Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-63(1)

Advertisement

praveenraj

Well-known member
Member
மறுநாள் இரவு கிட்டத்தட்ட அதே நேரத்திற்கு அனேஷியா அண்ட் டீம் சென்னை வந்திறங்கினார்கள். அங்கிருந்து புறப்படும் முன், அனேஷியா திவேஷை தனியே அழைத்து அவள் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டினாள்.

"திவே உண்மையிலே நீ என்னை விருப்புறனு கேட்டதும் எனக்கு அவ்வளவு ஆச்சரியம். என்னை மாதிரி ஒருத்தியை அதும் என்னைப் பற்றி முழுசா தெரிஞ்சப் பிறகும் எப்படி திவே உன்னால என்னை நேசிக்க முடிஞ்சது? நான் நான்... நான் உனக்கேத்தப் பெண்ணில்லை திவேஷ். நான் நிறைய தப்பு இல்லை இல்லை தெரியாமல் செய்யுறது தான் தப்பு. தெரிஞ்சே செய்யுறது குற்றம். நான் நிறைய குற்றம் செஞ்சியிருக்கேன். என் அம்மாவே என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போ தான் கொஞ்ச நாளா வெறும் ஒரு வாரமா தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் திவே. கொஞ்ச நாள் நான் எந்த கமிட்மெண்ட்ஸ் உள்ளேயும் போக விரும்பவில. நான் இப்போ தான் விடுதலை அடைஞ்சதா நினைக்கிறன். கொஞ்ச நாள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கனும். நான் உனக்கு சரியான..."என்று முடிக்கும் முன்னே அவளைத் தடுத்தவன்,

"அனி இங்க யாருமே மிஸ்டர்/மிஸ் பெர்பெக்ட் இல்ல. எல்லோரும் ஏதாவது ஒரு தப்பு செஞ்சியிருப்போம். டூ எர் இஸ் ஹியூமன் (தவறு செய்வது மனிதனின் இயல்பு). நான் அன்னைக்கு நம்ம ஃப்ரண்ட்ஸ் கிட்டச் சொன்னதைத் தான் திரும்பச் சொல்றேன். துவாராவுக்கு தவறு செஞ்சவள் மட்டும் அனேஷியா இல்ல. விவானுக்கு யாழுக்கு துஷிக்கு எனக்குன்னு நீ நிறைய நல்லது செஞ்சி இருக்க. இன் பேக்ட் துவாராவைத் தவிர யாருக்குமே நீ தவறு செய்யல. அண்ட் துவாரா கிட்டயும் நீ அதை ஒத்துக்கிட்ட. எனக்குத் தெரிஞ்ச இல்லை எனக்குப் பிடிச்ச அனேஷியா யாரு தெரியுமா? எப்பயும் கலகலனு சிரிச்சுட்டு டேன்ஸ்னா ஒரு துள்ளலோட முன்னாடி போய் ஆடி நாம மட்டும் படிக்கணும்னு எண்ணாம அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணி. யா நீ துவாரா ப்ராஜெக்டை உடைச்ச தான். ஆனா உன் மனசு அதுக்கப்புறோம் எவ்வளவு துடிச்சதுனு எனக்குத் தெரியும். நீ அடிப்படையா ரொம்ப நல்ல பொண்ணு. அழகாவும் இருக்க" என்றதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அனேஷியா."ஸ்கூல் வரை நான் பார்த்துப் பழகிய அனேஷியா மேல எனக்கு காதல் இருந்தாலும் நான் இப்போ விரும்பறது ஸ்கூலுக்கு அப்புறோம் இந்த ஒன்பது பத்து வருஷமா இருக்கும் அனேஷியாவைத் தான். எவ்வளவு மாற்றங்கள்? எவ்வளவு பொறுப்பு? எவ்வளவு பணிவு? நீ ஆளே மொத்தமா மாறியிருக்க அனி. ஒரு பாட்டுப் பாடுறேன் கேளு" என்றவன்

"நேற்று நான் பார்த்ததும்

உன்னைத்தானா சொல்

இன்று நான் காண்பதும்

உன்னைத்தானா சொல்

ஆடை மாற ஜாடை மாற

கூந்தல் பாதம் யாவும் மாற

கண்களோ உன் கண்களோ

மாறவில்லை

கண்களோ என் கண்களோ

ஏமாறவில்லை

பொய்க் கூறவில்லை

பள்ளிக்கூட வாசம் மீண்டும்

தள்ளிப்போன நேசம் மீண்டும்

தூரத்தில் உன் வாசனை

என்னை தாக்குதடி

பார்வையை உன் பார்வையை

எதிர் பாக்குதடி

மனம் கேட்குதடி"


"ஐ லவ் யூ அனி. ஸ்கூல்ல இருந்து உன்கிட்டச் சொல்ல முடியாம தவிச்சிட்டு இருக்கேன். நீ துவாராவைத் தேடித் தான் இங்க வரேன்னு எனக்குத் தெரியும் போது அப்படி வலிச்சது. இப்போ துவாரா உன் லைஃப்ல இல்லை. நான் உன்கிட்ட உடனே பதில் கேட்கல. நல்லா யோசி. எப்படியும் நாம துஷியோட மேரேஜ்ல மீட் பண்ணுவோம். அதுக்கு முன்னாடி வாய்ப்பு குறைவு தான். அதுவரை நீ நல்லா யோசி. அம்மா எனக்குக் கொடுத்த டைம் இன்னையோட முடியுது. பரவாயில்லை நான் அம்மாவைச் சமாளிக்கிறேன். நீ யோசி அனேஷியா. பிலைட்டுக்கு டைம் ஆச்சு கிளம்பு" என்று அவளை வழியனுப்பியிருந்தான்.

உண்மையில் இப்போது தான் அனேஷியாவின் மனம் அதிகம் குழம்பியிருந்தது. நேராக அவரவர் வீட்டிற்குச் சென்றனர். ஜெஸ்ஸியை பிக் அப் செய்ய விமான நிலையமே வந்திருந்தான் செபா. இருவரும் அங்கிருந்து டின்னர் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்ப வீட்டை கண்டு ஆச்சரியம் கொண்டாள் ஜெஸ்ஸி. அவளுக்குப் பிடித்த நிறத்தில் ஸ்க்ரீன்ஸ் பிடித்த டிசைனில் பெட் விரேப் என்று எல்லாம் மாறியிருந்தது. அவளை அப்படியே கரங்களில் ஏந்தியவன் பால்கனிக்குத் தூக்கிச் சென்று அங்கே இறக்கினான். அவனின் அன்பில் கரைந்தவள்,"ஏன் செபா இதுக்கு முன்னாடி ஒரு முறைக் கூட இப்படி நடந்துக்கவில்லை?" என்றாள்.

"உண்மை சொல்லவா இல்லை பொய்ச் சொல்லவா?"

"பொய்ச் சொல்லுப் பார்ப்போம்..."

"அப்போ என் மனசுல யாருமே இல்லாம ஜாலியா நிம்மதியா இருந்தேன். இப்போ ஒரு ராட்சஷி உள்ள குடி வந்துட்டா" என்று சொல்லி கண்ணடித்தான்.

"ஓ அப்போ நான் ராட்சஷியா?"

"அதுல என்ன சந்தேகம்? அழகான ராட்சஷியே... அடி நெஞ்சில் குதிக்கிறியே... முட்டாசு வார்த்தையிலே... பட்டாசு வெடிக்கிறியே... அடி மனசை அருவாமனையில் நறுக்குறியே..." என்று பாட்டாவே பாடினான்.

"அப்படியா? அப்போ இந்த ராட்சஷி என்னவெல்லாம் பண்ணப் போறான்னு பாரு" என்று அவனைத் துரத்தினாள். அவர்களின் வாழ்க்கை இனி ஒரு தெளிந்த நீரோடையாகப் பயணிக்கும் என்பதில் ஐயமில்லை!

................................

இரண்டு நாட்கள் சென்னையில் இருந்த ஹேமா அன்று ஊருக்குச் சென்றான். அவனொரு முறை ஹரிணிக்குப் பார்த்த மாப்பிள்ளையை தீர விசாரித்தவன் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவிக்க அடுத்த இரண்டு நாட்களில் பெண் பார்க்கும் படலம் சிம்பிளாக நடைப்பெற்றது. இருவீட்டாரும் சேர்ந்துபேசி திருமணத் தேதியையும் குறித்தனர்.

மௌனிக்கு விடுமுறை இல்லாததால் அவளால் அதில் கலந்து கொள்ள முடியாமல் போனது. மௌனியைப் பற்றியும் அவளுக்கும் ஹேமாவிற்கும் தான் திருமணம் நடவிருப்பதையும் தெளிவாகச் சொல்லிவிட்டனர். அந்தத் தகவலை குரூப்பில் போட்ட ஹேமாவை eஎல்லோரும் வறுத்தெடுத்தனர்.

"டேய் ஹேமா உன் சரித்திரத்துலையே இவ்வளவு வேகமா நீ எதையும் செஞ்சதில்லையே எப்படி இது சாத்தியமாச்சு?" என்று வாரினான் ஜிட்டு.

"என்ன ஜிட்டு இது கூடப் புரியாம இருக்க? ஹரிணி ரூட் க்ளியர் ஆனா தானே சாரோட ரூட் க்ளியர் ஆகும்? அதான்" என்றான் இளங்கோ.

இன்னும் இரண்டு மாதத்தில் ஹரிணியின் திருமணத்திற்கு நாட்குறிக்கப்பட எல்லோரும் உற்சாகமானார்கள். பின்ன மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்துவிட்டதே?

.......................................................

அங்கே ஊட்டியில் நித்யாவுக்குத் தான் டைம் பாஸ் ஆகவே இல்லை. காலையிலே விவான் சென்றுவிட இளாவோடும் லலிதாம்மாவோடு டூரில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இதுவரை அவளை க்ளினிக் ஆரமிக்கச் சொல்லிக்கொண்டே இருந்தவர்களிடம் கண்டுக்கொள்ளாமல் முழுநேர குடும்பத்தலைவியாகவே இருந்துவிட்டாள் நித்யா. ஏனோ இப்போது தான் மீண்டும் ப்ராக்டிஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர அதை ராஜசேகரிடமும் லலிதாம்மாவிடமும் சொல்லி சம்மந்தமும் வாங்கியிருந்தாள்.

அவர்களின் எஸ்டேட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் இலவசமாகவே ட்ரீட்மெண்ட் பார்க்க எண்ணியிருந்தாள். இந்த ஆலோசனையை சொன்னதும் அவர்களுக்கும் சந்தோசம் தான்.

விவானுக்கு இரண்டு நாட்களாய் நிற்கவே முடியாத அளவுக்கு வேலை. கடந்த பத்து நாட்களின் தேயிலை, சாக்லேட்ஸ் ஆகியவற்றின் உற்பத்தி ஏற்றுமதி ஆகியவற்றை சரி பார்க்கவே நாள் சரியாக இருந்தது. இருந்தும் முன்பு போல் இரவு பத்து பதினொன்று என்று நேரங்காலமில்லாமல் உழைக்காமல் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டில் இருந்தான். இனி தினமும் இரவு பெற்றோரிடமும் இளாவிடமும் சற்று நேரம் பேச வேண்டும் என்று உறுதி பூண்டான். இந்த வேளையில் தான் ஹரிணியின் திருமணம் பற்றித் தெரியவர கூடவே தியாவிடம் பேசி அவனது பிரச்சனையின் நிலையையும் தெரிந்துக்கொண்டான். இதை எல்லாம் விட அனேஷியா திவேஷ் ஆகியோரின் உரையாடலும் அவன் அறிந்தான்.

இந்த யாழ் மற்றும் துஷி ஆகியோரைப் பற்றி எந்தச் செய்தியும் காதுக்கு வராததால் யாழைத் தொடப்புக்கொள்ள,

"என்ன யாழ் ஆள் சப்தத்தையே காணோம்? என்ன ஆச்சு?"

"அதை ஏன் கேட்குற விவா? இந்த துஷி பையன் ரெண்டு நாளா ஒண்ணுமே பேச மாட்டேங்குறான். நானும் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடிப் பார்த்துட்டேன். போதாக்குறைக்கு இன்னைக்கு வேற பிரவினை இன்றோ கொடுத்தேன். நல்லாவே தான் பேசினான் ஆனா ஆள் என்கிட்ட மட்டும் எதையும் பேச மாட்டேங்குறான்" என்று அலுத்துக்கொண்டாள்.

"என்னவாம் பிரச்சனையாம் அவனுக்கு?"

"நான் லவ் பண்ற விஷயத்தை அவன் கிட்ட இருந்து மறைச்சிட்டேனாம். அந்தக் கோவம். போதாக்குறைக்கு இந்த அம்மா வேற எனக்குக் கல்யாணம் பண்ணனும்னு தைய தக்கனு குதிக்கிறாங்க" என்று சொல்ல

"ஏ யாழ் ஆன்டிக்கும் டேன்ஸ் தெரியுமா? நீ சொல்லவே இல்லை?"என்று நேரங்காலம் தெரியாமல் அவளை கிண்டல் செய்தான். அப்போது தான் துஷி அங்கே வர,"டேய் அவன் வரான். நான் போனை அவன்கிட்டத் தரேன். நீயே கேளு" என்று சொல்லி துஷியிடம் போனைக் கொடுத்தாள்.

"சொல்லு விவான். என்ன விஷயம்?" என்றான் துஷி.

"டேய் யாழை ஏன் இப்படிக் கடுப்படிக்கிற?" என்றதும் தான் தாமதம்

"நீயும் அவளுக்கு வக்காலத்து வாங்காத விவான். இவளைக் கேட்காம நான் ஏதாவது செஞ்சியிருக்கேனா? ரேஷாவைப் பார்த்ததில் இருந்து எல்லாமும் அவளுக்குத் தெரியும். ஆனா இவ மட்டும் எதையும் சொல்லல. அப்போ நான் தான் லூசு மாதிரி இருக்கேன் ரைட்? கரெக்ட் அது அவளோட பெர்சனல் மேட்டர். அதான் என்கிட்ட இருந்து மறைச்சிட்டா" என்று யாழை முறைத்தவாறு பதிலளித்தான்.

உண்மையில் இவர்கள் பிரச்சனையில் ஏன்டா தற்போது மூக்கை நுழைத்தோம்னு விவான் வருந்தினான்."சரி உனக்கு அவ ஆளைப் பிடிக்கல அதானே? அதை அவகிட்ட ஓப்பனா சொல்லிட்டுப் போ" என்றான்.

"நான் எப்போடா அவ ஆளைப் பிடிக்கவில்லைனு சொன்னேன்? அதெல்லாம் ஓகே தான்" என்றான்.

"அப்போ என்ன தான் பிரச்சனை?"

"எனக்குச் சொல்லத் தெரியில. ஆனா இவ மேல செம கோவம் கோவமா வருது."

"யாழ் உன்கிட்ட இருந்து ஒரு விஷயத்தை மறைத்தால் கண்டிப்பா அதுக்கொரு காரணம் இருக்கும். கோவத்தை விட்டுட்டு பொறுமையா அவகிட்டப் பேசு. உங்களுக்கு பஞ்சாயத்து பண்ண எனக்கு உண்மையிலே டைம் இல்ல. நீ வேணுனா திவேவையோ இல்ல துவாராவையோ கூப்பிடு. அவங்க தான் வெட்டி ஆபிஸேர்ஸ். என்னை விடுங்க" என்று அழைப்பைத் துண்டித்தான்.

துஷியை நெருங்கி அமர்ந்தாள் யாழ். வேண்டுமென்றே அவன் தோளில் கையைப் போட்டு வெறுப்பேற்றினாள். அவன் கோவத்தில் அதைத் தட்டி விட மீண்டும் அதைச் செய்தாள்.

"டேய் ரொம்ப பண்ணாத... நீ சொல்லு ஆள் தேறுவானா இல்லையா?"

.............

"இப்போ பேசப்போறியா இல்லையா?"

"ஆளெல்லாம் நல்லா தான் இருக்கான். ஆனா..."

"ஆனா?"

"கேட்ட க் கேள்விக்குத் தான் பதில் சொல்றான். ரொம்ப அமைதியானவன் போல? உனக்கு எப்படி அவனைப் பிடிச்சது?"

இருவரும் அவன் கேட்டதையே எண்ணிச் சிரித்தனர். "ஜோக்ஸ் அபார்ட். அப்போ ஓகே தானே?" என்றாள் யாழ்.

"எப்படி நோ சொல்லுவேன் யாழ்? நீ அவ்வளவு சீக்கிரம் யார் கிட்டயும் இப்படி நெருங்க மாட்ட. ஐ மீன் இவ்வளவு க்ளோசா இருக்க மாட்ட. இதெப்படி சாத்தியம் ஆச்சு?"

"கடந்த ஆறு மாசமா டெய்லி அவன் கூடத் தான் பனிரெண்டு மணிநேரத்துக்கும் மேல ஸ்பென்ட் பண்றேன். சரி என்ன பேசுன அவன்கிட்ட?"

...............................

துஷ்யந்த் பிரவின் உரையாடல்,

"யாழை உங்களுக்கு எதனால் பிடிச்சது?"

"ஒன்றா ரெண்டா காரணங்கள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா?"

அந்த பதிலில் 'ங்கே' என்று விழித்தான் துஷி.

"ப்ரோ நீங்க 'ஒரு ஊரில் அழகே உருவாய்' பாட்டை இதுக்குமுன்னாடிக் கேட்டிருக்கீங்களா?"

"காக்க காக்க தானே? எஸ்"

"இதுவரை அந்தப் பாடலை ஒரு ஆயிரம் முறைக்கு மேல கேட்டிருப்பேன். எனக்கு அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் ஒன்னு தோன்றும். இந்தப் பாடல் எழுத கண்டிப்பா யாரோ ஒரு பெண் இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கணும். யாரா இருக்கும்னு எனக்கு ஒரு தேடல் எப்போதும் இருந்தது. அந்தத் தேடலின் விடை தான் யாழ்"

அதுவரை சற்று வேண்டா வெறுப்பாக இருந்த துஷிக்கும் அவனின் பதில் கொஞ்சம் ஆர்வம் தர அவனை நோக்கினான்.

"she is a fantasy

sweet as a harmony

no one knows she is a mystery

fills your heart with ecstasy

என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல மொழியினில் வழியில்லையே. இது தான் பாஸ் யாழினி. இதனால் தான் எனக்கு அவங்களைப் பிடிக்கும்"

அதன் பின் நீண்ட நேரம் இருவரும் உரையாடினார்கள்.

............................................

"அவ்வளவு தானா? ஓகே சொல்லிடையா துஷி?" என்றாள் யாழ்,

"உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா?"

யாழின் கண்கள் இரண்டும் தொட்டியில் ஓடும் மீனாய் அலைபாய்ந்தது.

"வா ஆண்ட்டிகிட்டப் பேசலாம்" என்று அவளை அழைத்துச் சென்றான் துஷி.

உண்மையிலே இந்த வரிகள் தான் யாழின் இன்ஸ்பிரேஷன். i am so crazy about that maya. read 63(2)
 
"யாழ்" என்றால் தனி பாசம் வருகிறதே, இந்த "ப்ரவீன்" பய்யாக்கு..... ? ? ? ? ?
எனக்கு அப்படி எதுவும் இல்ல... ஒருவேளை நீங்க அந்த பிரவினைச் சொல்றிங்கப் போல? டேய் பிரவின் கேட்டுச்சா???
 
ஜானவி sis அந்த பிரவீனை தான் சொன்னாங்க, நீங்க ஏன் பாதருறீங்க சகோ ???
Nice update.
ஓ அப்படியா? நான் கூட என்னைத்தான் சொல்றங்களோனு நெனச்சு பயந்துட்டேன். நேம் கன்பியூசன் தான்??? நன்றி?
 
Top