Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!64(2)

Advertisement

praveenraj

Well-known member
Member
மாலை நிச்சயதார்த்தம் (ரிசப்ஷன்) நடக்கவிருக்க அந்த மண்டபமே விழாக் கோலம் பூண்டிருந்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராய் வரத் துவங்கினர். சென்னையில் ஒரு பிரபலமான மேரேஜ் ஹாலில் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. மணமேடையில் துஷி மற்றும் ரேஷா இருவரும் வீற்றிருக்க வருகைத் தந்தவர்கள் அனைவரும் மேடையேறி பரிசுகளைக் கொடுத்து புகைப்படம் எடுத்தார்கள். அந்த அரங்கத்தில் இறுதியில் இருந்த இருக்கையில் யாழ், விவான், நித்யா ஆகியோர் அமர்ந்து கதைத்துக்கொண்டிருக்க அன்றைய வேலையை முடித்துவிட்டு விவி, ஹேமா, மௌனி, செபா, ஜெஸ்ஸி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். வந்தவர்கள் அனைவரையும் வாரிக்கொண்டு இருந்தாள் யாழ்.

"அதெல்லாம் இருக்கட்டும் . உன் ஆள் எங்க?" என்று அவளைச் சீண்டினான் விவான். பின்னாலே இளங்கோவும் பார்வதியும் வந்தனர். பார்வதிக்கு வயிறு தெரிய ஆரமித்திருந்தது. காலையில் வேண்டாம் என்ற காரணத்தால் மாலையில் அவளை அழைத்து வந்தான் இளங்கோ. ஏனோ பார்வதி வந்ததுமே அவளை நெருங்கிய இளவேனில்,"நீங்க ஒன்னும் உங்கப் பாப்பாவை எனக்குக் கொடுக்க வேண்டாம். எங்க வீட்டுக்கும் ஒரு குட்டி பாப்பா வரப் போகுது" என்று சொல்லி ஓடினாள் இளவேனில். எல்லோரும் நித்யாவைப் பார்க்க, பொறுமையாக எல்லோருக்கும் சொல்லலாம் என்று எண்ணியிருக்க இளா பொதுவெளியில் இப்படி உளறுவாள் என்று அவள் எதிர்பாக்கவில்லை. சிரித்தபடியே நித்யாவும் விவான் சேர்த்து அனௌன்ஸ் செய்தனர். ஒரு நிமிடம் சுற்றம் மறந்து அனைவரும் ஒரு 'ஓ' போட்டு கூச்சலிட அந்த அரங்கமே அவர்களைத் திரும்பிப் பார்த்தது. துஷியும் -ரேஷாவும் கூட அவர்களைப் பார்த்தனர்.

"ஏன்டா? மானத்தை வாங்காதீங்கடா" என்று நித்யா அனைவரையும் கடிந்துகொண்டாள்.அப்போது தான் துவாரா சரித்திராவுடன் அங்கே பிரவேசித்தான். எல்லோரும் அவர்கள் இருவரையும் பார்த்து அவர்களைக் கிண்டல் செய்தனர். தங்களைப் பற்றியப் பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அறிந்தவன் அமைதியாக அங்கே வந்தமர்ந்தான். மௌனி, ஜெஸ்ஸி, பார்வதி, நித்யா நால்வரும் கூடிப் பேசிக்கொண்டிருக்க ஜெஸ்ஸியை நலம் விசாரித்து ஏதேனும் குட் நியூஸ் இருக்கிறதா என்று கேட்டனர்.

"ஹனி மூன் போனதுக்கு அப்புறோம் தான் எல்லாம்" என்றாள் ஜெஸ்ஸி.

"ஏய் உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகுது. யாரை ஏமாத்துறீங்க?" என்று அவர்கள் வாரினார்கள்.

பிறகு மௌனியிடம் ஹரிணி திருமண ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்ததா என்று விசாரிக்க அப்போது அங்கே வந்தான் ஜிட்டு.

"ஏ அமிதாப் மாமா கமிங்" என்றான் இளங்கோ.

"ஆளைப் பாரு நல்லா கால் படி உலக்கை மாதிரி" என்று ஹேமா சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

'ஆஹா ஜிட்டா எல்லோரும் உன்னைத் தான் டேமேஜ் பண்ணிட்டு இருக்கானுங்க. குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாதவன் மாதிரியே அங்க போய் உட்கார்ந்திடுடா' என்று அவனுக்கு அவனே பேசிக்கொண்டு வந்து அமர்ந்தான்.

"யாருப்பா அது ஸ்கூல் படிக்குற பையனுக்கெல்லாம் பேண்ட் சொக்கா போட்டு விட்டது?" என்று அவன் உடையைக் கிண்டல் செய்தான் விவான்.

"டேய் முன்னாடி இருக்கும் வழுக்கையும் தொப்பையும் பார்த்தா ஸ்கூல் பையன் மாதிரியா இருக்கு? அம்பது வயசு அங்கிள்டா அவரு" என்றான் ஹேமா.

இதெதுவும் காதில் விழாதவன் மாதிரியே வந்து அமர்ந்தவன் பார்வதியிடம் பேசினான்.

"சார் மௌன விரதமோ?" என்று அவன் வாயைப் பிடுங்கப் பார்த்தான் இளங்கோ.

"நான் பேசுனா தானே என்னை கலாய்ப்பீங்க. நான் தான் பேச மாட்டேனே?" என்று ஜிட்டு பேச,

"அதான் பேசிட்டியே"என்று அவனை கவுண்ட்டர் கொடுத்து ஆஃப் செய்தனர் எல்லோரும்.

"இதி எங்கடா?" என்றாள் நித்யா.

"அவளுக்கு க்ளோஸ் ஃப்ரண்ட் மேரேஜ் இருக்கு. அதான் வரல" என்றான் ஜிட்டு.

அப்போது தான் அங்கே வந்தாள் சித்தாரா. வந்தவள் முன்னிருக்கையை நோக்கிச் செல்ல அவளைக் கண்டுக்கொண்ட விவி அழைத்தும் மேல சப்தங்களில் எதுவும் அவளுக்கு எட்டவில்லை. விவி அவளை போனில் அழைத்து இங்கே வரச்சொன்னான்.

அவள் கண்கள் விவியைத் தான் தேடியது. அவனைக் கண்டதும் சற்று அமைதியடைந்தவள் அங்கே சென்று அமர்ந்தாள். அவள் கண்கள் விவியைப் பார்ப்பதும் விவியும் யாரும் பார்க்கா வண்ணம் அவளைப் பார்ப்பதுமாக இருப்பதை அங்கே எல்லோரும் கவனித்தனர்.

பிறகு பேச்சு துவாரா சரித்திரா மற்றும் ஜெஸ்ஸி செபாவையே சுற்றி வந்தது.

ஜெஸ்ஸி மற்றும் செபாவின் நெருக்கத்தை எல்லோரும் கவனித்தனர்."யாரோ எப்பயோ சொன்னாங்கப்பா,'என் வாழ்க்கையிலே நடந்த பெரிய தவறே என் மேரேஜ்ன்னு' அந்த ஆளைத்தான் தேடிட்டு இருக்கேன்" என்று செபாவுக்குக் கேட்கும் வண்ணம் பேசினான் ஜிட்டு.

"அது வேற வாய். இது வேற வாய்" என்று பதில் தந்தான் இளங்கோ.

"ஏன் அண்ணா எங்களுக்கு ட்ரீட் தரேன்னு சொன்னீங்களே? எப்போ பிப்ரவரி முப்பதா?" என்றாள் மௌனி.

"அதென்ன உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்? அப்போ நாங்கெல்லாம் என்ன தக்காளித் தொக்கா?" என்று பொங்கினான் ஜிட்டு.

"கரெட்கா கேட்டடா ஜிட்டு" என்றாள் நித்யா. "ஞாபகம் வெச்சிக்கோ என் ஆளு மனசு வெக்கலைனா இந்நேரம் இது நடந்தே இருக்காது" என்று விவானுக்குப் பதிலாக நித்யா பேசினாள்.

சபையில் மானத்தை வாங்கியதால் எதுவும் பேசாமல் இருந்தார்கள் செபா மற்றும் ஜெஸ்ஸி.

"இவ்வளவு கேட்குறோமே சரிடானு வார்த்தை வருதா பாரு?" என்றான் ஜிட்டு.

இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும் வேளையில் விவி மற்றும் சித்தாரா இருவரும் பேசவும் முடியாமல் அதே நேரம் எப்படிப் பேசுவதென்று தெரியாமல் தவித்தனர்.

அப்போது தான் திவேஷோடு உள்ளே வந்தாள் அனேஷியா. மதியமே அங்கிருந்து கிளம்பியவன் சென்னை வந்து எங்கேனும் ஹோட்டலில் தங்க முடிவெடுக்க அனேஷியா அவனை தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தாள். அதனால் அங்கே சென்று ரெப்பிரேஷ் ஆகி ஜோடியாக வந்தனர். இன்னும் அனேஷியா அவனுக்கு எஸ் சொல்லவில்லை என்றாலும் இன்றுவரை அவனோடு எப்போதும் போல் தொடர்போடு தான் இருக்கிறாள்.

"கலெக்டர் சார் வாங்க வாங்க" என்று அவனை அங்கே அழைத்தான் ஹேமா.

"எல்லா டிக்கெட்டும் இங்க தான் இருக்கீங்களா?" என்றபடி வந்தமர்ந்தான் திவே.

"அஸ்ஸாம்ல இருந்த கலெக்டர் சாரே வந்துட்டார். எங்க இந்த நியூஸ் ரிப்போர்ட்டர காணோம்? இவனை நம்பி எப்படி நியூஸ் கொடுக்கறது? கல்யாணத்துக்குக் கூப்பிட்டா வளைகாப்புக்குத் தான் வருவான் போல" என்று தியாவை வாரிக்கொண்டிருந்தான் ஜிட்டு. அதில் எல்லோரும் சிரித்தனர்.

அப்போது தான் தியாவும் மிருவும் அங்கே வந்தனர். இடம் மாறி அமர அதிர்ஷ்டவசமாக விவி அருகில் சித்தாரா அமர்ந்தாள்.

"என்ன சொல்லி என்னை ஓட்டுனான் இவன்?" என்று வரும் போதே கேட்டான் தியா.

"ஹே மிரு யூ லுக் கார்ஜியஸ்" என்றாள் பாரு. அவளின் காம்ப்ளிமென்டுக்கு நன்றி கூறி அமர்ந்தாள் மிரு. "நான் மட்டுமா அழகா இருக்கேன்? எல்லோரும் தான் அழகா இருக்கீங்க" என்று மற்றப் பெண்களைப் பார்த்துச் சொன்னாள் மிரு. காலையில் பட்டு வேட்டி சேரீ கட்டிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தவர்கள் இரவு கேசுவல் உடையைத் தான் உடுத்தியிருந்தனர்.

"எங்க கதையெல்லாம் இருக்கட்டும். ஆமா உன் ஆள் எங்க யாழ்?" என்றாள் மிரு.

"அதானே இதை நான் அப்போவே கேட்டேன். எப்படியோ பேச்சு மாறிடுச்சு" என்றான் விவான்.

"நாளைக்கு காலையில கண்டிப்பா மீட் பண்ணலாம் ஓகே?" என்றாள் யாழ்.

"ஐயோ அக்கா காலையில நான் வரமாட்டேனே?" என்று பதறினாள் பாரு.

"சாரிமா ஹி இஸ் சம்வாட் பிஸி. காலையில தான் பார்க்க முடியும்" என்றாள். ஏனோ இந்த வேளையில் விவி மற்றும் சித்து இருவரும் சைகையில் பேசிக்கொண்டனர். அப்போது பார்த்து மணவறையில் கூட்டம் குறைய,"கைஸ் போயிட்டு வரலாம்" என்றான் திவே.

"வெய்ட் வெய்ட் டேய் செபா வா என்கூட" என்ற துவாரா அவர்கள் வாங்கியிருந்த கேக்கை எடுத்துவரச் சென்றனர். பின்னாலே எல்லோரும் வாங்கியிருந்த பரிசுப்பொருளை (ஒரே கிஃட் எல்லோரும் சேர்ந்து வாங்கினார்கள். இருவருக்குமான மோதிரம்) நித்யாவிடம் இருந்து எடுத்துக் காட்டினான் விவான்."சூப்பர் போலாம்" என்று சொல்லி அவர்கள் மணவறைக்குப் போகவும் துவாரா மற்றும் செபா வரவும் சரியாக இருந்தது. மேடை எறியவர்கள் தங்களுடைய போனை போட்டோ எடுபவரிடம் கொடுத்து அதிலும் புகைப்படம் எடுக்கச் சொல்லிவிட்டு அங்கே மணமக்களை கேக் வெட்டச் சொல்லி கிஃட் கொடுத்து வாழ்த்துச் சொல்லி ஆரவாரம் செய்து கூச்சலுடன் 'ஓ' போட்டுகொண்டாட அந்த மண்டபத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.

"மச்சான் இன்னையோட உன் பேச்சிலர் வாழ்க்கை முடியப் போகுது.சோ சேட்" என்று சோகமாய்ச் சொல்வதைப் போல் சொன்ன விவானை நித்யா முறைக்க, எல்லோரும் கலகலத்தனர். போட்டோஸ் எடுத்துக்கொண்டு அனைவரும் சாப்பிடச் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தங்கினர்.மறுநாள் காலை எழுந்து தயாராகி திருமணத்தைக் கண்டுகளித்தனர். சுபமான முகூர்த்த வேளையில் துஷி அந்த மங்கள நாணை ரேஷுவின் கழுத்தில் பூட்ட இருவரும் திருவாளர் திருமதி ஆக மாறியிருந்தனர். திருமணம் முடிந்ததும் கூட்டம் கலைய பதினோரு மணிவாக்கில் இவர்கள் மட்டுமே அந்த இருக்கையை நிரப்பியிருந்தனர்.

பெண்கள் எல்லோரும் பட்டுப்புடவை அணிந்து இருக்க ஆண்கள் எல்லோரும் வேட்டி சட்டையில் இருந்தனர். இளாவுக்கும் அவள் சைஸில் குட்டி புடவை வாங்கி கட்டியிருந்தனர்.

சொன்னபடியே யாழ் பிரவினை அனைவர்க்கும் இன்றோ கொடுத்திருந்தாள்.இளங்கோ, ஹேமா, மௌனி என்று அனைவரும் அவர்களது காதல் கதையைக் கேட்டு நச்சரிக்க,"கண்டிப்பா அடுத்த மீட்டிங்கில் சொல்றேன். இப்போ வேற பேசலாம்" என்று மழுப்பியிருந்தனர். மதிய வேளையும் நெருங்க மணமக்கள் ஓய்வெடுக்கச் சென்றிருந்தனர்.

"சரி கைஸ் நான் ஈவினிங் கிளம்பனும். எல்லோரும் அடுத்த பங்க்சன்ல மீட் பண்ணலாம்" என்றான் திவே.

"ஏங்க கலெக்டர் சார். நாளைக்கு சன்டே தானே? இருக்கலாமே" என்றான் ஜிட்டு.

எப்படியும் அனேஷியாவிடமிருந்து ஏதேனும் பாசிட்டிவ் ரிப்லை வருமென்று காத்திருக்க அவளோ எதையும் சொல்லாமல் இருந்தது அவனுக்கு வருத்தம் தந்தது. அதனால் தான் கிளம்ப முடிவு செய்தான்.அடுத்த வாரம் ஹேமாவின் தங்கை திருமணத்திற்கு வர முடியாது என்று காரணம் சொல்லி அட்வான்சாக கிஃப்ட் கொடுத்துவிட்டுச் சென்றான். அவனை வழியனுப்ப அனேஷியா செல்ல முற்பட அவன் வேண்டாம் என்று கிளம்பிவிட்டான்.

"ஓகே அடுத்த கல்யாணம் யாருது?" என்ற மௌனிக்கு "துவாரா - சரித்திரா" என்று பதிலளித்தாள் நித்யா. அது இன்னும் நாற்பது நாட்களில் நடக்கவிருந்தது. இங்கே வந்தவர்களுக்கு இன்விடேஷனை கொடுத்துவிட்டான் துவாரா.

அங்கே சித்தாராவிடம் தனியாகப் பேசச் சென்ற விவி,"எப்படி இருக்கீங்க சித்தாரா?" என்று சாதரணமாகக் கேட்க அது அவளுக்கு என்னவோ செய்தது.

"உண்மையிலே நான் நல்லா இல்லை விவி. எனக்குள்ள தெளிந்த நீரோடை மாதிரி இனி கொஞ்ச காலத்துக்கு எந்த கமிட்மெண்ட்ஸும் கூடாதுனு உறுதியா இருந்தேன். நீங்க அதுல உங்க காதலென்னும் கல்லை எறிஞ்சிட்டு தூரம் போயிட்டிங்க. நான் தொண்டைக்குள் சிக்கிய மீன் முள்ளாய்த் தவிக்கிறேன். இப்போ சொல்லுங்க விவி இன்னும் அதே நிலைப்பாடுல தான் இருக்கீங்களா?" என்று தன்னுடைய குழப்பத்தை எல்லாம் கேள்வியாக வைத்தாள் சித்தாரா.

நீண்ட நேரம் யோசித்தவன்,"சித்தாரா நான் ரொம்ப சின்ன வயசுலயே எல்லாத்துக்கும் பழகிட்டேன். அதுல இருந்து நான் எந்த உறவு மேலையும் பெருசா ஆசை வைக்கிறது இல்ல. ஏன்னா அது இல்லைனு புரியும் போது ரொம்ப வலிக்கும். நானும் கல்யாணம் மேல பெருசா நம்பிக்கை இல்லாம தான் டூர் வந்தேன். உங்களை மீட் பண்ணதுல இருந்து எனக்குள் அதிகமா ஒரு எண்ணம், விருப்பம் பரவியது. நான் தேடிட்டு இருக்கும் பெண்ணுக்குரிய எல்லா குணமும் உங்க கிட்ட இருக்குனு தெரிஞ்சது. நிச்சயமா உங்களை இப்படிக் குழப்பமடைய செய்ய நான் அன்னைக்கு அப்படிப் பேசல. உண்மையிலே நீங்க இந்த மேரேஜுக்கு வருவீங்களானு ரொம்ப எதிர்பார்த்தேன். வந்தீங்க. ஐ வாஸ் சோ ஹேப்பி. அதேநேரம் உங்களைப் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. ரொம்ப உத்வேகமா உங்க வேலையில இறங்கியிருக்கீங்க போல?" என்றான் விவி.

"யோசித்தவள் அப்போ என்னைப் பற்றி எல்லாம் கவனிச்சிட்டுத் தான் இருக்கீங்க?ரைட்?" என்றாள் சித்தாரா.

"ஒரே ஒரு நாள் உங்களைப் பற்றித் தேட முயற்சி செஞ்சேன். அப்புறோம் வேண்டாம்னு விட்டுட்டேன்.அதுக்கு அடுத்த நாளே உங்களை நான் சென்னையில ஸ்கை வாக்ல பார்த்தேன். நானா உங்களைத் தேடி வரல. பட் உங்களைப் பற்றித் தெரிந்தது. ஆக்சுவல்லி உங்களை ஒரு இருவதடி கேப்ல பார்த்தேன். நீங்க ஹேப்பியா இருந்தீங்க. நான் உங்களைத் தொந்தரவு செய்யவேண்டாம்னு பேசாம வந்துட்டேன்" என்று சொல்ல உண்மையில் செம கடுப்பானாள் அவள். பின்னே அவனைப் பற்றி எதையும் தெரியாமல் எப்படி அனேஷியாவிடம் கேட்பது என்றும் புரியாமல் தவித்தது அவள் தானே அறிவாள்? கோவமாக அங்கிருந்து விலகிச் சென்றவளைத் தடுத்தான் விவி," மன்னிச்சிடுங்க. நான் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு தான் உங்களை மீட் பண்ணல என்று விளக்கமளித்தான்.

"ஓகே விவி. நாம கொஞ்சம் பேசணும். ஆனா இன்னைக்கு வேண்டாம். கொஞ்ச நாள் ஆகட்டும். நானே கால் பண்றேன். எனக்கும் சில விஷயங்கள் யோசிக்க டைம் வேண்டும்" என்று கூறி அவனின் ஆதார் கார்டையே வாங்கிச் சென்றாள். (அதாங்க பயோடேட்டா).

பயணங்கள் முடிவதில்லை!.அடுத்தப் பகுதி இறுதி அத்தியாயம்!
 

Advertisement

Top