Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி பதிவு

Advertisement

Vinto

Well-known member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் !

#long_post_alert
#self_dabba_alert
#gratitude_post_alert

நான் அவினாஷ் வின்டோ எழுதுறேன். வின்டோ வின்டோ, அப்படின்ற பேர்ல, இது வரைக்கும் என் பதிவுகள் மூலமாகவும், கதை மூலமாகவும் உங்க கூட பேசிட்டு இருந்திருப்பேன். ???

ரொம்ப தாமதமான போஸ்ட் தான். But, Better late than never. ???


இன்டர்ஸ்டெல்லர் காதல்...❤❤❤

இந்த இரண்டு வார்த்தைகளுக்குப் பின் அடங்கியிருக்கும உணர்ச்சிகள் பல.???


ஆங்கில நாவலாசிரியர் Jules Verne எழுதிய AROUND THE WORLD IN 80 DAYS கதையின் நாயகன், உலகத்தை 80 நாட்களில் சுற்றி வருவான்.

எனக்கு இந்தக் கதையை எழுதிய 80 நாட்களில், இந்தப் பிரபஞ்சத்தையே சுற்றி வந்த, பயண அனுபவம் கிடைத்தது. ???

"பதினேழு வயதில் நம்மால் ஒரு நாவல் எழுத முடியுமா ?" என்று எனக்கு நானே போட்டுக்கொண்ட சேலஞ்சில், விளையாட்டாய் ஆரம்பித்தாலும், போகப் போக, எழுத்து எனும் சமுத்திரத்தில் ஒரு துளியாய் கலந்துள்ளேன். ❤❤❤

ஆரம்பத்தில், முதல் முறையாக ஒரு கதையை எழுதுகிறோம், நம் கதை வித்தியாசமாக இருப்பதால், யாராலும் படிக்கப் படாமல், அங்கீகரிக்கப் படாமல் போய்விடுமோ, 12th முடித்தவுடன் எழுதுவதால் Immature-ஆக இருக்குமோ என்ற பலவிதமான பயங்கள் இருந்தன. ☹☹☹

ஆனால், கதையை முடித்த பிறகு, அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ???


இன்டர்ஸ்டெல்லர் காதலை எழுதுவதற்குத் தளத்தையும் போட்டிக்களத்தைம் அமைத்துத் தந்ததற்கும் Mallika Manivannan மேமி-ற்கு எனது முதல் நன்றி. உண்மையில் இந்தப் போட்டி என்னுடைய கனவுப் பட்டறையாக தான் இருந்தது. ???

தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளத்தின் Admin மற்றும் Moderators-களுக்கும் நன்றிகள். ???

இந்தக் கதையை எழுதுவதற்கு, நான் போட்ட அதே உழைப்பை, Behind the Scenes-இல் கொடுத்த என் தோழி மாஸா-விற்கு ஒரு பிக் தேங்க்ஸ். கதையில் நீங்க பாராட்டிய படங்களைத் தேடிக் கொடுத்தவர், அவர்தான். கிட்டத்தட்ட, 10,000 படங்களில் 1500 படங்களை, அவர் எனக்கு அனுப்ப, அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட படங்களைத் தான் கதையில் பார்த்திருப்பீர்கள். ???


தளத்தில் நான் எழுதும்போதே, ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து, கருத்துக்களை கூறி, எனக்கு ஊக்கம் அளித்து, "இனி எழுத வேண்டாம்" என்று தள்ளப்படும் போதெல்லாம், என்னைப் பிடித்து எழுத வைக்க துணையாக இருந்த,

@Banumathi jayaraman , @Poornima Madheswaran , @Rabi , @Senmozhi , @Rani56
Saranya Rajkumar

சகோதரிகளுக்கு, நான் கதையை எழுதி முடிப்பதற்கு காரணமாக இருந்ததற்கு
எனது நன்றிகள். ???

அதிலும், @Revathikannapiran அக்காவிற்கு தனி நன்றிகள். நீங்கள் பத்தொன்பதாம் அத்தியாயத்தில் கூறிய கருத்துகள் இன்றும் என் மனதில் இருக்கின்றன. அதற்கு பிறகும், தாங்கள் அளித்த ஊக்கத்திற்கு ???.


கதை எழுதியவுடன், அதை எப்படி வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற என்னுடைய குழப்பத்தை நீக்கி, தாங்கள் படித்ததை, பிறருக்கும் தெரிவித்து, பின்னூட்டம் அளித்து இருக்காவிடில், என்னுடைய கதை எத்தனை பேரிடம் சென்று சேர்ந்திருக்கும் என்பது கேள்விக்குறியே.???



உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். ???

மேலும், தளத்தில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு நன்றிகள். கதையை சரியான பாதையில் கொண்டு செல்கிறோமா, நாம் ஒரு கோணத்தில் கூறியது, வாசகர்களிடம் எப்படி சேர்கிறது என்பதை கணிக்க உதவியவர்கள் நீங்கள் தான். ???

(முகநூலில் பாஸிட்டிவ் + நெகடிவ் கருத்து தெரிவித்தவர்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை, எனக்கு தெரிந்த அளவு இணைத்துள்ளேன். பல குழுக்களில் பகிரப்பட்டிருந்த பின்னூட்டங்களின் கருத்து பெட்டியில் இருந்து தேடி எடுத்துள்ளேன். விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். அது Intentional-ஆக செய்யப்பட்டதல்ல.)???


இத்துடன், என்னைப் போன்ற சைலன்ட் ரீடர்ஸுக்கும் எனது நன்றிகள். ???

இந்தக் கதையை எழுதும் போது புதிர்கள் புரியும்படி உள்ளனவா என்று அறிவதற்கும், டைப்பிங்கில் உதவி செய்த என் நண்பன் 'பெல்'-லிற்கு எனது நன்றிகள் ???


Special Thanks to வாசுகி அம்மா, ஷிவானி அக்கா, விசயநரசிம்மன் அண்ணா, பானுப்ரியா அக்கா. எனது எழுத்தை மெருகேற்றுவதில் உங்கள் அனைவரது பங்குகள் அதிகம்.

இறுதியில், இந்தப் பயணத்தின் முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும்,

It's not the destination that matters, It's the journey that stands forever.

என்பதற்கு ஏற்ப, இதன் மூலம் எனக்கு பல அனுபவங்களும், நட்புகளும் கிடைத்துள்ளன. ???

இத்துடன் நன்றிப் பதிவு முடித்துக்கொள்ள படுகிறது. ???


அடடா... மறந்துட்டனே... இந்த பதிவை முழுதாக படித்ததற்கும், காணொலியைக் கண்டதற்கும் நன்றிகள். ???

இப்போ... உண்மையாவே முடிஞ்சிடுச்சுப்பா... நம்புங்கோ ???

பி.கு : காணொளி தெளிவாக இல்லையென்றால், கீழே இருக்கும் யூடியூப் திரியைச் சொடுக்கவும். அதில் Settings --> Quality --> Auto --> Desired quality. ?


 
Last edited:
Hats Off to you , Vino.
உங்க வயதிற்கும், எழுத்திற்கும் சம்பந்தமே இல்லை..
ஒரு அனுபவமிக்க எழுத்தாளரின்...
எழுத்து நடையும், கதை சொல்லும் திறனும்
உங்களிடம் இருக்கு...
நல்ல கற்பனை வளம்....
இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும் உங்களுக்கு...
இத்துடன். நிறுத்தி விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
எதிர்காலத்தில் மேலும் மேலும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள், வினோ...


:)(y)
 
சிறு வயதில் நல்ல எழுத்து திறன் உள்ளது . மென்மேலும் எல்லா விதத்திலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள்.
 
அனுபவமிக்க எழுத்து திறன் வினோ இன்னும்.தொடர்ந்து நிறைய படைப்புக்களை தரவேண்டும் :)

வாழ்த்துக்கள் வினோ :) :)
 
உங்க திறமை பிரமிக்க வைக்கிறது..
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.. ??
 
வாழ்த்துக்கள்... இதுபோல மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்... ? ?
 
Top