Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 10

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 10

சுந்தரத்திடம் முதலில் மன்னிப்பை யாசித்த முருகானந்தம், தமயந்தியிடமும் கை கூப்பி மன்னிப்பை வேண்டினார்.

“ஒரே பையனை நல்லா தான் வளர்த்துருக்கேன்னு ரொம்ப கர்வமா இருந்தேன் சுந்தரம்.. எல்லாத்துலயும் மண்ணை அள்ளி போட்டுட்டுட்டான்.. கடங்காரன்..” என்ற முருகானந்தம் இருவரையும் நிமிர்ந்துப் பார்க்கமுடியாமல் தலை குனிந்தார்.

தமயந்தியோ , சுந்தரமோ எதுவுமே பேசாமல் அமைதியாக அவரையே பார்த்திருந்தனர்.

“எனக்கு குழந்தையே பொறக்காதோன்னு ரொம்ப கவலைப் பட்டுக்கிட்டு இருக்கிற நேரத்தில தான் அஸ்வின் வந்து பொறந்தான்.. அவன் மொகத்தை கூடப் பார்க்காம என் பொஞ்சாதி போய் சேர்ந்தா..!! புண்ணியவதி தான் அவ..!! இந்த கொடுமை எல்லாம் பார்க்காம போய் சேர்ந்துட்டா.!!
நான் என்ன பாவம் பண்ணினேனோ இந்த கொடுமையெல்லாம் பார்க்கவேண்டி இருக்கு.. என்னை மன்னிச்சுடுங்க சுந்தரம்..” என்று சுந்தரத்தின் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டே தழுதழுத்தார் முருகானந்தம்.

சுந்தரத்திற்கும் கண்கள் கலங்கியது.. தன் ஒரே மகளின் வாழ்க்கை கேள்விக்குறியானது குறித்து மிகவும் கவலைகொண்டார். (எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அவர்களின் நல்வாழ்வு தானே பெற்றவர்களின் வேண்டுதலாக இருக்கும்)

“என் பையனுக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாதுங்க சுந்தரம்.. மது, மாது , சூதுன்னு எதுவுமே கிடையாதுங்க.. அதுல கொஞ்சம் இறுமாப்போட இருந்ததால அவனோட குறை எனக்கு தெரியாமலே போய் விட்டது.. அதை தெரிஞ்சுக்கறதுக்காக உங்கப் பொண்ணோட வாழ்க்கையை வீணடிச்சுட்டோம்.. எங்களை மன்னிச்சுடுங்க..” என்று திரும்ப திரும்ப மன்னிப்பை தலைக் குனிந்து யாசித்தார் முருகானந்தம்.

முருகானந்ததிற்கு ஆறுதலாக ‘சரி விடுங்க முருகானந்தம்.’ என்று சுந்தரத்தால் கூற முடியவில்லை.. அவருக்கே இங்கு ஆறுதல் தேவைப்படும் போது அவரால் எப்படி முருகானந்ததிற்கு ஆறுதல் அளிக்க இயலும்?

“என் பையனை நல்ல விதமா வளர்க்க நான் செஞ்சதே வினையாயிடுச்சே.. நான் என்ன செய்ய?” என்று புலம்பியவரை புரியாமல் பார்த்தார் சுந்தரம்.

“தாய் இல்லா புள்ளையா போச்சேன்னு யாரும் எதுவும் சொல்லிடக்கூடாதுன்னு நினைச்சு தான் அவனை நல்லவிதமா வளர்க்க ஆசைப்பட்டேன்..“ என்று திரும்ப திரும்ப சொன்னதையே சொன்னவர் அஸ்வினிடம் பேசியவற்றை நினைவுக்கூர்ந்தார்.

தமயந்தி குடும்பத்தினரை மருத்துவமனையில் சேர்த்த முருகானந்தம் சிறிது நேரம் கழித்து அவருடைய வீட்டிற்கு வந்தார். அவரிடம் அடி வாங்கிய அஸ்வின் நேராக அங்கு தான் சென்றிருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அஸ்வினை அடித்து துவைத்தார். “என்னடா பண்ணி வச்சுருக்க? உன்னால மூணு உசிரு போராடிட்டு இருக்கு.. உன் கையால தாலி வாங்கிய கொடுமைக்கு இரத்த காயம் தான் அந்தப் பொண்ணுக்கு கல்யாணப் பரிசா?” என்று சொல்லிக்கொண்டே அடி பின்னிவிட்டார் முருகானந்தம்.

“சொல்லுடா உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? பொண்ணப் பார்த்து தானே கல்யாணம் முடிவு பண்ணினோம்? உனக்கு என்ன கேடு வந்தது..?

என்ன காதலா?

அதை முன்னாடியே சொல்வதற்கென்ன கேடு?

ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தா?” என்று அஸ்வின் பதில் பேசவே இடம் கொடுக்காமல் கேள்விக்கேட்டுக் கொண்டே இருந்தார் முருகானந்தம்.

அவரின் அக்காவின் மூத்தப் பெண் வந்து, “மாமா.. கொஞ்சம் பொறுங்க!! அவனுக்கு பதில் சொல்ல நேரம் கொடுங்க..” என்றாள்.

“இவன் சொல்ற பதிலால அந்த தமயந்தி பொண்ணோட உடைஞ்ச மனச சரி பண்ணிட முடியுமா? போம்மா..!! அங்கிட்டு”

“மாமா!! இவன் கிட்டயும் நியாயம் இருக்கலாம்..”

“ஏம்மா!! நீயும் ஒரு பொண்ணு தானே..! இதே மாதிரி உன் வீட்டுக்காரன் பேசி வச்சிருந்தா இப்படி வியாக்யானம் பேசிட்டு இருப்பியா? அந்தப் பொண்ணு கிட்ட எப்படி எல்லாம் பேசினான்னு அக்கா சொல்லுச்சு தானே..!!”

“மாமா தயவு செஞ்சு என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை தீர்க்கற வழியைப் பார்க்கலாம்.. வயசுல பெரியவங்க நீங்க உங்களுக்கு தெரியாதது இல்ல..”

“சரிமா அவனை சொல்ல சொல்லு.. என் காது குளிர கேட்கிறேன்..” என்றார் முருகானந்தம் மிகுந்த கோபத்தை உள்ளடக்கியபடி..

“டேய் அஸ்வின்.. இப்போ நீ வாய திறந்து சொல்லப் போறியா, இல்லை மாமா கிட்ட அடி வாங்கியே சாகப் போறியா?”

“அப்பா.. நான்” என்று ஆரம்பித்த அஸ்வினை கொலை வெறியோடு பார்த்தார் முருகானந்தம்.

அவரின் கண்களை பயமில்லாமல் எதிர்க்கொண்டான் அஸ்வின்..

அவன் மேல் எந்தவித தவறும் இல்லாதவன் போல் காணப்பட்டான் அவன்.

“நீங்க தானே சொல்லுவீங்க!! அம்மா இல்லாம வளர்த்துருக்கேன்டா அஸ்வினு உன்னை..!! அடுத்தவங்க அவச் சொல்லுக்கு ஆளாகிடாதேடான்னு சொல்லி சொல்லி தானே என்னை வளர்த்தீங்க..!..” என்ற அஸ்வினை முடிக்க விடாமல் இடைப் புகுந்தார் முருகானந்தம்.

“அதுக்கும் நீ நடந்துக் கொண்டதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் முருகானந்தம்.

“மாமா அவனை முடிக்க விடுங்க..” என்ற அவளுக்கு மாமன் மகனின் மேல் மிகுந்த பாசம்..

“இப்போ என் பிரண்ட்ஸ் எல்லோரும் பொண்ணு ரொம்ப குண்டா இருக்கான்னு கிண்டல் செய்யறாங்க.. அது மட்டுமில்லை அவளோட மாமான்னு ஒருத்தன் இருக்கானே அவனைப் பார்த்தாலே எனக்கு பத்திக்கிட்டு வருது.. இந்த வயசுலேயே இப்படி இருக்கானே அப்போ சின்ன வயசுல எப்படி இருந்திருப்பான்னு என் க்ளோஸ் பிரண்டு ராகுல் கேக்குறான்.

பொண்ணுக்கு அவன் தான் அப்பனா இருப்பான்னு அடிச்சு சொல்றான் அவன்.

அம்மாவே அப்படி இருந்தா இந்த பொண்ணு மட்டும் எப்படி இருக்கும்? அதுவே நம்மள எல்லாத்துக்கும் கூப்பிடும் பாரு ன்னு நக்கலா சிரிக்கிறான் சதீஷ்.

இது வரைக்கும் என்னை இந்த மாதிரி ஒரு வார்த்தை யாரும் சொல்லும்படி நான் நடந்துக்கிட்டது கிடையாது.. நம்ம குடும்பத்துலயும் யாருமே அப்படி கிடையாது.. அப்படிப்பட்ட எனக்கு ஏத்த பொண்ணோ இல்லை குடும்பமோ உங்களுக்கு கிடைக்கவேயில்லையாப்பா?” என்று கேள்விக்கேட்ட மகனை அருவருப்புடன் பார்த்தார் முருகானந்தம்.

“நீ என்ன பேசறன்னு உனக்கு புரியுதாடா அறிவுகெட்டவனே..!!”

“எனக்கு புரியுது.. அது உங்களுக்கு தான் புரியலைப்பா..” என்றான் அஸ்வின்.

“அஸ்.வின்..!!” என்று பல்லைக்கடித்தார்.

“அப்பா.. என் பிரண்ட்ஸ்க்கு முன்னாடி அவளை கூட்டிட்டு போக முடியுமாப்பா.. ஏற்கனவே என்னை எல்லாரும் பரிதாபமா பார்க்கிறாங்க.. இப்படி போய் மாட்டிக்கிட்டியேடா!! ன்னு எல்லாரும் சோக கீதம் வாசிச்சுட்டு இருக்காங்க..” என்ற அஸ்வினை கைப் பிடித்து நிறுத்தினார்.

“இதெல்லாம் எப்ப நடந்தது?” என்று கேட்டார் அவர்.

“நேத்து நைட் பச்சுலர்ஸ் பார்ட்டில தான் எல்லாரும் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தாங்க.. அதுமட்டுமில்லை நீ காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கலாம்ன்னு எனக்கு ஒரே அட்வைஸ்.. எனக்கு அப்பவே கல்யாணத்தை நிறுத்த தோணுச்சு.. ஆனா என்னோட பேரும், நம்ம குடும்பத்தோட மானமும் கெட்டு போய்டும்ன்னு தான் இந்த கல்யாணத்தையே பண்ணிக்கிட்டேன்.” என்றான் அஸ்வின் மிகுந்த சுயநலவாதியாக.

“ஏண்டா..!! உன்னோட பேரு கெட்டு போகாம இருக்கிறதுக்கு அந்தப் பொண்ணு வாழ்க்கையோட விளையாடுவியா? இதுக்கு நீ கல்யாணத்தையே நிறுத்துயிருக்கலாம்.. உன்னோட சிநேகித கூட்டம் எல்லாம் மனுஷ பிறவிலேயே சேர்த்தி கிடையாது.. மிருகங்களுக்கு கூட நன்றி உணர்வு இருக்கும்.. அதுகளோட சேர்த்து வச்சு பேசினா மிருகங்களுக்கு தான் இழுக்கு.. கேடு கெட்ட சாக்கடை ஜென்மங்கள் பேசுவதை வச்சு உன் வாழ்க்கையில நீயே மண்ணை அள்ளி போட்டுக்கிட்ட..“ என்ற முருகானந்ததிற்கு அஸ்வினின் வளர்ப்பில் எங்கு தவறினோம் என்று புரிந்தது.

அதைப் புரிந்துக்கொள்ள ஒரு அறியாப் பெண்ணின் வாழ்க்கை தேவைப்பட்டிருக்கிறதே!! என்று தலையில் அடித்துக்கொண்டார் அவர்.

“ஏண்டா..!! அடுத்தவங்க அவ சொல்லுக்கு ஆகக் கூடாதுன்னு நான் சொல்லி சொல்லி வளர்த்தேன்னு சொன்னியே!! இப்போ நீ நடந்துக்கிட்ட முறையால வெளில இனிமே தல காட்ட முடியுமா? பொண்ணப் பார்த்து தானே கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட..? அப்புறம் ஏன்..” என்று ஏதோ கேட்க போனவரை அஸ்வினின் பேச்சு நிறுத்தியது.

“அன்னிக்கு நீங்க, அத்தை எல்லாரும் என்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசிட்டு இருந்தீங்க.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. கர்வமாவும் தான் இருந்தது.. அந்த சந்தோஷத்துல இருக்கும்போது தான் பொண்ண அழைச்சுட்டு வந்தாங்க... அவளை சரியா கூடப் பார்க்காம ஓகேன்னு சொல்லிட்டேன்.. அப்போ எனக்கு பொண்ண பிடிச்சதா பிடிக்கலையான்னு தெரில.. நீங்க எல்லாரும் அடுத்தவங்க வீட்டுல உட்கார்ந்துக்கிட்டு என்னை ரொம்ப உயர்வா பேசினது மட்டும் தான், நான் பொண்ணப் பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு காரணம்..” என்று கூறிய அஸ்வினை வருத்தத்துடன் பார்த்தார் முருகானந்தம்.

அவரின் வருத்தத்திற்கு காரணம் பிள்ளையைப் பற்றி தெரியாமல் ஒரு குடும்பத்தையே வருத்தத்தில் ஆழ்த்திவிட்டோமே என்பது தான்.

அஸ்வின் பிறந்தவுடனே அவரின் மனைவி மறைந்ததால் அவனை வளர்க்க அக்காவின் துணையை நாடியிருந்தார்.

அத்தை மற்றும் அப்பாவின் அதீத பாசம் மற்றும் அதிக கவனிப்புடனேயே அஸ்வினின் குழந்தை பருவம் கழிந்தது..

‘அடுத்தவர்கள் பேசும்படி நாம் நடந்துக்க கூடாது, தாய் இல்லாமல் வளர்ந்ததால் தான் இப்படி தறுதலையாக இருக்கிறது.’ என்று யாரும் சொல்லும்படி வைத்துக்கொள்ளகூடாது என்ற அறிவுரையுடன் அஸ்வினின் பதின் பருவம் கடந்தது..

இங்கிருந்துதான் அவனின் வக்கிர குணம் தலை தூக்கியது..!!

அதை அன்று முருகானந்தம் கவனிக்காமல் விட்டதால் தான், இன்று தமயந்தியின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கியது.
 

Advertisement

Top