Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-62

Advertisement

praveenraj

Well-known member
Member
விமானத்திலிருந்து இறங்கி செக் அவுட் செய்து லக்கேஜ் எடுத்துக்கொண்டு விமானநிலைய முற்றத்திற்கு அவர்கள் வர மணி பத்தேகாலை நெருங்கியது. இளவேனிலுக்குத் தூக்கம் வரத் தொடங்க உடனே எல்லோரும் அங்கிருக்கும் உணவகத்திற்குச் சென்றனர்.உண்மையில் எல்லோருடைய முகத்திலும் சோகம் அப்பட்டமாக இருந்தது. தேஜாவு போல் எல்லோருக்கும் ஏதேதோ நினைவுகளைத் தந்து சென்றது. அன்றும் இதுபோல் அனைவரும் ஒன்றாக உணவு உண்டார்கள் தான். அது பயணத்தின் துவக்கத்தை எதிர்பார்த்து களிப்பு. இன்றோ பயணம் முடிந்ததன் களைப்பு. விமான நிலையத்தில் எத்தனை விதமான உணர்வுகளின் முரண்கள். டூர் முடிந்ததற்கான வருத்தத்தில் இவர்கள் வர எதிரே இவர்கள் வயதை ஒத்த சிலர் அன்று இவர்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் செய்ததைப் போல் 'ஓ' போட்டு உள்ளே சென்றார்கள். பிரிந்தவர்களைத் தேடிச் சிலர் பயணிக்க, பிடித்தவர்களைப் பிரிந்து சிலர் பயணித்தனர். வாழ்க்கை ஒரு வட்டம் தான் போலும். போனை சுவிட்ச் ஆன் செய்யவும் ஹேமாவின் பெற்றோர்கள் மௌனியை அழைக்க அதுபோல் ஜெஸ்ஸி, சரித்திரா, திவேஷ், அனேஷியா, விவானின் அன்னை என்று எல்லோரின் வீட்டிலிருந்தும் அவர்களுக்கு அழைப்பு வந்தது.

அதைப் பேசியபடியே அருகிலிருந்த உணவகத்திற்குள் நுழைந்தனர். யாருக்கும் பெருசாகப் பசிக்கவில்லை. மதியம் ஹெவியாக சாப்பிட்டது ஒரு காரணமாக இருந்தாலும் இன்னும் சற்று நேரத்தில் நிகழவிருக்கும் பிரிவை எண்ணி எல்லோரும் வருத்தத்தில் இருந்தனர்.

அதைக் கண்டு பொறுக்காத செபா," டேய் ஜிட்டு ஏன்டா இப்படி மௌன விரதம் இருக்க? ஏதாவது பேசேன். அப்போ தானே எங்களுக்கு ஏதாவது கன்டென்ட் கிடைக்கும்" என்று வலுக்கட்டாயமாக ஜிட்டுவை வம்பிழுத்தான்.

நீண்ட அமைதி நிலைக்க, "ஓகே கைஸ். எல்லோரையும் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துட்டேன். அதுக்கு எனக்கு ட்ரீட் ஏதுமில்லையா?" என்றான் விவான்.

"ஆமா நீ தான் பிளேன் ஓட்டிட்டு வந்தப் பாரு?" என்று தான் சும்மா இருந்தாலும் அவன் வாய் சும்மா இல்லாமல் உளற, அது தான் எல்லோர் முகத்திலும் புன்னகை வரவழைத்தது.

"அண்ணாஸ், உண்மையிலே இது என் லைஃப்ல ஒரு மறக்க முடியாத ட்ரிப். நான் இது மாதிரி எல்லாம் ஃப்ரண்ட்ஸோட எங்கேயும் போனதேயில்லை. இன் பேக்ட் பெங்களூர் தான் நான் முதன் முதலில் வெளியவே போனது. அப்புறோம் ஹேமா கூட நிறைய இடத்துக்குப் போனாலும் இது போல் ஒரு மனநிறைவான ஒரு ட்ரிப் என் வாழ்க்கையில நான் அனுபவிச்சதே இல்லை. ரொம்ப தேங்க்ஸ் அண்ணாஸ்" என்றாள் மௌனி.

"டேய் ஹேமா, உன்கிட்ட நான் வெக்குற ரெக்வஸ்ட்டாவே எடுத்துக்கோ, சீக்கிரம் மௌனியை மேரேஜ் பண்ணு. அவளும் இன்னும் எவ்வளவு நாள் தான் தனியாவே இருப்பாச் சொல்லு? இப்போ தான் ஜிம்மும் நல்லபடியாகப் போகுது. இன்னும் என்ன? ஹரிணிக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆகப் போகுது. இன்னும் ஏழெட்டு மாசத்துல மௌனியை கல்யாணம் பண்ற வேலையைப் பாரு" என்று உரிமையாக உத்தரவிட்டான் துவாரா.

"கண்டிப்பாடா. ஆக்சுவல்லி ஹரிணிக்கு தான் தள்ளிப் போயிட்டே இருந்தது. அம்மாக்கு அவளுக்கு முதல கல்யாணம் செஞ்சுட்டு பிறகு தான் எனக்குப் பண்ணனும்னு எண்ணம். இப்போ என்னோட முதல் வேலையே இன்னும் ரெண்டு மூணு மாசத்துல ஹரிணி கல்யாணத்தை முடிக்கணும். அதுக்கப்புறோம் ரெண்டு மாசத்துல எங்க மேரேஜ் நடக்கணும். அவ்வளவு தான்" என்றவன் பதிலை மௌனிக்கும் சேர்த்து உரைப்பதாகவே சொன்னான்.

"உன் சைட் ஆளா மேரேஜுக்கு வருவோமோ இல்லையோ மௌனி சைட் ஆளா நாங்க எல்லோரும் கண்டிப்பா இருப்போம். என்ன நித்யா நான் சொல்றது சரிதானே?" என்றாள் மிரு. "கண்டிப்பா கண்டிப்பா" என்று அவளுக்கு ஆமோதித்தாள் நித்யா.

"என்ன மௌனி நாளைக்கு ஆபிஸ்ல நாம மீட் பண்ணுவோமா?" என்ற செபாக்கு கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள் மௌனி.

"அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் மிரு. நீ எப்போ மேரேஜ் பண்ணப் போற?" என்றான் விவான் தியாவைப் பார்த்தபடியே,

"அது இனி என் கையில இல்ல விவா. நான் பேச வேண்டியதெல்லாம் பேசிட்டேன். இனி எல்லாம்..."என்று நிறுத்தினாள் மிரு.

"அண்ணன் கிட்டப் பேசிட்டேன் விவான். இன்னும் ஒரு வாரத்துல முறையா மிரு வீட்டுக்குப் போய்ப் பேசிட்டு எல்லோருக்கும் தகவல் சொல்றேன்" என்றான் தியானேஷ்.

"டேய் இதுல உன் அம்மாவை எப்படி கன்வீன்ஸ் செய்ய...?" என்று இழுத்தான் விவான். பின்னே அன்று அவன் அன்னை போட்ட ட்ராமாவை அவனும் தானே நன்கு அறிவான்?ஒரு டூருக்கே அந்த ட்ராமா போட்டவர்கள் கல்யாணத்திற்கு என்னவெல்ல செய்வார்கள் என்று நினைக்கவே விவானுக்கு மனம் ஒரு மாதிரி இருந்தது.

"இது என் லைஃப் விவான். எல்லாம் பிளான் பண்ணியாச்சு. நீ வீணாக் கவலைப் பட வேண்டாம். மிருவுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும், என் அம்மா சம்மதத்தோட. எனக்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடு மிரு" என்று முடித்தான். ஏனோ அவனின் அந்த நம்பிக்கை நிரம்பியப் பேச்சு எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது மட்டும் நிஜம்.

இப்போது மிருவுக்கு தான் ஆச்சரியம் பிடிப்படவில்லை. இவ்வளவு உறுதியாகச் சொல்கிறான் என்றால் நிச்சயம் ஏதோ திட்டம் தீட்டிவிட்டான் என்று அறிந்தாலும் அது என்னவாக இருக்கும் என்று யோசித்தாள்.

"என்ன இளங்கோ? உன் பொண்டாட்டியையும் குழந்தையையும் பத்திரமா ஊருக்குக் கூட்டிட்டு வந்துட்டேனா? எனக்கு அதுக்கெல்லாம் ட்ரீட் இல்லையா?" என்றாள் நித்யா.

"முதல உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் நித்யா. இந்த மாதிரியான ஒரு ஜர்னியை நாங்க மிஸ் பண்ணியிருப்போம். தேங்க்ஸ் உன்னால தான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சது" என்றான் இளங்கோ. பார்வதியும் இதுபோலெல்லாம் பெரிய நட்பு வட்டம் கொண்டப் பெண்ணில்லை. மேலும் அவள் ரொம்பவும் ரிசெர்வ் டைப். கிராமத்தில் அதும் நிறையக் கட்டுப்பாடுகளுடன் வளர்த்தப்பட்டப் பெண். இந்த சில வருடங்களில் தான் ஓரளவுக்கு விவரம் அறிவாள்.

"ரொம்ப தேங்க்ஸ் அக்கா. அண்ட் உங்க எல்லோருக்கும் ரொம்ப தேங்க்ஸ். இது மாதிரியெல்லாம் நான் எங்கேயும் போனதேயில்லை" என்று அவள் சொன்னதிலே அவளின் ஏக்கம் எல்லோருக்கும் புரிந்தது."அண்ட் ஜிட்டு அண்ணா, மிரு அக்கா விவான் அண்ணா எல்லோருக்கும் ரொம்ப தேங்க்ஸ்" என்று சொல்ல,

"போதும் போதும் நீ ஒவ்வொருத்தருடைய பேராச் சொல்லி தேங்க்ஸ் சொல்லத்துக்குள்ள பொழுது விடிஞ்சிடும். எங்க பிளைட் மிஸ் ஆகிடும்" என்றான் விவான்.

"என்ன பிளைட்?" என்றான் ஹேமா அதிர்ந்து,

"இல்லைடா பனிரெண்டு மணிக்கு கோவைக்கு பிளைட் புக் பண்ணியிருக்கேன். ஏறுனா ஒரே மணிநேரம் கோவைல இறங்கிடுவேன். அப்பாவை கார் அனுப்பச் சொல்லிட்டேன். ரெண்டு மூனுக்குள்ள வீட்டுக்கே போயிடுவேன்" என்றான் விவான்.

"என்ன விளையாடுறியா? அதெல்லாம் நைட் வந்து தங்கிட்டு காலையில கிளம்பு. வா வீட்டுக்குப் போலாம்" என்றான் செபா.

ஹேமா, தியா, மிரு உட்பட அனைவரும் அவரவர் வீட்டிற்கு அழைக்க, "புரிஞ்சிக்கோங்க நைட் ஊருக்குப் போயிட்டா நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு வேலையைப் பார்க்கலாம்" என்று போராடி அனைவரையும் சம்மதிக்க வைத்தான் விவான். துவாரா நேற்றே விவானிடம் வீட்டிற்கு வந்து தங்கச் சொல்ல தன்னுடைய திட்டத்தைச் சொன்னதால் தற்போது அழைக்கவில்லை.

பணி நிமித்தமாக துவாரா, விவி, ஹேமா, மௌனி, செபா, தியா, மிரு, இளங்கோ என்று அனைவரும் சென்னையில் தான் இருக்கிறார்கள். ஜிட்டு, இதித்ரி மற்றும் விவான் குடும்பம் ஆகியோர் மட்டும் வெளியூரில் வசிக்கிறார்கள்.

ஜிட்டு திண்டுக்கல் அருகில் பணியில் இருப்பதால் அவன் இரவோடு இரவாக பஸ் புக் செய்திருந்தான். இதியும் கும்பகோணத்திற்கு முன்பதிவு செய்திருந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் எல்லோருக்கும் ஒரு கலவையான மனநிலை தோன்ற, இதிக்கு பேருந்திற்காக நேரம் ஆக ஜிட்டு அவளை பிக் அப் செய்ய கேப் புக் செய்திருந்தான்.

"ஓகேடா டைம் ஆச்சு. மீட் பண்ணலாம்" என்று சொல்லும் போதே அவன் குரல் உள்ளே சென்றிருந்தது. எல்லோரும் அவனைச் சமாதானம் செய்து அவனையும் இதியையும் அனுப்ப தியாவின் அலுவலகத்தில் பணி செய்யும் குணா வண்டியை எடுத்து வந்திருந்தான். மிருவின் தந்தையும் வந்துகொண்டிருப்பதாகச் சொல்ல துவாரா, விவி இருவரும் ஒரே இடத்திற்குச் செல்வதால் மிருவோடு இருப்பதாகச் சொன்னார்கள். செபாவும் அவனுக்காக கேப் புக் செய்ய ஹேமா மௌனியும் கேப் புக் செய்திருந்தனர். இளங்கோ பார்வதியும் கேப் புக் செய்தனர்.

"சரிடா இப்போவே உள்ள போனால் தான் செக் இன் செய்ய கரெக்ட்டா இருக்கும். பை" என்ற விவான் நித்யாவை எல்லோரும் ஹக் செய்து வழியனுப்ப இளா சாப்பிட்டதுமே உறங்கியிருந்தாள். தூங்கும் அவளை எல்லோரும் தொந்தரவு செய்யாமல் அவர்களை வழியனுப்பினர்.அவர்கள் உள்ளே செல்லவும் ஜிட்டு மற்றும் இதி கிளம்பவும் சரியாக இருக்க தியா, செபா, இளங்கோ-பார்வதி, ஹேமா-மௌனி ஆகியோரை அனுப்பிவிட்டு மிருவோடு துவாரா மற்றும் விவி நிற்க உடனே மிருவின் தந்தை வந்திருந்தார். அவளையும் அனுப்பிவிட்டு துவாரா மற்றும் விவி இருவரும் தங்கள் வீடு சென்றனர்.

எல்லோருடைய இதயமும் ஒரு மாதிரி இருந்தது. வெறும் பத்து நிமிட இடைவெளியில் எல்லோரும் கலைந்திருந்தனர்.

முதலில் வீடு சென்ற மிரு, "ஐ ரீச்ட் ஹோம்" என்று டைப் செய்து பயணங்கள் முடிவதில்லை என்னும் அந்த வாட்ஸ் அப் குரூப்பிற்கு உயிர் கொடுத்தாள்.

"போர்டட் பஸ்" என்று தனித்தனியே இதி மற்றும் ஜிட்டு டைப் செய்ய,

"நாங்களும் பிளைட் ஏற போறோம். பை " என்று டைப்பித்தான் விவான்.

சிறிது நேரத்தில் அனைவரும் வீடு சென்றதற்கான தகவலை எல்லாம் ஜிட்டு தன்னுடைய வாட்ஸ் அப்ல் பார்த்தவன் இதுவரையிலான அந்தப் 'பயணங்கள் முடிவதில்லை' குருப்பின் மெசேஜை எல்லாம் படித்துக்கொண்டே பயணித்தான்.

இரண்டரை மணிக்கு விவானும் மெசேஜ் செய்துவிட அதைப் படிக்கத் தான் ஆளில்லாமல் போனது.

மறுநாள் காலை வழக்கமான திங்கட்கிழமையாகவே எல்லோருக்கும் பரபரப்பாக விடிந்தது. வீடு வந்து சேரவே ஜிட்டுவுக்கு நான்காகியிருந்தது. நான்கு மணிநேரம் உறங்கியவன் அரக்கப்பரக்க எழுந்து வேலைக்குத் தயாரானான். குளித்து அலுவலகம் சென்றவன் மனமெல்லாம் அந்தப் பயண 'ஹேங் ஓவேரில்' இருந்து வெளியே வராமல் தத்தளித்தது. சும்மா இல்லாமல் போன வாரம் இந்நேரம் என்ன நடந்து என்று யோசிக்க அன்று தான் அவர்கள் அனைவரும் அசாம் சென்று இறங்கினர். அந்த ரிசார்ட்டில் மாலை வரை உருண்டு உருண்டு தூங்கியது எல்லாம் அவனுக்கு நினைவில் வந்து சென்றது.

வேலை நிறைய இருந்தாலும் மனம் அதில் ஒன்றாமல் இருக்க லன்ச் பிரேக் வரை நேரம் ஓட்டவே படாதப்பாடுப் பட்டான். அன்று அந்த ரிசார்ட்டில் எல்லோரும் எடுத்த புகைப்படத்தை 'பயணங்கள் முடிவதில்லையில்' பதிப்பித்தவன்,"இட்ஸ் பீன் எ வீக், பீலிங் இரிடேட்டட்" (ஒரு வாரம் கடந்து விட்டது. ரொம்ப எரிச்சலாக இருக்கிறது) என்று பதிவிட எல்லோரும் சில சோக ஸ்மைலிகளைப் பதிவிட்டனர்.

ஜிட்டுவுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் அதே போன்றதொரு நிலை தான். செபாவுக்கு ஆபிசில் கோடிங்கே சுத்தமாக மறந்ததாய் ஒரு எண்ணம். துவாரா, விவி இருவரும் அன்றைக்கு இருக்கும் வகுப்புக்குத் தேவையான கன்டென்டை தயாரித்தனர். கீர்த்தி தான் அவனிடம் சரியாகப் பேசவில்லை. நிச்சயம் தன்னுடைய இந்த மாற்றத்தை அவள் விரும்பியிருந்தாலும் அனேஷியாவையும் அவள் தந்தையையும் மன்னித்ததும் அவர்களை வீட்டிற்கு வரச் சொன்னதும் அவளுக்கு எரிச்சலாகவே இருந்தது. அவளை சரித்திரா தான் ஓரளவுக்குத் தேற்றினாள்.

சரித்திராவின் தாத்தா மெதுவாக அவளுடைய காதலை தன் மருமகளிடம் தெரியப்படுத்தியிருந்தார். முதலில் ரயிலில் பழக்கமான ஒருவனை நம்பி எப்படிப் பெண் கொடுப்பது என்று கடுப்பானவர் பிறகு அவர்களின் முந்தையச் சந்திப்பைப் பற்றிச் சொன்னார்.சரித்திராவின் அன்னைக்கு மகளின் திருமணம் அவசியம் என்று தோன்றினாலும் எங்கே நாளை தன்னைப் போல் அவளும் சிரமப்பட நேரிடுமோ என்று எண்ணியே குழம்பினார். கீர்த்தியின் அண்ணன் என்று சரித்திரா துவாராவைப் பற்றிச் சொல்லியும் மனம் முழுமையாக ஏற்கவில்லை. பின்னே 'என்ன குடும்பம் அவர்கள் எப்படி?' என்று விசாரிக்க நிறைய இருக்கிறதே? ஆனாலும் மகளின் திடீர் பேட்மிட்டன் ஆவலுக்கும் அதன் வெற்றிகளுக்கும் அவன் தான் காரணகர்த்தாவாக இருந்திருக்கிறான் என்றதும் உடனே கோவப்பட்டு அவனை நிராகரிக்காமல் சற்று யோசிக்க ஆரமித்தார்.

"அம்மாகிட்ட நம்ம விஷயத்தைச் சொல்லிட்டேன்" என்று மொட்டையாக ஒரு மெசேஜை துவாராவுக்கு அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்ததிலிருந்து அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஓகே இதையும் பேஸ் பண்ணித் தான் தீரணும் என்று நினைத்துக்கொண்டான்.

நேற்று இரவு வீட்டுக்கு சென்ற செபாவுக்கு வீட்டின் கந்தர்கோலம் பேரதிர்ச்சியாக இருந்தது. பத்து நாட்களுக்கு மேல் உபயோகப் படுத்தப்படாமல் இருந்த பிளாட் குப்பையும் தூசியுமாகக் காட்சியளிக்க மாலை வந்து அனைத்தையும் சரிசெய்யவேண்டும் என்று எண்ணியபடியே அலுவலகம் சென்றான்.

அன்றிரவு தந்தையுடன் வீட்டிற்குச் சென்ற மிருவின் மனமெல்லாம் தியா கூறியதிலே இருந்தது. விமானநிலையத்திலிருந்து வீடுசெல்லும் போதே அவளிடம் பயணத்தைப்பற்றியும் மற்றதையும் பொதுப்படையாகப் பேச, மிரு அன்று தியா தன்னிடம் கூறியதையும் அதற்கு அவள் போட்ட கண்டிஷன்ஸும் இன்று தியா கேட்ட ஒரு வாரக் கெடுவையும் சொல்லிமுடித்தாள்.

இதை அவர் எதிர்பார்க்கவில்லை. அவள் தியாவை விரும்புகிறாள் என்றும் அதனால் தான் திருமணத்திற்கு சம்மதம் சொல்லாமல் காத்திருக்கிறாள் என்றும் அவருக்கு நன்கு புரியும் தான். ஆனால் இப்படி ஒரேயடியாக மகள் கொடுத்த ஷாக்கிலிருந்து அவரால் மீள முடியவில்லை. அவரின் பயமெல்லாம் இதெப்படிச் சாத்தியாமாகும்? தியாவின் அன்னையாவது தங்களிடம் வருத்தம் தெரிவிப்பதாவது? கூடவே மகளின் மாறாத இந்த மனதும் அவருக்குக் கவலையளித்தது. சில நல்ல இடங்களில் இருந்து ஜாதகங்கள் வந்திருந்தது. அதைப் பற்றி மகளிடம் பேசலாம் என்று நினைத்திருக்க அவளின்இந்தப் பதில் அவரை யோசிக்க வைத்தது. மேலும் இதற்குத் தன்னுடைய மனைவி எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார் என்றும் எண்ணியபடியே குழப்பமடைந்தார்.

அங்கே சம்மந்தப்பட்டவனோ வீட்டிற்குச் சென்று அண்ணனிடமும் அண்ணியிடமும் பேசிவிட்டு ஹாலில் அமர்ந்திருந்த அன்னையை கண்டுக்கொள்ளாமலே உறங்கச் சென்றான். ஏற்கனவே அவருடைய நெஞ்சு வலி ட்ராமா பெரிய மகனுக்குத் தெரிந்ததிலிருந்து வீட்டில் அவருக்கான மரியாதை குறைந்ததாகவே உணருகிறார்.அதனால் கொஞ்ச நாட்களுக்கு சைலன்ட் மோடில் இயங்கலாம் என்று முடிவெடுத்திருக்க மனமோ பயத்தில் இருந்தது.

அங்கே அஸ்ஸாமில் அனேஷியா அண்ட் டீமுக்கு திட்டமிட்டபடியே வேலை பளு அதிகமாக இருந்தது. வீட்டிற்குச் சென்றதும் செபாவிடமிருந்து இரவு வந்த மெசேஜை காலையில் தான் பார்த்தாள் ஜெஸ்ஸி. லன்ச் வரை கடுமையாகச் சென்ற வேலை லன்சில் தான் சற்று நிம்மதியாக இருந்தது. அப்போது தான் செபாவும் ஜெஸ்ஸியை அழைத்திருந்தான்,

"வீடு செம கேவலமா இருக்கு ஜெஸ்ஸி. ஏன்டா வீட்டுக்குப் போனோம்னு இருந்தது. நல்ல வேளை விவானும் நித்யாவும் வீட்டுக்கு வரல. ஒருவேளை அவங்க வந்திருந்தா நம்ம இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆகியிருக்கும். கிரேட் எஸ்கேப்" என்றான்.

அவன் சொன்னதில் சிரித்தவள், அங்கே இருக்கும் மெய்டின் எண்ணைத் தர ஏனோ செபாவுக்கு நெஞ்சில் பால்வார்த்தது போலொரு உணர்வு. ஆனால் அவரும் நாளை தான் க்ளீன் செய்ய முடியும் என்று உணர்ந்து சோகமானான். 'ஏன் நம்மால் செய்ய முடியாதா?' என்று தோன்ற அவனே வீட்டை க்ளீன் செய்ய முடிவெடுத்திருந்தான். கூடவே நாளைக்கு வீட்டிற்கு வரும் ஜெஸ்ஸிக்கு சில சர்ப்ரைஸ் கொடுக்கவும் எண்ணினான். அவளுக்கு என்ன கலர் பிடிக்கும் அவளுக்குப் பிடித்த டிசைன் முதலியவற்றை அன்று பேசும் போது தெரிந்துகொண்டதால் அதை உடனே ஆன்லைனில் ஆர்டர் போட்டான். மாலையில் அவற்றை கொண்டு வீட்டை அலங்கரிக்க எண்ணினான்.

ஏற்கனவே தனியாக பிளாட்டில் இருந்ததால் இந்த வேலையெல்லாம் செய்து பழகியவன் தான். ஆனால் கடந்த ஏழெட்டு மாதங்களாகப் பழக்கமில்லாமல் போயிருந்தது. ஸ்பீக்கரில் பாடலைப் போட்டவன் நான்கு மணிநேரத்தில் அந்த வீட்டை மொத்தமாக மாற்றியிருந்தான். அதைச் செய்யும் போது பத்து முறையேனும் அவன் அன்னையையும் வீட்டில் வேலை செய்யும் செல்வி அக்காவையும் எண்ணி வியந்தான். ஆனால் கர்ம சிரத்தையாக எல்லாவற்றையும் செய்து ஜெஸ்ஸிக்கு சில சர்ப்ரைஸ் எலிமெண்டஸையும் தயார் செய்திருந்தான்.

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே

ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே

பைக்கு ரைடு கூட ஹேப்பியானதே

காலம் வந்ததே கெத்து ஆனதே ..

எங்கேயோ போகும் காத்து

இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்

என் கூட பிறந்த சாபம்

இப்போ தன்னாலவே தீரும் ...


என்று சிச்சுவேஷனல் சாங்கோடு வேலை செய்தான்.

மிருவின் முடிவைக் கேட்டு அவள் அன்னையும் அதிர்ந்தார். கூடவே நாளை அவர்களுக்குள் திருமணம் ஆனாலும் ஏதேனும் சதி செய்து இவர்களைப் பிரிக்கவே முயல்வார் என்று எண்ணி அஞ்சினார்.

அன்று மாலை தன்னுடைய பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து வெளியேறிய தியா அண்ணனுக்கு அழைத்து அவர்களின் திட்டங்களை ஒன்றுக்கு ரெண்டு முறை சரி பார்த்துக்கொண்டனர். காலையில் எழுந்தும் தன்னிடம் பேசாமல் போன மகனை எண்ணி உண்மையில் குழம்பினார் அவன் அன்னை. இதெல்லாம் மிருவின் திட்டமாக இருக்குமோ என்று எண்ணியவர் இதற்கு ஒரு முடிவு கட்ட ஆயத்தமானார்.

மாலை அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக வீட்டிற்கு வந்ததே அவர்களின் அன்னைக்கு சந்தேகம் தர, அவர்கள் முந்துவதற்குள் அவர் முந்தினார்.

"மோகன் (தியாவின் அண்ணன்) உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்" என்று பீடிகை போட்டவர்,"நம்ம சுந்தரேசன் மாமா சொந்தத்துல இருந்து ஒரு ஜாதகம் வந்திருக்கு. நானும் சரி பார்க்கலாம்னு இருக்கேன்" என்றார்.

இதை எதிர்பார்த்திருந்தாலும் அவரிடமிருந்து இவ்வளவு வேகத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மோகன் தீர்க்கமாக அவன் அன்னையைப் பார்த்து,"அம்மா அதுக்கு அவசியமில்லை. தியாவுக்கு மிருவைப் பேசலாம்னு இருக்கேன்" என்று சொன்னதும் அவர் வெகுண்டெழுந்தார்.

"யாரைக் கேட்டு இந்த முடிவு எடுத்த?" என்றவர் தியாவைப் பார்த்தபடி,"நான் சந்தேகப் பட்டது சரியாப் போயிடுச்சி" என்று பேசத் தொடங்க, "யாரைக் கேட்கணும்? பெண்ணுக்கும் பிடிச்சிருக்கு பையனுக்கும் பிடிச்சியிருக்கு. அப்போ மேரேஜ்செஞ்சிட வேண்டியது தானே?" என்றார் மோகன்.

"இதுக்கு நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். அந்தக் குடும்பத்துல இருந்து பெண் எடுக்கவே கூடாது. இதையும் மீறி நீங்க முடிவெடுத்தா இந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன்" என்று அவர் செண்டிமெண்ட் டைலாக் பேச,

"நீ எங்கேயும் போக வேண்டாம். இது அப்பாவோட வீடு. உனக்கு முழு உரிமை இருக்கு. நாங்க வெளியப் போயிடுறோம். அண்ட் வர வெள்ளிக்கிழமை மிரு வீட்டுக்குப் போய்ச் சம்மந்தம் பேசப் போறோம். உனக்கு விருப்பமிருந்தா நீ வரலாம் இல்லைனா வேண்டாம். ஆனா நானும் என் வைஃப்பும் போறோம். தியாவுக்கு மிருவைப் பேசி முடிப்பேன். இதெப்படி நீ செய்யலாம்னு நீங்க கேட்டா, அப்பா சாகும் போதும் உங்களை எப்படி என் பொறுப்பில் விட்டாரோ அதே மாதிரி தியாவோட எதிர்காலத்தையும் என் கையில தான் கொடுத்தார்.சோ அவன் கல்யாணத்தைப் பற்றி முடிவெடுக்க எனக்கு உரிமை இருக்கு. கூடவே அவனுக்கும் இதுல தான் விருப்பம். அப்பறோம் நாங்க வீடு பார்த்து தனியாகப் போயிடுறோம். நீ மட்டும் சந்தோசமா உன் ஆசைப்படியே இரு. நாங்க யாரும் கேள்விக் கேட்கல. போதுமா?" என்று முடித்தார்.

அவர்கள் வெளியே செல்கிறார்கள் என்பதைக் காட்டிலும் மிருவுக்கும் தியாவுக்கும் திருமணம் என்பது தான் அவரை அதிக அதிர்ச்சியாக்க, தியாவின் அண்ணன் மேலும் தொடர்ந்தார்,"உன் மேல நான் நிறைய மரியாதையை வெச்சியிருந்தேன் அம்மா. ஆனா அன்னைக்கு நான் ஆபிஸ்ல இருந்து வந்ததும் நீ நெஞ்சு வலின்னு சொல்லித் துடிச்சதை உண்மைன்னு நம்பி பதறி அலறியடித்து ஹாஸ்பிடல் கொண்டுப் போனேன் பாரு, அப்போக் கூட உனக்கு உறுத்தவில்லையா? உன்னோட வறட்டுப் பிடிவாதத்துக்கு நாங்க பலியாகக் கூடாதுனு அன்னைக்கே முடிவும் பண்ணிட்டேன். அண்ட் நாங்க இந்த வீட்டில் இருந்தா மிருவும் தியாவும் கல்யாணத்துக்கு அப்புறோமும் இங்க தான் இருக்கனும். நீ இந்த சீரியல் மாமியார் போல ஏதாவது குடைச்சல் கொடுத்துட்டே இருப்ப. அதனால் வீணா வீட்டுல பிரச்சனை வர நான் விரும்பவில்லை. மிருவையும் தியாவையும் தனியா அனுப்பிட்டு நான் உன்கூட இருக்கலாம்னு தான் யோசிச்சேன். இப்போ நானும் அவங்கக் கூடவே தனியாப் போயிடுறேன். நீ மட்டும் ஹேப்பியா இரு. அத்தை குடும்பத்து மேல அப்படி என்னமா கோவம் வன்மம் உனக்கு? நீ கொடுத்த நகையை அவங்க திருப்பிக் கொடுத்துட்டாங்க. ஆமா தர்ஷினி (மிருவின் அக்கா) என்னை வேண்டாம்னு சொன்னா. அதுக்காக இப்போ நான் நல்லாவா இல்லை? பழையப் பகையை நெனச்சிட்டு நிகழ் காலத்தைக் கெடுக்காத. உனக்கு இறுதியா ஒரே சான்ஸ் தரேன். வர வெள்ளிக்கிழமை முழுமனசா அங்க மிரு வீட்டுக்கு வந்து அவங்க கிட்ட அன்னைக்கு நீங்க நடந்ததிற்கு வருத்தம் தெரிவிச்சு ஒரு அம்மாவா தியாவுக்காகப் பெண் கேட்கறதா இருந்தா வாங்க. இல்லைனா நாங்க போறோம். தயவு செய்து பழைய ட்ராமா போடாதீங்க. இந்த புலி வருது கதை மாதிரி, உண்மையிலே இப்போ உனக்கு நெஞ்சு வலி வந்தால் கூட நான் நம்ப மாட்டேன். காரணம் நீங்க தான்" என்றவர் அங்கிருந்து அகன்றார்.

தானொரு திட்டம் தீட்டி செயல் படுத்த நினைத்திருக்க நடந்தது என்னவோ வேறாகிப்போனதாய் அவர் வருந்தினார். அவருக்கு அவருடைய பெரிய மகனைப் பற்றி நன்கு தெரியுமே? பேசாத வரை எதையும் பேச மாட்டான். ஆனால் ஒன்றை செய்வதாகச் சொன்னால் கண்டிப்பாக அதை நிறைவேற்றாமல் விடமாட்டான். இறுதியாகத் தன்னை இனிமேல் எப்போதும் நம்ப மாட்டேன் என்றதும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சில விஷயங்களை இவர்களின் திட்டம் போலில்லாமல் வெளிப்படையாகவே மோகன் பேசியிருந்தார். அது தியாவிற்கே அதிர்ச்சி தான். ஆனால் அவர்கள் இருவரும் என்றும் தங்கள் தாயை நிர்கதியாக விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றாலும் இன்று அப்படிப் பேசிவிடுவதைப்போல் நடந்துவிட்டது. இருந்தும் சிலரை வழிக்குக் கொண்டுவர இதுபோல் பேசினால் தான் முடியும் என்பதால் அவ்வாறு பேசிவிட்டார்.

கணவர் இல்லையென்றாலும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையிலும் தைரியத்திலும் இருந்தவருக்கு மகன்களின் முடிவு சொல்லமுடியாத வலியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது.அதும் இந்த வீட்டில் தான் மட்டும் எவ்வாறு தனியாக வாழ முடியும்? மகன்கள் மருமகள் பெயரன் என்று வாழ்ந்தவர் தனியான ஓர் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே உள்ளம் கசந்தது. இதை எல்லாம் தியா சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை மோகன் சொன்னது தான் அவருக்கு அதிக மனவுளைச்சலைத் தந்தது.(பயணங்கள் முடிவதில்லை...)
 
நித்யா,யாழ், மிரு, அனி இவர்களைத் தவிர
மௌனி, பாரு, இதி, சித்தாரா, சரித்தரா, ஜெஸ்ஸி,ரேஷா, பெனாசிர்
இவர்களும் அந்த நட்பு வட்டத்தில் ஒன்றி இணைந்து போனார்கள்.
எந்த ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கும் இல்லாமல்....
 
ஏதோ நாங்களே இத்தன நாள் டூர் போய்ட்டு வந்த மாதிரி ஒரு டயர்டு:p:p:p

மகனின் வாழ்வை விட அந்தம்மாவின் ஈகோ பெருசா போச்சு....... இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள் :( :( :(
 
நித்யா,யாழ், மிரு, அனி இவர்களைத் தவிர
மௌனி, பாரு, இதி, சித்தாரா, சரித்தரா, ஜெஸ்ஸி,ரேஷா, பெனாசிர்
இவர்களும் அந்த நட்பு வட்டத்தில் ஒன்றி இணைந்து போனார்கள்.
எந்த ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கும் இல்லாமல்....
கண்டிப்பா. என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனேங்கற நாடோடிகள் பார்முலா தான்... நன்றி சகி??
 
Top