநேகமா உங்களுதாகத் தான் இருக்கும்" என்று துஷியைச் சுட்டினான் ஜிட்டு.
சிறிது நேரம் அப்படியே பேசிக்கொண்டே அனைவரும் தங்கள் வயிற்றை நிரப்பினார்கள்.
"எல்லாம் ஓகேவா இருந்தது தானே? ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என்று உணவைப் பற்றிக் கேட்டான் திவேஷ்.
"ஐயோ அருமை என்ற வார்த்தை போதாது சார். எக்ஸ்ட்ராடினரி" என்றான் ஹேமா.
"ஓகே அனேஷியா நீங்க எப்போ ரிட்டர்ன்?" என்றான் தியா.
"நாங்க எல்லோரும் செவ்வாய்க்கிழமை கிளம்பிடுவோம். எங்க ஒர்க் அல்மோஸ்ட் முடிஞ்சது. அன்னைக்கு உங்கக் கூட வெளிய வராம இருந்திருந்தா இன்னைக்கு உங்கக் கூடவே நாங்களும் கிளம்பி இருப்போம். பட் நோ ப்ரப்ளேம்" என்றாள் அனேஷியா.
"என்ன இப்படிச் சொல்லிடீங்க? உங்களுக்கு வேணுனா ப்ரப்ளேம் இருக்காம இருக்கலாம். என் மச்சான் எப்படித் தவிக்கிறான்னு எனக்குத் தானே தெரியும்" என்று செபாவை வம்பிழுத்தான் தியா.
"கரெக்ட்டா சொன்ன தியா" என்று அவனுக்கு ஆதரவு கரம் நீட்டினாள் நித்யா.
"என்ன நித்யா பக்கத்து இலைக்குப் பாயாசமா?" என்றான் துவாரா அவளை வம்பிழுக்க.
"லைட்டா" என்று சொல்லிச் சிரித்தாள் நித்யா.
"என்னடா இளா குட்டி இங்கேயே இருக்கலாமா இல்ல ஊருக்குப் போலாமா ?" என்றான் துவாரா.
"ஊருக்குப் போலாம். பாட்டி தாத்தா தனியா இருக்காங்க" என்றாள் இளவேனில். ஏனோ அவளுக்கு உண்மையில் இவ்விடம் அலுத்துவிட்டது. திரும்பத் திரும்ப அதே ஜு பார்க் என்று சுற்றுவதாலோ இல்லை அங்கேயிங்கே என்று ட்ராவல் செய்து அவளை அலைக்கழிப்பதாலோ இல்லை உண்மையில் அவள் பாட்டி தாத்தாவின் நினைவு வந்தாலோ என்னவோ அவளை இம்முடிவு எடுக்கவைத்தது,
"அச்சச்சோ! இளா குட்டிக்கு அப்போ அசாம் பிடிக்கலையா?" என்றாள் மிரு.
"பிடிச்சிருக்கு. ஆனால் போதும்" என்றாள் அவள்.
"அப்புறோம் என்ன மச்சான்? அதான் உத்தரவு கிடைச்சிடுச்சி இல்ல? கிளம்பலாம்" என்றான் இளங்கோ.
இளாவைத் தன்னோடு தூக்கிக்கொண்ட திவேஷ்,"குட்டி நீங்க இங்கேயே இருக்கீங்களா? நாம் இங்கேயே இருக்கலாம். இங்கேயே உங்களை ஒரு ஸ்கூல்ல சேர்த்துவிடுறேன்" என்றதும் மாட்டேன் என்பது போல் தலையை அசைத்து விவானைத் திரும்பிப் பார்த்தாள் இளவேனில்.
"எப்போ ஸ்கூல் சேர்த்தப் போறீங்க?" என்றாள் பாரு.
"தெரியல. அம்மா தான் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லிட்டாங்க." என்றான் விவான்.
"மச்சி நம்ம ஸ்கூலேவா?" என்றாள் யாழ்.
விவான் பேசுவதற்குள் குறுக்கிட்ட நித்யா,"இல்ல. நாங்க ஓகே சொன்னாலும் மேடமோட தாத்தா பாட்டி விடமாட்டாங்க. அவங்களுக்கு அவங்க பையனையே கூட வெச்சு வளர்த்தவில்லைனு ஒரு ஏக்கம் இருக்காம். அதனால் இவளை அங்கே சேர்க்க விட மாட்டாங்க" என்றாள் நித்யா.
"என்னைக் கேட்டா ஹாஸ்டெல் தான் பெஸ்ட். ஆனா முடிவெடுக்க வேண்டியது நாங்க மட்டுமில்லை. அப்பாக்கு உடம்பு சரியில்லாம போனதுல இருந்து இவ தான் அவரோட ஒரே பொழுதுப்போக்கு. பார்ப்போம் இன்னும் மூணு முடியல. மேற்கொண்டு பேசிக்கலாம்" என்றான் விவான்.
தன்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று புரிந்தாலும் என்னவென்று புரியாமல் விழித்தாள் இளவேனில்.
"திவேஷ் ஆண்ட்டி அங்கிளை கேட்டதாச் சொல்லு. அக்காவையும் கேட்டதாச் சொல்லு. அக்காக்குப் பெண் குழந்தை தானே? அந்தக் குட்டிப் பாப்பாவையும் விசாரிச்சேனு சொல்லு" என்றாள் யாழ்.
யாழ் அப்படிச் சொன்னதும் துஷி, துவாரா, விவான், அனேஷியா என்று எல்லோரும் அதையே சொல்ல அப்போதே அவன் அன்னைக்கு வீடியோ கால் செய்தான் திவேஷ்.
காலை அவர் அட்டென்ட் செய்வதற்குள் அதை யாழ் பிடுங்கியிருக்க திடீரென ஒரு பெண்ணின் முகம் தோன்றியதும் அவன் அன்னை சற்று அதிர பின்பு யாழினியைக் கண்டுக்கொண்டவராய்ப் பேசினார். அதை அவர்கள் எல்லோரும் வாங்கிப் பேச இறுதியாக விவானிடம் பேசும் போது அவன் குழந்தையைக் காட்டச் சொன்னார். இளாவைப் பார்த்துப் பேசியவர்,"இவனுக்கும் கல்யாணம் பண்ணியிருந்தா இந்நேரம் குழந்தை இருந்திருக்கும்"என்றார். "உங்கப் பையனுக்கு விரைவில் விவாஹ பிராப்தி ஹஸ்து" என்று யாழ் சொல்ல அவரும் புன்னகைத்தார். பிறகு மற்றவர்கள் எல்லோரும் குழுவாக அமர்ந்து ஒரு ஹெலோ சொல்லிப் பேசிவிட்டு அந்த அழைப்பைத் துண்டித்தனர்.
பிறகு விவானின் தந்தையிடம் பேச எண்ணிய திவேஷுக்கு விவான் அழைக்க அவரோடு சற்று பேசி அவரின் உடல்நிலையை எல்லோரும் விசாரித்து மாலை கிளம்புவதாகவும் இரவு சென்னை வருவதாகவும் சொன்னார்கள். இளவேனில் தன் தாத்தா பாட்டியிடம் சற்று கதை பேசிவிட்டு வைத்தாள். யாழ், துஷி இருவருக்கும் இங்கிருந்து ஒடிஷாவுக்கு விமானம் மாலை ஆறு மணிக்கு தான் புக் செய்திருந்தனர். மணி இரண்டரையை நெருங்க எல்லோரையும் கிளம்பச் சொன்னான் திவேஷ்.
அவரவர் ட்ரோல்லி பேக், வாங்கியப் பரிசுகள் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு தாங்கள் இங்கே வந்ததும் தங்களை அழைக்க வந்த அதே மஹேந்திரா டெம்போவில் ஏறினார்கள். யாழ் மற்றும் துஷியும் ரெடி ஆனார்கள். துஷி ரேஷுவை அழைத்து ஒரு ஹக் கொடுத்தவன் விரைவில் இருவீட்டாரும் கலந்து பேசி முடிவெடுத்திப்பதைப் பற்றி சற்று பேசினார்கள்.
கிளம்பும் போது விவி வெகு சாதாரணமாய் சித்தாராவிடம்," பார்த்து இருந்துக்கோங்க. ஏதாவது என்றால் அனேஷியா மற்றும் திவேஷை தொடர்புக்கொள்ளுங்கள். துஷி மேரேஜுக்கு கண்டிப்பா வாங்க மீட் பண்ணலாம். பை டேக் கேர்" என்று சொல்லி விடைபெற்றான். சித்தாராவிற்கு இது ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிர்ச்சியாகவும் இருந்தது. எப்படி இவ்வளவு சாதரணமாக இவனால் இருக்க முடிகிறது என்று வியந்தாள். எதையுமே பேசிக்கொள்ளாமல் கண்களால் சிறிது பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் விவியன்.
செபாவும் ஜெஸ்ஸியை தனியே அழைத்தவன்,"பார்த்து பத்திரமா இரு ஜெஸ்ஸி. என் மேல உனக்கு எந்தக் கோவமும் இருக்காதுன்னு தான் நெனைக்கிறேன். அப்படியே ஏதாவது இருந்தா அதையெல்லாம் இங்கேயே விட்டுட்டு வந்திடு. ஐ வில் பி வெயிட்டிங் பார் யூ (உனக்கா நான் காத்திருப்பேன்) சோ கம் சூனேர்" என்றவன் அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அனேஷியாவைத் தனியே அழைத்த விவான் மற்றும் யாழ் இருவரும்,"இனிமேல் எதையும் போட்டுக் குழப்பிக்காம நிம்மதியா இரு அனி. எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சது. அண்ட் திவேஷை சீக்கிரம் கன்சிடர் பண்ணு. அவன் அம்மா சொன்னதை எல்லாம் கேட்டதானே? பாவம் அவங்க. உன் அப்பாவும் பாவம் தான். நல்ல முடிவா சீக்கிரம் சொல்லு. சிலரோட அன்பு கடைசி வரை தெரியாமலே இருந்திடும். எங்க திவேவோட நிலையும் அப்படியே ஆகிடுமோனு நான் ரொம்பவும் பயந்தேன். இப்போ அது உனக்கு தெரிஞ்சிடுச்சி. நல்ல முடிவெடு. அவ்வளவு தான்.அண்ட் வாழ்க்கையில இனி எப்பயும் எந்த ஒரு விஷயத்தையும் செய்யுறதுக்கு முன்னாடி ஒன்னுக்கு ரெண்டு முறை நல்லா யோசி. பின்விளைவுகளை நல்லா அனலைஸ் பண்ணு. உன் ப்ரொபெஸனே இது தான். பின்னாடி என்ன நடக்கும்னு டேடாஸ் வெச்சு பிரிடிக்ட் பண்ணனும். அந்த கேல்குலேஷன்ஸ் மிஸ் ஆனா தப்பில்லை ஆனா லைஃப் மிஸ் ஆகிடக் கூடாது. ஏன்னா துவாரா இடத்துல நான் இருந்திருந்தேனா கண்டிப்பா உனக்கு இந்த மன்னிப்பு கிடைச்சிருக்காது. காலத்துக்கும் நீ சித்திரவதை தான் அனுபவிச்சு இருக்கனும். சோ பி கேர்புல்" என்றான் விவான். ஏனோ விவான் இறுதியாகச் சொன்னது அனேஷியாவுக்கு ஒரு வித திகிலைத் தந்தது மட்டும் நிச்சயம்.
யாழும் தன் பங்கிற்கு இரத்தினச் சுருக்கமாய்,"எல்லோருக்கும் சந்தோசம் தரக்கூடிய ஒரு முடிவை சீக்கிரம் எடு. ஒரு தவறுல கிடைக்கும் பாடத்தை யூஸ் பண்ணனும். அதே தவறை ரிப்பீட் பண்ணக் கூடாது. அங்கிள கேட்டதாச் சொல்லு. பை " என்றாள். இருவருக்கும் சம்மதமாய்த் தலையசைத்தாள் அனேஷியா.
துஷியுடன் அங்கே வந்தான் துவாரா. திவேஷும் அங்கே வர எல்லோரும் அவர்களை ட்ரேட்மார்க் ஹக் செய்து விடைபெற்றனர். அவர்கள் எல்லோரும் வண்டி ஏற இளாவை எல்லோரும் வாங்கி கொஞ்சிவிட்டு அனுப்பினர். அந்த வண்டி அந்த ரிசார்ட்டில் இருந்து நகர்ந்ததும் ஏனோ அனேஷியா, ரேஷா, பெனாசிர், ஜெஸ்ஸி, லோகேஷ் இஸ்மாயில், சித்தாரா ஆகியோருக்கு ஒரு வெறுமை தோன்றியது மட்டும் நிச்சயம்.
விமானத்தில் ஏறியமர்ந்த அனைவருக்கும் கடந்த ஒன்பதரை நாட்களின் (முதல்நாள் மாலை சென்னை ரயில்நிலையத்தில் இருந்ததும் சேர்த்து) நினைவுகள் வந்து சென்றது. இதுபோலொரு நிலையை அங்கே எல்லோரும் பலமுறை தங்களின் வாழ்வில் அனுபவித்திருக்கிறார்கள் தான். ஆனாலும் முந்தைய நிகழ்வுகளான ஸ்கூல் பேர்வெல் காலேஜ் பேர்வெல் போலல்லாமல் ஒரு வித்தியாசமான அதே நேரம் மிகவும் உணர்வுபூர்வமாகவே தோன்றியது. இறுதியாக இதுபோல் நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி, உரையாடி, சிரித்து, மகிழ்ந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டது. நடுநடுவே பல முறை பல நிகழ்வுகளில் அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இருந்தாலும் இதுபோல் நீண்ட நாட்கள் அவர்கள் ஒன்றாக இருந்ததில்லை. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத சுவாரஸ்யத்தில் தான் எல்லோரும் வாழ்கிறார்கள். அதில் சுவாரஸ்யத்திற்குப் பதிலாக நிறைய கடமைகள், பொறுப்புகள் கடன், கல்யாணம், டார்கெட்ஸ் என்று நிறைந்திருக்கிறது. இந்தப் பயணத்தைத் திட்டமிடும் போதுகூட இதொரு மறக்கமுடியாத பயணமாக இருக்கப்போகிறதென்று யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. உண்மையில் இதற்கு முன்பு போடப்பட்ட பல திட்டங்களின் வழியில் இதுவும் ஏதாவதொரு ரூபத்தில் ஊத்திக்கும் (அதாவது தோல்வியைத் தழுவும்) என்று தான் நினைத்தனர். ஏனெனில் இடையில் விவானின் தந்தைக்கு மீண்டும் கொஞ்சம் உடல்நிலை குன்றிவிட,"நீங்கப் போயிட்டு வாங்க" என்று அவன் சொல்லியும் விட்டான். நிறைய நபர்கள் எஸ் நோ எஸ் என்று பல குழம்பமான பதில்களையே கொடுத்தனர். முன்பு சொன்னதைப் போல அன்று எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் ஏறும் வரை அவர்களில் அநேகப் பேருக்கும் இது வெற்றிகரமாக நடக்குமா என்ற ஐயம் இருந்தது உண்மை.
உண்மையில் அங்கே இருந்த பெண்மணிகளுக்கே இது மிகுந்த வருத்தமளிக்க ஆண்களின் நிலை இன்னும் மோசம். மிரு தவிர மற்ற பெண்கள் யாரும் இந்தக் கூட்டத்தில் நேரடித் தொடர்பு அற்றவர்களாச்சே? இப்போது நினைக்கையில் அந்த ரயில் பயணம் அவர்களுக்கு சுகமாய் இருந்தது. பின்ன நான்கரை முதல் ஐந்து மணிநேரத்தில் இந்த விமானப் பயணம் முடிந்துவிடுமே? அன்றும் இன்று போல் ஆகாய மார்கத்தையே தேர்ந்தெடுத்திருந்தால் அந்தப் பசுமையான, கலகலப்பான ரயில் பயண நினைவுகள் எதுவும் இருந்திருக்காதே?
துவாராவுக்கு இந்தப் பயணம் ஒரு வரம் போன்றது. அசாம் செல்லும் வரை அவனிடமிருந்த அந்த அவமான உணர்வு, குரோதம், தாழ்வு மனப்பான்மை , அவன் தந்தை மீதிருந்த தவறான அபிப்ராயம், திருமணம் பற்றிய அவனது கணிப்பு என்று அனைத்தும் இன்று மாறியிருந்தது. இங்கிருந்து செல்லும் வரை யாரென்று தெரியாத சரித்திரா அவனுக்கொரு ஒளிக்கீற்றாக மாறி இன்றோ ஒரு விடியலாகவே விளங்குகிறாள். யாரை இனி தன் வாழ்வில் சந்திக்கவே கூடாது என்று எண்ணினானோ அவளிடம் பேசிவிட்டு தானே திரும்புகிறான். அதும் அவளை மனதார மன்னித்து, அவள் மீதிருந்த கோவம், வன்மம் ஆகியவற்றை துறந்து மீண்டும் ஊருக்குத் திரும்புகிறான். அவன் அருகிலே அமர்ந்திருந்த விவியனோ வேறொரு உலகத்தில் இருந்தான். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டிருந்தாலும் மனம் அன்று ரயிலில் சித்தாராவைச் சந்தித்தது முதல் இறுதியாகப் பேசியது வரை அசைபோட்டுக்கொண்டிருந்தது.மீண்டும் அவன் ஐபாடை எடுத்தவன் அந்த,
"உன் பேரைச் சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ
ஒன்றா ரெண்டா ஒருகோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே?
சித்தாரா சித்தாரா சித்தா சித்தாரா சித்தாரா சித்தா...
சித்தாரா சித்தாரா சித்தா சித்தாரா சித்தாரா சித்தா..."
என்று ஒலிக்க அவனையும் அறியாமல் கண்கள் கண்ணீர் சிந்தியது. 'எந்த ஒரு உறவும் இல்லாமல் வாழ்வில் எவ்விதப் பிணைப்பும் இல்லாமல் இருந்த என்னை உன் காந்த கண்களால் இழுத்து என்னை உன்னோடு ஒட்டி, உன் அருகாமையை நன்கு அனுபவிக்கச் செய்து இப்போது மீண்டுமந்தப் பழைய வாழ்க்கைக்குச் செல்லச் சொல்கிறாயே? இது நியாயமா?' என்று அவன் மனம் அவளிடம் கேள்விக் கேட்டது. எந்த உறவையும் வற்புறுத்தி வாங்கக் கூடாது. அதும் காதலை காதலியை கூடவே கூடாது. அதனாலே அவளிடம் எதையும் வேண்டாமல் அதேநேரம் அவளை விட்டு விலகவும் செய்யாமல் ரொம்ப பார்மலாய் பேசிவிட்டு அங்கிருந்து அகன்றான் விவியன். அந்தப் பாடல் தந்த மயக்கத்தில் அப்படியே கண்களை மூடித் தூங்கினான். read 61(2)
 
Top