Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின்னையே சகி என்று சரணம் எய்தினேன் !

Ashokaa

Well-known member
Member
கல்லூரியின் கலாட்டா காலங்கள் எல்லாம் கடந்து கல்விக்கான நேரமது. பொறியியல் கல்லூரியே வரப் போகும் பரீட்சை எனும் சுனாமியை சமாளிக்கத் தயாராகும் ஒரு கோடைக்காலம்.

அவளை சந்தித்து ஒரு வாரம் கடந்திருக்க இன்று தான் மறுபடியும் அவளைக் கண்டான் அவன்.

கல்லூரி வளாகத்தின் ஒரு மூலையில் அமர்ந்து அவள் அவனிடம் புகைந்து கொண்டு இருந்தாள். அதே வழக்கமான புகைச்சலும் கோபமும் இன்றும் அவளிடம்.

"ஏன்டா இதுங்களை எல்லாம் இதுக வீட்டுல தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா? நானும் என்ன யோசிச்சும் எனக்கு மட்டும் விளங்கவே இல்ல"

"எனக்கென்னமோ அதெல்லாம் அறிவு இருக்கவங்க செய்ய வேண்டிய வேலைன்னு தோணுது டி" என்றபடி மீண்டும் தனது பாடப் புத்தகத்தில் தலையை நுழைத்தான் அவன்.

"என்ன டா உளர்ற?" என்றாள் அவனின் பதில் விளங்காது.

"இல்ல டி, என்னத்தையோ யோசிச்சேன்னு சொன்னியே, அதைத் தான் நானும் சொன்னேன். அறிவிருக்கவங்க செய்யணும்ன்னு" என்றவன், தன்னை காளியின் மறு உருவாய் எண்ணி அவனைப் பார்த்து முறைப்பவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் "அறிவு இருக்கவங்க யோசிக்கலாம். தப்பில்லை. உனக்கு ஏன் அந்த வேலை. நீ வழக்கம் போல கேம் விளையாடு டி."

"டேய், வெறுப்பேத்தாம ஒழுங்கா என்னைக் கொஞ்சம் புலம்பவாச்சும் விடு. வீக் எண்டு நைட் வந்தாலே எனக்கு காது அவிஞ்சு போகுது டா. ரூம்ல இருக்க ரெண்டும் ஊர சுத்தீட்டு வந்து அதைப் பத்தி பேசியே என்னை கொல்லுதுங்க டா"

"என்னவாம் அவளுகளுக்கு?

"வேற என்ன. எல்லாம் காதோல் கதை தான்.”

நீட்டி முழக்கியவள் மேலும் “அவங்க ஆளோட வெளில போனது வந்ததுன்னு ரெண்டும் சேர்ந்து என்னை நடுவுல உக்கார வச்சு 'இத கேளு மச்சி'ன்னு சொல்லி சொல்லியே என்னை கொல்லுறாளுக டா."

"நீ ஏன் கேக்குற? பேசாம நா சாமியார் ஆகப் போறேன்னு சொல்லிடேன். "

"ஹுக்கும், அவளுக சொல்லுற கதை எல்லாம் கேட்டு ரொமன்ஸ்ன்னு நான் நம்புறதுக்கு பேசாம சாமியாராவே போயிடலாம் போல." என்று நொடித்துக் கொண்டாள்.

"என்னது, ரொமான்ஸ் ஆ? அப்டியே எனக்கும் ரெண்டு ரொமான்டிக் சீன் சொல்லேன். உன் குரல்ல மொக்கையா பீலிங்ஸ் இல்லாம இருந்தாலும் பரவாயில்லை, நானும் கேட்டுக்குறேன். நாட்டு நடப்பை நானும் தெரிஞ்சுக்கணுமா இல்லையா?" என்றவன் குரலின் அதீத ஆர்வத்தில் அவனைக் கண்களாலேயே சுட்டெரித்தாள் அவள்.

"போ டா ஒட்டடை குச்சி, ஜெயாத்தைக்கு போன் செஞ்சு தரேன் கேக்குறியா? அவங்க சொல்லுவாங்க நல்லதா நாலு சீன்."

"இப்ப ஏண்டி அவங்கள தொந்தரவு பண்ற. பாவம் எங்கம்மா. இந்நேரம் ஆழ்நிலை தியானத்துல இருப்பாங்க. அதை நீ கெடுத்துறாத."

"தியானமா?" என யோசித்தவள், "அடப் பாவி தூங்குறத சொன்னியா?" என்றாள்.

"நீ முதல்ல பேச்சை மாத்தாம ஒழுங்கா விஷயத்தை சொல்லுடி. உன் ரூம்ல என்ன பஞ்சாயத்து?"

"வீக் எண்ட்ல தான் படிக்க முடியலன்னு நேத்து நைட் புக் எடுத்து உட்கார்ந்தேன் டா. இந்தப்பக்கம் பெட்ல ஒருத்தி முணுமுணுங்குறா, அந்தப்பக்கம் ஒருத்தி சாட்டிங்ன்னு உட்கார்ந்திருக்கா. இதுக்கு நடுவுல நான் எப்படி படிக்க?”

"ஏன்டி உன்னை சுத்தி இவ்வளவு நடக்குதே உனக்கு கொஞ்சமும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவே இல்லையா டி? " தன் மனதின் அடி ஆழத்தில் அலையாய் வீசும் சில எண்ணங்களெல்லாம் இவள் விளங்கி கொள்ளவே மாட்டாளா என எதிர்பார்ப்புகள் மனதில் எழ அவளின் பதிலை ஆவலாய் எதிர் பார்த்திருந்தான்.

"ஆகும் ஆகும் இந்த கெமிக்கல் இன்ஜினீரிங் ஒழுங்கா முடுச்சுட்டா எனக்கும் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் அவுட் ஆகும்"

"த்தூ, ஒரு இன்ஜினியரிங் சீட் வேஸ்ட்" என வழக்கம் போல காய்ந்தவன் 'இதெல்லாம் தேறாது' எனும் பார்வையை செலுத்தினான்.

"உனக்கு என் கஷ்டம் புரியவே இல்ல டா, என்ன சுத்தி இருபத்தி நாலு மணி நேரமும் ஒரே லவ் டாக் தான் ஓடுது."

'இன்னும் ஒரு நாலு மணி நேரம் காதல் யந்திரம் சேர்த்து ஓடினாலும் நீ எல்லாம் அதுக்கு சரி வர மாட்ட டி' என எண்ணிக் கொண்டவன் "லவ் லவ் ன்னு நீயும் இந்த ரெண்டு செமெஸ்டரா சொல்லுறியே தவிர விஷயத்தை சொல்ல மாட்டேங்கிற. அப்படி என்ன தான் லவ் டாக் சொல்லேன் நானும் கேட்கிறேன்" என்றான்.

காதல் கதைகளை தன்னிடம் சொல்லும் போதாவது அவளுக்கும் 'தன்னைப் போல எண்ணங்கள் ஏதும் தோன்றுமா?' எனும் ஆவல் அவனுக்கு.

இல்லை தான் மட்டுமே அவளை பற்றிய இத்தைகைய எண்ண அலைகளால் மோதப் படுகிறோமா? எனும் சந்தேகம் வேறு அவனுள்.

சரி, தவறு என பிரித்தறிய முடியா உணர்வுகள் அவனுள், அவள் மேலே சில காலமாய்.

இது காதல் தான் என உணர அவனின் மனம் இன்னும் அவனுக்கே விளங்க வில்லை.

காதல் எல்லாம் இல்லை என தூக்கி எரிய முடியாத அளவு அவன் அன்று கண்ட அந்தக் காட்சி அவன் இரவுகளைக் கொள்ளை கொள்கிறது.

காட்சியின் தாக்கம் தவறு என எண்ணவும் மனம் மறுக்கிறது.

அவன் கண்கள் அன்று கண்ட காட்சி அத்தைகையது.

அவளுக்கு காலில் அடி பட்டது எனப் பதறி ஓடி காணச் சென்றவன் கண்டது, கணுக்காலளவு தெரிந்த அவளின் ஓற்றைக் கொலுசணிந்த அந்த பஞ்சுப் பாதமும் கால் விரல்களில் இருந்து முழங்கால் வரை கட்டுப் போடப்பட்டு முழங்காலுக்கு மேலும் சில அங்குலம் அவன் பார்த்த அந்த வெண் பளிங்கு நிற தொடையும் கண் மூடும் வேளை எல்லாம் காட்சியாய் மீண்டும் மீண்டும் வருகிறது.

நொடி நேரக் காட்சிதான், ஆனாலும் அதன் அலைக்கழிப்புகள் இப்பொழுதெல்லாம் சற்று அதிகம் தான்.

இந்த அலைக்கழிப்புகளின் ஆரவாரமெல்லாம் அடங்கும் வழி அவன் பாட்டன் பாரதியின் வரிகளே அவனின் குரலிலும்.

"பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!

பின்னையே, நித்ய கன்னியே! கண்ணம்மா!"

மனதில் ஓயாமல் பாடிக் கொள்ளும் கலியுக கவி பாரதி இவன்.

அவள் என் கண்ணம்மாவா? இல்லை நான் அவளுக்கு வெறும் பெஸ்டி மட்டும் தானா? புதிதாய் ஒரு விடை அறியா வினோதம் அவனுக்குள்.

எண்ணம் எல்லாம் வண்ணமாய் சிதற அமர்ந்திருந்தவனின் தலையில் நங்கென்று கொட்டினாள் அவள்.

"எவ்வளவு நேரமா கத்துறேன் எருமை, எங்க தொலைஞ்ச?" என அவன் முன்னே வந்து நின்றாள்.

'ஒற்றைக் கொலுசணிந்த உன் இடப் பாதமும், வழக்கத்துக்கு மாறாக, கட்டில் அடங்கிய உன் வலது பாதமும் அதற்கும் மேலாக என் கண்கள் கண்ட அந்தக் கால் அழகிலும் தான் நான் தொலைந்தேன் என சொல்லும் ஆசை தான் அவனிடம்.

ஆனால் அதெல்லாம் அவளிடம் நடக்குமா? இல்லை அவனால் தான் இதை எல்லாம் சொல்ல முடியுமா?

மனம் ஏனோ தான் தவறுகிறோமோ என நினைத்துக் கணத்தது.

மீண்டும் ஒரு கொட்டு பரிசாகக் கிடைத்தது அவளிடமிருந்து.

"டேய், என்ன டா யோசிக்கிற, மறுபடி எல்லாம் என்னால சொல்ல முடியாது." கோபத்தில் முறுக்கிக் கொண்டாள்.

"ச்ச, சும்மா யோசனை தான். நீ சொல்லு சொல்லு. அப்டி என்ன சொன்னா அந்த அழகி ஐஸ்வர்யா?"

"ஹுக்கும் அவள் எங்க சொல்றா, அப்டியே நடந்ததெல்லாம் மறுபடி நடிச்சு தான் காட்டுவா.", 'நல்ல வேளை சென்சார் போட்டு' என மனுதுக்குள் எண்ணிக் கொண்டாள்.

"உனக்கு பிடிக்கலைன்னா ரூம் மாத்திக்க வேண்டியது தானே? ஏன் எப்பவும் புலம்புற?" என்றவன் அருகில் வந்து அமர்ந்தவள்

"நீ வேற வெறுப்பேத்தாத டா. எவ்ளோ தொல்லையா இருந்தாலும் இவங்க என் ஃபிரண்ட்ஸ். சமாளிச்சுக்குவேன். ஆனா அந்த ஓவர் ஆக்ட் ஓவியாகிட்ட எல்லாம் மாட்டுனா அவ்வளவு தான். கொன்னுடுவா என்னை. அன்னைக்கு இப்படி தான், ‘ஸ்ரீ பேசும் போதே டக்குன்னு இப்டி" என்றவள் சட்டென திரும்பி அவன் கன்னத்தில் மின்னலென முத்தமிட்டு விட்டு "எனக்கு முத்தம் கொடுத்துட்டான். என் முகமெல்லாம் சிவந்து போச்சு தெரியுமான்னு அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் பேசியே கொடுமைப் படுத்துனா." என்று அவள் பேசிக் கொண்டே போக, அவன் கேட்டும் திறனை எல்லாம் அந்த முத்தம் மொத்தமாக கொள்ளையிட்டிருந்தது.

இனி அவள் பேச்சுக்களெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தான் என அவள் அறிவாளா?.

அவள் முத்தமிட்ட அந்த நொடியிலேயே அவன் உலகம் மொத்தமாய் உயிர் சிலையாய் அமர்ந்திருந்தான் அவன்.

அவள் ஏதோ ஒரு வேகத்தில் செய்து விட்டாள். அதன் நினைவுகள் கூட அவளுக்கு இருக்குமோ என்னவோ. ஆனால் அவன்??? அவனின் மீசை போலவே அரும்பு விட்ட அவன் ஆசைக் காதல் இதை சாதாரணமாக கடந்து போக விட்டு விடுமா?

மன்மதன் அம்புகள் துளையிடத் துடிக்கும் அவன் இதயம் இந்த ஒற்றை முத்தத்தால் மொத்தமாய் அவளில் வீழ்ந்து போனதோ?

இன்று வரை அவளின் மீதான அவன் உணர்வுக்குப் பெயரிட பயந்தவனுக்கு செப்புப் பட்டயம் ஒன்றில் செதுக்கி விட்டது போல ஆழப் பதிந்தது அவளின் இந்த அவசர இதழ் ஒற்றல்.

மனம் மீண்டும் அந்த நொடியையே எண்ண, உதடுகள் தன் போல

"மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!

கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா!"

முணுமுணுத்தது.

"என்ன டா சொன்ன. சரி விடு நான் இனி புலம்பல."

"ஹ்ம்ம்" வார்த்தைகள் அவள் முன் வர தடுமாறின. அவன் இதயம் போல் அவைகளும் தடம் மாறி விட்டால்? வாயை இறுக்கி மூடிக் கொண்டான்.

மீண்டும் அவளே தொடர்ந்தாள், "ஒருவேளை உங்க கூட எல்லாம் பழகிப் பழகி நானும் பசங்கள மாதிரி ஆகிட்டேன் போல டா. இந்த பொண்ணுங்க பீலிங் எல்லாம் ஏனோ எனக்கு வரவே மாட்டேங்குது."

"அதுக்கு நீ அஞ்சு அடில நின்னுருக்கணும் இப்படி ஆறடி வளந்தா எப்படி உனக்கு பொண்ணுங்க பீல் வரும்" என கேட்டபடி அவர்களின் நண்பன் வர,

"சரி சரி விடு. இப்ப கொஞ்சமாச்சும் படிக்கலாம்" என்று காதல் கதைகளை தற்காலிகமாக மூட்டை கட்டி இருந்தான் அவன்.

வெளிப் பேச்சுக்கு தான் முடிவு கட்ட முடிந்தது. உள்ளே மனச்சாட்சியோ இன்னும் சத்தமாக அவனை கேள்வி கேட்கத் தொடங்கியது.

ஆனால் அவள் உணராத ஒன்றை இவன் மட்டும் உணர்ந்து என்ன பயன்?

ஆறடி ஆக்டோபஸ் அவள், அவனைத் தன் எண் கரம் கொண்டு சுற்றி வளைத்திருக்க அவனும் என்ன தான் செய்வான்?

அவளையே அவன் எண்ணிக் கொண்டிருக்க அவளோ தனக்கு 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுமா?' என அவளின் புத்தகத்தில் தலையைப் புதைத்திருந்தாள்.

அவன் மனமோ வழக்கம் போல்

“நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!

தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் ! கண்ணம்மா!”

எனப் பாடியது.

தன்னையே சகி என்று சரணமடைய ஒருவன் இங்கு காத்திருக்க, காதல் கொள்ள காலம் இன்னும் வரவில்லை என கண்மூடி இருண்ட உலகில் வாழும் இந்த கண்ணம்மாவின் கண்களிலும் காதல் வருமா? யாதுமே கண்ணம்மாவாக காணும் கவி பாரதியின் காதல் கை கூடுமா?

காத்திருக்கிறேன் நானும்.
 
Last edited:

Nirmala senthilkumar

மனம் மீண்டும் அந்த நொடியையே எண்ண, வாய் தன் போல

என பாடியது.

தன்னையே சகி என்று சரணமடைய ஒருவன் இங்கு காத்திருக்க, காதல் கொள்ள காலம் இன்னும் வரவில்லை என கண்மூடி இருண்ட உலகில் வாழும் இந்த கண்ணம்மாவின் கண்களிலும் காதல் வருமா? யாதுமே கண்ணம்மாவாக காணும் கவி பாரதியின் காதல் கை கூடுமா?

காத்திருக்கிறேன் நானும்.
Nirmala vandhachu 😍😍😍
 
Advertisement

Advertisement

Top