Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-65(1) இறுதி அத்தியாயம்

Advertisement

praveenraj

Well-known member
Member
சில நாட்களுக்குப் பிறகு

இதற்கிடையில் ஹரிணியின் திருமணமும் நிகழ்ந்திருந்தது. அப்போதும் இவர்கள் எல்லோரும் சென்று சில கலாட்டாக்களைச் செய்து தான் திரும்பினார்கள்.

"மச்சான் இந்த குருவைப் போட்டுத் தள்ளனும்டா" என்று ஜிட்டு அவர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட,

"எந்த குருடா?"- ஹேமா

"என்ன ஆச்சு?" - மிரு

"அவனுக்கு இதே வேலையாப் போச்சு. போனதடவை அவன் கூட்டாளி கெடுத்தான். இந்த முறை அவனே கெடுத்துட்டான்" என்று மீண்டும் ஜிட்டு புலம்ப,

"என்ன மச்சான் பிரச்சனை? யாராச்சும் மிரட்றாங்களா?"என்று சீரியஸாக இளங்கோ கேட்க

"ஆமாம்டா என் கல்யாணத்தைக் கெடுக்கறதே அவனுங்க வேலையா வெச்சியிருக்கானுங்க" என்று ஜிட்டு மீண்டும் சொல்ல இம்முறை அனைவரும் குழம்பி,

"நீ யாரைச் சொல்ற?" என்றனர்.

அங்கே ஜிட்டுவுக்கும் - இதிக்கும் திருமணம் பேசி முடிவெடுக்க ஜிட்டுவின் ராசியில் குரு பார்வை இன்னும் வரவில்லை என்றும் அதற்கு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லி ஜோசியர் (நான் தான் அந்த ஜோசியர்!) குண்டைத் தூக்கிப் போட்டுவிட சம்மந்தமே இல்லாமல் 'குருவின்' மீது செம கோவத்தில் இருந்தான் ஜிட்டு. அதன் வெளிப்பாடு தான் அந்த மெசேஜ்.

"கருமம் புடிச்சவனே? எதையுமே தெளிவாவே சொல்ல மாட்டியா?" என்று ஹேமா வசைமொழிகள் தூவ நித்யா, மிரு, இளங்கோ, விவா, துவாரா என்று அனைவரும் சிரிக்கும் ஸ்மைலியைப் போட்டனர்.

"பின்ன என்னடா? நான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கும் போதெல்லாம் இந்த செவ்வாய், குரு, சுக்ரன், ராகு, கேதுனு எல்லோரும் சேர்ந்து என் வாழ்க்கையில குழி பறிக்கிறாங்க?" என்று ஆதங்கமாய் வாய்ஸ் மெசேஜ் பதிவிட எல்லோரும் சிரித்தனர்.

"மச்சி அதுக்கு தான் அன்னைக்கே சொன்னேன். நமக்கு இதெல்லாம் செட் ஆகாது. நேரா அறுபதாம் கல்யாணம் பண்றோம். என்ன ஓகே வா?" என்று ஜிட்டுவுக்கு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினான் செபா.

"எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே

உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே

இந்த ஞாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே"


என்று பாடல் வரிகளை மேற்கோள் காட்டினான் ஜிட்டு.

எல்லோரும் அவர்கள் சண்டையில் கலகலத்தனர். இன்னும் பத்து நாட்களில் துவாரா சரித்திரா திருமணம் சென்னையில் நடைபெறவிருக்கிறது.

"ஆமா செபா அந்தமான் போனீங்களே எப்படி இருந்தது?" என்றான் விவான்.

"என்னது அந்தமான ? இது எப்போடா நடந்தது?" என்று பொங்கினான் ஜிட்டு.

"ஒன் மந்த் இருக்கும் ஜிட்டு"

"என்னை கூப்பிடவே இல்லை தானே?" என்றதும்

"டேய் மெண்டல் நாங்க ஹனிமூன் போனோம். உன்ன எதுக்குடா நாங்க கூப்பிட்டுப் போகணும்?" என்றான் செபா.

"என்னது ஹனி மூனா? அப்போ அஸ்ஸாமில நீங்க பண்ண அலும்பலுக்கு எல்லாம் என்னடா பேர்?" என்றான் ஜிட்டு.

"மச்சி அது ட்ரைலர் இது தான் மெய்ன் பிக்சர்" என்றான் இளங்கோ.

"டேய் இங்க இன்னும் அவனவன் படமே எடுத்து முடிக்கல நீங்க என்னடானா?" என்று கடுப்பானான் ஜிட்டு.

"வெட்டி பேச்செல்லாம் வேண்டாம். எப்போ வரீங்க துவா கல்யாணத்துக்கு? "என்று விவான் கேட்க எல்லோரும் அதற்கானத் திட்டம் தீட்டினர்.

"நித்யா எப்படி இருக்கா?" என்ற மிருவுக்கு

"எஸ் ஓகே.நாலு மாசம் தானே ஆகுது" என்றான் விவான்.

மிருவின் திருமணம் அடுத்த மாதம் நிச்சயிக்கப் பட்டிருந்தது.

சொன்னபடியே துவாராவின் திருமணத்திற்கு எல்லோரும் ஆயத்தமானர்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் விவி மற்றும் சித்தாரா இருவரின் நட்பு இன்னும் நெருங்கியிருந்தது. தினமும் இரவு பேசிக்கொள்ளும் அளவுக்கு வந்திருக்க அங்கே திவேஷுக்கு திருமணம் இன்னும் மூணு மாதத்தில் நடைபெறா விட்டால் இன்னும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டிவரும் என்று சொல்லப்பட அவன் அன்னையோ விவானை அழைத்து குறைபட்டுக்கொண்டார்.

அனேஷியா தான் இன்னும் எஸ்ஸும் சொல்லாமல் நோவும் சொல்லாமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் எப்படிக் கேட்பதென்று தெரியாமல் திவே தத்தளித்தான். இதை உணர்ந்த விவான் துவாரா திருமணத்தில் அனைத்தையும் பேசி முடித்துவிடலாம் என்று எண்ணியிருந்தான்.

அடுத்த வருடம் ஸ்கூல் சேர்த்துவிடலாம் என்பதால் கடந்த பத்து நாட்களாய் இளாவை பிளே ஸ்கூலுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அன்று துவாரா சரித்திராவின் திருமணம். வாரநாட்களில் நடைபெற்றதால் எல்லோரும் அன்று மட்டும் விடுமுறை எடுத்து முந்தின இரவு தான் வந்தனர். விவான் நித்யா, விவி, அனி, யாழ் ஆகியோர் மட்டும் முன் தினமே வந்திருக்க, ஹேமா, தியா மிரு, திவே, மௌனி, செபா, ஜெஸ்ஸி, துஷி, ரேஷ் ஆகியோர் முன் தின இரவு வந்தனர்.

ரேஷா திருமணத்திற்குப் பிறகு ஒடிஷா செல்ல வேண்டியிருந்ததால் அந்த வேலையை ஒடிஷாவிற்கு மாற்றல் வாங்கிச் சென்றிருந்தாள்.

வழக்கமான கலாட்டாக்களுடன் சென்றுகொண்டிருக்க இளங்கோ மட்டும் வந்திருந்தான். பார்வதியை வளைகாப்பு முடிந்து ஊருக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

துவாராவின் திருமணத்திற்கு எல்லாம் முன்னின்று செய்ய வேண்டும் என்று கீர்த்தி நினைத்திருக்க அவளுக்கு டேட் நெருங்கியிருந்ததால் அவளும் செய்ய முடியாமல் நித்யாவும் இழுத்துப்போட்டு செய்யமுடியாமல் போக அதை மிரு, அனி, யாழ் ஆகியோர் செய்தனர்.

துவாராவின் தந்தை தாலியை விவானின் பெற்றோர்கள் எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதே தான் சரித்திராவின் அன்னையின் விருப்பமாகவும் இருக்க அவர்கள் ஆசைப்படியே ராஜசேகர் -லலிதாம்மா தான் முன்னின்று திருமணத்தை நடத்தினர். துவாரா ஒருவனின் அந்தச் சிரித்த முகம் அங்கே அநேக நபர்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்தது. வழக்கம் போல் பசங்க எல்லோரும் சேர்ந்து பெரிய அலப்பறைகளைக் கொடுத்துவிட்டு தான் சென்றனர்.

பேத்தியின் இந்த வாழ்வு எவ்வித தடையுமின்றி நன்றாக இருக்கவேண்டும் என்று மனதால் பிராத்தித்தார் சரித்திராவின் தாத்தா. மிருவின் பெற்றோர்கள் ஏன் தியாவின் அன்னையும் திருமணத்திற்கு வந்திருந்தார். மிரு - தியா திருமணம் முடிவானதிலிருந்து அவர் மனம் அதிக பயம் கொள்ள ஆரமித்தது. 'எங்கே தான் மட்டும் தனித்து விடப் படுவோமோ?' என்று அஞ்சியவர் எந்த எதிர்ப்புகளையும் காட்டாமல் அடக்கி வாசிக்க ஆரமித்தார்.

அப்போது தான் செபாவும் ஜெஸ்ஸியும் அவர்கள் பெற்றோர்களாகயிருப்பதைச் சொல்ல எல்லோரும் மகிழ்ந்தனர். இந்த இடைப்பட்ட நாட்களில் ஜெஸ்ஸியின் முயற்சியில் செபா அவன் தந்தையை மெல்ல புரிந்துகொள்ள ஆரமித்திருந்தான். அவர்களுக்குள் உறவு சமூகமாகவே சென்றது.

திருமணம் முடிந்து பிற சம்பிரதாயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க யாழ், துஷி விவான் மூவரும் அனேஷியாவைக் கடத்திக்கொண்டு அமரவைத்து அவளின் முடிவு தான் என்னவென்று விசாரித்தனர். திவேவும் அங்கே இருந்தான் தான். ஆனால் அவன் ஜிட்டு, ஹேமா ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்க அங்கே அவர்கள் நடத்திய குறுக்கு விசாரணையில் அனேஷியாவுக்கும் இதில் விருப்பம் என்றும் ஆனால் எதுவென்றாலும் துவாராவின் வாழ்க்கை நல்லபடியாக அமைந்த பிறகே தன்னுடைய முடிவைச் சொல்ல நினைத்திருந்ததையும் அவள் தெரிவிக்க எல்லோரும் இன்றே திவேஷிடம் அவள் எண்ணத்தைத் தெரிவிக்கச் சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் மண்டபம் வெறிசோட, திவேஷின் அருகில் அமர்ந்தாள் அனி. "திவே என்னை மன்னிச்சுடு திவே. உன்னை ரொம்ப காக்க வெச்சுட்டேன். எனக்குள் இருந்த குற்றயுணர்ச்சி இப்போ தான் முழுசா நிவர்த்தி ஆகியிருக்கு. அப்பாவும் மாமாவுடன் பேசிட்டார். ரெண்டு குடும்பமும் ஒன்னு சேர்ந்திடுச்சி. அண்ட் இந்த இடைப்பட்ட நாட்களில் தான் உன்னைப் பற்றி நிறைய யோசித்தேன். எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் திவேஷ். அப்பாவை முறைப்படி எல்லாம் பேசச் சொல்றேன்" என்றதும் அவனுக்கு நடப்பது கனவா நிஜமா என்று குழப்பம் பிறக்க,"டேய் திவே நிச்சயமா இது கனவில்லை" என்றான் விவான். அப்போதே விவான் அனேஷியாவின் தந்தையிடம் அதைத் தெரிவிக்க இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு ஆளானார் அவர்.

சரித்திரா துவாராவுடன் சென்னையிலே குடியேற அனேஷியாவின் தந்தை திவேஷின் பெற்றோரிடம் பேச ஏற்கனவே இரு குடும்பமும் பழக்கம் என்பதாலும் இருவருக்கும் இதில் விருப்பம் என்பதாலும் திருமணத் தேதி குறிக்கப்பட்டது.

அடுத்த சில வாரங்களில் தியானேஷ்-மிருதுளா ஆகியோரின் திருமணம் நடைபெற, அங்கே யாழ் மற்றும் பிரவினின் திருமண தேதியும் குறிக்கபட்டிருந்தது.

துஷி மற்றும் யாழின் வீடு அருகருகே இருந்ததால் ரேஷாவுக்கும் யாழுக்கு நல்ல புரிதல் உருவாகியிருந்தது.

ஹரிணி திருமணம் முடிந்து ஐந்து மாதங்களுக்கு மேலானதால், இனியும் காலம் தாழ்த்தாமல் மௌனி-ஹேமந்த் ஆகியோரின் திருமணம் பற்றியும் பேசினார்கள்.

சுற்றி சுற்றி எல்லோருக்கும் திருமணம் நடவிருப்பதை அறிந்து ஜிட்டு மனம் கொதித்தது. "எனக்கெல்லாம் எப்பயோ ஆள் இருந்ததுடா. எனக்கு அப்புறோம் பழகின துஷ -ரேஷா, துவாரா-சரித்திரா, ஏன் அனேஷியா-திவேஷ் வரை ஓகே ஆகிடுச்சு ஆனா நாலு ஐஞ்சு வருஷமா (நித்யா விவான் திருமணத்திலே ஜிட்டுவுக்கு இதியைத் தெரியுமே!) காதலிக்கும் நான் இன்னும் சிங்கிளா தானே இருக்கேன். டேய் குரு சீக்கிரம் வாடா" என்று புலம்பினான்.

தியா -மிருவின் திருமணத்திற்கு அடம்பிடித்து வந்தாள் நித்யா. அவளை அவள் பிறந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். ஆனால் இளாவின் ஸ்கூல் நடைபெறும் காரணத்தால் சில நாட்களிலே ஊட்டி திரும்பி விட்டாள். கீர்த்திக்கு பெண் குழந்தையும் இளங்கோ-பார்வதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

விவி-சித்துவின் காதல் வீட்டிலிருக்கும் அனைவருக்கு தெரிய, போன முறைபோல் எதுவும் ஆகிடக் கூடாதென்று வீட்டில் கொஞ்சம் கண்டிப்பு காட்டினார்கள். இருந்தும் அவற்றை எல்லாம் பொறுமையாகச் சமாளித்தாள் சித்தாரா.

தியா மிருவின் திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் ஜிட்டுவைப் பழிவாங்கிய 'குரு' அவன் ராசியில் பிரவேஷிக்க ஜிட்டு - இதிக்கு திருமணம் குறிக்கப்பட்டது.

துவாரா-சரித்திராவின் வாழ்க்கை எவ்வித தங்குதடையும் இன்றி அழகாய் நகர்ந்தது. சரித்திராவின் காதலில் உண்மையில் திக்குமுக்காடித் தான் போனான் துவாரா. அவர்கள் இருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கண்டு அவன் தந்தையும் கீர்த்தியும் ஆனந்தம் கொண்டனர். கீர்த்திக்கு குழந்தை பிறந்ததும் இங்கே அழைத்து வந்துவிட அவளை நல்ல படியாகக் கவனித்துக்கொண்டாள் சரித்திரா. உண்மையில் இப்போது தான் துவாரா, கீர்த்தி, சரித்திரா மூவரும் குடும்பம் என்னும் சூழலில் வாழ்கின்றனர். இது அவர்களுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

அங்கே ரேஷாவும் துஷியும் கூட தங்கள் வாழ்க்கையை நன்றாக ஆரமித்தனர். யாழ் தான் அடிக்கடி துஷி-ரேஷா இருவருக்குள்ளும் ஏதேனும் சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பாள். யாழின் எந்த குணம் ஆரம்பத்தில் ரேஷாவிற்கு எரிச்சலாகத் தெரிந்ததோ இன்று அதே குணம் தான் அவளுக்கு அதிகம் பிடித்திருந்தது.

யாழ்-ரேஷா இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி வந்ததில் துஷ்யந்த் தான் அதிகம் திண்டாடிப்போனான். என்ன சட்டை அணிய வேண்டும் என்று இரண்டை எடுத்துவந்தால் வேண்டுமென்றே யாழ் ஒன்றையும் ரேஷு ஒன்றையும் சொல்லி அவனைத் திண்டாட வைத்து இறுதியில் இரண்டு சட்டையையும் அணியாமல் வேறேதாவது அணிந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டான். சமையங்களில் துஷி - ரேஷு இருவரும் சேர்ந்து யாழை வாருவார்கள். எது எப்படியோ அவர்கள் இருவரும் ஆசைப்பட்டது போல் ரேஷா தங்கள் இருவரையும் புரிந்துகொண்டதில் அதிகம் மகிழ்ந்தனர்.

இந்த இடைப்பட்ட வேளையில் ஹேமா-மௌனியின் திருமணம் நடைபெற மௌனியின் சார்பாக 'பயணங்கள் முடிவதில்லை' மற்றும் அனேஷியாவின் குழுவினர் அனைவரும் தங்கள் பெற்றோரோடு வந்து மௌனிக்கு உறவாய் நின்று அவளை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தினார்கள்.

மௌனியின் சார்பில் எல்லோரும் சேர்ந்து அவளுக்கு நிறைய சீர்வரிசை செய்து அவளுக்கு தாங்கள் அனைவரும் இருப்பதாய் ஒரு நம்பிக்கை தந்தனர். சீர்வரிசை என்பது நகை, பணம் என்று பொருள் சார்ந்ததில்லையே. உறவுகள் சார்ந்தது ஆச்சே? அதைத் தான் அவளுக்குக் கொடுத்தனர். read 65(2)
 
அச்சோ இந்த கதை முடியப்போகுதுன்னு நெனச்சாலே ரொம்ப பீலிங்கா இருக்கு :( :( :(
every story has an end... thank you??
 
Top